Advertisement

                                    
                          
      அத்தியாயம்–18
       சிவமுகிலன்  ஆனந்தி   கல்யாணத்திற்க்கு  அனைத்து   ஏற்பாடுகளையும்  முன்னிருந்து  நடத்திக்கொண்டிருந்தான்.  நீலகண்டன்  சிவமுகிலனிடம்..  ‘தம்பி..  எனக்கு  ஒரு  ஆம்பிளபிள்ளை  இல்லைன்ற  குறையை  நீங்க  போக்கிட்டிங்க..” என்று  கண்கலங்கினார்  நீலகண்டன்.
        ‘அங்கிள் ஆன்ட்டியோட  உடல்நியைப்  பத்தி  அப்பா   சொல்லியிருக்கார்.  அவங்க  நல்லாயிருந்தா..  நீங்களே  எல்லாம்  பாத்திருப்பிங்கன்னு  எனக்கு  தெரியும்.. வெற்றி  என்   நண்பன்  மட்டும்  இல்லை..  கூடப்  பிறந்த  சகோதரன்மாதிரி..  அப்போ  இது  என்  வீட்டுக்  கல்யாணம்தானே..  அப்ப  நான்  தான்  பண்ணனும்.. “ என்றான்.
       ‘ரொம்ப  சந்தோசம்  தம்பி..” என  இருவரும்  பேசிக்கொண்டிருக்க..
       ‘ஆனந்தி..  நாளைக்கு  கல்யாணத்துக்கு   எனக்கு  இந்த  டிரெஸ்  ஓ.கே.வா.. சீக்கிரம்  சொல்லு..  நான்  பேக் பண்ணனும்..”  என  வந்து  நின்றாள் அபர்ணா.
      ‘நீ  நாளைக்கு  சாரி  போட்டுக்கோ  அபர்ணா..  எல்லாம்  நான்  பேக்  பண்ணிட்டேன்..   எந்த  டென்சனும்  உனக்கு  வேணாம்..  ஜஸ்ட் என்ஜாய்..” என்றாள்  ஆனந்தி.
      ‘ம்ம்.. ம்ம்..” என  தனது  இருபுருவத்தையும்  உயர்த்தி சந்தோசித்த  அபர்ணாவை  பார்த்திருந்த  சிவமுகிலன்..
     ‘ஆனந்தி..  அம்மா  உங்க  கல்யாணத்தோடவே..  எங்க  கல்யாணமும்  வச்சிக்கலாம்னுதான்  சொன்னாங்க.   அத்தை  சிக்கா  இருக்கிறதால    ஒரே  வேலையா  முடிஞ்சிடும்னு  மாமாவும்  இதுக்கு  ஒத்துகிட்டார்.. 
     அபர்ணா  உங்க  கல்யாணத்தை  நல்லா  என்ஜாய்  பண்ணனும்ங்கிறதுக்காக   நான்தான் வேண்டாம்னு  சொல்;;;;லிட்டேன்.     அதோட  நீங்க  பக்கத்தில  இருந்தாதான்..   உங்க  தங்கை  அவ  கல்யாணத்தில  சந்தோசமா  இருப்பா.. அவ சந்தோசம்தான்  என்னையும்   சந்தோசப்படுத்தும்..” என்றான்  நிறைந்த  புன்னகையோடு.
       ‘தேங்க்யூ  சோ மச்  சிவா..  நான்  கூட  இப்படி  யோசிக்கலை..  அபர்ணா  கல்யாணம்  முடிஞ்சிட்டா..  அம்மாவையும்  அப்பாவையும்  அங்க  அழைச்சிட்டு  போய்டலாம்னு  மட்டும்தான்  யோசிச்சேன்.   என்னைவிட  நீங்கதான்  அபர்ணாவை  நல்லா  புரிஞ்சிவச்சிருக்கிங்க..   என்னைமாதிரியே  அபர்ணாவும்  ரொம்ப  லக்கிகேர்ள்.. அதனாலதான்  நீங்க  அவளுக்கு  கிடைச்சிருக்கிங்க..“ என்றாள்  ஆனந்தி.
      ‘இப்பதான்  மாமா  சென்டிமெண்டா  பேசினார்..  இப்ப  நீங்களா..?  வெற்றி  கடுப்பில   இருப்பார்..  போய்   இன்னும்  ஒரு  மணிநேரத்தில   கிளம்பிடுவோம்னு    கால்  பண்ணி  சொல்லிடுங்க.” என்று  சிரித்தான்.
     போன்  செய்தால்  வெற்றி பேசினால்தானே  நான் பேசுவதற்க்கு.. என  நினைத்து  கண்கலங்கினாள்.  அவளின்  கலக்கத்தை  நீட்டிக்க  விடாமல்..  அவர்களின்  வீட்டினில்  குடியிருப்பவர்கள்..  கடையில்  வாடகைக்கு  இருப்பவர்கள்  என  ஒரு  முப்பதுபேர்  வரை  ஆனந்தியின்  கல்யாணத்திற்க்காக   தயாராக  வரவும்..    அதன்பின்  அரிபரியாகவும்..  ஆனந்தமாகவும்  நேரம்  சென்றது  நேரம்.
     முப்பது  வருடங்களுக்குப்  பிறகு..  தனது  சொந்த  ஊரில்  நீலகண்டன்  சந்திரமதி  தம்பதியினர்  சந்தோசத்துடன்  காலடி  எடுத்து  வைத்தனர்.   ஆனந்தி  தங்க  விக்ரகமாய்  ஜொலித்தாள்.  பார்த்தவர்  அனைவரும்  அசந்துதான்  போனார்கள். வெற்றிமாறன்  பட்டு  வேஷ்டியில்..    கண்நிறைந்த  ஆணழகனாய்   தெரிந்தான் ஆனந்திக்கு.
      சற்றுநேரத்தில்  அத்தனை  சொந்தங்கள்..  அக்கம்பக்கத்தினர்..  என  ஆனந்தியை  சுற்றி  ஒரு  ஊரே  திரண்டிருக்க.. வெற்றியை  பார்க்ககூட முடியவில்லை  ஆனந்தியால்.. 
      நண்பர்கள்..  சிவமுகிலனின்   ஒன்றுவிட்ட  சொந்தங்கள்..  என  வெற்றியையும்  ஒரு படையே  சூழ்ந்திருக்க..    அனைவரிடம்  கலகலப்பாக  பேசிக்கொண்டிருந்தாலும்..   ஆனந்தியை  ஏறெடுத்தும்  பார்க்கவில்லை.
      அடுத்த நாள்   அதிகாலை  சுபவேளையில்..  கெட்டிமேளம்  முழங்க..   ஊர்மக்கள்  திரள..  அனைவரின்  ஆசிர்வாதத்தோடு..   வெற்றி  ஆனந்தி  கழுத்தில்  மாங்கல்யத்தை  அணிவிக்க..  நீலகண்டன்  கண்களில்  தானாக  நீர்  அரும்பியது.
       தனது  மச்சினனை  பார்த்திருந்த  சந்திரவாணன்..  நீலகண்டனை  கட்டியணைத்து   ஆறுதலளிக்க..   இவர்களை  பார்த்திருந்த  சந்திரமதி..  உலகமே  தன்  கையில்  உள்ளதை  போன்று..   ஆனந்த  பிரவாகத்தில்  திளைத்திருந்தார்.
       மணமக்களுக்கான  சடங்குகள்  நடந்துகொண்டிருக்க..    வெற்றியின்  பின்னால்  நின்றுகொண்டு..  சிறுபிள்ளையாய்.. ‘ஹே..  ஊ.. ஊ..” என  கைதட்டி  ஆரவாரத்தோடு  கத்திக்கொண்டிருந்த  அபர்ணாவை  வைத்தகண்  வாங்காமல்  பார்த்திருந்தான்  சிவமுகிலன்.
      வெற்றிக்கு  ஆனந்தியை  உறுதிசெய்ததுமே..   தனது   பூர்வீக வீட்டில்  இயங்கிவந்த தனியார்  அலுவலகத்தை  காலிசெய்ய   சொல்லியிருந்தார்  நீலகண்டன்.   திருமணத்திற்கும்  பத்து  நாட்களுக்கு  முன்  அவர்களும்  காலிசெய்திருந்தனர்.
      தனது  மாமியார் வீட்டினை  இன்றுதான்  பார்க்கிறார்  சந்திரமதி.   தனது  பாட்டியோடும் அம்மாவோடும்  வாழ்ந்த  பழைய  நினைவுகள்  வலம்வர..      தன் அம்மாவின்  அறையில்..   தன்  மகள்  புதுமணத்  தம்பதியாய்  ஆனந்தி  வெற்றியோடு   பால்பழம்   அருந்தி  கொண்டிருக்க..    மனம்  நிறைந்த  சந்தோசத்தோடு   புதுப்பொலிவுடன்  காணப்பட்டார்  நீலகண்டன்.
      ‘ஆனந்தி..  நம்ம  அப்பா  வீடு  செம்மையா  இருக்குல்ல..?” என  ஆனந்தியோடு  ஓயாமல்  பேசிக்கொண்டிருந்த  அபர்ணாவை..  வெளியில்  ஹாலில்  இருந்த  சிவமுகிலன்..  கோபத்தோடு    முறைத்துக் கொண்டிருக்க..
      அதையெல்லாம்  கண்டுகொள்ளாத  அபர்ணா..  வெற்றியையும்  விட்டுவைக்காமல்  அத்தான்.. அத்தான்  என  கல்யாண  நிகழ்வுகளை  சந்தோசத்தோடு  பகிர்ந்துகொண்டிருந்தாள்.
       மாலை  ஐந்துமணிபோல்  மகன்மருமகளை   சந்திரவாணன்  தனது  வீட்டிற்கு  அழைத்து  வந்திருக்க.. வெற்றிமாறன்  வீடு  விழாக்கோலமாய்  காட்சியளித்தது.  எத்தனை  நீண்ட  இடைவெளிக்குப்பிறகு..   தனது  தாய்வீட்டில்  இருந்த  சந்திராவிற்கு  இம்மாதிரியான  நிகழ்வுகள்  தன்  வாழ்நாளில்  வரும் என  நினைத்தும்  பார்த்திராத   தருணத்தை  ஆழ்ந்து  அனுபவித்திருந்தார்.
      சந்திராவின்  இளவயது  தோழிகள்   சந்திராவை  சூழ்ந்துகொள்ள..   புது  முகப்பொலிவோடு  தன்    பெருமையையே  மட்டுமே  மீண்டும்  மீண்டும்  அனைவரிடமும்  பேசிக்கொண்டிருந்த  தன்  மனைவியை  ரசித்து  பார்த்திருந்தார்   நீலகண்டன்.
       ‘மாமா..  இப்பவும்  எங்கத்தையையே  பார்த்திட்டிருப்பிங்களா..?  எங்கப்பா  உங்களுக்காக  ரொம்ப  நேரமா  காத்திட்டிருக்கார்.. வாங்கமாமா..” என்று  நீலகண்டனின்  கையைப்  பிடித்து வெற்றி  இழுக்க..  நீலகண்டன்  முகத்தினில்  சிறு  வெக்கம்  தோன்ற.. 
     ‘அச்சோ  மாமா..  இங்க  நான்  புதுமாப்பிள்ளையா..?  இல்ல  நீங்களான்னு  எனக்கே   சந்தேகமா  இருக்கு..” என்று  சிரிப்போடு  சொல்ல..
     ‘வெற்றி..” என  செல்லமாக  முறைத்து..  தன்   சம்மந்தியிடம்  சென்றார்  நீலகண்டன்.  நேரம்  இனிமையாக  சென்று  கொண்டிருக்க..   வெற்றியின்  அருகில்  அமர்ந்திருந்த  ஆனந்தியின்  கையைப்  பிடித்து  இழுத்த  காயத்ரி..
     ‘அண்ணி..  வாங்க  வீட்டை  சுத்தி  காட்றேன்..” என  அழைத்துப்போக   அப்பொழுதே  எது  எது  எங்கிருக்கிறது  என்று  கவனமாய்  மனதில்  பதித்துக்கொண்டாள்  ஆனந்தி. 
      முக்கியமாக  சமையலறை  சென்றவள்.. யார்  உதவியுமின்றி    சமைக்கும்  அளவிற்கு   சமையலறையை  ஆராய்ச்சி  செய்திருந்தாள்.
       மாலை  ஆறு  மணிபோல்..  வெற்றியின்  அறையில்  முதலிரவுக்கான  அலங்காரம்  நடந்து  கொண்டிருக்க..  அனைவரும்   ஹாலில்   பேசிக்கொண்டிருந்தனர்.
       அபர்ணா  அங்கேயும்..  ஆனந்தி  அத்தான் என்று  அவர்கள்  பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருந்தாள்.  அபர்ணாவை  பார்த்திருந்த  சிவமுகிலன்  நேரடியாக  நீலகண்டனிடம்..
       ‘அங்கிள்  நாம  எல்லோரும்  பக்கத்தில  இருக்கிற  தியேட்டர்க்கு  போலாமா..?  இது  மாதிரி  மறுபடியும்  சந்தர்ப்பம்  அமையாது. “ என்றான்.
      ‘சிவாதம்பி..  நீங்க  சொல்றது  எனக்கு  புரியுது..” என்றார்  அபர்ணாவைப்  பார்த்துக்கொண்டே.  ‘ஆனா  சந்திராவால  எங்கேயும்  வரமுடியாது.  அதுவுமில்லாம..  எல்லாரும்  இன்னைக்குதான்  ரொம்ப  வருசத்துக்கப்புறம்  சந்தோசமா  பேசிட்டிருக்காங்க..  வேணும்னா   நீங்க..  அபர்ணா..   காயு..  என  இன்னும்  சில  சொந்தங்களின்  பெயரை  சொல்லி.. எல்லாருமா  படத்துக்கு  போய்ட்டு  வாங்களேன்..  பக்கத்திலதான்  தியேட்டர்  இருக்கு..” என்றார்.
     ‘சரிங்க அங்கிள்..” என சிரிப்போடு  சொல்லி.. அங்கிருந்தவர்களை  சிவா  தியேட்;டருக்கு  அழைக்க..  கல்யாண  அலைச்சலில்  யாரும்  வர  மறுக்க..    அபர்ணாவை  தனியே  அழைத்துப்போக  திட்டமிட்டவன்..
     நடந்ததை  வெற்றியிடம்  சொல்லி.. ‘அபர்ணாவை  மட்டும்தான்  கூட்டிட்டுப்போறேன்னு  மாமாக்கு  தெரியாது..  கொஞ்சம்  சமாளி..” என  வெற்றியிடம்  உதவியை  நாட..
     ‘எப்படிடா   எந்த  விசயம்னாலும்..  அது  உனக்கு  சாதகமாவே  அமையுது..?”  என்று  வெற்றியும்  சந்தோசத்தோடே  கேட்க..
      ‘அதெல்லாம்  அப்படித்தான்.. ஆனந்தி  நீங்க  அபர்ணாவை  தேடாதிங்க..  நாங்க  கிளம்புறோம்   பாய்..” என்று  உல்லாசத்தோடு..
      ‘அபர்ணா  வா..  நம்ம  கொஞ்சம்  வெளில  போய்ட்டு வரலாம்..”  என்றான் சிவமுகிலன்.
     ‘நான்  மாட்டேன்..  எங்க  அம்மா  அமைதியா  வீட்லதான்  இருக்கனும்னு  சொல்லியிருக்காங்க..” என  மறுத்து  மண்டையை  உருட்ட..
     தன்  மகள்  தனியாக  சிவாவோடு  போகிறாள்  என்றறியாமல்.. ‘என்கிட்ட  பர்மிசன்  கேட்டுட்டாரும்மா..”  என்றார்  நீலகண்டன்.
     ‘போதுமா..? இப்போ என்கூட வரியா..?  இல்ல  கையை பிடிச்சி  இழுத்துப்போகவா..?“ என்று  அபர்ணா   கையைப்  பிடிப்பதுபோல்  பாவனை  செய்ய..      
     ‘நானே  வரேன்..” என்று  சிவாவின்  பின்னோடு  போனாள்.
      சற்றுநேர  பயணத்திற்கு  பிறகு..  ஒரு  கோயில்  முன்பு  காரை  நிறுத்தி.. 
     ’கொஞ்சமாச்சம்  உனக்கு  சென்ஸ்  இருக்கா..?  வெற்றிக்கும் ஆனந்திக்கும்  இன்னைக்குதான்  கல்யாணம்  ஆகியிருக்கு..  இப்பவும்  உங்கக்கா  பின்னாடியே  சுத்திட்டு  இருப்பியா..?” என்று கடுகடுக்க..
     ‘கல்யாணம்   ஆனா..  எங்கக்கா  கூட  நான் இருக்கக்கூடாதா?” என்று  அபர்ணாவும்  தன்  உரிமையை  விட்டுக்கொடுக்காமல்  பேச..
     ‘ஏய்  லூசு..  இன்னைக்கு  அவங்களுக்கு    ஃபர்ஸட்;நைட்   ஏற்பாடு  பண்ணிட்டு  இருக்காங்க..” என்று  அபர்ணாவை  முறைக்க..   இதை  நாம   யோசிக்கவே  இல்லையே..  என்று  அவஸ்த்தையாய்  தலைகுனிந்தாள்.
     அவளின்  முகபாவனையை  ரசித்தவன்.. ‘நீ  உண்மையா  புரியாமத்தான்  இப்படி  பண்றியா..?  இல்ல  உன்  மண்டைல  ஒன்னுமே  இல்லையா..?”  என்று   குறும்புப்  புன்னகை  புரிய..
     ‘இங்க  எல்லாரும்  எனக்கு  புதுசா  இருந்தாங்களா..?  பெரியவங்களெல்லாம்  அவங்க  பாட்டுக்கு  ஒரு  மீட்டிங்  போட்டு  அதுல  மூழ்கிட்டாங்க..  அப்போ  நான்  என்ன  பண்றது..?  அதனாலதான்  ஆனந்தியோட  இருந்தேன்..”  என்று  தயங்கியவாறே  சொன்னாள்.
      ‘ஏன்..  என்னைப்  பார்த்தா..  உனக்கு  ஓரு  ஆளாத்  தெரியலையா..?”
      ‘எல்லார்  முன்னாடியும்..  நான்  எப்படி  உங்ககிட்ட  வந்து  பேசமுடியும்..?” என  வெக்கத்தோடு  சிணுங்க..
      ‘என்கிட்ட  பேசினாக்கூட  ஒன்னும்  நினைக்கமாட்டாங்க.   எல்லார்க்கும்  நமக்கு  கல்யாணம்  ஆகப்போற  விசயம் தெரியும்..   இந்த  டைம்ல  போய்  உங்கக்காகூட  பேசிட்டு  இருந்தாதான்..  எல்லாரும்  உன்னை  லூசுன்னு   நினைப்பாங்க.” என  கடிய..
      ‘எப்பப்பாரு.. சும்மா  திட்டிட்டேதான்  இருக்கிங்க…  எங்கப்பா  சொன்னாருன்னுதான்  நான்  வந்தேன்.  எனக்கு  தூக்கம்  வருது..  சீக்கிரம்  வீட்டுக்கு  கூட்டிட்டுபோங்க..” என்றாள்  தூக்கத்தோடே.
       ‘உங்கப்பா..  நம்மளை  சினிமாக்குதான்  போகசொன்னார்.  ஆனா  நாம  கார்ல  கொஞ்ச  நேரம்  பேசிட்டு  இருந்திட்டு..  வீட்டுக்கு  போய்டலாம்..” என்றான் தன்னவளை  ஊடுருவிப்  பார்த்தபடி.
      ‘எனக்கு  ரொம்ப  டையர்டா  இருக்கு..  நான்  அமைதியா  போய் தூங்கிடறேன்..  அங்க  யாரையும்   தொல்லைப்  பண்ண மாட்டேன்..  இப்போவே  வீட்டுக்கு  போலாம்..”  என்றாள்  அவனின்  பார்வையில்  பயந்து.
      ‘போலாம்  போலாம்..  மூனு  மாசமாச்சி..  உன்னை  இப்படி  தனியா  மீட்  பண்ணி..” என  அணைத்து  வாசம்  பிடித்து..
      ‘இந்த  ஒரு  அணைப்புக்காக  காலைல  இருந்து  காத்திட்டு  இருக்கேன்..” என்றான்  ஏக்கமாக.
      சாரியில்   இருந்ததால்..  அபர்ணாவின்  வயிற்றுப்பகுதி   பளீனெ;று வெண்மை நிறமாய்  அவன்  கண்களைப்  பறிக்க..   அவள்  வெற்றிடையில்   கைவைத்தான்..   அவனின்  கைகளை   விலக்கிவிட  தன்னால்  முடிந்தவரை  முயற்ச்சிக்க..  முயற்ச்சிக்க.. அவனின்  பிடி இன்னும்  இருக்கமாக..  அபர்ணாவின் வெண்மை  நிறமேணி..  செந்நிறம்பூச..  போராடிய  கைகள்  தளர்ந்து போக..
      ‘போலாம்…”  என்று  காற்றோடு  காற்றாக  கூறினாள்.
      ‘போலாம்…  போலாம்..  ஒரே  ஒரு  கிஸ்..“ என்று  அவள்  இதழ்களை தனதால்  சிறைசெய்ய..     அன்று  அவனின்  முத்தத்திற்க்கு  முரண்டுபிடித்தவள்..  இன்று தன்னை ஒப்புக்கொடுத்தாள்.  நீண்ட  நேரத்திற்க்குப்பின்     விடுவிக்க..  அன்றுபோல்  இன்றும்  அவன்  மடிமீதே  படுத்துக்கொள்ள..    வெற்றிச்சிரிப்புடன்   அவள்  முகத்தை  கைகளில்  ஏந்தியவன்..
    ‘சாரியில  உன்னை  இப்பதான்  முதன்முதலாப்  பார்க்கிறேன்..  எப்படிடீ  எந்த  டிரெஸ்  போட்டாலும்  இப்படி  நச்சுனு  இருக்க..?” என்றான்  ரசனையாக.
     முகம்  சிவந்தாலும்.. ‘ப்ச்..  போலாம்..” என சலிப்போடு  சொன்ன  அபர்ணாவின்  முகமும்  சோர்வைக் காட்ட.. 
     ‘அபர்ணா..  இந்த  நாளுக்காக  வெற்றி   இரண்டு  வருசத்துக்கும்  மேல  காத்திட்டிருந்தார்.. உன்  அத்தான்  ரொம்ப  பாவம்..  இனி  வெற்றியை  டிஸ்டர்ப்  பண்ணாத   புரியுதா..?” என்று   கட்டளையிட..     
     ‘எல்லாம்  புரியுது..  போலாம்..  காரை எடுங்க..” என  முகம்  சுருக்க..
     ‘நான்  ஊருக்கு  போற வரைக்கும்..  அவங்களோட  உன்னைப்  பார்த்தேன்…  அப்புறம்  இப்படித்தான்  உன்னை  கூட்டிட்டு  வந்து  கார்ல..”  எனும்போதே  மேலே  பேசவிடாமல்  அவன்  கைகளைக்  கடித்தாள். 
     ‘ஏய்  பிசாசு..  எதுக்குடி  இப்படி  கடிச்சிட்டே இருக்க..?” என  சிரிப்போடே  கடிந்தவன்..  ‘வீட்டுக்கு போனதும்  ஆனந்தீ… ன்ன..  பிச்சுபுடுவேன்  பிச்சி..  ஒழுங்கா  தூங்க போய்டனும்..” என  ஆர்டர்  போட்டு  அழைத்துச்சென்றான்.

Advertisement