Advertisement

‘அபர்ணா..  நான் ஜெயிலுக்கு  போறதுக்காக   நீ  எதுக்கு  அழற…?”  என  கனிவோடு  கேட்க..    போலாம்  என்று  நினைத்து எழும்போதே..  அவள்  எழ  முடியாதபடி   அங்கிருந்த  டேபிள்  மீது  ஏறி  அமர்ந்து  தன்  இரு  கைகளையும்  அவள்  அமர்ந்திருக்கும்  சீட்டின்  கைப்பிடி  மீது  வைத்தான். வேறு  வழியின்றி  மீண்டும்  அமர்ந்தாள்.
     ‘நான்  கேட்டுட்டு  இருக்கேன்..  நீ  பாட்டுக்கு  எழுந்தா.. என்ன  அர்த்தம்..?  எனக்கு  பதில்சொல்லு..“ என்றான்  தன்மையாக.
      ‘நான்  என்ன  சொல்லட்டும்..?” என்றாள்  குரலிறங்கியவளாய்.
      ‘நான்தான்  கேட்டேனே..?  என்னை  எப்ப  ஜெயிலுக்கு  அனுப்புற..?  நீ  சொன்னாதான..  நான்  அதுக்கேத்தமாதிரி  என்  கல்யாண  டேட்டை  ஃபிக்ஸ்  பண்ணமுடியும்..‚  எங்கம்மாவேற..  இன்னும்  ஒரு  மாசத்தில  எனக்கு  கல்யாணம்  பண்ணனும்னு  என்னை  தொல்லைப்பண்றாங்க..”
     ‘நான்  யாரையும்  ஜெயிலுக்கு  அனுப்பலை..   நீங்க   எப்பன்னாலும்  கல்யாணம்  பண்ணிக்குங்க…  நான்   இப்ப  வீட்டுக்கு  போகனும்.. என்னை போகவிடுங்க..”  என்று  ஒப்புவிப்பவள்  போல்  சொல்லி  கண்ணீர்  விட்டாள்.
      ‘ஜெயிலுக்கு  அனுப்பறன்னு   சொல்லிட்டு..  இப்ப  ஏன்  அனுப்பலைங்கிற..?  அப்போ  நான்  உனக்கு  முத்தம்  கொடுத்ததை  மன்னிச்சிட்டியா..?  இல்ல  மறந்திட்டியா…?”  அன்று  நடந்ததை  சிவமுகிலன்  கேட்டதுதான்  தாமதம்..  அவளால்;  அழுகையை  அடக்கவே  முடியவில்லை..  டேபிள்மீது  தலைகவிழ்த்து  தன்  முகத்தை  மூடிக்கொண்;டு  பெரிதாய்  சத்தமிட்டு  அழுதாள்.
      ஒரு  சின்ன முத்தத்துக்கு  இத்தனை  கலாட்டா  பண்றாளே.. என  எரிச்சலடைந்தவன்..  ‘முதல்ல  அழறதை  நிறுத்தப்போறியா..?  இல்லையா…?”  என மிரட்ட..  சற்று  நேரம்  கழித்து   கொஞ்சம்  அமைதியானாள்.
      ‘சரி..  இதையெல்லாம்விடு..  எங்க  வீட்ல  நாளைக்கு   ஒரு ஃபங்சன்..  எங்க  அப்பா  உன்னை  இன்வைட்  பண்ண  சொன்னார்.   நீதான்  அவங்க   உங்க  வீட்டுக்கு  வந்தப்ப  ரொம்ப  நல்லா கவனிச்சியாம்..   உன்னை  அவங்களுக்கு  ரொம்ப  பிடிச்சிருக்காம்..   அதனால  நீ       கண்டிப்பா  வரனுமாம்.   உன்கிட்ட  சொல்ல  சொன்னாங்க.. என்ன  வருவதான…?” என்றான்  ஆவலாக.
     சரி  என்பதாய்  தலையசைத்தாள்.
   ‘என்ன  ஃபங்சன்னு  கேட்;கமாட்டியா..?” என்றான் ரசனையாக.   மீண்டும் அமைதியையே   அபர்ணா  கையிலெடுக்க..
      ‘சரி..  நீ கேட்கலைன்னாலும்  நான்  சொல்றேன்..  என்னோட   என்ங்கேஜ்மன்ட்  ஃபங்சன்..” என்று  சொன்னதும்..   சற்று  மட்டுப்பட்ட  அழுகை  மீண்டும்  அதிகமானது.
       ‘என்ன  அபர்ணா..  ஃபங்சனுக்கு  வருவதான..?  நீ  வரலைன்னா  எங்கப்பா   என்னைதான்  திட்டுவாரு.” என்றான் பாவமாக.  இம்முறை  அவனைத்தள்ளிவிட்டு..  வேகமாக  இரண்டடி  எடுத்து    வைத்தவளை  லாவகமாக  கைப்பிடித்து  நிறுத்தியவன். 
       ‘போனா  போகுது..  நம்ம  வெற்றிக்கும்   ரிலேசனாச்சேன்னு..  நான்  உனக்கு  ஸ்பெசல்லா  இன்வைட்  பண்றேன்..  கொஞ்சம்கூட  ரெஸ்பான்சில்லாம   பதில் கூட சொல்லாம   போறியே..?” என்று  சற்று திமிராக  சொன்னான்.
       அவன் மீதிருந்த  பயமெல்லாம்  பறந்து போக..  ‘முதல்ல  என்  கையை  விடுங்க..“ என்றாள்  காட்டமாக..
       ‘நீ  பதில்  சொல்லு..  நான்  விட்டறேன்.” என்றான் உள்ளடக்கிய  சிரிப்போடு..
       ‘நான்  டாக்டர்  அங்கிளுக்காக உங்க  வீட்டுக்கு  வரேன்..  முதல்ல  என்  கையை  விடுங்க.” என்றாள்  ஆத்திரத்தோடு.
       ‘குட்..  வெரி.. குட்.    எனக்கு  கல்யாணம்  ஆகப்போகுது..  அதனால  அன்னைக்கு  மாதிரியெல்லாம்  உன்னை  ஒன்னும்  பண்ணமாட்டேன்..  நீ  பயப்படாத..”  என்று  அனுசரனையாக  சொல்லி  அவளின்  ஒரு  கையை  மட்டும்  விட்டவன்..
      ‘ஆமா..  வெற்றி  சொன்னார்..  உன்னை  யாரோ  பொண்ணு கேட்டாங்களாமே…?  அவன்  அழகா  இருப்பானா..?  உனக்கு  அவனைப்  புடிச்சிருக்கா..”  எனும்போதே..  டேபிள்  மீதிருந்த  பேப்பர்  வெய்;ட்டை  எடுத்து  அவன்மீது  போட..   குறி மட்டும்  சற்று  தவறாமல்  இருந்திருந்தால்  அது  சிவாவை  நெற்றியை   பதம்  பார்த்திருக்கும்.  இதை  சற்றும்  எதிர்பார்க்காத  சிவமுகிலன்  அவளை   கோபத்தோடு  முறைக்க.. 
      அவனின்  முறைப்பிற்கு  பயப்படாமல்.. ‘என்  கையை  விடப்போறியா..?  இல்லை..  நான்  கத்தட்டுமா..?” என்றாள்  மிரட்டும்  தோரணையில்.
      அபர்ணாவிற்கு  பயம்  தெளிந்து  கோபம்  வரவும்..   இவனுக்கு  கோபம்  போய்  சந்தோசம்  அதிகரிக்க..   ‘இப்ப  எதுக்கு  உனக்கு  தேவையில்லாத  கோபம்   வருது..?  நானே  எனக்கு  கல்யாணம்னு  சந்தோசத்தில  இருக்கேன்..  இந்த  நேரம்பார்த்து    உன்னையும்  யாரோ  பொண்ணு  கேட்கறாங்கன்னு  வெற்றி  சொன்னார்..  சரி..  நம்ம  கம்பெனியில  ஒர்க்  பண்ற  பொண்ணாச்சேன்னு  ஒரு  அக்கறையில  கேட்டேன்.   இது ஒரு தப்பா…?”  என்று  நக்கலாக  கேட்க..
      ‘நான்   யாரையும்  கல்யாணம்  பண்ண  மாட்டேன்.  உன்னோட  அக்கறை  எனக்கு  தேவையில்லை..  என்  கையை  விடுடா..”என்று  கத்த..
     ‘என்ன  சொன்ன..?” என்றான்  சிறு  அதிர்ச்சியோடு..
     ‘நாளைக்கு  ஒரு   பொண்ணோட  என்ங்கேஜ்மன்ட்  வச்சிக்கிட்டு..  இன்னைக்கு  என்  கையை  பிடிச்சிட்டு  இருந்தா..” என  கத்த..
     ‘இருந்தா..”  என  கேட்டுக்கொண்டே  அவள்  கையை  மேலும்  சற்று  முறுக்கினான்.
      வலித்தபோதும்.. ‘அப்படித்தான்டா   பேசுவேன்..” என்றாள்  திமிராக.
      என்னதான்   நாம  பொறுமையா  பேசனும்னு  நினைச்சாலும்..  இவ  நம்மளை  இப்படி  டென்சன்  படுத்துறாளே   என   நினைத்து..  கோபத்தில்  இன்னும்  கையை   அழுத்தமாக  பிடிக்கவும்..    வலிதாள  முடியாமல்  அவன்  மீதே  விழுந்து..
     ‘ஐயோ  ரொம்ப வலிக்குதே..  இரு..  இரு..  என்  அத்தான்கிட்ட  சொல்றேன்.” என்றாள்  கண்ணீரோடே   பெரிய  மிரட்டாலாக.
     இவளை…  என்னதான்  பண்றது…?  என எரிச்சலாக  நினைத்தவன்.. 
     ‘இப்ப  நாமதான  பேசிட்டு  இருக்கோம்..   வெற்றியை  எதுக்கு  இழுக்கிற..?  வெற்றிகிட்ட  நான்  கையை  பிடிச்சதை  மட்டும்  சொல்வியா..?  இல்ல..   அன்னைக்கு  முத்தம்  கொடுத்ததையும்  சொல்வியா..?” என்று  கடுப்பாக  கேட்டான்.
      ‘எதுக்கு  அதையே  பேசுற..?  அதப்பத்தி  பேசாத..”  என்று  மீண்டும்   ஆத்திரத்தோடு  கத்த..
      சற்று  நேரம்  அமைதியாக  இருந்தான்.   ஆனால்  அவள்  கையை  விடவில்லை..  பெரிய      மூச்செடுத்து..   அவளை  அமரவைத்து..
       ‘சரி…  நான் இனிமேல்  அதைப்பத்தி   பேசமாட்டேன்.  நான்  கேக்கிறதுக்கு  மட்டும்  பதில் சொல்லு..  அதுக்கப்புறம்  நான்  உன்னை  ஒன்னும்  பண்ணமாட்டேன்.   உன்  சர்டிஃபிகேட்சையும்   கொடுத்திடறேன்.  ஆனா..  நீ  எனக்கு  உண்மையை  மட்டும்தான்  சொல்லனும்..   என்ன…?”  என்று   பொறுமையாக  இளகிய  குரலில்  கேட்க..
      அபர்ணா  சரி..  என்பதாய்   மண்டையை  உருட்டினாள்.
       ‘நீ  ஏன்  யாரையும்  கல்யாணம்  பண்ணமாட்டேன்னு  சொன்ன…?  எனக்கு  காரணம்    சொல்லு.  நான் உன்னை  விட்டுறேன்.  பொய்  சொன்னர்  கண்டுபிடிச்சிடுவேன்.  உண்மையை  சொன்னா  உன்னை  ஒன்னும்  பண்ணமாட்டேன்..”  என்றான்  பொறுமையை  இழுத்துப்பிடித்து..
      கண்கலங்கியதோடு.. முகமும்  சிவக்க..  அபர்ணாவின்   இந்த  முகச்சிவப்பு..   அழுகையினாலா..?  இல்லை  தம்மீதுள்ள  காதலாலா..? என்ற   சந்தேகத்தோடு   சிவமுகிலன்  அவளை  கூர்ந்து  பார்த்தான்.
       ‘சொல்லு.. அபர்ணா..  எனக்கு  டைம்  ஆகுது.  எதுன்னாலும்  நீ  சொன்னாதான்  நான்  உன்னை விடுவேன்.” என்று  தன்மையாக  கேட்க..
       ‘அது.. என்னோட  பர்சனல்..   நீங்க  எதுக்கு  இதெல்லாம்  கேக்கிறிங்க..? உங்களுக்கு  இது  தேவையில்லாத  விசயம்..” என்று  அழுகையை  நிறுத்தி  வீராப்பாக  சொன்னாள்.
       ‘உன்னோட  கல்யாணம்   உன்  பர்சனல்தான்..  ஆனா…  எனக்கு  கல்யாணம்னு  சொன்னதும்  எதுக்கு  பேப்பர்  வெய்ட்டை  தூக்கி  என்  மேல  போட்ட..?  அப்ப  நான்  கல்யாணம்  பண்ணிக்கிறது  உனக்கு  பிடிக்கலைன்னுதான  அர்த்தம்..?  நீ  மட்டும்  என்  விசயத்தில்  தலையிடலாம்..  ஆனா  நான்  உன்னை  எதுவும்  கேக்ககூடாதா..?
      ஒழுங்கா  ஏன்  கல்யாணம்  பண்ணமாட்டன்னு  சொன்;னின்னா..  நீ இங்கயிருந்து  சேஃபா போய்டலாம்.   இல்ல..  நான்   கொஞ்சம்  கொஞ்சமா  மறுபடியும்   கெட்டவனாயிடுவேன்.  அப்புறம்  என்ன  நடக்கும்னு  எனக்கே  தெரியாது. ”  என்று    எச்சரிக்க..
      ‘நீதான்  என்னை  கட்டிப்..புடிச்..சி   கி..ஸ்  பண்ணிட்டியே..  அப்புறம்  நான்  எப்படி  வேற  ஒருத்தனை  கல்யாணம்  பண்ணமுடியும்..?” என்று    தலைகுனிந்து  திக்கித்திணறி  முடித்தாள்.
      பாவமாய்  குனிந்திருந்தவளை  ரசனையாய்  பார்த்து.. ‘நீ  யாரையும்  கல்யாணம்  பண்ண  வேண்டாம்.  என்னை  கல்யாணம்  பண்ணிக்கிறியா..?”  என  குழைந்த  குரலில்  கேட்டு..  அவளையே  பார்த்திருந்தான்.
      ‘ஒன்னும்  வேண்டாம்.. “ என்று  தலைகுனிந்;த  படியே முறுக்கினாள்.
      ‘நான்தான  தப்பு  பண்ணேன்.   அதுக்கு  நீ  ஏன்  கல்யாணம்  பண்ணாம  இருக்கனும்..?”  என்றான்   மனதின்  உல்லாசத்தை  வெகுவாய்  சிரமப்பட்டு  மறைத்தபடி.
       ‘பரவாயில்லை.. அதுக்காக  ஒன்னும்  நீங்க  என்னை  கல்யாணம்  பண்ணவேண்டாம்…” என்றாள்  வீராப்பாக.
       ‘சரி…  அதுக்காக  கல்யாணம் பண்ணலை.   ஆனா..  எனக்கு  பிடிக்காத  பொண்ணுகிட்ட  இப்படி  நடந்துக்கிற  அளவுக்கு..  நான்  கேவலமானவனா  இருப்பேன்னு  நீ  நினைக்கிறியா.?  
        நான்   அன்னைக்கு  உன்கிட்ட..  உன்னை  ரொம்ப  பிடிச்சதுனாலதான்  அப்படி  நடந்துகிட்டேன்.  இருந்தாலும்  அதுக்காக  நான்  சாரி  கேட்டுக்கிறேன்..  இப்ப  சொல்லு..  என்னை  கல்யாணம்  பண்ணிக்கிறியா..?” என    காதல்  தோய்த்த  குரலில்  கேட்க…
     தன்னை  பிடித்துத்தான்  அப்படி  செய்தேன்  என்று  சிவமுகிலன்  சொன்னதும்..  குழப்பமாக  இருந்தாலும்.. அழுகை  சுத்தமாக  நின்றுவிட்டது.
    ‘எதாவது  சொல்லு  அபர்ணா..?”  
    குனிந்தபடியே.. ‘எனக்கு  என்ன  சொல்றதுன்னு  தெரியலை…   ஆனந்திகிட்ட  கேட்டு  சொல்லட்டுமா?” என்றாள்  சிவந்த  முகத்தோடு.
    ‘ஆனந்திகிட்ட  அப்புறம்  கேட்டுக்கலாம்..  உனக்கு  என்ன  தோணுது..? அதமட்டும்  சொல்லு..?” என்றான்  ஆவலாக.
     திடுமென  நியாபகம்  வந்தவளாய்..  ‘உங்களுக்கு  நாளைக்கு  என்ங்கேஜ்மன்ட்  இருக்குன்னு   சொன்னிங்க  இல்ல..   நான்  அதை  மறந்தே  போய்ட்டேன்..  நான்  உன்னை  கல்யாணம்  பண்ணமாட்டேன்.”  என்று  மறுபடியும்  கண்ணீர்   விட்டாள்.
       ‘அன்னைக்கு   உன்கிட்ட  அப்படி  நடந்துகிட்டு..  நான்  மட்டும்  எப்படி  வேறபொண்ணை  கல்யாணம் பண்ணுவேன்..?   லூசு..   நான்  சும்மாதான்  அப்படி  சொன்னேன்..” என்றான்  கனிவாக.
     ‘அப்ப  அந்த  பொண்ணு…?” என்றாள்  சந்தேகமாக.
     ‘அந்த  பொண்ணு  யாருன்னே  எனக்கு  தெரியாது.   நீ  என்ன  சொல்வன்னு  தெரிஞ்சிக்த்தான்  அதை  காட்டினேன்.” என அவளை சமன்படுத்தி.. 
      ‘என்னை  கல்யாணம்  பண்ணிகிறியான்னு   முதல்ல  சொல்லு..”   என மீண்டும்  கேட்டவன்  குரல்  ஏகத்திற்க்கும் காதலால் கசிந்திருக்க..   அபர்ணாவின்  கன்னம்  மீண்டும்  சிவக்க.. 
     ‘உன்  முகம்  எனக்கு  பதில் சொல்லிடுச்சு.  ஆனாலும்  நீ  வாய் திறந்து   சொன்னாதான்  நான்  ஒத்துக்குவேன்..” என்றான்  விரிந்த  சிரிப்போடு.
    ‘நான்  ஆனந்திகிட்ட  கேட்டுதான்  சொல்வேன்…” என்று  படபடப்பாய்  கண்களை  சிமிட்டினாள்.
      ‘சரி  நீ  ஒன்னும்  சொல்ல வேண்டாம்..  நான்  சொல்றதை  மட்டும்  அக்சப்ட்  பண்ணிக்கோ..”   என்று அவள்  இரு  கன்னங்களையும்  தன்  கைகளில்   தாங்கிகொண்டு..  நெற்றியில்  முத்தமிட்டு..     
      ‘ஐ லவ் யூ  டா..” என்றான்.
      அவள்   கண்கள் தாமாக  மூடிக்கொண்டது.  பிறகு  கண்களில்  முத்தமிட்டான்..  ‘முகிலா..” என்று   முனுமுனுத்தாள்.    தாளமுடியாத  சிவமுகிலன் அவளை  மென்மையாக  அணைத்தான்.   சட்டென்று  கண்விழித்தவள்..  அவனை  உதறிவிட்டு  ஓட  முயன்றாள்.
       ‘எங்க  ஓடற..?  புதுசு.. புதுசா  பேரெல்லாம்  வைக்கிற..   எனக்கு  பதில்  சொல்லிட்டுப்  போ..”  என்று  அவள்  கழுத்தில்  மாலையாய்  தன்  கைகளால்  வளைத்திருந்தான்.   அபர்ணாவிற்க்கு  தனக்குள்  ஏற்ப்பட்ட  இந்த   புதுமாதிரியான உணர்வை..  கையாள  முடியாமல்  தவித்துக் கொண்டிருந்தாள்.
       ‘இன்னும்  கொஞ்ச  நேரத்தில  இராமு  வந்திருவார்..  அப்புறம்..  ஒர்க்கர்ஸ்  எல்லாரும்  வந்துருவாங்க..   எத்தனைபேர்  வந்தாலும்  நீ  பதில்  சொல்லாம  நான்  உன்னை  விடமாட்டேன்..  எல்லாரும்  வந்திட்டா   அப்புறம்  உனக்குதான்  கஷ்டமா  இருக்கும்.” என்று  அவளின்  முகத்தை  நிமிர்த்த..
     அபர்ணாவிற்க்கு  முகமெல்லாம்  குங்குமாய்  சிவக்க… 
     ‘பண்ணிக்கிறேன்..”  என்றாள்.
     ‘என்ன  பண்ணிக்கிற..?”
     ‘கல்யாணம்  பண்ணிக்கிறேன்.” என்றாள்  தலைகவிழ்ந்து.
     ‘யாரை…?”  என்றான்  அவளின்  முகம்நிமிர்த்தி.
     ‘இந்த  மொகரகட்டையைத்தான்..”  என்று  அவன்  மூக்கைபிடித்து  ஆட்டி   சொல்லிவிட்டு  வெளியே  ஓட..  அங்கு  இராமு  வந்துகொண்டிருக்க..  அவள்  ஓட்டம்  அப்படியே  நின்றது.  அமைதியாக  அவள்  சீட்டில்  போய்  அமர்ந்தாள். 
     ‘என்ன  அபர்ணாம்மா..  சீக்கரம்  வந்துட்டிங்க…?  எம்.டி. சார்  வரசொன்னாரா…?” அபர்ணா  கேபினைப்  பார்த்தாள்.   பிறகுதான்  இராமு  சிவமுகிலனைப்  பார்த்துவிட்டு..  ‘குட் மார்னிங்சார்..” என்றார்.
      

Advertisement