Advertisement

       ‘அவர் சொந்தகாரரா   இல்லையான்னு   அப்புறம்  தெரிஞ்சிக்கலாம்…   அதுக்கு   முன்னாடி   நான்  முதல்ல பேசி முடிச்சிடறேன்..  ம்ம்..   என்ன சொன்ன?  உன்னை  அவ இவன்னு  சொன்னேனு   சொன்னல்ல?  உன்னோட  பயோடட்டாபடி   உனக்கு  இப்ப    இருபத்திரண்டு  வயசுதான்..   நான்   உன்னோட  அஞ்சு  வயசு  பெரியவன்..    உன்னை   அவஇவன்னா   என்ன  இப்ப..?”  என்றான்  அசால்ட்டாக.
       ‘நான்  எங்க அப்பாவோட  முப்பது  வயசு  சின்னவ.  அவரே  என்னை  அப்படி  பேசனதில்லை..” என்றாள் புத்திசாலியாக.
        அவளின்  பதிலில்  கோபம்  போனவனாய்   சத்தமாக  சிரித்து  விட..   முதன்  முறையாக  இப்பொழுதுதான்  இவன் சத்தமாக.. இப்படி  அழகான  பல்வரிசை  தெரிய  சிரிப்பதை    அதிசியமாக  பார்த்துக்கொண்டிருந்தாள்.
     ‘உன்  அப்பாவும் …  நானும்  ஒன்னா…?”  என்றான்   சிரித்துக்கொண்டே.. 
    ‘கண்டிப்பாக  இல்லை..” என்றாள் உறுதியாக.  இதப்பார்ரா  பரவாயில்லையே..  என  மனதினில்  மெச்ச.. 
     ‘எங்கப்பா  ரொம்ப  நல்லவர்.  உங்களை  மாதிரி  இல்லை…” என்று  அருவறுப்பாக  முகத்தை  சுழிக்க..
     அதில்  ஏகத்திற்க்கும்  கடுப்பானவன்.. ‘அப்ப   நான்   எப்படிப்பட்டவன்..?”  என்றான்.
     ‘எங்கக்காவை  ஒரு  கெட்டவன்கிட்ட  மாட்டிவிட்டிங்க..  என்னை  கடத்திட்டு  போய்டுவேன்னு  சொல்றிங்க…”  என்றாள்.
      ‘உங்க  அப்பா  நல்லவர் தானே..?  அப்புறம்  எதுக்கு  வெற்றிக்கு  சாப்பாடு  போட்டு..  உங்க  வீட்ல  தங்கவச்சார்   உங்க… நல்ல  அப்ப்பா?” என்றான்  அழுத்தமாக.
      ‘அதெல்லாம்  பெரியவங்க  விசயம்..  எனக்கெப்படி  தெரியும்..?” என்றாள். 
      ஆமா..  நீ  பச்சகுழந்தை…  வீட்ல  நடக்குறது  உனக்கு  தெரியாதுபாரு..  என  எரிச்சலோடு  நினைத்து.. ‘சரி..  உங்கக்கவே  வெற்றியை   நல்லவர்ன்னு  சொன்னா…   வெற்றி  நல்லவர்ன்னு  ஒத்துக்கிறியா…?”  என்றான்.
    அது எப்படி  நம்ம  அக்கா  அப்படிசொல்வாள்  என  நினைத்து..
    ’ம்ம்..  சரி”  என்றாள்.
     ‘வெற்றியை  நல்லவர்ன்னு   உங்கக்கா  சொல்லிட்டா..  அப்ப  நானும்  நல்லவன்னு  நீ  ஒத்துக்கனும்..” என  மிரட்டி  ஆனந்திக்கு  அழைத்து..  ஸ்பீக்கரையும்  ஆன்செய்தான்.  
     ‘அபர்ணா  சாப்டியா..?  எங்க  இருக்க..?”  என்றாள்.
     ‘ம்ம்  சாப்பிட்டேன்..  இங்க  ஆபிஸ்லதான்  இருக்கேன்..  நீ  என்ன  பண்ற..?”  என்றாள்.
   ‘நான்  உன்கிட்ட  ஒரு  சர்ப்ரைஸ்  சொல்றதுக்காக   காத்திட்டிருக்கேன்.”  என்றாள்.
    ‘என்ன  சர்ப்ரைஸ்..?”என்றாள்  அபர்ணா.
    ‘நீ  வீட்டுக்கு  வா..  நான்  நேர்ல  சொல்றேன்.” என்றாள்.
     சிவமுகிலன்.. கேட்கவேண்டிய  கேள்வியை   கேட்குமாறு   சைகை  செய்தான்.  ‘அக்கா..  நான்  உன்கிட்ட  ஒரு  விசயம்  கேட்ப்பேன்…  எனக்கு  அதுக்கு  உண்மையா  பதில்  சொல்லனும்.. என்றாள். 
     ‘ஏய் .. நான்  என்னைக்கு  உன்கிட்ட  பொய்  சொல்லியிருக்கேன்..?    நான் எப்பவும்  உன்கிட்ட  உண்மைதான்  சொல்வேன்.” என்றாள்.
     ‘இல்ல.. அந்த  வெற்றி..” எனும்போதே…  ‘அபர்ணா… பெரியவங்களை  அப்படி  மரியாதையில்லாம  பேசக்கூடாது…” என்றாள்.
     ‘மொதல்ல  என்னை  கேள்விகேட்க  விடு..” என்று  அதட்டியவள்.. 
     ‘அவர்  நல்லவரில்லைதானே?  கெட்டவாதானே?”   என்றாள்.
     ‘நான்  இதுக்கு  பதில்சொன்னேன்னா..?    என்கிட்ட  இருக்கிற   உனக்கான  சர்ப்ரைஸ்  போய்டுமே ..”  என்றாள்.
     ‘அது  போனாலும்  பரவாயில்லை….  நீ  இப்ப  நான்  கேட்ட  கேள்விக்கு   பதில்   சொல்லு..”  என்றாள். 
    ‘இப்பவே  சொல்லனுமா?”  என  இழுக்க..
    ‘ஆமா” என்றாள்  சட்டமாக.
    ‘அது..   அவர்..   நல்லவர்  மட்டும்  கிடையாது.   நான்  அவரை  கல்யாணம்  பண்ற  அளவுக்கு  ரொம்ப   நல்லவர்..”  என்றாள்  சந்தோசத்தோடு.
    ‘என்ன  சொல்ற  நீ..?”  என  அதிர்ச்சியாக  கேட்க..
     ‘ஆமாம்  அபர்ணா  நான்  உண்மையைத்தான்  சொல்றேன்..”  என்றாள்.
     ‘ஏன்  நீ  என்கிட்ட  முன்னமே  சொல்லலை..?    என்னை  எல்லாரும்  மறந்திட்டிங்க  தானே..?   நான்  வீட்டுக்கு  வரமாட்டேன் போ…  நான்  இங்கையே  இருந்திடறேன்…“ என  கட்  செய்தாள்.
     சிவமுகிலன்    சத்தமாக  சிரித்தான்.  ‘ஆமா..  நீ  வேலையையும்  ரிசைன்  பண்றேன்னு  சொல்லிட்டு..  இப்ப  வீட்டுக்கும்  போகாம  இங்கையே  இருக்கேன்னு  சொல்றியே..  எப்படி….?  நீ  வேலையை  ரிசைன்  பண்ணினாலும்..     உன்னை  இங்க  தங்க  அனுமதிக்க…  இது  என்ன  உங்க    மாமியார்   வீட்டுக்   கம்பெனியா..?”  என்றான்.
     அபர்ணாவின்  முகம்  குழப்பத்தை  காட்ட..  ‘ஆமா  நீ  எப்படி  எம்.காம். வரை  படிச்ச..?  கொஞ்சம்   கூட  எதையுமே  யோசிக்கமாட்டியா…?   உன்னை  வச்சிகிட்டு  நான்  எப்படி  குப்பை  கொட்ட  முடியும்..?
      நீ  இங்கல்லாம்   வேலை  செய்ய  வேண்டாம்.   உனக்கு   வேற  வேலைக்கு   நான்  டிரைன்  பண்றேன்.  அதுவும்   இப்பயிருந்தே  ஆரம்பிச்சாதான்  கொஞ்சமாச்சம்   டிரைன்  ஆவ..” என்றான்.
      வெளியே  போக   எண்ணி..   அவள்  திரும்ப.. அங்கு  யாருமே  இல்லை…   ‘ஆபிஸ்ல  எல்லாரும்  எங்க  போய்ட்டாங்க?“ என்றாள்  தவிப்பாக.
     ‘இன்னைக்கு  ஆபிஸ்  ஹாப்  டே  தான்.  இப்ப  டைம்  இரண்டாகுது..   அவங்கெல்லாம்  போய்  ஒருமணிநேரம்  ஆகுது.”   என்றான்.
     ‘அப்ப  நானும்  போறேன்..” என்றாள்.
     ‘அது  முடியாது..   எனக்கு  கெட்டவன்னு  பட்டம் கட்டிட்டு  ஒன்னுமே  தெரியாதமாதிரி  நீ பாட்டுக்கு  போய்டுவியா..?  இல்ல  போகத்தான்  நான்  விட்ருவனா..?  இப்ப  வெற்றி  நல்லவர்ன்னு  ஆயிடுச்சி..  அதை  உங்கக்கா  சொல்லிட்டாங்க.   அப்ப  நான்  நல்லவனா..?  கெட்டவனான்னு   நீதான   சொல்லனும்..  எவ்ளோ  ஈசியா  என்னை  எடைபோட்டுட்ட..?  இதை  எப்படி  இப்படியே  விட  முடியும்..?”  என  வம்பிளுக்க..
       இவனைப்  போய்  எப்படி  நல்லவன்னு  சொல்றது..?  கெட்டவன்னு  உண்மையை  சொன்னாலும்  திட்டுவான்.. என்ற  யோசைனையில்  இருக்க..
       ‘இங்க  பாரு..  நான்  எல்லா  நேரமும்  இப்படி  பொறுமையாவே  இருக்கமாட்டேன்.  முதல்ல  பதிலை   சொல்லு..”  என்றான்.
      ‘அது  எப்படி  நான்  சொல்ல  முடியும்..?  நான்  இப்பதான  இரண்டு மூனுமாசமா  வேலைசெய்றேன். எனக்கு  உங்களைப்  பத்தி  அதிகம் தெரியாது..”  என்றாள்.
       ‘கொஞ்சம்  முன்ன  கெட்டவன்னு  சொன்ன…  இப்ப  தெரியாதுன்னு  சொல்ற..   அப்போ  இன்னும்  கொஞ்சநேரம்  கழிச்சி  என்ன  சொல்வ.?” என  மிரட்ட..
      ‘இப்பவும்  இப்படி  கம்பெல்  பண்ணி  உங்களை  நல்லவர்ன்னு  என்னை  சொல்லவைக்கப்   பார்க்கிறிங்க…“ என்றாள்  மனதை  மறைக்கதெரியாமல்.
        ‘ஆகமொத்தம் நான்  நல்லவன்  இல்லை… அப்படிதான..?” என்றான் அழுத்தத்தோடு.  அதைப்பார்த்தவள்  முகம்   சற்று   பயத்தை  பூசியது.  
        ‘காலைல  நாலு  மணிக்கு  எழுந்து..   நாலரைக்கெல்லாம்  இங்க  வந்து..   முதல்ல என்னோட வேலையை    முடிச்சிட்டு..  எட்டு  மணிக்கெல்லாம்  உன்னை  எதிர்பார்த்திட்டு  இருந்தேன்.  ஆனா  நீ  வரலை.     நேத்து  பெண்டிங்  ஆனது   உன்னோட  வேலைதான்னாலும்..    சரி  போனாப்போகுது..   இது  நம்ம  கம்பெனிவேலை.  நாமளே  பார்த்திடலாம்னு    நினைச்சி..  உன்னோட   சிஸ்டத்தை  ஓபன்  பண்ணினேன்.   அது  பாஸ்வேர்டு  கேட்டுச்சி.   அப்புறம்தான்  உனக்கு கால் செய்தேன்.   என்  போனை  இனி  அட்டன்  பண்ணனும்னு..  நான்  எவ்ளோ  சொல்லியிருந்தும்..   என்னோட  கால்சை  அட்டன்  பண்ணலை..  இந்த  ப்ராஜக்ட்  என்  கைக்கு  வரதுக்கு..   நான்  எவ்ளோ  சிரமப்பட்டேன்னு   எனக்குதான்  தெரியும்.  இன்னைக்கு  மட்டும்  நான்  அதை  முடிக்கலைன்னா..   அந்த  நஷ்டத்தை  எனக்கு  யார் தருவா..?  என்  இமேஜ்  என்னாகுறது..?  அதுக்கப்புறம்  திரும்ப  இந்தமாதிரி   பெரிய  ப்ராஜக்டை  என்னை  நம்பி   எப்படி  கொடுப்பாங்க..?”   என  கேள்விகளை  அடுக்க..
      தற்போதுதான்  அபர்ணாவிற்கு   சிவமுகிலனின்  நிலைபுரிய.. ‘நான்  தெரியாம  செய்திட்டேன்  சார்..  என்னை  மன்னிச்சிடுங்க..” என்றாள் உண்மையான  வருத்தத்தோடு.
    ‘நீ   நிம்மதியா  தூங்கி   எழுந்து  ஒன்பதரை  மணிக்கு  சாதாரணமா  வர..     ஆனா  நான்..  ஒரு  டீ  கூட  குடிக்காம..  உன்னோட  ஒர்க்கையும்  சேர்த்து   முடிச்சதுமில்லாம..    உன்னை  கெஞ்சி..   மிரட்டி..   கூட்டிட்டு  போய்  சாப்பிடவேறவச்சி..    பத்திரமா   கார்ல  கூட்டிட்டு  வந்த  என்னை..  கெட்வன்னு  சொல்ற…?”  என்றான்  பற்களை  நெரித்தபடி. 
     சிவமுகிலனை   பாவமாக    பார்த்து.. ‘சாரிங்க  சார்.” என்றாள் மீண்டும்.
     ‘உன்  சாரியெல்லாம்  உன்னோடவே  வச்சிக்க…  உன்னைப்  பொருத்தவரை  ரொம்ப கெட்டவனாவே  நான்    இருந்திடறேன்.  ஆனா  இந்த  கெட்டவனெல்லாம்   உன்னைமாதிரி  அழகான பொண்ணுங்களைப்   பார்த்தா…  என்ன  பண்ணுவாங்கன்னு   உனக்கு  தெரியுமா…?” என்றான்  தனது  பார்வையை  மாற்றி.
     அவளுக்கு  உள்ளுக்குள்  திகிலெடுக்க..  ‘எனக்கு   உன்மேல  கொஞ்ச  நாளாவே..  ஒரு  இது.. அந்த  இது..  எதுன்னு  இன்னைக்கு  சொல்லிடலாம்னு  தான்  இருந்தேன்.  ஆனா.. நீதான்  அந்த  மூடையே  ஸ்பாயில்  பண்ணிட்டியே..  நீ  வேற.. வேலையை  விட்டு   போறேன்னு   சொல்ற..   மறுபடி   நீ   எங்க  வேலைக்கு  போனாலும்..   நல்லவங்க  யாரு?  கெட்டவங்க  யாருன்னு..?  உனக்கு  தெரியனும்ல..?   நல்லவங்க  எப்படி  இருப்பாங்ன்னு  எனக்கு  காட்ட  தெரியலை..” என  இவ்வளவு   நேரமும்  தனது  நாற்காலியில்  அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தவன்..    
      மெதுவாக  எழுந்து  அவளருகில்  வந்தான்.  அவள்  பின்னோக்கி  நகாந்தாள்.  எவ்வளவு  தூரம்தான்  பின்னால்  போக  முடியும்..?   அவன்  முன்னேறிக்கொண்டே  இருக்க..  பக்கத்தில்தான்  வருகிறான்  என  அபர்ணா பயந்து  கொண்டிருக்க..   அவனோ  கேபின்  கதவை  லாக்  செய்தான்.      
     ‘சா..ர்.  நா.. நீ..  எனக்கு  பயமாயிருக்கு..  நா.. ன்  போ..க..னு…ம்..” என்று  கதவை  திறப்பதாக  நினைத்து..  அவளே  அவனருகினில்   வந்து  கொண்டிருந்தாள்.   அவளின்  ஒரு  கையைப்   பிடித்து  அவனருகில்  இழுத்தான்.  காற்றாக  வந்து  அவன்  மேல்  விழுந்தாள்.   அவளின்  இடையை  மறுகையால்  வளைத்து..  அவளை   உரசிக்கொண்டே..  கெட்டவனெல்லாம்  எப்படியிருப்பான்னு  நீ   என்கிட்ட இப்போ தெரிஞ்சிக்க..”   என அவள்  காதினில்  கிசுகிசுக்க..  அவளின்  வாசம்  அவனை  நிலைகுலையச்  செய்தது.  அபர்ணா வியர்வையில்  குளித்துக்கொண்டிருந்தாள்.
       ‘என்னை  விட்ருங்க…  ப்ளீஸ்.. “ என்றாள்.
       ‘நான்  இப்பதான..  கொஞ்சம்  கொஞ்சமா..  கெட்டவன்  எப்படியிருப்பான்னு  டெமோ  காட்ட  ஆரம்பிக்கிறேன்..    அதுக்குள்ள  என்ன  அவசரம்..?”  என  அவள்  காதுமடலில்  லேசாக   தன்  முதல்  முத்திரையைப்  பதித்தான். 
       ‘என்னை  விட்ருங்க..  என்கிட்ட  இப்படி  செய்திங்கனா..   எங்க…ப்பா  உங்களை   ஜெயில்ல  போட்றுவார்..”  என்று  அவனை  மிரட்டுவதாக  எண்ணி  அவனிடம்  கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
      ‘ம்..  ஆமாம்ல..?  கெட்டவன்னா  ஜெயில்ல  தான  இருக்கனும்..  ஆனா  ஜெயிலுக்கு   போகனும்னா..  அதுக்கு  இன்னும்  நிறைய  வேலை  செய்யனுமே…?”  என  ஒரு  மார்க்கமாக  சிரிக்க..    அவனிடத்திலிருந்து  விடுபட  முயன்றுக்கொண்டிருந்தாள்.  அவளால்  முடியவில்லை  என்றதும்.. 
      ‘எனக்கு  பசிக்குது.   வாங்க  போய்  சாப்பிடலாம்..”  என தப்பிக்க   எண்ணி  புத்திசாலியாய்   கேட்டாள்.
      ‘ம்ம்..  பரவாயில்லையே..   பயம்  போய்  இப்ப   பசி  வந்திடுச்சா..?  ஆனாலும்..   கெட்டவன்  எப்படி  சாப்பிட  கூட்டிட்டுப்  போவான்…?”  என அவள்   கன்னத்தில்  சற்று  அழுத்தமாக  தனது  அடுத்த  முத்திரையப்  பதித்தான்.
       அவனின்  வலிய  மீசை..  அவளின்  பட்டு கன்னத்தை  பதம்பார்க்க..
       ‘சீய்..” என  அறுவருப்பாக   முகம்  சுழித்தாள்.
      ‘ஆமாம்… ஆமாம்..  கெட்டவன் முத்தம்  கொடுத்த  இப்படித்தான்  சொல்லனும்..  ஆனாலும்..   இந்த  வாய்க்கு  வேலையில்லாமல்  இருக்கறதுனாலதான..   சீன்னு  சொல்லுது..? அத  லாக்  பண்ணிட்டா.. ”  என்று   அவள்  உதட்டோடு  தன்  உதட்டை  உரச..  மீண்டும்  அவளின்  வாசனை  அவனை  கிறங்கடிக்க..  ஒரு  நிமிடம்  தன்  கண்களை  மெய்  மறந்து  மூடினான்.   சில  நொடிகளிலேயே  அவள்  நிலையற்று  அவன் கைகளில்  இருந்து சரியத்துவங்கினாள்.   அவளின்  மாற்றம்   உணர்ந்து   சிவமுகிலன்   கண்திறந்து   பார்க்க..  அதற்குள்   அவள்  மயக்கநிலைக்கு சென்றிருந்தாள்.

Advertisement