ெஞ்சம் 2

கண்ணில் வலிந்து இருந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு எழுந்த யாழினி சென்று முகம் கழுவி வந்தவள் முகத்தில் சிறிது நேரம் வரை இருந்த மகிழ்ச்சி இன்றி வெறுமையாக இருக்க அப்படியே இறங்கி கீழே சென்றாள்.

மனம் முழுக்க குழப்பம் அவள் செய்வது தவறு என்று ஒரு மனம் கூற மற்றொரு மனமோ சரியென்று கூறுகிறது. இரண்டில் எதைக் கேட்க என்று புரியாமல் எதேதோ யோசித்தபடி அமுதா அருகே வந்து அமர்ந்தவள் தொலைக்காட்சியை வெறிக்க தொடங்கிவிட்டாள்.

எப்போதும் டிவியில் கார்டூன் பார்த்தால் எதாவது சொல்லி அதை அணைத்துவிட்டு மொழிக்கு பாடம் சொல்லித்தர சொல்பவள் இன்று அமைதியாக அவர்களுடன் சேர்த்து டிவியை பார்த்துக்கொண்டு இருப்பதை யோசனையாக பார்த்த அமுதா.

“ என்ன ஆச்சு யாழிக்கு முகமே வாடிப்போய் இருக்கு எதவது பிரச்சனையா இருக்குமோ “ என்று அமுதா யோசித்தபடி யாழினியை பார்க்க, யாழினி அமுதா பார்ப்பது கூட உணராமல் இருப்பதை பார்த்து அமுதாவுக்கே ஒரு மாதிரி ஆகி போனது.

யாழினி இல்லை என்றால் இப்படி இன்றி சந்தோஷமாக இந்த ஹாலில் அமர்ந்திருக்க கூட அவரால் முடிந்திருக்காது. யாழினியால் தான் அந்த நான்கு சுவற்றை விட்டு வெளியே வந்தார் இப்போது இப்படி சந்தோஷமாக இருக்க யாழினி மற்றும் மொழி தானே காரணம்.

இப்படி பலவாறு யோசித்தவர் யாழினி தோள் மீது சாய்ந்தவராக “ யாழி….எனக்கு பக்கத்துல இருக்க பார்க்கைப் பார்க்கணும் போல இருக்கு என்ன கூட்டிட்டு போறியா “ என்று அமுதா சொன்னதை கேட்டு முதலில் முழித்தவள் பின் அவர் சொன்னதை உள்வாங்கியவளாக அதிர்ந்த யாழினி

“என்ன சொன்னிங்க ம்மா, கவனிக்கல “ என்று நம்ப முடியாமல் கேட்க, அவள் அதிர்ச்சியை பார்த்து மென்மையாக சிரித்த அமுதா

“எனக்கு பார்க் போகனும் போல இருக்கு கூட்டிட்டு போறியா யாழி” என்று அவள் முகம் பார்த்து கேட்கவும் யாழினி ஒன்றும் புரியாமல் “அ… போகலாம்மா…” என்று வேகமாக எழுந்தவள் அங்கும் இங்குமாக எதையோ தேடியவளை பார்த்து சிரித்த அமுதா

“ என்ன தேடுற யாழி” என்று சத்தமாக உரைக்க அதில் திடுக்கிட்ட யாழினி “ அது ..ம்மா.. நீங்க தான பார்க் போகலாம்னு சொன்னிங்க..” என்று தடுமாறியவளுக்கு ஒரே யோசனை “ அம்மா எப்படி பார்க் போலாம்னு சொல்றாங்க “ என்று குழம்பினாள்.

யாழினி இங்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஐந்து வருடங்களும் அமுதா வெளியே சென்று பார்த்ததே இல்லை. ஏன் இவள் வந்த புதிதில் அவர் அறைக்குள்ளேயே தான் இருப்பார் வெளியே சாமி கும்பிட மட்டுமே வருவார் மொழி வந்த பிறகுதான் தான் அவர் கூட்டை விட்டு மெல்ல வெளியே வந்து இவளிடம் பழக தொடங்கினார்.

இப்படி இருந்தவர் திடீரென்று வெளியே செல்லலாம் என்றுச் சொல்லவும் தலைகால் புரியவில்லை யாழினிக்கு

“ என்ன தேடுற யாழி…” என்று அமுதா குரலில் சுயம் வந்தவளாக “ ஸ்கூட்டி சாவிம்மா பார்க் போகணும்னு சொன்னீங்களே “ என்று ஆர்வமாக அமுதா முகம் பார்க்க, அமுதா

“பார்க் பக்கம் தான யாழி, நம்ம நடந்து போலாம் “ என்று எழுந்து நிற்க,  உடனே மொழி “ பாட்டி நீங்க பார்க் வர்றீங்களா.…ஐ ஜாலி ஜாலி..” என்று குதித்தவனை பார்த்து அவன் தலை வருடிய அமுதா

“ பார்க் போக வேணும்னா போய் ஸ்கூல் டிரெஸ் மாத்திட்டு வா மொழி” என்று சொல்லவும்,  மொழி கைகளால் சல்யூட் வைத்து “ஓகே ஆபிசர் இதோ வந்துடுறேன் “ என்று வேகமாக ஓடியவனை பார்த்து சிரித்தவாறே திரும்ப அங்கே யாழினியோ’  நான் இந்த உலகத்துலயே இல்லப்பா ‘என்றபடி அமுதாவையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்து அவர் தலையில் தட்டி கொண்டவராக

“ யாழிம்மா.. என்ன அப்புறமா நாள் முழுக்க கூட வெறிக்கப் வெறிக்க பாரு இப்போ போய் மொழிய கிளப்பும்மா யாழி பார்க் போகவேண்டாமா “

“இல்ல போகணும் போகணும், இதோ வந்துடுறேன்..ம்மா .” என்று வேகமாக சென்றவள் அதைவிட வேகமாக மொழிக்கு உடையை மாற்றி விட்டு கையில் பர்ஸை எடுத்துக்கொண்டு வேகமாக வர அதே நேரம் த்ரூவும் கையில் நேரத்தை பார்த்தபடி மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த அமுதாவிடம் சென்று “ அம்மா உங்களுக்கு ஸ்டெல்லா ன்னு யாரையாவது தெரியுமா ம்மா “ என்று கேட்ட படி போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்க, அமுதா

“ ஸ்டெல்லாவா…” என்று யோசித்தவர் “ இல்ல த்ரூவ் அப்படி யாரும் எனக்கு தெரியாதே..”

“ ஒ..” என்று எதோ யோசித்தவன் பின்” சரிம்மா எனக்கு ஒரு வேலை இருக்கு நான் இதோ வந்துடுறேன் ம்மா” என்று ஏதோ யோசனையோடு செல்லப்போனவன்  யாழினி மற்றும் மொழி கிளம்பி வருவதை பார்த்து விட்டு

 “ எங்க யாழி ஷாப்பிங்கா…” என்று கேட்ட படி வெளியே செல்லப்போனவனின் கால்கள் யாழினி சொன்னதை கேட்டு அசையாமல் அப்படியே நின்று போனது.

யாழினி சொன்னதை நம்ப முடியாமல் அவளை பார்த்து திரும்பியவன் “ இப்போ என்ன சொன்ன யாழி “ என்று அதிர்ந்து கேட்க,  யாழினி புன்னகை முகமாக

“அம்மா, மொழி நானு எல்லாரும் சேர்ந்து பக்கத்துல இருக்க பார்க்கு போக போறோம்..ண்ணா” என்று சொல்ல , அதை கேட்ட த்ரூவ் கை நடுங்க அவன் அம்மாவை ஏக்கம் கலந்த கண்களுடன் பார்த்தவன் கண்கள் கலங்கும் போல் இருக்க அதை கட்டுப்படுத்திக்கொண்டு.

“ம்மா..நானும் வறவா…” என்று குரல் நடுங்க கூறியவனை இழுத்து அனைத்து அழத் துடித்த கரங்கள், லேசாக நடுங்க அதை வெளியில் காட்டாதவராக “ ம்ம்ம்.. வாப்பா…” என்று அவர் சொல்லவும் தாமதம் இன்றி உடனே கிளம்பினார்கள் நால்வரும்.

யாழினி கையை பிடித்தபடி சுற்றி கண்களால் அனைத்தையும் பார்த்து கொண்டு நடந்து செல்பவரை நெஞ்சம் முழுக்க இருந்த நிம்மதியுடன் த்ரூவ் பார்த்து கொண்டு அவர்கள் பின்னால் நடந்துவர, அப்போது மொழி த்ரூவின் கையை பிடித்து அவனை அழைத்தவன்

“ மாமா என்ன தூக்கு” என்று கைநீட்ட, உடனே த்ருவும் அவனை தூக்கி கொண்டான். அதை பார்த்த யாழினி

 “ டேய் பார்க் வர கூட உன்னால நடக்க முடியாதடா, அண்ணா பாவம்டா வர்க் போய்டு இப்போ தான வந்தாங்க நீ இறங்கு அண்ணாக்கு டயடா இருக்கும் “ என்று யாழினி கடிய, அதை கேட்ட மொழி த்ருவின் கழுத்தை கட்டிக்கொண்டு இறங்க மாட்டென் என்பது போல செய்ய, த்ருவும் சிரித்தபடி

“ விடு யாழி எனக்கு டயடாலாம் இல்ல” என்று சொல்லிக்கொண்டு நடந்தவனை வியப்பாக தான் பார்க்கத் தோன்றியது யாழினிக்கு.

த்ரூவ் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பணக்காரன் இந்திய அளவில் பணக்காரர் வரிசையில் முதல் ஐந்துக்குள் வருபவன் இப்படி எந்த ஒரு பகட்டும் இன்றி தெருவில் நடந்து போவதும், சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணை வீட்டில் தங்கச்சியாக பார்த்துக் கொள்வதும் என்று எல்லாம் இவளுக்கு வியப்பையே தந்தது.

இவை அனைத்தும் எதற்காக எல்லாம் அவன் அம்மா அமுதா அவர் ஒருவருக்காக மட்டுமே. இதையெல்லாம் நினைத்தபடி பார்க் வந்து சேர்ந்தார்கள்.

பார்க்கை பார்த்ததும் மொழி துள்ளிக்கொண்டு கீழே இறங்கி விளையாட ஓடிவிட அவன் பின்னாலேயே த்ரூவும் சென்றுவிட்டான்.

அந்த பார்க்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை ஒன்று இரண்டு பேர் வாக்கிங் போய்க்கொண்டு இருக்க மற்ற அனைவரும் சிறுவர்கள் தான் இவை அனைத்தையும் பார்த்தபடி யாழினி நிற்க, அமுதாவை கவனிக்க மறந்தாள்.

அமுதா பார்க்கில் இருந்த ஆட்களை பார்த்தும் ஒரு மாதிரி பதற்றமாக தொடங்கினார் அவர் கழுத்து வரை போட்டு இருந்த பிளவுஸை மேலும் இழுத்து விட்டுக்கொண்டார் புடவை முந்தானையை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு சுற்றி பார்த்தவர் உடல் எங்கும் பயத்தில் நனைய தொடங்கியது.

அதுவரை மொழி மற்றும் த்ரூவ் விளையாடுவதை பார்த்துக் கொண்டு நின்ற யாழினி எதார்த்தமாக அமுதா பக்கம் திரும்ப அவரோ பயத்தில் முகம் வெளிறி அவர் முகத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தார்.

அமுதாவைப் பார்த்து பயந்த யாழினி அவர் அருகே சென்று அவரை அணைத்தபடி அருகில் இருந்த பெஞ்சில் அமர வைத்தவள்.

“ அம்மா இங்க பாருங்க என்ன பாருங்க ஒன்னுமில்லை நான் இங்க தான் இருக்கேன்” என்று அவர் கையை பிடித்து ஒரு அழுத்தம் தந்த பின்பு தான் கொஞ்சம் அமைதியானார் அமுதா.

ஆனால் அதன்பின்பு கூட அவர் தலையில் போட்டிருந்த முந்தானையை எடுக்கவில்லை. இதை தூரத்தில் இருந்து பார்த்த த்ரூவ் அவர் அருகில் மறந்து கூட செல்லவில்லை. இப்போது அங்கு சென்றால் என்ன ஆகும் என்று நன்றாக தெரிந்தவன் தூரத்தில் இருந்தே அவன் அம்மாவை பார்த்துக்கொண்டான் எப்போதும் போல.

 சில காயங்கள் பல வருடங்கள் ஆனாலும் ஆறாமல் நேற்று பட்ட காயம் போல் இருக்கும் அந்த நிலை தான் அமுதாவிற்கும்.இப்போது தான் அதை கொஞ்சம் கொஞ்சம் ஆக அந்த காயத்திற்கு மொழி மற்றும் யாழினியால் மருந்து போட்டு கொண்டு இருக்கிறார். அதன் பின் அமுதா சுற்றி குழந்தைகளை பார்க்க தொடங்கிவிட்டார். மொழி விளையாடி முடித்ததும் அனைவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இரவு மொழியை தூங்க வைக்க போராடிக் கொண்டிருந்தாள் யாழினி. மொழி “ நான் தூங்க மாட்டேன் எனக்கு போன் பார்க்கணும் போன் கொடும்மா…” என்று கைகால்களை உதறியபடி இருந்தவனை என்ன செய்தும் சமாளிக்க முடியவில்லை.

இப்போது மொழியை சமாளிக்க ஒரே வழி அவன் அப்பாவிடம் இருந்து வரும் அழைப்பு தான் என்று எண்ணிய யாழினி நேரத்தை திரும்பி பார்த்துவிட்டு “ ஏன் இன்னும் கால் பண்ணல வேலையா இருப்பாங்களோ..” என்று யோசனையாக இருக்க அவள் யோசனையை களைக்கும் விதமாக அவள் போன் சத்தம் போட மொழி,

“ஐ…அப்பா கால், அப்பா கால்..” என்று மொழி குதிக்க, யாழினி “ குதிக்காதடா மொழி…” என்று சொன்னபடி போனை எடுக்க அதில் மொழி அப்பா என்று பெயர் ஒளிரவும் முகம் பூவாய் மலர போனை அட்டன் செய்து காதில் வைத்தாள் அதற்குள் மொழி

“ அம்மா நானு…நான் தான் ஃபர்ஸ்ட் பேசுவேன் “ என்று குதிக்கவும் வேறு வழியில்லாமல் மொழியிடம் போனை நீட்டியபடி “ வர வர சேட்டை அதிகமா பண்றடா…”  என்று முறைக்க அதற்கு மொழி

“நீங்களும் தான் வர வர அப்பா கூட பஸ்ட் பேசணும்னு ரொம்ப அடம்பிடிக்கிறீங்க “ என்று நாக்கை வெளியில் நீட்டி ஒழுங்கு காட்ட, இவர்கள் பேசுவதை போன் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு உதட்டோரம் புத்த புன்னகையுடன் மொழியிடம் பேச தொடங்கினான்.