Advertisement

   சரியாக  அரைமணிநேரம்  கழித்து  வந்து  கதவைத்திறந்தவன்.. 
     வெளியிலிருந்து..   ‘ஆனந்தி..” என  அழைக்க..  வெளியே  வந்தவளிடம்.. 
    ‘சாப்பிட  வாங்கிவந்திருக்கேன்..  தண்ணிஎடுத்திட்டு  மாடிரூம்  சாவியையும்  எடுத்திட்டு  வா..” என்றான்.
      ‘மாடிரூம்ல  கட்டில் மட்டும்தான்  இருக்கும்..  மத்ததெல்லாம்  காலிசெய்தாச்சி..  இங்கயே  சாப்டுக்கலாமே..” என  குரலிறங்கி  சொல்ல..
      ‘பரவால்ல   கீழயே  உக்கார்ந்து  சாப்டுக்கலாம்..  போய்  எடுத்திட்டு  வா..” என்று  குரலுயர்த்த..
      வெற்றி  சொன்னதுபோல்  தண்ணீரோடு  ஆனந்திவர.. ‘மேல போ..  நான்  இப்ப  வந்திடறேன்..” என  கட்டளையாகவே  சொல்ல..  நல்லவேளை  நம்ம  நினைச்சமாதிரி  தண்ணியெல்லாம்  அடிக்கலபோல..  நல்லா  தெளிவாத்தான்  பேசுறான் என்று  ஆசுவாசப்பட்டாலும்..  ஒருவித  தயக்கத்தோடே   படியேறினாள்  ஆனந்தி.
      
     சற்றுநேரம்  கீழேயே   காத்திருந்தான்..   கால்மணிநேரத்தில்   வெற்றிக்கு  அழைப்பு  வர..  ‘ம்ம்..  இங்கதான்..   அதே  ஸ்ட்ரீட்ல  நாலவது  பில்டிங்..  எஸ்.. எஸ்.. ஸ்ட்ரைட்டா  வாங்க..” என்றான்.
      இரண்டுபேர்  வர..  விபரங்களை  சொல்லி..  முடிந்ததும்  கால்பண்ணுங்க..  நான்  மேலதான்  இருப்பேன்..” என்று   ஆனந்திடம்  சென்றான்.
      ‘ஏங்க..  கீழ  வீட்டை  பூட்டிட்டிங்களா…?  இல்ல  நான்போய்  பூட்டிட்டுவரேன்..” என்று  எழுந்தவளை..
      ‘உக்காரு..  அங்க  என்ன  பெருசா  இருக்கு..? ஹால்ல  ஒரு  சோபா..  இரண்டு  சேர்..   பெட்ரூம்ல  ஒரு  கட்டில்.. பீரோ..  கிச்சன்ல  கொஞ்சம்  ஜாமான்.. அவ்ளோதான..?  யாரும்  எதுவும்  செய்திடமாட்டாங்க..  எனக்கு  பசிக்குது..  முதல்ல  சாப்பாடு  போடு..” என்று  அதட்டி  பார்சலை  கையில்  கொடுத்தான்.
     சாப்பிட ஏதுவாக பார்சலை  பிரித்துவைத்து..  வெற்றியைப்  பார்க்க..
     ‘நீயும்  சாப்பிடு..” என்றான்.
      ‘நீங்க  வர  கொஞ்சம்  முன்னதான்  கஞ்சிகுடிச்சேன்..  நான்  அப்புறம்  சாப்டுக்கிறேன்..” என்று  சொல்ல..
      ‘நான்  அஞ்சிமணிக்கு  வந்தேன்..  இப்போ  மணி ஏழாய்டுச்சி..  சாப்பிடு..” என்று  அதட்டி..  வெற்றி   சாப்பிடுவதில்  கவனம்  செலுத்த..
     வெற்றியை  முறைத்தவாறே   தனக்கும்  பிரித்தாள்  பார்சலை. வெற்றி   நான்கு  இட்லிகளை  சாப்பிட்டு  முடித்திருக்க..   ஆனந்தி  ஐந்து  இட்லியை  சாப்பிட்டு  முடித்திருக்க..   முறைத்துப்  பார்த்தான்  ஆனந்தியை.
     ‘மூனுநாளா  வெறும்  கஞ்சிதான்  குடிச்சிட்டிருந்தேன்..  அதான்..” என்று  அசடுவழிய.. ‘வேற  எதாவது  வாங்கி  வரவா..?” என்றான்  அக்கறையாக.
      ‘இல்லல்ல..  வயிறு  புல்லாகிடுச்சி..”
      ‘தூங்கபோற  நேரத்தில..  இப்போ   எதுக்கு  சாரிகட்டியிருக்க..?  அந்த  டிரெஸ்சே  நல்லாதான  இருந்தது…?” என்று  சின்னசிரிப்போடு   கேட்க..
       ‘ஃபீவர்ன்னு   இரண்டுநாளா  குளிக்கல..  இப்போ  சரியாகிடுச்சி..  அதான்  குளிச்சிட்டு  சாரிபோட்டேன்..” என்றாள்  சற்று  அவஸ்த்தையாக.
       சரி  சரி..  இதுவும்   நல்லாத்தான்  இருக்கும்.. என  நினைத்தவன்..
      ‘ஆக..  உங்கம்மாக்காகவும்..  எங்கப்பா  உன் மாமாங்கிறதுக்காகவும்தான்   என்னை  கல்யாணம்  செய்துகிட்ட..? ம்ம்..?  என்றான்  ஆழ்ந்த  பார்வையோடு.
      மறுபடியுமா…?  என  நினைத்தவள்..  ‘கல்யாணத்துக்கு  முன்னாடி..  இரண்டுமுறைதான்  நேர்ல  பார் த்தேன்..   அதுக்குள்ள  எப்படி  லவ்  வரும்..?  அதோட  நீங்களும்     மிரட்டிட்டேதான  இருந்திங்க..?” என்று  வெற்றிமீது  குற்றம்  சுமத்தினாள்.
        வெற்றிக்கு   அழைப்பு  வர.. ‘ம்ம்..  முடிஞ்சதுங்களா..?” என்றபடியே  கீழேவந்தவன்..  அவர்களுக்கு   பணம்  செட்டில்செய்து  அனுப்பிவைக்க..  ஆனந்தி   கீழே  வரவும்..  ‘யார்  அவங்க..?” என்றாள்.
     ‘ப்ச்.. வா..” என  உள்ளே  அழைத்துப்போக..  வீட்டின்  பின்புறம்  சென்று  பார்சல்குப்பைகளை  போட்டு   உள்ளே  வர..  தான்  கொண்டுவந்த  பேகிலிருந்து  சாட்சை   எடுத்து  போட்டுக்கொண்டிருந்தான்.
     ‘ரூம்க்கு  போய்  மாத்தமாட்டிங்க..?  ஹால்லயே  பேன்டை  கழட்டிட்டு..” என  நொடித்துக்கொண்டே   பெட்ரூமினுள்  போகயிருந்தவளை  தடுத்தவன்..
     ‘டையர்டா  இருக்கபோல..  கேட்டை  பூட்டிட்டு  வா  தூங்கலாம்..  இல்ல  அதுக்கொருமுறை  எழுந்துவரனும்..” என்று  சொல்ல..  சலிப்பாக  போனாள்.
       ஆனந்தி  உள்ளே  வரும்  அரவத்தில்  சிரித்தவன்..   அவள்  உள்ளே  வந்ததும்..  ஒரு  மகாராணிக்கு  அளிக்கும்  வரவேற்ப்புபோல்..  தன்  சிரம்தாழ்த்தி..  ஒருகையை  தன்  வயிற்றோடு  மடக்கி..  மறுகையை  பவ்யமாய்  அவள்முன்நீட்டி  வரவேற்க்க..  வெற்றியின்  செயலிலும்..  ரோஜாக்குவியலாய்  பூத்திருக்கும்   தன்  அறையின்  அழகிலும்  வாய்பிளந்து..   ஆனந்தி  மெய்சிலிர்த்திருக்க.  
     மனைவிமுன்  மண்டியிட்டு  ரோஜாப்பூங்கொத்தை வெற்றிமாறன்  நீட்ட..  சிலையானாள்  ஆனந்தி.
     ‘ஒத்த  ரோசாகூட  கொடுக்கலன்னு  பெரிய  குற்றச்சாட்டை வச்சிங்கல்ல..?    பிடிங்க மேடம்..” என்று  சிரிப்போடும்..  காதலோடும்  மண்டியிட்ட  நிலையிலேயே  பூங்கொத்தை  நீட்டிக்கொண்டேயிருக்க..   முகமெல்லாம்  சிலிர்த்துசிவந்தபடி..  மெல்லவாங்கினாள்  மலர்ச்செண்டை..
      ‘ம்ம்..  இன்னும்  என்ன…?” என  யோசித்து.. ‘ம்ம்.. ஐ லவ் யு..  யு.. யு.. யு..” என்றவன்   மெல்ல  அணைத்து  நெற்றியில்  இதழ்பதிக்க..
       ‘ம்ம்..” என்றாள்  நாணத்தோடு.. 
     ‘இந்த  ம்ம்  கதையெல்லாம்  இங்க  ஆகாது..   ஒழுங்கா  லவ் யு மாமா சொல்லு..  இங்க  முத்தம்  கொடுத்து..” என்று  தன்  இதழை  காண்பிக்க..
      ‘மாமா  ல்லாம்  சொல்லமாட்டேன்..” என்றாள்  தலைகுனிந்து சிரிப்போடு.
      ‘உன்னை  முதல்முதல்ல  பார்த்த  நொடியில  இருந்தே  லவ்  பண்ண ஆரம்பிச்சிட்டேன்..  ஆனா நீ  அப்படியில்லல்ல..?   மாமா மகன்ங்கிறதாலதான  கல்யாணம்  செய்துகிட்ட.?  அப்போ  மாமாதான்  சொல்லனும்..‚” என்று   அதட்ட..
      ‘அதுக்கு  நீ  என்னோட  சின்னவனா  இருந்திருக்கனும்..” என்று  முனுமுனுக்க..
      ‘ஆள்மயக்கி..  என்னடி  மரியாதை  தேயுது…?” என்று  வன்மையாய் அணைக்க..
      ‘மாமா  சொல்லமாட்டண்டா..” என்றவள்  அடுத்தநொடி  வெற்றியின்  தலையை  எம்பி  வளைத்து..  நுனிக்காலில்  நின்றபடி   கணவனின்  உதட்டை  தனதால்  மூட..  மனைவியின் செயலில்  தன்னிலையிழந்த  வெற்றிமாறனின்  செயல்கள்  அனைத்தும்    வன்மையாக மாற..  பலனற்ற  மறுப்புகளோடும்  செல்ல  சிணுங்கல்களோடும்..    விரும்பியே  ஏற்க  ஆரம்பித்தாள்  கணவனின்  வன்மையை.
       இரவு  பத்து  மணிக்கு மேல்..  தான்  இருக்கும்  நிலையில்.. ‘லைட்டை  எதுக்கு  போட்டிங்க..?” என முறைக்க..
      ‘நான்  எப்போ  லைட்டை  அணைச்சேன்..?” என்று  வெற்றி புன்னகைபுரிய.. 
      ஆனந்தி.. ‘ஆங்..” என  விழிவிரிக்க.. ‘என்உதட்டோட  உன்உதடு  லேசா  உரசும்போது  கண்ணை  இறுக்கிமூடினவதான்..  இப்போதான்  கண்ணையே  திறக்குற..” என்றான்  இலகுவாக.
      ‘நான்  கண்ணைமூடினா  என்ன..?  நீங்க  லைட்டை  அணைச்சிருக்க வேண்டியதுதான..?” என  கோபித்தாள்  முகம்  சிவந்து.
      ‘விடுடி..  நான்  பார்க்த்தான  நீ…” என்றான்  கண்சிமிட்டி.
      வெக்கத்தோடு  வெற்றியின்  நெஞ்சினில்  தலைசாய..  சேர்த்தணைத்துக்கொண்டான்   தன்னோடு.
      ‘அம்மா  அழுது  நான்  முதல்முறையா  பார்த்தது.. என்னோட  ஏஜ்  ஃபங்சன்லதான்..  அப்பல்லாம்  அம்மா  நல்லா  ஹெல்தியா இருந்தாங்க.. அம்மா அழுததும்..  என்ன  இது  சின்னபிள்ளையாட்டம்..?  பொண்ணுங்களுக்கு   இயற்கையா   நடக்கவேண்டிய  நிகழ்வுதான  இதெல்லாம்..  இதுக்கெல்லாம்  அழுவியான்னு  அப்பா ஆறுதல்  சொன்னதும்..
      ‘நான்  அதுக்கு  அழலங்கன்னு  அம்மா சொன்னதுமே..  அம்மாக்கு  அவங்க  அண்ணனோட  நியாபகம்  வந்திடுச்சின்னு  அப்பா  புரிஞ்சிகிட்டார்..  நீ  வேண்ணா  ஒருமுறை  உங்கண்ணனைப்  போய்  பார்த்திட்டுவா  சந்திரான்னு  அப்பா  சொன்னார்..  அம்மாதான்  வேண்டாங்க..  இத்தனை  வருசம்  கழிச்சும்  மறுபடியும்  உங்களை  எதாவது  எங்கண்ணன்  சொல்லிட்டார்னா..  என்னால  அதை  தாங்கிக்க  முடியாதுன்னு  மறுத்திட்டாங்க..   
       எனக்கும்  சின்ன  வயசிலயிருந்தே   தாத்தாபாட்டின்னு  யாருமில்லையேன்னு  வருத்தமாயிருக்கும்..  அம்மா  அன்னைக்கு  அப்பாகிட்ட  சொல்லி  அழுததிலருந்து..  எப்படி  இப்படி  கல்நெஞ்சா  இருக்காங்கன்னு  மனசுக்குள்ள   மாமாவை  திட்டிட்டிருப்பேன்..
      கொஞ்சநாள்க்கப்புறம்  அபர்ணா  ஃபங்சன்ல..  எனக்கும்  அம்மா  மாதிரியே  ஏக்கம்  வந்திடுச்சி..  அப்பாம்மாக்கு  தெரியாம  மாமாவை  கண்டுபிடிக்கலாம்னு  கூட  யோசிச்சேன்..  எந்தஊரு   பேருன்னு  எதுவுமே  தெரியாம..  நாம  எதாவது  செய்யப்போய்..  வம்புல  மாட்டிகிட்டா  என்ன பண்றதுன்னு  பயத்தில  அப்டியே  விட்டுட்டோம்..
      எங்களை  கண்டுபிடிக்கனும்னு  உங்களுக்கு  எப்போ  தோணுச்சி..?” என  ஆர்வத்தோடு கேட்க..
      தன்  அப்பாவின் ஹார்ட்  சர்ஜரிக்குப்பிறகு.. அவர் தங்கையை  பார்க்கவேண்டும்  என சொன்னதிலிருந்து  வெற்றி  ஆரம்பிக்க..  ஒருமணிநேரமாக கேட்டுக்கொண்டிருந்தவள்..
     ‘அப்போ  மாமா  கேக்கப்போய்தான்  எங்களை  தேடியிருக்கிங்க..  உங்களுக்கா  எதுவும்  தோணல..    அம்மாவோட  வச்சி  என்னைப்  பார்த்ததுக்கப்புறத்திலயிருந்துதான்   என்னை  விரும்ப  ஆரம்பிச்சிருக்கிங்க.. 
      முழுசா  இதை  லவ்வுன்னு  சொல்லிடமுடியாது..  லவ்வோட சேர்த்து   நான்  உங்க  அத்தைமகள்ங்கிற  உரிமையும்தான்..    ஆனாலும்  இந்த  இரத்தபந்த உரிமைங்கிறது.. லவ்வைவிட எந்தவிதத்திலும்  குறைஞ்சதில்லதான..?” என  வெற்றியை  கேள்வி  கேட்க..
       ‘இப்போ  என்ன  சொல்ல  வர..?” என்றான்.
       ‘நீங்க  அததைமகளைப்  பார்த்து  ஃப்ரீசாய்ட்டிங்க..   நான்  மாமன்மகனைப்  பார்த்து  ஃப்ரீசாய்ட்டேன்..  அதாகப்பட்டது  என்னன்னா..? உரிமையான  உறவுல   ஒருத்தருக்கொருத்தர்  மெய்மறந்து  உறைஞ்சிட்டோம்னு    சொல்றேன்டா  மாமன்  மகனே..”  என்று    காதல்பாடம்  எடுத்தாள்  கல்லூரி  ஆசிரியை.
     ‘அடா  புடான்ன..  அவ்ளோதான்..  ஒழுங்கா  மாமா  சொல்லுடி..” என மிரட்டுவதுபோல்  கெஞ்சினான்  வெற்றிமாறன்.
      ‘மத்தவங்க  முன்ன  அப்படி  சொல்லமாட்டேன்..  ரூம்க்குள்ள  டா டா தான்..   அப்போதான்  கிக்காயிருக்கும்..” என்  கண்சிமிட்ட..
      ‘பார்டா..  உனக்கு  இந்தமாதிரி  கிக்கெல்லாம்  கூட  தெரியுமா..?  அப்போ  ஏண்டி  என்னை  இத்தனைநாள்  தவிக்கவச்ச..?” என  ஆரம்பித்தவன்    அரைமணிநேரம்  வரை  கேள்விகளை  அடுக்க..  அவனின்  ஒவ்வொரு  கேள்விகளுக்கு  பொறுமையாக..  காதலாக  பதிலளித்தாள்.
      இளகிய  குரலில்.. ‘ஆனந்தி..  நம்ம  கல்யாணம்  நடக்குமோ  நடக்காதோன்னு   நான் அதிகம்  பயந்ததே  மாமாக்குதான்..  எங்கப்பா  மாமாவை  அவ்ளோ  அசிங்கமாவும்  கேவலமாவும்  திட்டியிருந்திருக்கார்.. 
     ஆனாலும்  அதெல்லாம்  மறந்து..  முதல்முறையா   நான்  இங்க  வரும்போதே  என்னை  அவர்  மரியாதையா  நடத்துனதும்  எனக்கு  மெய்சிலிர்த்துப்  போச்சி..  எனக்கு  எங்கத்தையை  விட..  என்மாமாவைத்தான்  ரொம்ப  ரொம்ப  பிடிச்சிருக்கு..” என்று  சொல்ல..
      ‘உங்களுக்கு  ஒன்னு  தெரியுமா..?   அம்மாதான்  அப்பாகிட்ட  முதல்ல  காதல்  சொல்லியிருக்காங்க..” என  ஆரம்பித்து  அன்று  என்ன  நடந்ததென்று  தன்  அப்பா  தன்னிடம்    சொன்னதை  வெற்றியிடம்  விளக்கி..  பிறகு  அம்மாவை  படிக்கவைத்து..   அதன்பின்தான்  தன்  அன்னையை  திருமணம் செய்துகொண்டார் என்று  தன் அப்பாவின்  பெருமையை  பெருமையோடு சொல்ல..  நீலகண்டனின்  நினைவில்  மெய்சிலித்துப்போனான்  வெற்றிமாறன்.
      ‘அன்னைக்கு  அத்தனை  அசிங்கமா  என்  அப்பா  பேசியும்..  மாமா  ஒருவார்த்தைகூட  எங்கப்பாவை  தப்பா  பேசவேயில்லையாம்..  அதோட  அத்தைதான்  முதல்ல  காதலை  சொல்லியிருந்தாலும்..  இப்போவரைக்கும்  அத்தையை  எந்த  இடத்திலயும்  மாமா  விட்டுக்கொடுத்ததே   இல்ல..
       இரத்தபந்தம்தான்  உண்மையான  உறவுங்கிறதில்ல.. எங்க விட்டுக்கொடுக்கனுமே..  அங்கங்க விட்டுக்கொடுத்து  அனுசரிக்கிறதுதான்  உண்மையான  உறவு..” என  மெய்மறந்து    ஒருமணிநேரம்  வரை  வெற்றி   பேசிக்கொண்டிருக்க..
      ‘ம்ம்.. ம்ம்..” என  கேட்டுக்கொண்டிருந்தவளிடம்..   பின்னர்  அந்த  சத்தமுமில்லாமல்  போகவும்..  தன்மீதிருந்தவளின்  முகத்தை  நிமிர்த்தி   பார்க்க..  தூக்கத்தில்  அவளின்  தலை  நிலையில்லாமல்  துவள..  உச்சிமுத்தம்  பதித்து..  மனைவியின்  தலைகோதி  தன்னுள்  சேர்த்தணைத்து..  தானும்  கண்ணயர்ந்தான்  மனநிறைவோடு.

Advertisement