நெஞ்சம் 14

கூடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.  அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் நின்று கொண்டிருக்க,  வள்ளி

“மாறா…, அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு தத்து எடுத்து வளர்க்கிறியாடா “ என்று மாறன் முகம் பார்க்க

அனைவருக்கும் அப்படி இருக்குமோ என்று தான் தோன்றியது. வள்ளி சொன்னதைக் கேட்ட மாறன் கோபமாக

“நாங்க ரெண்டு பேரு இருக்கோம் அப்பா ன்னு.  இருந்தும் அப்பா அம்மா இல்லையான்னு கேக்குற..ம்மா, என்ன பேசிட்டு இருக்க மொழி எங்க பையன் “ என்று அழுத்தமாக உரைத்தவனின் கன்னத்தில் பலார் என்று அறை விலவும், கன்னத்தில் கைவைத்தபடி சலனமின்றி நிமிர்ந்து தங்கப்பாண்டியை பார்த்தான்.

மாறனுக்கு விழுந்த அறையில் விக்ரமன் இரண்டு அடி தள்ளி நின்று கொண்டவன் “ நல்ல வேலை நம்ம அப்பாவ காணோம் “என்று பெருமூச்சு விட்டு கொண்டான் .

வீரபாண்டி “ என்ன தம்பி இது யார் புள்ளைய தூக்கி வந்திருக்க “  என்று தங்கப்பாண்டியை மறைத்த படி கேட்டார்.

“என் பையன் தான் ப்பா” என்று அதையே திருப்பி சொல்ல தங்கப்பாண்டி எகிறிக்கொண்டு மாறனை அடிக்க பாய அவரை தடுத்து பிடித்த வீரபாண்டி

“உன் பையன்னா அம்மா எங்க தம்பி “ அழுத்தமாக கேட்டு நிற்க

“அம்மா இல்லை,  நான்… அப்பா மட்டும் தான்”

“ அம்மா இல்லாம குழந்தை எப்படி தம்பி “ என்று அவர் கூர்மையாக கேட்க

“ இது எங்க குழந்தை. அவனுக்கு அம்மா இல்லை, எத்தனை முறை சொல்றது திருப்பி திருப்பி இதையே கேட்காதீங்க  “ அவரின் கண்களை பார்த்து பேசவும்

“ நாங்க கேட்காம வேற யாருடா கேப்பா தம்பி “ என்று தங்கப்பாண்டி கேட்ட அவன் சட்டையை பிடிக்க போக அவரை தடுத்து நிறுத்திய வீரப்பாண்டி

“அண்ணா பொறுமையா இருங்க..ண்ண “

“என்ன பொறுமையா இருக்க வீரா நாளைக்கு பொண்ணு பார்க்க போலாம்னு பார்த்தா இப்படி எவ குழந்தையையோ தூக்கிட்டு வந்திருக்கான் “

“பெரியப்பா வார்த்தைய விடாதிங்க,   அவன் என் குழந்தை இந்த வீட்டோட வாரிசு “

“மாறா…. யார… யார் வீட்டு வாரிசுன்னு சொல்ற “ என்று தங்கப்பாண்டி கத்தியதில் விக்ரமன் கழுத்தை மேலும் குழந்தை பயத்தில் கட்டி கொள்ள , உடனே விக்ரமன்

“ஒன்னும்மில்ல பேபி பயப்படாத “ என்று மெல்லிய குரலில் சமாதானம் செய்தவன் நகர்ந்து வெளியே சென்றுவிட்டான்.

இவற்றை பார்த்துக்கொண்டு இருந்த வீராப்பாண்டி “ தம்பி இங்க என்ன நடக்குது இந்த பையன் யாரு விக்ரமனுக்கு இது முன்னாடியே தெரியுமா. கொஞ்சம் உன்மைய சொல்லுப்பா “

“ம்ம்ம்… தெரியும் , இப்போ கூட என் பையன இங்க கூட்டி வந்திருக்க மாட்டேன் எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சே தீருவேன்னு சொன்னதும் தான் கூட்டி வர வேண்டியதா ஆகிருச்சி, நீங்க பாத்த பொண்ணுக்கு என் பையனோட என்ன ஏத்துக்க சரின்னா கல்யாணம் பண்ணிக்கிறேன் “  என்று கையை கட்டிக்கொண்டு பேசவும், அவனை புருவம் சுருங்க வீரப்பாண்டி பார்க்க, தங்கப்பாண்டி

“எந்த பொண்ணுடா இதுக்கு ஒத்துக்குவா… நீ வேனும்னே கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு எதோ  புள்ளைய தூக்கிட்டு வந்து நாடகம் ஆடுறியா “

“நான் ஏன் தேலையில்லாம நாடகம் ஆடணும் அவன் என் பையன் தான் “என்று சான்றிதழ்களில் தந்தை என்னும் இடத்தில் இவன் பெயரிருப்பதை எடுத்து காட்ட , அதில் கார்டியன் என்ற இடத்தில் விக்ரமன் பெயர் இருந்தது.

தாயின் பெயர் அதில் இல்லை இவற்றை எல்லாம் பார்த்த தங்கப்பாண்டி கோபத்தில் “ அந்த பையன எப்படி நீ பாத்துக்குறன்னு பாக்குறன்டா. என்ன அவமானம் படுத்திட்டல “ என்று மீண்டும் அவனை அடிக்க வர, மாறன்  அவரை விட்டு லாவகமாக நகர்ந்து

“என் பையனை ஒன்னும் பண்ண முடியாது உங்களால, அப்படி மீறி எதவது நீங்க பண்ண நினைச்சி ங்கானா கூட கம்பி எண்ண வேண்டியது தான் பிறகு. போலிஸ் ஸ்டேஷன்ல கம்பலெயின்ட் கொடுத்துட்டு தான் வந்திருக்கேன் “

என்று மாறன் சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் தங்கப்பாண்டி அதிர்ந்து தான் போனார் பின் அவரே சுதாரித்து கொண்டு.

“ இவ்வளோ தூரம் போய்டலடா உனக்கு இனிமே இங்க இடம் இல்லை வெளியே போடா “ என்று கத்தவும்,  மாறன் அவரை ஒரு நக்கலான சிரிப்புடன் பார்த்தவன்

“ இது பரம்பரை வீடு பெரியப்பா, இதுல எல்லாருக்கு பங்கு இருக்கு. வேணும்னா உங்க வயலுக்கு நான் வேலைக்கு வரல இனி அதை நீங்களே பாத்துக்கோங்க, எங்களுக்கு நாங்களே ஆரம்பிச்ச கம்பெனி போதும் “

மாறன் பேசியதை வெளியில் தின்னையில் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்த விக்ரமன் தலையை சாய்த்து உள்ளே எட்டிப்பார்த்து கொண்டு

“ என் நண்பன் பேசுறத கேட்டியா பேபி… எப்படி பேசுனா எப்படி  வழிக்கு வருவாங்கன்னு பேசுறான் பாரு. அந்த வயல்ல, அடுத்து என்ன போடனும், என்ன ஒரம் போடனும், எப்போ என்ன செய்யணும் னு எல்லாம் இவனுக்கு மட்டும் தான் தெரியும்ன்ற திமிருல பேசுறான் பாரு “ என்று பேசவும் மொழி

“ ஏன்…ப்பா தாத்தா ரெண்டு பேரும் அப்பா கூட சண்டை போடுறாங்க என்ன பிடிக்காத தாத்தாக்கு “ என்று உதடு பிதுங்க கேட்கவும் அதை பார்க்க முடியாத விக்ரமன்

“ பேபி… உன்ன யாருக்காது பிடிக்காம இருக்குமா சொல்லு, அது உங்க அப்பா உன்ன பத்தி யார்கிட்டயும் சொல்லாம இருந்ததுக்கு தான் கோபமாக இருக்காங்க “ என்று வெளியில் இவர்கள் பேசிக்கொண்டு இருக்க , உள்ளே வீரப்பாண்டி

“ நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல தம்பி “ என்று சொல்லி சென்றுவிட்டார்.  உடனே அவர் பின்னாலேயே தங்கப்பாண்டியும் முறைத்தபடி சென்றுவிட்டார்.

வெளியே வந்த இருவரும் தின்னையில் அமர்ந்திருந்த விக்ரமனைப் பார்த்துவிட்டு அவனையும் முறைத்து விட்டு போக, அவன்

“  நல்ல வேலை முறைப்போட போனாங்களே “ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

பின் மொழியை மடியில் அமர வைத்து “  மாறா என்ன சொல்லி போப்ஸ் உன்னைக் கூட்டி வந்தான் “

“அது அப்பா.. லீவ் ஃபுல்லா நான் இங்கதான்னும், நிறைய இடத்துக்கு கூட்டி போறன்னு சொன்னாங்க, அப்பறம் பாட்டி அத்தைலாம் காமிக்கிறேன்னு சொன்னாங்க, அப்பறம் “ என்று கன்னம் தட்டி யோசித்தவன் விக்ரமன் காதருகே சென்று

“அப்பறம் அம்மா பத்தி யார் கேட்டாலும் சொல்ல கூடாதுன்னும், அம்மா இங்க வந்த அம்மான்னு கூப்பிட கூடாதுன்னும் சொன்னாங்க “

“என்னது யாழி டார்லிங்கும் வந்திருக்காளா , இல்ல இது சரி பட்டு வராது உங்க அப்பன் என்ன போட்டு தள்ள பிளான் பண்ணிடான் “ என்று இவன் பயத்தில் பிதற்ற அப்போது அங்கு வந்த மாறன்

“புலம்பாதடா அவ இப்போ வரமாட்டா, நாளைக்கு தான் வருவா “

“ இன்னைக்கு கொன்னாலும் நாளைக்கு கொன்னாலும்..” என்று பேச வந்தவன் வாயில் பட் என்று அடி வைத்த மாறன்

“மொழி முன்னாடி இப்படி பேசாதன்னு எத்தனை வாட்டி சொல்றது விக்கி “ என்று அதட்டவும் , இதை வாசலில் நின்று பார்த்து இருந்த வள்ளி

“ டேய் பாப்பாவை கூட்டிட்டு சாப்பிட வாங்கடா “ என்று அழைத்துவிட்டு போக அந்த குரலில் திடுக்கிட்டு போய் இருவரும் முகத்தை முகத்தை பார்த்தபடி

“ அம்மா யாழினி பெயரைக் கேட்டிருப்பாங்களோ டா “ என்று மாறன் கேட்க

“கேட்டிருந்த யாரு அதுன்னு கேட்டு சண்டை போட்டிருப்பாங்களே டா “

“ஆமாம்… அப்போ கேக்கல போல, ஆனா சாப்பிட கூப்பிடுறாங்க நான் பண்ண காரியத்துக்கு உனக்கு சோறும் கிடையாது ஒன்னும் கிடையாதுன்னு கத்துவாங்கன்னு நினைச்சேன் “ என்று மாறன் யோசிக்கவும் , விக்ரமன்

“ரொம்ப யோசிக்காத நம்ம பேப்ஸ் முகத்தை பாத்து கூப்பிட்டு இருப்பாங்க,  அவுங்க மனசு மாறுரதுக்குள்ள போய் சாப்பிட்டுருவோம், வாடா “  என்று மூவருமாக உள்ளே சென்றனர்.

இங்கு நடப்பதை அனைத்தையும் பார்த்த ஆர்யன் மயூரி அருகே சென்று “ பிரச்சனை இருக்கும் இடத்தை தேடி நம்ம போறோமா.., இல்ல அது நம்ம போற இடத்தை தேடி வருதா ஒன்னும் புரியல மயிலு ,  இங்க என்ன தான் நடக்குது  “

“அதான் ஆரி எனக்கும் புரியல “

“நான் அப்பவே சந்தேகப்பட்டேன் எங்கடா நம்ம கிட்ட வீராப்பா சொல்லிட்டு போன மச்சான காணோம்னு… இப்போ தான புரியுது எதுக்கு போயிருக்கிறான் னு “ என்று தாடியை தடவியபடி மாறனை பார்க்க , மயூரி

“கொஞ்சம் என் தம்பி கிட்ட தனியா போய் என்ன பிரச்சனை ன்னு கேட்கிறீங்களா ? அவன பாக்க பாவமா இருக்கு “

“ம்ம்ம் கேட்குறன் மயிலு, மொதல்ல நிம்மதியா அவன் சாப்பிடட்டும் “ என்று சொன்னதும் மயூரியும்  தலையசைத்தாள்.

காலை உணவு உண்ண ஆர்யன்,  மயூரி , விக்ரமன்,  மாறன். மஞ்சு என்று அனைவரும் வரிசையாக அமர்ந்துகொள்ள மீனாட்சி மற்றும் வள்ளி பரிமாறினார்கள்.

இவற்றை பார்த்த வெள்ளையம்மா தான் வாய் ஓயாது விக்கி மற்றும் மாறனை திட்டியபடி இருந்தார்.

அவர் திட்டுவதை காதில் வாங்காமல் மாறன் மற்றும் விக்ரமன் இருவரும் இணைந்து  மொழிக்கு இயல்பாக ஊட்டி விட்டு கொண்டிருக்க. அதை பார்த்த மஞ்சு அவள் அம்மாவின் காதில்

“ அம்மா, இந்த பையன் உண்மையிலேயே நம்ம அண்ணா பையனா இருப்பானோ ?  எதோ எப்பவும் ஊட்டி விட்டு சாப்பிட வைக்குற மாதிரில  ஊட்டி விடுறாங்க“

“அதான்டி நானும் யோசிச்சேன், இதை உன் சித்திகிட்ட போய் சொன்னா, அவ ஒரு வார்த்தை பேசாம கோழிக் குழம்பு ஊத்துங்க அக்கா ன்னு சொல்றா, கோழிக் குழம்புல இருக்க அக்கரை இவளுக்கு அவன் பையன் மேல இல்லையேடி….. எனக்கு ஒன்னும் புரியல,  இங்க என்னடி நடக்குது “ என்று  கண் இமைக்க மறந்து அவர்களை பார்க்க, மஞ்சு

“ தெரியலம்மா ஆனா எதோ பெருசா இருக்குன்னு மட்டும் தெரியுது “ என்று இட்லியை சப்புக் கொட்டி உண்ண தொடங்கி விட அவளை ஒரு மாதிரி பார்த்த மீனாட்சி தலையை அசைத்தபடி

“இந்த வீட்டுல இருக்குறது எல்லாம் ஒரு ஒரு ரகமா தான் இருக்கு. “ என்று சென்றுவிட்டார்.

சமையல் அறையில் நின்று கொண்டு வடை போட்டு கொண்டிருந்த வள்ளிக்கு தலை முழுக்க குழப்பம் மட்டும் தான் இருந்தது.

அவருக்கு நிச்சயமாக தெரியும் மொழி அவன் பையன் இல்லை என்று. மொழி பார்க்க துறுதுறு என்று இருந்தாலும், அவனுக்கு அவரின் மகன் ஜாடை சுத்தமாக இல்லை அதுவும் இன்றி மகன் அவனின் அம்மாவை பற்றி பேசும் போது முழித்த முழியை கண்டு கொண்டிருந்தார் .

மொழி மீது மாறன் விக்ரமன் காட்டும் பாசம் உண்மைதான் ஆனால் இதில் எதோ இருக்கிறது என்று யோசிக்க தொடங்கி இருந்தார்.

இவர்கள் தெளிவாக இருக்கும் வரை இவர்களை சமாளிக்க முடியாது “ எல்லாம் மண்டைய பிச்சிட்டு சுத்துங்க எவ்வளவு டார்ச்சர்” என்று எண்ணியவன் நன்றாக குடும்பத்தையே குழப்பி விட்டான் .  குழப்பம் பிறந்தாள் வழி பிறக்கும் என்று நினைத்து விட்டானோ என்னமோ அனைவரையும் நன்றாக குழப்பி விட்டவன் அதை எதையும் கண்டுகொள்ளாது உணவு உண்டு கோண்டிருந்தான்.