“உன்னுள் ரோஜாவாய் நான் “

அத்தியாயம் -13

               மோகனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் நரேனிடமிருந்து போன் வந்தது. மாமா அக்கா பிரக்னண்டா இருக்காங்க இப்பதான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தோம் டாக்டர் தான் கன்ஃபார்ம் பண்ணாங்க அதைக் கேட்ட மோகனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. வினிசெல்லம் நமக்கே நமக்குன்னு ஒரு குழந்தை பிறக்கப் போவது இனி யாராலும் நம்மள பிரிக்க முடியாது.இதோ இப்பவே அப்பா அம்மா கிட்ட சொல்லி உன்னை கூட்டிட்டு வந்துடறேன் என்று சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.

           வினோதினியை சுற்றி பாட்டி தாத்தா அம்மா அப்பா சித்தி சித்தப்பா நரேன் யாழினி அனைவரும் இருந்தார்கள். அனைவரும் முகத்திலும் சந்தோசம் லட்சுமி அம்மா வினோதினியைஇந்த ஜூசை குடிமா என்றார் வினோதினியோ இல்லமா எனக்கு எதுவும் வேண்டாம் குமட்டுது என்றாள். பாட்டியோ குமட்டினாலும் பரவாயில்லை போயிட்டு வெளியே வந்தால் கூட பரவாயில்லை என்றார். பின் எல்லோரும் கெஞ்சவும் குடித்தால் வாந்தி வராமல் இருக்க எலுமிச்சம் பழத்தை கையில் கொடுத்தன அவளது சோகமான முகத்தை பார்த்து எதற்காக சோகமாய் இருக்கிறாய் என்று கேட்டு யாழினியும் நரேனும் அவளது எண்ணத்தை திசை திருப்புவதற்காக படிப்பில் பேச்சை திசை திருப்பினர். பாட்டியோ போங்கடா அவளை சுத்தி உட்கார்ந்துக்கிட்டு அவளுக்கு கண்ணு பட்டுடும் என்று கூறி கல்லுப்பையும் மிளகாய் எடுத்துக் கொண்டு வந்து சுற்றினார்.

           பின் நெருப்பில் போட்டுவிட்டு நரேணையும் யாழினையும் பார்த்து போங்கடா அவளை ரெஸ்ட் எடுக்க விடுங்க வினோதினியே பார்த்து போமா இந்த நேரத்துல நல்லா தூங்கி எந்திரிக்கணும் அப்பதான் குழந்தை நல்லா ஆரோக்கியமா வளரும் என்ற வினோதினியை படுக்க சொன்னார்கள். மோகனுடைய ஞாபகம் வந்தது.

         மோகன் வீட்டிலோ அவன் தந்தை தாயிடம் வினோதினி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னான். ராஜனுக்கோ மோகன் மீது கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் வினோதினி கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டதும் அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஜெயராணியோ இது எல்லாம் பொய்யா இருக்குங்க இத்தனை நாள் இங்கு இருக்கும்போது மாசமா இல்லஅவளுடைய வீட்டிற்கு போனது மாசமாயிட்டாளா என்று கூறினார்.

        மோகனோஅம்மா அவளை பத்தி பேசலைனா உங்களுக்கு தூக்கம் வராதா அம்மா நீங்க திட்டினஉடன்  இங்க இருந்து நடந்தே போய் இருக்கா அங்க போனதும்மயக்கம் பட்டுவிழுந்துட்டா உடனே ஹாஸ்பிடலுக்கு எல்லாரும் கூட்டிட்டு போய் கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க அவ கூட எங்கிட்ட இத சொல்லல நரேன் தான் போன் பண்ணி  சொன்னான்.

         ஜெயராணியோ சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் அப்படியே இருந்தாலும் முறைப்படி அவங்க வீட்ல இருந்து சொல்லியிருக்கணும் என்று கூறினார்.

        ராஜனும் அம்மாவும் பிள்ளையும் ஆளுக்கு ஒரு கூத்து பண்ணி வச்சிருக்கீங்க பின்ன எப்படி உங்ககிட்ட சொல்லுவாங்க ஜெயராணிய பார்த்து என்னைய கேட்காமல் வினோதினியை வீட்டை விட்டு அனுப்பியது உன்னோட தப்பு என்று ஓங்கி ஒரு அறைவிட்டார் கிளம்புங்க போய் மருமகளே கூட்டிட்டு வருவோம் என்றார்.

           லத்திகா முதற்கொண்டு அனைவரும் கிளம்பி வினோதினியின் வீட்டிற்கு சென்றன. வினோதினியின் வீட்டில் அனைவரும் வாங்க என்று கூப்பிட்டன அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை மோகன் எல்லா விஷயத்தையும் சொல்லி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டான். வினோதினி பாப்பா எல்லாத்தையும் சொல்லுச்சு ராஜனை பார்த்து நீங்க முதலே எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கலாம் என்றன. ராஜனும் வீரபாண்டிய பார்த்து மன்னிச்சிடுங்க மச்சான் எனக்கு எல்லா விஷயமும் இப்பதான் தெரியும் என்றார்.

        ராஜனும் எங்க மருமகள நாங்க பாக்கணும் கொஞ்சம் கூப்பிடுங்க என்றார். அம்மா யாழினி மெதுவா கூட்டிட்டு வாமா என்றனர். வினோதினியிடம் அக்கா உன்னை பார்க்க அத்தை மாமா மச்சான் எல்லோரும் வந்திருக்காங்க உன்னை கீழே வர சொன்னாங்க என்றாள்.  வினோதினிக்கோ ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது அங்கே இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு இங்கே வந்து என்ன பண்றாங்க என்று வேகமாக தடதடவென்று கீழே இறங்கி வந்தால் இவங்களுக்கு யார் விஷயத்தை சொன்னா என்று அகங்காரமாக கேட்டார். அப்பொழுதோ நரேன் நான்தான் அக்கா சொன்னேன்.ஹாஸ்பிடல் இருக்கும்போது மாமா உன் செல்லுக்கும் என் செல்லுக்கும் மாத்தி மாத்தி போன் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க, அது மட்டும் இல்ல இந்த விஷயத்தை இப்போது சொல்லலைன்னா இந்த அம்மா வினோதினியின் அத்தையை கையை காட்டி இங்கே இருந்தப்ப ஒன்னும் சொல்லல அங்கே போனதும் குழந்தை உண்டாயிருச்சு என்று அதற்கு உன்னையே தப்பா சொல்லுவாங்க அது மட்டும் இல்ல இப்ப இந்த விஷயத்தை சொல்லலைனா கொஞ்ச நாள்ல கழிச்சு அவங்களுக்கு விஷயம் தெரியும்போது நம்ம குடும்பத்தை தான் தப்பா பேசுவாங்க அதற்கும் உன்னை திட்டுவாங்க என்று ஜெயராணியை பற்றி தெரிந்து புட்டு புட்டு வைத்தான். அதுமட்டுமில்ல அக்கா நாங்க எல்லோரும் குழந்தை உண்டாக இருக்குன்னு சந்தோசமா இருந்தோம். ஆனால் நீ மாமா ஞாபகமா இருந்தாய் அதனால் தான் சொன்னேன் என்றான்.

       வினோதினிக்கோ தம்பியின் பாசத்தை கண்டு கண்கள் கலங்கியது. மோகனுக்கே எப்படி அம்மா பற்றி இப்படி புட்டு புட்டு வைக்கிறான்.  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அம்மா இந்த வார்த்தையை தானே சொன்னாங்க என்று நினைத்தான்.

         ஜெயராணியோ ஒரு சின்ன பையன அவனைப் பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க எல்லாரும் என்று கத்த ஆரம்பித்தார். வினோதினி முகத்தை உற்றுப் பார்த்தார் ரொம்ப களைப்பாக தெரிந்தாள். அப்பொழுதுதான், கழுத்தை உன்னிப்பாக பார்த்தார் ஏன்மா உனக்கு தாலி செயின்தானே போட்டு இருந்தேன் இப்ப எப்படி புதுசா கல்யாணம் ஆன மாதிரி ஒன்பது நூல் 11 நூல் கோர்த்து தாலிக்கயிறு போட்டு இருக்கா என்றார்  இப்போது அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தனர்.

           ஜெயராணி கோ இரண்டாவது கல்யாணம் நடந்தது தெரியாது மோகனைப் பார்த்து இரண்டாவது வாட்டி வேற கல்யாணம் நடந்துச்சா நான்பெங்களூரல இருந்தப்ப என்று கோபமாக கேட்டார்.ராஜனை பார்த்து இன்னும் எதையெல்லாம் மறைச்சு இருக்கீங்க அப்பாவும் பையனும் சேர்ந்து என்னைய முட்டாளாக்கி இருக்கீங்க மேலும் வினோதினியின் குடும்பத்தை பார்த்து ஒரு பெரிய மனுஷி வீட்ல இருக்கேன் அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் உங்களுக்கு தோணல நீங்களா கூட்டிட்டு போய் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கீங்க என்றார்.

           வினோதினியின் பாட்டியோ ஏன் இவ்வளவு கோவப்படுற உங்ககிட்ட முதலில் சொன்னோம் நீங்க ஒத்துக்கல இப்ப கல்யாணம் முடிஞ்சு உடனே நல்ல விஷயம் நடந்திருக்கு அதை நினைச்சு சந்தோஷப்படுமா என்றார்.அப்பொழுதுதான் வினோதினிக்கு தோன்றியது கல்யாணமான பிறகு நாம தலைக்கு குளிக்க வில்லை என்று உரைத்தது. ஜெயரணியோ என்ன சந்தோஷம் படுறது இதோ என் வீட்டுக்காரரையும் என் மகன் மோகனையும் உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறீங்க அதை நினைச்சா என்றார்.

          ராஜனும் வாயை மூடு ஜெயராணி நான் தான் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன் என்றார் ரொம்ப நல்லா இருக்கு என்றார்ஜெயராணி ராஜன் வீரபாண்டியை பார்த்து அவ கடக்குறாங்க மருமகளை வீட்டுக்கு அனுப்புங்க என்றார். அதற்கு வீரபாண்டியோ முடியாது மச்சான் பாப்பா ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க ஸ்கூல்ல இருந்து நிப்பாட்ட போறேன் அவளை நல்லா பார்த்துக்கணும் அவளோட ஆட்கள் இருந்துகிட்டே இருக்கணும் உங்க வீட்டுக்கு வந்தா அதெல்லாம் இருக்காது.அதனால ,இங்க எங்களுடைய இருக்கட்டும் இங்க இருந்தால் பார்த்து பார்த்து செய்வோம். அதனால குழந்தை பிறக்கிற வரைக்கும் என் மகள் எங்க கூடவே இருக்கட்டும் என்றார்.

இனி…