Advertisement

“நான் என்ன பண்ணினேன்?? நீங்க தான” 
“வாய மூடுடீ… பேசுன கொன்னுடுவேன்… இனிமே இங்க வந்த.. இல்ல நானா கூப்பிடாம இங்க வர கூடாது.. வெளியே போடி..” என அவன் சொன்னது, தனது அறையை விட்டு வெளியே போ என…”  
“ஆனால் அவள் புரிந்து கொண்டது, அந்த வீட்டை விட்டு வெளியே போ…” என்பதாய். “நிஜமா மாமா… நான் போகவா??” என்று தேம்பிய படி மீண்டும் காயத்ரி கேட்க, “ஆமாண்டீ , போ… ஒரு தரம் சொன்ன புரியாது?? உனக்கு போ!!” என்று கத்த ஆரம்பித்தான்.
“அவள் இருந்தாள், எங்கு தான் அவளிடம் வரம்பு மீறி விடுமோ என்ற பயத்தில் கூறியதற்கு அவள் தப்பர்த்தம் கொள்வாள் என்று நினைக்கவில்லை அருள்”
“காயத்ரி அழுத படி கீழே வர, அருள் மேலே அனைத்தையும் போட்டு உடைத்து கொண்டு இருந்தான்.” சத்தம் கேட்டு அறையில் இருந்த மூன்று பேரும் வந்தனர்.
“ஏய் ஏன்னடி ஆச்சு… எதுக்கு அழற??” செல்வி கேட்க 
“மாமா திட்டிடுச்சு.. நான் போறேன் போ” என அவரின் கைகளை உதறினாள் காயத்ரி.
“ஏன்டி.. பசியா இருக்குறவனுக்கு சாப்பாட்ட குடுன்னு சொன்னா… அவனை கோபபடுத்திட்டு இப்ப நீ அழுகுறியா??” என்று அவள் தலையில் குட்டினார் செல்வி.
“ம்மா.. நான் ஒன்னும் பண்ணல, அவர் தான்…. என சொல்ல வாய் எடுத்தவள் ஏனோ சொல்லவில்லை. அவர்களின் ரகசியம் அவர்களுடனே இருக்கட்டும் என்று நினைத்துவிட்டாளோ!!?? சொல்லி இருந்தாள் அவன் கோபத்திற்கான காரணத்தை அவளுக்கு புரிய வைத்து இருப்பார் செல்வி” 
“இத்தனை நீண்ட பிரிவும் இருந்து இருக்காது இவர்களிடையே”
“போம்மா… நீ எப்பவும் உன் தம்பிக்கு தான் பேசுவ” என்றவள் சென்று அறைக்குள் நுழைந்து கொண்டாள். 
“அருளாவது வந்து பார்த்து இருக்கலாம்?? அவனும் தான் செய்த செயலினை நினைத்து  மனம் குறுகுறுக்க, அவளை பார்க்காமல் வீட்டிலும் எங்கு போகிறேன் என்று சொல்லாமல்  மதுரைக்கு போக… சென்று விட்டாள் காயத்ரி தன் தகப்பனிடம்” 
“மறு நாள் குமரன் வந்து இருந்தார். காயத்ரியை கல்லூரிக்கு வர சொன்னதாக அழைத்து போக” 
“என்னங்க, வர நாலு நாள் ஆகும்னு சொன்னீங்க??” 
“ஆமா… செல்வி அப்படிதான் சொன்னோன். அங்க போனா வெரிபிகேசனுக்கு காயத்ரிய வர சொல்லி சொன்னாங்க, அது தான் அழைச்சுகிட்டு போக வந்தேன். அங்க போயிட்டு அப்படி அவள இங்க வந்து விட்டுட்டுபோறேன்” 
“சரி, அப்ப சாப்புட்டு கிளம்புங்க” என்றவர் காலை உணவினை பார்க்க உள்ளே போனார்
“ஏம்மா  ஓரு மாதிரி இருக்க??” மகளை குமரன் கேட்க, “அது மாமா வழக்கம் போல அண்ணாவுக்கும் இவளுக்கும் சண்டை. அது தான் மூஞ்ச அப்படி வச்சு இருக்கா” என்றான் கரிகாலன். 
“உங்க அண்ணனுக்கு அறிவே இல்லடா…!! எப்பையும் என் பொண்ணு கூட சண்டை போடுறதே வேலையா வச்சு இருக்கான்.. நீ வாடா.. அப்பா எப்பவும் உன் பக்கம் தான்” என்றவர் அவளுக்கு செல்வி வைத்து போன இட்லியை ஊட்டி விட்டார்.
“இட்லியை வாய் திறந்து வாங்கி கொண்டாலும், அவளின் மனம், அருள் ஏன் தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டான்??” என்பதிலேயே நின்று இருந்தது.
“பதினெட்டு வயது,  மற்றவரின் மனதினை புரிந்து கொள்ள முடியாத வயது. யார் என்ன சொன்னாலும், தனக்கு என்ன புரிகிறதோ அதை அப்படியே நம்பும், அதையே சரி என்றும் வாதிடும்” 
“இன்றைய மனநிலையில்… அவளை பெருத்தவரையில் நேற்று நடந்தது தவறு. அதுவும் தான் அப்படி நின்றதால், அருள் தன்னை தவறாக நினைத்தே வெளியே போக சொன்னது. இதில் தவறு முழுவதும் அவனிடம், ஆனால் தன்னை தவறானவளாக நினைத்து விட்டான், அதனால் தான் தன்னிடம் சொல்லாமல் வெளியே போய்விட்டான்”
“இனி அவனே வந்து அழைத்தாலும், தான் இங்கு வரக்கூடாது, பேசக்கூடாது” என்ற முடிவுடனே குமரனுடன் சென்றாள்.
“அருளுடன் பேசக்கூடாது” என்று நினைத்தவள் அதன் பிறகு யாருடனும் பேசவில்லை. பேச்சி, கரிகாலன் என யார் பேசினாலும் அவளிடம் பதில் இல்லை.
செல்வியும் கேட்டார் “என்னடி… என்ன ஆச்சு?? எதுக்கு யார்கூடவும் பேசாம அடம் புடிக்குற??”
எந்த பதிலும் இருக்காது காயத்ரியிடம். “நான் படிக்க போகனும்” என்று அறைக்குள் நுழைந்து கொள்வாள். “அருளிடமும் கேட்டாகி விட்டது. அவனுக்கு முத்தம் தந்த நியாபகம் மட்டும் தான் இருந்தது.” 
“அதன் பிறகு கோபத்தில் அவளிடம் பேசி வார்த்தைகள் நினைவில் இல்லை!! அது தோன்றினாலும் அதற்கு காயத்ரி இப்படி அர்த்தம் செய்து வைத்து இருப்பாள் என்று அவன் நினைக்க வில்லை”
“என்னம்மா இது… எலிக்கு பயந்து புலிகிட்ட மாட்டுன கதையா இருக்கு இவங்கது. என்ன சண்டை ரெண்டு பேருக்கும் தெரியலை?? அவள கேட்டா வாயே தொறக்க மாட்டேன்னுறா.. இவன கேட்டா என்ன சண்டைன்னு?? திரும்ப என்னையே கேக்குறான். இப்ப என்ன பண்ண நான்??” 
“அவ தான் சின்ன பொண்ணு, நீயாவது பேசுடான்னா?? அவளாதான போனா அவளே பேசட்டும்ன்னு சொல்லுறான்” என்று பேச்சிடம் மட்டுமே செல்வியால் பேச முடிந்தது. 
பேச்சியோ “விடு செல்வி… இன்னும் சின்ன புள்ளைங்க, படிப்ப முடிக்கட்டும் பக்குவம் தானா வரும். சிலது அனுபவத்துல தான் கத்துக்க முடியும். நாம சொன்ன ஏறாது” என்று விடுவார்.
“அருளுக்கும் டிரைனிங் காரணமாக ஊருக்கு வர முடியவில்லை.  அடுத்து போஸ்டிங் வட மாநிலத்திலேயே கிடைக்க அவனை அவனின் வேலை பிடித்து வைத்துக்கொண்டது”
“இவர்களின் சண்டைக்கு காரணம் தெரியாமலேயே இருவரும் கோபமாக இருக்க…  காயத்ரி தனது படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தாள். அன்று அவளுக்கு இறுதி தேர்வு” 
“காலையில் எழும் போதே செல்விக்கு தலைசுற்றல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. குமரன் கேட்டதிற்கும் தெரியலை… இன்னிக்கு காயத்ரி வரட்டும் நாங்க ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வற்றோம்” என்று விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்திற்கு “ராஜமாணிக்கம், முத்தழகி இருவரும் வர, அவர்களுக்கு சாப்பிட கொடுக்க சமையல் அறைக்கு சென்றார் செல்வி”
“ஏங்க எதுக்கு இப்ப ஏன் தம்பி வீட்டுக்குன்னு?? நான் அப்ப இருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன் நீங்க வாயே தொறக்காம இருக்கீங்க”
“ஏண்டி இந்த வீடு எப்படி இருக்கு?”
“நான் உங்கள கேள்வி கேட்டா… திரும்ப நீங்க என்னைய கேக்குறீங்களா” 
“ஏய் கேட்டதுக்கு பதில சொல்லு… இந்த வீடு எப்படி இருக்கு??”
“நான் பொறந்த வீடு, அதுக்கு என்ன நல்லா தான் இருக்கு!!” என்றார் முகத்தில் பெருமை பொங்க. 
“அது உனக்கு வேணாமா!!?? அதுக்குதான் வந்து இருக்கோம். உன் தம்பியே வந்து என் பொண்ண கட்டிக்கோங்கன்னு சொல்லி பரிசம் போட்டு பல வருஷம் ஆச்சு??!! அது தான் இப்ப அதுக்கு வந்து இருக்கோம்”
“அண்ணிக்கு மட்டும் அந்த சோமசுந்தரம் வரலையின்னா… கல்யாணத்தையே முடிச்சிருப்பேன். அவன் வந்து கெடுத்துட்டான். அப்பறம் ஏன் இத்தனை நாள் விட்டு வைச்சேன்னு பாக்குறயா?? பொண்ணு, சொத்து கூட டாக்டர் அப்படின்ற பட்டத்தையும் சேத்துல கொண்டு வருது” 
“இதே காச வைச்சு ஆஸ்பத்திரிய கட்டி, காசு பாத்துட மாட்டேன். இந்த வீடு பணம் காய்க்குற மரம் டீ!! விடுறதுக்கு நான் என்ன கேனையா?? இன்னிக்கு என்ன ஆனாலும் சரி… இந்த கல்யாணத்தை முடிக்காம போக மாட்டான் இந்த ராஜமாணிக்கம்”
“முத்தழகிக்கு தான் இப்போது அவரின் வார்த்தை பிடிக்க வில்லை. இங்க பாருங்க எனக்கு என் தம்பி வேணும்னு தான் பரிசம் போட்டது… இந்த சொத்துக்காக இல்லை??”
“உனக்கு சொத்து வேணாம்டி, ஆனா எனக்கு இது மொத்தமா வேணும்!! அதுக்குதான அன்னிக்கு அத்தனை அசிங்க பட்டும் திரும்ப இங்க வந்து நிக்குறேன்” என்றவருக்கு என்ன பதில் சொல்ல என தெரியவில்லை  முத்தழகிக்கு.
“அவர் தன் பிறந்த வீட்டு சொந்தம் நிலைக்க காயத்ரியை கேட்டால், ராஜமாணிக்கமோ அந்த சொத்துக்காக உறவாட வந்து இருப்பதை முத்தழகியால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கே நான்கு தலை முறை சொத்து இருக்க எதற்கு இந்த ஆசை??” என தெரியாது நின்று இருந்தார் அவர்.
“சமையல் அறைக்கு செல்வி சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவரை கவனிக்க வில்லை. முத்தழகிக்கு ஏதோ நெருட இருங்க நான் இப்ப வர்றேன், என்றவர் உள்ளே போய் பார்க்க அங்க சமையல் அறையில் மயக்கம் போட்டு விழுந்து இருந்தார் செல்வி” 
“என்னங்க” என்ற அவரின் சத்ததில் ராஜமாணிக்கம் சமையல் கட்டுக்கு போக அப்போதுதான் காயத்ரியும், குமரனும் உள்ளே வந்தனர்.
 
இருவரும் சேர்ந்து அவரை தூக்கி வர,  “என்ன ஆச்சு செல்வி??” என பதறி வந்தார் குமரன். 
“அதற்கு முன்னமே செல்வி மூக்கில் இருந்து ரத்தம் வர… அவசரமாக ஹாஸ்பிட்டல் அழைத்து போக அதற்குள் உயிர் பிரிந்து இருந்தது….”
 
  

Advertisement