ெஞ்சம் 12

“அய்ய…. என்ன டேஸ்ட், உங்க எல்லாருக்கும் அந்த பொண்ணைப் போய் சூப்பர்னு சொல்றீங்க “ என்று விக்ரமன் முகத்தை சுளிக்க,

அவன் பேச்சில் மாறன், அவனை கொன்றுவிடும் கோபத்தில் முறைப்பதை பார்த்த விக்ரமன்

“ஏன்டா அப்படி முறைக்குற உனக்கு ஹெல்ப் பண்ண தானடா பேசுறேன் “

“அ… செருப்பு.. இவனே கோத்துவிடுவானா, இவனே ஹெல்ப்பும் பண்ணுவானா …. நம்ம அதை பாத்து இவற பாராட்டணுமா  போடா…” என்று அவனை சத்தம் இல்லாமல் திட்டினான்,

வெள்ளையம்மா “  டேய் என்னடா குசு குசுன்னு பேசுறீங்க… பொண்ணு நல்லா அழகா தான இருக்கு,  உனக்கு கண்ணு தெரியுதா இல்லையா “  என்று விக்கி என்று நினைத்து மாறனை பார்த்து பேசுபவரை பார்த்த விக்ரமன்

“ அதை இங்கப் பார்த்து சொல்லு பாட்டி… நான் இங்கிட்டு இருக்கன் உனக்கே முதல்ல கண்ணு தெரியல நீ என்ன சொல்ற“ என்று சத்தமாக வெள்ளையம்மா  காது அருகே சென்று கத்தினான்.

“ஏ….. காது கிட்ட வந்து கத்தாத டா…” என்று வெள்ளையம்மா தள்ளிவிட,  வள்ளி

“விக்கி…. “ என்று குரல் கொடுக்கவும் அமைதியான  விக்ரமன் “ சொல்லுங்க…ம்மா “ என்று சமத்தாக அவர் அருகே சென்றான். அவர்

“அந்தப் பொண்ணு லட்சணமா தான இருக்கு ஏன் அப்படி சொன்ன “ என்று மாறனையும்,  விக்ரமனையும் உற்று பார்க்க மாறனுக்கு அவர் பார்வையில் பதட்டம் தான்.

வள்ளி கேட்டால் அனைத்தயும் நன்றாக உளறி வைப்பான் விக்கரமன் எங்கே எதவது ஏடாகூடமாக உளறிவிடுவானோ என்று பயம் தான் மாறனுக்கு.

அந்த பயம் விக்ரமனுக்கு இல்லை போல அவன் அசால்டாக

“ அம்மா… நீங்களே பாருங்க அந்த பொண்ணு எம்புட்டு வெள்ளையா மேக்கப்லாம் போட்டு இருக்கு “ என்று ஃபோட்டோவை காட்ட

“ப்ச்..உளறாம விஷியத்துக்கு வா..”

“ அதான்..ம்மா, அப்படியே திரும்பி உங்க பையன பாருங்க நல்லா டார்க் கலர், நெடு மரம் மாதிரி ஹைட்டா இருக்கான், அப்புறம் ஹாம்ஸ் வச்சிட்டு செமையா வேற இருக்கான் “

என்று அவன் சொல்லியதை கேட்டு அந்த அறையில் இருந்த அனைவரது பார்வையும் மாறன் புறம் திரும்ப, மாறனுக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது.

அதில் “டேய் என்னடா பேசிட்டு இருக்க ..” என்று அவன் கையை கிள்ளி வைக்க “அ…வலிக்குது டா.. உனக்காக தான பேசுறன், கொஞ்சம் சும்மா இருடா ” என்று அலறியவன்.

மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பி “அ.. எங்க விட்டேன் “ என்று கேள்வியாக பார்க்க,  மஞ்சு

“அந்த ஹாம்ஸ்ல….” என்று எடுத்து கொடுக்கவும் , அவன்

“அ.. ஹார்ம்ஸ் லாம் வச்சிட்டு பக்கா வில்லேஜ் பாய் நம்ம மாறன், ஆனா அந்த பொண்ண பாருங்க எதோ வெளிநாட்டுலயே வளந்த மாதிரி இருக்கு. எப்படி மாறன் லைஃப் ஸ்டையிலுக்கு செட்டாகும் “ என்று விக்ரமன் உளறுவதை பார்த்த மாறன்.

“இவன் எதையாவது உளறிட்டு போட்டும் , நம்ம மொதல்ல அங்க என்னன்னு பேசிட்டு வந்துருவோம் “ என்று போனை விக்ரமன் கையில் இருந்து பிடுங்கிக்கொண்டு

“இதோ வந்துறேன் “ என்று சொல்லிக்கொண்டு ஜீப்பை எடுத்து பெரிய வீட்டை நோக்கி சென்றவன், வழியில்பொறுமையின்றி அவன் பெரியப்பாவுக்கு கால் செய்தான்.

போனை உடனே எடுத்தவர் “ சொல்லுங்க தம்பி ஃபோட்டோ பார்த்தீங்களா..” என்று ஆர்வம் பொங்கும் குரலில் பேசினார். உடனே அவன்

“பெரியப்பா, நான் தான் ஒரு வருஷம் போகட்டும், மஞ்சு கல்யாணம் முடிஞ்சி பாத்துக்கலாம்னு சொன்னேனே “

“ அவ இப்போ தான தம்பி கலேஜி படிக்குறா, அவளுக்கு இப்போ முடிச்சா சரிவராது தம்பி. வரன் அமையும் போதே முடிச்சிடனும் இல்லனா பொண்ணு கிடைக்குறது கஷ்டமா போய்டும் தம்பி “  இவற்றை கேட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவன்

“நான் நேர்ல வந்து பேசுறேன் பெரியப்பா “ என்று சொல்லி வைத்து விட்டான்.

கண் முன் யாழினி தான் சிரித்த முகமாக வந்து நின்றாள். அவளின் சுருண்ட முடியை கைகளில் சுருட்டிய படி “மொழிக்கு அம்மா எப்பவும் நான் மட்டும் தானே…” என்று தரையை பார்த்த படி தயங்கி தயங்கி ஒரு தடுமாற்றத்துடன் அவள் விருப்பத்தை மறைமுகமாக கேட்டு நின்றது இன்றுவரை அழியாமல் கண் முன் வந்து போக.

தலையை உலுக்கி கொண்டவன் “யாழ்….” என்று தலையை கோதிக்கொண்டான் “ மொழிக்கு நீ தான் என்னைக்கும் அம்மா “ என்று வாய்க்குள் சொல்லியபடி பெரிய வீட்டுக்கு சென்றான்.

இங்கு வீரப்பாண்டி அவர் அண்ணாவிடம் “ என்ன அண்ணா சொன்னான் மாறன், பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னான்னா “ என்று ஆர்வமாக கேட்க, அதற்கு அவர்

“ எங்க வீர…, எப்பவும் போல தான் இப்போ வேணான்னு சொல்றான் “

“இப்போ என்ன பண்ண அண்ணா, தரகர் கிட்ட வேற இரண்டு நாள்ல பொண்ண பாக்க வறோம்னு சொல்லிட்டோமே “

“சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும் தம்பி. இந்தப் பெண்ணை தான் நம்ம மாறனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறோம். இப்போவே ன்னா உன் பொண்ணும் அந்த பொண்ண பாத்த மாதிரி இருக்கும் அவளும் சந்தோஷப்படுவால தம்பி “ என்று வீரபாண்டி முகம் பார்க்க,

அவரின் முகம் பிரகாசமாக மாற “ ஆமாம் மயிலயும் கூட்டி போலாம்ல அண்ணா “ என்று யோசித்தவர் மாறனிடம் எப்படியாவது பேசி ஒத்துக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டார்.

அதே நேரம் மாறனின் ஜீப் வந்து வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது.

உள்ளே நுழைந்த மாறன் அவன் அப்பா மற்றும் பெரியப்பா அருகே வர அவன் பேசும் முன் அவனின் அப்பா பேச தொடங்கினார்.

“தம்பி, தரகர் கிட்ட பொண்ணு பாக்க வரதா சொல்லிட்டோம். என்னும் இரண்டு நாள்ல பாக்க போறோம்”

“அப்பா நான் சரின்னே சொல்லல அதுக்குள்ள நீங்க பொண்ணு பாக்க வரதா ஏன் சொன்னிங்க “

“ தம்பி எப்போ உனக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் நீங்க அமைதியா இருங்க“

“ அப்பா… எனக்கு அந்த பெண்ணை புடிக்கல ப்பா “

“ ஏன் புடிக்கல, பெண்ணு நல்லா தான இருக்கா “

“நல்லா இருந்தா போதும்மா ப்பா..” என்று என்ன சொல்ல என்று திணறியவன் பின் “ அப்பா ஒரு வருஷம் டைம் தாங்க ப்பா இந்த கம்பெனியா கொஞ்சம் பெரிசா ஆக்கிட்டு பண்ணிக்கிறேன் “

“கல்யாணம் அடுத்த வருஷம் வச்சிக்கலாம் இப்போ பொண்ண பாத்துட்டு பூ வச்சிட்டு வந்துருவோம் தம்பி. கல்யாணம் ன்னா சும்மாவா மண்டபம் பாக்கணும்…, நேரம் பாக்கணும்.., அதுக்கு மாசம் ஆகும் தம்பி. அதுக்குள்ள அந்த கம்பெனிய பெரிசா ஆக்குங்க “ என்று தங்க பாண்டி சொல்ல

மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன சொல்ல என்று புரியாமல் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டான்.

எப்போதும் ஏதாவது குழப்பம், சோகம், கோபம், சந்தோஷம் என்று எதுவாகினும் அவன் தோட்டத்துக்கு சென்று விடுவான்.

அதுதான் அவனது இரண்டாவது வீடு என்று கூட சொல்லலாம். இப்போதும் அங்குதான் தண்ணீர் தொட்டியின் திண்டில் தலையில் கை கொடுத்து படுத்திருந்தான்.

அவன் முன்னே நெல் நன்றாக வளர்ந்து தலைசாய்ந்து காணப்பட அதை பார்த்தவனுக்கு அதுவும் அவன் போல சோகமாக இருப்பது போல தோன்றியது.

அப்பொழுது அங்கு புல்லட் சத்தம் கேட்டு பார்க்காமலே அங்கு வந்தது விக்ரமன் என்று புரிந்தவன் யாரையும் பார்க்க பிடிக்காமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

விக்ரமன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு மாறனை நோக்கி வந்தவன். அவன் தலை அருகே ஏறி அமர்ந்த படி

“மாறா ரோலர்கோஸ்டர் போயிருக்கிறாயாடா “ என்று சம்மந்தம் இல்லாமல் பேசியவனை பார்த்து

“இவன் ஒருத்தன்.., இது தான் டைம்னு, என்ன வச்சி செஞ்சிட்டு இருக்கான் “ என்று எண்ணியவன் எதுவும் பேசாமல் போக

“நீ பதில் சொல்லலனாலும் நானே சொல்றன் மாறா, அது மேல போய், கீழ இறங்கி, வேகமா போய், பொறுமையா போய்னு, சூப்பரா இருக்கும் மாறா “ என்று அவனை பார்க்க அவனிடம் நோ ரியக்ஸன் அதை கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தான் விக்ரமன்

“நம்ம வாழ்க்கையும் அதே போலதான்டா. ஒரே மாதிரி போனா அது நல்லாவே இருக்காது டா மேல கீழன்னு போனா தான் ஜாலியா இருக்கும் “

என்று அட்வைஸ் பண்ணவனின் வாயை ஊசியை வைத்து தைத்து விடலாமா என்று தோன்ற அந்த எண்ணத்தை பின் பார்க்கலாம் என்று சேமித்து வைத்தவன் “ என்னடா ரோலர்கோஸ்டர்னு உளறுர “ என்று கண் மூடியபடியே பேசினான்.

“வாழ்க்கையோட கருத்த சொல்றேன்டா, “

“உன் கருத்து உன்ன மாதிரியே இருக்கு “

“சரி… என்னைப் புகழ்ந்தது போதும், நான் இன்னைக்கு நைட் பிளைட்ல கிளம்புறன் டா. உன் அக்காவ பார்க்கிற மாதிரி கம்பெனியையும் கோஞ்சம் பார்த்துக்கோடா. ஏதாவது சொதப்பிடாதே, அப்படி மீறி நீ சொதப்பிட்ட மொழியையும் சேர்த்து தூங்கிட்டு வரணும் அப்பறம் போர்க்கலம் தான் பாத்துக்கோ “

என்று விக்ரமன் சொன்னதைக் கேட்டு மாறன் திடீரென்று “ டேய் விக்கி…..” என்று கத்தியபடிச் எழுந்திருக்க அதில் ஜெர்க் ஆன விக்ரமன் தொப் என்று அந்த தொட்டியில் மல்லாக்க விழுந்தவன்.

அதிர்ச்சியில் தண்ணீரைக் குடித்து திணறியபடி எழுந்திருந்து அதற்குள் மாறன் அவனின் ஜீப்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

“டேய்….எருமை என்ன தள்ளிவிட்டுட்டு எங்கடா போற…” என்று அவன் கத்த

“சென்னைக்கு தான்டா….”

“என்னது சென்னைக்கா, நீ ஏன்டா அங்க போற…..”

“ஆ… என் பையன இங்க கூட்டி வர தான் “

“ஒ..,  என்னது…. டேய்…. மாறா….என்னாடா…. உளறுற “ என்று விக்கி கத்த கத்த சென்றவன் யாரிடமும் சொல்லாமல் இரவு சென்னைக்கு சென்றுவிட்டான்.

இப்படி மறுநாள் சென்னைக்கு போய் சேர்ந்தவன் வந்ததும் வராததுமாக மொழியை அழைத்து செல்ல போவதாக சொல்ல, யாழினி கலங்கி போய் நிற்க அமுதா புரியாமல் நின்றாள்.

அந்நேரம் பார்த்து மாடியில் இருந்து த்ரூவ் இறங்கி வர மாறனை பார்த்து “ வா…மாறா, எப்போ வந்த, ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க உக்காரு, யாழி உனக்கு என்ன ஆச்சு நீ ஏன் அப்படி நின்னுட்டு இருக்க “

என்று ஒன்றும் புரியாமல் பார்க்க அந்நேரம் பார்த்து அங்கு வந்த ஸ்டெல்லா த்ருவைப் பார்த்து

 “சார் எல்லாம் ரெடி, நீங்க வந்து செக் பண்ணி ஓகே பண்ணினா போதும் “ என்று சம்பந்தமே இல்லாமல் வந்து நின்றவளை அனைவரும் யார் இவங்க என்பது போல பார்க்க த்ரூவ்

“இவுங்க தான் என் நியூ பிஏ ஸ்டெல்லா “ என்று அறிமுகப்படுத்தி வைக்க,  அமுதா த்ரூவை ஒரு மாதிரி பார்த்து வைத்தார்.

அதை கவனிக்காத த்ரூவ், “ஸ்டெல்லா, ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க “ என்று அங்கே அமர வைத்தவன்.

“அங்கேயே ஏன் மாறா நிக்குற இங்க வா “ என்று அழைக்கவும் மொழியை அழைத்துக்கொண்டு அமர்ந்தான்.

யாழினி அவனையே கண் இமைக்க மறந்து சோகமான முகத்துடன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த த்ரூவ்

“இங்க என்ன ஆச்சி, ஏன் எல்லாம் ஒரு மாதிரி இருக்கிங்க, அமா…, மாறா விக்ரமன் மட்டும் தன வரான்னு சொன்ன “ என்று கேள்வியாக பார்க்க, அவன்

“அது எங்க அக்கா வந்திருந்தாங்க அதான் நான் வரலன்னு சொன்ன “

“என்னது அக்காவா நீ ஒரே பையன் தான உங்க அம்மாக்கு “

“இல்ல சார் சின்ன வயசுல காணாம போன அக்கா இப்போ தான் வந்திருக்கா “

“வாட் உங்க அக்கா காணாம போயிருந்தாங்களா “

“ அமா சார், நான் பிறக்கும் முன்னாடி காணாம போனவுங்க, இப்போ தான் மாமா கூட வந்திருக்காங்க”

“டேய் பிட்டு பிட்டா சொல்லாம விளக்கமா சொல்லு”

“அது சார்… அக்கா காணாம போய் ஆக்சிடென்ட்ல எல்லாம் மறந்துட்டாங்க, இப்போ தான் நினைவு வந்து மாமா கூட வந்திருக்காங்க “ என்று மாறன் சொன்ன கதையை கேட்டு கொண்டிருந்த ஸ்டெல்லா

“இந்த கதைய எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே “ என்று எண்ணியபடி திரும்பி மாறனை உற்று பார்க்க

அவன் பார்க்க மயூரி போலவே இருக்கவும் “நீங்க மேம் தம்பியா… “ என்று கேட்ட குரலில் ஸ்டெல்லாவை பார்த்த மாறன்

“என்னதுங்க…” என்று கேள்வியாகப் பார்க்க,  அவள்

“அ..சாரி, அது… மயூரி மேம் தம்பியா ன்னு கேட்க வந்தேன் “

“மயூரி… ஆமாம் அக்காவுடைய இன்னொரு பேரு மயூரின்னு தான் சொன்னாங்க “ என்று சொன்னது தான் தாமதம் ஸ்டெல்லா வேகமாக அவன் அருகே வந்து

“ மேம் எப்படி இருக்காங்க, அவுங்க குடும்பத்தை கண்டுபிடிச்சிட்டாங்கலா?, எந்த ஊர்ல மேம் இருக்காங்க ? நான் கால் பண்ணணும்ணு நினச்சேன்..” என்று பேசிக்கொண்டே போனவளை நிறுத்திய மாறன்

“சிஸ் நிறுத்துங்க, மொதல்ல எங்க அக்காக்கு நீங்க யாருன்னு சொல்லிட்டு பேசுங்க, ஏன் எங்க அக்காவ மேம்னு கூப்பிடுறிங்க “

“ நான் அவுங்க கம்பெனி பிஏ வா இருந்தேன் “

“பிஏவாவ, அக்காக்கா..”

“இல்ல அவுங்க ஃபிரண்டு பிஏ வா இருந்தன்” அதை கேட்ட த்ரூவ்

“நீ இதுக்கு முன்னாடி பிஏவா அந்த சைக்கோ கூட தான வர்க் பண்ண “ என்று யோசனையாக பார்க்க

“ஆமா அவர் தான் மயூரி மேம் ஃபிரண்டு “ என்று ஸ்டெல்லா சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாறன்

“சிஸ்,  என்ன சொல்றிங்க”

“அது மேம்….உங்க கிட்ட அவங்களோட பாஸ்ட் பத்தி எதுவும் சொல்லயா ? “ இந்த கேள்வியிலேயே எதோ பெரிதாக இருப்பதை புரிந்து கொண்ட மாறன் சமாளிப்பாக

“அது அக்கா அம்மா கிட்ட சொல்லியிருப்பா, நான் அப்போ வேலையா இருந்தன் அன்ட் இங்க கிளம்பி வந்துட்டன் போன்ல பாதி தான் சொன்னாங்க நேரில்ல வந்து பேசிக்கலாம்னு சொல்லிடாங்க “

என்று எதோ சமாளித்து பேசியவன் “ என்ன ஆயிச்சி , கொஞ்சம் நீங்களே சொல்லுங்க சிஸ்“ என்று கேட்டான்.