“உன்னுள் ரோஜாவை நான்” அத்தியாயம் 4
மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து விரிந்த கூந்தலை இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலாக எடுத்துக் கட்டி இருந்தால் தலை குளித்துவிட்டு லைட்டாக ஒப்பனைகள் செய்து கொண்டிருந்தால் வீரபாண்டி மோகனையும் ராஜனையும் அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தார். வினோதினி நேர் எதிரே சோபாவில் அமர்ந்த மோகனின் உருவம் தெரிந்தது கண்ணாடியில் முதலில் அவள் கவனிக்கவில்லை பின்பு தான் கவனித்தால் அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் லைட் பச்சை வண்ணத்தில் அடர்ந்த பச்சை வண்ணம் பார்டரில் அமைந்திருந்த சேலையை கட்டி இருந்தால் நூல் புடவையில் மிக கம்பீரமாக ஒரு இளவரசியாக வீற்றிருந்தால் அவள் பார்ப்பது தெரிந்ததும் மோகன் தலையை குனிந்து கொண்டான் இவளும் எந்திரித்தால் வீரபாண்டியோ அம்மா இங்க வந்து பாரு வினோதினி யார் வந்து இருக்காங்கன்னு உங்க மாமனார் வந்திருக்காருமா! அப்படின்னு சொல்லி சொல்லி கூப்பிட்டார்.
அவளும் எந்திரித்து வாங்க மாமா என்றால் ராஜனும் அம்மா நல்லா இருக்கியா மா என்று கேட்டார் திருமணத்திற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கின்ற பொழுது இன்னும் வேலைக்கு போய்க்கொண்டே இருக்கிறாயா அம்மா வினோதினியோ பள்ளியில் சட்டென்று நின்று விட முடியாது மாமா அதனால் புதிய ஆள் எனக்கு பதில் போடுற வரைக்கும் நான் போய் கொண்டு தான் இருக்க வேண்டும் மாமா என்று கூறினாள்.கல்யாணத்துக்காவது லீவு விடுவாங்கலாமா என்று கேட்டார் அதெல்லாம் விடுவாங்க மாமா என்றால் ,சரி நான் கிளம்புறேன் மாமா நேரம் ஆயிடுச்சு என்று தன் ரூமிற்கு சென்றாள்
திரும்பி வரும்போது தன் நீண்ட கூந்தலை பின்னலிட்டு மடித்து கொண்டையாக போட்டு வந்தால் மோகனோ தன் மனதில் நினைத்துக் கொண்டான் கூந்தல் விரிச்சிருந்தா தான் அழகு அப்படின்னு நினைத்தான் .
நினைத்த உடனேயே அவன் மண்டையில் கொட்டு வைக்க நினைத்து மனதிலே கொட்டு வைத்தான். இது அண்ணனுக்கு பார்த்த பெண் என்று உரைத்தது அவள் முடியை விரித்து போட்டு இருந்தால் என்ன மடிச்சு கட்டியிருந்தால் என்ன என்று நினைத்துக் கொண்டான் வீட்டிலிருந்து ரோட்டிற்கு சென்றால் வேன் வந்து விடும் மாமா நான் வருகிறேன் என்று சொல்லிகிளம்பி விட்டாள்.
நாட்களும் நகர்ந்து திருமண நாள் வந்தது திருமண நாளுக்கு முந்தைய நாள், முகிலன் பெங்களூரில் இருந்து வந்திருந்தான் அவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்து கொண்டிருந்தன இங்கேயோ வினோதினிக்கும் செய்ய வேண்டிய சடங்குகள் செய்து கொண்டிருந்தன இரவு மண்டபத்திற்கு செல்ல தயாராக இருந்தார்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண நாளும் இனிதே தொடங்கியது ஐயரோ மாப்பிள்ளையை கூப்பிடுங்கள் மந்திரங்கள் ஓத என்று சொன்னார் .
ஜெயராணியோ மோகனை அனுப்பி மோகன் முகிலனை கூட்டிக் கொண்டு வரச் சொன்னார் .மோகன் போய் முகிலனின் அரை கதவை தட்ட அங்கு யாரும் இல்லை மோகன் பாத்ரூமில் எல்லாம் செக் பண்ணிட்டு முகிலனுக்கு போன் பண்ணினான் ரிங் போய் கட் ஆனது அவனோ எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல நான் நிஷாவை தான் விரும்புகிறேன் அவளோட பெங்களூர் போகப்போறேன் அப்படின்னு மெசேஜ் பண்ணி இருந்தான் அதைப் பார்த்ததும் மோகனுக்கு தூக்கி வாரி போட்டது. இதை எப்படி நான் அப்பா கிட்ட சொல்லப் போறேன் அப்படின்னு சொல்லி நினைச்சு ரொம்பவும் நொந்து போயிட்டான் .
உண்மையில் இதுக்கப்புறம்தான் அவன் ரொம்ப நொந்து போ போறான் என்று அவனுக்கு தெரியவில்லை ஐயரோ மாப்பிள்ளைய கூப்பிடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ராஜனும் வந்து எங்கப்பா முகிலன் என்று கேட்டார் தனக்கு வந்திருந்த மெசேஜை காட்டி படிக்க சொன்னான் அதைப் படித்ததும் ராஜன் முகத்தில் அறைந்து அழுது கொண்டார் வீரபாண்டிக்கும் கல்யாண மேடையில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்தனர் வீரபாண்டி ராஜனை பார்த்து தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாக சொல்லி சண்டைக்கு போனார்.
ராஜன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் மோகனோஅப்பா நான் பஸ் ஸ்டாண்ட் போறேன் அங்க தான் அண்ணே எப்படியும் இருப்பான் நான் போய் கூட்டிட்டு வந்துறேன் என்று போகப் போனான்.
ராஜனும் வேண்டாம்ப்பா இனி நீ தான் அந்த மேடைல உட்கார வேண்டும் என்று கூறினார் மோகன் இல்லப்பா அது சரிவராது இது அண்ணனுக்கு பார்த்தவங்க நான் கல்யாணம் பண்ணா சரி வராது என்று கூறினான் இப்ப வேற வழி இல்ல என் மானத்தை காப்பாத்த நீதான் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறினார். ராஜன் அப்பாவோட மானத்தை காப்பாத்துப்பா என்றுமோகனின் கால்களில் விழப்போனார். மோகனோ சரி அப்பா நான் ஒத்துக்குறேன் என்றான் அவன் ஒத்துக்கிறேன் என்று சொன்னது வினோதினி எப்படியும் இதை மறுத்து விடுவாள் என்பதால்தான் ,
அதே நேரத்தில் வினோதினியும் அங்கே அவன் எண்ணத்தை இன்னும் பொய் யாக்காமல் வீரபாண்டியிடம் வாதாடி கொண்டிருந்தாள் எனக்கு இந்த கல்யாணம் வேணாம் என்று வீரபாண்டியோ எனக்கு வேற வழி இல்ல இப்ப மட்டும் நீ தாலி கட்டிகலனா நான் எல்லாருக்கும் முன்னாடியும் என்னால தலை குனிஞ்சு வாழ முடியாது என்று லட்சுமியும் அவளிடம் மன்றாடி கொண்டு இருந்தார் வினோதினியும் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்று சொன்னால் அவளும் மோகனை மனதில் வைத்துக்கொண்டு அவன் எப்படியும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்று மனதில் வைத்துக் கொண்டு தைரியமாக நின்று கொண்டிருந்தாள் .