Advertisement

‘அவ  இன்டர்வியூக்கு  வந்தபோதே  அவளை  எனக்கு  ரொம்ப  பிடிச்சிருச்சா…  அதனால  அப்பவே    ஒரு  வருசத்துக்கு முன்ன  ரிலீவ்  பண்ணமாட்டேன்னும்..  ஒருவருசம்  முடிஞ்சதுக்கப்புறம்தான்  ஒரிஜினல்  சர்டிபிகேட்ஸ்சை  திருப்பி தருவேன்னும்   அவகிட்ட அக்ரிமெண்ட்ல   கையெழுத்து  வாங்கிட்டுதான்  அப்பாயின்மென்ட்  ஆர்டரையே  கையில  கொடுத்தேன்..  அந்த  லூசு..  அத  மறந்திட்டு  நான்  வேலைக்கு  வரமாட்டேன்னு   சொல்லிட்டிருக்கா..  அவளை  வேலைக்கு  வர  வைக்கிறது  ரொம்ப  சுலபம்  அதநான்  பார்த்துக்கிறேன்..”  என்றான்.
    ‘நீதான்  இப்ப  என்னை  டென்சன்  பண்ற..  எல்லாத்தையும்   நீயே  பார்த்துக்குவன்னா..   என்ன  எதுக்குடா.. வரசொன்ன…?”
       ‘வெற்றி..  என்னைய   கெட்டவன்னு  என்கிட்ட  சொன்னது  மட்டுமில்லாம   எங்கப்பாகிட்டையும்   அதையே  சொல்றா.. பேசாம..  கடத்திட்டு  போய்  தாலி  கட்டிடட்டுமா..?”  என்றான்  யோசனையாக.
      ‘ஏன்..  கட்டமாட்ட..?  இப்ப  என்கிட்டையும்   அத்தான்    அவன்  ரொம்ப  கெட்டவன்..  நீங்க  அவனை  பார்க்க  போகக்கூடாதுன்னு  ஆர்டர்  போட்டா.  ஆனந்திதான்..  அப்படியெல்லாம்   பேசக்கூடாதுன்னு  உன் ஆளை  சமாதானப்  படுத்திட்டு  இருந்தா..    அவங்களை  கண்டுக்காம நான்பாட்டுக்கு    கிளம்பி  வந்துட்டேன்..” என்றான்.
      ‘ஓ..ஹோ…  என்னை  அவன்   இவன்னு  சொல்ற  அளவுக்கு..  அந்த  பிள்ளபூச்சிக்கு   கொடுக்கு  முளைச்சிருச்சா..?   இதுல  உன்னை  வேற  என்கிட்ட  பேசக்கூடாதுன்னு  ஆர்டர்  வேற  போடறாளா..?  பார்த்துக்கலாம்..  பார்த்துக்கலாம்..” என  பல்லைகடிக்க..
     ‘ஒரு  கொஞ்சநாள்  விட்டுபிடி  சிவா..”  என்றான்  மன்றாடலாக.
     ‘என்னால  விடமுடியலயே  வெற்றி..  வேணும்னா  பிடிச்சிட்டு..  அப்புறம்  விட்டுடட்டுமா..?”  என்றான்  சிரித்தமுகமாக..
       ‘பிடிச்சிட்டு  விட்டுருவியா  நீ..?   என் அபர்ணாக்கு  ஒன்னுன்னா   உன்னை  சும்மா  விடமாட்டேன்  புரிஞ்சிக்கோ..” என  சிரித்துக்கொண்டே   மிரட்டி..  ‘நான்  என்ன  செய்யனும்  உனக்கு..?” என்றான்  சீரியசாக.
     ‘அபர்ணாகிட்ட இங்க   வேலைக்கு  வரவேண்டிய  அவசியத்தைப்  புரிய  வை..   இனிமேல்   அவளை   தொல்லை  பண்ணமாட்டேன்.  அது  என்னோட  கம்பெனி  வளர்ச்சியைதான்  பாதிக்கும்னு   எனக்கும்    தெரியும்.    முக்கியமா   பார்க்கிற  எல்லார்கிட்டயும்   நான்  கிஸ்பண்ணிட்டேன்னு  தண்டோரா  போடவேணாம்னு  சொல்லு..   நான்  அவளை  வேற  விதத்தில..  டீல்  பண்ணிக்கிறேன்..” என்றான்.
      ‘நீ  டீல்  செய்த  லட்சணம்  போதும்டா  சாமி..  கம்பெனியை  வெற்றிகரமா  நடத்திட்டா  போதுமா..?  ஒரு  பொண்ணுகிட்ட   அவ  மனசு  நோகமா  ப்ரப்போஸ்  கூட  பண்ணத்தெரியல..   கொஞ்சநாள்  பொறுமையா  இரு..  நானே  ஆன்ட்டிகிட்ட  இதுபத்தி  பேசுறேன்..” என்றான்  வெற்றி..
      ‘உண்மையாவே  என்னோட  ப்ராஜக்ட்  பென்டிங்  ஒர்க்   முடிக்கத்தான் அவளை  சீக்கிரமா  வரசொன்னேன்.  ஆனா..  அவ  பேசின  பேச்சு   இருக்கே..  அது  அப்படியே  என்மூடை  ஸ்பாயில்  பண்ணிடுச்சி.  அதுக்கப்புறம்  என்னன்னவோ  நான்  பிளான்  பண்ணாத  விசயம்  எல்லாம்  நடந்திடுச்சி.  நான்  அப்படி  நடந்திருக்கக் கூடாதுதான்..     என்னை  மீறி தான்   அப்படி நடந்துகிட்டேன்..  ரொம்ப  கில்டியா  இருந்திச்சா…    நேத்து  நைட்  டிரிங்ஸ்  வேற  அடிச்சிட்டேன்.” என  வருந்தினான்.
      அதிர்ந்தவன்.. ‘ஏய்… நீ  என்ன  முட்டாளா..?   காதலை  சொல்லாம  முத்தம்  கொடுக்கறதும்..  பிரச்சனையை  சால்வ்  பண்ணாம  தண்ணியடிக்கறதும்..   உன்கிட்ட  இதை  நான்  எதிர்பார்கவே  இல்லை  சிவா.. உங்க  அம்மாக்கு  தெரிஞ்சா  உடனே  என்னைத்தாண்டா  கேட்பாங்க..” என்றான்  கடுப்பாக.
   ‘ம்க்கூம்…  அம்மாக்கு  தெரியலைன்னா  என்ன..? அதுதான்  என்  அப்பா  கண்டுபிடிச்சிட்டாரே..”
    ‘அடப்பாவி..  ஏண்டா  குடிச்சதுதான்  குடிச்ச..  ரூம்க்கு   போய்  தூங்கி  தொலைய வேண்டியதுதான..?  அப்பாக்கு  எப்படிடா..  தெரிஞ்சது..?  என்ன  சொன்னார்..?”  என்றான்  பதறி.
    ‘நேரடியா  என்கிட்ட சொல்லலை..  ஆனா  அவருக்கு  தெரிஞ்சிடுச்சின்னு     எனக்கு  புரிய  வச்சிட்டார்.  இதுவும்  நல்லதுக்குன்னுதான்  நான்  நினைக்கிறேன்.  என்  காதலோட  ஆழம்  என்னன்னு  இப்ப  தெரிஞ்சதால..  அம்மாகிட்டேயும்  அவரே  எடுத்து  சொல்வார்ன்னு  நினைக்கிறேன். 
     அப்பாக்கு  தண்ணியடிச்சி   சாக்  கொடுத்தமாதிரி..  அம்மாவை  சம்மதிக்க  வைக்க   நான்  ஒரு  வேளை  சாப்பிடாம  இருந்தாலே  போதும்..” என  சிரிப்போடு  சொன்னவன்..  
      ‘மூடே  சரியில்லாம  இருந்ததா..  அதான்  உன்னை  வரசொன்னேன்..  உன்கிட்ட  பேசினதுக்கப்புறம்தான்  கொஞ்சம்   ரிலாக்சா  இருக்கு..   சாரி  வெற்றி  நீ  ஆனந்திகூட  ஸ்பெண்ட்  பண்ற  டைமையும்  நான் கெடுத்திட்டேன்..” என  வருந்த..
    ‘அதுதான்..  அபர்ணாவும்   நீயும்  எங்களை  நல்லா..  வச்சி  செய்யிறிங்களே..  உன்  ஒன்  சைடு  காதல்  டபுள்  சைடா..  ஆகும்போது   இதுக்கு  நான்  பழிவாங்கிக்கிறேன்..  இப்ப  முதல்ல  அதை  டபுள்  சைடாக்கிற  வழியை  மட்டும்    சொதப்பாம  பாரு..  
      நான்  பார்க்கறதுக்காக  ஆனந்தி     அழகா  டிரஸ்  பண்ணியிருந்தா..  ஆனா  நான்  அவளை  சரியாக்கூட  பார்க்கலை..   ஏண்டா..  என்னைப்  பார்த்தா.. உனக்கு  பாவமாயில்லையா..?” என்றான்  பாவமாக.
     ‘சரி..சரி  அழாத  வா..போலாம். “ என்று  சிரித்துக்கொண்டே கிளம்பினான்  சிவமுகிலன்.
      நீலகண்டன்   ஹாலில்  டிவி  பார்த்துக்கொண்டிருந்தார். ‘மாமா..” என்றழைத்தபடி  உள்ளே   வந்தான்  வெற்றி.  
     ‘ஆனந்தி..  வெற்றி  வந்திருக்கார்..  தண்ணி  கொண்டு வாம்மா.” 
     ஆனந்தியிடம்  தண்ணீர்  வாங்கி குடித்தவன்.. ‘மாமா..  அப்பாக்கு   அத்தைகூட  பேச  ஆசை..  ஆனா  ஈகோ தடுக்குது.   அத்தையை  அப்பாகிட்ட  பேச  வைக்கனும்..   அதுக்கு  முதல்ல  நீங்க  அனுமதிக்கனும்..”  என்றான்.
     ‘என்னப்பா என்கிட்ட  அனுமதி   கேட்க்கிற..?   நான்  என்ன  சொல்லப்போறேன்.? உன்  அத்தைகிட்ட    இதுவரைக்கும்  உங்க அப்பாவைப்பத்தி    தவறா   சொன்னதும்  இல்லை..  உன்  அண்ணனோடு  பேசக்கூடாதுன்னு  கண்டிசனும்  போட்டதில்லை. 
      சந்திராவை  நான்  என்கூட  அழைசிட்டு  வரும்போது  அவளுக்கு   ரொம்ப  சின்ன  வயசு.  யாராயிருந்தாலும்  இந்த  கோபம்  நியாமானதுதான்.  இவ்ளோ  நடந்ததுக்கப்புறமும்..  உன்  அப்பா   எங்களோட  உறவு  வச்சிக்க  சம்மதிக்கிறார்னா..  உண்மையாவே  அது  அவரோட  தங்கச்சி  மேல  அவர்  வச்ச  பாசத்தைதான்  காட்டுது.   எனக்கு  இதுல  சந்தோசம்தான்  வா..”
     சந்திராவிடம்  விபரம்  சொல்லி..   தன்  அப்பாவிற்க்கு  அழைப்புவிடுத்து..  தன்  அத்தையிடம்  மொபைலை  கொடுத்தான்  வெற்றி.
      ‘சொல்லு  வெற்றி..” என்றார்  சந்திரவாணன்.  
       இங்கு  கண்ணீரோடு  சந்திரா.. ‘அண்ணா.. “ என்று  அழைத்த  ஆழ்ந்த  அழைப்பில்  சற்று  நேரம்  அமைதியாகிவிட்டார்  சந்திரவாணன்..  
       பேசுவாரா..  பேசமாட்டாரா..?  என்ற  தவிப்பில் சந்திரா.. ‘அண்ணா..  லைன்ல  இருக்கிங்களா..?”  என்றார்  பரிதவிப்பாக.
    ‘ம்.. நீP  நல்லா  இருக்கிறியாம்மா..?”  என வாஞ்சையா  கேட்டு..   தங்கை அழுவதை  உணர்ந்தவராய்..   ‘அழாத  சந்திரா..” என்றார்  ஆறுதலாக. 
   ‘என்னை  மன்னிச்சிடுங்கணா..” என்றவரின்  குரல்  தழுதழுக்க..
   ‘பழசைப்  பேசவேண்டாம்..   முதல்ல  அழாத..  அப்புறம்  உன்  மருமகன் எதுக்குப்பா  என்  அத்தையை  அழ  வைக்கிறிங்கன்னு   என்னை  தான்  திட்டுவான்..” என்றார் இயல்பாக.
    ‘அண்ணி  நல்லா  இருக்காங்களா..”
     ‘எல்லாரும்  நல்லா  இருக்காங்கம்மா..  போனை  என்  மருமககிட்ட  கொடும்மா..“ என்றார்.
    ஆனந்தியிடத்தில்.. ‘உன்  மாமா.. உன்கிட்ட  பேசனுமாம்.” என  ரகசிய குரலில்  சொல்லி  மொபைலை  நீட்ட..  ஆனந்தி   பயத்துடன்..  வேண்டாம்  என்பது  போல்   தலையசைத்தாள்.
    ‘ஒன்னும்   சொல்லமாட்டார்  பேசு..“ என்று   சந்திரா  தைரியம்  கொடுக்க..
     ‘ஹ..லோ..” என்றாள்  சன்னக்குரலில்  சங்கீதமாக.
   ‘என்கிட்ட  உனக்கு  என்னம்மா  தயக்கம்..?  பெண்  குழந்தைங்களெல்லாம்..  என்னைக்குமே  அவங்க  தாய்மாமாவோட  சொத்து.   வெற்றியை  விட  என்கிட்ட  உனக்குத்தான்  இனிமேல்  முதல்  உரிமை..”  என  சந்திரவாணன்   சகஜமாக  பேச..
     ‘ச..ரி..ங்க.. மாமா..”  என்றாள்  தைரியம்  வரப்பெற்றவளாக.
    ‘ம்ம்  அப்படித்தான்  சொல்லனும்..” என அதிகாரமாக சொல்லி..  ‘உன்  அப்பா  நல்லா  இருக்காரா..?”  என்றார்  சற்று  தயக்கமாக.
     ஆனந்தி..  ‘நல்லா  இருக்காங்க..  இங்க  பக்கத்திலதான்  இருக்காங்க..“ என்று  அப்பாவைப்  பார்த்து  உங்களைதான்  கேட்டாங்க  என்பதுபோல்  சந்தோசத்தோடு   சைகை  செய்தாள். 
     இரண்டு பெண்பிள்ளையைப்  பெற்றவராகவும்..  அன்று  தாம்  சந்திராவை  அழைத்து  வந்தபோது..  ஒரு  அண்ணனாக  எப்படி  துடித்திருப்பார்  என புரிந்தவராகவும்..  தன்  மகள்  வெற்றியை  விரும்புகிறாள்..  இனி  அது  சந்திராவின்  அண்ணன்  வீடு மட்டுமல்ல..   தன்  அன்பு மகளுக்கு  புகுந்தவீடோடு..  தனது  முதல் சம்மந்தி  வீடும்   என  உணர்ந்து..   அன்று  சந்திரவாணன்   தன்னை  கேவலமாக  பேசியதெல்லாம்    மன்னித்து..  மகளிடமிருந்து   தானாக  போனை வாங்கியவர்..
   ‘நான்  நீலகண்டன்..  எப்போ  வரிங்க  உங்க  தங்கையைப்  பார்க்க..?” என்றார்  தயக்கமில்லாத  உரிமைக்குரலில்.
    ‘நான்  பேசினதெல்லாம்  மனசுல  வச்சிக்காம..   என்  தங்கையை  ராணி  மாதிரி  பார்த்துக்கிறிங்கன்னு  எல்லாம்  கேள்விபட்டேன்..  நானா  பார்த்திருந்தாலும்..  சந்திராவுக்கு  இப்படி  ஒரு  மனிதனை  தேடியிருக்க  முடியாது.  ரொம்ப  சந்தோசமா  இருக்கு.. 
     என்ன  ஒரு  வருத்தம்ன்னா..   இரண்டு  மருமகளுங்க  பிறந்திருக்காங்க..  அதைகூட  சொல்லாம  விட்டுட்டிங்க..?” என  உரிமையோடு  குறைபட..
       சிறிய  அமைதிக்குப்பின்..  ‘வெற்றி.. வெற்றின்னு  ஒரு  பையன்..  என்  மகளையே  சுத்தி  சுத்தி  வந்திட்டிருக்கான்..  ஆளும்  பார்க்க  என்  மச்சினன்  மாதிரியே  வாட்டசாட்டமா  நல்லாத்தான் இருக்கான்..  இருந்தாலும்    என்  மகளோட  தாய்மாமன்கிட்ட  ஒருவார்த்தை  கேட்டுட்டு   முடிவு  பண்ணலாம்னு  இருக்கேன்..   அடுத்தவாரத்தில  வீட்டுக்கு  வாங்களேன்..  உங்க  தங்கையையும்   நாங்க  பெத்த  தங்கங்களையும்  பார்த்தமாதிரி   இருக்கும்..” என்று   நீலகண்டன்   அழைப்புவிடுக்க..
      ‘வெற்றிப்  பையனை  உங்களுக்கு  பிடிச்சிருக்கா..?  என்னைமாதிரியே  நல்லா இருக்கானா..?  தங்கங்களை  பெத்துவச்சா  சுத்திசுத்தி  வராம  என்ன  பண்ணுவான்…?  அடுத்த  வராத்தில  ஒருநாள்  குடும்பத்தோட  வரோம்  மாப்ள..” என  உற்ச்சாகத்தோடு  சொன்னார்  சந்திரவாணன்.
      ‘ரொம்ப  சந்தோசம்..  உடம்ப  பார்த்துக்குங்க…  வெற்றிகிட்ட  கொடுக்கிறேன்.” என  வெற்றியிடம்  கொடுக்க..
      ‘சொல்லுங்கப்பா..” என்றான்.   ‘ரொம்ப  சந்தோசம்டா..   ஆமா..  நீ  என்ன  சேந்தாப்ல  பரிசம்  போட்டபின்னாடிதான்   வருவியா..? இல்ல..  எங்களை  வந்து  என்  தங்கச்சிவீட்டுக்கு  கூட்டிட்டு  போவியா..?” என்றார்  உல்லாசமாக.
      ‘ப்பா..  ஏன்ப்பா  இப்படி  மானத்தை  வாங்குறிங்க..?  எனக்கு   அங்க  நிறைய  வேலை  பெண்டிங்  இருக்கு..   நான்  இன்னும்..  ஒரு  மணிநேரத்தில  கிளம்பிடுவேன்.   நீங்க  கட்  பண்ணுங்க..” என்றான்  சிரித்தபடி.
     ‘என்னப்பா  சொல்றாரு..?  ஏன்  கட்  பண்ணிட்ட..?”
     ‘மாமா..  எங்கப்பா..  வீட்டுக்கு  வர  ஐடியா..  இருக்கா..? இல்லையான்னு  என்னை  கிண்டல்  பண்றார்.” என்றான்  வெக்கத்தோடு.
      கர்வம்  துறந்து..  ஒருவரோரு  ஒருவர்  மனம்விட்டு  பேசியதில்..     முப்பது  வருட பகையும்..  முப்பது  நிமிடத்திற்க்குள்  காணாமல்  போக..  வெற்றியை  கட்டியணைத்தார்  நீலகண்டன்.

Advertisement