“உன்னுள் ரோஜாவாய் நான் “

அத்தியாயம் -18(final)

           ஜெயராணி குழந்தையை கொஞ்சி விட்டு வெளியிலேயே தூக்கிக் கொண்டு வந்தார் ராஜன் ஜெயராணி திட்ட ஆரம்பித்தார். ஏன் ராணி நம்ம வினோதினியை ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டால் குறைந்து போய் விடுவாயா என்று கத்த தொடங்கி இருந்தார்.

              மோகனும் அப்பொழுது ஹாஸ்பிடலில் இல்லை. வினோத சித்தியை வீட்டில் கொண்டு போய் விட சென்று இருந்தான். லட்சுமி மட்டும்தான் வினோவிற்கு துணைக்கு இருந்தார். ஜெயராணி வந்து தன் பொண்ணை நல்லா இருக்கிறாயா  என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்ற ஆதங்கம் லட்சுமிக்கு ஜெயராணி குழந்தையை வெளியே கொண்டு போனதும் லட்சுமி கோபமாக ஏன் மா மாப்பிள்ளை  தனியாக போவோம் என்று சொல்கிறார். நீ என்னமோ வேணான்னு சொன்னியாமே அவர் பேச்சைக் கேள் என்று லட்சுமி கூறினார். இந்த  மனுஷி இருக்கிற இடத்தில் எல்லாம் உன்னால வாழ முடியாது. செத்துப் பொழச்சி இருக்க ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டா தான் என்ன பேரனை மட்டும் தூக்கி கொஞ்சி விட்டு போறாங்க என்றார்.

            அதற்கு வினோதினியோ அவங்க சின்ன வயதில் நிறைய கொடுமை அனுபவிச்சு இருக்காங்க லத்திகாவும் மோகனும் சொல்லி இருக்காங்க அவங்க மோகனும் நானும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் என்று நினைக்கிறார்கள் ஆனா அது உண்மை இல்லை அவங்க அண்ணனுக்கு பேசி முடித்ததும் தான் நான் இல்லாமல் மோகனால நான் இல்லாம வாழ முடியாது என்று அவருக்கு தோன்றி இருக்கு அதுக்கு பிறகு தான் எல்லா குளறுபடியும் ஆனா அத்தை உண்மை தெரியாமல் பேசுறாங்கஅது மட்டும் இல்ல நம்ம எல்லாரும் செஞ்சது தப்பு தானே அவங்களை விட்டுட்டு போயி கல்யாணம் பண்ணது அதுவும் அவங்களுக்கு கோவம் அவங்க மனசுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க இப்ப நாங்க தனியாக  போனா  அவங்க இன்னும்  பாதிக்கப்படுவாங்க அது மட்டும் இல்ல அவங்களுக்கு அவங்க பையன பிரிச்சுடுவேன்னு தான் பயப்படுறாங்க அதை நான் செய்யாமாட்டேன். நம்ம எப்படி கூட்டு குடும்பமா வாழறோமோ அதே மாதிரி இருக்க தான் எனக்கு ஆசை அவங்கள அவங்க பையன் கிட்ட இருந்து பிரிச்சுவிட்டேன் அப்படிங்கற பேரு எனக்கு வர வேண்டாம். எதுவா இருந்தாலும் அவங்க நிறை குறைகளை ஏத்துக்கிட்டு நான் வாழ பழகிக்கணும் என்று கூறினாள்.

            அதே நேரத்தில் ஹாஸ்பிடலில் வெளியே ராஜன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்.” வந்து வினோவ நல்லா இருக்கியாமானு கேளு ஒரு வார்த்தை கேக்குறது ஒன்னும் குறைந்து போய்விட மாட்ட, நம்ம  பேரனை  பெத்த எடுத்திருக்கிறாள். அவளை விசாரிக்க இல்லைனா நீ மனுசியே இல்ல” என்று கூறிக்கொண்டு ஜெயராணியை இழுத்து வந்தார். லட்சுமியும் வினோதினியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே வந்து விட்டனர்.

           ஜெயராணிக்கு அப்பொழுதுதான் உண்மை விளங்கியது இப்படிப்பட்ட மருமகளை வந்த நாள் முதற்கொண்டு திட்டிக் கொண்டே இருந்தோமே, இனிமேயாவது திட்டாம அவளை நம் வீட்டிலேயே வாழ வைக்கணும். நாம எது சொன்னாலும் கேட்டுப்பா அது போதும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். வினோதினியின் பக்கத்தில் ஜெயராணி வந்ததும்தான் பேச்சை நிப்பாட்டினாள். அதற்குப் பிறகு ஜெயராணி என்னை மன்னிச்சிடுமா எங்க என் பையன் என்னை விட்டுட்டு போயிடுவானோன்னு பயத்துல இப்படி பண்ணிட்டேன் என்றார். நீ எங்க குடும்பத்தை பிரிச்சுடுவியோனு பயந்தேன். அது மட்டும் இல்ல முகிலனும் என்னோட இல்ல அவன் தனியா போயிட்டான். அடுத்து மோகனும் என்னை விட்டுப் போயிருவாங்குற பயத்துல தான் நான் அப்படி இருந்தேன் என்றார். இப்பொழுதுதான் என் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு நீ மருமகளா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று மனதார பாராட்டினார். பிறகு ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நம்ம வீட்டுக்கு நேரா வந்துரு நாம நம்ம வீட்டுல நான் என் பேரனை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

          அதற்கு லட்சுமியோ அது எப்படி அண்ணி நான் விட முடியும் பச்சை உடம்பு காரி எங்க வீட்ல ஒரு மூன்று மாசத்துக்கு வச்சு பார்த்து தான் அனுப்புவேன் என்று கூறினார். ஜெயராணி நீங்க சொல்றது சரிதான் அண்ணி என் மேல நீங்க கோபமா இருப்பீங்க என்னால தானே என் மருமகளுக்கு வளைகாப்பு கூட எல்லோருக்கும் சொல்லி செய்யாம உங்க வீட்ல வீட்டாளுங்க மட்டுமே வளைகாப்பு நடத்துனீங்க மோகனும் நானும் பக்கத்தில் இல்ல எல்லோரும் எங்களை கேட்பாங்க தானே நீங்க உங்க  ஒரே மகள் வளைகாப்பு சொல்லாமல் கொள்ளாமல் நடத்துனீங்க. என்னை கூப்பிட்டதுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டேன் அது போக மோகனும் இங்கே இருக்க விடாம என்னால தான் மருமகளை பிரிந்து வெளிநாட்டிற்கு சென்றான். இனிமே என்னை நம்பி எப்படி மருமகளையும் பேரனையும் அனுப்புவீங்க என்று கூறி அழுதார்.

           வினோதினியோ அழுகாதீங்க அத்தை 30 நாள் ஆனதும் நம்ம வீட்டுக்கு வந்துறேன் என்று கூறினால் லட்சுமியோ என்ன இருந்தாலும் உங்க அத்தையை விட்டுக் கொடுக்க மாட்டியே என்று என் கூறினார். சரிமா உடம்பை பார்த்துக்கோ என் பேரனையும் பார்த்துக்கோ என்று மருமகளையும் பேரனையும் உருகி முத்தம் கொஞ்சினார். மோகன் வந்ததும் அனைத்தையும் கூறி வினோதினி மகிழ்ச்சி அடைந்தாள்.

           மோகனுக்கும் அம்மா வினோதினியை புரிந்து கொண்டதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான். குழந்தை பிறந்து 30 நாள் ஆன பிறகு நல்ல நாள் பார்த்து வினோதினியும் பேரனையும் கூட்டிக்கொண்டு வந்தார். ஜெயராணி பேரனுக்கு பெயர் சூட்டும் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைவரையும் அழைத்து இருந்தார். மோகனும் தன் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தான். வந்திருந்த நண்பர்கள் அனைவரும் மோகனையும் வினோதினியையும் ஓட்டி எடுக்க ஆரம்பித்தனர். மோகனும் வினோதினியும் அடிக்கடி கண்களாலேயே பேசிக்கொண்டு இருந்தனர். இதனைப் பார்த்த சந்தோஷ் அது எப்படி டா பிடிக்கவே இல்லை பிடிக்கவில்லை என்று சொல்லுவா இன்னைக்கு என்னடா வினோவோட கண் பார்வைக்கு ஆடற என்று கிண்டல் அடித்தான்.

            மோகனும் வினோதினியும் தன் மகனுக்கு வினிகன் என்று பெயரிட்டனர். மோகன் வினோதா வினி வினி என்று தானே அழைப்பான் அந்த வினியையும் மோகனில் உள்ள” கன்” என்ற இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வினிகன் என்ற பெயரிட்டனர்.

              மூன்று வருடங்களுக்குப் பிறகு மோகனுடைய குடும்பமும் வினோதினியின் குடும்பமும் மோகனுடைய குலதெய்வ கோயிலில் கூடியிருந்தனர் அவர்கள் பிள்ளைகள் வினிகனுக்கும், வினிகா விற்கும் காதுகுத்து  நடந்து கொண்டிருந்தது. மோகன் ஆசைப்பட்ட மாதிரியே அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்தது. பெண் குழந்தைக்கு வினீகா என்ற பெயரிட்டு அவள் உருவான நாளிலிருந்து வினோதினியை கைகளில் தாங்கினான். அவன் ஆசைப்பட்டபடி வளைகாப்பு நடத்தினான். ஜெயராணியும் தன் மருமகளுக்கு தங்க வளையல்கள் அணிவித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

        மோகனும் வினோதினியும் தன் குழந்தைகளை நரேன் மடியில் வைத்து காது குத்தல் ஆயின முதலில் வினிகனுக்கு காது குத்தி முடித்தனர். அவன் ஒருவாறு அழுகை நின்றதும் அடுத்த வினிகாவிக்கு காது குத்தினர். வினிகாவை பார்க்கும் போது மோகனுக்கு தன் சின்ன வயதில் பார்த்த வினோ கண்முன் தோன்றினாள். அதனை பார்த்து உச்சி  குளிர்ந்தான். அவளுடைய மனதில் சின்ன வயதிலேயே ரோஜாவாய் வந்து அமர்ந்து விட்டாள் வினோதினி. தன் மனைவியையும் தன் குழந்தைகளையும் பார்த்து பூரித்துக் கொண்டு இருந்தான். வினோதினி மட்டும் நம் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நம் வாழ்க்கை என்னாயிருக்கும் என்று நினைக்க மனம் கசந்தது. அன்று இரவு வினோதினியோ குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மோகனிடம் வந்தாள். உங்களிடம் ரொம்ப நாள் ஒன்று சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று கூறினாள்.  மோகனோ இரண்டு பிள்ளைகளையும் பெற்று எப்படி இன்னும் அதே மாதிரியே இருக்க என்று கேட்டான். மாமா கிட்ட பக்கத்துல வாடி என்றான். வினோதினியோ அப்படி சொல்லி சொல்லி என்னை ஏமாத்துங்க என்றாள். உன்னை நான் என்னடி ஏமாத்துனேன் என்றான். உங்களுக்கு ஒன்னு சொல்லவா நம்ம ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போதுஉஷா உங்களுக்கு கை கொடுக்க வந்தா அப்பொழுது நீங்க அவளிடம் பேசவில்லை திட்டி அனுப்புனீங்க அப்ப நினைச்சேன் இந்த மாதிரி ஒரு ஹஸ்பண்ட் நம்மளுக்கு கிடைச்சா எப்படி இருக்கும் அப்படின்னு நினைச்சேன் அப்பவே உங்க மேல ஒரு கிரஷ் இருந்து இருக்கு ஆனா அது எனக்கு சரியா தெரியலஅதுக்குப் பிறகு நீங்களே எனக்கு புருஷனா கிடைச்சிடீங்க எப்படியோ உங்களுடைய மனசுல ரோஜாவா அமர்ந்து விட்டேன் என்றாள். அதற்கு மோகனும் பரவாயில்லையே என் வினிசெல்லம் மனசிலே நான் இருந்து இருக்கேன் அதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு என்று கட்டியணைத்தான். இருவரும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்தனர். வினோதினி என்றும் மோகனின் மனதில் மனம் பரப்பி கொண்டு இருப்பாள்.

            முற்றும்.