Advertisement

                     உறவே  உன்னில்  உறைந்தேன்..                                                                   
  
                              அத்தியாயம்–16
       சிவமுகிலன்  அபர்ணாவை  அலுவலகத்தில் மொத்தமாய்  தவிர்த்திருந்தான்.   அவனின்  நடவடிக்கை   அபர்ணாவிற்க்கும்  நன்றாகவே  புரிந்தது.   ஆனந்தியின்   விசேசத்திற்க்குப்  பிறகு..  மூன்று மாதங்களாக  இப்படித்தான்  நடந்துகொள்கிறான்.   இதோ  இன்னும்  பதினைந்து  நாட்கள்தான் இருக்கிறது  ஆனந்தியின்  திருமணத்திற்க்கு.  அப்பாவேற   பத்து  நாளைக்கு  லீவ்  சொல்ல  சொல்றார். ஒர்க்  என்னவென்பதைக்   கூட   மெயிலை   பார்க்கசொல்லி   இராமுவிடத்தில்   சொல்லிவிடுபனிடம்..  நாளைக்கு  எப்படிபோய்  பர்மிசன் கேட்கலாம்  என்ற  தீவிர  யோசனையில்  இருந்தாள்.
     சிவமுகிலன்  அபர்ணாவை  அவாய்ட்  செய்யவும்..   முன்பெல்லாம்    தனக்காக  எப்படி  கேர் எடுப்பான்  என்பதெல்லாம்  நினைவில்  உழல..  அவளால்  சிவமுகிலன்  பேசாமல்  இருப்பதை  தாங்க  முடியவில்லை. இப்பொழுதெல்லாம்  அலுவலகத்தில்  இருப்பதற்க்கும்  வெறுப்பாக  இருக்க..
       இவனிடம்   இருந்து   தம்முடைய  சர்டிஃபிகேட்ஸ்  வாங்கினதும்..  வேலையைவிட்டு  நின்னுடலாம்..  என்று  தன்னைத்தானே  சமாதனப்படுத்திக்கொள்வாள்.    எப்படின்னாலும்  இன்னைக்கு  பர்மிசன்  வாங்க  நாமதான  அவன்கிட்ட  போய்  பேசியாகனும்..  என  நினைத்துக் கொண்டே   தனதறையிலிந்து  இரவு  உணவிற்க்காக  வெளியேவரவும்.. 
      நீலகண்டன்   சந்திராவிடம்..   ‘நம்ம  அபர்ணாக்கு  ஒரு  நல்ல  வரன்  வந்திருக்கு  சந்திரா..“ என்று  பேசிக்   கொண்டிருப்பதை  கேட்டவளுக்கு  திக்கென்று  ஆனது.    அதெப்படி  நான்  கல்யாணம்  பண்ணிக்க  முடியும்..?  என்று    குழம்பிப்போனாள்.   அதை  அப்படியே  ஆனந்தியிடமும்  கேட்க..
     ‘நீ  ஏன்  இப்படி  சொல்ற  அபர்ணா..?   எப்படின்னாலும்  நீயும்  ஒரு  நாளைக்கு  கல்யாணம்  பண்ணித்தான  ஆகனும்..?” என ஆனந்தி  கேட்க..
    ‘நான்  யாரையும்   கல்யாணம்  பண்ணிக்கமாட்டேன்..” என்றாள் திடமாக..
    ‘ஏன்  அப்படி  சொல்ற..?” என்றாள்  குறும்பாக.
     ‘அந்த  சிவாதான்  என்னை  கிஸ்  பண்ணிட்டானே..  நான்  என்ன  பண்ணட்டும்..?” என்று  கண்கலங்கினாள்.
    ‘அட ஆமாம்ல..? அப்போ  அந்த  சிவாவையே  கல்யாணம்  செய்துக்கிறியா..?” என  அபர்ணாவை  எதிர்பார்ப்புடன்  பார்க்க..
    ‘நான்  அவனையும்  கல்யாணம்  பண்ணமாட்டேன்..  அவன்  ரொம்ப  திமிர்புடிச்சவன்.”
    ‘இப்பல்லாம்  சிவா  உன்னை  தொல்லை  செய்யறதில்லைன்னு..  அன்னைக்கு  கூட  உன்  அத்தான்கிட்ட  சொல்லிட்டு  இருந்த..?  இப்போ  என்னாச்சி..?  திரும்பவும்  திமிர்புடிச்சவன்ங்கிற..?”
     ‘தொல்லை  பண்றது  இல்லைதான்..  ஆனாலும்  என்னை  ரொம்பவும்  அவாய்ட்  பண்றான்  ஆனந்தி.  இப்பல்லாம்    என்கிட்ட  பேசறதே  இல்லை.”  என்று  சொல்லும்போது  தன்னையறியாமல்   ஆனந்தியை  கட்டிக்கொண்டு  தன்னையறியாமல்  அழவும்.. 
    ‘ஏய்  எதுக்கு  இப்ப  அழற…?” என  ஆனந்தி  பதற..
    ‘ஆமால்ல..?  நான்  அழறேன்..  ஆனா..  எதுக்கு  அழறேன்னு  தெரியலை..  என்னவோ  ரொம்ப  கஷ்டமா  இருக்கு ஆனந்தி..” என்றாள்  பாவமாக.
     ‘சரி..  உன் அத்தான்  கிட்;ட  சொல்லி.. சிவாவை  உன்கிட்ட  பேச  சொல்லட்டுமா..?” என  வாஞ்சையோடு  கேட்க..
    ‘ஒன்னும்  வேண்டாம்..  யார்  சொல்லியும்  அவன்  என்கிட்ட  பேசவேண்டாம்.   எனக்கு  தூக்கம்   வருது..  நான்  போய்  தூங்கறேன்..”  என்று  படபடவென  கத்தி..  பட்டென்று  கதவை  சாத்தினாள்.
     ‘ஏய்..   அபர்ணா  கதவைத்திற..  சாப்டுட்டு  போய்  தூங்குடி..” என்று  ஆனந்தி  கெஞ்ச..
      ‘எனக்கு  சாப்பாடு  வேணாம்.. ஒன்னும்  வேணாம்..  போ..” என்றாள்  அழுகையோடே.
     ‘நீ  சாப்பிடலன்னா  நானும்  சாப்பிடமாட்டேன்..” என்பதுபோல..  எத்தனைமுறை  கெஞ்சியும் வெளிவரவில்லை  அபர்ணா..     
     வேறுவழியின்றி  ஆனந்தி  சிவாவிற்க்கு  அழைத்து..  அபர்ணா  பேசியது   அனைத்தையும்  சொல்லி..  ‘உங்கப்பாம்மா  அபர்ணாவை  உங்களுக்கு  கேட்டது..  இன்னும்  அவளுக்கு  தெரியாது.   யாரோன்னு  நினைச்சிகிட்டு  கல்யாணம்  வேணாம்னு  அழறா..  சாப்பிடாமலே  தூங்கபோய்ட்டா..  ரொம்ப  டிஸ்டர்பா  இருக்கா..  கொஞ்சம்  தன்மையா    புரிய  வைங்க..   மறுபடியும்  சொதப்பிடாதிங்க..” என  எச்சரிக்க..
    ‘நான்  பார்த்துக்கிறேன்  ஆனந்தி..  ரொம்ப  தேங்ஸ்..”  என்றவன்.. சந்தோசத்தோடு  அபர்ணாவிற்க்கு  கால் செய்தான்.
     யாரென்றே  பாராமல்..  ‘ஹலோ..“ என்றாள்  சோர்வாக..
     ‘நாளைக்கு  காலைல  ஏழு  மணிக்கு  நீ  ஆபிஸ்ல  இருக்கனும்..  ரொம்ப  முக்கயமான  ஒர்க்..  புது  ப்ராஜக்ட்..  லேட்டா  வந்துட்டு  தூங்கிட்டன்னு  சொன்னேன்னு  வை..  அவ்ளோதான்..‚“  என்றவன்..    இவள்   பதில் சொல்வதற்க்கு  முன்பாகவே  இணைப்பை  துண்டித்தான்.  
     காலையில்  ஆறு  மணிக்கெல்லாம்..  புதுமலராய்  கிளம்பி  வெளியே  வந்தாள்  அபர்ணா.. ஆனந்தி  அப்பொழுதுதான்  வாசலில்  கோலமிட்டுகொண்டிருக்க..   அதிசயமாக  தங்கையை  பார்த்தவள்..
     ‘ஏய்  அபர்ணா..  என்ன  இந்த  நேரத்தில..?  அதுவும்  ரெடியாகி  வந்திருக்க..?”  என்று  ஆச்சர்யமாக  கேட்க..
      ‘ஆஃபிஸ்ல  வேலையிருக்கு  ஆனந்தி..  நேத்து  நைட்  எம்.டி  கால் பண்ணினார்.  தூங்கிட்டு  லேட்டாயிடுச்சின்னு  சொல்லக்கூடாதுன்னும்  சொன்னார்..  எனக்கு  டீ  வேணும்..“ என்றாள்  மலர்ந்த  முகத்தோடு.
    பார்டா..  மரியாதையெல்லாம்  தூள் பறக்குது..  என  நினைத்தபடியே  தங்கையிடம்  டீ  யை  கொடுத்த  ஆனந்தி.. ‘டிபன்  வேண்டாமா..?“ என்றாள்.
    ‘நீதான்  இப்ப  சமைக்கறது  இல்லையே..?  அந்த  குக்  பண்றவங்க  வந்துட்டாங்களா..?” என்றாள்  பழைய  அபர்ணாவாக கண்ணை  உருட்டி.
    ‘அவங்க   இதுக்குமேல தான்  வருவாங்க..  உனக்கு  வேணும்னா  சொல்லு..?  நான்  பண்றேன்..” என்றாள்  அக்கறையாக.
    ‘வேணாம்..  வேணாம்.. லேட்  ஆயிடும்..  நான்  கேண்டீன்ல   சாப்டுக்கிறேன்.” என்றாள்  மறுப்பாக.
    ‘கேண்டீன்ல   லன்ச்தான   இருக்கும்னு  சொன்ன..?”
     ‘ப்ச்.. அங்க  இல்லைன்னா..  சிவா  வாங்கி  கொடுப்பார்.”  என்று  நம்பிக்கையோடு  சொல்லி  கிளம்பினாள்.  அபர்ணா  சரியாக  ஆறரை  மணிக்கு  ஆபிஸ்  வாசலில்  ஆட்டோவில்  வந்து  இறங்கினாள்.   அங்கு  சிவமுகிலனின்  கார்  இருக்க..  ஏழு  மணிக்குத்தானே  நம்மளை  வரசொன்னான்..   நமக்கு  முன்னாடியே  வந்துட்டானா..? ரொம்ப  முக்கியமான  ப்ராஜக்ட்தான்  போல..  என  சிறிது  பதட்டத்துடன்  வேகமாக உள்ளே  சென்றாள்.
      அலுவலகத்தினுள்  யாரும்  இல்லை..  சிவமுகிலன்  அவன்  கேபினுக்குள்   ஏதோ  முக்கியமான  வேலை  செய்பவன்போல..  லேப்டாப்பை   நோண்டிக்கொண்டிருந்தான். அவனிடம்  போய்  ஒர்க்  டீடெய்ல்ஸ்  கேட்க்கலாமா..?  அல்லது  நம்  சிஸ்டத்தை  ஓபன்  பண்ணி  மெயில்  ஏதும்  அனுப்பியிருக்கிறானான்னு   பார்க்கலாமா..?  என்ற  தீவர  யோசனைக்கு  பிறகு  ஒரு  முடிவிற்க்கு  வந்தவளாக..   முதல்ல  நம்ம  மெயில்  செக்  பண்ணலாம்..  அதுல  எந்த  டீடெய்லும்  இல்லைன்னா..  அவன்கிட்ட  கேட்கலாம்..  என்று  தனது  இருக்கையில்  அமர்ந்தாள்.
     சிவமுகிலன்  அவள்  செய்கைகளை  பார்த்துக்கொண்டுதான்  இருந்தான்.    என்ன இது..  புதுசா  மெயில்  ஏதும்  இல்லையே..    இங்க  சும்மா  உடக்கார்ந்திருந்தா  அதுக்கும்  திட்டுவான்..  பேசாம  போய்  கேட்கலாம்  என்ற  முடிவினில்..  அவன்  கேபினுக்கு  வெளியில்  நின்று..  
    ‘குட்  மார்னிங்  சார்.”  என்றாள்.   
    ‘ம்..” என்று  சொல்லி..  மீண்டும்  தன்  லேப்டாப்பில்  கவனமானான்.
    இப்ப  நாம  உள்ள  போலாமா..? வேணாமா..?  என  குழம்பினாள்.  ‘சார்  நான்.. எனக்கு  ஒர்க்  டீடெய்ல்  ஏதும்  என்  சிஸ்டத்தில  இல்லை.”   என்றாள்  வெளியிலிருந்தபடியே.
    ‘உள்ளே  வா..” என்றான்  அதிகாரமாக.
     கேபினுக்குள்  சென்றவள்..  மறுபடியும்   ‘சார்  என்  சிஸ்டத்தில  மெயில்   எதுவும்  இல்லை.” என்றாள்.
     ‘இப்ப  எதுக்கு  சொன்னதையே  திரும்ப  சொல்லிட்டு  இருக்க..?  நான்  ப்ராஜக்ட்  ஒர்க்  இருக்குன்னு  சொன்னேன்.  ஆனா  அது  ஆபிஸ்  ஒர்க்குன்னு   சொன்னனா..?   இது   பர்சனல்  ப்ராஜக்ட்  ஒர்க்..” என்றான்.  
    அபர்ணா  பேந்த  பேந்த  விழிக்க..  ‘எதுக்கு  இப்படி  திருடிமாதிரி  முழிக்கிற..?” என  அதற்கும்  கடிந்தான்  உள்ளுக்குள்  சிரித்தபடி.
   ‘அது..  வேற  என்ன  ஒர்க்  சார்..?” என்று  குழப்பத்தோடு  கேட்க..
   ‘இரு.. இரு..  சொல்றேன்.  அதுக்குத்தான  வரசொன்னேன்..?”  என்றவன்..  எழுந்து  நின்றுகொண்டு..  அவளை  ‘உட்க்காரு..”  என்றான்.
     அபர்ணா   தன்  கண்களை  சுழல விட்டாள்.  இந்த  பக்கம்  இரண்டு  போஉட்க்காரமாதிரி  ஒரு   குஷன்  இருந்திச்சே..?  அது  எங்க  காணோம்..?எங்க  உட்க்கார  சொல்றான்..?  இங்க  இருக்கிறது  ஒரே  ஒரு  சீட்தான்.  அதுவும்  இவன்  அமரும்  சீட்..  என்ற  யோசனையில்  இருக்கும்போதே..
    ‘உன்னை  உட்க்காருன்னு  சொன்னேன்..”  என்று  சிவமுகிலன்  சற்று  சத்தமாய்  சொல்ல..  அபர்ணா  பட்டென்று  கீழே  அமர்ந்தாள்.
    ‘ஹேய்…  முதல்ல  எழுந்திரு..” என்று  தன்  ஆட்காட்டி  விரலை சுழற்றியபடி அவன்  மிரட்ட..  பொம்மைபோல்  எழுந்து  நின்றவளிடம்.. 
    ‘அறிவிருக்கா  உனக்கு..?  என்  கம்பெனி  ஸ்டாஃப்  நீ..  உட்க்காருன்னு   சொன்னா..?  இப்படி  கீழே  உட்கார்ந்து   எதுக்கு  காலங்காத்தால  என்னை  டென்சன்  பண்ற..?” என்றான் கோபத்தோடு.
   ‘அப்ப  நா..ன்  எங்..க   சார்..?” என  திணற..
    ‘நான்  தான்  எழுந்துட்டேனே..?  இந்த  சீட்  காலியாதான  இருக்கு..?  ம்ம்..” என்று  ஒற்றை  புருவத்தால்  அவன் இருக்கையை  காட்டினான்.
    ‘நா..ஆன்.. நான் “ என  மீண்டும்  திணற..
   ‘உட்காருன்னு  சொன்னேன்.‚“ என்றான் அதிகாரமாக.
   அவள்  தயங்கிய படியே  அவனுடைய  இருக்கையின்  நுனியில்  அமர்ந்தாள்.  சிவமுகிலன்  அந்தப்புறம்  திரும்பி  லேசாக  சிரித்து..  பின்பு  தன்னை  ஆசுவாசப்படுத்தி  அவளைப்  பார்த்தான்..  குனிந்த  நிலையில்  பதட்டத்தோடிருந்தாள்  அபர்ணா.  
     ‘இப்ப  நான்  உன்னை  வரசொன்னது..  என்  கம்பெனி  ஸ்டாஃபா  இல்லை..     எனக்கு  கொஞ்சம்  பர்சனலா  ஒரு  விசயத்துக்கு    முடிவு  வேணும். அதுக்காகத்தான்  உன்னை  வர  சொன்னேன்.   நிறைய  பேசனும்..     முதல்ல  நல்லா  உட்க்காரு.  கீழ ஏது  விழுந்திடப்போற..” என்று  தன்  கோபம்  குறைத்து   சொல்ல..  சற்று  வசதியாக  அமர்ந்தாள்.
    ‘என்  லேப்டாப்பை  ஓப்பன்  பண்ணு.”
    ஓபன் செய்தவள்..  லேப்டாப்பை  அவன்புறம் திருப்பி.. ‘சார்  பாஸ்வேர்ட்  கேட்குது..  போட்டுக்கொடுங்க..” என்றாள் சன்னக்குரலில்.
    ‘ப்ச்.. நான்  சொல்றேன்   நீயே போடு..  எ .பி. எ. ஆர். என். எ.”  என்றான்  அவளை  ஊன்றிபார்த்தபடி.  அது  தன்னுடைய  பெயர்தான்  என்றுகூட  அவளுக்கு   பதட்டத்தில்  தெரியவில்லை.
   ‘ம்ம்.. ஓபன்  ஆயிடுச்சிங்க சார்..” ஆவலாக.
    ‘அதுல  பிக்சர்ஸ்  போ..”
    ‘ம்ம்..  போய்ட்டேன்..” என்றாள் அடுத்து  என்னவோ  என்பதுபோல்.
     ‘ஒரு  அழகான  பெண்  இருக்காளா..?“என்றவன்  அபர்ணாவை  ஆர்வமாக  பார்க்க..
     ‘எஸ் சார்..” என்றாள்  வேலையில்  கவனமாய்.
     ‘இவளைதான்  எங்க  அம்மா  என்னை  கல்யாணம்  பண்ணிக்க  சொல்றாங்க..  எனக்கும்  இவளை  பிடிச்சிருக்கு..  ஆனா.. இதுல  எனக்கென்ன  பிரச்சனைன்னா..?  நீ  வேற  என்னை  ஜெயிலுக்கு  அனுப்பறேன்னு  சொன்னியா..?”  என்று  அவளை  ஊன்றிப்   பார்த்தான்.
      நிமிட  இடைவெளிக்குப்  பிறகு..  ‘அதனால..  நீ  எப்ப  என்னை  ஜெயிலுக்கு  அனுப்பறேன்னு முதல்ல தெரிஞ்சிகிட்டு..  அப்புறமா  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  நினைக்கிறேன்.  நீ  என்ன  சொல்ற..?” என்று  சிவமுகிலன்  கேட்டதும்  அபர்ணாவின்  கண்கள்  தானாக  கலங்க  ஆரம்பித்தது.
     

Advertisement