நெஞ்சம்  13

மாறன் கேட்டதும் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்த ஸ்டெல்லா “ அது வந்து… இது உங்க அக்கா பெர்சனல்..” என்று தயங்கவும், உடனே

அமுதா “சரி எனக்கு ஒரு வேலை இருக்கு இதோ நான் வந்துறேன். நீயும் வா…யாழி எனக்கு ஹெல்ப் பண்ணு “ என்று யாழினியையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

த்ரூவும் “ உசாரா தான் இருக்கா…” என்று பெருமூச்சு விட்டவன் “பார்த்துக்கிறேன் உன்ன “ என்று முனங்கியபடி எழுந்து சென்றுவிட்டான்.

மாறன் மடியில் அமர்ந்த படி ஸ்டெல்லாவை பார்த்து கொண்டு இருந்த மொழியை பார்த்த ஸ்டெல்ல “பாப்பாவும் வேண்டாமே…”

என்று சொல்லவும் மாறனின் பயத்தின் அளவு கூடிக்கொண்டே போனது “ குழந்தை கேட்க கூடாத அளவு என்ன “ என்று யோசித்த படியே

“மொழி… போய் உங்க ட்ரெஸ்ஸ  எல்லாம் எடுத்து வைங்க “ என்று அவனையும் அனுப்பி விட்ட பிறகே ஸ்டெல்லா சொல்ல தொடங்கினாள்.

“ அது மேம்-அ ஒருத்தன் கடத்திப்போய் கல்கத்தாவில்ல வச்சிருந்தான் அங்க மாட்டியிருந்த திருச்சி சேர்ந்த லட்சுமி…ன்றவுங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டு மேமை காப்பாத்தி அனுப்புனாங்க,  அங்க இருந்து மேம் தப்பிச்சி வரும் போது தான் ஆக்சிடென்ட் ஆச்சி.

அங்க இருந்து தான் ஆசிரமத்திற்கு போனாங்க, அங்க தான் ஜெய் சார்ர பார்த்து ரெண்டு பேரும் நண்பர்கள் ஆகிருக்காங்க. அப்பறம் காலேஜ்லாம் முடிச்சி கேம் கம்பெனி ஒன்னு ஓப்பன் பண்ணி அதுல வர்க் பண்ணிட்டு இருக்கும் போது தான் ஆர்யன் பார்த்து லவ் பண்ணாங்க.

ஆர்யன் மேம்ம திருமணமும் பண்ணி ஹாப்பியா தான் இருந்தாங்க. ஆனால் அப்போ பாத்து ஜெய் சார் மேம்ம கடத்தி வச்சிடாங்க “

“என்னது.. ஜெய் எங்க அக்கா ஃபிரண்டு தானே “

“ஜெய் சார்க்கு சில பிரச்சினை சின்ன வயசு ட்ராமல நிறைய பெண்களை கொலை பண்ணி இருந்தாரு யாருக்கும் தெரியாம, மேமிற்கும் நிறைய ட்ராமா மனரீதியான பிரச்சனை நிறையா இருந்தது.

சோ சார் மேம் மேரேஜ் பண்ணிக்காம அவர் கூடையே கடைசி வரை இருப்பாங்கன்னு நினைச்சாரு, ஆனா அதை மீறி மேம் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தது பிடிக்காம கடத்திட்டாரு. “

என்னது அக்காக்கு மனரீதியா பிரச்சனை இருந்துச்சா அப்படி அக்காக்கு என்ன அச்சி என்று எண்ணியவன் “அக்காக்கு என்ன பிரச்சன “

“அது என்னால சொல்ல முடியாது மாறன் உங்க அக்கா தான் சொல்லணும் “

“சரி சிஸ் நீங்க மேல சொல்லுங்க “

“போலீஸ் வச்சி தான் மேமை கண்டுபிடிச்சோம். தலையில் அடிப்பட்டு மயக்கத்துல தான் இருந்தாங்க அஞ்சு மாசம் அப்புறம் ஜெய் சார் இறந்தது சொன்ன பிறகு தான் கண்ணையே திறந்தாங்க “

இவற்றை எல்லாம் கேட்ட மாறனுக்கு அந்த ஜெய் மேல் கண்முன் தெரியாத கோபம் தான் வந்தது. வாய்க்குள்

“நல்ல வேலை நீ இப்போ உயிரோட இல்லை ..” என்று முனங்கியவன். கண்களை மூடி திறந்து

“தாங்க்ஸ் சிஸ,  அக்கா பத்தி சொன்னதுக்கு “

“தட்ஸ் ஓகே மாறன்,  மேமை நல்லா பாத்துக்குங்க “ என்று சொல்லி சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டவன், ஒரு முடிவை எடுத்தவனாக மொழியை அவனுடன் அழைத்து சென்றுவிட்டான்.

இங்கு ஊரில் மயூரி ஆர்யன்க்கு துணையாக, வீரப்பாண்டி மற்றும் தங்க பாண்டி இவர்களை தவிர மீதி அனைவரும் இரவு அங்கேயே இருந்து கொண்டனர்.

அனைவரும் கூடத்தில் அமர்ந்து சிரித்துப் பேசிய படி இருக்க இரவு நேரம் விக்ரமனும் வந்து இணைந்து கொண்டான்.

அங்கேயே இரவு உணவு செய்து பெரியவீட்டுக்கு ஆள் வைத்து அனுப்பிவிட தங்கப்பாண்டி, கோபத்தில் வாய்க்குள் அனைவரையும் திட்டிய படியே இருந்தார்.

அவருக்கு அவர் சாப்பிடும் போது அவர் மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் அவரை ஏதாவது குறை சொல்லாமல் சாப்பிடவில்லை என்றால் ஜீரணம் ஆகாது போலும்.

இப்படி இருக்க “ மீனாட்சி,…” என்று பல்லை கடித்தபடி ஏனோ தானோ என்று உண்டு விட்டு சென்றுவிட்டார். இதை பார்த்த வீரப்பாண்டி எதுவும் சொல்லாமல் உண்டு விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.

மறுநாள் ஊருக்கு மயூரி மற்றும் ஆர்யனை, மாறனின் கல்லூரி நண்பர்கள் இவர்கள். மாறனை  பார்க்க வந்திருப்பதாகவே  அனைவருக்கும் சொல்லப்பட்டது.

இவற்றை எல்லாம் பார்த்திருந்த ஆர்யனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை என்றாலும் மயூரிக்காக அனைத்தையும் சகித்தபடி இருந்தான்.

காலை வீட்டில் வேலை மின்னல் வேகத்தில் நடந்து கொண்டு இருக்க மயூரி சேரில் அமர்ந்தபடி இவற்றை எல்லாம் நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்.

மஞ்சு பால் வாங்கி வந்தது,  பின் வெள்ளையம்மா அமர்ந்தபடி அனைத்தையும் வெட்டி கொடுத்துகொண்டே அவறின் மருமகள்களை இருவரையும் எதவது வேலை ஏவியபடி  இருப்பது, என்று அனைவரும் ஒரு ஒரு வேலை செய்துகொண்டு இருக்க ஒரே சத்தமாக கல கல வென்று இருந்த அந்த இடத்தை பார்க்கவே அத்தனை நிறைவாக இருந்தது.

அந்தச் சத்தத்தையும் ரசித்தபடி முகத்தில் சிரிப்போடு அமர்ந்திருந்தவளை கவனித்த பாட்டி கையில் நெட்டி முறித்து “ எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கனும் தங்கம்…”

என்று கூறியவர் மீண்டும் காய்கறியை வெட்ட தொடங்க அப்போது பார்த்து விக்ரமன் “ பாட்டி….” என்று அவர் அருகே இடித்து கொண்டு அமர, அவன் வந்திருந்த கோலத்தை பார்த்தவர்

“ அடேய், எருமை மாட்டு பயலே, காலைல குளிக்காம கொள்ளாம வந்து உட்காருற, நாத்தம் புடிச்ச பயலே தள்ளுடா “ என்று அவனை தள்ளிவிட,  விக்ரமன்

“என்னையே திட்டாத பாட்டி, நான் குளிக்காம வந்தேனே அதுக்கு காரணம் உன் பேரன் மாறன் தான். இல்லனா குளிக்காம எங்க வீட்டு வாசலை தாண்ட மாட்டேன் பாத்துக்கோ “ என்று போட்டிருந்த கைலியை கால் வரை இறக்கி விட்டு கொண்டு இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மயூரியை பார்த்து இளித்தபடி பேச,

“ தப்புனா அதை தப்புன்னு ஒத்துக்காத, எப்போ பாரு மாறன் தான் சொன்னான்னு அவன் மேல பழியை போட்டுரு “

“பாட்டி ட்ரஸ்ட் மீ, உன் பேரன் தான் அவசரமா எனக்கு கால் பண்ணி இங்க வர சொன்னா நானும் என்னம்மோ எதோன்னு வந்தா அவன காணோம் “

“ அவன் தான் வேலைய எங்கயோ போய்ருக்கான்னு சொன்னியேடா இப்போ இங்க எப்படி வருவான் “

“அதான் பாட்டி எனக்கும் புரியல, நேத்து எதோ உளறிட்டு போன உன் பேரன், அன அதை பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும், இருந்தும் பண்ணிடுவானோன்னு ஒரு பயத்தில்ல ஓடி வந்தேன் “

“என் பேரன் யாரு… அவன் சொன்ன செய்வான்டா நீ வேனா பாரு “

“அச்சோ… பாட்டி அதெல்லாம் உன் பேரன் ஒன்னும் செய்ய வேணாம் “

“ப்ச் அதெல்லாம் பண்ணுவான்டா,  ஆமா என்ன பண்ணுறேன்னு போனான் என் பேரன் “ என்று இவர்கள் பேசும் போதே கேட் திறக்கும் சத்தம் கேட்க வெள்ளையம்மா

“டேய் யாருன்னு பாத்துட்டு வா…” என்று அமர்ந்த இடத்திலேயே ஆர்டர் போட,  விக்ரமன்

“ உனக்கு எடுபுடி வேலை பார்க்க தான் உன் பேரன் காலையிலேயே எழுப்பி விட்டான் போல என்ன “ என்று புலம்பிய படியே வாசலை நோக்கி செல்ல , அப்போது

“அப்பா…..” என்று அழைப்புடன் மொழி வேகமாக விக்ரமனை நோக்கி ஓடி வர விக்ரமனும் அந்த அழைப்பில் தன்னைப்போல் கை நீட்டி அவனை தூக்கிக்கொள்ளவும் மொழி விக்ரமன் கழுத்தை கட்டி கொண்டு

“அப்பா….ஏன் நீங்க என்ன கூப்பிட வரல, வரேன்னு சொன்னீங்க தானே “ என்று கழுத்தில் முகத்தை புதைத்த படி பேசவும் அந்த அப்பா சத்தத்திலேயே அங்கு கூடத்தில் அனைவரும் வந்துவிட்டு அதிர்ந்து நின்றுவிட்டனர்.

ஆர்யன் “ இவ்வளவு பெரிய பையன் இருக்கான்னு சொல்லவில்லை விக்கி. சின்ன வயசுலயே மேரேஜ் பண்ணிக்கிட்டிங்களா “ என்று வேறு கேட்டு வைக்க,

மயூரி “ என்ன பாட்டி காலேஜ்லயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்கள ? நேத்து ஏன் இதை பத்தி சொல்லவே இல்லை “ அதற்கு அவர்

“எங்களுக்கே இப்போ தான் தெரியுது “ என்று அவர் அதிர்ந்து அங்கேயே அமர்ந்து விட,  மீனாட்சி

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்க விக்கி உங்க அம்மாக்கு தெரியாம, அவ வேற பாவம் உனக்கு இத்தனை வயசுல மகன் இருக்குறது தெரியாம பொண்ணு தேடி அழைச்சிட்டு இருக்கா. உன்ன…” என்று அவர் கையில் இருந்த கரண்டியால் அடி போட, பாவம் அந்த கரண்டி சூடாக வேறு இருந்திருக்க வலியில் கத்திய விக்ரமன்

“அட எல்லாம் அமைதியா இருங்க. ஓரே நேரத்துல எல்லாரும் அட்டாக் பண்ணாதிங்க பதறுது “

“நீ பண்ணிய காரியத்தை பார்த்து எங்களுக்கு தான்டா பதறுது “ என்று வள்ளியும் வருந்தி பேசவும், விக்ரமன் மொழி தலையை தடவியபடி

“மொழி,  அப்பா எங்க “ என்று கேள்வி கேட்கவும் அங்கிருந்த அனைவரும் புரியாமல் பார்க்க, மொழி அங்கிருந்த அனைவரையும் சுற்றி பார்த்தவன் கூச்சத்தில் மீண்டும் விக்ரமன் கழுத்தை கட்டி கொண்டு

“அப்பா.. வெளிய தான் இருக்காங்க “ என்று சொல்லவும், சரியாக மாறன் உள்ளே நுழைய அங்கிருந்த அனைவரும் குழம்பி தான் பார்த்தனர்.

“ டேய் என்னடா பண்ணி வச்சிருக்க நீ விளையாட்டுக்கு சொல்றன்னு நினைச்சன்டா “ என்று பொறுமையாக அவன் அருகே சென்று பேச, வெள்ளையம்மா

“முதல்ல ரெண்டு கழுதையையும் பிரி, எப்ப பாரு குசு குசுன்னு பேசியே எல்லா வேலையையும் பாக்குறாங்க. “ என்று வெங்காயத்தை தூக்கி எறியவும் விக்ரமன் நகர்ந்து கொள்ள அது மாறன் மீது பட்டு கீழே விழுந்தது. உடனே மாறன் ,

“பாட்டி…..” என்று கத்தவும் அமைதியாகிவிட்டார்.

அதன் பின் மொழியின் தலையை வருடிய படி “ இவன் பெரு மொழி எங்களோட பையன் “ என்று அறிமுகம் படுத்தவும் அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் போக

“உங்களோடனா…” என்று மஞ்சு புரியாமல் கேட்க

“என் பையன் அதுனால விக்ரமனுக்கும் பையன் “ என்று சொல்லவும் சாக் ஆகி

“என்ன சொல்ற மாறா.” என்று வள்ளி திணறலாக பேச

“ இவனுக்கு ஆறு வயசு ஆகுதும்மா,  இவ்வளவு நாள் சென்னைல தெரிஞ்சவங்க வீட்டுல இருந்தான்“  அதை கேட்டு வள்ளி கோபத்தில் கண்கலங்கி “மாறா….” என்று அவர் கத்தவும்

“அம்மா, சாரி ம்மா என்ன சொல்ல தெரியல ஆனா சாரி ம்மா “ என்று தலைகுனிந்து நிற்கவும் வள்ளிக்கு கண்ணீர் கண்களில் இருந்து வடிய அதை துடைத்தபடி

“ அந்தப் பையனோட அம்மா எங்க “ என்று தெளிவாக அவன் முகம் பார்க்க, ஒரு நிமிடம் தடுமாறிய மாறன் பின் சுதாரித்து

“அம்மா இல்ல..ம்மா, இவனுக்கு நாங்க அப்பா மட்டும் தான் “ என்று உளறியபடி விக்ரமனையும் சேர்த்து நிற்க வைக்க, அவன் “ என்ன மாறா உலருற “ என்று காதை கடிக்க, மாறன்

“ உனக்கு டீச்சர் வேணுமா வேணாம்டா “ என்று ஒரே கேள்வியில் விக்ரமன் வாயை அடைத்து விட்டான்.

விக்ரமனும் என்ன வேணா சொல்லிக்கோ மாறா என்று நின்றுவிட்டான்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க அதற்குள் மாறன் ஒரு குழந்தையுடன் ஊருக்குள் வந்தது அனைவருக்கும் பரவி விட, வீரப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி வேகமாக கிளம்பி இங்கு தான் வந்து கொண்டு இருந்தனர்.