Advertisement

                   ஓம் நமச்சிவாய
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு….. 
ரங்கன் மெமோரியல் ஹாஸ்பிடல்…  சிறுமலையின் மற்றும் ஓர் அடையாளம். அன்று ரங்கன் பெரிய்யையாவிடம் சொன்னது போல் அவர்களுக்காக ஒரு மருத்துவமனை அதை கட்டி முடித்து விட்டாள் காயத்திரி. 
மருத்துவமனைக்கு இடம் பார்த்து மட்டும் தான் அவள். அதை முழுதாக செய்து முடித்தது குமரன் தான். ராகுலின்  முடி இறக்கும் விசேசத்திற்கு செல்லாமல் இருந்ததால்; குமரன் மேல் அவளுக்கு கோபம். 
அவரும் வேண்டும் என்று செய்ய வில்லையே? அன்று ஒரு துக்க காரியத்திற்கு போக வேண்டியது இருந்ததால்… நல்ல காரியத்திற்கு போக வேண்டிய நேரத்தில் இதை சொல்ல வேண்டாம் என்று அவர் சொல்ல வில்லை. ஆனால் பேச்சிக்கும்> அருளுக்கும் இது தெரியும். காயத்ரிக்கு தெரியாது! அதனால் அவர் மேல் கோபம். 
மகளின் கோபம் போக வைக்க அவளின் இந்த முயற்சியை தனதாக்கி கொண்டார் குமரன்;.  யார் சொல்லியும் கேட்க வில்லை. மலை மேலேயே இருந்து கட்டியும் முடித்து விட்டார்.  
உள்ளூர் செய்திகளில் இந்த செய்திதான் முதலிடம் இன்று.  திறப்பு விழாவிற்கு இன்னும் சிறிது நேரமே இருக்க, குமரன் தான்  இங்கும் அங்கும் என நடந்து கொண்டு இருந்தார் பதட்டமாக. 
“என்ன குமரா  பதட்டமா இருக்குற என்ன ஆச்சு??” என்ற படி வந்தார் சோமசுந்தரம்.“என்ன சொல்லுறதுண்ணா… இந்த பொண்ண இன்னும் காணலை…. பாக்க சொல்லி அருள அனுப்பி வைச்சா!! அவனையும் காணல?? எல்லாரும் வந்துட்டு இருக்காங்க” என்று 
கடகடவென சிரித்து விட்டார் சோமசுந்தரம் “என்னண்ணா நான் சொன்னது உங்களுக்கு சிரிப்பா இருக்கா??” கேட்டார் குமரன். 
“இல்லடா… காயத்ரியா வந்தாளும் வேகமா வந்துடுவா.. நீ போயும் போயும் அவன அனுப்பி வைச்சு இருக்கற அது தான் சிரிச்சேன்” என்னும் போதே வந்தான் அருள். 
“என்ன பத்தி சொல்லலையின்னா உங்களுக்கு தூக்கம் வராதா??” “வாடா..  எங்க என் பொண்ணு” என்றார் சோமசுந்தரம். குமரனும் அருள் முகம் பார்க்க அவர்கள்; பின்னால் வந்து நின்றாள் காயத்ரி. 
இந்த மூன்று வருடங்களில் தான் எத்தனை மாற்றம் அவளிடம். காயத்ரியிடம் இருந்த குழந்தை தன்மை மாறி இப்போது மருத்துவருக்கே உண்டான அந்த கனிவு அவள் முகத்தில். அது அவளை இன்னும் அழகாக காட்டியது.
“எங்க இன்னும் யாரையும் காணலை?? சித்தி, அம்மா, அம்மாச்சி, அக்கா, ரேஸ்மா எல்லாம் எங்க என்றாள் காயத்ரி. 
“எல்லாரும் வந்துட்டு இருக்காங்க கரிகாலன் தான் அழைச்சு கிட்டு வர்றான் இப்ப வந்துடுவாங்க”  குமரன் சொல்ல, “சரி” என்று தலையை மட்டும் காயத்ரி அசைக்க குமரன் முகம் வாடிவிட்டது.
அதை பார்த்த அருளுக்கு தான் பாவமாக இருந்தது.  அருள் காயத்ரியை பார்த்து முறைக்க> அவள் அவனை பார்த்தாள் தானே.
அருள்  குமரனை சமாதானம் செய்ய போக> அதற்குள் “விடு அருள் அவளுக்கு எப்ப தோனுதோ அப்ப பேசட்டும்” என்றவர் விழா ஏற்பாடுகளை பார்க்க போய்விட்டார். 
சிறிது நேரத்தில் டமால் என்ற சத்தம் கேட்க சோமசுந்தரம்> குமரன்> அருள்> என அனைவரும் வர காயத்ரி அவர்களை பார்த்து முறைத்து கொண்டு நின்றாள். 
குமரன் அவளை பாவமாக பார்க்க “தாத்தா” என்ற படி ஓடி வந்தது குமரன் காலை கட்டிக்கொண்டான் அருள், காயத்ரியின் இரண்டு வயது மகன்  ரங்கன். தாத்தவின் பெயரை வைத்தவர்கள் அவனை அழைப்பது “ஸ்ரீ” என்று. 
ரங்கனுக்குக்கு நேர் எதிர் குணம். அவர் அமைதி என்றால் இவன் சேட்டைகள் கணக்கில் வராதது. இரண்டு வயது என்றாலும் பார்த்ததை அப்படியே திரும்ப செய்யும் புத்திசாலி.  குறும்பு தனத்தால் அனைவரையும் வாய் அடைக்க வைப்பான்.
அனைவருக்கும் செல்லம். அதிலும் குமரனின் உயிர் அவன் பார்க்க சிறு வயது காயத்ரியை நினைவு படுத்த  அவருக்கு அனைத்துமானவன் ஸ்ரீ.  அனைவரிடமும் செல்லம் கொஞ்சினாலும் காயத்ரியை பார்த்தால் மட்டும் சிறிது பயம் இருக்கும் ஸ்ரீக்கு. யாரேனும் அவள் கண்டிக்கும் போது வந்து விட்டாள் அதுவும் இல்லை. அருள் தான் சமாளிப்பான் இருவரையும்.
வரும் வழியில் யாரோ பட்டாசு வெடிக்க அதைனை பார்த்தவன் அது என்ன என்று கேட்க. கரிகாலன் தான் சொன்னது “வீட்டுல விசேசம் வைச்ச இது போல பட்டாசு வெடிப்பாங்க ஸ்ரீ” என்று.  அப்போதே ஆரம்பித்து விட்டான் ஸ்ரீ. 
“இப்ப  நம்ம வீட்ல விசேசம் தான?? அப்ப நான் வெடிக்கனும் எனக்கு பட்டாசு வாங்கி தாங்க  சித்தா” என்று.  இந்;த  சித்தா  அவன் அக்கா  ரேஸ்மாவிடம்  இருந்து  வந்தது.
“டேய் அம்மா திட்டுவாடா” என்றதற்கும் கேட்க வில்லை. கரிகாலன் வாங்கி தந்த வெடியை மலையின் மீது வெடிக்க  காயத்ரி தான் இப்போது அனைவரையும் முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.   
காயத்ரி… ஸ்ரீயை அழைக்க மாட்டிக்கொண்ட பாவனையில் அவள் அருகில் சென்றான் ஸ்ரீ. அவனை பார்க்க பார்க்க முகத்தில் சிரிப்பு வர அதனை அடக்கியவள் “யார் உனக்கு பட்டசு வாங்கி தந்தா?” கேட்டால் ஸ்ரீயை பார்த்து.
குழந்தை தலையை உயர்த்தாமல் நின்று இருக்க “சொல்லு ஸ்ரீ யார் உனக்கு பட்டாசு வாங்கி தந்தது??” என்றாள்  மீண்டும். ஸ்ரீ கரிகாலனை பார்க்க “அவன் தான் குழந்தை.. மலையில பட்டாசு வெடிக்க கூடாதுன்னு தெரியாது?? உங்களுக்கும மாமா??” என்றதும் 
“அப்பா ஆரம்பிச்சுட்டையா உன் அட்வைச!! விடுடி சின்ன பையன் கிட்ட” என்று ஸ்ரீக்கு பரிந்து வந்தார் தங்கம். “சித்தி” என்று காயத்ரி அவரை முறைக்க “போ போய் ஆளுங்க வர்ற நேரம் ஆச்சு என்னனு போய் பாரு” என்று பேரனை காப்பாற்றி அழைத்து சென்றார் தங்கம்.
அனைவரும் இவர்களை பார்த்து சிரிக்க “சிரிங்க  ஃபங்சன் முடிஞ்சு பாத்துகிறேன்” என்றவள் “என்ன அங்க வேடிக்கை வாங்க உள்ள ??” என்று அருளை பார்த்து சொல்ல ‘இவங்கள விட்டுட்டா நான் மாட்டிக்கிட்டேன்’ நினைத்தவன் அவள் பின்னால் சென்றான் அமைதியாக.
போகும் அருளை தான் அனைவரும் பார்த்து நின்றனர். சோமசுந்தரம் தான்  கேட்டார் குமரனிடம். “குமரா இவன் இப்படி தான் எப்பவுமா?? இல்ல எப்பவும் இப்படிதானா??” என்று 
“எதுக்குண்ணா இப்படி கேக்குற??” என்றார் அவர் சுந்தரத்தை பார்த்து. “பின்ன மதுரையே இவன் பேர சொன்ன நடுங்குது ஆனா… இந்த பய நம்ம பொண்ணு நில்லுன்னா நிக்குறான், உக்காருன்னா உக்கருறான் என்ன டிசைன்னு இன்னும் எனக்கு புரியலைடா?? எப்படியே ரெண்டும் நல்லா இருந்தா சரிதான்” என்று அனைவரையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றார்.
பேச்சி, தங்கம்,பூரணி, அருணாச்சலம், சோமசுந்தரம், வசந்தி முன் வரிசையில் அமர்ந்து இருக்க, ரேஸ்மா கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியுடன் மேடையின் ஓரத்தில் நின்று இருக்க, கரிகாலன் தன் மனைவி  விலாசினியை மேடைக்கு வர சொல்லி கொண்டு இருந்தான். 
ஆறு மாததிற்கு முன்பு தான் திருமணம் முடிந்தது கரிகாலனுக்கு.  அவளும் மருத்துவரே மகப்பேரு நிபுணர். அவர்கள் திருமணத்தின் போதே கரிகாலன் சொன்னது ஒன்று மட்டும் தான், தங்கள் மருத்துவமனையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்பது தான். 
பேச்சிதான் அவளை “போ விலாசினி அவன் கூட நில்லு” என்று அனுப்பி வைத்தார். விலாசினி சென்றதும் ரேஸ்மாவின் அருகில் நின்று கொள்ள அதை பார்த்த அனைவருக்கும் திருப்தியான மனநிலை.
ரேஸ்மாவை வீட்டு மனிதர்கள் ஒத்துக்கொண்டாலும் வருகின்றவர்கள் எப்படி ஏற்றக்கொள்வார்கள்?? என்ற கவலை அவர்களுக்கு உண்டு. அதை விலாசினி புரிந்து கொண்டாளோ!! வந்த அன்றே அவளும் தனக்கு மகள் தான் என்பதை சொல்லாமல் செயலில் காட்டி விட்டாள் அவள். 
ரேஸ்மா வாசலை பார்ப்பதை கவனித்தவள் “என்ன கியூட்டி என்ன பாக்குற அங்க??” என்றாள் விலாசினி.
“இன்னும் அப்பா, அம்மா,  ராகுல் வரலை சித்தி” என்றாள் கவலையாக. 
விலாசினி அவளை பார்த்தவள் “வந்துடுவாங்க” என்றவள் காயத்ரியை தேடினால். காரணம் விலாசினிக்கு தெரிந்து இருந்தாலும் காயத்ரியோ இல்லை அருளோ வந்து சொன்னால் தான் சமாதானம் ஆகுவாள் ரேஸ்மா. 
இப்போது இருவரும் அங்கு இல்லை. விருந்தினரை வரவேற்க வாசலுக்கு சென்று இருந்தனர் இருவரும். அவளின் படபடப்பை பார்த்த ரேஸ்மாவுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. “விடுங்க சித்தி வந்துடுவாங்க, நீங்க டென்சன் ஆகாதீங்க” என்று அவள் தான் இவளை இப்போது சமாதானம் செய்ய வேண்டியாகியது.
இன்று ஜோதியின் நினைவு நாள். அவளுக்கு திதி கொடுக்கவே அவர்கள் சென்று இருப்பது. ரேஸ்மா விலாசினியுடன் பேசும் போதே ராகுல் வந்துவிட்டான் ரேஸ்மாவிடம் “அக்கா” என்று. “எங்கடா போன?? எவ்வளவு நேரம் அம்மா, அப்ப எங்க??” என்றதும் அவன் அவர்களை பார்த்து கை நீட்ட “வந்தாச்சா” என்றாள் சின்ன சிரிப்புடன். 
வசுமதி சொன்னது போல் சண்முகம் வேலையை விட்டு விட்டு இந்தியா வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பூர்வீக நிலங்களை பார்த்து கொள்ள சொல்லி பேச்சி சொல்லியும் கேட்க வில்லை. 
“இல்லை பெரியம்மா,  இத்தனை நாள் தம்பி தான் அதை பாத்து செமை செஞ்சு வைச்சு இருக்கான். அது அவனுக்கு சேரவேண்டியது. நான் இங்கயே வேற வேலை தேடிக்கிறேன்” என்றவனை மறுத்து அவனுக்கு என்று ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பனியையும் ஆரம்பித்து கொடுத்து விட்டான் அருள்.
சண்முகம் வந்தவன் பேச்சியிடம் போக “டேய் என்ன இவ்வளவு நேரம்?? புள்ள முகம் வாடி போச்சு பாரு” என்றவர் வசுவையும் மேடை ஏற்றினார்.
விழா தொடங்க முற்படியாக கடவுள் வாழ்த்து பாடல் தொடங்கி முடிய அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார் பெரியய்யையா.
அருள் சொன்ன போது மறுத்தவர் “அம்மா கையால திறக்கனும் தம்பி அது தான் நாங்க அப்பாவுக்கு செய்யுற மரியாதை” என்றிட “பெரியய்யையா இது உங்களுக்காக நாங்க கட்டி இருக்குறது இதை நீங்க திறந்து வைச்சா தான் நல்லா இருக்கும்” என்றவன் அவரின் கையாலேயோ திறக்கவும் வைத்தான். 
மருத்துவமனையை அனைவரும் சுற்றி பார்க்க சென்றனர். அவர்களுடன் காயத்ரி போக அவளின் கை பற்றி நிறுத்தினான் அருள்.
காயத்ரி கேள்வியாய் அவன் முகம் பார்க்க “பாவம் காயத்ரி மாமா அவர்கிட்ட பேசு” என்றதற்கும் அவளிடம் பதில் இல்லை “ஏண்டி நான் சொல்லுறது காதுல விழுதா இல்லையா?? பேசாம இருக்குற” என்றவனின் கைகளை உதற… 
“கைய பிடிச்சா தள்ளுவ இப்படி கட்டி பிடிச்சா என்ன  பண்ணுவ!!” என்று அவளை இடையோடு வலைத்து பிடித்தவன் அருகில் இருந்த சுவரில் அவளை சாய்வாக நிறுத்த “விடுங்க மாமா யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க” 
“அவங்க நினைக்குறதுக்காக என் பொண்டாட்டிய நான் கட்டிபிடிக்காம இருக்க முடியுமா என்ன??”  என்றவன் அவள் மீது சாய போக “மாமா என்ன செய்றீங்க!! யாராவது வர போறாங்க” என்றவள் அவனை தள்ளி நிறுத்த போக, “சரி உன் மேல சாயல அதுக்கு பதிலா நான் சொல்லுறத செய்” என்றவனை பார்த்து “இல்லை” என தலை அசைக்க… 
“மாமா பாவம் காயத்ரி. தினமும்  பேசமாட்டியான்னு உன் முகத்தை அவர் பாக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்குடி… அப்படி என்ன தப்பு தான் அவர் செஞ்சாரு?? நல்லதுக்கு போகலையினாலும் துக்கத்துக்கு போகம இருக்க கூடாது தான… அதனால நான் தான் அவர அனுப்பி வைச்சேன். அதுக்காக நீ இத்தனை வருசம் பேசாம இருக்குறது நல்லா இல்லை… இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்லை… அப்பறம் உன் விருப்பம் என்றவன்” அவளை விட்டு விலகி நடக்க,  போகும் அவனையே பார்த்து இருந்தால் சிரிப்புடன். “என்ன  பாசம் மாமனுக்கும் மருமகனுக்கும்” என்று
அனைவரும் மருத்துவமனையை சுற்றிவிட்ட வர காயத்ரி குமரனிடம் சென்றாள். அவர் அவளை பார்க்க “வாங்க” என்றவள் அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றாள். 
“என்னம்மா??” என்று அவர் கேட்டதற்கும் எந்த பதிலும் சொல்லாதவள், அந்த அறையில் இருந்த சிறப்பு மருத்துவமனை நிர்வாகி என்று பலகை வைக்கபட்ட அந்த இருக்கையில் குமரனை அமர வைத்தவள் “இந்த ஹாஸ்ப்பிடலை இனி நீங்க தான் நிர்வாகம் செய்ய போறீங்க” என்றதும் அதிர்ந்து விட்டார் குமரன். 
பார்த்து நின்று இருந்த அனைவருக்கும் அது மகிழ்ச்சியாக தான் இருந்தது. அருள் கை தட்டி வாழ்த்துக்கள் சொல்ல அவனை அடுத்து அனைவரும் வாழ்த்துக்கள் சொல்ல குமரன் அதை எப்படி ஏற்பது என்று தவித்தார். 
“காயத்ரிம்மா இது படிச்சவங்க உக்கார வேண்டியது. எனக்கு இதை பத்தி என்ன தெரியும்?? நம்ம அருணாச்சலம் அண்ணனையோ இல்லை சுந்தரம் அண்ணனையோ இங்க உக்கார வைச்ச நல்லா இருக்கும்” என்று எழ முயன்றவரை அருணாச்சலமும் சுந்தரமும் இணைந்தே அந்த சேரில் அமர வைத்தனர். 
“இது உனக்கான இடம் குமரா… உனக்கு பக்க பலமா நாங்க இதோ பக்கத்தில தான் இருக்குறோம்” என்றவர்கள் அருகில் இருந்த மற்ற சேர்களில் அமர்ந்து கொண்டனர். 
ஆம், அந்த மருத்துவமனை நிர்வாகத்தை பொதுவாக்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பை குமரன், சுந்தரம், அருணாச்சலம் என்று மூவருக்கும் கொடுத்துவிட்டாள் காயத்ரி பேச்சியிடம் கேட்டு. 
சுந்தரமும் அருணாச்சமும் மறுத்து கூறியதையும் ஏற்க வில்லை இருவரும்.  அருள் காயத்ரி முகம் பார்த்து நிற்க, அவளோ மூன்று வருடம் தகப்பனிடம் பேசாத பேச்சுக்களை பேசிக்கொண்டு நின்று இருந்தாள். 
‘இருந்தாலும் இந்த கத்திரிக்கு கொஞ்சம் அதிகம் தான்.’ 
‘என்னடா??’ என்று மனம் கேட்க 
‘ம்ம் திமிறு தான்.’  
‘ஏன்டா உன்கிட்ட சொல்லாம செஞ்சிட்டான்னு கோபமா??’ என்றதற்கு 
‘இல்லை நான் இங்க இருக்க அவங்க அப்பா கைய புடிச்சுகிட்டு நிக்குறா அதுக்குதான். இப்ப என்ன தொனத்தாம நீ அடங்கு. நான் என் பொண்டாட்டிய சைட் அடிக்கனும்’ என்றவன் அவளையே பார்த்து நின்று இருந்தான் 
இரவு  ஸ்ரீக்கு உணவினை கொடுத்தவள் பேச்சியிடம் கொடுக்க போக “நான் தங்கம் பாட்டிகிட்ட தான் போவேன்” அடம் பிடிக்க ஆரம்பித்தான் ஸ்ரீ. 
“பாட்டி தூங்கி இருப்பாங்கடா… நீ அப்பத்தாகிட்ட போய் தூங்கு” என்றதற்கும் அவன் கேட்க வில்லை. அவன் சத்ததில் தங்கமே வந்துவிட்டார்.
“உனக்கு தான் கால் வலின்னு  சொன்ன  தான??  இப்ப எதுக்கு வந்த சித்தி??” என்று காயத்ரி தங்கத்தை கேட்க “ஏண்டி குழந்தை அழுது நீ என்ன என்னைய கேக்குற??” என்றவர் ஸ்ரீ தூக்கி கொண்டு அறைக்கு போக அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு சுகமாக உறங்க போனான் ஸ்ரீ. 
போகும் அவறைத்தான் பார்த்து கொண்டு நின்று இருந்தாள் காயத்ரி. தங்கம் இப்போது இருப்பது பேச்சியுடன் தான். தான் செய்த தவறை உணர்ந்து அய்யாவு ஜோதியை கொன்றது தான் தான் என்று சரண்டர் ஆக, அவருக்கு  தண்டனை ஏழு ஆண்டுகள் கொடுக்க பட்டு இப்போது இருப்பது சிறையில். 
காயத்ரி அறைக்கு போக அங்கு அருள் இல்லை. “எங்க போனாரு” என்று மாடிக்கு போக, அங்கு ஒற்றை கால் தரையில் இருக்க மாடி கட்டையின் மீது அமர்ந்து இருந்தான் அருள். 
அவனின் யோசனையான முகம் அவளுக்கு சிரிப்பினை வரவலைக்க  அவனிடம் சென்றவள் வாகாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
அவளை இறுக்கி கட்டிக்கொண்டவன் பேசாமல் இருக்க “என்ன என் மேல கோபமா??” என்றவளுக்கு “ஆமாம்” என்று தலை அசைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் “சர்பிரைசா இருக்கட்டும் அப்படின்னு தான் உங்க கிட்ட கூட சொல்லலை” 
“ரொம்ப நாளைக்கு அப்பறம் அப்பா கூட பேசுறப்ப அவரை சந்தோசமா பாக்கனும் அப்படின்னு நினைச்சு தான் இதை செஞ்சேன்” என்றவளை புரியாமல் அருள் பார்க்க “என்ன மாமா” என்றாள் காயத்ரி. 
“நான் எதுக்கு கோபமா இருக்கேன்னு கூட தெரியாதா உனக்கு??” என்றவனை அவள் பார்க்க “நீ செய்யாம விட்டாலும் எனக்கும் இதே யோசனை தான் இருந்தது. ஓப்பனிங்க்கு அப்பறம் உன்கிட்ட சொல்லலாம் அப்படினு நினைச்சேன். அதை நீ செஞ்சதுல எந்த கோபமும் இல்லை, ஆனா இருக்கு” என்று தெளிவாக குழப்பினான் அவளை.
“என்ன மாமா?? கோபம் இல்லை ஆனா இருக்கு அப்படின்னா நான் என்ன நினைக்க” என்று கேட்டவளை “நீ மாமா கிட்ட பேசுனது கோபம் இல்லை, ஆனா நான் உன்னையே பாத்து கிட்டு இருக்குறேன், நீ என்னைய பாக்காம அவரு கைய புடிச்சு பேசிகிட்டு இருக்குற” என்று முகத்தை தூக்கி வைக்க காயத்ரிக்கு இப்போது சிரிப்பு தான் வந்தது.
“சரி அப்ப கோபம் போக நான் என்ன செய்யனும்??” என்றாள் அவனிடம். “என்ன வேணுனாலும் செய்யலாம். இப்படியே கட்டி புடிச்சு முத்தம் கொடுக்கலாம். இல்லை அதுக்கு மேலயும் போகலாம்” என்றவன் வாயை கைகளால் மூட, “ஏன் டாக்டரம்மா புருசன் வாய பொண்டாட்டி கையாலயா மூடனும்?? அது தப்பு இல்ல” என்றவன் எப்படி வாயை மூட என்று பாடம் எடுக்க, அதை தவறாமல் படித்து கொண்டாள் அவனின் மனைவி.
“இப்ப சொல்லு நான் கோபமா இருக்கேனா!!” என்றான் அருள் அவனை இமைக்க மறந்து பார்த்தவள் “இல்லை” என தலையாட்ட “நீ சொன்னது தான் காயத்ரி உனக்குள்ள எனக்கான தேடல் இருக்குற வரை நமக்குள்ள எந்த வேறுபாடும் இருக்காது”  என்றவன் அவளை பார்க்க, அதை உண்மை என்று சொன்னது அவளின் கண்கள் மட்டும் இல்லை அந்த இயற்கையும் தான்.
அவர்களின் இந்த  தேடல் என்றும் தொடரட்டும்………   

Advertisement