Advertisement

அத்தியாயம்.. 14
      அபர்ணா..   உள்ளே  நுழைவதைப்  பார்த்ததும்..   ‘ வாடி… வா..  இனிமேதான்  இருக்கு  உனக்கு..    என  நினைத்து..  அரைமணிநேரம்  பொறுத்து..   தன்  கேபினை  விட்டு   வெளியே  வந்தான்  சிவமுகிலன். 
       சிவமுகிலன்  வெளியே  வந்ததும்..   இராமுவிடம்  சிவா  யாரையும்  உள்ளே  விடவேண்டாம்  என  சொல்லியிருக்க..   காலையிலிருந்து  தன்  பாஸை  பாராததால்..   அனைவரும்  எழுந்து  நின்று   ‘குட்  மார்னிங்  சார்..” என்க…     
      ‘ப்ளீஸ்  பி  சீட்டட்..”  என்றவன்..   எப்பொழுதும்  சிறு  தலையசைப்போடு  செல்பவன்.. ‘எ  வெரி  குட்மார்னிங்.. “ என்றான்  வழக்கத்திற்க்கு  மாறாக..
     அனைவரும்  வியப்பாய்  சிவமுகிலனையே  பார்த்திருக்க..
    ‘உங்களுக்கெல்லாம்   ஒரு  குட்நியூஸ்   காத்திட்டு   இருக்குன்னா..   அப்ப  அது  வெரி  குட்  மார்னிங்   தானே..?” என்றான்   உற்ச்சாகமாக.
     அனைவரும்  சந்தோசமாக  சிவமுகிலனை  பார்க்க..  அபர்ணா  மட்டும்   நிமிர்ந்து  பார்க்காமல்   அமைதியாக  தலைகுனிந்திருந்தாள்.
     ‘ம்..  அந்த  குட்நியூஸ்  என்னன்னா..?   இந்த  கம்பெனி  ஆரம்பிச்சி  ஐந்து  வருசமாச்சி..   ஒவ்வொரு  வருசமும்  உங்களுக்கு  இன்கிரிமெண்ட்   தீபாவளி   டைம்லதான  கொடுப்பேன்..?   ஆனா  இந்த  வருசம்   ஒருத்தரை  தவிர..  இந்த  மாசத்திலயிருந்தே  எல்லாருக்கும்   ஒரு  போனஸ்  இன்கிரிமெண்ட்   கொடுக்கலாம்னு    இருக்கேன்.. லாஸ்ட்டா  நம்ம  எல்லாரும்   சேர்ந்து  முடிச்ச  ப்ராஜக்ட்ல  வந்த    லாபத்தை..   நான்  எல்லேருக்கும்  சேர்  பண்ணப்   போறேன்..”  என்றான் உற்ச்சாகமாக.
    அனைவரும் ‘சார்..  தேங்க்யூ..  சார்…” என்றனர்  சந்தோசமாக.
    ‘நோ…நோ…  நீங்க  எனக்கு  தேங்க்  பண்ண   வேண்டிய  அவசியமே  இல்லை.  நம்ம   எல்லோருடைய  உழைப்பும்  சேர்ந்துதான்..  நம்ம  கம்பெனிக்கு   லாபம்  கிடைச்சிருக்கு..  அதனால  நோ  தேங்க்யூ..  ஜஸ்ட்  என்ஜாய்  யுவர்  செல்ஃப்..   உங்களோட  சேலரி  நீங்க  இப்ப  எவ்ளோ  வாங்கறிங்களோ..  அது  அப்படியே   கம்இன்  மன்த்ல  இருந்து    டபுளா..  கிரடிட்  ஆகும்.  ஆர்  யூ  ஹேப்பி..  கைஸ்..”  என்று  கேட்கும்  போது..  ராமுவும்  அங்குதான்  நின்று  கொண்டிருந்தார்.  
    ‘ராமு..  நீங்க  ஏன்  இப்படி  நின்னுட்டு  இருக்கிங்க..?  முதல்ல  உக்காருங்க..”  என்றவன்..  அபர்ணாவைப்  பார்த்துக்கொண்டே.. உங்களுக்கும்  இன்கிரிமெண்ட்  உண்டு  ராமு..  ஏன்னா..  உங்க  வேலைல  இருந்து…  எப்பவுமே  நீங்க தவறனது  இல்ல..”  என்றான்  அபர்ணாவை  பார்த்துக்கொண்டே.
    ராமுவும்  சந்தோசமாக..  ‘ரொம்ப  நன்றி.. சார்..” என்றார்.
    மீனா  எழுந்து..  ‘சார்  ரியலி  தேங்க்யூ  சார்..  பட்..  அந்த  ஒருத்தர்  யார் சார்..?  ஏன்  அவங்களுக்கு  மட்டும்  இன்கிரிமன்ட்   இல்லை..?” என  கேட்க
     ‘அது..   உன்  தோ..ழி  அபர்ணாதான்..  மீனா.   ஏன்னா..  இந்த  ப்ராஜக்ட்ல  அவங்களோட  ஒர்க்கையும்  சேர்த்து  நான்  தான்  முடிச்சேன்..  முக்கியமான  டைம்ல  அவங்க  பர்மிசன்  போட்டுட்டு  போய்ட்டாங்க..   அப்படி இருந்தும்    அடுத்த  நாள்  காலை  எட்டு  மணிக்கு  வந்து  வேலையை  முடிச்சிடனும்னு..  நான்  அவங்களுக்கு  ஒரு  சான்ஸ்   கொடுத்தேன்..  ஆனா..  அடுத்த  நாளும்  அவங்க  ஒன்பதரை  மணிக்குதான்  வந்தாங்க.. 
      அவங்களோட  வேலையை  நான்  முடிக்காம  இருந்திருந்தேன்னா..  இந்த  ப்ராஃபிட்  நமக்கு  கிடைச்சிருக்காது.  அப்ப  நான்  அவங்களுக்கு  இன்கிரிமன்ட்  கட்  பண்ணினது  சரிதானே..?”  என்று  முடிக்கும்போது..  அபர்ணா  அவனை  அதிர்ச்சியோடு   பார்த்தாள்.  ஆனால்  அவள் பார்க்கும்பொழுது..  சிவமுகிலன்  அவன்  கேபினிக்குள்  சென்றிருந்தான்.
      ‘என்ன  அபர்ணா..  நீயும்  சாரும்  பிரண்டுன்னுல்ல  நான்  நினைச்சேன்..?  அன்னைக்கு  கூட  ஒன்னா  சாப்பிட போய்ட்டு  வந்திங்க..  இப்போ  என்ன  இப்படி  செய்திட்டார்..?  பாவம்டி  நீ..” என மீனா  சொல்ல.. 
       அவமானமாய்  உணர்ந்த  அபர்ணாவிற்கு  கண்கள்  குளமானது.   தன்  இடத்திலிருந்து  பார்த்திருந்தவன்..  எவ்ளோ  ஈசியா  என்னை  கெட்டவன்னு  சொன்ன..?  இதோடவா..?  உங்கக்கா  பங்சனுக்கு  உங்கவீட்டுக்கே  வந்து  உன்னை  அழவைக்கிறேன்  பார்..  என  நினைத்திருக்க..
     போனில்  சிவாவை  அழைத்த  முத்து கிருஷ்ணன்..  ‘சிவா..  லன்ச்சுக்கும்  வரலையா..?  இப்ப  டைம்  என்னடா  ஆகுது…?” என  கத்த..
    ‘அப்பா..   எனக்கு  வேலையிருக்கு..  நான்  லன்ச்சுக்கு  வரலை.. “
     ‘என்ன  விளையாடுறியா..?  உன்  அம்மா..  காலைலயிருந்து  இன்னும்  சாப்பிடலை..  நீயும்  காலைல  சாப்பிடாமதான  போன..?  ஒழுங்கா  வந்து  வீட்டுக்கு  சேரு..” என  மிரட்ட..
      ‘உங்ககிட்ட  சொல்லிட்டுதான வந்தேன்..?  நீங்க  ஏன் அம்மாவை    சாப்பிடவைக்கலை..?” என்றான்  கோபமாக.
       ‘அவ  மட்டும்  இல்லை..  நானும்  இன்னும் சாப்பிடலை..” என்றார் பாவமாக.
        ‘ஸ்பீக்கர்  ஆன்  பண்ணுங்க..” என  சொல்ல..   சொன்னதை  செய்ததும்..   ‘ம்ம்..  சொல்லுப்பா..?” என்றார்  முத்துகிருஷ்ணன்.
       ‘எனக்கு  சந்தோசம்  இல்லாத  வீட்ல  நான்  எப்படி  சாப்பிடமுடியும்..?  நான்   வீட்டுக்கு  வந்தாலும்  சாப்பிடமாட்டேன்..” என்றான்  கோபிப்பவனாய்.   
      ‘அவனை  முதல்ல  இங்க  வரசொல்லுங்க..  இல்ல  நான்  சாப்பிடமாட்டேன்..”  என்று  லலிதா  சொல்ல..
    ‘அப்ப சாப்பிடமாட்டிங்களா..?   காதல்ல  தோத்தவங்களெல்லாம்  தண்ணியடிக்கிற  மாதிரி..  நானும்  நல்லா  டிரிங்ஸ்  பண்ணிட்டுதான்  வீட்டுக்கு    வருவேன்..  பரவாயில்லையா..?  பரவால்லன்னா சொல்லுங்க..?” என  கத்த..
     ‘முதல்ல  அவனை  வீட்டுக்கு  வரசொல்லுங்க..” என்ற  லலிதாவின்  குரல்  தற்போது  அழுகையோடு  வெளிவர..
    ‘இராமு..” என்றழைத்தான்  லைனில்  இருந்தபடியே..
   ‘சார்..” இராமு  வரவும்..
   ‘இராமு…  எனக்கு   கொஞ்சம்  டிரிங்ஸ்  வேணும்..“
     பயந்துபோய்  ‘சா..ர்..”  என  இழுக்க..
    ‘என்ன  பார்த்திட்டு  இருக்கிங்க..?  போய்  ஒரு  ஃபுல்  பாட்டில்  வாங்கிட்டு  வாங்க.. இப்போவே..” என்று    கத்தினான்.
     ‘டேய்..  டேய்..  ஓவரா  பண்ணாதடா…  நீ  யாருன்னும்  எனக்கு  தெரியும்  உங்கம்மா  யாருன்னும்  உனக்கு  தெரியும்..  ஆனாபாரு   நாம  மூனுபேரும்  யாருன்னு..  என்  மருமகளுக்குத்தான்  தெரியலை…” என்றார்  சிரிப்போடு.
    ‘அப்பா..  என்ன  சொல்றிங்க?” என்றான்  அதிர்ச்சி  கலந்த  ஆனந்தத்தோடு..
    ‘உங்கம்மாக்கு  நீ  ஒரு  வேளை   சாப்பாடு  சாப்பிடலன்னாலே..  போதும்.  இதுல  டிரிங்ஸ்  லெவலெல்லாம்  ரொம்ப  ஓவர்.   லலிதா..  சம்மதிச்சிட்டா..  இல்லையில்லை..  சம்மதிக்க  வச்சிட்ட..  இப்பவாவது  ஒழுங்கா  இன்னும்  பத்து  நிமிசத்தில  வீடு  வந்து  சேரு..” என்றார்.
        எப்படியும்  லன்ச்சுக்குள்ள  போன்  வரும் என்பது    எதிர்பார்த்ததுதான்  என  நினைத்து  சிரித்துக்கொண்டே..  என்னடா  இது..?  இன்னைக்கு  எல்லாமே  நாம  நினைச்சமாதிரி  நடக்குது..?  என  நினைத்தவன்  அந்த  சந்தோசத்துடன்  வெளியே  வந்து..
      ‘இராமு…  எனக்கு  டிரிங்ஸ்செல்லாம்  வேண்டாம்..“ என்று  சிரித்தமுகமாக  சொல்லி..  உல்லாசமாய்  விசிலடித்தவாறே..  வீட்டிற்க்கு  சென்றான்.  ஆனால்  அபர்ணா  அதற்க்கு  மாறாக..  இத்தனை  பேர்  முன்னாடி  இப்படி  சொல்லிட்டானே..  என்ற  ஆற்றாமையில்  இருந்தாள்.
      வீட்டினுள்  நுழையும்   போதே..  லலிதா   முகத்தை  குழந்தைபோல்  திருப்பிக்கொண்டார்.  சிவமுகிலன்..  தன்  அம்மாவின்  உயரத்திற்க்கு   குனிந்தவன்.. ‘எனக்கு  ரொம்ப  பசிக்குதும்மா..  இன்னும்  கொஞ்சநேரத்தில..  மயக்கமே  வந்திடும்…“ என்றான்  பாவமாக.
      ‘பழனி.. “ என்ற  குரலுக்கு..  பழனி  வந்து   பரிமாற..
      ‘நீ  முதல்ல  சாப்பிடும்மா..” என்று  ஒரு  கவளம் சாதம்  எடுத்து..  தன்  தாயின்  வாயருகே  நீட்டினான்.  அதை  வாங்கிக்கொண்டவர்..  ’ நீயும்  சாப்பிடு..” என்றார். 
      ‘இங்க  நான்  ஒருத்தன்  பசியோட  இருக்கேன்..”  என்றார்  முத்துகிருஷ்ணன்.
      ‘ஏன்ப்பா..  கட்டின பொண்டாட்டியை  ஒரு வேளை  சாப்பாடு  கூட  சாப்பிட  வைக்கமுடியாதா..?   நீங்க  வேஸ்ட்ப்பா.. “ என்றான்  சிரித்தபடி.
      ‘இன்னும்  கொஞ்ச  நாள்ல  நீயும்  இப்படித்தாண்டா  டம்மி  பீஸ்  ஆகப்போற..  எதுக்கும்  பார்த்துப்  பேசு.” என்றார்  கிருஷ்ணன்.
        ‘அப்பா  நான்  இப்பவும்  சொல்றேன்..  உங்களுக்கு   ஒரு  டம்மி பீஸ்  துணைக்கு  கிடைக்குமே  தவிர..  நானும்  என்  அம்மாவும்  எப்பவுமே கெத்துதான்..”  என்று   அம்மாவைப்  பார்த்து  தன்  சட்டைக்  காலரை  தூக்கிவிட்டவன்..    அப்பாவைப்  பார்த்து  கெஞ்சலாக  கண்ணடித்தான்.
        ‘டேய்  நீ  உண்மையாவே  பிழைச்சுக்குவடா..  ம்ம்..  நானெல்லாம்  என்ன  டாக்டரா.. இருந்து..  என்ன  யூஸ்..?  உன்  திறைமையெல்லாம்  எனக்கு   வராது  சாமி.” என்றார்  மெச்சுதலாக.
        ‘சிவா..  அந்த  பொண்ணு  எப்படியிருப்பா..?  போட்டோ  வச்சிருக்கியா..?  ரொம்ப  அழகா  இருப்பாளா..?”
         ‘அம்மா..  என்கிட்ட போட்டோல்லாம்  இல்லைம்மா..  ஒரு  உண்மையை  சொல்லட்டுமா..?  நான் அவகிட்ட  நான்  லவ்  பண்றன்னு  இன்னும்  சொல்லவேயில்லை..” என்றான்  சோகமாக.
         ‘என்னடா..  சொல்ற.. ?”
          ‘நிஜம்மாதான்மா  சொல்றேன்…  அதை  அவகிட்ட  சொல்றதுக்குள்ள   எனக்கும்  அவளுக்கும்  ஒரு  சின்ன  சண்டையாயிடுச்சி..    நான்  விரும்புற   பொண்ணு  யார்  தெரியுமாம்மா..?   நம்ம  வெற்றி  கல்யாணம்  பண்ணப்போற  பொண்னோட   தங்கையைதான்  நான்  விரும்பறேன்.   வர  வெள்ளிக்கிழமை..  வெற்றிக்கும்  அவங்க  அத்தைபொண்ணு  ஆனந்திக்கும்   என்ங்கேஜ்மெண்ட்  வச்சிருக்காங்க..  வெற்றி காலைலதான்  சொன்னார்.  உங்களுக்கும்  சொல்றேன்னு  சொல்லியிருக்கார்..  நாம  நேர்ல  அவங்க  வீட்டிற்க்கு  போய்  உங்க  மருமகளை   பார்க்கலாமா..?” என்றான்.
        ‘படவா..  எல்லாத்தையும்  பக்காவா  ப்ளான்  பண்ணி  வச்சிட்டு..  என்கிட்ட  பர்மிசன் வேறையா..? வெற்றியோட  அத்தைபொண்ணுன்னா..  அப்ப  நமக்கும்  சொந்தம்தாண்டா..  இதை  ஏன்  முன்னாடியே  என்கிட்ட  சொல்லலை..?” என்றார்  சந்தோசமாய்.
         ‘என்னம்மா..  இப்படி  பட்டுன்னு  சொல்லிட்டிங்க..  அப்ப  நான்  முன்னாடியே  சொல்லியிருந்தா…  நீங்க  சம்மதிச்சிருப்பிங்களா..?” என்றான்  ஆச்சர்யமாக.
       ‘எனக்கு  உன்  காதல் மேல  எல்லாம்  கோபம்  இல்லை   சிவா..  ஆனா..  நம்ம  ஜனமா   இல்லாம  இருந்து..  வரவ  உன்னை  என்கிட்ட  இருந்து  பிரிச்சிட்டான்னா..  அதை  என்னால நினைச்சே  பார்க்க  முடியலை..  அதுதான்  எனக்கு  பயம்..” என்று  சொல்ல..
       ‘அம்மா..  குணமெல்லாம்  நம்ம  ஜனமா   இல்லையாங்கறதுல  இல்லம்மா..   நான்  அப்படி  நினைச்சும்  அவளை  லவ் பண்ணலை..  உண்மையாவே  அவ  இன்னசன்ட்மா.. “ என்றான்  அபர்ணாவின்  நினைவில்.
     ‘உனக்கு  நீ  சொல்றது  சரி..  எனக்கு  நான்  நினைக்கிறதுதான்  சரி..  வர  வெள்ளிக்கிழைமை   நாம  கண்டிப்பா  போகலாம்.” என்றார்  சந்தோசமாக.
        ‘இன்னும்  ஒரு  முக்கியமான  விசயம்..   அபர்ணா  என்மேல  வெறுப்புலதான்  இருக்கா..  நான்  ரொம்ப   கெட்டவன்னு  வேற  அப்பாகிட்ட  சொல்லியிருக்கா..  அந்த  கோபத்தில   நான்  இப்ப  அவகிட்ட  ஒரு  கெத்து மெய்ன்டன்  பண்ணிட்டு  இருக்கேன்..  நீங்களும்  அதையே  மெய்ன்டன்  பண்ணுங்க..” என்றான்  எச்சரிக்கையாக.
      

Advertisement