Advertisement

     இரண்டு  நிமிசம்  தனியா  என்னோட  இருக்கமாட்டா..  ஆனா  மூஞ்சிய தூக்கிவச்சிக்க   மட்டும்  நல்லா  கத்துவச்சிருக்கா.. ஆள்மயக்கி.. என  மனதினுள்  கடிந்தாலும்..
       மனைவியின்  சோர்ந்த  முகம் வழக்கம்போல்  மனதை  வருத்த..  சாப்பிட்டதும்  ஆனந்தியின்  அறைக்குள்  சென்றவன்..  பத்துநிமிட  இடைவெளிக்குப் பிறகு..
      ‘ஆனந்தி..” என்றழைக்க..   இரண்டுமாதமாக இரவின்  தனிமையிலும் தன்னிடம்  பேசாத  கணவன்..   பகலில்  இன்று  உரக்க அழைத்ததும்..   இப்போ  யாரோட  கம்பேர்செய்து  பேசப்போறானோ என்ற    பதட்டத்தோடே  உள்ளே  வரவும்..
      வந்தவளை  வன்மையாக  அணைத்து..  அணைப்போடே  கதவைத்தாழிட..   வெற்றியிடம்  சற்றும்  இதனை  எதிர்பார்க்காத  ஆனந்தி  ஒருநிமிடம்  செய்வதறியாது திகைக்க..   அவளின்  ஆச்சர்யமடைந்த  கண்கள்  வெற்றிக்கு  மேலும்  உற்சாகமூட்ட..   ஆனந்தியின்  கழுத்தில்  அழுத்தமாய்  தன்  முகத்தை  பதிக்க..  பகலில்  இதுபோல்  பழகிராத  ஆனந்தியின்  மனம்  தாறுமாறாய்  தடதடக்க..  ‘அத்தைமாமா  ரெடியாகி  ஹால்ல  இருக்காங்க..  ஊருக்கு  போகும்போது   உங்களை  வழியனுப்ப..  அப்பா  என்னை  கூப்பிடுவார்..  காயுவேற  என்னை  தேடுவா..” என படபடவென  பதட்டத்தோடு  சொன்னவள்..    கணவனிடமிருந்து  விலக  போராட..
     இரண்டுமாதமாக  கோபத்தில் தனித்திருந்தவனுக்கு..  மனைவியின்  மெல்லுடல்  தீண்டியதும்..  உடல்  தீயாய்  தகிக்க.. ‘ப்ச்..  நீ  என்னோட  இருக்கும்போது..  யாரும்  உன்னை  கூப்பிடமாட்டாங்க..” என்று   தாபத்தோடே  அதட்டி..  ஆனந்தியை  தூக்கி  கட்டிலில்  விட்டவன்  அவள்மேல்  படர.. 
      ‘இன்னைக்கு  இங்கயே  இருங்க..  நைட்  நீங்க  என்ன  சொன்னாலும்  கேக்குறேன்..   இப்போ  வேணாமே..   ஊருக்கு  போறதுக்காக  மாமா  உங்களை  வெளிய  எதிர்பார்த்திட்டிருக்காங்க..”  என்று  ஆனந்தி  அவனுக்கு  மறுக்க..
      இதுவரை  தனக்கு  மறுத்திராத  மனைவி..  இன்று  மறுக்கவும்  தாபம் கோபமாக மாற.. முரட்டுத்தனமாக  அவளின்  இதழை  தனதால்மூட..  வெற்றியின்  கைகள்  தன்போல்  அதன்  வேலையை  செய்ய..
      ஹாலில்.. ‘வெற்றி  எங்கமா..?” என்ற  சந்திரவாணனின்  கேள்விக்கு.. 
     ‘அண்ணன்  அண்ணியோட  ரூம்ல  இருக்கார்ப்பா..” என்ற  காயத்ரியின்  பதில்  ஆனந்தியின்  செவியைத்  தீண்ட.. 
      தன்  மொத்த  பலத்தையும்   திரட்டி  ஆனந்தி  வெற்றியை  உதற..   விலகியவன்..  தீயாய்  உறுத்துப்  பார்த்தான்  மனைவியை.. 
      கணவனின்  பார்வையில்  உடல் நடுங்கியவள்.. ‘இல்ல..  ஹா..ல்..ல..  மாமா..  உங்களை..  கூப்பிடறார்..” என்று  கெஞ்சலோடு  திணற.. 
      பொங்கி  எழுந்த  மோகம்  மொத்தமாய்  வடிந்திட..  தன்  கையினில்   இருந்த   சாரியை  அவள்  முகத்தில்  விட்டெறிந்தவன்..   விருட்டென  வெளியேறினான்.
      கணவனை  புறக்கணித்ததையும்  தாள முடியாமல்..  அவசரமாக  தன்  சிகையை  சரிசெய்து..  புடவை  உடுத்தி..  வெளியே  வந்து  பார்க்க..  இறுகிய  முகத்தோடு  தன்  மொபைலை  நோண்டிக்கொண்டிருந்தான்.
      ‘கிளம்பலாமாப்பா..?” என  மாலாகேட்க..  நாளைக்கு  வரேன்னு  சொல்லுவானா..  என்ற  ஆர்வத்தோடு  ஆனந்தி  வெற்றியையே  பார்த்திருக்க..
      ‘ம்ம்..  கிளம்பலாம்மா..” என்றவன்.. தன்  அத்தைமாமாவிடம்  இன்முகமாகவே  விடைபெற்று..  மனைவியை  மட்டும்  பார்வையிலும்  தொடமல்   கிளம்பினான்.                 
                                 —————————
     அபர்ணாவின்  திருமணம்  முடிந்த  பத்தாவது  நாளான  நேற்று..  நீலகண்டன்  தன்  குடியிருப்பை  தன்  சொந்த  ஊரான  கிருஷ்ணகிரிக்கு  மாற்றியிருந்தார்.
     நீண்ட வருடங்களுக்கு  பிறகு  தனது  பூர்வீக வீட்டினில்  வசிக்க  வரும்..   தன்  அத்தை  மாமாவிற்க்காக..  வெற்றியும்   தனது  மாமனார்  வீட்டிற்கு  வந்திருந்தான்.  பத்து  நாட்களாக  எத்தனை  முறை  அழைத்தும்  வெற்றி  ஆனந்தியின்  அழைப்பை  ஏற்கவில்லை.. 
      கையில்  தண்ணீரும்..   கண்களில்  நிறைந்த  காதலோடும்  ஆனந்தி  வெற்றியை  ஆவலோடு  பார்க்க..  நீலகண்டன்  அருகில்  இருப்பதால்..  இயல்பாக  அவளிடமிருந்து  தண்ணீர்  வாங்கினான். 
     ‘அத்தான்…” என்ற  அழைப்போடு  அபர்ணா  அறையில்  இருந்து  வெளிப்பட..  பின்னோடே  சிவமுகிலனும் வந்தான்.
     ‘ஹே..  எப்டி இருக்க அபர்ணா..” என  கேட்க.. 
     ‘சூப்பரா  இருக்கேன்த்தான்..” என்றாள் உற்சாகமாக. 
     ‘இந்த  சிவா..  நல்லவனா..? இல்ல கெட்டவனா..?” என   அபர்ணாவை  வம்பிளுக்க..   ‘எப்பவுமே  என்  அத்தான்தான்  ரொம்ப  நல்லவர்..  இந்த  சிவா  ரொம்ப  ரொம்ப  கெட்டவனாத்தான்  இருந்தான்..  ஆனா  இப்போ  நான்  நல்லவனா  மாத்திட்டேன்..” என  சொல்லி  வழக்கம்போல் நிற்காமல்  ஓடிவிட்டாள்.   பிறகு   சிவமுகிலனோடு  பேசிக்கொண்டிருந்தான்.
     ‘வெற்றி  முக்கியமான  ப்ராஜக்ட்  ஒர்க்  போய்ட்டிருக்கு..   நாங்க   நாளைக்கே கோயமுத்தூர்  போகனும்..  அங்கிள்  தப்பா  நினைப்பாரா..?” என்று   சிவா  கேட்க..
     ‘அப்படியெல்லாம் நினைக்கமாட்டாங்க  சிவா..  ஆனா  அம்மா  நாளைக்கு  உன்னையும்  அபர்ணாவையும்  விருந்துக்கு  அழைக்க இருக்காங்க..  என்ன  அர்ஜன்ட்  ஒர்க் இருந்தாலும்..  விருந்தை  முடிச்சிட்டு  கிளம்புங்க..” என்று  வெற்றி   அன்பு  கட்டளையிட.. 
     ‘விருந்துதான..?  ஜமாய்ச்சிடலாம்..” என்றான்  சந்தோசமாக.
     இரண்டுமாத  இடைவெளிக்குப்  பிறகு  அன்று  நெருங்கியவனை  மறுத்தது..  பத்து  நாட்களாகவே  ஆனந்தியை  வருத்திக்கொண்டிருக்க..   இன்று  கணவனோடு  தனித்திருக்கும் ஆசையில்..  ‘என்னை  வீட்லகொண்டுபோய்  விடுங்க..” என்று   வெற்றியிடம்   வந்து  நின்றாள்.
     ‘பேசிட்டிருக்கேன்ல..?” என்றான்  சற்று  உயர்த்திய  குரலில்.  எனக்காக  எதையும்  செய்யமாட்டா..  இவளுக்கு  டிரைவர்  வேலைபார்க்க  மட்டும்  நான்  தேவைப்படுறேனா..? என மனதில்  கடிந்தான்.
      சட்டென  சுணங்கிய ஆனந்தியின் முகம்பார்த்து.. ‘ஏன்  வெற்றி  கோபப்படுற..?” என சிவமுகிலன் பதற..
      சிவாவா முன்  இப்படி பேசிட்டோமே   என  வருந்தியவன்.. ‘இன்னும்  கொஞ்ச நேரத்தில..  அப்பாம்மா  இங்கதான் வரப்போறாங்க..  அவங்க  வந்ததும்  ஒன்னா  வீட்டுக்கு  போய்க்கலாம்..” என்றான்  சமாதானமாக.
      சரி  என்பதாய்  தலையசைத்து  கலங்கிய கண்களோடு உள்ளே  போனவள்..  அதன்பின்  வெளியே  வரவில்லை.  இரண்டுமணி  மணிநேரம்  கழித்து..  தன்  அத்தைமாமாவின்  பேச்சரவம்  கேட்டு  அறையிலிருந்து  வெளிவந்தாள்.
     ‘அண்ணி..”   என  காயத்ரி  ஆனந்தியை  கட்டிக்கொள்ள..
     ‘எப்டி இருக்க  காயு..?” என  விசாரித்து..  தன்  மாமனார்  மாமியாரிடமும்  நலம்  விசாரித்து..  ‘டீ  வச்சிட்டு வரேன்த்த..” என்றாள்.
     ‘இப்போதான  ஜாமானெல்லாம்  இறக்கியிருக்காங்க..  எது  எங்கயிருக்குன்னு  தேடி  சிரமப்பட்டு  டீ  வைக்க வேணாம்..  நீ  வா..  கொஞ்ச  நேரம்  பேசிட்டிருக்கலாம்..” என்று  மருமகளோடு  கதைபேச  ஆரம்பித்தார்  மாலா.
     சந்திரவாணன்.. ‘அங்கயிருக்க  வீட்டை  வாடகைக்கு  கேட்டாங்கன்னு  சொன்னிங்களே  மாப்ள..  விட்டுட்டிங்களா..?” என்றார் நீலகண்டனிடம்.
     ‘இல்லங்க..   மாசத்துக்கு  ஒருமுறையாவது  அபர்ணாவை  போய்  பார்த்துட்டு  வரமாதிரி  இருக்கும்..  தாலிபிரிச்சி  கோக்கிறது..  வளைகாப்புன்னு   விசேசம்  வச்சா..  நாம  போய்  தங்கறதுக்கு  தேவைப்படும்னு  வாடகைக்கு  விடலன்னு  சொல்லிட்டேன்..  நாமெல்லாம்  போனா வந்தா  தேவைப்படுற அளவுக்கு   ஜாமானும்..   துணிமணிகளும் வச்சிட்டுத்தான்   வந்திருக்கோம்..” என்றார்.
      சிறு  குழந்தைக்கு  போல்..  சந்திராவிற்கும்  பணிவிடை செய்துகொண்டு..   சாமான்களை  ஏற்றி இறக்க  அழைத்து  வந்திருக்கும்  பசங்களிடம்   வேலைவாங்கிகொண்டிருக்கும்   நீலகண்டன்  மீது  அளவுகடந்த  மதிப்பும்  பாசமும்  பொங்க.. 
     ‘அதுவும்  சரிதான்  மாப்ள..” என்று  வார்த்தைக்கு  வார்த்தை  மாப்பிள்ளை  போட்டார்  சந்திரவாணன்.
      மாலா  சந்திரா..   நீலகண்டன்  சந்திரவாணன்..  வெற்றி  சிவமுகிலன்..  என  அனைவரும்  ஜோடி  ஜோடியாய்  பேசிக்கொண்டிருக்க..  காயத்ரியிடம்  பேசிக்கொண்டிருந்த  அபர்ணா..  தனித்திருக்கும்  ஆனந்தியிடம்..
      ‘ஏன்  ஆனந்தி  ஒருமாதிரியிருக்க..?  உடம்பு  சரியில்லையா..?” என்றாள்.
      ‘டிராவல்  செய்தது  கொஞ்சம்  டையர்டா  இருக்கு  அபர்ணா..  நான் போய்  கொஞ்சநேரம்  படுக்கிறேன்..” என்று  உள்ளே  வந்து  அடைந்துகொண்டாள்.
      ஒரு மணிநேரம்  கழித்து..  வேலையிருப்பதாக  சொல்லி  வெற்றி கிளம்ப..
     ‘அபர்ணா  ஆனந்தியை  கூப்பிடு..  வெற்றிக்கு  சாப்பிட  கொடுக்கட்டும்..” என  சந்திரா  சொல்ல..
     ‘ஆனந்தி  தூங்கறாத்த..  டிராவல்  செய்தது  டையர்டா  இருக்கும்போல.. எழுப்பவேணாம்..”  என  சொல்லி  கிளம்பியிருந்தான்.
     மாலை  ஆறுமணிபோல்  தன்  அத்தைமாமாவோடு  வீட்டிற்கு  வந்தவள்..  வெற்றியின்  அறையில்  வெற்றிக்காக  காத்திருந்தாள்..    இரவு இரண்டு  மணிக்கு  வந்தான்  வெற்றிமாறன்.
     ‘சாப்பிட  கூட  வீட்டுக்கு  வரல..  எதாவது  சாப்டுறிங்களா..?” என்றாள் அக்கறையாக.
     பத்து  நாள்  முன்பு  ஆனந்தி  தன்னை  மறுத்ததை  வெற்றியால்  இன்றுவரை  தாங்கிகொள்ள  முடியாத  நிலையில்..  தூங்கியிருப்பாள்  என நினைத்து  வந்தவன்..  விழித்திருந்தவளை  உறுத்து  பார்த்து   பாத்ரூமினுள்  சென்றான்.
     இவள்  சமையலறை  சென்று..  சூடாக  பால் காய்ச்சி  எடுத்து வந்தவள்..  கட்டிலில்  அமர்ந்திருந்தவனிடம்  சிறு  தயக்கத்தோடே   நீட்டினாள்.
      இரவு  சாப்பிடாதிருந்தவனுக்கு  அந்தநேரம்  பால்  தேவையாய்  இருக்க..  வாங்கியவன்  குடிக்க  ஆரம்பிக்க..  அதில்  மகிழ்ச்சி  அடைந்தவள்..
      ‘ஒரு  மாசத்துக்கு  மெடிக்கல்  லீவ்  போடலாம்னு  இருக்கேன்..” என்றாள் மெல்ல.
      ‘அதை  எதுக்கு  என்கிட்ட  சொல்ற..?” என்றான்  கடுப்பாக.
       சிறு கோபம் எட்டிப்பார்த்தாலும்..   அதையும் தனக்குள்  புதைத்து.. ‘வேற  யார்கிட்ட  சொல்லட்டும்..?” என  உரிமையாய்  முனுமுனுக்க..
      அவளின்   உரிமைபேச்சில்  கோபம்  தலைக்கேற.. ஒரு  கையால்  அவளின்  கன்னத்தை  அழுந்த  பற்றியவன்..
     ‘எனக்காகவா  லீவ்  போடுற..?” என  வெறுப்போடு  கேட்டு..  அவளின்  கன்னம்  விடுத்து   படுத்தவன்..  சற்று  நேரத்தில்  கண்களையும்  மூடிக்கொள்ள.. சற்றுநேரம்  அவனையே  பார்த்திருந்த  ஆனந்தி.. தூங்குகிறானா..?  விழித்திருக்கானா என யோசித்தவள்..  தானாய்  அவனிடம்  நெருங்கிபடுத்தாள்.  வெற்றியிடம்  எந்த  அசைவும்  இல்லாமல் போகவே..  தன்கையை  அவனின்  நெஞ்சின்மீது  வைக்க..  அவனின் மூச்சுக்காற்றிலேயே  விழித்திருக்கிறான்  என  உணர்ந்தவள்..  அன்று  தாம்  மறுத்ததில்  இன்னும்  கோபம்  குறையவில்லை  எனப்புரிய..  
      இரண்டு மாசமா நைட்டெல்லாம்  ஜடம்மாதிரி இருந்திட்டு..  ஊருக்கு  கிளம்புற  நேரத்தில..  அதுவும்  பட்டபகல்ல..  நான்  என்ன  செய்ய..?  என வெற்றியின்  முகம்பார்த்து  மனதுக்குள் கேட்டவள்.. கணவனின் அருகாமை  ஆழ்ந்து  அனுபவித்து   மேலும்  நெருங்கிப்படுத்து..  தானும்  கண்மூடினாள்.

Advertisement