Advertisement

                                 
       வெற்றிமாறன்  தனதறையில்  காத்திருக்க..  நிறைந்த  அலங்காரங்களோடும்..   கையில்  பால்டம்ளரோடும்..  மனதினில்  பயத்தோடும்..   அறைக்குள்  நுழைந்தாள்  ஆனந்தி.
     புதுப்பெண்ணிற்கான  கனவு..  ஆசை..  போன்ற  உணர்வுகள்  இல்லாத    ஆனந்தியின்  முகத்தினை..  துளைக்கும்   பார்வையோடு  பார்த்திருந்தான்  வெற்றிமாறன்.   வெற்றியின்  கோபமுகத்தில்  பயந்த  ஆனந்தியின்  கண்கள்  கலக்கம்  கொள்ள..   அவளின்  கலக்கத்தில்  மேலும்  கோபமுற்றவன்..
      ‘இங்கயும்  அழறதுக்குத்தான்  வந்தியா..?” என்றான் கடுப்பாக.
      சிறுமிபோல் இல்லையென   தலையசைத்து..  மெல்ல  வெற்றியின்  அருகில்  வந்து..   கையில்  இருந்த   பால்டம்ளரை  நீட்டினாள்.  ஆனந்தியை  கண்டுகொள்ளாமல்  கதவை  தாழிட்டு..  அறையின்  வெளிச்சம்  குறைத்து..
      ‘எனக்கு  பால்  பிடிக்காது..” என்று வெடுக்கென  வெற்றி  சொல்ல.. 
     அருகினில்  இருந்த  டேபிளில்  டம்ளரை  வைத்தவள்..  வெற்றியின்  கால்களில்  தொய்ந்துவிழ..   இதனை  சற்றும்  எதிர்பாராதவன்..
      ‘ப்ச்..  எழுந்திரு  ஆனந்தி..” என்று  கடிந்தாலும்..  மனைவி  தன் பாதங்களில்  பணிந்திருக்க..  அவனையறியாமலே அவனின்  குரல்  கனிவாகத்தான்  வெளிவந்தது.  வெற்றி  சொல்லியும்  ஆனந்;;;தி  எழாமல்  இருக்க..  வெற்றி  அவளின்  தோள்தொட்டு  தூக்க..  ஒட்டிக்கொண்டாள்  வெற்றியின்  மார்போடு.
        திருமணத்திற்க்காக  ஆனந்தி  பதினைந்து  நாட்களுக்கு   விடுமுறை  எடுத்திருக்கிறாள்  என்று  வெற்றிக்கு  தெரிந்ததும்..    அவளின்  கண்களில்  தனக்கான  காதலை  பார்க்கும்  வரை  தனது   மூச்சுக்காத்துகூட  அவளின்  மேல்  படவிடாமல்..  விடுமுறை  முடிந்ததும்  கோயமுத்தூருக்கே   அனுப்பி  வைப்பதுதான்   தனது  திட்டமாக  இருந்திருக்க..
       மனைவி  தன்மீது  சாய்ந்ததும்..   தனது   எண்ணங்கள்  அனைத்தும்  தவிடுபொடியாக..  இரண்டு வருட  காதல்  மோகமாக  மாற..  அவள்மீதான  தனிப்பட்ட  கோபங்கள்  குறையவில்லையென்றாலும்..  இளமைக்கான  உணர்வுகள்  தலைதூக்க.. ஆனந்தியை  விலக  மனமில்லாமல்  தன்  கைகளில்  ஏந்தியவன்..  பூச்சரங்களால்  அலங்கரிக்கப்பட்ட  கட்டிலில்  பூப்போல  படரவிட்டு..   அவ்வாறே   தானும்   படர்ந்தான்  ஆனந்தியின்  மேல். 
       மனைவி மீதான  கோபத்தை..   கூடலில்  காண்பிக்க முடியவில்லை  காதல் கணவனால்..     மனையாளுக்கு  சின்ன  அவஸ்த்தையும்  தந்திடாமல் தாபம்  தணிந்து விலகினான்.    வெற்றியின்  செய்கையால்..  தன்மேலுள்ள  கோபம்  போய்விட்டதென  எண்ணிய  ஆனந்தி..  போர்வைக்குள்  இருந்தபடியே.. 
     ‘நீங்க  சரியா  சாப்பிடவே இல்ல..  பழம் எதாவது  சாப்பிடுறிங்களா..?” என்றாள் சன்னக்குரலில்.
      ஆமாமா..  மத்ததெல்லாம்  வாரிவழங்கிட்டா..  சாப்பாடு மட்டும்தான்  இப்ப  குறைச்சலா  இருக்கு  என  நினைத்தவன்..  ஆனந்தியின்  சாரி  கட்டிலின் கீழே இருக்க.. ‘ஆமாம்  எனக்கு ரொம்ப  பசிக்குது..   இங்க  இருக்கிற  ஸ்வீட்ல  எதாவது  எடுத்துகொடு..” என்றான்  அவளை  வம்பிளுக்க   வேண்டியே..
      ‘நானா..  நான்  எப்படி..?” என்றாள்  திணறிய  குரலில்.
       ‘இப்ப  என்ன..?  டிரெஸ்சில்லாமலா  படுத்திருக்க..?  ஸ்கர்ட்டும்  பிளொசும்  போட்ருக்கதான..?  எழுந்து  எடுத்துகொடு..  நீ கொடுத்தா  சாப்பிடுவேன்..  இல்ல பசியோட  தூங்கறேன்..” என்று  சற்று  குரலுயர்த்தி  சொல்ல.. 
      பெட்சீட்டால்  தன்னை  சுருட்டிக்கொண்டு  எழுந்தவள்..  அருகில் இருக்கும்  இனிப்பில்  ஒன்றை  எடுத்துக்கொடுக்க..  அதனை  வாங்கியவன்..
     ஆள்மயக்கி..  எதுநடக்கக்  கூடாதுன்னு  நினைச்சமோ..  அதையே  நடக்க  வச்சிட்டா என  மனதில்  கடிந்து..  ஆழ்ந்த  பார்வையோடு  மனைவியை  பார்த்தபடியே  இனிப்பை  உண்டுமுடிக்க..  கணவனின்  பார்வையில்  இன்னும்  பசிக்கும்போல  என  நினைத்து..   ஒருகையால்  போர்வையை  பிடித்துக்கொண்டு..  மறுகையால்   ஒரு  பழத்தை  எடுத்து   நீட்ட..   அவள்  போர்த்தியிருந்த  போர்வை  அவளுக்கு  துரோகம்  செய்து  நழுவ..   அவளின்  அரைகுறை  ஆடையில் மொத்தமாய்  மயங்கியவன்.. அவள்  கொடுத்த  பழத்தை  மறுத்து..
     ‘ம்கூம்..  ஒரு  பிரேக்குக்கு..  ஒன்னுதான்..  இது  அடுத்த  பிரேக்குக்கு..” என  மீண்டும்   அவளின்  போர்வைக்குள்  நுழைந்தான்..    இம்முறை   தனது  தேடலுக்காக  தடைகளை  உரிமையோடும்  வேகத்தோடும்   அகற்ற..  இரண்டு  நாள்  சரிவர இல்லாத  தூக்கத்தோடு..  வெற்றியின்  மோகமும்  சேர்ந்து  படுத்த..  துவண்டுபோனாள் ஆனந்தி.
      நீண்ட  நேரம் கழித்து விலகியவன்..  சந்தோச மனநிலையிலிருக்க.. 
     ‘ஆனந்தி..  இங்க  இத்தனை  பழங்கள்  இனிப்பெல்லாம்  வச்சிருக்காங்களே..  இதுக்கெல்லாம்  சேர்த்து  எத்தனை  பிரேக்  ஆகும்..?” என   மைய்யலாக கேட்டு   குறும்போடு  பார்க்க..   அதிர்ச்சியில்  இயன்றவரை   விரிந்தது  ஆனந்தியின்  கண்கள்.
      வெக்கத்தோடு  பார்ப்பாள்  என  வெற்றி  எதிர்பார்க்க..  ஆனந்தியின்  அதிர்ந்த  முகம்   கோபத்தை  வரவழைக்க.. 
      ‘தூங்கு..” என்றான்  ஒட்டாத  குரலில்.
       நல்லாத்தான  இருந்தான்..  அதுக்குள்ள  என்னாச்சி  என  யோசிக்க.. ஒன்றும்  விளங்கவில்லை  ஆனந்திக்கு..  தான்  இருக்கும்  நிலையில்  மீண்டும்  உடலும்  முகமும்  சிவக்க..  வெற்றியை  காணமுடியாமல் திரும்பிப்படுத்து..   இவர்  தூங்கினதும்  எழுந்து  நைட்டி போட்டுக்கலாம்  என  நினைத்து  கண்மூடியவள்..  சில நிமிட  நேரத்திலேயே  உறங்கிட..   இத்தனை  பக்கத்தில இருக்கேன்..  பர்ஸ்ட்நைட்டும்  ஏதோ  கொஞச்ம்  ஆச்சு..   ஆனாலும்  என்மேல  பட்டுடாம   இருக்க..  எத்தன  விறப்பா  கையகால  அசைக்காம  தூங்கறா..  என  கடுப்போடே  படுத்துறங்கினான்.
        அதிகாலை..  வெற்றி  ஆழ்ந்த  உறக்கத்தில்  இருக்க..   தன்  பிறந்த  வீட்டின்  பழக்கத்தில்..   ஐந்து  மணிக்கெல்லாம்   குளித்து முடித்து  வாசலில்  கோலம்  போட  கோலமாவைத்  தேடிக்கொண்டிருந்தாள்  ஆனந்தி.
      ‘அண்ணி..  அதுக்குள்ள  எழுந்து  குளிச்சிட்டிங்களா..?”  என்று  ஆச்சர்யமாக கேட்டபடி  வந்தாள்  காயத்ரி. 
     ‘ம்ம்..” என சிரித்தவள்..  ‘கோலமாவு எங்கயிருக்கு..?” என்றாள்.
      கோலமாவை  எடுத்துகொடுத்தவள்..   ஆனந்திக்கு  உதவுவதை  மட்டுமே  வேலையாக  வைத்திருந்தாள். ஆனந்தியின் அழகிலும் அன்புபேச்சிலும்  ஈர்க்கப்பட்ட  காயத்ரி..  அபர்ணாவிற்கு மேலாக  ஆனந்தியின்  பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருந்தாள்.   
     ‘அண்ணி  உங்க  முடி  ரொம்ப  ஈரமா  இருக்கு..  நான்  சாம்பிராணி  காட்டவா..?”  என கேட்க..
     ‘வேண்டாம்  காயத்ரி.. நீ  போய்  இன்னும்   கொஞ்சநேரம்  தூங்கி  ரெஸ்ட் எடு..” என்று  இருவரும் பேசிக்கொண்டிருக்க..  மணிமாலாவும்  சந்திரவாணனும்   அறையிலிருந்து  வெளிவரவும்..   அவர்களைப்  பார்த்ததும்  வெட்கத்துடன்  தலைகுனிந்தபடி  பூஜையறைக்குள்  சென்றாள்.
      முதல்முறையாய்  மணப்பெண்ணாக  இவ்வீட்டினுள்  வாசம்  செய்ததிலிருந்தே..  ஆனந்திக்கு  ஏனோ   இது  புதுஇடம்  என்ற  எண்ணமே வரவில்லை..  எனவே  தன்வீட்டில்  போலவே   இயல்பாக  பூஜை முடித்தது.. 
      ‘டி போடவா  அத்தை..  மாமா  என்ன  குடிப்பாங்க..?”  என்றாள்.
      ‘மாமாக்கு  டி காபி  பழக்கம் இல்ல..  நம்ம  ரெண்டு பேருக்கு  மட்டும்  காபி  போட்டுட்டு   வா..”   என்றார்.
       மணி  ஏழானது.  வெற்றி   கண்விழித்ததும்  ஆனந்தியைத்தான்  தேடினான்.  ரூமில்  ஒரு  பூ கூட இல்லை..  மனைவியை   மனதில்  மெச்சி..  குளித்து  முடித்து  வெளியில்  வந்தான். 
      அங்கு  ஆனந்தி  காயத்திரியிடம்..  மெய்மறந்து  பேசிக்கொண்டிருந்தாள்.  அனைவரும்  அங்குதான்  இருந்தனர்.  அரக்குநிறத்தில்  சிறிய  பார்டர்வைத்த சாரியில்..  முடியை  விரித்து  உலற்றியபடியே  பேசிக்கொண்டிருந்தாள்.  அவளையே  சற்று  நேரம்   பார்த்துக்கொண்டிருந்தவன்..   பிறகு  சந்திராவிடம்..
    ‘டீ சாப்டிங்களாத்தை..?” என்றான்.
     வெற்றியின்  குரல்  கேட்டதும்..   காயத்ரி..  ‘வா நாம  உங்கண்ணனுக்கு  காபி  போடலாம்..”  என்று  அவன்  முகத்தைப்  பாராமல் சமையலறைக்குள்  சென்றவள்..  காயத்ரியிடம்  காபியைக்  கொடுத்தனுப்பி  மணிமாலாவிடம்  போய்  அமர்ந்துகொண்டாள்.
      காபியை  வாங்கி  பருகியவன்.. ‘என்ன  காயூ..?  உங்கண்ணிகூட   இம்பார்ட்டண்ட்   மீட்டிங்  போலயிருக்கு..?”
     ‘ஆமாம்..  இன்னும்  மீட்டிங்  முடியலை..  நான்  போய்  கன்டினியூவ்  பண்றேன்.” என்று  ஆனந்தியிடமே  மீண்டும்  வந்தாள்.   அப்பொழுதுதான்  எழுந்து  வந்த அபர்ணா   சிவமுகிலனைத்  தேடினாள்.  அவன்  இல்லையென்றவுடன் நிம்மதியாக  ஆனந்தியைக்  கட்டிக்கொண்டு..  ‘குட் மார்னிங்..” என்றாள். 
      ‘நல்லா  தூங்கினியா  அபர்ணா..?” என  கேட்க..
       ‘ம்ம்..  நம்ம  வீட்ல  தூங்கிறமாதிரியே  செம்மையா தூங்கினேன்  ஆனந்தி..” என ஆரம்பித்து..   ஆனந்தியை  கட்டிக்கொண்டே  திருமணத்தில் நடந்த  நிகழ்வுகளைப் பற்றி  ரசித்து  பேசிக்கொண்டிருந்தாள்..
       ‘இரு  உனக்கு   பிளாஸ்க்கில  டீ  இருக்கு..  நான்  எடுத்திட்டு  வரேன்..” என்று  ஆனந்தி  சொல்ல.. 
      ‘அப்படியே  எனக்கும்;  ஆனந்தி..”  என்ற  சிவமுகிலனின்  குரல்  கேட்டதும்..   ஆனந்தியை   விட்டு  சட்டென்று  விலகினாள்  அபர்ணா..  முகமும்  வாட்டம்  கொண்டது.   அபர்ணாவை  பார்த்திருந்த  வெற்றி..
     ‘அபர்ணா..  இங்க  வா..”  என்றான்.  சிவமுகிலனை  பார்த்தவாறே தயக்கத்துடன்  வெற்றியின்  பக்கத்தில்  வந்து  நின்றாள்.
     ‘இவ்ளோ  நேரம்  நல்லாதான  இருந்த..?  இப்ப  என்ன..?  நல்லா..  தூங்கினியா..?  உனக்கு  இங்க  கம்ஃபர்டபுளா  இருக்கா..?” என்று   அக்கறையோடு  விசாரிக்க..
    ‘ம்..”  என்றாள்  சன்னக்குரலில்.
    ’அப்புறம்  ஏன்  இவ்ளோ டல்லா  இருக்க…?”என்றான்.  மீண்டும்  சிவமுகிலனையே  பார்த்தாள்.
    ‘சிவா..  உன்னை  என்ன சொன்னான்..?”  எனும்போதே..  சிவமுகிலன்  அபர்ணாவை  கண்டிப்பான  பார்வை பார்த்து.. 
      ‘அபர்ணா..  ஆனந்திகிட்ட  போய்  எனக்கு  டீ  வாங்கி  வா..” என அனுப்பிய  சிவமுகிலன்..  
      ‘உன்கூட   ஆனந்தி  இருக்கும்போது   கொஞ்சம்   டிஸ்டர்ப்  பண்ணாதன்னுதான்  சொன்னேன்..” என்றான்  கனிவாக.
    ‘ப்ச்..  நீ  ஏன்  சிவா  அப்படி  சொன்ன..?   அவளே  புதுஇடத்தில  மிங்கிளாக  முடியாம  அன்னீசியா  இருக்கா..   நீவேற  இப்படி  சொல்லியிருக்க..   பாவம்  ரொம்ப  கில்ட்டியா  பீல்  பண்ணியிருப்பா..  அவ  எப்பவும்  போலவே  இருக்கட்டும்.  நைட்கூட  நீ   அவளை  வெளில  கூட்டிட்டு  போகலைன்னாலும்.. ஒன்பது  மணியானதும்  தானா  தூங்கியிருப்பா..  குழந்தை  மாதிரிடா அவ..  இப்ப  நம்ம  காயத்ரி  ஆனந்திகூட  இல்லையா..?  அதுமாதிரிதான்  அவளும்..” என்று  சிறு கோபத்தோடு  விளக்க..
    ‘அதுக்கில்லை  வெற்றி..   அபர்ணாவை  நினைச்சி நம்ம  மாமா   ரொம்ப  சங்கடப்படறார்.  நான்வேற  இன்னைக்கு  ஊருக்கு  போகப்போறேன்..  காயத்திரியோடவும்..  மற்ற சொந்தங்களோடவும்  மிங்கிளா இருன்னு  கொஞ்சம்  ஸ்ரிக்ட்டா  சொல்லி வச்சேன்..  இது  ஒரு  தப்பா..?” என்றான்  இலகுவாக.
     ‘எங்க  சந்தோசத்தை  நாங்க  பார்த்துப்போம்..  எங்களை  காரணம்  காட்டி  இனி  அபர்ணாவை  மிரட்டுற  வேலை  வச்சிக்காத..”
     ‘ஹேய்..  கூல்  வெற்றி..  எதுக்கு  இப்படி  எமோசனல்  ஆகற…?    ஒரு  குழந்தையை  எப்படி  என்னால  கல்யாணம் செய்துக்க  முடியும்..? அதுக்குத்தான்  அவளை  குமரியாக்க  முயற்ச்சி  பண்ணிட்டு  இருக்கேன்..”  என்று  சிரித்தான்.
      அபர்ணா  சிவமுகிலனுக்கு  டீ  கொடுக்க..  ‘இங்கேயே  உக்காரு  அபர்ணா..”  என்றான் வெற்றி..   அபர்ணா   சிவமுகிலனைப்  பார்த்தாள். 
      ‘நீ  யாருக்கும்  பயப்பட  வேண்டாம்..  உன்  அத்தான்  நான்  சொல்றேன்..   நான்  வீட்ல இருக்கும்  போது..  நீ  என்கூடதான்  இருக்கனும்..  சரியா..?” என  மிரட்டினான்  உரிமையாக.
      தைரியம்  வரப்பெற்றவளாக..  ‘வௌ;வே..“ என்று  சிவாவிற்கு  பழிப்புக்காட்டி  வெற்றியின்  பக்கத்தில் அமர்ந்தாள்.  அபர்ணாவின்  செயலில்   சிவமுகிலனுக்கு  சிரிப்புதான்  வந்தது.
      கிளம்பும்போது..  அபர்ணாவை  தனியே  அழைத்து..  புன்னகையோடு  இன்னும்  சிலஅறிவுரைகளை  கூறி..
     ‘ஆனந்தியோடவே  டேரா  போட்றக்கூடாது..  கம்பபெனியில  நிறைய  வேலையிருக்கு..   அடுத்தவாரம்  அங்கிள்  வரும்போது..  அவரோடவே  கிளம்பி  வந்திடனும்..” என  அன்பு  கட்டளையிட்டு  கிளம்பினான்.

Advertisement