Advertisement

                     ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 7
“ஓடி போனது இரண்டு வருடங்கள்… காயத்ரி ஆசை படியே மருத்துவ கல்லூரியில் அதுவும் மதுரையிலேயே கிடைக்க  சந்தோசத்தில் ஆடிக்கொண்டு இருந்தாள் அவள்” 
“கல்லூரி திறக்க இன்னும் ஒரு மாதம் இருந்தது. தாத்தா வீட்டிற்கு சென்றும் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.” 
“திருமணத்திற்கு பிறகு அருளுடன் தான் வரவேண்டும் என்பதால் செல்வியும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளை அங்கு அனுப்பவே இல்லை.” குமரனுக்கும் அது தவறாக எடுக்க தோணவில்லை “அம்மாச்சி வீட்டுக்கு போகலையா??” கேட்டாலும் “படிக்கனும் ப்பா” என்று விடுவாள் அவரிடம். 
“இன்று ஏனோ ரங்கன் வந்ததில் இருந்து தானும் அவருடன் போவதாக பிடிவாதமாக இருந்தாள் காயத்ரி.” 
“எதுக்கு தங்கம் கோபமா இருக்கு??” ரங்கன் 
“போங்க தாத்தா” நான் உங்க கூட பேசமாட்டேன். இத்தனை நாள் படிக்கனும் அப்படின்னு அங்க வர விடலை, இப்ப தான் எனக்கு ஒரு மாசம் லீவு இருக்குல.. என்னைய கூட்டிட்டு போங்க அப்படின்னா, அம்மா வேண்டாம் சொல்லுறான்னா, என்ன பண்ண நான்??  என்றவளை பாவமாக பார்த்தார் ரங்கன்.
குமரன் செல்வியை பார்த்து முறைத்தவர் “மாமா.. நீங்க காயத்ரியை அழைச்சுகிட்டு போங்க.  காயத்ரி போ துணிகளை எடுத்துக்க” என்றவரிடம் செல்வி ஏதோ சொல்ல போக “ஏய்.. விடு புள்ள நாலு நாளைக்கு போயிட்டு வரட்டும். சும்மா அவளை வீட்டுகுள்ளயே அடைச்சு வைச்சுகிட்டு” என்று துண்டை உதறி தோளில் போட்டவர்  “நான் வயல் வரைக்கும் போயிட்டு வற்றேன், நீங்க கிளம்புங்க மாமா” என  வயலுக்கு சென்றார் குமரன்
செல்வி, காயத்ரியை திட்டிய படியே அவளின் துணிகளை அடுக்கினார். “திட்டாத செல்வி, சின்ன பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் தெரியுமா??” என்று ரங்கன் தான் அவரை சமாதானம் செய்தார்.
காயத்ரி சென்ற சிறிது நேரத்திலேயே ஃபோன் வந்தது குமரனிடம் இருந்து. ஃபோனை எடுத்து “சொல்லுங்க மாமா” என்றார் செல்வி.
“காயத்ரி கிளம்பிட்டாளா??”
“போயச்சு மாமா.. வீடே வெறிச்சுன்னு இருக்கு அவ இல்லாம”
அந்த பக்கம் சிரித்தவர் “செல்வி இன்னிக்கு என்ன சமையல்??” 
“நமக்கு மட்டும் தான.. அதனால உங்களுக்கு புடிச்ச கருவாட்டு குழம்பு, பருப்பு துவையல் வச்சு இருக்கேன். சாப்புட வற்றீங்களா மாமா??”
“ஏண்டி பொண்ணு இல்லைன்னா தான் இந்த மாமன் நெனப்பு வருமா??!!”
“இப்ப நெனப்புக்கு என்ன குறைச்சல்… அது இல்லாமையா இருக்கு” என்றார் அவர் கேட்டதின் உட் பொருள் விளங்காமல்.
“அப்ப இந்த மாமன் நெனப்பு இருக்கு!! அதை வந்து பாக்குறேன்.. நீ ரெடியா இரு இன்னிக்கு மதுரைக்கு சினிமா பாக்க போகலாம்!!’ என்றவர் வைத்துவிட்டார் ஃபோனை.
அவர் வைத்த பின் தான் அவர் சொன்னது புரிய “அட வெக்கம் கெட்ட மனுசா, வயசு பொண்ணு இருக்குற வீட்டுல நினைப்பை பாரு” வாய் விட்டு சொன்னவர் முகம் வெட்கத்தில் சிவக்க, அவர் வரவிற்காக தயாராக ஆரம்பித்தார்.
“சிறிது நேரத்தில் முகம் முழுதும் வேர்த்து வழிய, செல்வி… செல்வி” என சத்தமாக அவரை கூப்பிட்ட படி வந்தார் குமரன். அவரை பார்த்ததும் “என்னங்க என்ன ஆச்சு??” என தண்ணீர் செம்பை தர “செல்வி வேகமா கிளம்பு” என்றார் காரணம் சொல்லாமல்.
“அவரின் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை எனத்தோன்ற அவரும் கிளம்பினார் வேகமாக” 
“கார் ரங்கநாதபுரம் போகும் கிளைசாலையில் நுழைய செல்வி படபடப்பானார்.. “என்னங்க யாருக்கு என்ன?? இப்ப எதுக்கு ஆத்தா வீட்டுக்கு??” என்று கேட்க அவருக்கு பதில் சொல்லும் முன்னமே ரங்கன் வீட்டிற்கு முன்னால் வண்டி போய் நின்றது”
“ஊரே வாசலில் நிற்க… பெண்களின் ஒப்பாரி சத்தம் கேட்க… செல்வி காரில் இருந்து இறங்கி ஓட… அங்கு பார்த்தது ரங்கனின் உடலை தான்”
“காரில் காயத்ரியுடன் நன்கு பேசிக்கொண்டுதான் வந்தார் ரங்கன். சாமி காரை ஓட்ட மூன்று பேரும் கதை பேசி சிரித்த படிதான் இருந்தனர்”
“கார் வாசலுக்கு வர, பேச்சியும், கரிகாலனும் வந்தனர் வெளியே. அவர்களுக்கு முன் காயத்ரி கீழே இறங்கி விட, ரங்கன் இருந்த பக்க கதவினை கரிகாலன் திறக்க… ரங்கன் அப்படியே சாய்ந்தார் அவன் மீது” 
“யாருக்கும் புரியவில்லை!! எப்போது உயிர் பிரிந்தது என்றும் தெரியவில்லை?? ஆனால் ரங்கன் முகத்தில் இருந்த புன்னகை மட்டும் மாறவில்லை”
“அடுத்து காரியங்கள் நடக்க அருளும் வந்து விட்டான். தந்தைக்கு மகனாக அனைத்து காரியங்களையும் செய்ய… குமரன் பேசாவிட்டாலும் அருளுடனே இருந்தார்”
“வந்து இருந்த சொந்தங்கள் அனைவரும் சென்று விட்டனர். பின்பு எத்தனை நாட்களுக்கு வேலைகளை விட்டு இங்கு இருக்க முடியும்?? குமரனும் கூட செல்வியையும், காயத்ரியையும் இங்கு விட்டு தான் சென்று இருந்தார்”
இரவு சாப்பாட்டிற்கு அருளை அழைக்க “எனக்கு வேணாம்க்கா” என்றவன் தனது அறைக்கு சென்று விட்டான்.
“காயத்ரியை வந்ததில் இருந்து அவனிடம் பேச விடவில்லை செல்வி.” அதற்கு காரணம் தவறுதலாக கூட அவற்களின் விபரம் வெளியே தெரியக்கூடாது என்பதால். 
இன்று அவன் சாப்பிடாமல் போகவும் செல்விக்கு மனதே கேட்கவில்லை “அம்மாடி காயத்ரி… இந்த பாலை மட்டுமாவது மாமன குடிக்க வை” என்று தட்டில் கொஞ்சம் சாப்பாட்டையும், கிளாசில் பாலையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அவளுக்காகவாது இவன் சாப்பிடுவான் என்று.
“அவனின் அறைக்குள் நுழைந்தவள் பார்த்து… கட்டிலில் தலை சாய்த்து ரங்கனின் படத்தையே பார்த்து இருந்த அருளை தான். சென்ற வாரம் தான் டெல்லி போய் பார்த்து விட்டு வந்தார் ரங்கன் மகனை” 
“என்னப்பா திடீர்ன்னு வந்து இருக்கீங்க??” 
“என்னனு தெரியலைய்யா… உன்ன பாக்கனும்னு  ஒரே நெனப்பா இருந்ததா அது தான் வந்துட்டேன். நினச்ச நேரத்துல பாக்க முடியாம பணம் காச சேத்து என்ன பண்ண??”  என்றவர் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான் அருள். “என்னய்யா??” என்றார் ரங்கன். 
“எனக்கும் உங்கள பாக்கனும்னு  தோணிகிட்டே இருந்ததுப்பா… ஆனா லீவ் இல்ல… இன்னும் ஒரு மாசத்துல டிரைனிங் போகனும் அப்ப வந்து பாத்துட்டு அப்படியே போக முடிவு பண்ணுனேன்… நீங்க வந்துட்டீங்க… நான் உங்க ரொம்ப  கஷ்டபடுத்துறேனாப்பா??”  
“அய்யோ என் சாமி… என்ன பேச்சு பேசுற?? நீ என்ன கஷ்டபடுத்துற?? நான் தான் உனக்கு கஷ்டம் கொடுக்குறேன்… எனக்கு மரியதைய வேணும்னு தான இந்த படிப்பே படிக்குற?? இல்லையின்னா நீ ஆசை பட்ட அந்த கம்பூட்டர் படிப்ப தான படிச்சு இருப்ப!! அப்ப இந்த அப்பன் தான உனக்கு கஷ்டத்தை தற்றேன்??” 
“அப்படி எல்லாம் இல்லப்பா??? முதல்ல உங்களுக்கா படிச்சாலும் இப்ப இதை முழு மனசா தான் படிக்குறேன். நீங்க சொன்னது போல நல்ல போலீஸ்காரனா வருவேன் பாருங்க” 
“இது போதும்ய்யா எனக்கு!!” என்றவர் ஊர் திரும்பும் வரை மகனை விடவே இல்லை…  அவனை தூக்கி வைத்து கொள்ளவில்லை அவ்வளவே.
ரங்கனின் நினைவில் இருந்தவனை கலைத்தாள் காயத்ரி. “மாமா இந்த சாப்பாட மட்டுமாவது சாப்புடுங்க… மதியமும் நீங்க சரியா சாப்பிடலை!!” என்று ஒரு வாய் சாதத்தை  அவன் வாய் அருகில் கொண்டு போக…
“வேண்டாம் என சொல்ல திறந்தவன் வாயில் சாதத்தை திணித்து விட்டால் காயத்ரி. வாய் முழுதும் சாப்பாடு இருக்க அவளை முறைத்து பார்த்தவன் அவளின் கெஞ்சல் பார்வையில் அப்படியே முழுங்கினான்” 
அருள் சாப்பாட்டை முடிக்க பால் கிளாஸை அவனிடம் நீட்ட “எனக்கு வேணாம்… நீ குடி… இப்ப சாப்பிட்டதே போதும்” என்றவன் அவளை குடிக்க வைத்தான்.
ம்ம்… அப்பறம் “டாக்டர்  காயத்ரி”  என்று அருள் கூப்பிட “காயத்ரிக்கு புரையேறிவிட்டது..  பால் அவள் மீது சிந்திவிட்டது, நானா!! டாக்டரா!! என அருளை பார்த்தாள்”
“யேய்… பாத்து குடி” என்றவன் சிந்திய பாலை துடைத்து விட ஆரம்பித்தான்.  “கை செய்த செயலை இதழ் எப்போது தன் வசம் ஆக்கியது!!” அது அவனுக்கே தெரியவில்லை.
“தகப்பனை இழந்த வெறுமை, இரவின் தனிமை, துடைக்கும் போது அவன் கைகளில் பட்ட அவள் தாலி” என அனைத்தும் சேர்த்து அவனை மாய உலகத்திற்கு அழைத்து செல்ல மனம் தன் கட்டுப்பாட்டை இழந்தது.
“அவள் முகத்தில் அருள் நடந்திய முத்த ஊர்வலம், அவளின் இதழில் வந்து சற்று நேரம் இழைப்பாறியது.  எத்தனை நேரமோ தெரியவில்லை!!! முதல் முத்தம்… உரிமையாக முழுதாக ஏற்று கிறங்கி நின்று இருந்தாள் காயத்ரி”
“கைகள் அவள் மீது தனது அத்து மீறலை துவங்க ஆரம்பிக்கும் முன்னமே அருளின் புத்தி விழித்துக்கொண்டது.. ‘என்னடா பண்ணுற நீ?? சின்ன பொண்ணுகிட்ட’  மண்டையில் ஓங்கி குட்ட படாரென தள்ளிவிட்டான் அவளை”
“கிறங்கி நின்று இருந்தவள் அவள் தள்ளிய வேகத்தில் புரியாது நின்றாள். மலங்க மலங்க முழித்தவள்.. என்ன மாமா??” என கேட்டு முடிக்கும் முன்பே “போடி இங்க இருந்து… யார் வர சொன்னது என் ரூம்புக்கு?? அறிவு இல்லையா??” என தன் மீது இருந்த கோபத்தை அவள் மீது காட்ட பயந்து போனாள் காயத்ரி.

Advertisement