Advertisement

“நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?” கார்த்திக் ஆதியின் தோளில் கைபோட்டவாறு  சொல்ல முதலில் திடுக்கிட்டவன் அசடு வழிந்த வாறே 
“ப்ரோ இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க 
“அத நான் கேட்கணும்? நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவேன்னு நான் காவலுக்கு இருக்கேன்” கார்த்திக் நெஞ்சை  நிமிர்த்திக் கொண்டு சொல்ல 
“டேய் டேய் அடங்குகடா… இளவரசியை காவல் வச்சிருக்குறது போல என் பொண்டாட்டிய காவல் வச்சிருக்குறீங்களே! நியாயமாடா? புருஷன் நான் ஒரு வார்த்த அன்பா பேச முடியல, கொஞ்ச முடியல. அது என்னடா… மூணு மாசம் பிரிச்சு வைக்கிறது பாடி கூட தாங்கும்  மனசு தாங்காதுடா…” ஆதி இழுத்து சொல்ல பக்கென்று சிரித்து விட்டான் கார்த்திக். 
“டேய் கருணகாட்டு டா… நாளைக்கு உனக்கும் இதே நிலைமை வரலாம் அப்போ நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேண்டா…” ஆதி கெஞ்ச 
“ம்ம்… கவிக்காக என்னவேனாலும் பண்ணுவியா?” கார்த்திக் குறும்பாக கேட்க பாவமாக தலையசைத்தான் ஆதி. 
“அப்போ இந்த பைப்பு வழியா மேல ஏறி போயேன்” கார்த்திக் அசால்ட்டாக சொல்ல
“அட ஆமால்ல எனக்கு தோணவே இல்ல பாரு” என்ற ஆதி பைப்பின் மீது ஏறி இருந்தான். 
“டேய் டேய்” என்று கத்தியவாறே அவனை பிடித்து இழுத்து கீழே இறக்கிய கார்த்திக் 
“உனக்கென்ன ஜெயம் ரவினு நினைப்பா பைப்ல நடக்க, மவனே கீழ விழுந்து ஏடாகூடமா ஏதாவது ஆச்சு,  கவி உண்டான நேரத்தை சேர்த்து வச்சு இஷ்டத்துக்கு கத கட்டி விடுவாங்க” 
அவன் சொல்வதில் உண்மை இருக்கவே மீண்டும் மாடியை பார்த்தவன் ஒரு பெருமூச்சு விட்டு தலையை கோத
“அந்த பக்கம் மொட்டை மாடிக்கு படிக்கட்டு இருக்கே மறந்துட்டியா?”
“மொட்டை மாடிக்கு எதுக்கு போகணும்” ஆதி கார்த்திக்கை புரியாது பார்க்க 
“கவியும் உன்ன பார்க்காம தூங்க முடியாம எனக்கு போன் பண்ணி உன்ன கூட்டிட்டு வர சொன்னா, மொட்டை மாடில உனக்காக வைட்டிங். வா போலாம்” கார்த்திக் முன்னால் நடக்க 
“டேய் தம்பி… வந்த… விசயத்த சொன்ன…. அத்தோடு கழண்டுக்கணும், நான் தனியாவே போய்க்கிறேன், என் பொண்டாட்டி எனக்காக காத்துகிட்டு இருப்பா” கார்த்திக்கின் தோளில் கைபோட்டு தடுத்து நிறுத்திய ஆதி வேகமாக மொட்டை மாடி படிகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 
“நல்லா வருவடா ஐடியா கொடுத்தவனையே கழட்டி விடுறியா? விடியிறதுக்குள்ள சீனு ரூமுக்கு வந்துடு அப்பொறம் மூணு மாசம் குழந்தை பொறக்குற வரைக்கும் தண்டனையாகிடும்” கடுப்பாக மொழிந்த கார்த்திக் வீட்டை நோக்கி நடந்தான்.
ராணி கேட்ட கேள்வியில் விழித்த கவி முழிக்க “உன் புருஷன் கூட பேச கூட விடாம காலைல இருந்தே ஆள் மாறி ஆள் உன்ன கவனிச்சுகிட்டு உன் கூடவே இருந்தத நானும் பார்த்தேன் கவிமா… குடும்பத்துல உருவான தலைவாரிசுக்கு எதுவும் ஆகிட கூடாதுனு ரொம்ப கவனமா இருப்பாங்க. சாப்பாடு ஊட்டுறது என்ன? தண்ணி கிளாசை கூட தூக்க விடமாட்டேங்குறாங்க பாட்டிமா… ராணிமாதிரி உன்ன கவனிக்கிறது பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. அதுக்காக புருஷனையும், பொண்டாட்டியையும் பிரிச்சி வைக்கிறது கொஞ்சம் ஓவர்தான் இல்லையா” கண்சிமிட்டி சிரித்தவள் 
 “என்னதான் மருத்துவம் வளர்ச்சியடைந்தாலும் பாரம்பரிய குடும்பங்கள்ல இப்படி வழக்கங்கள் இன்னும் இருக்கு. காலப்போக்கில்தான் எல்லாம் மாறும். உன் புருஷன் கூட பேசு கவிமா” என்ற ராணி தலையணையில் தலை வைத்து படுத்துக்க கொள்ள ராணியை கட்டிக் கொண்டு முத்தம் வைத்த கவி வீட்டார் சொன்னதை கேட்டு ஆதி நடப்பதாக நினைத்து தான் அழைத்தால் ஆதி வர மாட்டான் என்று எண்ணி, கார்த்திக்கை அழைத்து ஆதியை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு பின்பக்கமாக வரும்படி கூறினாள். 
 கார்த்திக்கும் ஆதியை அழைக்க செல்ல அதற்கு முன்பாகவே கவியை காண கிளம்பி இருந்தான் ஆதி. 
மொட்டை மாடியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆதி வரும் திசையை நோக்கி கண்களை வைத்து காத்திருந்தாள் கவி. 
“வரட்டும்… இருக்கு அவருக்கு… இன்னைக்கி” பொருமிக் கொண்டே பாத்திருந்தவள் ஒருகணம் வானை நோக்க பௌர்ணமியும் கடந்து சில தினங்களாக இருக்க வானமும் கொஞ்சம் இருள் சூந்திருந்தது. 
நட்சத்திரங்கள் மின்ன, நிலாவை மேகம் மறைக்க  வேட்டை நாய்களின் சத்தமும் தூரத்தே ஆந்தையின் சத்தைத்தையும் தவிர வேறு சத்தங்கள் இல்லை. 
யாரோ தன்னருகில் அமரவும் தன்னவன் என்று அறிந்தவள் கோபமாக அவன் முகம் பாராமல் திரும்பி நிற்க, வேண்டுமென்றே அவள் தோள் உரச அமர்ந்தான் ஆதி. 
அவள் முகம் பாராமலையே மெதுவாக அவள் இடையில் கையிட்டவன் புடவையினூடாக வயிற்றின் மீது கைவைக்க, மேனி சிலிர்த்து கூசினாள் அவன் மனையாள். 
 கவியின் கோபம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை. நாணியவாறு ஆதியின் கையை தடுக்க முயன்றவள் கோபமாக சொல்ல வேண்டியதை சிணுங்களோடு சொல்லலானாள்.
“விடுங்க ஆதி…. இப்போதான் வர தெரிஞ்சதா… அதுவும் நான் கூப்பிட்டு அனுப்பின பிறகு. ஒன்னும் வேணாம் போங்க போய் உங்க பாட்டி சொல்லுறத கேட்டு சீனுவை கட்டிக்கிட்டு படுங்க”
கவி தன்னை தேடினாள் என்பதே ஆதியின் மனம் றெக்கைகட்டி பறக்க அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் 
“என்னமா இப்படி பட்டுனு சொல்லிட்ட உனக்காக பைய்ப்புல எல்லாம் ஏறி ரூமுக்கு வர போனேனே அதுக்குள்ள கார்த்திக் வந்துட்டான். இல்லனா ஐயயோட வீரதீர சாகசங்களை நீ பார்த்திருப்ப” கவி கண்களை அகலவிரிக்க அவள் நெற்றியில் முத்தமிட்டவன்
“சாரி கவி என் மேலையும் எங்க குடும்பத்து மேலையும் செம கடுப்புல இருப்பல்ல” ஆதி சொல்லும் போது கவி முகத்தை சுருக்க அவளின் புருவங்களை நீவியவன் 
“கர்ப்பமான விசயத்த முதல் முதல்ல ஹஸ்பண்க்கிட்டுதான் சொல்லணும் என்கிறது எல்லா பொண்ணுங்க ஆசை. ஆருத்தான் கண்டு பிடிச்சி சொன்னதா கார்த்திக் சொன்னப்போ என் பொண்டாட்டி டாக்டருக்கு படிச்சாலும் மக்கா இருப்பான்னு நான் நினைக்கல”  ஆதி கிண்டலடிக்க 
“ஹலோ நான் நியாரோலோலிஸ்ட் பா… கைனோலிஸ்ட் இல்ல”
“அட்லீஸ்ட் பேசிக் என்னானு கூடவா தெரியல. சினிமா பார்த்தாவது தெரிஞ்சிக்க வேணாம்” மீண்டும் அவளை வார 
“ஆதி கடுப்பேத்தாதீங்க” என்றவள் அவன் தோளில் சில அடிகளை போட அவள் கைகளை சிறை பிடித்தவன் அவளையும் சேர்த்து அணைத்துக்கொள்ள 
“விடுங்க ஆதி. சொன்னா மட்டும் அப்படி நீங்க என்ன கட்டி பிடிச்சி முத்தமா கொடுக்க போறீங்க? ஓடிப்போய் வீட்டுல உள்ளவங்க கிட்ட சொல்ல அவங்க என்ன ரூம்ல சிறை வைக்கத்தான் போறாங்க” கடுப்பானாள் கவி. 
“சரி இப்போ சொல்லு”
“என்ன சொல்ல”
“ப்ரெக்னன்ட் ஆனா விசயத்த இப்போ சொல்லு”
“அதான் உங்களுக்கு தெரியுமே!” 
“எனக்கு தெரியாது, இப்போதான் உனக்கே தெரியும்னு நினைச்சி சொல்லு” 
“ம்ம்.. முடியாது” தலைகவிழ்ந்து வெட்கப்பட்டாள் கவி. 
“லயா நீ ரொம்ப அழகா வெட்கப்படுற? வெட்கத்தால் சிவக்குறியா? இல்ல ப்ரெக்னங்சியால சிவக்குறியானே தெரியல” 
“ஆதி…” என்றவள் அவன் மார்பிளையே தஞ்சம் புக
“சாரி கவி நானும் உன் பக்கத்துல இருக்கணும்னுதான் அடிக்கடி வந்தேன் ஆனா யாராவது உன் கூடவே இருக்காங்க, என்ன பண்ணுறதுனு ஒன்னும் புரியல. உனக்கு எங்க வீட்டாளுங்க மேல கோபம் இல்லையே!”
“என் அம்மாங்க ரெண்டு பேரும்தான் இருந்தாங்க, அவங்க பாசத்தை அப்படி காட்டுறாங்க ஆதி.  அத நாம புரிஞ்சிக்கணும். எனக்கு இப்போ இருக்குற ஒரே பிரச்சினை என்ன கல்லேஜ் அனுப்பாம ரூம்லயே அடச்சீ வச்சி சாப்பாடு போட்டு குண்டாக்கிடுவாங்களோன்னுதான்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கவி சொல்ல வாய்மூடி மெளனமாக சிரித்தான் ஆதி.
“அப்போ மூணு மாசம் என்ன பிரிஞ்சி இருக்குறதெல்லாம் ஒரு கஷ்டமாகவே உனக்கு தெரியல இல்ல. எங்க நீ குண்டான பார்க்க அசிங்கமா இருப்பியோனு கவலைப்படுற இல்ல” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆதி சொல்ல அவனை பாவமாக பார்த்தாள் கவி.
“ஏன் ஆதி நிஜமாவே மூணு மாசம் சேரக்கூடாது என்பதால இப்படி பிரிச்சி வைக்கிறது ரொம்ப அநியாயம். பாட்டி கிட்ட  நீங்க சமத்து பிள்ளையா என் கிட்ட இருந்து ஒரு அடி விலகியே இருக்கேனு சொல்லி எங்க ரூமுக்கே வந்துடுங்களேன்” 
“அப்படிங்குற? நான் சொன்னா கேக்க மாட்டாங்களே! நீயே சொல்லேன்” தாடையை தடவியவாறு மனைவியை குறும்பாக நோக்க 
“என்னால முடியாது பா… அவங்க ஹிட்லர் பாட்டி சொன்னதை செய்யலைன்னா தர்ம அடி விழும்”
“ஓஹ்… ஒஹ்… என் பாட்டியை பத்தி நீ இப்படித்தான் மனசுல எண்ணிக்கிட்டு இருக்க, சந்தர்ப்பம் கிடைச்சதும் பூனை குட்டி வெளிய வருது”
வரளிநாயகியின் மேல் பாசத்தையும், மதிப்பையும் வைத்திருந்த கவியால் அவர் காக்கும் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள முடிந்தமையால் காலையிலிருந்து மெளனமாக இருந்தவள் உரிமையில் இப்படி கணவனிடம் பேசிவிட கணவன் தன்னை தப்பாக நினைத்து விட்டானோ என்று கண்கள் கலங்க உடனே கணவன் காணாமல் அதை மறைத்துக் கொண்டாள். ஆனால் மனைவியின் மௌனமும், முகத்திருப்பாலும்  ஆதிக்கு அவள் மனது புரிய 
“ஏய்… சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே அழுவியா… பாட்டி பார்த்தங்கனுவை என்ன அடி பின்னிடுவாங்க. நீ பேசு கவி உனக்கு இல்லாத உரிமையா?” ஆதி சிரிக்க கவியின் முகத்திலும் புன்னகை. 
      
 கவியின் கைகளை பற்றியவன் “லவ் யு லயா. என் வாழ்க்கைல வந்து என் உயிரினில்  கலந்து என் உறவில் உயிரானவள் நீ” என்று முத்தம் வைக்க மனதில் நிறைந்த ஆனந்தத்தோடு ஆதியின் மார்பில் தஞ்சமடைந்தாள் கவிலயா. 

Advertisement