Advertisement

     உள்ளே  வந்ததும்  அலங்கார  அறைகண்டு  வியந்தபடி  கதவருகேயே  நின்று அறையை  நோட்டமிட்டிருந்தாள்  அபர்ணா.  அவளின்  செயலில்  சிரித்தபடியே   எழுந்து  வந்தவன்  கதவைத்தாளிட்டு..  பால் டம்ளரை  வாங்கி  டேபிளில்  வைத்து..   அவளின்  இடையினில்  கைவைத்து   தூக்கப் போக..
    ‘இல்ல..  நா.. நானே  வரேன்..”  என்று  கட்டில்  அருகில்  வந்து  நின்றாள். 
     ‘முதல்ல  உட்க்காரு  அபர்ணா..  எதுக்கு   இப்படி  நெர்வசா  இருக்க..?”  உங்க  வீட்ல  நான்  இப்படிதான்  இருந்தேனா..?“ என்று  உரிமையாய்  அதட்ட..
     அபர்ணா  உட்காரவும்..  ‘இவ்ளோ  பெரிய  கட்டில்  இருக்கு..  இப்படிதான்  உக்காருவியா..?  ஃப்ரீயா  இருடி..” என்று  அவள்  அருகில்  நெருக்கமாக  அமர்ந்தான்.
    ‘ஆனந்தி  பாலை  கொடுக்க  சொன்னா..” என்று  டேபிள்  மீதிருந்த  பால்  டம்ளரை  எடுக்கப்போனாள்.
    ‘இப்பவும் ஆனந்தி  புராணம்தானா..?  இன்னைக்கு  ஒரு  நாளாச்சம்  உன்னோட  ஆனந்திக்கு  லீவ்  குடுத்திட்டு..  நம்மளைப்  பத்தி  மட்டும்  பேசு…”  என  சின்னதாய்  கடிய..  சரி என்பதாய்  தலையாட்டினாள்.
    அலுவலகத்தில்  மண்டையை  உருட்டுவது  போலவே..  இங்கேயும்  தலையை  உருட்டியவளையே  ஆழ்ந்து  பார்த்திருந்தான். சற்று  நேரத்தில் அபர்ணா  நிமிர்ந்து  அவனை  பாhக்கவும்..  
    அவளின்  கன்னத்தை  வருடியவன்.. ‘இந்த  மூக்குத்தி  எப்ப போட்ட..? ஏன்  என்கிட்ட சொல்லலை..? உனக்கு  ரொம்ப  அழகாயிருக்கு..” என  அதனை  வருட..
     ‘ப்ளீஸ்  அங்க  தொடாதிங்க..  ரொம்ப  வலிக்குது..  இதனாலதான்  காய்ச்சல்  வந்திருச்சின்னு  டாக்டர் அங்கிள்..  இல்லயில்ல  டாக்டர் மாமா..  ஆனந்திகிட்ட  சொன்னாராம்..” என  முகத்தை  சுருக்கி சொல்ல..
     ‘பார்ரா..  அங்கிள்  எப்ப  மாமாவானாரு..?” என்றான் வியப்போடு.
     ‘ஆனந்திதான்  உங்க  அப்பாம்மாவை  அத்தை  மாமான்னு  கூப்பிட  சொன்னா..”  என்று  சொல்ல..  கோபமாக  முறைத்தான்.  அவன்  கோபம்  உணர்ந்தவள்..
     ‘எனக்கும்  அப்படி  கூப்பிட  பிடிச்சிருக்கு.. “ என்றாள் தாமதமின்றி.
    வசீகரப் புன்னகை புரிந்தவன்.. ‘காய்ச்சல்  சரியாயிடுச்சா..?” என கேட்டபடியே  அவளின்  நெற்றியைத்  தொட்டுப்பார்த் தான்.
     சிவமுகிலன்  தொட்டதும்   தலைகுனிந்தவள்..    ‘ம்..  சரியாயிடுச்சி…” என  முனகி  தலைகுனிந்தாள்.
     ‘இப்ப…  எனக்குத்தான்  உன்னைப்  பார்த்தா  பயமா  இருக்கு.”   என்றான்  பயந்த  குரலிலேயே..
     ஏன்  என்பதுபோல்  கேள்வியாய்  கணவனைப் பார்க்க..
     ‘இல்ல..  அன்னைக்கு  நான்  முத்தம்  குடுத்ததையே   எல்லார்கிட்டையும்  சொல்லி..  என்  மானத்தை  வாங்கிட்ட..   இன்னைக்கு   நமக்கான  ஸ்பெசல்  டே  வேற..   இப்ப  உன்னை  நான்  எதாவது   செய்து..  அப்டியே   என்னென்னவோ  செய்தேன்னு வை..    நீ  அதையும்  அப்படியே  போய்  உங்கக்காகிட்ட  சொல்லிட்டினா..?”  என்றான்  குறும்புப்  புன்னகையோடு.
     வெக்கத்தில் எப்பவும்போல்  அவன்  மடிமீது  படுத்துக்கொண்டாள். 
    ‘என்ன  இது..  நான்  முத்தம் கொடுத்தாதான  இப்படி  பண்ணுவா…?  நான்தான்  இன்னும்   எதுவுமே…” என்று  ஆரம்பித்தவனின்  தொடையைக்  கடித்து  வைக்க.. 
      ‘ஏய்..  முத்தம்  கொடுக்கும்  முன்னமே  எதுக்குடி  கடிக்கிற..?”  என்று  கேட்டுக்கொண்டே..  அவளை  நிமிர்த்தி  கட்டிலில்  படுக்கவைக்க..  முகத்தை  தன்  கைகளால்  மூடிக்கொண்டாள்.  அவள்  கைகளை  விலக்கி  ஒரு  புது  மயக்கத்தோடு  அவளைப்  பார்த்தான்.  அவன்  பார்வையை  எதிர்கொள்ள  முடியாமல்  அபர்ணா  மீண்டும்  கண்களை  மூடிக்கொள்ள..   மூக்குத்தியின்  மேல்  மென்மையாக  தன் இதழைப் பதித்து..
      ‘வலிக்குதா…?”  என்றான்  மென்மையாக.
       இல்லை  என்பதாய்  தலையசைக்க..  அபர்ணாவின்  கண்களில்  இதழ்பதித்து கன்னத்தோடு  தன்  கன்னம்  உரசிவயன்..  ‘லைட்  ஆஃப்  பண்ணட்டுமா..?” என்று  ஏகத்திற்கும்  இளகிய  குரலில்..   மனைவியிடத்தில்   அனுமதி  கேட்டான்..
      கண்களை  மூடிய நிலையிலேயே..  அவன்  மார்பில்  முகம் புதைத்து   ‘ம்ம்..”  என்ற  ஒற்றை  வார்த்தையில் சமத்தாய்  தன் சம்மதம்  தெரிவிக்க..   அழகான  தாம்பத்யம்  அங்கே  ஆரம்பமானது.
       காலை  எட்டு  மணியாகியும்  அபர்ணா  எழவில்லை. ஆனந்தி   இதோடு  நான்காவது  முறையாக  அபர்ணாவிற்க்கு  அழைத்துவிட்டாள்.  நான்காவது  முறைதான் தூக்க கலக்கத்தோடு..  ‘ஹலோ..”  என்றாள் சோர்வோடு.
      ‘சீக்கிரம்  எழனும்னு  எத்தனை  முறை  சொன்னேன்..  இன்னும்  எழுந்திருக்கவேயில்லையா…? முட்டாள்.. முட்டாள்…” என்று  ஆனந்தி  திட்டிக்கொண்டே  இருக்க..
      ‘ஏன்  ஆனந்தி  இப்படி  திட்ற..?  நான்  சிவாகிட்ட ஆறு மணிக்கு  எழுப்ப   சொல்லிட்டுதான் தூங்கினேன்..  அவன்  எழுப்பலைன்னா  நான்  என்ன  பண்றது.?” என  பாவம்போல்  கோபிக்க..
       ‘சரி..  முதல்ல  குளிச்சிட்டு..  கீழ  உன்  அத்தையைப்   போய்  பாரு.  அவங்க  எதாவது  சொன்னாலும்..  நீ  மறுபேச்சி  பேசாத.. நான்  அப்புறம்  பேசறேன்..”  என  கட்செய்ய..  சோம்பலாக  எழுந்து  குளிக்கப்போனாள்.
        சிவமுகிலன்  அப்பொழுதுதான்  ஜாகிங்  முடித்து  வீட்டிற்க்குள் வந்தான். ‘ வாப்பா..  இன்னைக்கும்  ஜாகிங்  போனியா…?” என்றார்  லலிதா.
       சிரித்துக்கொண்டே.. ‘ஏம்மா..  இன்னைக்கு  ஜாகிங்  போகக்கூடாதா..?”  என கேட்டு..  ‘அந்த  லூசு  இன்னும்  கீழ  வரலையா…?” என  கேட்டுக்கொண்டே  தனது  உடற்பயிற்ச்சிகளை  ஆரம்பித்தான்..  ஒரு  மணிநேர  உடற்பயிற்ச்சியை  சிவா  முடித்திருக்க..  அப்பொழுதுதான்  குளித்து முடித்து..  சுடிதார்  அணிந்து   கீழே  வந்தவள்..
       ‘அத்தை..   எனக்கு  இந்த  சுடிதார்.. ஓ.கே. வா..?  இல்லை  இன்னைக்கும்  நான்  சாரிதான்  கட்டனுமா…?” என்று முகம்சுருக்கி..  லலிதாவை  கெஞ்சலாக  பார்த்தாள்.
     ‘உனக்கு  எது  பிடிக்குதோ.. அதைப்போட்டுக்கோம்மா…“ என்றார்.
     ‘காலைல  சீக்கிரம்  எழுந்திரிக்கனும்னு ஆனந்தி  சொன்னா..  சாரி  அத்தை  இனிமே  சீக்கிரம்  எழுந்துக்கிறேன்..”   என மன்னிப்பு  வேண்ட..
     ‘இதுக்கெதுக்கு சாரி..? நானே  ஏழு மணிக்கு  மேலதான்  எழுந்திரிப்பேன்..   வா  சாமி  கும்பிடலாம்..” என்றார் கனிவோடு.
     ‘இங்க  நான்  ஒருத்தன்  இருக்கேன்..” என்றான்  சிவமுகிலன்.
      ‘போங்க..  உங்களாலதான்  நான்  லேட்டா  எழுந்தேன்..”  என்று  அபர்ணா  கோபிக்க..  முத்துகிருஷ்ணன்  சிரித்துக்கொண்டே  அந்தப்புறம்  செல்ல..   லலிதாவும்  சிரித்தபடியே  தலைகுனிந்தார். சிவமுகிலன்  தன்கையால்  தன் தலைமீது   அடித்துக்கொண்டு.. 
      ‘உன்னையெல்லாம்  திருத்தவே  முடியாது..” என  முனுமுனுத்து..   ‘நான்  குளிச்சிட்டு  வந்ததும்..  விருந்துக்கு  போறோம்..  விருந்து  முடிஞ்சதும்..   மதியம்  ரெண்டுபேரும் ஆபிஸ்க்கு  போகனும்..  ஒழுங்கா  ரெடியாய்டு..” என  கட்டளையிட்டு..   ‘உன்னை  தனியா  விட்டா  எனக்கு  தொல்லைதான்..” என  முனுமுனுத்தவாறே   தனதறைக்கு  போக..  படியேறும்  வரை  அமைதியாக இருந்தவள்..  அறையின்  கதவை  திறக்கும்போது..
      ‘நான்  பத்துநாள்  கல்யாணத்திற்க்கு  லீவ்  போட்டிருக்கேன்..  எங்கயும்   உங்க  கூட வரமாட்டேன்..”  என்று  கீழிருந்தே  கத்தினாள். 
      மனைவியை  முறைத்து  உள்ளே  சென்றவன்..  ரெடியாகி   கீழே  வந்து.. 
      ‘என்ன  சொன்ன..?  என்கூட  வரமாட்டியா..?  அப்பசரி..  உங்க  அம்மாவீட்டுக்குத்தான்  விருந்துக்கு  போறோம்.    நீ  மட்டும்  இங்கையே   இரு..” என்று  முறைக்க..
      ‘இல்லையில்ல..  நானும்தான்  வருவேன்..”என்று  லலிதாவின்  கையயை  பிடித்துக்கொண்டாள்  சிறுபிள்ளையாக. லலிதாவிற்கு  அதுவே  பெரிய  சந்தோசத்தை  கொடுக்க..  தன்  மருமகளை  தன்னுள்  சேர்த்துக்கொண்டார்  லலிதா.
      ‘அம்மா…  அவளுக்கு  கார்  டோர்  ஓபன்  பண்ணத்தெரியாது.  அதுக்காகத்தான்  உங்க  கையை  பிடிச்சிக்கிட்டா.  இதுக்கெல்லாம்  நீங்க  மயங்கிடாதிங்க..” என்று  சிரிக்க..
      ‘என்  மருமகளுக்கு  என்ன  தெரியலைன்னாலும்..  நான்  சொல்லிக்கொடுப்பேன்..   நீ  உன்  வேலையைப்பாரு..”  என்றார் லலிதா.
      ‘வௌ வே..”  என்று  பழிப்புக்காட்டி மேலும்  லலிதாவோடு  ஒட்டிக்கொண்டாள்  அபர்ணா. 
       ‘அப்பா..  உங்கபொண்டாட்டிக்கு  சொல்லிகொடுக்கவே  இன்னும்  பத்து  ஆள் வேணும்..  இதுல  அவங்க  என்  பொண்டாட்டிக்கு  சொல்லித்தராங்களாம்..  விளங்கினமாதிரிதான்..” என்றான்  வசீகர சிரிப்போடு.
       சிரிப்போடே  முத்துகிருஷ்ணன்  விருந்திற்கு  கிளம்ப..  காரிலும்  லலிதாவோடு  பின்னிருக்கையிலே  அமர்ந்துகொள்ள..  லலிதாவின்  முகத்தில்  அப்படியொரு  பெருமை  வந்திருந்தது. 
      நீலகண்டன்  வீட்டில்  அனைவரும்  விருந்தை  முடித்து..  பேசிக்கொண்டிருந்தனர்.  சிவாவிடம்..  ‘பரவாயில்லையே..  நம்ம  அபர்ணா  ஒரே  நாளில்  கொஞ்சம்  மெச்சூர்ட்டி  ஆனமாதிரி  இருக்கா..  இங்கவந்ததும்  ஆனந்தியைப்  போட்டெடுப்பான்னு  நெனச்சேன்..  ஆனந்தியை விட்டுட்டு  அவ மாமனார்  மாமியாரை  இந்த  கவனி  கவனிக்கிறா..‚” என்றான் வெற்றி.
       ‘அட  நீ  வேற   வெற்றி..  அவளும்   அவ மெச்சூரிட்டியும்..  காலைல  எட்டு  மணிக்கு  மேல எழுந்திரிச்சிட்டு..  எங்க  அம்மாப்பா  பக்கத்தில  இருக்கும்போதே…  உன்னாலதான்  லேட்டா  எழுந்திரிச்சேன்னு   சொல்லி  என் மானத்தை  வாங்கிட்டா..“ என்று   எரிச்சலோடு  தன்  தலையில்  கையை   வைத்தான் சிவமுகிலன்.
      வெற்றியால்  சிரிப்பை  அடக்கவே  முடியவில்லை.  சிவமுகிலன்  வெற்றியை  முறைக்க..  ‘ஓய்.. என்னை  ஏன்  முறைக்கிற..?” என  சிரிப்போடே  கேட்க..
      வெற்றியை  முறைக்க முயன்று  முடியாமல்  சிவமுகிலனும்  சிரிக்க.. இவர்கள்  இருவரும்  சிரித்துக் கொண்டிருந்ததைப்  பார்த்த     நீலகண்டனுக்கு  இப்பொழுதுதான்    தன்   வாழ்க்கை  முழுமையடைந்ததாக  உணர்ந்தார். 
      எந்த  பிரதிபலனும்  இல்லாமல்   அந்த  சின்ன வயதிலேயே  நீலகண்டன்  மீதான சந்திராவின் தூய்மையான  காதல்..   காதலியின்  காதலை  ஏற்றுக்கொண்டு..   தன்னை  நம்பி  வந்தவள்  என்றில்லாமல்..  சந்திராவிடம்  தன்னை  ஒப்புக்கொடுத்ததே..  தன்  வாழ்க்கைப்  பயணத்தை  இனிதாக்கியதாய்  தோன்ற..  மனைவியை  மைய்யலுடன்  பார்த்திருந்தார்  நீலகண்டன்.
       அபர்ணா  தங்களை  நோக்கிவரவும்..  சிவாவிடமிருந்து  விலகி  வந்தவன்..  ஆனந்தியின்  அருகே  தேங்கிநிற்க..  ‘அண்ணி..   அத்தைக்கும்  மாமாக்கும் இப்பவும்  லவ்சு  கொஞ்சம்  கூட  குறையல  போல…” என்று  காயத்ரி  நீலகண்டன்  சந்திராவை  மைய்யலுடன்  பார்த்திருப்பதை  பெருமையோடு  சுட்டிக்காட்ட..
        ‘அவ ஒன்னும்   உன்னைமாதிரி  இல்ல..  உங்கண்ணிக்கு  காதலைவிட..  பெத்தவங்கதான் ரொம்ப  முக்கியம்   காயு..” என்று  அழுத்தத்தோடு  சொல்லி..  
    அபர்ணா  சிவாவிடம்  பூரிப்போடு  சிரித்து  பேசிக்கொண்டிருந்ததையும்  ஆனந்தியிடம்  கண்களால்  காண்பித்து..   நில்லாமல்  அவ்விடம்  விட்டு  அகன்றான்.

Advertisement