வெள்ளையம்மாவைப் பார்த்த மீனாட்சி என்ன பேச என்று தெரியாமல் விழித்தபடி அசையாமல் நின்றுவிட்டார் .
“என்னடி இப்படி நிக்கிற, நான் ஒன்றும் சொல்லல்லை போய் பிள்ளையைப் பாரு “ என்று சொல்லிவிட்டு தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.
ஏனோ அவருக்கு இன்று தன் மகன் பேசியது எதுவும் பிடிக்கவில்லை அதனாலேயே மீனாட்சியை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
இதுவே மற்ற நாட்களில் இது போல் இவர் பேசியிருந்தார் பதிலுக்கு நால் முழுதும் திட்டி பேசி ஒரு வழி ஆக்கிவிட்டு தான் அமைதி ஆவார்.
ஆனால் இன்று நிலைமையோ வேறு. அவரின் முதல் பேத்தி மயிசை பாட்டி, பாட்டி என்று காலுக்குள்ளேயே சுத்தி திரிந்தவள் காணாமல் போனது எவ்வளவு துடித்திருப்பார். இத்தனை வருடம் சென்றிருந்தாலும், ஏன் வெளியில் வள்ளியை இதற்காக திட்டிய படியே இருந்தாலும்.
என்றாவது தன் பேத்தி வந்துவிட மாட்டாளா என்று எத்தனை கடவுளை வேண்டி இருப்பார். அத்தனை வேண்டுதலுக்கும் பலன் தரும் விதமாக பேத்தி வீடு திரும்பியதில் இவருக்கு அத்தனை மகிழ்ச்சி, பேத்தி பத்திரமாக திரும்பியதே போதும் என்று இவர் இருக்க.
இவர் மகன்கள் என்ன என்றால் இப்படி சாதியை பிடித்து கொண்டு வந்த பேத்தியை துரத்தும் வேகத்தில் இருக்கவும் இவருக்கே கோபம் தான், என்ன என்று இவர்களை நாம் வளர்த்தோம் என்ற சிந்தனையில் மூழ்கிப் போனார்.
வெள்ளையம்மா சோர்ந்த முகத்தை பார்த்த வள்ளி
“என்ன ஆச்சி அத்தை, ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா“ என்று வள்ளி பதட்டமாகவும் தான் அனைவரும் வெள்ளையம்மாவை கவனித்தனர்.
“பாட்டி என்ன ஆச்சி நல்லாதான பேசிட்டு இருந்த “ என்று மஞ்சு உலுக்க
“அத்தை தண்ணிய குடிங்க “ என்று தண்ணீரை நீட்டினாள் வள்ளி. இவர்கள் பதட்டத்தை பார்த்த வெள்ளையம்மா , பெருமூச்சு ஒன்றை விட்டபடி
“எனக்கு பதிமூனு வயசுல திருமணம் ஆச்சி, அப்போ இருந்து உங்க தாத்தா பேச்சைத் தான் கேட்டு இருப்பேன். அவர் அப்புறம் என் பசங்க பேச்ச கேட்டு இருக்கிறேன். சின்ன வயசுல இருந்து அவர் சொன்னது தான் பசங்க கேப்பாங்க நான் ஏதாவது சொன்னா கூட உனக்கு என்னடி தெரியும் சும்மா இருன்னு சொல்லிடுவாரு.
அதனாலேயே புள்ளைங்களும் அவர மாதிரியே வளந்து நிக்குறாங்க. நான் தான் ஒழுங்கா வளக்கல்லை, அதான் இப்படி இருக்காங்க தம்பி. என் தப்பு தான் கோபிச்சிக்காம மன்னித்துடுங்க தம்பி “
என்று கலங்கி போய் பேசியவரை பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் வருத்தம் தான் வந்தது.
உடனே ஆர்யன் “ இப்படி பேசாதீங்க பாட்டி, நீங்க எந்த தப்பும் பண்ணல, இதெல்லாம் நினைச்சி கஷ்டப்படாதீங்க, எனக்கு உங்க யார் மேலயும் கோபம்லாம் இல்ல “ என்றவன் மீனாட்சியை பார்த்து
“இதோ தட்டுல போட்டு எடுத்து வரேன் தம்பி, நீங்களும் உக்காருங்க “
“அது முதல்ல மயிலு சாப்பிடட்டும், நான் போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன் “ என்று சொல்லிவிட்டு பின்னே குளிக்க சென்றுவிட்டான்.
பின் குளித்து முடித்து வந்து அவனும் உண்டு முடித்த பின் அனைவரும் அமர்ந்து பேசிய படி இருந்தனர்.
அப்போது பார்த்து “அக்கா…..” என்று குரல் கேட்க அனைவரும் அடுத்தது யாருடா.. என்பது போல தான் எட்டி பார்த்தனர்.
விக்ரமன் தான் வெளியில் வாசலில் நின்று கொண்டிருந்த மாறனை “யாருடா..நீ டிஸ்டபன்ஸ் “ என்று அவனை தள்ளி விட்டு உள்ளே வேகமாக வந்தவன்
“ எங்க என் அக்கா … அக்கா…” என்று மயூரி அருகே முட்டி போட்டு அமர்ந்தவன்
“என் தாய் எனும் அக்காவை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே…” என்று நெஞ்சில் அடித்தபடி பாடியவனை இருவரும்
“யாருடா… நீ ஜோக்கரு “ என்பது போல பார்த்து வைக்க அவர்கள் பார்வையை பார்த்த விக்ரமன் “ ஓவரா போயிட்டோமோ “ என்று மைன்ட் வாய் ஓட்டி கொண்டு இருக்கும் போது அவன் தோளில் ஒரு கை வந்து விழ பயந்த விக்ரமன்.
“அம்மா…” என்று கத்திவிட்டான், அவன் கத்திய சத்தத்தில் மயூரி பயந்து அவளுக்கு விக்கல் வந்து விட,
இதை பார்த்து இருந்த மீனாட்சி அவன் தலையில் நங் என்று கொட்டி “ ஏன்டா தொண்டையில குழவ கிளவ விழுங்கி தொலஞ்சிட்டியாடா, இப்படி கத்தி வைக்குற பாவம் புள்ள பயந்து விக்குது பாரு “
“ பெரியம்மா, இட்ஸ் நாட் மை மிஸ்டேக், என் வீக்னஸ்ஸை தெரிஞ்ச யாரோ பண்ண சதி “
“என்னதுடா மிஸுக்கொட்டு ..” என்று விக்ரமன் சொன்னதை புரியாமல் அவர் கேட்க
“மிஸுக்கொட்டா…. என்ன பெரிய பசிக்குதா பிஸ்கட் கேட்குற , சரி நில்லு உனக்கு புடிச்ச மில்க் பிஸ்கட் வாங்கி வரேன் “ என்று எழ போனவனை மீட்டும் கொட்டிய மீனாட்சி
“என்னைக்காவது புரியறாப்பல பேசுறியாடா, இப்படி எதவது ஒலறிட்டு இரு. இப்படி தான் வியாபாரம் பண்றப்பயும் ஒலறுவியாடா “
“என்னது ஒலறுவியாவா… யாரைப் பார்த்து என்ன பேசிட்ட பெரியம்மா நானு யாரு எவறுன்னு தெரியாம நீ பேசுற “
“நீ ஒரு சோலியத்த மவன்னு எனக்கு தான் தெரியுமே “ என்று அவர் தலையை திருப்பிக்கொள்ள விக்ரமன் அவர் முன்னே சென்று குரங்கு சேட்டை செய்ய தொடங்க
இவர்களை பார்த்து இருந்த மயூரிக்கு விக்கல் நின்று விட அதை கூட உணராமல் இவர்களையே வியந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கே வந்த மாறன் “ டேய் விக்கி…. உன்னை இங்கே வரச் சொன்னது நானுடா, மொதல்ல என் கூட பேசிட்டு அப்புறமா ஆட்டம் போடுடா “ என்று அவனை தரதரவென்று இழுத்து வெளியே செல்ல
“ அக்கா ஐ யம் விக்ரமன், நான் தான் உங்க தம்பி உயிர் நட்பு ….” என்று கத்திக்கொண்டே செல்பவனை பார்த்து சிரித்த மயூரி
“யாரும்மா இவங்க..” என்று வள்ளியிடம் கேட்க, வள்ளியும் சிரித்த படி
“ நம்ம மாறன் ஃபிரண்டு ம்மா, நல்ல பையன் சின்ன வயசுல இருந்தே ஒண்ணாதான் சுத்துறாங்க, இப்போ கூட ஒன்னா தான் தொழில் பண்றாங்க “
என்று மீண்டும் உள்ளே அனைவரும் சேர்ந்து பேச தொடங்க இங்கு வெளியே
“ ஏன்டா மாறா இழுத்துட்டு வந்த, அக்கா என்ன என்னென்னு நினைச்சிருப்பாங்க “ என்று சட்டையை சரிசெய்தான், அதில் அவனை பார்த்து முறைத்தவன்
“உன்ன இங்க கூப்டது நானு… நீ என்னன்னா நேரா என்ன கண்டுக்காம உள்ள போயிட்ட. ஆமா உனக்கு எப்படிடா விஷயம் தெரியும் “
“வேற யாருடா சொல்லிருப்பா உங்க அப்பா தான், என் பொண்ணு வந்துருக்கா, மாறன் அவ கூட பழைய வீட்டுல தான் இருக்கா நீ போய் பாருன்னு சொன்னாரு”
“இது எப்போ “
“நீ கால் பண்ண அப்பறம் “
“டேய் விக்கி, இந்த விஷயத்தை யார் கிட்டயவது சொன்னியாடா “ என்று எதோ யோசனையுடன் மாறன் கேட்டான்.
“இல்ல மாறா இனிமே தான் அம்மா கிட்ட நம்ம பசங்க கிட்ட எல்லாம் சொல்லணும் “ என்று விக்ரமன் சொன்ன பிறகு தான் மூச்சே வந்தது மாறனுக்கு.
“டேய் யார் கிட்டயும் இப்போதைக்கு சொல்லாத விக்கி “
“ஏன்டா ஏன் சொல்ல கூடாது “ என்று யோசனையாக மாறன் முகம் பார்க்க அவன் இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவும் விக்ரமன் பொங்கியே விட்டான்.
“ என்னடா மாறா உங்க அப்பா, பெரியப்பா இப்படி இருக்காங்க, சரி வெளிய யார்கிட்டயும் உங்கள சொல்ல கூடாதுன்னு உங்க கிட்ட சொல்லிட்டு, அவர் மட்டும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இருக்காரு “
“அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல்லை “ என்று இருவரும் யோசனையாக இருக்க அப்போது மாறன்
“ஆமா ராம் விஷயம் என்ன ஆச்சு “
“எல்லாம் ஓகேடா மாறா, அவன அந்த பெண்ணோட அனுப்பி விட்டாச்சு “
“ பத்து நாள் உங்க அக்கான்னு சொல்லாம இங்க வச்சு அக்காவ திருப்பி அனுப்பிட்டா போதுமாடா மாறா , அதுக்கு அப்பறம் நீங்க யாரும் அவங்கள தேடி போக மாட்டீங்களா “
“அதைதான் விக்கி நானும் யோசிச்சிட்டு இருக்கேன் என்ன பண்றதுன்னு “ என்று இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருக்க மாறனின் போன் சத்தம் போட்டது
யார் என்று எடுத்து பார்க்க யாழினி தான் அழைத்திருந்தாள். உடனே போனை எடுத்து காதில் வைத்த மாறன்
“சொல்லு யாழ்..” என்று பேசினான்
“ஹலோ எப்படி இருக்கீங்க “
“ம்ம்ம் நல்ல இருக்கேன் யாழ், நீங்க “ என்று பேசியபடி விக்ரமனை விட்டு நகர்ந்து சென்றவனை அவன் முறைக்க அதை கண்டு கொள்ளாமல் மாறன் சென்றான்.
“நல்லா இருக்கீங்களா, எப்போ வர்றீங்க இங்க, மொழி கேட்டுட்டே இருக்கான் “ என்று யாழினி சொன்னதைக் கேட்டதும் தான் மாறனுக்கு மொழியைப் பார்க்க நாளை வருவதாக சொன்னது நினைவுவர என்ன செய்ய என்று முழித்து நின்றான்.
அக்காவை தனியே இப்போது விட்டும் செல்ல முடியாது மொழியிடமும் வருவதாக சொல்லியிருக்கிறான் என்ன செய்ய என்று தடுமாறிய மாறன்
“அது யாழ்….கொஞ்சம் இங்க வேலை இருக்கு “ என்று இங்கு இவன் சமாளித்துக் கொண்டு இருக்கும் அதே நேரம் அங்கே தங்கப்பாண்டி மாறன் திருமணத்துக்கு பெண் பார்க்க வருவதாக பேசி முடித்திருந்தார்.