கார்த்திக்கின் பிறந்தநாளோ! கவியின் பிறந்த நாளோ! வீட்டில் சிறிதாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் வீட்டார். அதில் ஆடல், பாடல் மாத்திரமன்றி பழைய புகைப்படங்களையும் பார்வையிட்டு அதை என்று? எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்து, அன்று நடந்தவைகளை பகிர்ந்து, கேலி, கிண்டலும் செய்து மகிழ்ந்தனர்.
அவ்வாறே இந்தமுறையும் கார்த்திக்கின் பிறந்தநாள் வரவும் ஆதியிடம் தெரியப்படுத்திய கவி ஆருத்ரா எண்ண திட்டம் தீட்டி இருக்கிறாளோ என்று கேட்குமாறு சொல்ல கவியின் திட்டத்தை அறிந்து கொண்டவன் ஆருத்ராவை அலைபேசுயில் அழைத்து கவியின் திட்டத்தை சொல்ல அவளால் மறுக்க முடியவில்லை.
தனக்கும் கார்த்திக்கும் சுமூகமான உறவு இருந்திருந்தால் குடும்பத்தோடு பிறந்தநாள் இரவை கொண்டாட ஒருநாளும் சம்மதிக்காதவள் வேறு வழியில்லாது சம்மதித்தாள்.
பாதி புகைப்படங்கள் கூட முடியாத நிலையில் இளவரசி அமர்ந்திருக்க முடியாதென்று சொல்லவும் தாதி அவரை அறைக்கு அழைத்து செல்ல வரளிநாயகியும், கர்ண விஜவேந்திரனும் தூக்கம் வருவதாக கூறி அறைக்கு செல்ல மேனகையும், சக்கரவர்த்தியும் மாத்திரம் வடநாட்டு கலாச்சாரங்கள் நிறைந்த புகைப்படங்களில் லயித்திருந்தனர்.
கார்த்திக் அருகில் இருந்தால் போதும் என்று நினைத்த ஆருத்ரா புத்தியில் அடித்தால் போல் கவி தன்னிடமிருந்து கார்த்திக்கை பிரிக்க முயற்சிக்கவில்லை என்று கேக் ஊட்ட சொல்லி புரிய வைத்தாள் என்றால், அவள் மனதில் அவனை தந்தையின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள் என்று சொல்லவும் வாய் வரை வந்த வார்த்தையை சீனு கேட்டிருந்தான்.
“ஹாஹாஹா கார்த்திக் உனக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்குறது எனக்கு இப்போதான் தெரியுது. உனக்கென்ன வயசிருக்கும். ஒரு நூத்தியெட்டு இருக்குமா?” சீனு கிண்டலடிக்க
“ஏன் கவி அப்பா எங்குற கார்த்திக்கு அப்படி ஒன்னும் வயசாகிடவில்லையே!” அதை சாக்காய் வைத்து ஆரு தன் மனதில் உள்ளதை கேட்டு வைத்தாள்.
அதற்கு கவி “எங்க ரெண்டு பேரோட அப்பாக்களும் மில்டரில இருப்பது எல்லாருக்கும் தெரியுமே. ஒரு அப்பா என்னெல்லாம் கடமைகளை செய்யணுமோ எல்லாத்தையும் எனக்காக செஞ்சி இருக்கான். சின்ன வயசுல சைக்கிள் ஓட்ட கற்று தந்ததிலிருந்து, கல்யாணம் பண்ண மாப்புள பாக்குறவரைக்கும்” காதலாக ஆதியை பார்த்த வாறே சொல்ல கவியின் பார்வையிலும் பேச்சிலும் எந்த விகல்பமும் இல்லை. என்பதை புரிந்துக் கொண்ட ஆருத்ராவின் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டது.
கார்த்திக்கை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாதென்ற பொறாமைக் குணம் கவியிடமே தோன்றி இருக்க வேண்டும். ஆனால் அவள் மனைவி என்பவளின் உரிமை என்னவென்று சரியாக புரிந்து கொண்டிருந்தாள். கவியால் கார்த்திக்கின் அன்னையாக, மகளாக, தோழியாக இருக்க முடியும் மனைவியாக தன்னால் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கின்றாள்.
இத்தனைக்கும் கவி ஆதியை காதலித்து மணக்கவும் இல்லை. இருந்தும் அழகாக அவனையும் புரிந்துக் கொண்டு, குடும்பத்திலும் ஒன்றி விட்டாள். தான் கார்த்திக்கை காதலித்தும் அவனை புரிந்துக் கொள்ளாமல் அவன் உறவுகள் விலகி விடும் படி நடந்து கொண்டேன். கடவுளே எனக்கு மன்னிப்பே இல்லை.
சீனு ஆருத்ராவின் முன்னால் அமர்ந்திருந்தபடியாலும், திரை அவனுக்கு சற்று வலது புறத்தில் இருந்த படியாலும் ஆருத்ரா கண்ணீர் வடிப்பது அவன் கண்களில் சிக்கவில்லை. கவி சொல்லும் விளக்கங்களில் லயித்தவன் அவர்களின் குழந்தை பருவ புகைப்படங்களில் சுட்டித்தனம் செய்யும் சிறுமியியை கண்டு மயங்கி நின்றிருந்தான்.
ஆருத்ராவின் மனபாரம் கண்ணீராக கரைந்து வெளியேற கார்த்திக் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள ஆர்த்மார்த்தமாக மனமுருகி மன்னிப்பு கேட்கலானாள்.
“ஷ்.. ஆரு எல்லாரும் நம்மள பார்க்க போறாங்க” என்றவன் கண்களை துடைத்து விட்டபடி அவளை அமைதிப்படுத்த,
நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த கணவனின் அருகாமையில் எங்கே இருக்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று மறந்து அவனை முத்தமிட போக
அவளின் வேகம் கண்டு உள்ளுக்குள் சிரித்த கார்த்திக் அவளை தடுத்தவாறே “ஆரு நாம நடு வாசல்ல இருக்கோம். கொஞ்சம் திரும்பி பாரு. உன் அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் இந்த பக்கம் பார்த்தாங்க னு வை” வாக்கியத்தை முடிக்காமல் அவள் முகத்தை திருப்ப, அசடுவாய்ந்தவள் மனதில் பெரியவர்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. மாறாக அந்த சூழ்நிலையையும் ரசித்தவள் கார்த்திக்கின் கன்னத்தில் முத்தமிட்டிட்டே அமைதியானாள்.
“ராட்சசி… அடங்க மாட்டியா?” என்றவன் அவள் தோள் மீது கைபோட்டு இழுத்து அணைத்துக் கொள்ள சஞ்சலம் நீங்கியவளாக கணவனின் மார்பில் தஞ்சமடைந்தாள் ஆருத்ரா.
திரையில் கவியின் பிஎப் கார்த்திக், கார்த்திக்கின் ஜிஎப் கவிலயா என கொட்டை எழுத்தில் பாடசாலை சுவரில் எழுதப்பட்ட புகைப்படம் தெரிய கார்த்திக்கின் முகம் நோக்கி நிற்க கார்த்திக் பார்த்த பார்வையிலையே புரிந்து போனது ஆருத்ரா சந்தேகப்பட்டு கேள்வி எழுப்ப போகிறாள் என்று. ஆனால் அவளோ ஆதி கேட்ட கேள்வியில் கவி சொல்ல போகும் விளக்கத்தை கேட்க தயாராக கார்த்திக்தான் நிலையில்லாமல் தவிக்கலானான்.
“என்னடா இது? ஸ்கூல் சுவர் பூரா கிறுக்கி வச்சி இருக்காங்க அத போட்டோ எடுத்ததுமில்லாம எங்களுக்குள்ள ஒன்னும் இல்லனா உலகம் நம்புமா?” சீனு தாடையை தடவ ஆருத்ரா சிரித்தவாறே
“உன் அறிவுக்கு இதெல்லாம் எட்டாது. முடிஞ்சா அர்த்தம் கண்டு பிடி” என்று சொல்ல ஆதியும் ஆருவை புருவம் உயர்த்தி பார்த்தவன் புன்னகைக்க
“என்ன மாமா கண்டு பிடிச்சிட்டீங்களா? பிஎப் நா பெஸ்ட் பிரென்ட் டா.. தான் இருக்கணும்” ஆரு சொல்ல
“ஹே…” இரண்டடி நகர்ந்து வந்து கவி அவளுக்கு ஹை பை கொடுக்க கார்த்திக்கின் முகத்தில் நிம்மதி பரவியது.
“அட ஆமா…. அப்போ ஜிஎப்?” சீனு யோசிக்க
“குட் பிரென்ட்” ஆதி சொல்ல கவி கணவனைக் கட்டிக் கொண்டாள்.
கார்த்திக்கையும், தன்னையும் புரிந்துக்கொள்ள கூடிய துணைவர்கள் வேண்டும் கவி எதிர்பார்த்தது இதுதான்.
கார்த்திக் கவியின் நிலைமையை அறிந்து அவளின் பாதுகாப்பை ஒட்டியே நடந்துகொண்டிருப்பதால் கண்டிப்பாக தங்களின் பேச்சை மீற மாட்டான் என்று புரிய,
பதின் வயதில் மகள் காதல் என்று மனதை அலைபாய விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருந்தாலும் கவி வயதுக்கு வந்ததும் வானதி கார்த்திக்தான் உன் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று கவியின் மனதில் பதிய வைக்க முயற்சி செய்தாள்.
ஆனால் கடவுளின் ஆட்டம் வேறு விதமாக இருந்தது. கவியை விட ஒன்றரை வருடங்கள் சிரியவளான தீப்தி தவறுதலகாத்தான் ராகி கட்டும் புகைப்படத்தை எடுத்திருந்தாள். அது பலவருடங்களாக பிரிண்ட் போடப்படாமல் இருக்க, கவியின் பதினெட்டாவது பிறந்தநாளன்று அது தீப்தியின் மூலம் கவியின் கையில் கிடைத்தது.
கார்த்திக்கை தோழனாக, சகோதரனாக, தந்தையாக பார்த்தவளுக்கு கணவனகா பார்க்க மனம் முரண்டிய காரணம் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிய அவள் அடைந்த நிம்மதி அளவில்லாதது.
கார்த்திக்கின் மனதில் என்ன இருக்கிறது என்று தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய கடமையும் அவளுக்கு இருந்தது. சின்ன வயதில் இருந்தே தன்னோடு இருப்பவன் தன்மீது ஆசையை வளர்த்துக் கொண்டிருந்தால்? போதாதற்கு வீட்டார் வேறு தங்களது ஆசை என்று கூறிக்கொண்டிருக்க கார்த்திக்கின் மனதில் சலனம் ஏற்பட்டிருந்தால்? ஒரே வீட்டில் இருக்கின்றோம். பல நேரம் அவன் மடியில் உறங்கி இருக்கிறேன். ஆண், பெண் பேதம் இல்லாமல் பழகுகிறேன். தாயிடம் மட்டும் பகிரக்கூடிய அந்தரங்கமான விஷயங்களை கூட எந்த தயக்கமும் இல்லாமல் பேசி இருக்கிறேன். தான் நடந்துகொண்ட முறையாலும், பெற்றோரின் ஆசை அதுதானே என்று கார்த்திக் எல்லை மீறவில்லை.
“இருந்தாலும் அவன் மனதில் உன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்ன செய்வாய் கவி?” மனசாட்ச்சி கேள்வி எழுப்ப கார்த்திக்கிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு இருந்தவள் எவ்வாறு பேசுவதென்று யோசிக்கலானாள்.
“ஆம்” என்று சொல்லி விட்டால் நீ அவனை திருமணம் செய்து கொள்வாயா?” மனசாட்ச்சியின் கேள்விக்கு கவியிடம் பதிலில்லை. கார்த்திக்கை போல் ஒரு நல்ல துணை அவளுக்கு என்றும் கிடைக்க போவதில்லை என்பது அவள் அறிந்திருந்தாலும் கார்த்திக்கை கணவனாக மனம் ஏற்க மறுத்தது.
“கார்த்திக் உன் மீது ஆசைப்பட்டால்? உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தால்?” அவளின் மனம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி அவளை பாடாய் படுத்த கார்த்திக்கின் முன் நின்றவள் மௌனமாக அவனையே பார்த்திருக்க,
“என்னாச்சு கவி? என்ன பிரச்சினை உன் மண்டைய போட்டு உருட்டுது?” கார்த்திக் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு அவளை ஏறிட
“தன் முகத்தை பார்த்தே மனப்போராட்டத்தை கண்டு சொல்பவன் தன் மீது ஆசை பட்டால் தன்னால் மறுக்க முடியுமா?” கவி கேட்க வந்ததை கேட்க முடியாமல் நிற்க
கவியியை தன் அருகில் அமர்த்திக் கொண்டவன் “என்ன கவி மொத மொத காலேஜ் போய் இருக்க போன உடனே யாராவது ப்ரொபோஸ் பண்ணாங்களா? அத சொல்லத்தான் தயங்குறியா?”
என்ன சொல்வதென்று புரியாமல் தலையை “ஆமாம்” எனும் விதமாக ஆட்டி வைத்தாள் கவிலயா.
“இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜம் கவி பிடிக்கலைன்னா பிடிகலைனு முகத்துக்கு நேரா சொல்லிடு. பசங்க அதெல்லாம் துடைச்சு போட்டு அடுத்த பிகரை கரெக்ட் பண்ண போய்கிட்டே இருப்பானுங்க” சிரித்தவாறே சொல்ல
கார்த்திக் சொல்லிய விஷயத்தை பிடித்துக் கொண்டவள் “ஏன் கார்த்திக் நீயும் காலேஜ் போக ஆரம்பிச்சு மூணுவருசத்துக்கும் மேலாகுது இல்ல. இதுவரைக்கும் எத்துணை பொண்ணுங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்க? உனக்கு யார் மேலையாவது லவ் வந்ததே இல்லையா?”
“ராகிங் பண்ணுறப்போ சீனியருக்கு ப்ரொபோஸ் பண்ணதுதான் அம்மு அத தவிர…. இல்ல. லவ் எல்லாம் எனக்கு செட் ஆகாது”
“ஏன்”
“அதான் வீட்டுல நீ இருக்கியே”
கார்த்திக்கின் பதிலில் கவியின் உடல் பதற கார்த்திக் தொடர்ந்தான்
“உனக்கு முன் உதாரணமா நான் இருக்கணும். நானே பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா.. அத அட்வாண்டேஜா எடுத்துக் கிட்டு நீ லவ் பண்ண ஆரம்பிச்சா என்ன பண்ணுறது? இப்போ இருக்குற பசங்களெல்லாம் லவ்வா பண்ணுறாங்க? டைம் பாஸ்தான் பண்ணுறாங்க. உன்ன ஒரு நல்லவன் கைல புடிச்சி கொடுக்க வேணாமா?” வராத கண்ணீரை துடைத்தவாறு உணர்ச்சி வசப்பட்டது போல் பேச கவியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“அப்போ நான் யாரையும் லவ் பண்ண கூடாதா?” கார்த்திக்கை பொய்யாக முறைக்க ஆரம்பித்தாள் கவி.
“ஒஹ்.. பண்ணலாமே ஒரு நல்லவன், வல்லவன், உன்ன உண்மையா லவ் பண்ணுறவன் வரட்டும் அவன நான் என்கொய்ரி பண்ணி உனக்கு எத்தவனான்னு முடிவு பண்ண பிறகு பண்ணலாம்”
“எத்தகைய அன்பு இது? தெளிந்த நீரோடை போல் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்த கார்த்திக்கால் மட்டும் தான் முடியும்” கவியின் மனம் நிறைந்து பூரிப்பில் மிதக்க
தாடையை தடவியவன் “அப்படி புரிஞ்சிக்கிறவங்கள தேடி கண்டு புடிச்சி கல்யாணம் பண்ணிக்குவோம்”
அதன் பின் பெற்றோரின் ஆசையை பற்றி கவி சொல்ல, “பேசி புரிய வைக்கலாம் கவி, வற்புறுத்த மாட்டாங்க. என்ன ஒன்னு அப்போ நமக்கேத்த ஜோடிய நாம தேடி வச்சிருக்கணும்” என்றிருந்தான் கார்த்திக்.
அதன் பின் படிப்பில் கவனமானவள் தனது ஜோடியை தேடும் வேலையிலும் ஈடுபட கார்த்திக்கு பிடித்தால், கவிக்கு பிடிப்பதில்லை. கவிக்கு பிடித்தால் கார்த்திக்கு பிடிப்பதில்லை. என்று காலம் செல்ல. கடைசியில் ஆதியே திட்டம் போட்டு வானதியை அணுக திருமணத்தில் இரு ஜோடிகளும் இணைய, கவி நினைத்தது போல் அண்ணன், தங்கை என்றில்லாவிட்டாலும் காதல் கணவன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தாள்.
ஆருத்ரா தன்னை காதலிக்கிறாள் என்று அறிந்து கொண்டு மணந்த கார்த்திக்கும் அவளை நன்கு புரிந்து கொண்டதால், அவளுக்கு புரியவைக்கும் சந்தர்ப்பமாக பிறந்தநாள் கொண்டாட்டம் தானாகவே அமைந்தது.
கார்த்திக்கும், கவியும் சாதாரணமாக பாதையில் நடந்து போனாலே காதலர்கள் என்று பேசும் இளசுகளின் மத்தியில் அவர்களை பின் தொண்டர்ந்து அவர்களை புரிந்து கொண்ட ஆருத்ராவோ காதலால் கொண்ட பொறாமையினால் கோபத்தில் பேசியவள் சுவரில் இருந்த பிஎப் இற்கு சரியான அர்த்தத்தை சொல்ல கார்த்திக் தன்னவள் புரிந்து கொண்டாள் என உணர்ந்து கொள்ள முகம் மலர்ந்தான்.
ஆதி ஜிஎப் இற்கு அர்த்தம் சொல்ல தங்களை புரிந்து கொண்ட துணை கிடைத்ததில் அளவில்லா ஆனந்தத்தில் கணவனை கட்டிக் கொண்ட கவியின் பார்வை கார்த்திக்கின் முகத்திலையே நிலைத்தது. தங்களுக்குள் என்றுமே இனி பிரிவு என்பதே இல்லை என்று சொன்னது அப்பார்வை.
“அது சரி டா… உங்க ரெண்டு பேர் ப்ரெண்ட்ஷிப்பும் உலகலவுல பெர்மஸ்ன்னு தெரியுது சுவருவரைக்கும் எப்படி வந்திருச்சு?” சீனு அதிமுக்கியமான சந்தேகத்தை கேக்க
“அத ஏன் கேக்குற? இந்த கவி இருக்காளே? எந்த பெண்ணாவது என்ன சைட் அடிச்சா போதும், அவளை உண்டு இல்லனு பண்ணி கார்த்தி என் பிஎப், நான் அவ ஜிஎப்னு சொல்லிடு வா. நாம வேற ஒரே பஸ்ஸுல ஸ்கூல் வரும் ஒன்னாவே போறோம். இன்ட்ரவல் நேரத்துல கூட ஒன்னாவே சாப்பிடுவோம் ஸ்கூல் பெர்மஸ் காதல் ஜோடி அவார்ட் கொடுக்காத குறையா சுவத்துல கிறுக்கிட்டாங்க” கார்த்திக் சோகமாக சொல்ல
“சாருக்கு சைட் பொண்ணுங்க உங்கள சைட் அடிக்கலைனு கவலையா? அடிக்க முடியலைன்னு கவலையா?” ஆரு ரகசியமாக கேட்டவாறு முறைக்க அவளின் மூக்கை பிடித்து ஆட்டிய கார்த்திக் “பொறாமை” என்று சொல்ல அமைதியானாள் ஆருத்ரா.
“போகாம… அவரு வேற நம்மள ஒரு வாரமா நோட்டம் விட்டு ரெண்டு பேரையும் ஆபிசுக்கு வர சொல்லிட்டாரு”
சக்கரவர்த்தி குறட்ட்டை விடும் சத்தம் கேக்கவே “அம்மா… போய் உள்ள படுமா” என்று அவர்களை உள்ளே அனுப்பிய சீனு “அப்பொறம்” சுராஸ்யமாக கதை கேக்க கார்த்திக்கின் புறம் சாய்ந்து படுத்துக்க கொள்ள கவியும், ஆதியும் அவர்கள் புறம் திரும்பி அமர்ந்தனர்.
“அவர் பாட்டுக்கு ஒன்னும் விசாரிக்காம முடிவு பண்ணினவரா என் கிட்ட அப்பா நம்பர் கேட்டாரு. நான் அப்பா மில்டரில இருக்குறதாகவும், அம்மா இல்ல காடியன் நம்பர்னு தேவிமா நம்பர் கொடுத்தா… இந்த கவி என்ன பண்ணா தெரியுமா?”
“அவங்கம்மா நம்பர் தானே கொடுக்கணும் அப்பவும் அத்த பேசி இருப்பாங்க” ஆதி புருவம் உயர்த்த
“அதான் இல்ல… வீட்டு நம்பரை கொடுக்க, பிரின்சிபால் வேற போன் பண்ணதும் கவியோட அம்மாவா பேசுறதுனு கேட்டா ராணிமா ஆமான்னு சொல்ல உடனேயே ஸ்கூலுக்கு வாங்கனு சொல்லிட்டு வச்சிட்டாரு. ராணிமா வேற பதறியடிச்சுட்டு ஸ்கூல் வந்துட்டாங்க”
“அப்போரம் இந்த பக்கம் தேவிமா வர, அந்த பக்கம் ராணிமா வர பிரின்சிபால் குற்றவாளியாக்கி நிக்க வச்சிட்டோம்” கார்த்திக் அன்றைய நாளுக்கு செல்ல கவியும் அன்று பேசியவைகளை எடுத்துக் கொடுக்கலானாள்.
“என்ன சார் பசங்க ஒண்ணா வந்து, போறதையும், சாப்பிடறதையும் வச்சு காதலிக்கிறதா சொல்லுறீங்க? ரெண்டு பேரும் இருக்கிறதே ஒரே வீட்டுல கார்த்திக்கோட கார்டியன் நான் என்றால் கவியோட அம்மா நான்” வானதி கோபமாக பேச
அண்ணன் தங்கை என்றதில் வானதியின் கோபம் சுர்ரென்று ஏற “அண்ணன், தங்கையா? உங்க கிட்ட கேட்டோமா? இவங்க உறவுக்கு பேரு வைங்கன்னு? ஆமா நாலாயிரம் பேர் படிக்கிற ஸ்கூல் உங்க கண்ணுக்கு மட்டும் இவங்க தனியா தெரிஞ்சாங்களா?”
“அதானே? என்ன சார் பசங்கள வேவு பாக்குறீங்களா?’ கார்த்திக் யோசனையாக கேட்க
“கேமரா வச்சிருக்கிறீங்களா?” என்ற கவி “வாஷ்ரூம்ல?” என்று விட வானதி யோசிக்காமல் ப்ரின்சிபாலின் சட்டையை பிடித்திருந்தாள்.
கவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. நியாயமாய் விசாரித்திருந்தால் பரவாயில்லை. அதென்ன வேவு பார்த்து தானே ஒரு அர்த்தம் கண்டு, ஆபீஸ் ரூமுக்கு வரவழைத்து பெற்றோரை மாணவர்கள் மூலமே வர சொல்லி சொல்வது? அதுவும் உடனே அவர்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், என்னவோ கொலை குற்றம் செய்தது போல் பார்வை வேறு.
“யோவ் என்னய்யா பொண்ணுங்க வாஷ்ரூம்ல கேமரா வச்சிருக்கியா?” வானதியின் கோபம் வேறு. கார்த்திக், கவி கல்யாணம் நடக்க வேண்டும் என்று எண்ணினாலும் அவர்களின் நடத்தையை தவறாக ஒருவர் பேசிவிட்ட கோபம் போதாதென்று சமாளிக்க அண்ணன், தங்கையா என்று கேட்டு விட அது இன்னும் அவளை தூண்டி விட கவி சும்மா சொன்னதை கோபத்தில் பிடித்துக் கொண்டு கேட்டு விட்டாள்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல மேம். இன்னும் சீசீடிவி கூட வைக்கல” அவரும் பயத்தில் உளர
ஆசுவாசமடைந்த வானதி “முதல்ல அத செய். அப்பொறம் பசங்கள கண்காணிக்கிற வேலைய பார்க்கலாம்” என்றவள் கார்த்திக் புறம் திரும்பி “கவி உன் பொறுப்பு கார்த்திக் நீதான் பாத்துக்கணும்” என்று விட்டு ராணியோடு வெளியேற, பிரின்சிபால் கதிரையில் தொப்பென்று அமர்ந்து கொள்ள அவருக்கு தண்ணீர் கிளாஸைக் கொடுத்த கார்த்திக்
“சார் பிஎப்னா பாய் பிரென்ட் மட்டுமில்ல பெஸ்ட் பிரென்ட்” என்று சொல்ல
“ஜிஎப்னா கார்ல் பிரென்ட் இல்ல குட் பிரென்ட்” என்றால் கவி.
“சமாதானம் ஆனாரா?” சீனு கேக்க
“சுவருல இருக்குற எல்லாம் உடனே அழிக்க சொல்லிட்டாரு” என்று கவி சிரிக்க
“அழிக்க முன்னாடி எடுத்த போட்டோதான் அது” கார்த்திக் சிரித்தான்.
“சூப்பர்” என்ற அடுத்த புகைப்படங்களை பார்வையிட அவன் கண்ணில் சிக்கினாள் தீப்தி. குன்பூ பாண்டா என அவன் வாய் தானாக முணுமுணுத்தது.