கண்ணைத் திறக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அந்த பிஞ்சின் முகத்தை கண் இமைக்க மறந்து இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த மருத்துவமனையின் வலாகத்தில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல், உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கோண்டிருந்தனர்.
“ அடுத்து என்னடா பண்ண “ என்று விக்ரமன் அந்த குழந்தையின் கையை பிடித்தபடி கேட்க,
“தெரியல்லைடா, அடுத்து என்ன பண்ணணும்ணு “ என்று விக்ரமனின் முகத்தை பாவமாக பார்த்தான் மாறன்.
கல்லூரி முடித்து இப்போது தான் மாணவர்கள் என்ற நிலையிலிருந்து வெளியே வந்திருக்கின்றனர். இன்னும் இவர்கள் பார்த்து கற்றுக்கொள்ள பல இருக்க, எதுவும் தெரிந்து அறிந்து புரியும் முன் கையில் குழந்தையுடன் என்ன செய்துவிட முடியும் இப்போது இவர்களால்.
அம்மா ,அப்பா இன்றி இவர்களே என்னும் தனித்து வாழத் தொடங்கியிருக்கவில்லை. இதில் இவர்களை நம்பி ஒரு உயிர், அந்த பயத்துடன் தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தனர் என்று தெரியவில்லை உறங்கி கொண்டிருந்த குழந்தை அழத் தொடங்கவும் தான் இருவருக்குமே நினைவு வந்து
“அச்சோ பாப்பா அழாதீங்க “ என்று மாறன் கையில் பிடித்திருந்த குழந்தையை அசைக்க கூட பயந்து பேசிக்கொண்டிருந்தான். இதுவரை இவ்வளவு சிறிய குழந்தையை தூக்கியது இல்லை அதுவேறு பயத்தை தந்தது.
விக்ரமன் “ பேபிம்மா அழாதீங்கடா இங்க பாருங்க….” என்று சத்தம் போட குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை இருவருக்கும் முகம் முழுக்க வியர்க்க, பயந்து போய் இருந்தனர்.
அப்போது இவர்களை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நர்ஸ் அருகில் வந்து “ பாப்பாவ தாங்க நான் யார் கிட்டயாவது பால் குடிக்க வச்சி கூட்டிட்டு வரேன் “ என்று வாங்கி சென்றுவிட்டார்.
நர்ஸ் சென்ற அறைக்கு வெளியே இருவரும் நின்றுகொண்டனர். மாறன்
“ விக்கி பாட்டிக்கு கால் பண்ணி பேசுவோமா அவங்க தான் நிறைய குழந்தைய வளர்ந்திருக்கிறேன்னு சொல்லுவாங்களே, அவுங்க கிட்ட ஹெல்ப் கேப்போம் “
“நல்ல ஐடியா தான், ஆனா பாப்பாவை அதுக்கப்புறம் நம்மாலல பார்க்கவே முடியாத படி யார்கிட்டயாவது கொடுத்துருவாங்களே அது ஓகேவா உனக்கு “
“என்னடா சொல்ற பாட்டி ஏன் அப்படி பண்ணுவாங்க “
“முதல்ல குழந்தைய அவுங்க கிட்ட கொடுத்ததும் தாடா பேராண்டின்னு , கேள்வி கேக்காமலா வாங்கி வச்சுப்பாங்க . என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்க “
“ஆமா விசாரிச்ச தமிழ்-ரஷித் பத்தி சொல்ற மாதிரி வருமே “
“நமக்கே இந்த சாதி மதம் இதெல்லாம் பாக்குறது தப்புன்னு தமிழ் சொல்லி தான் புரிஞ்சது. இத்தனைக்கும் நம்ம படிச்சவங்க, அப்படி இருக்க அவுங்க கிட்ட போய் பாப்பாவ நீட்டுனா தொடக் கூட யோசிப்பாங்கடா “
“அப்போ என்னடா பண்ணுறது “ என்று மாறன் யோசிக்க , விக்ரமன்
“தமிழ் அம்மா அப்பா கிட்ட பேசி பாப்போமா “
“விக்கி வேண்டாம்டா… பாப்பா இருக்குறது தமிழ் அப்பா அம்மாக்கும் ரஷித் அப்பா அம்மாக்கும் தெரிய கூடாதுடா “
“ஏன் மாறா ஏன் தெரிய கூடாதுன்னு சொல்ற “
“தமிழை அடிச்சிட்டு அவனுங்க கால் பண்ணி பேசுனத கேட்டியா அதுவும் இல்லாம சரியா வயித்துல அடிச்சிருக்காங்க. ஒரு வேளை இது ஆணவக் கொலையா இருந்த, வாய்ப்பு அதிகம் இருக்கு விக்கி “
“ம்ம்ம் வாய்ப்பிருக்கு அதுனால தான் பாப்பா பத்தி இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்டாம்னு சொல்றன். முதல்ல அந்த இரண்டு குடும்பத்தையும் வாச் பண்ணிட்டு அவுங்க இல்லைன்னு உறுதிப்படுத்திட்டு பாப்பாவ கொடுக்கலாம் “
“அப்போ அதுவரை பேபிய நம்மளே பாத்துக்கலாமே “ என்று ஒரு நல்ல முடிவு எடுத்த கையோடு, அங்கு ஹாஸ்பிட்டலில் இவர்களின் செயினை கொடுத்து பாப்பா இறந்து விட்டதாக பொய்யாக சொல்ல சொன்னனர்.
அதன் பின் மாறன் குழந்தையை பார்த்துக்கொள்ள விக்ரமன் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் செய்து என்கெயரி என்று ஒரு வாரம் அங்கே தான் இருந்தனர்.
பின் அங்கிருந்து சென்னைக்கு சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இருவரும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர்.
அது ஒரு சாதாரண வேலை தான் அதற்கேற்ப சம்பளமும் குறைவே ஒரு வாரம் விக்ரமன் பகல் வேலை சென்றால் மாறன் இரவு வேலை செல்வான். அடுத்த வாரம் அப்படியே மாற்றி மாறன் பகலிலும் விக்ரமன் இரவிலும் இருப்பான்.
முதலில் தனியாக சமாளிக்க மிகவும் கஷ்ட பட்டனர் அருகில் இருந்த அனைவருக்கும் இவனின் பிள்ளை மனைவி இறந்து விட்டாள் என்றே சொல்லியிருந்தனர்.
அதனாலயே அருகில் இருந்த சிலர் இருவருக்கும் நிறைய உதவி செய்தனர். இப்படி பல பேர் உதவியுடனே மொழி வளர்ந்தான்.
இவர்களின் வீட்டில் இன்னும் ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் செய்ய போவதாக சொல்லி அங்கிருந்தும் பணம் சிறிது வாங்கி கொண்டனர்.
இப்படியே ஆறு மாதம் சென்றது இந்த ஆறு மாதமும் குழந்தையை நெஞ்சில் சுமந்து தான் பார்த்துக்கொண்டனர் இந்த இரு தந்தையரும்.
இந்த ஆறு மாதமும் தமிழ் ராசித் கொலை வழக்கு எந்த முன்னேற்றத்தையும் காணாமல் தான் இருந்தது.
இப்படி இருக்க ஒரு நாள் காலை இரவு வேலை முடித்து வந்த மாறன் “ விக்கி…. விக்கி…..” என்று கத்தியபடி அந்த ஒரு அறை உள்ள வீட்டுக்குள்ளே நுழைந்தான்.
விக்ரமன் அப்போது தான் காலை மூன்று மணியில் இருந்து தூங்க மாட்டேன் என்று ஆட்டம் போட்ட மொழியை நெஞ்சில் போட்டு தட்டி தூங்க வைத்து கொண்டிருந்தான்.
மாறன் கத்திக்கொண்டே வந்ததில் மொழி சினுங்கவும் விக்ரமன் கண்களை உருட்டி மிரட்ட மாறன் வாயை கப் என்று மூடி அவன் அருகே அமர்ந்து கோண்டான்
பின் விக்ரமன் மொழிக்கு தட்டி கொடுத்து விட்டு அவன் தூங்கியதும் பாயில் அவனை கிடத்திவிட்டு மாறனை வெளியே அழைத்து சென்றவன்
“ மாடு மாற ஏண்டா கத்திட்டே வர எத்தன வாட்டி சொல்ல பேபி இருக்கான் கத்திட்டே உள்ள வராதுன்னு கேக்குறியாடா “ என்று கத்தவும் மாறன்
“சரி சாரி இனி கத்தல இப்போ நான் சொல்றத கேளு “
“அப்படி என்ன தலை போற காரியம் சொல்லு கேப்போம் “
“தலை போற காரியம் தான் நம்ம தமிழ் அக்கா இருக்காங்கள , அவங்க தங்கச்சி அவங்க அப்பா அம்மாக்கு எதிரா கோர்ட்ல கேஸ் போட்டிருக்குடா “
“என்னது தமிழ் அக்கா க்கு தங்கச்சி இருக்கா “
“இப்போ நான் சொன்னதுல இது மட்டும் தான் முக்கிய படுதா பக்கி “ என்று அவன் தலையில் தட்ட , விக்ரமன்
“சரி முறைக்காதடா…மேல சொல்லு”
“மேல என்ன சொல்ல நம்ம அக்காவ அவுங்க அம்மா அப்பா தான் அழ வச்சி இப்படி பண்ணிருக்காங்களாம். அது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சு கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கு “
“இது எப்படிடா உனக்கு தெரியும் “
“இந்த கேஸ்ஸ பாத்துட்டு இருந்த கான்ஸ்டபிள் கிட்ட நான் சொல்லி வச்சிருந்த அவர் தான் சொன்னாரு “
“அதான் தெரியலடா “ என்று இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க, மாறன்
“நம்ம அந்த பொண்ண போய் பாப்போமா டா “ என்று விக்ரமன் முகம் பார்க்கவும் அவனும் “ ம்ம்ம் போலாம் மாறா எப்போ கேஸ் கோர்ட்டுக்கு வருது “
“இன்னும் ரெண்டு நாள்ல “
“சரி போவோம்” என்று இருவரும் ஒன்றாக முடிவு எடுத்துக்கொண்டு யாழினியை பார்க்க சென்றனர்.
கொர்டில் ஒரு மரத்தடியில் யாழினி த்ரூவுடன் இவர்களின் வழக்கிற்காக காத்திருக்க அப்போது ஏதோ குழந்தை அழுகும் சத்தம் கேட்டு முதலில் யாழினி தான் திரும்பி பார்த்தாள்.
தூரத்தில் ஒருவன் கையில் சிறு குழந்தையை வைத்துக்கொண்டு தலையசைத்து அந்த குழந்தைக்கு சமாதானம் செய்து கொண்டிருப்பதை பார்த்த யாழினி
“ குழந்தையோட அம்மா எங்க, பாவம் பசிக்கு அழுது போல, இவரைப் பார்த்தா அந்த குழந்தை அப்பா மாதிரியும் தெரியல ரொம்ப சின்ன பையனா இருக்காரே “ என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே குழந்தையை வைத்திருப்பவன் வயதை ஒத்த இன்னொருவன் கையில் பால் பாட்டிலுடன் ஓடி வருவது தெரிந்தது.
வந்தவன் பால் பாட்டிலை மற்றொருவனிடம் நீட்ட அதை வாங்கி கையில் சூடு பார்த்து அழகாக அந்த குழந்தைக்கு அதை புகட்டவும் வாய் அடைத்து போன யாழினி அவனேயே அவளை மறந்து பார்த்தாள்.
அவன் நல்ல உயரம் கட்டை மீசை வைத்திருந்தான் தாடி இல்லாமல் கல்லூரி படிக்கும் மாணவன் போல தான் இருந்தான். ஆனால் அந்த குழந்தையை அம்மா போல பார்த்து கவனித்த விதம் என்று அவனையே பார்க்க, அருகில் இருந்த த்ரூவும் இவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘யாராக இருக்கும்’ என்று இருவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க அதை பார்த்த மாறன் ஒரு சிறு தலையசைப்புடன் குழந்தைக்கு பால் கொடுத்து முடித்துவிட்டு அவனை தோளில் போட்டு தட்டி ஏப்பம் வர வைத்து விட்டு இவர்களை நோக்கி இருவரும் நடந்து வந்தனர்.
இருவரும் என்ன என்று தான் பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் வந்த மாறன்
” நீங்கதான் தமிழிசை சிஸ்டரா?” என்று சிரித்த முகமாக கேட்டு நின்றவனை இன்று வரை மனதில் இருந்து அழிக்க முடியாமல் போனது யாழினிக்கு. அதன் பிறகு நடந்ததை சொல்லி மொழியை பற்றியும் சொல்ல யாழினி மொழியின் தூக்கி அனைத்து அழுது தீர்த்து விட்டாள்.
சிவனேசன் மற்றும் சித்திர இருவருக்கும் ஆயில் கால தண்டனை கொடுக்க பட்டது . அதன் பின் மாறன் மற்றும் விக்ரமனிடம் கேட்டு மொழியை அவள் வளர்ப்பதாக சொல்லிவிட்டாள்.
மொழியை பிரிய மனசு இல்லை என்றாலும் வேறு வழியின்றி ஊறுக்கு சென்றவர்கள் மாதத்திற்கு ஒரு முறை சென்னைக்கு சென்று விடுவார்கள்.
இப்படி நடந்ததை அனைத்தையும் சொல்லி முடித்த மாறன் ‘அவ்வளவு தான் இதற்குமேல் ஒன்னும் இல்ல ‘என்பது போல மயூரியை பார்த்து நிற்க
“அதெப்படி, அவ்வளவு தான இல்லையான்னு நாங்க தான் சொல்லுவோம் நீ சொல்ல கூடாது “ என்பது போல அதித்தி