Advertisement

                               அத்தியாயம் — 9
        பதறியவனாய்..  ‘அபர்ணா…  அபர்ணா…” என்றான்  பதட்டமாக.  அவள்  கண் விழிக்கவே   இல்லை.   ‘காட்..”  என்று  தலையில்  கை  வைத்துக்கொண்டு..   சற்றுநேரம்  பொறுத்து      அவள்  முகத்தில்  தண்ணீர்  தெளித்தான்.  கண்கள்   மட்டும்  லேசாக  அசைந்ததே  அன்றி..   அவளிடம்  எந்த   அசைவும்   இல்லை.   அலுவலகத்திலும்    வேறு   யாரும்  இல்லை.    இவளிடம்   பேசுவதற்க்காக  இராமுவையும்   அனுப்பியிருந்தான்.  
       நியாபகம்  வந்தவனாய்  தன்  அம்மாவிற்க்கு   கால்செய்து..    ‘அம்மா..”  என்றான்  பதட்டமாக.
     ‘சிவா..  என்னப்பா?   ஏதாவது   பிரச்சணையா..?  ஏன்  ஒருமாதிரி   பதட்டமா  கூப்பிடற..?”  என அவனின்  அம்மாவும்   பதற..
      ‘அம்மா  இங்க  நம்ம  கம்பெனியில  வேலைசெய்யற   பொண்ணு  மயக்கமாகிட்டா …  என்னம்மா   பண்றது..?”  என்றான்.    
     ‘சாப்பிடாம  இருந்திருப்பாளா  இருந்திருக்கும்..   நீ  பயப்படாத.”  என்றார்.
     நிலைமை  தெரியாம  பேசுறாங்களே..  என  நினைத்து..  ‘நான்  தண்ணீயை  முகத்தில  போட்டும் அவ  எழுந்திருக்கலைம்மா..”   என்றான்.
     ‘அப்போ  டாக்டருக்கு  போன்  பண்ணுப்பா…” என  சொல்லும்போதே..   முத்துகிருஷ்ணன்  வீட்டிற்க்கு  வரவும்.. 
      ‘இருப்பா  உங்கப்பா  இப்பதான்  வரார்..  நான்  அவர்கிட்ட  கொடுக்கிறேன்.  அவர்கிட்ட  கேளு..”  என்று  மகன்  சொன்ன  விவரங்களை   கணவனிடத்தில்  சொல்லி..   போனை  அவர்  கையில்  கொடுத்தார். 
    போச்சிடா..  நம்ம  அப்பா  சாதாரணப்பட்ட  ஆளில்லையே   என்று  நினைத்து..   இது  ஏன்  எனக்கு  தோணலை..?  நாமே  வேற  ஒரு  டாக்டருக்கு  போன்  செய்திருக்கலாம்  என  நினைக்கும்போதே..
   ‘சிவா….  ஹலோ.. “ என்றார். 
    ‘அப்பா…”என  பதட்டத்தோடு  சிவா  அழைக்க..
    ‘எல்லாம்  உன்  அம்மா  சொல்லிட்டா..  நான்  வந்திட்டே  இருக்கேன்.   நீ   வீடியோ  கால்  கனெக்ட்  பண்ணு.. “ என்றார்.
     அவன்  கனெக்ட்  செய்ததும்..   ‘அவங்க  முகத்தை  காட்டு..”  என்றார்.    சிவமுகிலன்  காட்டிய  உடன்  அவர்  கவனித்தது..  அந்த  பெண்   அவனுடைய  மடியில்  இருந்ததைத்தான்.  அதை  வெளிக்காட்டாமல்..
    ‘அவங்க  முகத்தில  தண்ணி  தெளி..”  என்றார்.
     இந்தப்  பெண்ணை  எங்கோ  பார்த்திருப்பதுபோல  இருக்குதே..?  எங்கு?  என்று  யோசித்தவராய்.. ‘ம்.. சிவா… நீ  கட்  பண்ணு…  நான் பக்கத்தில  வந்துட்டேன்..  நீ  பயப்படாத..”  என்று  கட்  செய்தார்.
     அவனுடைய  அப்பா  உள்ளே  வருவதற்க்கும்..   அபர்ணா   லேசாக  கண்ணை  அசைப்பதற்க்கும்   சரியா  இருக்க…  இவள்  இந்த  நிலையில்  இருப்பதனால்  வந்த  பதட்டம்  ஒரு புறம்  இருந்தாலும்..    இவள்  கண்விழித்து..  தன்  அப்பாவிடத்தில்  ஏதாவது  சொல்லிவிடுவாளோ  என்ற   பயம்தான்  அதிகமாக  இருந்தது. 
      ஸ்டெதஸ்கோப்பை  எடுத்து  அவள்  நெஞ்சுக்கூட்டில்  வைத்து..   பல்ஸ்  பார்ப்பதற்க்காக  அவள்  கையை  பிடித்ததுதான்..  சட்டென  விழித்தவள்  பிரம்மை பிடித்தவள்  போல்  முழித்தாள். 
      முத்துகிருஷ்ணனை  பார்த்ததும்..  ‘டா..க்டர்..” என அலறி..  அவரை   கட்டிக்கொண்டு..  ‘டாக்டர்….  இந்த  எம.டி.  நல்லவர்  இல்லை..  என்னை  கிஸ்  பண்ணிட்டார். இவர்  ரொம்ம ரொம்ப  கெட்டவர்.  இதை  அவரேதான்  என்கிட்ட சொன்னார்..”  என்று  படபடவென்று  பேசினாள்.
        தன்  மகனை  அப்படி  ஒரு  அழுத்தமான  பார்வைப்பார்த்த   முத்துகிருஷ்ணன்..    தன்  பார்வையை  அபர்ணாவிடத்தில் திருப்பி  ‘சரி.. சரி…  நான்தான் வந்திட்டேன்  இல்ல…   கூல்… உனக்கு  ஒன்னும்  இல்லை. “  என  அவளை  அமைதிப்படுத்தி..
       ‘நீ  என்கூட  வரியா..?  நான்  உன்னை  உன்  வீட்ல  டிராப்  பண்றேன்..”  என்றார்.    அவள்  உடனே  சரி  என்பதாய்  வேகமாக  தலையசைத்து..   எழ  முயன்றாள். 
      ‘உன்   வீடு  எங்க  இருக்கு..?”  என்றார். 
      ‘டாக்டர்  என்னைத்  தெரியலையா   உங்களுக்கு..?  நான் உங்க  ஹாஸ்பிட்டல்க்கு  வந்திருக்கிறேன்..  எங்க  அம்மாக்கு  உங்ககிட்டதான்  காட்றோம்.” என்றாள்.  
     ‘உங்கம்மா  பேரு   என்னமா…?  அவங்களுக்கு  என்ன  ப்ராப்ளம்..?”  என  விசாரிக்க..
     ‘எங்கம்மாக்கு   பக்கவாதம்..   இப்ப  ஒரு  மூனு  மாசமா   உங்க  ஹாஸ்பிட்டலுக்கு தான்  நாங்க  வருவோம்..”  என்று  தன் பெற்றோர்  பெயரை  சொல்ல..     முத்துகிருஷ்ணனுக்கு  இவள்  யார்  என்ற  விவரம்   விளங்கியது..
        ‘எஸ்.. எஸ்..  எனக்கு  தெரியும்…  தெரியும்… நீலகண்டன்  என்  பிரெண்டுதான்.  யு..  டோன்ட்..  ஒர்ரி..  அப்புறம்  உன்  பேர்  அபர்ணாதான..?” என்றார்   நினைவு  வந்தவராய்.
      உடனே டாக்டர்  என்பது  மாறி..  ‘எஸ்  அங்கிள்..  இவரை  பத்தி  எங்க அப்பாகிட்ட  நாம  ரெண்டு  பேரும்  சொல்லி..  ஜெயில்ல  போட்றலாம்.”  என்றாள்.
     இப்படிவேற  ஒன்னு  இருக்கா..  என   நினைத்தவராய்..  ‘அதை  அப்புறமா  பேசிக்கலாம்..  நீ  முதல்ல  வா  இங்கிருந்து  போகலாம்..” என  வெளியே  வந்ததும்..
       ‘என்  கார்  கீ  உள்ளேயே  வச்சிட்டேன்… ஒரு  நிமிசம்  இங்கையே  இரு  நான்  எடுத்திட்டு  வந்திடறேன்.” என்றார்.    அவர்  சொல்வதை  அப்படியே  நம்பினாள்  அபர்ணா.  அது  அவள்  கண்களில்  தெரியவும்..  சற்று  நிம்மதியாகி  பிறகு  உள்ளே  சென்றார்.
       அங்கே  சிவமுகிலன  தன்  சீட்டில்..   தன்  கைகளை  தலைமீது   வைத்து  அமர்ந்திருந்தான்.  முத்துகிருஷ்ணன்    உள்ளே  வந்ததை  கூட  அவன்  அறியவில்லை..   ‘சிவா… “  என்றார் கோபமாக.
      ‘அப்பா…” என  வேகமாக   எழுந்தான்.
      ‘என்ன  இதெல்லாம்..?”  என்றார்.
       சிவமுகிலன்  தலைகுனிய.. ‘அப்போ…. அந்த  பொண்ணு  சொன்னதெல்லாம்  உண்மைதானா..?”  என்றார்.
      ‘ஆமாம்ப்பா…   ஐ  லவ்  ஹெர்..”  என்றான்.
      ‘அதுக்கு  இப்படிதான்  பண்ணுவாங்களா..?”  என்றார்.
      ‘சாரிப்பா…  இது  தெரியாம  நடந்திடுச்சி.  இப்படி  ஆகும்னு  நான்  நினைக்கலை.” என்றான்  வருத்தத்தோடு.
     ‘அந்த  பொண்ணு    வீட்டுக்கு  போனதும்..  அவங்க  அப்பாகிட்ட  எல்லாத்தையும்  சொல்லனும்னு  சொல்றா..  அவங்க அப்பா  யாருன்னு  தெரியுமா..?  அவர்  நம்ம  ஊர்  பக்கம்தான்.  நானும்  அவனும்  சின்ன  வயசில  ஒன்னாத்தான்  படிச்சோம்.   அவ  அம்மாக்கு  நான்தான்  ட்ரீட்மெண்ட்  எடுத்திட்டு  இருக்கேன்.   நான்  எப்படி  அவன்  முகத்தில  முழிக்கிறது…?“
       ‘நான்  நடந்துகிட்டது  தப்புதான்.     அவகிட்ட  இன்னைக்கு    ப்ரப்போஸ்தான்  பண்ணதான்   இருந்தேன்.  ஆனா அவளுக்கு    அத  புரிஞ்சிக்கிற  அளவுக்கு   பக்குவம்  இல்லை..” என்றான்.
      ‘அந்த   பொண்ணை  பார்த்ததுமே   இன்னசென்ட்ன்னு  நான்  தெரிஞ்சிக்கிட்டேன்.  இல்லைன்னா  என்கிட்டையே  நீ   கிஸ்  பண்ணிட்டன்னு  சொல்லுவாளா..?  இவ  இப்படி இருப்பான்னு  தெரியறதுக்கு  முன்னாடி  அப்படி  என்ன  உனக்கு  அவசரம்..?   நாங்க  கல்யாணத்திற்க்கு  ஒத்துக்கலைன்னா   என்ன  பண்ணுவ..?”  என்றார்.
     ‘வெரி  சிம்ப்பிள்..   நான்  யாரையும்  கல்யாணம்   பண்ணமாட்டேன்.”  என்றான்  திமிறாக.
      ‘அப்ப  நீ  ஒரு  முடிவோடதான்  இருக்க..?  ஆனா..  எனக்கு  என்னவோ  அந்த  பொண்ணுக்கும்   உன்னை  பிடிச்சமாதிரி   தெரியலையே..?” என்றார். 
     ‘என்னைத்தவிர  வேற  யாரையும்  வேற  யாரையும்   அவளை   கல்யாணம்  செய்துக்க   விடமாட்டேன்.”  என்றான்.
     ‘ஓ…  அந்த  அளவுக்கு  வந்திடுச்சா..?  அதுவும்  ஒன்  சைடு  லவ்வுக்கே  இவ்வளவு  எஃபெக்டா..?” என்றார்.
       அவன்  அமைதியாக  இருக்கவும்..  ‘அந்த பொண்ணு  கார்ல  எனக்காக  காத்திட்டு  இருக்கா… அவ  வீட்டுக்கு  போனதுமே  அவங்க  அப்பாகிட்ட  கண்டிப்பா  இங்க   நடந்ததை   சொல்லப்போறா…   அதுக்கப்புறம்  என்ன   பண்ணலாம்னு  இருக்க..?“ என்றார்.
     ‘அதை வரும்போது  பார்த்துக்கலாம்..“ என்றான்  திமிறாகவே.
     ‘இதுவரைக்கும்  நீ  எந்த  பொண்ணையும்  தப்பா  பார்த்ததுகூட  இல்லைன்னு  எனக்கு  தெரியும்.  ஆனா..    இப்ப   இந்தளவுக்கு  வந்திருக்க…? எனக்கொன்னும்  பிரச்சனையில்லை.   உங்கம்மாகிட்ட  நான்  எதையும்  சொல்லப்போறதில்லை..  ஏன்னா..?  இந்த  விசயத்திலயும்   நீ  என்கிட்ட  எந்த  ஹெல்ப்பும்  கேட்கலை..” என  சொல்லி  விருட்டென  கிளம்பினார்.
       இப்ப  இவர்  என்ன  சொல்ல வரார்..?  இங்க  நடந்தது   தப்புங்கறாரா..?  இல்லை… அவர்கிட்ட  ஹெல்ப்  கேட்காததுதான்  தப்புங்கறாரா…?  என்று  யோசித்து..  முதல்ல  அவ  வீட்டுக்கு  போறதுக்குள்ள  இதுக்கு  ஒரு  வழி  பண்ணனும்    என   வெற்றிக்கு    போன்  போட்டான்.
     ‘சொல்லு   சிவா?” என்றான்.
     ‘வெற்றி..”  என்று  அரம்பித்து  நடந்ததை   சொல்லிமுடித்தான்.
     ‘அடப்பாவி  இப்படியாடா  பண்ணுவ..? அவனவன்  வருசக்கணக்கில  காத்திட்டு  இருக்கான்…  கொஞ்சமாச்சம்  பொறுமை  வேணாமா  உனக்கு..?”   என   வெற்றி  திட்ட..
     ‘அது  இருந்திருந்தா..  நான்  ஏன்ப்பா  இப்படி  சொல்லக்கூடாத   பார்சனல்லாம்  உன்கிட்ட  சொல்லப்போறேன்..? என்றான்  சோர்வாக.
     வெற்றி  சிரிக்க.. ‘சிரிப்பா  இருக்கா  உனக்கு..?  ஆனந்திகிட்ட   சொல்லி..  அவ   வாயை   முதல்ல  ஆப்  பண்ணு..”  என்றான். 
     ‘அடப்பாவி   நானே   ஆனந்திமேல  இருக்கிற  கோபத்தில..   அவகிட்ட  சொல்லாம  கூட  கிளம்பிட்டேன்..   இதுல  அவகிட்டபோய்  நான்  என்னடா  சொல்லமுடியும்..?”  என்றான்.
    ‘அதெல்லாம்  எனக்கு  தெரியாது..   அபர்ணா  வீட்டுக்கு  போறதுக்குள்ள.. நீ  அனந்திகிட்ட  பேசி  சமாளி..  நான்  வைக்கிறேன்.”
     ‘இவனையெல்லாம்  வச்சிகிட்டு..“ என  திட்டி  வேறுவழியின்றி  ஆனந்திக்கு  கால்  செய்தான்.  
      ஆனந்தி..  ‘ஹலோ  என்னங்க..?” என்றாள்  ஆசையாக.
      ‘நான்  சொல்றதைக்கொஞ்சம்  பொறுமையாக்  கேளு..”  என்று  ஆரம்பித்து   நடந்ததை  சொன்னான்.
      ‘என்னங்க  நீங்க..?  அவரைத்திட்டாம  இப்படி  என்கிட்ட  பேசிட்டு  இருக்கிங்களே…”  என  அங்கலாய்த்தாள்.
     ‘ஆனந்தி  அபர்ணா  வந்திட்டு  இருக்கா…  அதுவும்  சிவாவோட  அப்பாகூட..  நான்  சிவாகிட்ட சொல்லி   கேட்  கிட்டையே  அவளை  இறக்கிவிட  சொல்லியிருக்கேன்.   நீ  கேட்கிட்ட இப்பவே  போய்  நின்னு  அவருக்கு  தேங்ஸ்  சொல்லி  அனுப்பிட்டு..   அபர்ணாவை  உன்  ரூம்க்கு  கூட்டிட்டு  போய்டு.   அவளுக்கு  உடம்பு  சரியில்லைன்னு  சொல்லி  உங்க  அப்பாம்மாகிட்ட  இன்னைக்கு  மட்டும்  சமாளிச்சிடு.  மத்ததை  நான்  அப்புறம்  சொல்றேன்.
        ம்ம்.. அப்படியே  சிவமுகிலனைப்  பத்தி  கொஞ்சம்  நல்லவிதமா  எடுத்துச்சொல்லு   உன் தங்கச்சிகிட்ட..  ஏன்னா..?   நீங்களே  தேடினால்கூட  அபாணாவிற்க்கு  அவனைப்போல  ஒரு  நல்ல  மாப்பிள்ளை  கிடைக்கமாட்டான்.   உண்மையை   சொல்லப்போனால்  அவன்  என்னைவிட  ரொம்ப நல்லவன்.”  என்றான்.
     ‘என்ன  சொல்றிங்க..?  அப்போ  சிவா அபர்ணாவை  காதலிக்கிறாரா..?  அது  உங்களுக்கு  முன்னமே  தெரியுமா..?”  என்றாள்.
    ‘ஆமாம்..   யார்  சொன்னாலும்.. அவன்  அபாணாவை  விட்டுக்கொடுக்க  மாட்டான்.  இதை அவன்  அவனோட  அப்பாகிட்டையே  சொல்லியிருக்கான்.   ஆனா  என்ன..?  உன்  தங்கச்சிகிட்ட   அதை  எப்படி  சொல்லனும்னு   அவனுக்கும்  தெரியலை.   சிவா  தன்மையா  சொல்லியிருந்தாலும்  அதைப்  புரிஞ்சிக்கிற  பக்குவமும்  அபர்ணாக்கு  இல்லை. எப்பன்னாலும்   சிவாதான்  அபர்ணாவோட  மாப்பிள்ளை.  அதனால  பார்த்து  நடந்துக்க.“  
      ‘ஏங்க  கார் வந்திடுச்சி..” என்றாள்.
      ‘சரி..  நான்  கட்  பண்றேன்..  பார்த்துக்க..” 
      ஆனந்தியைப்  பார்த்ததுதான்..  ‘ஆனந்தி…”  என  காருக்குள்   இருந்துகொண்டே  அழ ஆரம்பித்தாள்.  
      ‘ஏய்  ஏன்  இப்படி அழற..?  அதான்  அங்கிள்  பத்திரமா கூட்டிட்டு வந்துட்டார்தானே..?” என்று   ஆனந்தி   அபர்ணாவை  சமாதானப்படுத்த..  முத்துகிருஷ்ணன்   பரவாயில்லையே..   பையன்  அதுக்குள்ள  ஏதோ  காம்ப்ரமைஸ்  பண்ணிட்டான்  போல என்று  நினைத்து..  ஆனந்தியை  அர்த்தமாக  பார்த்தார்.  அதற்க்குள்  ஆனந்தி  கார்   கதவை  திறந்து  அவளை  வெளியே  வரவைத்திருக்க..    உடனே  இருக்கும்  பிரச்சனையெல்லாம்  மறந்தவளாய்..
        ‘ஆமா…  நம்மகிட்டதான்  கார்  இல்லையே..?   நீ  எப்படி  இந்த  டோரை  ஓபன்  பண்ண  கத்துகிட்ட..?  ஏன்  எனக்கு  சொல்லிதரல..?”  என  கோபிப்பவளாய்   கேட்க..
      முத்துகிருஷ்ணன்..   இங்கு  என்ன  நடக்கிறது..?  நாம  எந்த  நிலையில்   இவளை  அழைத்து  வந்தோம்..?    இவள்   என்ன  பேசிக்கொண்டிருக்கிறாள்..?   என்று  நினைத்திருக்க..
      ‘அங்கிள்  ரொம்ப  தேங்ஸ்..  என்னால  இப்ப  உங்களை  உள்ளே  கூப்பிடமுடியாது.   என்னை  மன்னிச்சிடுங்க  ப்ளீஸ்..  இனி  இவளை  நான்  பார்த்துக்கிறேன்.  நீங்க  கிளம்புங்க..”  என்றாள்  அவசரமாக.
       ஆனந்தியின்  பேச்சில்  அனைத்தும்  நினைவு  வந்தவளாய்..  ‘இல்லை  ஆனந்தி  இவரை உள்ளே  கூப்பிடுää..  அப்பதான  அங்க  என்ன  நடந்ததுன்னு..  இவர்  நம்ம  அப்பாகிட்ட  சொல்வார்.”  என மீண்டும்  கண்கலங்கினாள்.
       ‘அபர்ணா..  நம்ம  பிரச்சனையை  நாம  தானே  பார்க்கனும்..?  அங்கிள்  ஒரு  டாக்டர்.      அவர்  டைம்  ஸ்பெண்ட்பண்ணி   இவ்ளோ  தூரம்  உனக்கு  ஹெல்ப்  செய்ததே   பெரிய  விசயம்.   அவரை  ரொம்ப  தொல்லைப்  பண்ணக்கூடாது.”
        முத்துகிருஷ்ணனும்..  ‘அபர்ணா  எனக்காக..  ஒரு  பேசன்ட்  வெய்ட்  பண்ணிட்டு  இருக்கார். நான்  கிளம்புறேன..”  என்று  சிறு  தலையசைப்புடன்  தன்  மகனுக்காக   ஆனந்தியிடம்   நன்றிப்பார்வை  பார்த்து  கிளம்பினார்.

Advertisement