Advertisement

‘அப்படி  என்னப்பா  உன்மேல  கோபம் அவளுக்கு..? 
       ‘அ..து..  வந்து  லலிதா..” என்று கிருஷ்ணன்  ஆரம்பிக்க..
       ‘அப்பா.. ப்ளீஸ்..”  என்று  பார்வையாலே  கெஞ்சி..   ‘அது  ஒன்னுமில்லைம்மா..  ஒரு  நாள்  லீவ்  வேணும்னு  பர்மிசன்  கேட்டா..  நான் வேலை  விசயத்தில  கொஞ்சம்  கடுமையா  நடத்தினேன்.  அதுதான்  ரொம்ப  பயந்திட்டா..” என  சமாளிக்க..
       ‘சரிப்பா..  நாளை  மறுநாள்   நாம  அங்க  போய்  அதை  சரிபண்ணிடலாம்.” என்றார்  மகனுக்காக.
        ‘சூப்பர்ம்மா…  அம்மான்னா..  அம்மாதான்..”  என்று  கன்னத்தில்  முத்தமிட்டு  ‘அம்மா..  ஈவினிங்  ரெடியா  இருங்க..  நாம  வெளில  போலாம்.”
       ‘எங்க  சிவா…?”
      ‘அது  சர்ப்ரைஸ்..  அப்பா..  நான்  உங்களுக்கு  கால்  பண்றேன்.. நீங்க   அம்மாவை  கூட்டிட்டு  நான்  சொல்ற  இடத்திற்க்கு  வந்திடுங்க..  எனக்கு  டைம்  ஆயிடுச்சி..  நான்  கிளம்பறேன்..”  என்று  கிளம்பினான்.
      அபர்ணாவை  அவளறிந்து  அவன்   கண்டுகொள்ளவே  இல்லை.  ஆனால்  அவளுக்குத்  தெரியாமல்   அவளைப்   பார்ப்பதை   மட்டுமே  வேலையாக   வைத்திருந்தான்.  அபர்ணா  தன்மீது  கோபமாக  இருப்பது  அவள்  முகத்தைப்  பார்த்தே  தெரிந்துகொண்டான்.  பாவமாகத்தான்  இருந்தது.  இருந்தாலும்  இப்படி  பண்ணலைன்னா…  இவளை  வழிக்கு  கொண்டுவர  முடியாது  என்று    மாலைவரை  அமைதியாக   இருந்து..   கிளம்பினான்.
      சிவமுகிலன்  மிகுந்த  சந்தோசத்தில்    ஒரு  பிரபல  நகைக்கடையில்  தன்  பெற்றோருக்காக  காத்திருந்தான்.  சற்று  நேரத்தில்  அவர்கள்  வந்ததும்..  ‘வாங்கம்மா.. “ என்று  உள்ளே  அழைத்துச்  சென்றான்.
      
‘சிவா..  என்கிட்ட  நிறைய நகை   இருக்கு..  இங்க  எதுக்கு  இப்ப  வரசொன்ன..?” என  லலிதா  கேட்க..
       ‘அம்மா..  இது  நான்  முதன்முதலா  உங்களுக்காக  வாங்கும்   நகை..  நீங்க  எதுவும்  சொல்லக்கூடாது..  அதுமட்டும்  இல்ல   அப்பாக்கு  என்ன  பிடிக்கும்னு  எனக்கு  தெரியாது..  நீங்களே  அப்பாக்கும்  எதாவது  பெஸ்ட்டா  செலக்ட்  பண்னுங்க..”  என்றான்.
      அரைமணிநேரமாக  லலிதா  செலக்ட் செய்தது  எதுவுமே   சிவமுகிலனுக்கு  பிடிக்காமல்  போக..  ‘அம்மா  நீங்க  நகருங்க..   எக்ஸ்   கியூஸ்  மி..   வைர  நெக்லஸ்..  கம்மல்..  வளையல்.. அப்படி எதாவது  காட்டுங்க..”  என்க..
     ‘என்னப்பா  சொல்ற..?  அதெல்லாம்   ரொம்ப  காஸ்ட்லியா.. இருக்கும்..”  என  கிருஷ்ணன்  சொல்ல.. 
      ‘அப்பா..  ஒரு  குட்  நியூஸ்  சொல்லட்டுமா..?   என்னோட   ஃபர்ஸ்ட்  ஃபாரின்  ப்ராஜக்ட் சக்சஸ் ஆயிடுச்சி.  இன்னைக்குதான்  செட்டில்மண்ட்  ஆனது.   அதோட  லாபம்  மட்டும்  எவ்ளோ  தெரியுமா? பதினைந்து  கோடிப்பா..“  லலிதா..  வாயைப்  பிளந்து  ஆச்சரியமாக  தன்  மகனைப்  பார்த்தார்.
     ‘என்னப்பா  சொல்ற..?”  என  கிருஷ்ணனும்  அதிர்ச்சியாக..
     ‘ஆமாம்ப்பா..  நான்  ரொம்ப  சந்தோசமா  இருக்கேன்.    எல்லாருக்கும்   இன்கிரிமெண்ட்  டபுளா..  போட்டிருக்கேன்.    இப்ப  இந்த  ப்ராஜக்ட்  நல்லா  வந்ததால  இன்னும்  நிறைய  ஆஃபர்  வந்திருக்கு.  அவங்களோட  உழைப்போட   சந்தோசமும்   இருந்தாதான்  நான்  இன்னும்  இன்னும்  வெற்றியடைய  முடியும்.  அதனால..”  எனும்போதே..
     ‘சார்..  நீங்க  கேட்டது..”  என்று  காண்பித்தான் அந்த  கடையின்  பணியாள்.
       ‘ம்ம்..  கம்மல்..  ஆரம்..  வளையல்.. எல்லாம்  செட்டோட  பேக்  பண்ணுங்க..    இதுக்கு  மேட்ச்சா  ஒரு  மூக்குத்தி  காட்டுங்க..   எங்கம்மாக்கு  இந்த  அழகான  முகத்தில.. அந்த  மூக்குத்தி  ரொம்ப  ஸ்பெசல்..”  என்று  அம்மாவிற்க்கு  பர்ச்சேஸ்    முடிந்ததும்..
     ‘அம்மா…  ஊர்மிளாக்கும்  இதே மாதிரி ஒரு  செட்  சொல்லிடுங்க..  அவளுக்கு  இன்னைக்கு  இங்க  வர  டைம்  இல்லையாம்.  அப்பா  நீங்க  எதாவது  செலக்ட்  பண்ணிங்களா..?” என  கேட்க..
       ‘ஏன்ப்பா..  நான்  என்ன  நகை  போடுறது..?  எனக்கு  ஒன்னும்  வேண்டாம்..  அதுதான்  அம்மாக்கு  வாங்கியாச்சில்ல..  அதுவே  எனக்கு  சந்தோசம்..  வா  போகலாம்…“
       ‘அப்பா  ஒரு  வாச்சாவது  வாங்குங்கப்பா..”  என்று   ஒரு  கோல்ட்  வாட்ச்  செலக்ட்  செய்தான்.
       எல்லாம்  முடிந்து  காரில்  அமர்ந்தவுடன்..  முத்துகிருஷ்ணன்..  ‘எதுக்கு  இவ்ளோ  செலவு  பண்ற  சிவா.. ?” என்றார்.
       ‘அப்பா..  உங்களுக்கு  செய்யாம  நான்  எதுக்கு  சம்பாரிக்கனும்..?  என்னோட  சந்தோசமே  இதுலதான்  இருக்கு..  இன்னும்  எவ்வளவோ  சம்பாரிக்கலாம்..  ஆனா  இது  என்னோட  முதல்  லாபம்..  உங்களுக்கு  அடுத்ததுதான்   என்  கம்பெனிகூட…” என்றான்.
       ‘ஆமா…  முக்கியமான  ஆளுக்கு  எதுவும்  வாங்கலையா..?”  என  ஒரு  மார்க்கமாக  மகனைப்  பார்த்தார்.
       ‘அப்பா…  ஒன்னு  தெரியுமா..?  நான்  எல்லோருக்கும்  இன்கிரிமெண்ட்  போட்னேனு  சொன்னேன்தான..?  ஆனா..  அபர்ணாக்கு  மட்டும்  போடலை..” என  கண்ணிமைத்து  சிரித்தான்.
       ‘என்னப்பா  சொல்ற..?  எனக்கு  ஒன்னும்  புரியலை..  இங்க  உன்  அம்மாகிட்ட..  அவளுக்காக  உண்ணாவிரதம்  இருக்கிற..‚  அங்க  அப்படி  பண்ற..  அந்த  பொண்ணுக்கு  கஷ்டமா   இருக்காதா..?”
        ‘கண்டிப்பா  இருக்கனும்னுதான்ப்பா  அப்படி செய்தேன்..  என்னதான்  நான்  அவளை  லவ்  பண்ணினாலும்..  நான்  தப்பே  செய்தாலும்..  அவ    எல்லார்கிட்டையும்  என்னோட  பேரை  ரொம்ப  டேமேஜ்  பண்ணிட்டா..  எனக்கு  அந்த  கோபம்  இன்னும்  இருக்கு..   அதனால   நான்  யார்ன்னு  அவளுக்கு  காட்ட  வேண்டாமா..?  அதுக்குத்தான்..”
        ‘மருமகளுக்கு  கம்பெனியிலையும்  இன்கிரிமெண்ட்  இல்லை..  இங்கையும்  எதுவும்  வாங்கலையா..?  அப்ப  உன்னோட  கல்யாணத்திற்க்கு  நீ  ரொம்ப  நாள்  வெய்ட்  பண்ணனும்..” என  சிரிக்க..
       ‘எங்க  போய்டப்  போறா..?  முதல்ல  என்னை  அவளுக்கு  பிடிக்க  வச்சிட்டு  அப்புறம்  பார்க்கலாம்..” என்றான்  நம்பிக்கையோடு.
       ஆனந்தியிடம்..   அபர்ணா  அலுவலகத்தில்  நடந்த   சம்பள  விசயத்தை  சொல்லி..    ‘ஆனந்தி..  அவன்  வேணும்னே  என்னை  எல்லார்  முன்னாடியும்  அசிங்கப்படுத்தறான்..   யாருக்கு  வேணும்  அவன்  பணம்..?”  என்று  அங்கு  அவனிடத்தில்  பேச  முடியாததையெல்லாம்  இங்கு   ஆனந்தியிடம்  கொட்டிக்கொண்டிருந்தாள்.  ஆனந்தி  அமைதியாக  கேட்டுக்கொண்டு  உள்ளுக்குள்  சிரித்துக்கொண்டிருந்தாள்.
      ‘அபர்ணா..  சிவா  வேற  உன்மேல  செம்ம  கோபத்தில  இருப்பார்  போல..    நாளை  மறுநாள்  நம்ம  வீட்ல  பங்சன்  இருக்கு..   நாளைக்கு   உங்க  எம்.டி. கிட்ட  பர்மிசன்  வாங்கினாதான  நீ  லீவ்  போட  முடியும்..  இப்ப  என்ன  பண்றது?” என  கேட்க..
       ‘ஆமாம்  ஆனந்தி..  பேசாம  பர்மிசன்  கேட்க்காம  லீவ்  போட்டுட்டு..  அடுத்தநாள்  போய்    எனக்கு  ஃபீவர்ன்னு   சொல்லிடலாமா..?“ என  சொல்லி..   பிறகு  அவளே..  ‘வேண்டாம்.. வேண்டாம்  அவன்  எப்படின்னாலும்  கண்டுபிடிச்சிடுவான்..  லீவ்  போடனும்னா..  முன்னாடியே  இன்ஃபார்ம்  பண்ணதான்  சொல்லியிருக்கான்.   ஆனா  லீவ்  போடக்கூடதுன்னு   சொல்லலை..  அதனால   எப்படியாவது  நாளைக்கு  பர்மிசனே  வாங்கிடறேன்..“ என்றாள்.
      ‘ம்ம்.. இப்படிதான்  தைரியமா  இருக்கனும்னு   உன்  அத்தான்  சொல்லியிருக்காரு..   நீ  இப்ப  சொன்னதுதான்  ரைட்  சாய்ஸ்…” என  ஆனந்தி  உற்சாகமளித்தாள்.
         அடுத்தநாள்   காலை  எட்டு  மணிக்கே  வந்து..  தன்  வேலையை  ஆரம்பித்திருந்தாள்  அபர்ணா.   இரண்டு  நாட்களுக்கான  அனைத்து  வேலைகளையும்   லன்ச்சுக்கு  கூட  போகாமல்..   மாலை  நான்கு  மணிக்குள்  முடித்து..   எப்படி  பர்மிசன்  வாங்குவது  என்ற  யோசனையில்   இருந்தாள்.
        சிவமுகிலன்  லன்ச்சுக்கு  கிளம்பும்போதும்..  இவள்  தீவிரமாக  வேலை  செய்து  கொண்டிருந்ததை  பார்த்துதான்  சென்றான்.  லன்ச்சிற்கு  பிறகு  அவன்  வரும்போதும்  அபர்ணா..  வேலையில்  மூழ்கியிருந்தாள்.    நாளை  பர்மிசனுக்காகத்தான்  வேலை  செய்கிறாள்  என்று  அவனுக்கு  புரிந்திருக்க..   
      இவள்  லன்ச்  சாப்பிடவில்லை   என்ற  விவரத்தை  இராமு   மூலமாக  தெரிந்திருந்தாலும்..   அவளை  கண்டுகொள்ளவில்லை.    இங்கதான  பர்மிசன்  கேட்க்க  வரனும்..?   வா..வா..  என  நினைத்துக்கொண்டு..  அவள்  அறியாமல்  அவளையே  நோட்டமிட்டுக்  கொண்டிருக்க.
     அபர்ணா  யாருக்கோ  ஃபோன்  செய்வதை  பார்த்திருந்தான்.  அங்கு  என்ன  சொன்னார்களோ..  சற்று  தைரியம்  வரப்பெற்றவளாக   எழுந்து   நடைபயில  ஆரம்பிப்பதுபோல  நடந்து  கொண்டிருந்தாள்.
       சிவமுகிலனுக்கு  வெற்றியிடத்தில்  இருந்து  அழைப்பு  வரவும்..  ஓ..ஹோ..  இங்கதான்  ரெக்கமண்டேசனா..?  என்று  நினைத்து.. சிரித்துக்கொண்டே  அட்டன் செய்து..
      ‘என்ன  வெற்றி  ரெக்கமன்டேசனெல்லாம்  ரொம்ப  பலம்ம்..மா  இருக்கும்போல..  அதை  எனக்காக   கொஞ்சம்  அங்க  பண்ணக்கூடாதா..?” என்று சிரித்தான்.
    ‘சிவா..  எப்படிடா..?” என்று  இம்முறையும்  அதிசயமாய்  கேட்டான்.
    ‘அதான்  நாளை  பங்சனுக்காக  சாப்பிடாம  கூட  இவ்ளோநேரம்  வேலை  செய்திட்டு..    போன்ல  யார்கூட  அப்படி  டென்சனா   பேசறான்னு  பார்த்தா..  உடனே  நீ  லைன்ல  வர..   இது  போதாதா..?  ஆமா..  அதென்ன  உன்கிட்ட  பேசின  உடனே  முகத்தில  அப்படி  ஒரு  தைரியக்  கடாட்சம்..?” என  பெருமையாக  கேட்டான்.
    ‘அப்படியா  சொல்ற  சிவா..?”
     ‘ம்ம்  இப்பல்லாம்  நீதான்  ரொம்ப  நல்லவனாயிட்டபோல..  சரி  அதவிடு  என்ன  பேசினா..?” என்றான்  ஆர்வமாக.
      ‘அவளோட  இன்கிரிமென்ட்  சமாச்சாரத்தில  இருந்து..  நாளைக்கு  பர்மிசன்  போடுறதுக்காக  என்ன  பண்ணலாம்ங்கிற  வரைக்கும் எல்லாமே  பேசினா..  அதுல  முக்கியமானது   என்னன்னா..?  அத்தான்  நீங்க   பர்சனலா  சொன்னா..  அவன்  கேட்ப்பான்னு  சொன்னிங்கதான..?  இது  நம்ம  பர்சனல்  விசயம்தான..?  இப்ப  நீங்க  சொல்லுங்க..  உங்க  பேச்சை   அவன்  கேட்க்கிறானான்னு   பார்க்கலாம்ன்னு    நமக்குள்ள  உசுப்பேத்திவிடறாப்பா..” என  சிரித்தான்.
      ‘அதுவேறையா…?  அப்ப  நான் உன்கிட்டதான்  பேசிட்டு  இருக்கேன்றது  கூட  இப்ப  தெரியும்னு  நினைக்கிறேன்..   என்னைப்  பார்த்தாலே  நடுங்குவா..  ஆனா  இப்ப  எவ்ளோ  தைரியமா  வந்திட்டிருக்கா  தெரியுமா..?  நீ  கட்  பண்ணு..  நான்  அப்புறம்  கூப்பிடறேன்..”  என்றான்.
     ‘மே.  ஐ  கம்  இன்  சார்…?” என்றாள்  தெளிந்த  குரலில்.
      இப்ப  மட்டும்  சாரா.. வாடி..வா..  என்று  நினைத்து..  ‘எஸ்..” என்றான்.
      ‘என்ன  விசயம்?”  என  அவளைப்  பார்க்கமலே  கடுப்பாகக்  கேட்டான்.
      ‘எங்க  அக்காக்கு..  நாளைக்கு  என்ங்கேஜ்மன்ட்..  அதனால  எனக்கு  லீவ்  வேணும்..”  என்றாள்  தைரியமாக.
      ‘அதுக்கு  நீ  என்கிட்ட  தான  வந்து  கேட்க்கனும்..?  உனக்கு  நான்  எம்.டி.யா..  இல்ல  வெற்றியா…?” என  முறைத்தான்.
        அபர்ணா அமைதியாக  இருக்கவும்..  ‘டெல்..மீ.. “ என்று  வேகமாக  எழ    பயந்துபோய்  சுவரோடு  ஒட்டிக்கொண்டாள். 
       ‘அப்புறம்..  அது  என்ன..?  என்  முன்னாடி  சார்ன்னு  சொல்ற..  உங்க  அக்காகிட்ட  பேசிட்டிருக்கேன்..  அவன்  வச்சிட்டானான்னு  கேட்க்கிற..?  நான்  என்ன  உன்வீட்டு  வேலைக்காரனா..?  இல்ல  உன் வீட்டுக்காரனா..?” என்று  அழுத்தமாக  கேட்டான்.
        அதிர்ச்சியாக  சிவமுகிலனைப்  பார்த்து..  என்ன  பேச்சி  பேசறான்.. என  நினைக்க..  கண்கலங்கியது.   நாம  பேசியதை  கேட்டுட்டானா?  பர்மிசன்  கிடைச்சமாதிரிதான்  என்று  நினைத்து  பாவமாக  நின்றிருந்தாள்.
       ‘உன்னோட  ஒர்க்  கம்ப்ளீட்  பண்ணிட்டியா..?”
       ஆமாம்  என்பதாய்  தலையசைத்தாள்.  ‘அப்படின்னா   கிளம்பு  முதல்ல..  உன்  மூஞ்சியெல்லாம்   பார்த்திட்டு  இருக்கிறதுக்கு..  நீ  கிளம்பறதே  மேல்..  அப்புறம்  இன்னொரு  விசயம்..  வெற்றி  சென்னதுனால  நான்  உன்னை  அனுப்பலை..  நீ  ஒர்க்  கம்ளீட்  பண்ணிட்டன்னுதான்  அனுப்பறேன்..
       போற  வழில  எங்கையாவது   மயக்கம்  போட்டு  விழுந்துட்டு..  அன்னைக்கு  எல்லார்கிட்டையும்  சொன்னியே..   என்னை  கிஸ்  பண்ணிட்டான்னு…  அது  மாதிரி  இன்னைக்கும்  என்னை  மயக்கம்   போட  வச்சிட்டான்னு  சொல்லிட்டு  திரியாத..  அப்புறம்  நான்  மனுசனா  இருக்கமாட்டேன்..  ஒழுங்கா  இங்கையே  சாப்டுட்டு  போ..” என  மிரட்டலாக  சொல்ல..
        அபர்ணாவின்  அழுகை அதிகமாக..   காண சகிக்காதவனாய்..  ‘கெட்  அவுட்..”  என்றான்  வெறுப்பாக.

Advertisement