Advertisement

இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, ” நான் உங்ககிட்ட சொன்னேனா… கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது…”

                      “அடுத்து என்ன… நான் படிக்கிறதா… மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல… என் மகனுக்கு இரண்டு வயசு தான் ஆகுது.. என்னோட கவனம் முழுக்க இந்த நிமிஷம் அவன்மேல் தான் இருக்கு.. அவனோட வளர்ச்சியை நான் கூடவே இருந்து கவனிக்கணும் ன்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு…”

                       “மூணு வருஷம் கழிச்சு நீங்க என்னோட இருக்கீங்க… என்னால உங்க ரெண்டு பேரையும் விட்டு ஒருநாள் முழுக்க உங்க ஆபிஸ்ல உக்காந்திட்டு இருக்க முடியும் ன்னு தோணல.. அதனால தான் மறுத்தேன்… இது எல்லாம் உங்களுக்கும் தெரியும்.. ஆனாலும், இவ்ளோ பேசுவீங்க இல்ல…”

                     “என்னென்ன சொல்றிங்க… நான் சாப்பிட்டுட்டு தூங்குறேனா… அதோட இப்போ உங்களை குடும்பத்தை விட்டு பிரிக்க நினைக்கிறதா பழியும் போட்டாச்சு… உங்க அம்மாகிட்ட சொல்லுங்க.. இப்போதான் என் முகம் பார்த்து பேசவே ஆரம்பிச்சு இருக்காங்க… அவங்ககிட்ட இப்படி சொல்லி வைங்க…” என்று மூக்கை உறிஞ்சு கொண்டே சிறு குழந்தையாய் புகார் படித்தாள்.

                     இன்பன் அவளின் கூற்றை புரிந்து கொண்டாலும், ஏற்றுக் கொள்வதாக இல்லை… அவள் சிறு இடைவெளி விடவும், “அம்மாகிட்ட என்ன… எல்லார்க்கிட்டேயும் சொல்றேன்… நீ என்னை படுத்தி வைக்கிற.. ரசி.. என்னால நீ இப்படி இருக்கறதை சாதாரணமா எடுத்துக்கவே முடியல.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் நான்… ரொம்ப… ரொம்ப ஒரு மாதிரி வேதனையா இருக்குடா ரசி… என் காதல் உன்னை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும் ன்னு தெரிஞ்சு இருந்தா, உன்னை நெருங்கியே இருந்திருக்க மாட்டேன் ரசிம்மா…

                     “குற்ற உணர்ச்சியா இருக்குடா… நான் உன்னை பார்க்காமலே போயிருந்தா, படிச்சு முடிச்சு எங்கேயோ ஒரு நல்ல இடத்துல இருந்திருப்ப.. உன் அம்மாவும் உன்னோட இருந்து இருப்பாங்க.. எல்லாமே என்னாலதானே.. நான் கொடுத்த பொய்யான நம்பிக்கையால தானே…”

                   “நீ எவ்ளோ ஆசையா இருந்த உன் படிப்பு மேல… நீ அதை தொடராம போனதுக்கு நான் தான் காரணம் இல்லையா?? உன் முகத்தை பார்க்கும் போதெல்லாம், என்னோட காதலை உன்கிட்ட கொடுத்து, உன்கிட்ட இருந்த மொத்த சந்தோஷத்தையும் உங்கிட்ட இருந்து பிரிச்சிட்டேனோன்னு தோணுதேடா… “என்றவன் தலையை இருகைகளால் தாங்கி பிடித்துக் கொள்ள, அவன் இடது கண்ணின் ஓரம் ஒற்றை துளியாக மின்னிய முத்தும் மனைவியின் பார்வையில் இருந்து தப்பவே இல்லை…

                     கணவன் நேற்று பேசும்போது கூட, தன்னை சுயமாக நிற்க வைக்க முயற்சிக்கிறான் என்று நினைத்தாளே ஒழிய, இப்படி தனக்குள் வேண்டாத எண்ணங்களை போட்டு புழுங்கி கொண்டிருப்பான் என்று நிச்சயமாக யோசித்தே இருக்கவில்லை அவள்.

                    “இன்பனை பற்றி நன்கு அறிந்த தான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்” என்று இந்த நிமிடம் மனம் கிடந்து அடித்துக் கொண்டது.. தன் நிலையை எண்ணி தன்னை தானே வருத்திக் கொண்டிருக்கும் கணவனை எண்ணி பெருமிதமாக இருந்தாலும், தன்  தனக்கு முன்பாக தலையை கைகளில் தாங்கி கொண்டு அமர்ந்திருப்பவனை அப்படி பார்க்கவே பிடித்தமில்லை அவளுக்கு. அதுவும் அந்த துளிகண்ணீர்.. அதை நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை.

                        இவனைவிட, யார் என்னை காதலிக்க முடியும்..?? இவனுடன் இருப்பதை விடவும், இனிமையான நேரத்தை இன்னொருவர் ஏற்படுத்தி தந்திருக்க முடியுமா.? யார் இருந்தாலும், இல்லையென்றாலும் யாதவ் தங்களை வாழ விட்டிருக்கமாட்டானே…?? அப்படியிருக்க, தாயும் இல்லாமல் அந்த நேரத்தில் நான் என்ன செய்திருக்க முடியும்??? என் துன்பம் போக்கவே இறைவன் என் இனியனை அனுப்பியதாக நான் நினைத்து இன்பமடைய, இவன் இத்தனை வேதனையில் உழன்று கொண்டிருக்கிறானா???

                     இன்பனின் காதல் தன்னுடன் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் தான் இந்நேரம் உயிருடன் கூட இருந்திருக்க மாட்டோம் என்று புரிய, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள் கணவனின் கால்களுக்கு இடையில் இருந்த இடத்தில அவனுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளை விலக்க பார்க்க, அத்தனை அழுத்தமாக முகம் காட்ட மறுத்தான் அவன்.

                   அவன் விரல்களை தன் இருகைகளாலும் பற்றியவள் மெல்ல அவன் முகத்தை நிமிர்த்த முயற்சிக்க, “என்னை விடு சிபி..” என்று கரகரப்பான குரலில் அவன் மொழிய, சட்டென கைகளை எடுத்துவிட்டவள் தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டாள். ஆனால் இருந்த நிலையிலிருந்து மாறவே இல்லை அவள்.

                    முழுதாக ஐந்து வினாடிகளுக்கு மேல் அவனின் இந்த நிலை பொறுக்காமல் போக, மண்டியிட்ட நிலையிலேயே கீழே குனிந்து அவன் முகத்தை பார்க்க முயன்றவள் ஆர்வத்தில் அவன் கைகளுக்கு நடுவே தலையை நுழைக்க பார்த்ததில் நிலை தடுமாறி விழ பார்த்து, அவன் கைகளையே பற்றிக் கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்து சேர்ந்தாள்.

                  இன்பன் அவள் கைகளை இறுக்கமாக பற்றியதில் மெல்ல அவளை நிமிர்ந்து பார்க்க, முகத்தை சுருக்கி கொண்டு அவள் எழவும், அவள் கையை பிடித்து இன்பன் இழுக்கவும், மீண்டும் அவன் முன்பாக மண்டியிட்டாள் சிபி..

                     அவள் முகம் சுருக்கியதில் “இன்னும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க…” என்று அவன் அதட்ட

                     “அதென்ன சிபி… ஏன் சிபி சொல்றிங்க…” என்று கண்ணோர சுருக்கத்துடன் முகத்தை சுருக்கி கொண்டே கேட்டாள் சிபி.

                       இன்பனுக்கு கடந்து போன கனத்த நொடிகள் மறந்து போனதுதான் போலும்.. அவளுடைய முகத்திருப்பலும், அந்த ஊடலான குரலும் எப்போதும் போல் இப்போதும் தடுமாற வைக்க, அவனின் குறி தப்பிப்போனது அங்கே.

                       சிபியின் கேள்விக்கு பதிலாக “ஏன் சிபின்னு கூப்பிட்டா என்ன…அதுதானே உன் பேரு…” என்றான் விளையாட்டான குரலில்..

                                 “ரசி… பசின்னு கிட்ட வாங்க…அப்போ பேசிக்கறேன்…” என்றவள் மீண்டும் எழுந்து கொள்ள பார்க்க, இந்த முறையும் அவளை இழுத்து கீழே  வைத்தான் கணவன்.

                  “எனக்கு கால் வலிக்குது… விடுங்க…” என்று அவன் கையிலிருந்த தன் கையை அவள் விடுவித்து கொள்ள முயற்சிக்க, “எனக்கு இப்போ பசிக்குதே ரசிம்மா..” என்றான் இன்பன்.

                 “அதுக்கு நான் என்ன செய்யணும் விடுங்க.. எனக்கு ரசி யாருன்னே தெரியாது.” சிறு கோபத்தோடு மூக்கும் கிளியாய் சிவந்து விட

                “தெரிய வைக்கத்தானே நான் இருக்கேன்… உனக்கு ரசி யாருன்னு நான் சொல்றேன்.. அதுவும் இப்போ பசி வேறயா… உன்னை ருசிச்சிட்டே சொல்றேன்..” என்றவன் கைகள் அவளின் கைகளை விட்டு அவளது தோள்களின் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொள்ள, இன்பனின் முகத்தில் ஓர் உல்லாச பாவனை..

                    ஆனால், மனைவி அந்த மனநிலையில் இல்லை போல.. அவன் கைகளை பார்த்து அவன் முகம் பார்த்தவள் ” நல்லாவே இல்லை..நாம ரெண்டு பேரும் சண்டை… என்னை நீங்க அழ வச்சிருக்கீங்க.. இப்போ ருசிக்கிறாராம்.. ” என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளை விலக்கியவள் எழுந்து கொள்ள, இந்த முறை அவன் மடியிலேயே விழுந்திருந்தாள்.

                      “நம்ம சண்டையா ரசிம்மா.. நீ இனியாவோட சண்டை போட்டியா… எனக்கு சொல்லவே இல்லையே…” என்று துள்ளலுடன் அவன் கண்சிமிட்ட

                      “கொஞ்சம் முன்னாடி அழுது வடிஞ்சிங்க… இப்போ ரொமான்ஸ் தூக்கலா இருக்கு… என்னை ஏமாத்துறீங்களா..” என்று கண்களை சுருக்கி கேட்டுவைத்தாள் சிபி…

                      அவன் “ரசி..” என்று தொடங்கும்போதே, “சிபி..” என்று பெண் இடையிட,

                      “தெரியாம சொல்லிட்டேண்டா… நீ என்னோட ரசிம்மா தான் எப்பவுமே..” என்று கொஞ்சலில் இறங்கினான் கணவன்…

Advertisement