Advertisement

‘அப்பா  எனக்கு  ஒன்னும்  இல்லையா..?”  என   வெற்றி  கேட்க.. 
      ‘டேய்  நீ  என்  லிஸ்ட்லயே  இல்ல…”  என்று  கிண்டலடித்தார்.  மிகவும்  கலகலப்பாக  நேரம்  சென்றுகொண்டிருந்தது.  அனைவரும்  சாப்பிட்டு.. இத்தனை  வருட  சம்பவங்களை  கதைகதையாய்  பேசி  சிரித்துக்கொண்டிருந்ததில்..  இரண்டு  மணி நேரம்  போனதே  தெரியாமல்  இருந்தனர்.  அப்பொழுதுதான்  அபர்ணா  சற்று  இயல்புக்கு  வந்து  அனைவரிடமும்  பேச  ஆரம்பித்தாள்.  அத்தான்.. அத்தான்   என்று  வெற்றியின்  பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருந்தாள்.
      சிவமுகிலன்  தன்  பெற்றோரோடு  வந்தான்.  ஆச்சர்யத்தோடு  அவர்களைப்  பார்த்த..  நீலகண்டன்.. ‘வாங்க  டாக்டர்..  வாங்க..”  என்றார்.  
      அபர்ணாவும்…  ‘அங்கிள்  நல்லா  இருக்கிங்களா…?   எங்க  வீட்ல  இன்னைக்கு  பங்சன்..  வாங்க  சாப்பிடலாம்..” என்று  உரிமையோடு  அவரை  அழைக்கவும்..  அங்கிருந்தவர்கள்  அனைவரும்  அபர்ணாவை  அதிசயமாக  பார்த்தனர். 
       வெற்றிதான்.. ‘என்ன அபர்ணா..?  அந்த  அங்கிளை  அவ்வளவு  பிடிக்குமா…?   எங்களை  கூட  நீ  சாப்பிட  சொல்லலை..  அவரை  மட்டும்  கூப்பிடுற..”  என்று சிரிப்போடு  முத்துகிருஷ்ணனை  பார்த்தான்.  முத்துகிருஷ்ணன்  சிரித்துக்கொண்டே  லலிதாவோடு  சந்திராவிடம்  சென்று  நலம்  விசாரித்தனர்.
      ‘அத்தான்  இவர்  யார்  தெரியுமா..?  இவர்தான்  அம்மாக்கு  ஸ்பெசல்  டாக்டர்.  அதுமட்டும்  இல்ல  அத்தான்..  அங்கிள்  ரொம்ப  ரொம்ப  நல்லவர்.  யாருக்குன்னாலும்  ஹெலப்  பண்ணுவார்.”  என்று  பேசிக்கொண்டே  இருந்தவளுக்கு  சிவமுகிலன்  கண்ணில்  பட..  வார்த்தை  நின்றுவிட்டது.  
       மெதுவாக..‘அங்கிள்  இவங்க  உங்க  ஆன்ட்டியா..?” என கேட்டு  அவர்களை  அந்த  பக்கமாக  அழைத்துச்  சென்றாள்.
       ‘இவ  எனக்கு  பொண்டாட்டிம்மா..  உனக்குதான்  ஆன்ட்டி..”  என்று  சிரித்தார் கிருஷ்ணன்.  அபர்ணா  அவரின்  காதில்  முனுமுனுப்பாக..
    ‘நீங்க  வாங்க..” என்று  அவர்களின்  கையை  பிடித்து..  அழைத்துச்சென்று  சாப்பிட  அமர வைத்தாள்.   சிவமுகிலனே  ஆச்சர்யப்பட்டான்.  எங்கப்பா.. அம்மா..  மட்டும்  வேண்டுமா  உனக்கு..?  என்று நினைத்து  ஆனந்தியிடம்  சென்று.. 
      ‘என்னங்க  ஆனந்தி..  வரவேற்பெல்லாம்  பலமா  இருக்கு..”   என   சிரித்தான். 
      ‘எனக்குகூட ரொம்ப  ஆச்சர்யமாத்தான்  சிவா இருக்கு..” என ஆனந்தியும்  சந்தோசித்தாள்.
      அங்கு  வந்த    வெற்றி.. ‘மாமா..  இவன்  சிவமுகிலன்.  முத்துகிருஷ்ணன் டாக்டரோட  ஒரே  மகன்..    அதுமட்டும்  இல்ல..  நம்ம  அபர்ணா  வேலைசெய்யிற  கம்பனியோட  எம்.டி.   இவன்தான்  டாக்டரோட  மகன்னு  அபர்ணாக்கு  இன்னும்  தெரியாது..“ என்று  அறிமுகப்படுத்தினான்.
      ‘ஓ..  அதனாலதான்  அபர்ணா..  உங்களைப்  பார்த்ததும்  அந்தபக்கம்  ஓடிட்டாளா..?  வாங்க தம்பி..    சாப்பிடுங்க.”  என்றழைத்தார் நீலகண்டன். 
      ‘பரவாயில்லைங்க  அங்கிள்..  நான்  அப்புறம் சாப்பிடுறேன்..”  என்று  அமைதியாக  அமர்ந்திருந்தான்.  எத்தனைபேர்  இருந்தும்  நாகரீகம்  கருதிக்கூட  சிவமுகிலனால்  அபர்ணாவிடம்  இருந்து    அவன்  பார்வையை  விலக்கிக் கொள்ளவே  முடியவில்லை.   அபர்ணாவின்   அந்த   பாவாடைதாவனியும்..  இரட்டைஜடையும்..  குழந்தைபோல்  அவள்  பேசும்  அழகும்..  அவனை  பாடாய்ப்படுத்த.. 
    ‘சிவா..  ரொம்ப  வழியுது..  துடைக்கட்டுமா..?”  என்று  சிரித்தான் வெற்றி. 
    ‘நான்  எங்க  அம்மா  ஒழுங்கா  சாப்டறாங்களான்னு  பார்த்திட்டு  இருக்கேன்.” என்று  வீராப்பாக சொல்ல..
    ‘அப்டியா…?  நான்  நம்பிட்டேன்..”என  சிரித்தான்.
     ‘உனக்கு  வேற  வேலையில்லையா…?   நீ  போய்  ஆனந்தியை  கவனி..“ என  கடுகடுத்தான்.
     அபர்ணா  வெற்றியிடம்..  ‘அத்தான்..”  என்றாள் சன்னமாக. 
     ‘என்ன அபர்ணா..?“ என்றான்  வெற்றி.
     ‘இங்க  வாங்க..” என்று   தனியே  அழைத்தாள்.
     அபர்ணாவிடம்  வந்தவன்.. ‘என்னன்னு  சொல்லு..?” என்றான்.
     ‘அவரை   சாப்பிட  வைங்க..” என்றாள்.
     ‘எவரை..?” என்றான்  சந்தோசமாக.
     ‘உங்க   உயிர்  தோழனைத்தான்  சொல்றேன்.‚” என்று  சிவாவைக்  காண்பித்தாள்.
    ‘நான்  சொல்லமாட்டேன்.  என்  பிரெண்டா  இருந்தாலும்..  அவன்  உங்க  வீட்டுக்குத்தான  வந்திருக்கான்.  அதனால  நீங்க  தான்  சாப்பிட சொல்லனும்…  அது சரி..  அவனைத்தான்  உனக்கு  பிடிக்காதே…? அப்புறம்  எதுக்கு  நீ  அவன்  சாப்பிட  சொல்ற…?”
      ‘எனக்கு  பிடிக்காதுதான்..  ஆனா..   நான்  சாப்பிடலைன்னா   மட்டும்  திட்டுவான்.  அதனால  சொன்னேன்.  நீங்க  சொல்லலைன்னா..  போங்க..  நான்  எங்கப்பாகிட்ட   சொல்ல  சொல்றேன்.” என கிளம்பி..
    அபர்ணா   தன்  அப்பாவிடத்திலும்  இதையே  சொல்லவும்..  ‘ஏன்மா..?  டாக்டர் அங்கிளை  மட்டும்  நீ  சாப்பிட வைக்கிற…  அவரோட  மகன்தான்மா  அவர்..  அதுமட்டும்  இல்லாம  உங்க  எம்.டின்னு  வேற  இப்பதான்  வெற்றி சொன்னார்.    நீ  போய்  சொன்னாதான்  மரியாதையா  இருக்கும்.  வா..  நான்  கூட  வரேன்..  நீ  சாப்பிட  சொல்லு..” என்றழைத்துப்போனார்.
     ‘சிவா  தம்பி..  ஏன்  இங்க  உட்க்காந்திருக்கிங்க…?  வாங்க  சாப்பிடலாம்..  அபர்ணா..  உன்னோட  எம்.டியை  சாப்பிட  கூட்டிட்டுப்போ..” என்று  சொல்லிவிட்டு  வெற்றியிடம்..  ஏதோ  கேட்க்கப்போனார்.
     ‘சார்..  சாப்பிட வாங்க..” என்றாள்  மெதுவாக 
     ‘உங்க   அப்பாகிட்ட  சொல்லி..  என்னை  ஜெயில்லதான  போடறேன்னு  சொன்ன..?  இப்ப  என்ன  சாப்பாடு  போடறேன்னு  சொல்ற..?” என்று  முறைத்தான்.
      ‘எங்கப்பாக்கு   கேட்ற  போகுது..  ரொம்ப  நாளுக்கப்புறம்  இப்பதான்  அவர்  சந்தோசமா  இருக்கார்.  ப்ளீஸ்..  அதைப்பத்தியெல்லாம்  இப்ப  பேசவேண்டாம்..  வந்து  சாப்டுங்க..” என்றாள்  கலக்கமாக.  சிவமுகிலன்  அவளை  மீண்டும்  முறைத்துப்பார்த்தான்..  ஆனால்  ஒரு  நிமிடம்தான்ää  பிறகு  அந்தபுறம்  திரும்பி..  ‘உங்க  டாக்டர்  அங்கிளையே   நீ   கவனி..   முதல்ல  இங்கயிருந்து  போ..” என்றான்.
    ‘நீ..ங்க  எங்க  டாக்டரோட  சன்னா..?” என்றாள்  ஆச்சர்யமாக.
     ‘ஓ..  அப்ப  நான்  உங்க  டாக்டரோட  சன்..  அதுக்காகத்தான்  என்னை  சாப்பிட  சொன்னியா..?” என்றான்  மீண்டும்  மிரட்டலாக.
     ‘இல்ல..இல்ல..   நீங்க எப்பவும்   கரெக்ட்  டைம்க்கு  சாப்பிடுவிங்க..  இப்ப  லன்ச்  டைம்  ஆயிடுச்சி..   அதனால  உங்களுக்கு  பசிக்கும்னுதான்  சாப்பிட  சொன்னேன்..”  என்று  அவசரமாய்  பதிலளித்தாள்.
     ‘நான்  என்  நண்பனோட  ஃபங்சனுக்குதான்  வந்தேன்.  உன்  வீட்ல  சாப்டறதுக்கு   இல்ல.   நீ  போய்  உன் வேலையைப்  பார்..” என்று  அவளை  பாராமல்  சொல்ல..
      ‘இல்லையில்லை..  வந்து  சாப்பிடுங்க…  நீங்க  சாப்டுதான்  ஆகனும்..” என  கெஞ்ச..
       அவளை  கண்களைப் பார்த்து.. ‘நீ  ஒன்னும்  இந்த  கெட்டவனுக்கு  சாப்பாடு  போட  வேண்டாம்.”  என்று முறைப்போடு  சொல்லி  அங்கிருந்து   அகன்றான்.   சிவமுகிலன்  எவ்வளவு  கோபமாக  பேசினாலும்..  அவனை  எப்படியாவது  சாப்பிட  வைக்க  வேண்டும்  என்றுதான்  தோன்றியது  அபர்ணாவிற்க்கு.. 
     அவனின்  கோபத்தை  கண்டுகொள்ளாமல்.  ஆனந்தியிடமும்.. ‘சிவாவை  சாப்பிட  கூப்பிடு  ஆனந்தி..”  என்றாள்.
    ஆனந்தி  அதிசயமாக  அவளைப்  பார்த்து.. ’ஏன்  நீயே  கூப்பிட வேண்டியதுதானே…?” என்றாள்.
     ‘நான்  கூப்பிட்டா..  அவன்  வரமாட்றான்..  அப்பாவும்  சொன்னார்..  அத்தான்கிட்டயும்  சொன்னேன்..  அத்தான்  நானெல்லாம்  சொல்லமாட்டேன்னுட்டார்..  நான்  இப்ப  என்னதான்  பண்ணட்டும்…?” என்றாள்  தவிப்பாக.
       ஓஹோ…  இவ்வளவு  நடந்திருக்கிறதா?  என  யோசித்து..  ‘ஹேய்…  நீ  ஏன்  இவ்ளோ  டென்சன்  ஆகற..?  அவருக்கு  பசிச்சா  சாப்பிடுவார்..   அதுவுமில்லாம  அவர்  சாப்பிடலைன்னு  நீ  ஏன்  இவ்ளோ  வருத்தப்படுற…?“
     ‘நான்  ஒன்னும்  வருத்தப்படலை..“ என்றவள்..  கடைசியாக  முத்துகிருஷ்ணனிடமே  சென்றாள்.
       ‘அங்கிள்   நீங்க  ஏன்  உங்க  மகனை  விட்டுட்டு  சாப்டிங்க…? அவரை  சாப்பிட  சொல்லுங்க.‚” என்றாள்  சற்றே  உரிமையாக.
       ‘நான்  எப்படிம்மா  சொல்லமுடியும்…?  அப்புறம்  அவன்  என்கிட்ட  கோபப்பட்டு..  இது  என்ன  உங்க  வீடான்னு  கேட்ப்பான்..”   இதையெல்லாம்  பார்த்துக்கொண்டிருந்த  வெற்றி..
    சிவாவிடம்.. ’ஆனந்தி  கூட  என்னை  இப்படி கவனிக்கலை  சிவா..  உன்  ஆளு  நீ  சாப்பிடனும்னு  யார் யார்கிட்ட  சொல்லிட்டு  இருக்கா  பார்த்தியா..?   நானெல்லாம்   மூனு வருசமா  கெஞ்சியும்  வேலைக்காகல..  என் மாமனாரைப்  பார்த்ததுக்கபுறம்  தான்  சக்சஸ்  ஆனது.  ஆனா.. நீ  எப்படிடா   பேசாம  இருந்துகிட்டே  அவளை  இப்படி  ஆட்டி வைக்கிற..?” என்றான்  ஆச்சர்யத்தோடு..
     ‘ம்க்கூம்..  அவதான்  என்  பக்கத்திலேயே   இருந்துகிட்டு  தினமும்  என்னை  ஆட்டி   வைக்கிறா..  இதுல  நீ  வேற  கடுப்பேத்தாத…” என்றான்.
     ‘சிவா..” என்றழைத்தபடி  லலிதா  வந்தார்.
     ‘என்னம்மா..?” 
     ‘எனக்கு  அபர்ணாவை  ரொம்ப  பிடிச்சிருக்கு..  நான்  இப்பவே  அவங்க  அப்பா அம்மாகிட்ட  பொண்ணு  கேட்கட்டுமா?” என்றார்  ஆர்வமாக.
     ‘அம்மா…  அந்த  லூசு  முன்னாடி  ஏது  கேட்றாதிங்க..  அதெல்லாம்  இன்னொரு  நாளைக்கு  கேட்டுக்கலாம்..  இப்ப  நாம  கிளம்பலாம்.” என  அவசரமாய்  இடைமறித்தான்.
     ‘நீ  சாப்பிடலையா..?”  என்று  லலிதா  கேட்ப்பதை..   அபர்ணா  கவனித்து கொண்டிருந்தாள். 
       அந்த  நேரம்  அபர்ணாவை  பார்த்தவனும்..  ‘எனக்கு  பசிக்குதான்..  ஆனா.. எனக்கு  இங்க பச்ச தண்ணி கூட  வேண்டாம்.  வாங்க  நாம  கிளம்பலாம்.” என்றான்  முறுக்கியவனாய்.
      ‘ஏன்  சிவா  இப்படி  சொல்ற..?” லலிதா  குழப்பத்தோடு  கேட்கவும்..
      முத்துகிருஷ்ணன் லலிதாவின்  அருகில்  வந்து..  ‘லலிதா..  அவன்  இன்னைக்கு  இங்க  சாப்பிட மாட்டான்..  உன்  மகன்  ரொம்ப  தெளிவா..  ப்ளான்  போடறான்.  அதனால  நீ ஒன்னும்  வருத்தப்படாத..  வா..  நாம  அவங்ககிட்ட  சொல்லிட்டு  கிளம்பலாம்.” என்று  கிசுகிசுத்தார்.
        தன்னை  கண்டுகொண்ட  அப்பாவிடம்  புன்னகையுடன்..  ‘நீங்க  சொல்லிட்டு  வாங்க..  நான்  ஆனந்திகிட்ட  சொல்லிட்டு  வெளிய   கார்ல  வெய்ட்  பண்றேன்.” என்று  சிரித்துக்கொண்டே   சென்றான்.
      ‘நான்  கிளம்பறேன்  ஆனந்தி..“ என்றான்.
      ‘ஒரு  நிமிசம்  இருங்க  சிவா..  ஏன்  நீங்க  சாப்பிடலை?“
      ‘இது  உங்களுக்கான  ஃபங்சன்..  இதுல  நான்  சாப்பிடாதது  ஒரு  விசயமே  இல்லை..   நீங்க  இந்த   தருணத்தை   என்ஜாய்  பண்ணுங்க.”
      ‘சிவா..  உன்  ஆளு  அழுதிட்டு  இருக்கா..  கேட்டா..?  நீ  இங்க  தண்ணிகூட  குடிக்கமாட்டேன்னு  சொன்னியாமே..?”  என  வெற்றி  கேட்க..
      இதற்க்குமேல்   கண்ட்ரோல்  பண்ணமுடியாது  என்ற  முடிவிற்க்கு  வந்தவன்..  ’வெற்றி..  அம்மாகிட்ட…   நான்  கார்ல  வெய்ட்  பண்றேன்னு  சொல்லியிருக்கேன்.  கொஞ்சம்  சீக்கிரம்  வரசொல்லு..” என்று  கிளம்பினான்.   சிவமுகிலன்  குடும்பத்தினர்  கிளம்பியபிறகு..   அபர்ணா  ஆனந்தியிடம்  எனக்கு  தூக்கம்  வருது.  என்று  சொல்லிவிட்டு  ரூமில்  சென்று  அடைந்துகொண்டாள்.

Advertisement