Advertisement

                                 அத்தியாயம்–3
     வீட்டிற்கு  வந்தவுடன்.. ‘அக்கா.. எனக்கு ரொம்ப பசிக்குது..” என்றாள்  சோர்வாக.
    ‘வா. சாப்பிடலாம்…” என  ஆனந்தி  பரிமாற.. அனைவரும்  சாப்பிட்டு  முடித்ததும்..
     ‘இன்னைக்கு  ஏன்ப்பா  ஆபீஸ்  போகல..? உடம்பேது  சரியில்லையா..?” என்றாள் அபர்ணா.
     ‘அது ஒன்னுமில்லைடா.. நான் வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கிறேன்.” என்றார்  நீலகண்டன்.
    இருவரும்  அதிர்ந்தாலும்..  முதலில் ஆனந்திதான் ’ஏன்ப்பா..?” என்றாள்.
   ‘இல்லமா…  நமக்கு தேவையான பணம் இருக்கு.. நாம மூனுபேரும் ஆபிஸ்போனதும்..   அம்மா லோன்லியா  பீல் பண்றா.. அதனாலதான்.”  என்றார்.
      ஆனந்திதான்..  ‘இல்லைப்பா  அதுக்கு பதிலா ஒரு மூனு மாசத்துக்கு  மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணலாமேப்பா..?  அதுக்குள்ள   அம்மாக்கு  எல்லாம்  சரியாயிடும்.” என்றாள்.
    ‘ஏன்மா   நான்  ரெஸ்ட்  எடுக்கக்  கூடாதா..?”  என்றார்  கிண்டலாக.
     ‘அச்சோ..   ஏன்ப்பா இப்படி பேசிறிங்க..? நான் அத நினைச்சி சொல்லலை.. அம்மா அதிகமா ரெஸ்ட்லதான் இருப்பாங்க.. அப்புறம் உங்களுக்கு தான் போரடிக்கும்.. அதுவுமில்லாம  நீங்க அம்மாகூட  இருந்து..  உங்க  உடம்பையும்  ரொம்ப ஸ்பாயில்  பண்ணிக்குவிங்க..”  என  கலங்கினாள்.
    ‘நீ  பீல் பண்ணாதடா  பேபி.   நான் முடிவு பண்ணிட்டேன்.  நான் தான் சந்ராவைப் பார்த்துப்பேன்.  இது எனக்கு கிடைச்சிருக்கிற  பொண்னான  வாய்ப்பு.  நான் உன் அம்மாவை  கல்யாணம் பண்னும்போது..  வெறும் படிப்பு மட்டும் தான் என்கிட்ட இருந்த சொத்து.
     என்னோட சின்ன வயசிலயே  என்  அப்பா இறந்திட்டாரு..   உங்களுக்கு தெரியும் தானே..?   நான்  காலேஜ்க்கு போக ஆரம்பிச்சதும்..   எங்கம்மாக்கு  உடம்புக்கு  முடியாம  போய்டுச்சி..    வைத்தியத்திற்க்கு கூட  பணம் இல்லாம  எங்கம்மா  இறந்திட்டாங்க.   
       நான்  வேலைக்கு  போன  கொஞ்சநாள்லயே    என் பாட்டியும் போய் சேர்ந்துட்டாங்க.  ரொம்ப தனிமையாய் உணர்ந்தேன்..  அப்பதான் உங்க அம்மாவைப் பார்த்தேன்..   எங்கப்பார்த்தாலும்   என்னை  விடாம..   பார்த்துக்கிட்டே  இருப்பா.”
    ‘நான்   வேலைக்கு போற டைம்  தெரிஞ்சிகிட்டு..  ஒருநாள்  பஸ் ஸடாப்ல வந்து நின்னா..   அப்படியே  ஒரு பத்து நாள் போனுச்சி..  என் ஆபிஸ்ல வேலைப்  பார்க்கிற  ஒருத்தர்   என்னை  கிண்டல் பண்ணினார். உங்கம்மாவோட பேர்கூட  எனக்கு  அப்போ  தெரியாது..
     அன்னைக்கு  ஈவினிங்கே  நான் உங்கம்மாவைப் பார்த்து பேசினேன்.    பாருங்க உங்களை எல்லோரும் தப்பா பேசறாங்க..   நீங்க எதுக்காக இங்க வந்து   நிக்கிறிங்கன்னு  எனக்கு தெரியாது.  ஆனா..  என்னால  உங்க பேரு கெட கூடாதுன்னுதான்   சொல்றேன்னேன்..   அதுக்கு  உங்கம்மா..   நீங்க காலேஜ் படிச்சிட்டு   இருக்கும்போதே  உங்களை எனக்கு பிடிக்கும்..  உங்கம்மா இறந்ததுக்கு அப்புறம்  நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா..  என்னைக் கல்யாணம் பண்ணிக்கறிங்களான்னு  கொஞ்சம்  கூட    தயங்காம தெளிவா   கேட்டா.
         அதுக்கப்புறமும்  அவங்க  வீட்ல  போய்  சொல்லி  விட்டுட்டு  வந்திடலாம்னு..  உங்க வீடு எங்க இருக்குன்னு  கேட்டு..  உங்கம்மாவோடவே  அங்க  போனேன்.. அங்க போய்  நான்  நின்னவுடனே   பெரிய  பிரச்சனையாயிடுச்சு.
      அப்புறம் தான் தெரிஞ்சது  என்கிட்ட சொல்லறதுக்கு முன்னாடியே என்னைப் பத்தி  அவங்க  வீட்ல  சொல்லயிருக்கான்னு.   உங்கம்மாவோட  அண்ணன்  பயங்கரமா கத்தினார்.   கொஞ்ச நேரத்தில  ஊரே  கூடிடுச்சி..
      ஆனா  உங்கம்மா  எதுக்குமே  பயந்துக்கல..  அத்தனை  பேர்  முன்னாடியும்..   இப்போ  நீங்க  என்னை  இங்கயே   விட்டுட்டு போனா  அப்புறம்  என்னை  எங்கையும்  விடமாட்டாங்க.   நான்   உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு   உறுதியா  சொன்னா..  
     உங்கம்மா  என்மேல  வச்சது  காதலா..  பரிதாபமான்னு  கூட  அப்போ எனக்கு தெரியாது..  ஆனா  அந்தநேரம்  நான்  அவளை  விட்டுட்டு  வந்திட்டா..  கண்டிப்பா  அவ  உயிரோட இருக்கமாட்டான்னு  மட்டும்  எனக்கு  உறுதியா தெரிஞ்சது..  அதுக்கப்புறம்  நான்  வேற   எதையும்   யோசிக்கல..    சரி வான்னு கூட்டிட்டு வந்திட்டேன்.
     உங்கம்மா  அப்ப  ரொம்ப  சின்னப்  பொண்ணு. அதனால  கூட்டிட்டு வந்தும்  கூட  உடனே  உங்க  அம்மாவை  கல்யாணம்  பண்ணிக்கனும்னு  எனக்கு  தோணலை.  
     உங்கம்மாகிட்ட.. நான்  உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.  ஆனா அதுக்கு நீ ஒன்னு  பண்ணனும்னு  கேட்டேன்.  நீங்க என்ன சொன்னாலும் செய்யறன்னு சொன்னா.
    நீ  கண்டிப்பாக  உன் படிப்பை கண்டினியூ பண்ணனும்னேன். அதுவும் ஹாஸ்டல்ல இருந்துன்னு சொன்னேன்.  உடனே  உங்கள யார் பாத்துக்குவாங்கன்னு  கேட்டா..? அதை   நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் உங்கம்மா ஒரு டிகிரி வாங்கினவுடனே நான் வந்திடறேன்னு சொன்னா..  நான்  எம்.எஸ்.சி. படிக்க சொன்னேன். கோபத்திலேயே  படிக்க போனா..
        எம். எஸ் சி.யும்   படிச்சதுக்கு  அப்புறம் கல்யாணம் பண்ணனும்னு  முடிவு பண்ணினேன்.  கல்யாணத்துக்கப்புறம்  ஒரு வருசம் வேலைக்கு போனா.   அதுக்கப்புறம்   நீ உங்கம்மா வயித்தில வந்திட்ட..” என்றார்  ஆனந்தியைப்  பார்த்து.
    அப்புறம்   உங்கம்மாகிட்ட  கண்டிப்பாக வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டேன்.   இப்ப வரைக்கும் என் பேச்சை  என்னைக்குமே அவ மீறனுதில்லை.  உங்க  வாழ்க்கைக்கு   தேவையானதை சம்பாரிச்சிட்டன்னு   நினைக்கிறேன்.   இப்ப அவளுக்காக நான் வாழலாம்னு நினைக்கிறேன்..”  என்றார்.
    அபர்ணா  மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.  ஆனால்   ஆனந்திதான்..   ‘அம்மா வீட்ல இருந்து அதுக்கப்புறம் யாரும் அம்மாவைத் தேடி  ஒருமுறை  கூட  வரலையாப்பா..?”  என்றாள்  ஏக்கத்தோடு.
    மகளிடம்  மனக்கசப்பை  பகிர  விரும்பாதவராய்.. ‘அது  இன்னொரு நாளைக்கு பேசலாம்மா.. இப்பவே  டைம் பதினொன்னு ஆயிடுச்சி… போய்  படுங்க..  என்னைப் பத்தி  ஒன்னுமில்லை..  நான் இனி  ப்ரீ  தான்.  நீங்க   ரெண்டு  பேரும்   நாளைக்கு  வேலைக்கு போகனும் இல்ல..?” என்றார்  கரிசனையாக.  இருவரும்  எழவும்..
   ‘ஏன்  அபர்ணா நீ  ஒன்னுமே  பேசலை?” என்றார்.
   ‘இல்லப்பா.. அம்மா ரொம்ப லக்கிப்பா.” என்றாள்  பெருமையாக.. அமைதியாக சிரித்த  நீலகண்டன்..  ‘போய் படுங்கமா..” என  சொல்லி   முன்கதவை  பூட்டி..  தனதறைக்குள்  சென்றதும்..
   ‘ஆனந்தி…  ஒரு நிமிஷம்..” என்றாள் அபர்ணா.
   ஆனந்தி பார்க்கவும்..  ‘உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்..   உன் ரூம்க்கு  வரவா..?” என்றாள்.
   ‘என்னைப்பத்தின்னா சன்டே பேசிக்கலாம். வேற ஏதாவதுன்னா வா..” என்றாள்.
    ‘இல்ல என்னப்பத்திதான்  நான் வரேன்.” என்று அவளுடன் சென்றாள்.
    ‘ஆனந்தி..  நான்  வீட்டுக்கு  வரதுக்கு  இன்னைக்கு லேட் ஆயிடுச்சில்ல..?    அதனால..   இன்னைக்கு எங்க எம்.டி தான் என்னை டிராப்   பண்ணார்..” என்றாள்  தயக்கத்தோடு.
    ‘என்ன..?” என்று அதிர்ந்து பார்த்தாள்.  ‘நீ ஏன் இத அப்பாகிட்ட சொல்லலை..?  எட்டு மணியெல்லாம் ஒரு லேட் டைமா உனக்கு? நீ வேணாம்னு  கான்பிடன்ட்டா சொல்லியிருக்கலாமில்ல..? ஏற்கனவே இங்க எனக்கு வேற  ஒருத்தன் டார்ச்சர் குடுக்கறான்..  இதுல நீ வேற ஏதாவது பிரச்சனை பண்ணிடாத..”  என  ஆனந்தி  தவிக்க.. இப்போது அபர்ணா அதிர்ந்தாள்.
   ‘சரி சரி .. இனிமேல் இதுமாதிரி வராம பார்த்துக்க என்ன..?” என்றாள் ஆனந்தி.
   ‘என்ன..  ஒருத்தன்  டார்ச்சர்  குடுக்கிறானா..? உனக்கு யார் டார்ச்சர் குடுக்கறாங்க..?  இது எத்தன நாள் நடக்குது…? நீ ஏன் யார்க்கிட்டையும் இதபத்தி பேசலை..?” என  படபடத்தாள்.
    ‘நான்தான் சொன்னேன்ல என்னப்பத்தி பேசறதுனா சன்டே பேசலாம்னு..   நீ   கேட்கலன்னாலும்   நானே இதபத்தி சன்டே பேசலாம்னு  தான்  இருந்தேன்.   அதுசரி..   நீ எப்படி உங்க எம்.டி கூட கார்ல வந்தியா..? இல்ல பைக்கா..?”  என்றாள்.
    ‘கார்லதான்‚.” என்றாள்.
    நிம்மதி  பெருமூச்சிழுத்தவள்… ‘எப்படியும்  அவர்க்கு  நம்ம  வீட்டுக்கு  வழி சொல்லவாவது  நீ  அவர்கிட்ட  பேசியிருக்கனும்ல?..  அவர்  யார்கிட்டையும்   சரியா பேசமாட்டார்னு சொன்ன..?” என்றாள்.
     பிறகுதான் அவளுக்கு நினைவே வந்தது..   ஆமா நாம வழியே சொல்லலை..  அவரும்  என்கிட்ட  எதுவும் கேட்கல..  அப்புறம் எப்படி அவருக்கு நம்ம வீட்டு அட்ரஸ்  தெரியும்..?   அதுவும்   இங்க இறங்கறயா?  இல்ல உன் வீட்ல டிராப் பண்ணவான்னு வேற கேட்டாரே..? என்று தீவிரமாக யோசித்தாள்.
    ‘என்ன பேச்சைக் காணும்..?” என்றாள்.
    ‘ஆமாக்கா என்கிட்ட எதுவுமே அவர் கேட்கல..   இப்பதான் நியாபகம் வருது. அவர் கரெக்டா நம்ம பக்கத்து ஸ்டீரீட்ல காரை நிறுத்தி.. இங்க இறங்கறியா? இல்ல உன் வீட்ல இறக்கிவிடவான்னு வேற கேட்டார்க்கா..” என்றாள்.
    ‘இதுதான் டேஞ்சர்..  இப்படி மறுபடியும் வராம பார்த்துக்கோ..  யாரையும் நாம எடுத்தவுடனே தப்பாவும் நினைக்கக்கூடாது..  அதுக்காக ரொம்பவும் நம்பவும் கூடாது.”  என்று  அவள் முகத்தையே பார்க்கவும்..
   ‘சரிக்கா கண்டிப்பா நான் பார்த்துக்கறேன்.” என்றாள்.
   ‘ஓ.கே தூங்கலாமா..? வேற ஒன்னும் இல்லையே?”
   ‘இல்லைக்கா… குட்நைட்.”  என  அவளறைக்கு  கிளம்பினான்.
                                    
     காலையில் வழக்கம்போல ஆனந்தி  எழுந்தவுடன்.. குளித்து…  வாசல் தெளித்து…  ப10ஜையை முடித்து..  கடைசியாக   சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.     
      தன்  அப்பாவைப்  பார்த்ததும்..  ‘அப்பா.. நான் சமையலை முடிச்சிட்டேன்..  அம்மாவை  குளிக்க வைக்கப் போறேன்..”  என்றாள்.
   ‘கொஞ்சம்   இரும்மா.. நீ  அம்மாக்கு குடுப்பியே  ஒரு ஸ்பெசல்  டீ… அத  ரெடி பண்னுமா.”  என்றார்.
    ’அம்மா குளிச்சிட்டுதான்ப்பா  டீ குடிப்பாங்க..  டீ  அதுக்குள்ள ஆறிடும்.  நான் அம்மாவை   குளிக்க  வச்சிட்டு வந்திடறேன்..” என்றாள்.
      சிரித்த  நீலகண்டன்.. ‘இல்லைம்மா உங்கம்மா குளிச்சிட்டா..  நான்தான் ஹெல்ப்பண்னேன்..” என்றார்.
    அவள் அதிசயித்து பார்த்தாள். ‘ஆமாம்மா.. நான் தான் நேத்தே  சொன்னேனே..   இனிமே நான் தான் அவளைப் பார்த்துப்பேன்னு..   அதுவுமில்லாம    இந்த சின்ன வாலு..    ஒரு வேலையும்  செய்யறது   இல்ல.. செய்யத்தெரியறதும் இல்ல..    நீதான் பாவம்..   நான்  சந்திராவைப்  பார்த்துக்கிட்டா  உனக்கும்  கொஞ்சம்  ஹெல்ப்பா  இருக்கும்..   எனக்கும்  சந்திராவைப்   பார்த்துக்கறது   மனநிறைவா  இருக்கு..” என்றார்.
     ‘சரிப்பா..  நான்போய்   அபர்ணாவை  எழுப்பறேன்..” என  சென்றாள்.
     ’ஏய்  அபர்ணா.. நீ இன்னைக்கு ஆபிஸ் போறையா…? இல்லையா…?” என கத்தி… ‘மணி  எட்டாகுது..   எத்தனை தடவ எழுப்பறது…?”  என  தன்  தங்கையை  உலுக்கினாள்.
   ‘அச்சோ… மணி எட்டா…?” என  எழுந்தாள்.
   ‘போ….  ரெடியாகி சாப்பிட வா..   எனக்கும் லேட் ஆச்சி..”   என  இருவரும்   அரிபரியாய்   ரெடியாகி..  அவளின் அம்மாவிடம்    விடைபெற்று..  தன்  தந்தையிடமும்..   ‘ஓ.கே. பாய்ப்பா…”  என    கிளம்பினர்.
                                       

Advertisement