Advertisement

சிவமுகிலன்  வெளியே  வந்து.. ‘இராமு..  முக்கியமான  வேலையிருந்தது..  அதனால  நாங்க சீக்கிரம்  வந்திட்டோம்.   நாங்க  சாப்பிட போறோம்..  நீங்க  உன்  ஒர்க்கை  பாருங்க..”  என்றவன்   அபர்ணாவிடம்.. 
    ‘வா..” என்றான்.  வரமாட்டேன்  என்பதாய்  தலையை  ஆட்டினாள்.
    ‘வான்னு  சொல்றேன்ல..  வரியா..?  இல்ல..”  என்று  அவன்  கையை  நீட்டவும்..  ‘இல்ல  நான்  வரேன்..” என்று  எழுந்தாள்.    காரில்  அமர்ந்தவுடன்..  அவள்  மீது  வேண்டுமென்றே  நன்றாக  உரசிக்கொண்டே..   அவளுக்கு சீட்  பெல்ட்டை  போட்டுவிட்டான்.
‘எனக்கே  போட தெரியும்..” என்றாள்.
   ‘அப்படியா..?  அப்ப  எனக்கு  போட்டுவிடு..“ என்றான் கிண்டலாக.
    ‘எங்க  கூட்டிட்டுப்  போறிங்க..?” என்றாள்  தவிப்போடு.
     ‘நான்  இராமுகிட்ட  சொன்னதை  நீ  கவனிக்கலயா…?  சாப்பிடத்தான்  போறோம்..” என்றான்.
     ‘இராமு அண்ணா..  முன்னாடி  நீங்க  எதாவது  பண்ணுவிங்கன்னு   பயந்துதான்  உங்ககூட  நான் வந்தேன்.  நீங்க  வாங்கிகொடுத்தாலும்   நான்  சாப்பிட மாட்டேன்.” என்று  முகத்தை  திருப்பினாள்  சிறுபெண்ணாய்.
    ‘ஏன்..?” என்றான்  சிரிப்போடு.
     ‘எங்க  வீட்டுக்கு  வந்தப்ப..  நான்  சாப்பிடசொன்னதுக்கு   நீங்க  சாப்டிங்களா..?”  என்று  இப்பொழுதும்   அன்றைய  நாளில்  சிவா  சாப்பிடாமல்  வந்ததை  நினைத்து  வருத்தப்பட்டாள்.
      ‘நீ   உங்க  வீட்ல  ஃபங்சன்  இருக்கு..  வான்னு  சொல்லி  என்னை  இன்வைட்   பண்ணுனியா..?  அப்படியே உன்  டாக்டர்  அங்கிளை மட்டும்  அப்படி  கவனிச்ச..?”  என்று  அவன்  அவளை  திருப்பிக்கேட்டான்.
     ஆமாம்ல..  நான்  கூப்பிடலயே  என நினைத்து  அசடுவழிந்தவள்.. ‘அப்ப  அங்கிள்தான்  எனக்கு  ரொம்ப  நல்லவரா  தெரிஞ்சார்.  என்று   லேசாக  சிரித்தாள். 
       அவளின்  சிரிப்பில்  மயங்கியவன்.. ‘ஆமா…  ஃபங்சன்ல  போட்டிருந்தியே..   அந்த ரெட்டை  ஜடையும்..  ஸ்கர்ட்டும்..  பிளொசும்..  தாவனியும்..  அப்படியே  ஆளை  சாய்ச்சிடுச்சி  தெரியுமா..?  நான்  என்னையே  மறந்திட்டேன்.  உன்னை  மட்டும்தான்  பார்த்திட்டு  இருந்தேன்.  ஜொள்ளு  வழியுது..  துடைச்சிவிடட்டுமான்னு    வெற்றி  என்னை  பயங்கரமா  கிண்டல்  பண்ணார்..” என்றான்  குழைந்த  குரலில்.
   
‘அச்சோ..  அத்தான்க்கு  தெரியுமா..?”  என்றாள்  பதட்டமாக.
     ‘உன்  அத்தானுக்கு  மட்டுமா..   தெரியும்..?  நான்  உன்னை  லவ்  பண்றது..   ஆனந்தி..   உங்க மாமனார்..  மாமியார்..  எல்லாருக்கும்  தெரியும்..   எல்லார்கிட்டையும்   நான்  உன்னைத்தான்  கல்யாணம்  பண்ணிக்குவேன்னு  ஸ்ட்ராங்கா  சொல்லியிருக்கேன்..     உங்க  அப்பா  அம்மாக்கு மட்டும்தான்  நான்  உன்னை  லவ்  பண்றேன்னு  தெரியாது. 
       ஆனா.. எங்கம்மா    உங்க  அம்மாகிட்ட  உங்க  பொண்ணை  என்  மகனுக்கு  ரொம்ப  பிடிச்சிருக்காம்..  எங்களுக்கும்   பிடிச்சிருக்கு..  உங்களுக்கு  பிடிச்சிருந்தா   சொல்லுங்க..   ஒரு  நல்ல  நாள்  பார்த்து  உங்க  வீட்டிற்க்கு  வந்து  முறைப்படி   பொண்ணு  கேட்கிறோம்னு   கேட்டுருக்காங்க..  உங்க  அப்பா..  உன்கிட்ட  கேட்டுட்டு   சொல்றேன்னு  சொல்லியிருக்கார்.” என்றான்  உல்லாசமாக.
      ‘இந்த  ஆனந்தி  கூட  என்கிட்ட  சொல்லலை..?  அப்பவும்  நேத்து  என்கிட்ட  உங்களை  கல்யாணம் பண்ணிக்கிறியான்னு   கேட்டா..  நான்தான்.. “  என்று  ஆரம்பித்ததும்..
     ‘அந்த  திமிர்  புடிச்சவனை   கல்யாணம்  பண்ணமாட்டேன்னு  சொன்ன..?  அப்படிதான.. “ என்று  சிவமுகிலன்  முடிக்க..
    ‘ஆன் …  என்று  வாயை  பிளந்தாள்..
    ‘சரி  வா.. ஹோட்டல்  வந்திருச்சி..“  என்று  இறங்கினான்.  ‘நானும்  நீங்க  திறக்கிற   மாதிரிதான்  பண்றேன்..  ஆனா  ஓபன் ஆக  மாட்டுது.” என்று  தன்  முகத்தை  சுருக்கினாள்.
    ‘அப்டியா..?“ என்று  காதலியை  ரசித்துக்கொண்டே  அழைத்துப்போனான்..  சாப்பிட மாட்டேன்  என்று  சொன்னவள்  நன்றாக  சாப்பிட்டாள்.      காருக்குள்  வந்தவுடன்..
    ‘அபர்ணா..   இன்னைக்கு  எங்கையாவது..  வெளில  போலாமா?”
   ‘நான்  வரமாட்டேன்..” என்று  நாணினாள். 
      ‘ப்ளீஸ்..  கொஞ்ச  நேரம்  பேசிட்டிருக்கலாம்..  எனக்கு  ஆபிஸ் போற  மூடே இல்லை.  அப்புறம் ஆபிஸ்லையும்  உன்னை  கூப்டுகிட்டேதான்  இருப்பேன்   பரவாயில்லையா..?” என  கண்ணிமைத்தான்.
    ‘அச்சோ..   ஏற்கனவே  நான்  இராமுஅண்ணா..  என்ன  நினைப்பார்ன்னு  கவலைல  இருக்கேன்..” என  படபடக்க..
     ‘நான்  ரொம்ப  நல்ல  பையன்  தெரியுமா..?  இந்த  ஆபிஸ்க்கு   நீ  வந்ததுக்கப்புறம்தான்  இப்படி  ஆயிட்டேன்..     கார்லையாவது   கொஞ்ச  நேரம்  இருந்திட்டு  அப்புறம்  போலாம்..”   என்று  காரை  ஒரு  பார்க்கிற்க்கு  அருகில்  நிறுத்தினான்.
       ‘நான்  ஆனந்திக்கு  ஒரு  ஃபோன்  பண்ணிக்கிறேன்.   இன்னும்  கொஞ்சம்  டைம்  ஆயிடுச்சினா..  அப்புறம்  அவ  ஃபோன்  அட்டென் பண்ணமாட்டா..” என  தன்  மொபைலை  எடுக்க..
      ‘எல்லாத்தையும்  உங்க  அக்காகிட்ட  சொல்லிறாத   லூசு..” என  எச்சரிக்க..   அந்த  நேரம் அபர்ணாவிற்க்கு  ஆனந்தியே  ஃபோன்  செய்தாள்.
      ‘ஆனந்தி..  இப்பதான்  உனக்கு  ஃபோன்  பண்ணலாம்னு  இருந்தேன்  அதுக்குள்ள  நீயே  பண்ணிட்ட.” 
     ‘சாப்டியா  அபர்ணா..?”
      ‘ம்ம்.. சாப்ட்டேன்..  ஆனந்தி..” என்று  இழுத்தாள்..
      ‘அபர்ணா..  எனக்கெதுக்கு  ஃபோன்  பண்ணனும்னு  நினைச்ச..? சீக்கிரம்  சொல்லு..  கிளாஸ்க்கு  டைம்  ஆகுது.” என ஆனந்தி  அவசரப்படுத்த..
     ‘இந்த  சிவா..  அவனை  கல்யாணம்   பண்ணிக்கிறேன்னு..   என்னை  சொல்ல  வச்சிட்டான்..” என்றாள்  சிணுங்களோடு.
     ‘அப்டியா..  சொல்ற..?” என்று  சிரித்துக்கொண்டே..  ‘சரி  உன்  அத்தான்கிட்ட  சொல்லி  சிவாவை  மிரட்டசொல்லலாமா..?”
     அபர்ணா  அதற்கு  பதில்  சொல்லாமல்..  ‘சரி..  நீ  கிளாஸ்க்கு  போ..  உனக்கு  டைம்  ஆயிடுச்சி..”  என்றாள்.
     ‘அபர்ணா..  சிவா  பக்கத்தில  இருந்தா  கொடு..” என்றதும்  சிவாவிடம்  கொடுத்தாள்.
      என்ன  பேசுவதென்று   தெரியாமல்.. ‘வெற்றி  கால்  பண்ணினாரா..?“  என்றான்  சிவமுகிலன்.
      ‘அவர்  பண்றது  இருக்கட்டும்..    இரண்டுநாள்  முன்னதான்  அந்த  சிவாதம்பியோட  அம்மா..  சிவாக்கு    நம்ம  அபர்ணாவை  பொண்ணு  கேட்டாங்க..  இன்னைக்கே  அபர்ணா  வேலையிருக்குன்னு  காலைலயே  கிளம்பிட்டான்னு   எங்கப்பா வேற  சந்தேகமா  கேட்டார்.  அதனால எப்பவும்  வீட்டுக்கு  வரடைம்லயே  அவளை அனுப்பிடுங்க.. எனக்கு  கிளாசுக்கு  டைம்  ஆச்சு..  நான்  வச்சிடறேன் சிவா..” என  கட்செய்தாள்.
     ஏக்கத்தோடு  அபர்ணாவை  பார்த்தவன்.. ‘இந்த  நாளை  செலிபிரேட்  பண்றமாதிரி  எனக்கு  எதாவது  குடு..” என்றான்  ஏக்கமாக.
    ‘இப்ப  எங்கிட்ட  ஒன்னுமே  இல்லை…    நாளைக்கு  எதாவது  வாங்கி  தரேன்..“ என்றவள்..  அவனைப்  பார்;க்கவும்;தான்   அவன் ஏதோ  வில்லங்கமாக   கேட்;கப் போகிறான்  என்று  புரிய..
    ‘நான் ஆபிஸ்க்கு   ஆட்டோல  வந்திடறேன்.   இந்த  டோர்  ஓபன்  பண்ணுங்க…”  என  குழைய..
    ‘ம்ம்..ஹ_ம்..”  என்று  கார் கண்ணாடியை  மேலேற்றினான்.
    ‘என்ன  பண்றிங்க..”  என  தடுமாற..
      ‘அன்னைக்கு  உண்மையாவே  என்  காதலை  சொல்லத்தான்  உன்னை  சீக்கிரம்  வரசொன்னேன்..   ஆனா  அது  வேறமாதிரி  ஆயிடுச்சி  அபர்ணா..   ஆனாலும்  அது  முழுமையாகலியே..  அதுக்குள்ளதான்  நீ  மயங்கிட்டியே..  உனக்கு  என்னைப்  பிடிக்காம  இருக்கும்  போதே..  நான்  மட்டும்   உன்னை  லவ்  பண்ணும்போதே..   உனக்கு  முத்தம்  கொடுத்தவன்  நான்.   இன்னைக்கு    என்கிட்ட     முதன் முதலா..  நீ  உன்   காதலை  சொல்லியிருக்க..‚   எப்படி  இதை  செலிபிரேட்   பண்ணாம  இருக்க  முடியும்..?” என  அவளை  நெருங்கி  அமர்ந்தான்.
    ‘அதுக்கு..”  என்று  மேலும்  பதட்டமானாள்.
      ‘அதுக்கு..“ என்று  அவளை  அணைத்து  முகமெங்கும்  முத்தமிட்டு..  இறுதியாக  அவள் இதழ்களில்    இளைப்பாறி   விடுவிக்க..  அபர்ணா  அவன்  முகத்தை  பார்க்கமுடியாமல்..  அவன்  மடிமீதே  தலைகவிழ்ந்து  படுத்துக்கொள்ள..  சிவமுகிலன்  அவள் கேசத்தை  தடவிக்கொடுத்த  படியே  
     ‘அபர்ணா..  ஐ லவ் யூ  சோ மச்..”  என்றான் மீண்டும்.
      அபர்ணாவிடம்  எந்த  அசைவுமில்லாமல்  போகவே.. ‘ஏய்   என்ன  சத்தத்தையே  காணோம்..?  மறுபடியும்  மயக்கம்  போட்டுட்டாளா..?”  என்று முனகியபடியே  அவளது  முகத்தை  திருப்ப  முயல..    முகத்தை    காட்டாமல்  குனிந்தபடியே  அழுத்தம் காட்டவும்தான்   சற்று  நிம்மதியடைந்தவன்..
    ‘பரவால்லயே  மயக்கம்  வரல..” என  சிரிக்க..  அவன்  காலை  கடித்தாள். 
     ‘ஏய்..  நான்    எவ்ளோ  சாஃப்டா  உன்னை  ஹேண்டில்  பண்றேன்..   எதுக்குடி  இப்படி  கடிக்கிற..?“  என  கடிந்தான்.
    ‘இன்னைக்கு  ஆபிஸ்  வரமாட்டேன்  போங்க..  நான்  வீட்டுக்குப்  போறேன்..” என்றாள்  தலைகவிழ்ந்தபடியே.
    ‘ஏன்..?” என  சிரித்த  முகமாய்  கேட்க..
    அவள்  அமைதியாகவே  இருக்க..  ‘அதெல்லாம்  முடியாது..   நீ  ஆபிஸ்க்கு  வந்துதான்  ஆகனும்..  அதுசரி..  நீ  இப்படியே  படுத்துக்கிட்டுதான்  வரப்போறையா..?  எனக்கொன்னும்  பிரச்சனையில்லை..” என்று  அவள்  இடுப்பில்  கை  வைக்க..  பட்டென்று  அவன்  கையை  தட்டிவிட்டு  எழுந்தாள்.  ஆனால்  முகத்தை  கைவைத்து  மூடிக்கொள்ள..  
     ‘இப்ப  எதுக்குடி  நீ  இப்படி  காமெடி  பண்ணிட்டிருக்க…?”  என்று  அவள்  கையை   முகத்தில்;;;;; இருந்து  விடுவித்து  அவள்  முகத்தைப்  பார்த்தான்.       அது  குங்குமாய்  சிவந்திருக்க..  
    ‘என்ன  மேஜிக்  பண்ற..?  இப்படி  அப்பப்ப  உன்  முகம்  சிவப்பாய்டுது..”
    ‘எல்லா  ஃபிராடு  வேலையும்  நீங்க   பண்ணிட்டு..  என்னை   காமெடி பண்றேன்..  மேஜிக்  பண்றேன்னு   சொல்லிட்டு  இருக்கிங்க..” என்றாள்  மலர்ந்த  முகத்தோடு.
     ‘அன்னைக்கு   நான்  கெட்டவன்..  இன்னைக்கு  நான்  ஃப்ராடா…?  காதலிச்சா  இன்னும்  என்னென்ன  பட்டமெல்லாம்  வாங்கவேண்டியிருக்குமோ..  எல்லாம்  என்  நேரம்..”  என  உல்லாசமாய்  சொல்லியபடி காரை  ஸ்டார்ட்  செய்தான்.
     ‘எனக்கு  ஒரு  மாதிரி  ரெஸ்ட்லஸ்சா  இருக்கு..    இன்னைக்கு  ஒருநாள்   லீவ்   குடுங்க..  ப்ளீஸ்..” என்றாள் மீண்டும்.
    ‘உடனே  ஆனந்திகிட்ட  போய்  இங்க  நடந்ததையெல்லாம்  சொல்லனும்.. அதுக்குத்தான  லீவ்  கேக்கிற…?” என முறைக்க..
    ‘யாராச்சம்  இதப்போய்  சொல்வாங்களா..?”  என்று  தலைகுனிந்தாள்.
    ‘புரிஞ்சா… சரி..  ஆனாலும்  உனக்கு  லீவ்  கொடுக்கமுடியாது.   ஒரு  புது ப்ராஜக்ட்..    இன்னைக்கே  ஆரம்பிச்சாதான்  சரியா இருக்கும்..  எவ்ளோ  வேலையை   விட்டுட்டு  நான்  உன்கூட  இருக்கேன்..    நீ  வீட்டுக்குப்   போகனும்னு   சின்ன  குழந்ததையாட்டம்  அடம்  பண்ற..?” என  கடிய..
    ‘இல்ல..  என்னால   இன்னைக்கு  ஒர்க்ல  கான்சட்டிரேட்  பண்ணமுடியும்னு  தோணலை..  அதான்..”  என  இழுக்க..
    ‘அபர்ணா..  நிஜமாவே  ஆபிஸ்  போனதும்..  உன்னை  சைட்  அடிக்கக்கூட  எனக்கு  டைம்  இருக்காது..   நான் போய்தான்  எல்லார்க்கும்  ஒர்க்  ஸ்செட்யுல்   கொடுக்கனும்..   டைம்  ஆகுது..  முதல்ல  உன்  முகத்தை  கழுவு..”  என்று  வாட்டர் பாட்டிலை  கொடுத்தவன்..
     ‘அங்க  வந்து  என்னையே வித்யாசமா  பார்த்துட்டு  இருக்க  கூடாது…   யார்கிட்டையும்  எதையும்  காட்டிக்க  கூடாது.   ஒழுங்கா   ப்ராஜக்ட்  ஒர்க்  மட்டும்தான்  பார்க்கனும்..  ஒர்க்ல  எந்த  அட்வான்டேஜிம்  எடுத்துக்கக்கூடாது..   அந்ததந்த  டேட்டுக்கான  ஒர்க்கை  அந்தந்த  டேட்லயே   முடிக்கனும்  புரியுதா…?” என மிரட்ட..   அபர்ணா   பதிலின்றி  அமர்ந்திருக்க..  ‘முடிக்கலைன்னா  நைட்டானாலும்  வீட்டுக்கு  போகமுடியாது..” என  கண்ணடிக்க..
     ‘இல்லையில்ல..  நீங்க  சொல்றமாதிரி   முடிச்சிடறேன்.” என்றாள்  அவசரமாக.
      ‘ம்.. தட்ஸ்  குட்.”  என்று  கிளம்பினான்.

Advertisement