Advertisement

அத்தியாயம் 28
அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா. 
“இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து வீசையில உக்காந்து இருக்கிறதே தனி சுகம் தான்” வரளிநாயகி சொல்ல 
“இன்னைக்கின்னு வண்டியெல்லாம் இந்தப்பக்கமாகவே போகுது போல. இந்த நீரோடையோட சலசலப்பும், சிலுசிலு காத்தும் சுகமா இருக்கு” நீரோடையின் பக்கம் திரும்பி அமர்ந்தவாறு கவி.
“ஏய் சீனு சட்டுபுட்டுனு ஜூசை கொண்டு வாப்பா இருட்டுறதுக்குள்ள குடிச்சிட்டு கிளம்பலாம்” வரளிநாயகி கத்தி சொன்னது சீனுவின் காதில் விழுந்தால் தானே! 
சற்றுநேரம் கழித்து ஒரு தட்டில் இரண்டு குவளையை வைத்தவாறு ஒருவன் கவி, வரளிநாயகி அமர்ந்திருக்கும் இடத்துக்கு வர கவி எழுந்து குவளைகளை கையில் எடுத்து ஒன்றை வரளிநாயகிக்கு கொடுத்தவள் மற்றொன்றை அருந்தியவாறே அமர முற்பட
மறைத்து வைத்திருந்த கத்தியை அவன் எடுக்கவும் வரளிநாயகி “டேய் யார் டா நீ…” என்று சொல்வதுதான் கவியின் காதில் விழுந்தது அவள் அவன் புறம் திரும்பும் போது நீளமான கத்தியை கவியின் வயிற்றில் குத்தியவன் மீண்டும் கைப்பற்ற வரளிநாயகி கத்திய கத்தில் அனனைவரும் இப்பபக்கம் பார்த்து ஓடி வரவும் ஓட்டமெடுத்தான். 
சொருகிய கத்தியை உருவியதும் இரத்தம் குபீரென பாய  வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன ஆனதோ என அதிர்ச்சியடைந்த கவி “என் குழந்தை என் குழந்தை” என்றவாறே மடங்கி சரிய வரளிநாயகி கூப்பாடு போடவே ஆரம்பித்தார். 
ஆதியும், கார்த்திக்கும் கவியிடம் வந்தவர்கள் ஆதி கவியை கட்டிக்கொண்டு அழ, கண்களில் கண்ணீர் வழிய நின்ற கார்த்திக் பல சாலைவிபத்தை பார்த்து கற்றுக் கொண்ட அனுபவத்தில் உடனடியாக செயலில் இறங்கினான். 
ஆதியின் நலன் விரும்பிகளும் உதவிக்கு வரவே கவியின் இரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தவன், அம்பியூலன்சுக்கும் அழைத்திருந்தான். ஆம்பியூலன்ஸ் வர எப்படியும் ஐந்து அல்லது, பத்து நிமிடங்கள் ஆகும் என்பதால் கவியையும் சீனுவையும் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் பாதி வழியில் ஆம்பியூலன்ஸ்சுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று உடனடி முடிவெடுத்தவன் கவியை தாங்கள் வந்த வண்டியில் ஏற்றியவன் ஆதியை உலுக்கி வண்டியை எடுக்க சொல்ல வண்டி ஓட்டும் நிலைமையில் ஆதி இல்லை. 
அங்கிருந்த ஒருவர் நிலைமையை புரிந்துக் கொண்டு வண்டியை எடுக்க கவியை மடியில் கிடத்திய ஆதி பின்னாடி அமர்ந்துக்கொள்ள வரளிநாயகி முன்னாடி அமர வண்டி மருத்துவமனையை நோக்கி வேகமெடுக்க, சுயநினைவில்லாமல் இருந்த சீனுவை ஆருவோடு ஏற்றிக்கொண்டு அவர்கள் வந்த வண்டியில் மருத்துவமனைக்கு பறந்தான் கார்த்திக். 
   
ஆதியை கண்ட நொடியில் இருந்து திக்கித்திக் பேச முயன்றால் கவி “ஐ லவ் யு ஆதி நம்ம குழந்தை ஆதி… நான் செத்துடுவேனா?.. ஐ லவ் யு ஆதி. நம்ம பாபா” 
“பேசாத கவி, பேசாத அமைதியா இரு. உனக்கு ஒன்னும் ஆகாது” கண்களில் நீர் வழிய நின்றான் ஆதி. 
   
“இல்ல ஆதி என்னால இப்போ சொல்ல முடியலைன்னா எப்பவுமே சொல்ல முடியாம போகுமோன்னு பயமா இருக்கு. நீங்க மாட்டும் என் லைப்புல வரலைனா என் லைப் முழுமை அடைந்திருக்காது. உங்கள நான் ரொம்ப லவ் பண்ணுறேன் ஆதி. ஐ லவ் யு சோ மச்” என்றவள் வருந்தி புன்னகைத்தாள்.
“பேசாத லயா… நீ கஷ்டப்பட்டு பேசுறதால ப்ளீடிங் நிக்க மாட்டேங்குது. ப்ளீஸ் பேசாத” ஆதி கெஞ்சிக்கொண்டிருக்க கவி பேசிக்கொண்டே   இருந்தாள்.
கவியும், சீனுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட  உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. 
ஜமீனுக்கு செய்தி போக அனைவரும் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். 
சீனுவுக்கு தலையில் அடிபட்டதால் உள்ளே இரத்தம் கசிந்து, அழுத்தம் கூடியதால் தலையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. கவியின் நிலைமைதான் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. மருத்துவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஆதியை உடனே அழைத்தனர். 
கவி மற்றும் குழந்தையை பற்றி நினைத்து அழுது கொண்டிருந்த வீட்டார் சீனுவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்று அறுவை சிகிச்சை செய்யும் முன்பே மருத்துவர் சொல்ல கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். 
ஆதியை மருத்துவர் அழைக்கவும் தளர்ந்த நடையோடு செல்பவனை  தாங்கிப் பிடித்தப்படி கார்த்திக் நடக்க குழந்தைக்கு என்ன ஆகிற்றோ என்று உள்ளங்கள் பதறினாலும் எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற வேண்டுதல் வேறு வைக்க, அழும் குரலும், புலம்பல்களை அந்த தீவீர சிகிச்சை பிரிவின் முன் ஓசைகளாக ஓங்கி ஒலிக்க தாதி ஒருவர் வந்த அனைவரையும் வைட்டின் அறையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ள வாசு அனைவரையும் அழைத்துச் சென்றான். 
மருத்துவரின் முன் அமர்ந்திருந்த ஆதி அவர் சொல்ல போகம் செய்திக்காக மனதை கல்லாக்கிக் கொண்டு கார்த்திருக்க, 
“சார் மேடமோட வயிற்றிலே இருக்குற குழந்தைக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.” என்று கண்டேன் சீதையை பாணியில் முதலில் சந்தோசமான செய்தியை சொல்ல ஆதி, கார்த்திக் இருவரின் முகமும் மலர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். 
“நான் சொல்லல ப்ரோ கவிக்கு ஒண்ணுமில்ல. அவளுக்கு ஒன்னும் ஆகாது” கார்த்திக் சொல்ல கண்ணீரோடு புன்னகைத்தான் ஆதி.
அவர்கள் இருவரையும் பாத்திருந்த டாக்டர் அந்த ஏசி அறையிலையும் வியர்வையில் குளித்து வழியலானார்.  
“என்னடா சொல்லவரும் விசயத்த கேக்காம இவனுங்க பாட்டுக்கு குழந்தை பொறந்த மாதிரியே சந்தோச படுறாங்களே! என்ன பண்ணுறது?” மருத்துவர் முழிபிதுங்கி நிற்க கவியின் உண்மையான நிலையை அறியாமல் ஆதியும் கார்த்திக்கும் சந்தோச மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.
இருவரும் அமைதியாவது போல் தெரியவில்லை. “சார், சார் ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கொஞ்சம் கேக்குறீங்களா?” மருத்துவர் அழைக்க இருவரும் அவர் புறம் திரும்பினார்கள்.
கணனியில் கருப்பையில் நான்குமாத குழந்தையின் உருவமும், சிறுநீரகத்தின் உருவமும் இருக்க அதை அவர்கள் புறம் திருப்பிய மருத்துவர் 
“கத்திய குத்தும் பொழுது மறுபக்கமா பிடிச்சிருப்பான் போல, இடது பக்கமா சொருகியவன் இழுக்கும் பொழுது மேல் நோக்கி இழுத்து இருக்கான். அதுல சிறுநீரகம் கட் ஆகிருச்சு. கருப்பை இங்க இருக்கு அதனால குழந்தைக்கு ஒன்னும் ஆபத்தில்லை. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியுதா?”
கார்த்திக்கும், ஆதியும் கலவரமடைய டாக்டர் தொடர்ந்தார் “ஏற்கனவே அவங்களுக்கு ஒரு கிட்னி தான் இருக்கு. இப்போ அது துண்டாக்க பட்டிருக்கு அதுவும் துரு புடிச்ச கத்தி. உடனே அவங்களுக்கு வேற சிறுநீரகம் பொருத்தணும். குடும்பத்துல யாராவது கொடுப்பார்களா? வெளில ஏற்பாடு பண்ணனுமா? குடும்பத்துல கொடுக்க விருப்பப்படுறவங்க உடனே பிளட் செக் பண்ண சொல்லுங்க” என்று மூச்சு விடாமல் சொல்லி முடிக்க, கார்த்திக்கும், ஆதியும் அதிர்ச்சுக்குள்ளானார்கள்.
“இப்போ கவியோட கண்டிஷன் என்ன?” கார்த்திக் பதட்டமாக 
“துருப்புடிச்ச கத்தி, துண்டான கிட்னி அவங்களுக்கு வேற கிட்னி பொருத்தணும். அதுவும் உடனே நீங்க உக்காந்து வேஸ்ட் பண்ணும் ஒவ்வொரு செக்கனும் அவங்க உயிருக்கு ஆபத்தானது. குடும்பத்துல கிட்னியை கொடுக்க பிரியப்படுறவங்க பிளட் செக் பண்ணட்டும். நானும் என் சோர்ஸ் மூலமா கிடைக்குதான்னு பார்க்குறேன்” என்றவர் எழுந்து செல்ல முதலில் ஆதி சென்று இரத்த பரிசோதனையை மேற்கொண்டவன், குடும்பத்தாரிடம் வந்து விஷயத்தை சொல்லலானான்.
ஜமீன் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சிக்குள்ளாக மேனகை வானதி குறையுள்ள பெண்ணை தங்கள் ஒரே வாரிசுக்கு கட்டிக்க கொடுத்து ஏமாற்றி விட்டதாக சண்டை போட ஆரம்பிக்க, வரளிநாயகி அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார். 
கர்ண விஜயேந்திரன்  ஆதியிடம் என்னவென்று விசாரிக்க, வானதி தன்னிடம் உண்மையை கூறியதையும், தானே ஜமீன் குடும்பத்தாரிடம் உண்மையை கூறுவதாக சொன்னதாக ஆதி கூற
“நீ சொல்லுவ? அவங்களுக்கு எங்க போச்சு புத்தி? இவ எல்லாம் படிச்சவ, பெரியமணிசினு சொல்லிக்கிட்டு, ஐயோ என் அண்ணன் இல்லாம போய்ட்டான்! இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆகா விட்டிருப்பானா” என மீண்டும் ஒப்பாரிவைக்க ஆரம்பித்தாள் மேனகை. 
“என் கவிய காப்பாத்தணும் கிட்னி கொடுக்க முன் வருவாங்க பிளட் டெஸ்ட் எடுக்க வாங்க” ஆதி கத்தி சொல்ல 
வானதி, கார்த்திக்கின் சிறுநீரகம் பொருந்தாது என்று ஏற்கனவே அறிந்திருந்ததால் கார்த்திக் பித்யுத்துக்கு அழைத்து விஷயத்தை சொல்ல உடனனே வருவதாக சொன்னவன் அதுவரை கவியின் நிலைமை என்ன என்று தகவல் அனுப்பிக் கொண்டு இருக்குமாறு சொன்னான். 
இங்கே தீப்தி சீனுவுக்கு அழைத்து அழைத்து பார்த்தவள் அது தொடர்பு எல்லைக்குள் இல்லை என்று வரவே! ஒவ்வொருத்தர் அலைபேசிக்கு அழைக்க அவள் இணைப்பை ஏற்றது மேனகை அவளையும் வசை பாடி அறையக்குறையாக விஷயத்தை கூற வாசுவின் எண் இருக்கவே! அவனின் அலைபேசிக்கு அழைத்து முழு விபரத்தையும் பெற்றுக் கொண்டவள் சம்யுத்திடம் உடனே விஷயத்தை சொல்ல குடும்பத்தோடு கவியை காண தஞ்சைக்கு கிளம்பினார்கள்.
வரளிநாயகி அதிர்ச்சியில் அமர்ந்தவாறே இருக்க, கர்ணன் விஜயேந்திரன், இளவரசி, ராணி, சக்கரவர்த்தி இரத்த பரிசோதனைக்காக எழுந்து செல்ல 
சக்கரவர்த்தியின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய மேனகை வசைபாட “என் பொண்ணுக்கு இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா அந்தம்மா போய் இருப்பாங்க, உன்ன மாதிரி உதவி தேவ படும் சமயத்தில் பொய்யா சண்டை போட்டு கிட்டு இருக்க மாட்டாங்க” எனறவர் கையை உதறியவாறு எழுந்து செல்ல 
ஒண்ணுக்கும் உதவாதவர், தண்டம், என்று அன்னையே தந்தையை திட்டுவது ஆரு கண்டிருக்க இன்று அவர் சொன்னதும், செய்யப் போகும் காரியமும் மனதை நிறைத்தது. 
ஆரு செல்லாமல் இருக்கவே கார்த்திக் அவளை முறைக்க, வானதி அவனை அமைதியாக இருக்கும் படி சொல்ல மனைவியை யோசனையாக பார்த்திருந்தான் கார்த்திக். 
கொஞ்ச நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள் எழுந்து சென்று கடைசியாக இரத்த பரிசோதனை செய்து விட்டு வந்து மருத்துவரிடம் சென்று ரகசியமாக கலந்தாலோசித்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள். 
ஆருவின் அமைதியும், யோசனையாக முக பாவனையும், அடிக்கடி கார்த்திக்கை பார்ப்பதும் என்று தவிப்பான உடல் மாற்றங்களை கொடுத்துக் கொண்டிருந்தவளை உன்னிப்பாக கவனித்த கார்த்திக் எதோ சரியில்லை என்று நன்கு புரிந்து கொண்டவன்  ஆருவின் அருகில் அமர்ந்து அவளின் கையை ஆதரவாக பிடிக்க அவளின் கை சில்லென்று இருக்கவே கனிவாக “என்ன பிரச்சினை” என்று விசாரிக்க மென்று விழுங்கியவள் கலங்கிய கண்களோடு “ஒன்றுமில்லை” என்று தலையசைத்து விட்டு வலி நிறைந்த புன்னகையோடு கார்த்திக்கின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். 
கவியை நினைத்து ஆரு கவலையாக இருக்கிறாள் என்றெண்ணிய கார்த்திக் அவள் தலையில் முத்தமிட்டவன் கண்களை மூடிக்கொண்டான்.
சீனுவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்க, அவன் மயக்க நிலையில் இருந்தான். 
இரத்த பரிசோதனை முடிவுகள் வரும்வரை கவியை ஒப்சவெர்சனில் மருத்துவர்கள் வைத்திருக்க, சக்கரவர்த்தி, மற்றும் ராணியின் இரத்த பரிசோதனை முடிவுகள் கவியோடு பொருந்திப்போக  ராணி பிடிவாதமாக தான் தான் சிறுநீரகம் கொடுப்பேன் என்று சொல்ல உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
எல்லாம் அறிந்த இறைவன்  சம்பந்தமில்லாமல் யாரையும் யாரோடும் உறவாக சேர்ந்து வாழ அனுப்பி வைக்க மாட்டான். கவிக்கு இன்னொரு தாயாய் ராணியை அனுப்பி வைத்த நோக்கமே இதுதானோ! பெற்ற அன்னையின் இரத்தம் பொண்ணுக்கு சேரவில்லை. தந்தை வரக்கூடிய தொலைவில்லை. உயிரையே கொடுக்க காத்திருக்கும் காதல் கணவனால் கூட எதுவுமே செய்ய முடியாத நிலைமையில் தவிக்க, கருணை உள்ளமாய் கடவுள் அனுப்பிய அன்னைதான் ராணி. 
“என் கவிமாகாக உயிரையே கொடுப்பேன் ஒரு கிட்னியை என்ன டாக்டர் ரெண்டையுமே எடுக்கோங்க” என்று கையெடுத்து கும்பிட ராணியை கட்டிக்கொண்டு வானதியும், கார்த்திக்கும் அழ ஆதி கையெடுத்து கும்பிட்டான். ராணி அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்றாள். 
ஆரு கலங்கிய கண்களோடு புன்னகைக்க கார்த்திக் அவளை தலையசைத்து அழைக்க கண்களை துடைத்தவாறு வந்தவள் அவன் மார்பில் சாய்ந்து சற்று நேரம் விசும்பி விட்டு அமைதியானாள். கார்த்திக்கும் அவளிடம் ஒன்றும் கேட்காமல் தலையை தடவியவாறு அமர்ந்திருந்தான்.
வாசு அனைவருக்கும் குடிக்க டி வாங்க சென்ற நேரத்தில், சம்யுத் குடும்பத்தோடு வந்து சேர கண்ணாடி வழியாக சீனுவை பார்த்த தீப்தி கதறி அழ அவள் மேல் பாய்ந்த மேனகை 
“உன்னாலதான் ஆச்சு உன் ராசிதான் என் பையன படுக்க வச்சிருச்சு” என கத்தி தீப்தியை அடிக்க இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத தீப்தியும், சம்யுத் குடும்பமும் திகைக்க ஆதி சக்கரவர்த்தியும் மேனகையை பிடித்திழுக்க அடங்காமல் திமிறிக் கொண்டிருந்தாள் மேனகை. 
சாந்தினி தீப்தியை கட்டிக்கொண்டு அழ, தீப்தியும் அழ வானதி என்ன நடக்கிறது என்று ஒரு கணம் திகைக்க இவர்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர் கார்த்திக்கும் ஆருவும். 
சத்தம் கேட்டு வைட்டிங் அறையில் இருந்து  கர்ண விஜயேந்திரன் வெளியே வர யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் பின்னால் வந்த வரளிநாயகி மேனகையை அறைந்திருந்தார். 
மேனகை அதிர்ச்சியில் கன்னத்தில் கைவைத்திருக்க “என்ன பேசுற? ராசி அது, இதுனு? அப்போ ஆதியோட ராசிதானா கவிய படுக்க வச்சது?” அந்த வயதிலும் பெண் சிங்கமாய் கர்ஜிக்க
“இது ஒரு பிராடு குடும்பம் மா… நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க, குறையுள்ள பொண்ண நம்ம பையன் தலைல கட்டி வச்சிட்டாங்க”
“மூடு வாய. அதான் அவன் எல்லாம் தெரிஞ்சிதான் கல்யாணம் பண்ணேன்னு சொல்லுறானே. நீ இத பத்தி பேச கூடாது. அவனை கேள்வி கேக்குற உரிமை இளவரசிக்கு மட்டும் தான் இருக்கு, எங்க அவ?”
“அம்மாவால ரொம்ப  நேரம் உக்கார முடியலன்னு வேற ரூம்ல படுத்து இருக்காங்க” ஆதி சொல்ல 
“சீனுவுக்கு இந்த பொண்ண கட்ட மாட்டேன். இவ கிட்ட என்ன குறை இருக்கோ! என்ன எல்லாம் சொல்லாம மறைச்சாங்களோ!” மேனகை எகிற 
“உன் பையனுக்கு பொண்ணு எடுக்குற விசயத்துல நீ முடிவு பண்ணு, அதுல யாரும் தலையிட மாட்டாங்க. கவிய பத்தியோ! அவங்க குடும்பத்தை பத்தியோ! பேசாத மீறி பேசினா.. கொன்னுடுவேன்” மிரட்டியவர் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார். 
இங்கே நடந்த அமளிதுமளியை கவனிக்கும் மனநிலையில் ஆருவும், கார்த்திக்கும் இல்லை. அவர்கள் இருவரும் சற்றுநேரத்துக்கு வேறு உலகத்தில் இருந்தனர். அந்த சோகமான சூழ்நிலையில் ஆரு கார்த்திக்கு இனிப்பான செய்தியை கூறி இருந்தாள். 
“கார்த்திக் நான் ஒன்னு சொல்லணும். இப்போ சொன்னா நீ ரொம்ப சந்தோச படுவ. யாருகிட்டயும் சொல்லாம உன் கிட்டாதான் முதல்ல சொல்லணும்னு ரெண்டு நாளா வைட் பண்ணிக்கிட்டு இருந்தேன். போன்ல சொல்லாம நேர்லயே சொல்லி, உன் முகத்தை பார்த்துகிட்டே சொல்லி உன் சந்தோசத்தை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்”
“என்னடா விஷயம். இவ்வளவு புதிர் போடுற? நானும் பார்த்து கிட்டுதான் இருக்கேன் ஒருமாதியா தான் இருக்க, என்ன விஷயம்” அன்பாக  கேட்டான் கார்த்திக்.
“நாங்க ரெண்டு பேரும் அம்மா,அப்பாவாக போறோம்” கணவனின் கண்களையே பார்த்து சொல்ல 
“ஏய் நிஜமாவா சொல்லுற?” அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன் “தேங்க்ஸ் டி… ஆமா எப்போ கன்போர்ம் பண்ண?”
“ரெண்டு நாளைக்கு முன்னாடி. நீ வீட்டுக்கு வந்தா உன்ன சப்ரைஸ் பண்ணி சொல்லணும்னு நிறைய பிளான் எல்லாம் பண்ணேன். இப்படி ஹாஸ்ப்பிட்டள்ள சொல்ல வேண்டிய கட்டாயம்” என்றவள் புன்னகைக்க 
அவள் நெற்றியில் முட்டியவன் “நீ டாக்டராக போற, இடம் ஹாஸ்பிடல் இத விட சூப்பர் பிளேஸ் இருக்குமா?” 
“இன்னொன்னு சொல்லணும். நீ கோபப் மாட்டேன்னு தெரியும். இத சொல்லலைனா என் நெஞ்சுல முள்ளா குத்திகிட்டே இருக்கும்” என்றவள் எவ்வாறு சொல்வதென்று நகத்தைக் கடித்து துப்ப 
“அழகான நகம் அத போய் சப்புற” என்றவன் கையை இழுத்து தன கைக்குள் வைத்துக் கொண்டவன் “சரி சொல்லு. ரொம்ப யோசிச்சா மண்டை சூடாகும்” 
“அது வந்து கவிக்கு கிட்னியை கொடுக்க நேர்ந்தா.. குழந்தையை அபார்சன் பண்ண வேண்டி இருக்கும்னு டாக்டர் சொன்னாரு” 
“என்ன சொல்லுற?” கார்த்திக் புரியாது பார்க்க 
“அது வந்து ஒரு வேல கவிக்கு யாருடைய கிட்னியும் பொருந்தலைனா என்னுடைய கிட்னியை கொடுக்கலாம்னு கடைசியா போய் பிளாட் செக் பண்ணேன். அப்பொறம் டாக்டர் கிட்ட நான் பிரேக்னன்டா இருக்குறத பத்தி சொன்னேன். கிட்னி கொடுக்கறதா இருந்த அபார்சன் பண்ண வேண்டி இருக்கும்னு சொன்னாரு அதான் டெஸ்ட் ரிசால்ட்ஸ் வரும் வர நான் உண்டான விசயத்த பத்தி யார் கிட்டையும் சொல்லாம இருந்தேன்” கார்த்திக்கின் முகம் பார்த்து சொல்ல 
அவள் கைகளை பிடித்தவன் கண்களில் ஒற்றிக்கொண்டு “இது போதும் டி…. குழந்தைனா உனக்கு எவ்வளவு இஷ்டம், பிடிவாதம் பிடிச்சி வேணும்னு சொன்ன எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். கவிக்காக நீ அபார்சன் பண்ணுற முடிவுக்கு வந்தியே! போதும் டி… என் லைப்ல எனக்கு கிடைச்ச வரம் டி… நீ” கார்த்திக் ஆருவை அணைத்துக் கொள்ள 
“இல்ல கார்த்திக் நீங்க கிடைக்க நான் தான் கொடுத்து வைக்கணும். பிரெண்டு… தங்கச்சி, பொண்ணா பாக்குற கவிக்கு இவ்வளவும் பண்ணுற நீங்க கட்டின மனைவியை எப்படியெல்லாம் பாத்துக்குவீங்கன்னு யோசிக்காம போய்ட்டேன். என்னெல்லாமோ பேசிட்டேன்” விசும்ப..
“முதல்ல கண்ண தொட. பழையதை பேச கூடாதுனு சொல்லி இருக்கேனே! அறைஞ்சேனா உன்ன. அது நீ என் மேல வச்ச லவ்வால வந்த ஈகோ. உன்ன தவிர என் மேல இவ்வளவு லவ் யாரும் வைக்க மாட்டாங்க டி. என் உறவில் வந்த தேவதடி நீ. ஐ லவ் யு” என்றவன் சில நிமிடங்கள் ஆருவை அணைத்தவாறு இருந்தான். 
“வீட்டுல இருக்குறவங்க கவிய நினைச்சி ரொம்ப கலங்கி இருக்காங்க இப்போ போய் இந்த விசயத்த சொன்னா அத மறந்து நம்ம குழந்தையை பத்தி பேசுவாங்க வா போலாம்” என்றவன் எழுந்துகொள்ள அவன் கூட நடந்தாள் ஆருத்ரா.

Advertisement