கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ் “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த முகத்தை பார்த்து கேட்க, உடனே முகத்தை மாற்றிக்கொண்ட யாழினி
“ என்ன அண்ணா நீங்களே இப்படி கேட்கலாம ? மொழி இல்லாம நான் எப்படி இங்க தனியா இருக்க , அவனுக்காக நான் போய்த்தான ஆகனும். “
“நீ… மொழிக்காக மட்டுமா அங்க போற யாழி “ என்று சந்தேகமாகக் கேட்டு நின்றவனை கவனிக்காதது போல
“ டைம் ஆகிடிச்சி ன்னு நினைக்கிறேன் அண்ணா, நான் கிளம்புறேன். அப்பறம் அமுதா அம்மாவ பத்திரமாகப் பார்த்துக்கொங்க ண்ணா “ என்று சொல்லி சென்றவளை பார்த்து பெருமூச்சு விட்டவன் திரும்பி வெளியே செல்ல, அங்கு ஸ்டெல்லா போனில் யாரிடமோ பேசிக்கொண்டு நிற்பதை பார்த்ததும் இவன் முகம் பல்ப் போட்டது போல பிரகாசமாக மாறியது.
“ ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டனா அம்மு “என்று வாய்க்குள் முனங்கி கொண்டவன் முகத்தை நார்மலாக வைத்துக்கொண்டு அவள் முன்னே சென்று “என்ன பிரச்சனை “ என்று கேட்கவும், ஸ்டெல்லா போனில்
“ ஒன் செக்கன்ட் சார் “ என்று சொல்லி ம்யூட்டில் போட்டு விட்டு இவனிடம் “ ப்ராஜக்ட் விஷயமா ஈவினிங் மீட்டிங்கை ஒன் அவர் தள்ளி வைக்க சொல்றாங்க சார் “ என்று அவனிடம் போனை கொடுத்து விட்டு காரில் அமர்ந்து கொண்டாள்.
அவள் செயலை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்தவன் போனில் பேசியபடி அவள் அருகே அமர்ந்து கோண்டான்.
இங்கு ப்ளைனில் அமர்ந்தவள் சீட்டில் தலைசாய்த்து கொண்டு கண்களை மூடினாள். விமானத்தில் செல்வது இது தான் முதல் முறை யாழினிக்கு அந்த பயம் வேறு இவளை தொற்றிக்கொண்டது. யாழினி பயந்த பெண் எல்லாம் இல்லை துறு துறு என்று மிக தைரியமானவள் தான்.
யார் எவரென்று பார்க்காமல் முகத்தில் அடித்தபடி பேசிவிடுவாள் . இப்படி இருந்தவளின் தைரியம் அனைத்தும் அவள் குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது எங்கே போனது என்று தெரியவில்லை.
பன்னிரண்டாவது தேர்வு எழுதி முடித்து எத்தனையோ கனவுகளுடன் காத்திருந்தவள். அவை அனைத்தும் கனவாகவே போகும் என்று நினைத்தும் பார்க்காதபடி வீட்டை விட்டு, அவள் இருந்த ஊரை விட்டு வந்துவிட்டாள்.
எங்கே போவது என்று திக்குத் தெரியாமல் சுற்றிய நேரம் அவளுக்கு கை கொடுத்தது என்னமோ அவள் பொழுது போக்கிற்காக கற்றுக்கொண்ட தையல் மற்றும் எம்பிராய்டரி வேலை (Embroidery work) தான்.
அதை வைத்து தான் பொட்டிக் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அங்கிருந்து தெரிந்த ஒரு பெண் மூலம் உதவ வந்தவர் தான் த்ருவ். அவரின் பெண்களுக்கான ஃபவுண்டேஷன் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் என்ன ஆகிருக்குமோ இவளுக்கு, அதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கியது.
இவற்றை எல்லாம் மனதில் போட்டு குழப்பி பயத்தை அதிகமாக்கியிருந்தாள். அந்த பயம் அழுத்தம் அனைத்தும் சேர்ந்து ஒரு தெளிவில்லாத மனநிலையில் தான் மாறன் வீட்டு முன் நின்றாள்.
காரில் இருந்து இறங்கிய அதித்தி கையில் பெட்டியுடன் உள்ளே வந்தவள் “ அண்ணா , அண்ணி எப்படி இருக்கீங்க “ என்று சிரித்த முகமாக கேட்கவும் இதை கேட்ட விக்ரமன் “ஒரே வார்த்தைல நம்ம ப்ளான்ன க்ளோஸ் பண்ணிடாங்களே மாறா“ என்று தலை மீது கைவைத்துக் கொண்டான்.
அதித்தி சொன்னதை கேட்ட வள்ளி “ மாப்பிள்ளை உங்களுக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்கல ஒரு தங்கச்சின்னு தான நேத்து சொன்னிங்க “ என்று கேட்டதும் ஆர்யனுக்கு பதட்டத்தில் வியர்த்து ஊற்ற என்ன செய்ய என்று தெரியாமல் திரும்பி மாறனை பார்த்தான்.
மாறன் இங்கு நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் கண்களாலேயே யாழினிக்கு சமாதானம் செய்து கொண்டிருப்பதை பார்த்து
“ இங்க என்ன நடந்திட்டு இருக்கு, இவன் என்னன்னா கண்ணுலயே நலம்தானான்னு பாட்டு பாடிட்டு இருக்கான். இவன நம்பி ஹெல்ப்புக்கு வந்தது என் தப்புதான் . இப்போ எப்படி சமாளிக்க “ என்று எண்ணியவன்
“அது அத்தை … இவங்க வந்து … எங்க பெரியப்பா பொண்ணு அந்த முறையில தங்கச்சி, அன கூட பொறந்த தங்கச்சி ஒருத்தவங்க தான் “ என்று சிரித்து சமாளிக்க
இங்கு விக்ரமன், மாறன் அருகில் நின்று கொண்டு அவன் கதோரம் குனிந்து “ உன்ன நம்பி உதவி பண்ண வந்த மனுஷன் அங்க பாவமா முழிச்சிட்டு இருக்காரு, நீ என்னென்ன அவர கண்டுக்காம டார்லிங்க சைட் அடிச்சிட்டு இருக்க “ என்று காதை கடிக்க அதையும் கவனிக்கும் நிலையில் இல்லை மாறன்.
மாறன் கண்ணுக்கு அவன் முன் பயந்த விழியுடன் முழித்துக் கொண்டிருக்கும் அவனின் யாழ் மட்டுமே தெரிய மற்ற அனைத்தும் அவன் கருத்தில் விழுவேனா என்றிருந்தது.
அதித்தி “ என்னது , நான் பெரியப்பா பொண்ணா “ என்று அதிர்ந்து அவன் அண்ணாவை பார்த்தாள் என்றால்.
கிருபா “ எனக்கு தெரியாம எப்படா மாமாக்கு அண்ணா வந்தாங்க “ என்று வாய்விட்டு உளறிவிட
ஆர்யன் கிருபா கையை போட்டு கிள்ளி வைத்து விட்டு “ அவன் இப்படி தான், காமெடியா பேசுவான் அத்தை. இல்லடா கிருபா“ என்று நன்றாக அவன் கையை கிள்ள
“ டேய் வலிக்குதுடா….” என்று ஆர்யன் கையை தட்டி விட்ட கிருபா, வள்ளி புறம் திரும்பி “அது வந்துங்க எனக்கு ஒரு டவுட் “என்று மேலும் எதோ பேச போக அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பின்னே சென்றபடி ஆர்யன்
“ அத்தை நீங்க போய் காலைல சாப்பாடு ரெடி பண்ணுங்க நான் இவங்களுக்கு பின்னாடி சுத்தி காமிச்சிட்டு வரேன் “ என்று செல்லவும்,
வள்ளி“ என்னது பின்னாடியா “ என்று மைன்ட் வாய்ஸ் கேட்ட போதும்
“ சரி அவுங்க எதோ குடும்ப விஷயத்த பேசுவாங்க போல நம்ம போலாம் “ என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டார்.
“ டேய் உங்க மாமா டீம் லீடர் தான “ என்று அந்நேரம் சந்தேகமாக விக்ரமன் கேட்கவும் , மாறன்
“ ஆமா, அவர் டீம் ஹெட் தான் அதுக்கு என்ன “
“ஒரு டீமுக்கே ஹெட்டா இருக்க அவருக்கு ஒரு பொய் சொல்லத் தெரியல்லையே மாறா…சுசுசு…… ரொம்ப கஷ்டம் மாறா, உங்க மாமாவ வச்சிட்டு ….” என்று உச்ச கொட்டியவன் “சரி வா.. நம்மலும் பின்னாடி போயு அந்த கிணத்தை சுத்திட்டு , அதை எட்டி பார்த்துட்டு வருவோம்” என்று தலையசைத்த படி பின்னே செல்ல , மாறன்
“ ஆமா.. பின்னாடி கிணறு மட்டும் தான இருக்கு. அதையா சுத்தி காட்டுரன்னு சொல்லி போனாரு மாமா, சுத்தம் போ “ என்று புலம்பிய படி சென்றான்.
இவற்றை எல்லாம் அமர்ந்தபடி கேட்டு கொண்டிருந்த மயூரி “ என்ன பிளான் போட்டாங்களோ நல்ல சொதப்பி வச்சிடாங்க ” என்று தலையை இருபக்கமும் அசைத்தபடி அவர்கள் சென்ற திசையில் பார்த்தாள்.
அப்போது அவள் அருகே அமர்ந்திருந்த மொழி “ அத்தை எங்க அம்மா ஏன் சோகமா போறாங்க நான் இல்லாம அழுதிருப்பாங்களோ “ என்று யாழினி முகம் காட்டிய வருத்தத்திலும் ஆர்யனுடன் செல்லும் போது திரும்பி திரும்பி பார்த்த படி சென்றதை வைத்தும் மொழி உணர்ச்சி வசத்தில் உளறிவிட்டான்.
மொழி சொன்னதை கேட்டு நெஞ்சில் கை வைத்த மயூரி “ டேய் என்னடா சொல்ற அந்த பொண்ணு தான் உங்க அம்மாவா “ என்று ஷாக் ஆனதில் , மொழி அவன் கைகளால் அவன் வாயை போத்திக்கொண்டு மறுப்பாக தலை அசைக்கவும் .
மயூரி “ டேய் உண்மையை சொல்லுடா யாழினி தான் உங்க அம்மாவா. அத்தை யார் கிட்டயும் சொல்ல மாட்டன் “ என்று அவன் கையைப் பிடித்து கேட்க, மொழி சுற்றி ஒருமுறை பார்த்து யாரும் இல்லை என்றதும் மயூரி காதருகே சென்று
“ஆமா அத்தை, அவங்க தான் என் அம்மா, அப்பா தான் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்று சொன்னாங்க “ என்று அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.
அதை கேட்டு அதிர்ந்த மயூரி மெல்ல அவள் வயிற்றை பிடித்து எழுந்து பின்னே சென்றாள்.
இங்கு வீட்டின் பின்னே கிருபா “ என்ன மச்சான் புதுசா மாமாவுக்கு அண்ணான், அந்த அண்ணன்க்கு பொண்ணுன்னு நியூ கேரக்டர்ஸ்ஸ இன்ட்ரோ பண்ற “ என்று அவன் தோள் மீது கையை வைக்க, அதித்தி சீரியஸான முகத்துடன் “ யாரு அண்ணா அவங்க “ என்று கேட்டு விட்டு ஆர்யன் முகத்தையே பார்க்க, அவன்
“அது வந்தும்மா என் மச்சான் தான் இவங்கள இங்க எல்லார் கிட்டயும் என் தங்கச்சின்னு சொல்ல சொன்னான் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு அதித்தி, கிருபா புறம் திரும்பி முறைக்க அதில் ஜெர்க் ஆன கிருபா
“அய்யோ அதித்தி நான் எதுவும் சொல்லல பிராமிஸ் “ என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கெஞ்சிக்கொண்டிருக்க. அப்போது இவர்கள் பின்னால் வந்த மாறன்
“நான் தான் அப்படி சொல்ல சொன்ன மதினி “ என்று அவன் வந்து நின்றான். மாறனை ஏற இறங்க பார்த்த அதித்தி “ ஏன் …” என்று ஒரே கேள்வி தான் அந்த கேள்வியில் எனக்கு முழுதாக அனைத்தும் தெரிந்தாக வேண்டும் என்று உறுதி இருந்தது.
அதை கண்டு கொண்ட மாறன் மேலோட்டமாக மொழி வந்தது அதன் பின் இவன் உதவி கேட்டது வரை சொல்லி அதித்தி முகம் பார்க்க, அதிதி முகத்தை யோசனையாக வைத்த படி
“ இப்பவும் அந்த பொண்ணு யாருன்னு நீங்க சொல்லலையே “ என்று யாழினியை பார்த்து கேட்க அப்போது சுரீல் என்று மாறன் முதுகில் அடி விழ அவன் வலியில்
“அ….” என்று கத்தியபடி திரும்பி பார்க்க மயூரி தான் நின்று கொண்டிருந்தாள். மயூரியை எதிர்பார்க்காத மாறன் “அக்கா..” என்று அதிர்ந்து நிற்க, மயூரி
“ என்னடா பண்ணி வச்சிருக்க சின்ன பொண்ண போய் உன்ன…”என்றும் மீண்டும் அவன் முதுகில் ஒன்று போட ஆர்யன் வந்து மயூரியை பிடித்து நிறுத்த பார்க்க அவனையும் தள்ளிவிட்ட மயூரி
“ யாரும் வராதீங்க இவன் பண்ண வேலைக்கு…. சின்னப் பொண்ணு போய் என்ன பண்ணிருக டேய் மாறா, இது தப்புடா, பாவம் அந்த பொண்ணு ….” என்று புலம்பியவள் யாழினி புறம் திரும்பி
“ உன் வயசு என்ன “ என்று கேட்க அதற்கு அவள் “ இருபத்திரண்டு “ என்று பாவமாக முகத்தை வைத்து சொல்லவும்” டேய் சயில்ட் மேரேஜ் வேறையா. அடப்பாவி இது அஃப்ன்ஸ் டா …தம்பி “ என்று பேசியவள்.
மாறன் மீது கோபம் அதிகமாக அவனை போட்டு கை வலிக்க அடிக்க தொடங்கினாள்.
மாறன் மயூரி சொன்னதை கேட்டு அதிர்ந்து “ அச்சோ அக்கா நீ தப்பா புரிஞ்சிருக்க யாரோ உன் கிட்ட தப்பா சொல்லியிருக்காங்க “
“அக்கா… என்ன உளறுற கொஞ்சம் நான் சொல்றத பொறுமையா கேளு“ என்றதும் தான் மயூரி அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு
“மொழியோட அம்மா இந்த பொண்ணு யாழினி தான “ என்று கேட்டு நிற்கவும் மாறன்
“உனக்கு எப்படி தெரியும் க்கா “ என்று சொல்லவும், அதில் மீண்டும் அடிக்க வந்த மயூரியை தடுத்த மாறன்
“அவ மொழியோட வளர்ப்பு அம்மா, மொழி பிறக்கும் போதே அவுங்க அம்மா இறந்துட்டாங்க “
“என்னது இறந்துட்டாங்களா ,உண்மையாவா , இல்லை அடிக்கு பயந்து பொய் இப்படி சொல்றியா “
“ உண்மையா தான் க்கா மொழியோட அம்மா கூட பிறந்தவ தான் யாழ் “
“யாழ் ? யாரு யாழ் “
“அக்கா… இவுங்க தான் யாழினி என்கின்ற யாழ் உங்க தம்பி செல்லமா இப்படி தான் கூப்பிடுவான் “ என்று விக்ரமன் சிரிக்க அதில் பல்லை கடித்து அமைதியாக இருக்க சொல்லி மாறன் சைகை செய்ய அதை கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்கு நிற்க, மயூரி
“ஓ… அவ அக்காவ தான் நீ லவ் பண்ணியா அப்போ “ என்று கதையை எங்கயோ கொண்டு சென்றாள் மயூரி.