Advertisement

                                         
                         
                                
                            அத்தியாயம் ..15
      அபர்ணா  வீட்டிற்க்கு  ஐந்து  மணிக்கே  வந்திட.. ‘என்னம்மா..  சீக்கிரம்  வந்திட்ட..?”  என்றார்  நீலகண்டன் 
       ‘நாளைக்கு  நம்ம  வீட்ல  முதல்முறையா  பங்சன்  நடக்குது..  அதான்   வீட்டை  டெக்ரைட்  பண்ணலாம்னு   நாளைக்கும்  லீவ்  போட்டுட்டு..  இன்னைக்கும்  பர்மிசன்  போட்டுட்டு  சீக்கிரம்  வந்துட்டேன்..” என்றாள்  சந்தோசத்தோடு.
     ‘அபர்ணாம்மா   நீ  ஒன்னும்  ஒர்ரி  பண்ணிக்காதடா..  நாளைக்கு  பத்து  மணிக்குமேலதான்  உன்  அத்தை  மாமால்லாம்  வருவாங்க..   நான்  எனக்கு  தெரிஞ்சவங்ககிட்ட சொல்லியிருக்கேன்..   அவங்க  நாளைக்கு  காலைல  ஆறு  மணிக்கெல்லாம்  வந்து    நம்ம  வீட்டை  டெக்கரைட்  பண்ணிடுவாங்க..  டிஃபன் லன்ச்  எல்லாமும்  ஆர்டர்  பண்ணிட்டேன்..  ஆனந்தியும்   நாளைக்கு  கிச்சன்  பக்கமே  போகாம..  பங்சனை  ரெண்டுபேரும்   நல்லா  என்ஜாய்  பண்ணுங்க..”  என்றார்  சந்தோசமாக.  
      இருவரும்  பேசிக்கொண்டிருக்கும்போதே..  ஆனந்தியும்  வந்திருந்தாள். 
      ‘ஆனந்தீ…”  என்று  பத்துநாள்   பார்க்காமல்  இருந்தவள் போல  ஓடிக்  கட்டிக்கொண்டாள்  அபர்ணா.
     ‘என்னம்மா  ஏதோ  பர்ச்சேசிங்  போல  இருக்கு..? நீ  நாளைக்கு  போட்டுகிறதுக்கா..?”
    ‘அபர்ணா..  என்கிட்ட  ரொம்ப  நாளா   இந்த  மாதிரி  டிரஸ்  வேணும்னு  கேட்டுட்டு  இருந்தா..”  என்று   பேகில்  இருந்த   பட்டுப்  பாவாடை..  தாவனி செட்டை  காண்பித்து..
     ‘நான்  லன்ச்   அப்பவே   காலேஜ்க்கு   பர்மிசன்  போட்டுட்டு  போய்  வாங்கிட்டேன்.  அம்மாகிட்டையும்  அபர்ணாகிட்டையும்  இது  ஓ.கேவான்னு   கேட்டுட்டு..  பிடிக்கலைன்னா   மாத்திடலாம்னு   சீக்கிரம்  வந்தேன்ப்பா..”
    ‘சரி  வா..  சந்திராகிட்ட  காட்டலாம்.”  என்று  போனார்கள்.
     ‘என்ன  ஆனந்தி..?    அபர்ணாவை   நாளைக்காவது..  சாரி  கட்ட சொல்லலாம்னு  பார்த்தேன்..” என்றார்  சந்திரா.
    ‘அம்மா..  அவ  ரொம்ப  ஆசைப்பட்டு..  போன  தீபாவளிக்கே   என்கிட்ட  கேட்டாம்மா..    சாரியெல்லாம்  எப்பன்னாலும்  கட்டலாம்..  தாவனி  இப்பதான்  அழகாயிருக்கும்.”  என  ஆசையோடு  சொல்ல..
    ‘அக்கா  சூப்பரா இருக்கு.. “  என  அபர்ணாவும்  குதூகலிக்க..
      நீலகண்டன்..  ’விடு  சந்திரா..  அவங்களுக்கு  எது  பிடிக்குதோ..  அதுவே  போட்டுக்கட்டும்.  ஏம்மா..  நாளைக்கு  உனக்குதான்  பங்சன்..  உனக்கு  எதுவும்   வாங்கலையா?“  என  கேட்க..
        ‘இல்லப்பா..  என்கிட்ட   இன்னும்..  யூஸ்  பண்ணாத  காஸ்ட்லி  சாரீஸ்  நிறைய  இருக்கு..  நான்  காலேஜ்க்கு    காட்டன்தான்  போடுவேன்..   அம்மா  நல்லாயிருக்கும்போது..    அம்மா  பண்ற  மெயின்வேலையே  எங்க  ரெண்டு  பேர்க்கும்  டிசைன்  டிசைனா  டிரஸ்  எடுக்கறதுதான்..   நீங்க  வந்து  என்  கப்போர்டைப்   பாருங்க..  ஒரு  ஜவுளி  கடையே  இருக்கும்.” என்று  சிரித்தாள்.
                              
        வெள்ளிக்கிழைமை   அழகாக  விடிந்தது.
       நீலகண்டனுக்கு  தமக்கு  சொந்தங்கள்   யாரும்  இல்லை  என்ற  கவலை  எப்போதும்  இருந்திருக்க..   சந்திரா  எழுந்து  நடக்காமல்  இருப்பது..  இன்றுவரை   பெரும்  கவலையாக மனதை  அழுத்தியிருக்க..   சந்திராவின்  அண்ணன்மகன்    நம்  மருமகன்  என்ற  நினைவே  அவருக்கு  மிகுந்த  நிறைவை  அளிக்க..   அனைத்து  துன்பமும்  நொடியில்  விலகிய  உணர்வோடு..  நீலகண்டன்தான்  மிகவும்  பரபரப்பாக  இருந்தார்.
     ‘என்ன  ஆனந்தி  இது..?”  என்றார் சந்திரா.
      ‘அம்மா..  அபர்ணாவைப்  பாருங்க..  இப்பதான்  பத்தவது  படிக்கிற  பொண்ணுமாதிரி  இருக்கா..  ஆனந்தி  தாவனிகூட  சரி..  இந்த ரெண்டு  ஜடை  வேண்டாம்..    வரவங்க  தப்பா  நினைப்பாங்க..” என்றார் அவஸ்த்தையாக.
      ‘உங்கண்ணன்தானம்மா  வரார்..  எங்கமாமா  தப்பா  நினைக்கமாட்டார்..” என  சந்திராவை  சமாளித்தாள்.
      ‘சரி  நீ  போய்  ரெடியாகு.  இவ்ளோ  நேரம்  உனக்கு  அவளை  ரெடி  பண்ணவே  சரியாயிடுச்சா..?   இன்னைக்கு  என்ன   அபர்ணாவையா  பார்க்க  வராங்க..?  உன்னைதான..?   இவ  இப்படி  அழகா  இருந்தான்னா..  நம்ம   சொந்தத்தில  யாராவது   பட்டுன்னு  பொண்ணு  கேட்டுறுவாங்க.   அப்புறம்  நான்  உன்  கல்யாணத்தோட  சேர்த்து..  அவளுக்கும்  கல்யாணம்  பண்ணி  வச்சிடுவேன்..  அப்புறம்   என்னையாரும்   குற்றம்  சொல்லக்கூடாது.” என  சிரிக்க..
        ‘ஓ..  அதுதான்  உங்க  பிரச்சணையா..?  அப்ப..  நம்ம  அபர்ணாகுட்டி  இந்த  டிரெஸ்ல   ரொம்ப  அழகா  இருக்கா..  அப்படிதான?“ என  தன் தங்கையை  ரசித்தாள்.
       ‘எம்பொண்ணுங்க  ரெண்டுபேருமே   அழகுதான்..  முதல்ல  நீ  போய்  ரெடியாகு..”  என  விரட்டினார்  ஆனந்தியை.
       அபர்ணா.. மாம்பழ   நிற பட்டுப்பாவாடையில்..  மெருன் நிற  தாவனியோடு  அன்றுதான்  பூத்த  புதுமலர்  போல்  இருந்தாள்.  இரண்டு  ஜடைகளும்   அவள்   மார்பில் பட்டு..  அவள்  இடைவரை  ஊஞ்சலாடியது.
       நீலகண்டனுக்கு   அழைப்பு  வர..   பேசிமுடித்தவர்..   ‘ஆனந்தி  அவங்க  பக்கத்தில   வந்துட்டாங்கம்மா..  இன்னும்  பத்து  நிமிசத்தில    இங்க  வந்துடுவாங்க..  சீக்கிரம்  ரெடியாகு..   தேவையான அளவுக்காவது  நகை  போட்டுக்கம்மா..  நீ  பாட்டுக்கு  ஒரு  செயினோடு  வந்து  நிக்காத..”  என  படபடத்தார்.
      ஆனந்தி  சிறிய  தங்கநிற  ஜரிகையில்..  கிளிப்பச்சை  நிறப்  பட்டுடுத்தி..  மிகவும்  அழகாக  இருந்தாள்.   சிறிய  நெக்லஸ்..   ஒரு டாலர்செயின்..  குடைவடிவான  அழகான  ஜிமிக்கி  அணிந்திருந்தாள்.   தன்  இயற்க்கை  அழகிற்க்கு  மேலும்  அழகு  சேர்ப்பதற்க்கென்றே  வளர்ந்திருந்த..  அந்த  நீண்ட  பின்னல்ஜடை  அவளுக்கு  அதீத  அழகைக்   கொடுத்தது.   நீலகண்டன்  செய்வதறியாது  அவளின்  ரூமிற்கு  வெளியில்..
       ‘ஆனந்தி  நான்   உள்ளே  வரட்டுமா..?”
      ‘வாங்கப்பா..  எதுக்கு  பர்மிசன்  கேக்கறிங்க..?“ என  சொல்ல..  உள்ளே  வந்தவர்..  பதட்டமாக   தன்  மகள்  சரியாக  ரெடியாகியிருக்காளா  என்று  ஆராய்ந்து..
     ‘ஏன்மா..   இன்னும்  கொஞ்சம்  பெரிய  நகை  போடக்கூடாதா?  எதுக்கு  எல்லாம்  வாங்கி  வச்சிருக்கு..?  அபர்ணாவும்  ஒரு  டாலர்செயினே   போதும்னு  சொல்றா..  அவகூட  பரவாயில்லை..  கல்யாணப்பொண்ணு  நீ..” என்று  குறைபட்டார்.
       ‘இதுவே  ரொம்ப  அதிகமா தோணுதுப்பா  எனக்கு.   நீங்க  ரிலாக்சா  இருங்க..”    எனும்போதே..  வெளியில்  இருந்து   ‘அத்தை..  மாமா.. “ என்ற    வெற்றிமாறனின்   குரல்  கேட்டது.
       தன்  வயதை  மறந்து  வாசல்  நோக்கி  ஓடினார் நீலகண்டன்.
      ‘வாங்க..  வாங்க..  என  அனைவரையும்  இருகை கூப்பி  வரவேற்றார்..  
      ‘அண்ணா..  அண்ணி  வாங்க…”  என்ற  சந்திராவின்  குரல்  அவருடைய  ரூமில்  இருந்து  வெளியே  வரை  கேட்டது.
      ‘வரோம்  மாப்பிள்ளை..”  என்று  நீலகண்டனுக்கு  பதிலலித்து..   உள்ளே   சென்று  தன்  தங்கையை  தேடினார்  சந்திரவாணன். 
     ‘நல்லா  இருக்கிங்களா..  அண்ணா..?”  என்ற  மாலாவின்  அழைப்பு  நீலகண்டனை  உணர்ச்சியில்   ஆழ்த்த..  ‘நல்லா  இருக்கேன்ம்மா..  வாங்க..”  என்று  சந்திராவிடம்  அழைத்துச்சென்றார்.
      அதற்க்குள்  வெற்றி..  அபர்ணாவின்   கதவை   தட்டி.. ‘அபர்ணா..  வெளிய  வா..  எனக்கு  தண்ணிவேணும்..”  என்று  சத்தமாய  சொல்லி..   தான்  வந்திருப்பதை  ஆனந்திக்கு  உணர்த்தி..   தன்  அத்தையை  காண  சென்றான்.
         இரண்டு  பெண்கள்..  ஒரு  ஆண்  என  வேலைக்கு  அமர்த்தியிருந்தார்  நீலகண்டன்.  பணியாட்கள்  அனைவருக்கும்  முதலில்  தண்ணீர்  கொடுக்க..  வெற்றி    ‘எனக்கு அபர்ணா தண்ணிகொடுப்பா..”  என  சத்தமாக  சொல்ல..  மிக  அமைதியாக  தண்ணீரோடு  வந்து..
      ‘அத்தான்.. தண்ணி.. “ என்று   முனுமுனுத்தாள்.
      அபர்ணாவைப்  பார்த்த  வெற்றி..  ‘ஹேய்  அபர்ணா..  என்ன  இப்படி  தாவனி  போட்ட  ஏஞ்சலாயிட்ட..?  உனக்கு ரொம்ப  அழகா இருக்கு  இந்த  டிரெஸ்..” என்றான்.   அதற்கும்  அபர்ணா  அமைதியாகவே  இருக்க..
      சந்திரவாணன்.. ‘நீ தான்  என்  சின்ன   மருமகளா..?  வாம்மா..”  என்று  வந்து  இங்க  உட்க்காரு..” என  சொல்ல..  சிறிதுநேரம்  சந்திரவாணன்  அருகில்  நின்றிருந்தவள்..  பிறகுபோய்..  வெற்றியின்   அருகில் அமர்ந்தாள். 
    ‘அபர்ணா..  எல்லார்கிட்டையும்  பேசும்மா.. “ என்றார்  நீலகண்டன்.
    ‘விடுங்கண்ணா..  இப்பதான  பார்க்கிறா..  அப்புறம்  பாருங்க  எங்களோட   ரொம்ப  பழக்கமாயிருவா..”  என்றார்  மாலா. 
      வெற்றியிடம்.. ‘வெற்றி..  நீ  போய்  அதை  எடுத்துட்டுவா..“ என  மாலா சொல்ல..
     ‘எல்லாரும்  வாங்க ஹாலுக்கு  போலாம்..” என்றார்  மாலா.  நீலகண்டன்  தயங்கும்போதே..  வெற்றி  வீல்சேரோடு  உள்ளே  வந்தான்.   பிறகு  சந்திரவாணனும்  வெற்றியும்  சேர்ந்து..  சந்திராவை  அதில்  அமரவைத்து.. 
      தன்  மாமாவின்  தயக்கம்  உணர்ந்தவனாக..  ‘ இப்ப  போலாமா..  மாமா?” என்றான்  வெற்றி.
      இதற்க்கு  முன்பே  நீலகண்டன்  இந்தசேரை  வாங்கலாம்  எனும்போது..  சந்திராதான்  மறுத்துவிட்டார்.  அதை  நினைத்தவர்..   ‘மருமகன்  வந்து  உட்க்கார  வச்சாதான்  உட்க்காருவியா  சந்திரா..?”  என்று  கேலியாய்  சிரித்து..  சந்தோசமாக  மனைவியோடு  ஹாலுக்கு  வந்தார்.   
      நீலகண்டனிடம்.. ‘மருமகளைக்  கூப்பிடுங்க  மாப்பிளை..  நான்  பார்க்கனும்.” என்றார்  சந்திரவாணன்.
      ‘ஆனந்தி..  வாம்மா.. “ என்றார்  நீலகண்டன்.  வெற்றியின்  ஒரே  தங்கையான   காயத்ரி..
      ‘நான்  போய்  கூட்டிட்டு  வரேன்  இருங்க..”  என்று  ஆனந்தியின்  அறையை  தேட..  வெற்றி  ஆனந்தியின் அறையைக்  காட்ட  அங்கே  ஒரே  சிரிப்பொலிதான்.  ஆனந்தியைப்  பார்த்த  அனைவரும்  அசந்துதான்  போனார்கள்.
      காயத்திரி.. ஆனந்தியிடம்  ‘இது  நிஜ  முடியா..?”  என விழிவிரிக்க..
     ‘காயத்திரி..  நல்லா  இழுத்து  பாரு.. அப்பதான்  நீ  நாத்தனார்ன்னு   உன்  அண்ணிக்கு   நல்லா  மனசுல  பதியும்..”  என்று  சொல்ல..
    ‘ஆனந்தி முதல்ல  நிமிர்ந்து  ஹால்ல  இன்னும்  யாரெல்லாம்  இருக்காங்கன்னு  பாரு.. “ என்றான்  வெற்றிமாறன்.
       ஆனந்தி  பார்க்கவும்..  கண்களை  அகல  விரித்து.. ‘அம்மா..”  என்று  சந்திராவின்  அருகில்  சென்று  நின்றுகொண்டாள்.
      ‘என்னப்பா..  உன்  மருமகள்  எப்படி  இருப்பான்னு  என்னை  கேட்டுட்டே  இருந்திங்க..  இப்ப  ஒன்னுமே  சொல்லமாட்றிங்க..?” என  தன்  தந்தையிடம்   ஆவலாக  கேட்டான்.
      ‘என்  மருமக  தங்க சிலையாட்டம்  இருக்காப்பா.. “ என்றார்  பெருமையாக.
     ‘நல்ல  நேரம்  முடியும்முன்ன  முதல்ல  பரிசம்  போட்டுறலாம்.”  என்று  சந்திரவாணன்  நீலகண்டனிடம்  சொல்ல..  வெற்றியும்  ஆனந்தியும்  அருகருகே  அமரவைக்கப்பட்டனர்.
     வெற்றியின்  அருகில்  அமர்ந்த  ஆனந்திக்கு  முகமெல்லாம்  சிவந்தது.  வெற்றியை  ஆனந்திக்கு  மோதிரம்  போடசொன்னார்கள்.  ஆனந்திக்கு   வெற்றி  வைர  மோதிரம்  அணிவித்தான்.
      ‘ஆனந்தி..  நீயும்  வெற்றியும்..  உங்க  அத்தை மாமா…  கால்ல விழுந்து  ஆசிர்வாதம்  வாங்குமா..” என்றார்  சந்திரா. ஆனந்தி   வெற்றியின்  அம்மா.. அப்பா  காலில்  விழுந்து  ஆசிரிவாதம்  வாங்க..
      ‘ஆனந்திம்மா..   இது  உன்  தாய்மாமன்  சீர்  என்று  ஒரு  டாலர்  வைத்த  தங்க  சங்கிலியை  அணிவித்து..  அபர்ணாவைப்  பார்த்தவர்..  ‘நீயும்  வாம்மா…”  என்றழைத்து  அவளுக்கும்  அதேபோல்  ஒரு  செயினை  அணிவித்தார். 
     

Advertisement