Advertisement

                    ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 8
குமரன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க, அவர் மீது தலை வைத்து படுத்து இருந்தாள் காயத்ரி….
நடுக்கூடத்தில் செல்வியின் உடல் வைக்க பட்டு இருக்க அருள் தான் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்….
செல்வி இறந்து போனதை அவனால் ஏற்க முடியாத நிலையில் இருந்தாலும், குமரன் ஏதும் செய்யாமல் அமர்ந்து இருக்க, அவருக்கு மகனாய் நின்று அனைத்தையும் செய்தான் அருள்.
ராஜமாணிக்கம், அருள் செய்வதை ஏற்க முடியாமல் குமரனிடம் சொல்ல போக, “அது அவன் கடமை, அவளுக்கு அவன் தான் எல்லாம். அவனுக்கு மகனா அவன் செய்யுறதை எதுவும் சொல்லாதீங்க மாமா” என்று விட்டார்
அவ்வளவு தான் முத்தழகியிடம் பொங்கிவிட்டார் ராஜ மாணிக்கம். “என்ன நினைச்சு இருக்கான் உன் தம்பி?? அந்த பயல விட்டு செய்றான்?? அக்கா மகன்னு நம்ம பையன் இருக்கான், நாளைக்கு அவன் பொண்ண கட்டி தர்றேன்னு சொல்லி ஊர் முன்னாடி பரிசம் போட்டு இருக்கோம். எனக்கு என்ன மரியாதை இருக்கு இந்த வீட்டுல??” 
“நான் போறேன். நீ இருந்து சீராடிட்டு வா” என்று சென்று விட்டார். அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை குமரன். இன்னும் சிறிது நேரம் தான், செல்வியின் முகத்தையாவது பார்த்து இருக்கலாம் என்று அப்படியே அமர்ந்து விட்டார்…
இரண்டு நாட்களாகவே செல்வி சரியில்லை. ஏதோ குமரனிடம் பேச வருவதும், பின்னர் திரும்பி செல்வதுமாய் இருந்தவரை குமரன் தான் அழைத்தார். 
“என்னங்க” செல்வி
குமரன் அவர் முகத்தையே பார்த்து இருக்க “என்னங்க கூப்பிட்டீங்க, பேசாம என்னையே பாக்குறீங்க??” 
“அதை நீ தான் சொல்லனும்! வர்ற… என் முகத்தை பாக்குற திரும்ப போற.. என்ன விசயம்  சொல்லு??” என்று அவரை பக்கத்தில் அமர வைத்தார்.
செல்வி தயக்கமாய் குமரன் முகம் பார்க்க, “சொல்லு செல்வி என்ன கேட்கனும் என்கிட்ட?” 
“அது நம்ம காயத்ரி படிப்பை முடிக்க போறா இல்லையா!?” 
“ஆமா” அதுக்கு என்ன??
“இல்ல அவ கல்யாணத்தை பத்தி….” 
“அவ கல்யாணத்துக்கு என்ன!! அது தான் குருவுக்கு காயத்ரின்னு அன்னிக்கே பரிசம் போட்டாச்சு தான” என்றதும் செல்விக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது. “நீங்க இன்னும் அதை நினைச்சுட்டு தான் இருக்கீங்களா?? நான் உயிரோட இருக்குற வரையில அது நடக்காது!” 
“யேய்… என்னடி பேச்சு இது?? அவனுக்கு என்னடி குறை?? நல்லா படிச்சு நல்ல உத்யேகத்துல தான இருக்கான்… ஏதே அப்ப கோபத்துல சொன்னன்னு அமைதியா இருந்த, இப்பவும் அதையே சொல்லுற. உனக்கு என்ன பிரச்சனை காயத்ரிய அவனுக்கு கொடுக்குறதுல?” 
“எனக்கு என்னமோ பிரச்சனை!! எனக்கு அந்த குடும்பத்தை கண்டாலேயே பிடிக்கலை போதுமா!! என் பொண்ண எங்க கட்டிக்கொடுக்கனு எனக்கும் தெரியும்” 
“ஓ.. அப்ப அவ உனக்கு மட்டும் தான் பொண்ணா!! நீ மட்டும் தான் அவ வாழ்கையை தீர்மானம் பண்ணுவியா?? அப்ப எனக்கு அவ மேல உரிமை இல்ல அப்படி தான…”  
“சரி, இந்த வீட்டுல நீ இரு, நான் போறேன்… அன்னிக்கு நீ பண்ணினது தான். இப்ப நான் பண்றேன்” என்றவர் வெளியேறி விட்டார். இன்னும் இருந்தால் கோபத்தில் அடித்து விடுவோமோ என்ற பயத்தில். 
குமரன் வெளியே போக, அப்படியே அமர்ந்து விட்டார் செல்வி. அவரிடம் பேச வந்தது என்ன?? இப்போது பேசி இருப்பது என்ன?? அருளை பற்றி பேசி காயத்ரி, அருள் திருமண விபரத்தை கூறவே நினைத்து வந்தது. இப்போது பேச்சு திசை மாறி குமரன் வெளியே போய் விட்டார். 
தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவரை காயத்ரி தான் எழுப்பினாள். “என்ன காயத்ரி இவ்வளவு நேரமா வந்துட்ட?”
“ஏம்மா மணி இப்ப அஞ்சு ஆச்சு!! என்ன ஆச்சுமா?? நேரம் போனது கூட தெரியாம இருக்க” என அவரை பார்க்க, எதுவும் சொல்லாமல் அவளுக்கு காபி போட சென்றார்.
குளித்து ரெடியாகி வந்தவளிடம் காபியை செல்வி தந்தவர் “காயத்ரி.. அம்மா ஒன்னு சொன்னா கேப்பியா??” என்றார்
“என்னம்மா” காயத்ரி அவரை பார்க்க, “ஒரு தரம் அருளுகிட்ட பேசுடி!! அவனும் இன்னும் எத்தனை நாளுக்கு தான் தனியா இருப்பான்?? இப்ப கூட எங்கயோ காட்டுக்குள்ள இருக்கானாம்.. ஏதோ தீவிரவாதிங்கள பிடிக்க போயிருக்கானாம். எனக்கு பயம்மா இருக்குடி!!”
“உங்களுக்குள்ள என்ன சண்டைன்னு தெரியலை… எதுவா இருந்தாலும் பொறுத்து போ காயத்ரி” செல்வி பேச, காயத்ரி கையில் இருந்த காபி கிளாசை தூக்கி எறிந்தாள்.
“ஏய் எதுக்குடி உனக்கு இப்ப இவ்வளவு கோபம். அப்படி என்ன சொல்லிட்டேன்னு கிளாச தூக்கி எறியுறவ?” 
“என்ன கோபமா… எதுக்குமா நான் அவர்கிட்ட பேசனும்… பொண்ணுனா நான் தான் பொறுத்து போகனுமா?? எதுக்கு அப்படி போகனும்… எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை!! அப்படி கஸ்டபடுறார்னா நீ அவருக்கு வேற கல்யாணம் செஞ்சி வை” என்றதும் செல்வியின் கை அவளது கன்னத்தில் இறங்கியது.  
“கொன்னுடுவேன் ராஸ்கல். என்ன பேச்சுடி இது? இதுக்கு தானா இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தேன்.. நீ என்னடி சொல்லுறது அவனுக்கு கல்யாணம் செய்ய சொல்லி, அவனுக்கு என்ன செய்யனும் அப்படின்னு எனக்கு தெரியும் போடி அங்குட்டு. இனி வந்து என்கிட்ட பேசு உனக்கு இருக்கு” என்றது தான் செல்வி அவளிடம் கடைசியாக பேசியது. 
செல்வி பேசவும் கோபமாய் அறைக்கு சென்றவள் “உன் தம்பி என்னைய எவ்வளவு மோசமா நினைச்சு இருந்தா வெளிய போன்னு சொல்லி இருப்பாரு. அவருக்கூட போய் நான் வாழ்ந்தா அவர் நினைச்சது சரின்னு ஆகிடும்மா.  நீங்க என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நிச்சயம் நான் அவர் கூட போகமாட்டேன்” என அன்றைய அவனின் மனநிலை புரியாமல் பிடிவாதமாய் இருப்பவளை யார் சொல்லி புரிய வைக்க.  
அறைக்குள் காயத்ரி பிடிவாதமாய் இருக்க இங்கு செல்வியோ “உன் வாழ்க்கைய நானே பாழாக்கிட்டேனே அருளு!! அவரும் புரியாம பேசுறாரு.. இவளும் இப்படி இருக்கா” என்று தன் போக்கில் புலம்பியவர் எப்போது உறங்கினார் என்றே தெரியவில்லை.
குமரன் வரும் போது வீடே அமைதியாக இருந்தது. அறைக்கு உள்ளே போக செல்வி உறக்கத்தில் இருந்தார். யேசனையாக அவரை தொட்டு பார்த்தார் குமரன். செல்வி ஒரு நாளும் இப்படி விளக்கு வைக்கும் நேரம் தூங்கியது இல்லை.
இன்று தூங்கி இருக்கவும் என்னவோ என பதறித்தான் போனார் குமரன். மெதுவாக அவரை எழுப்ப கண் திறந்தார் செல்வி.
“என்ன மாமா” என்றவரை குமரன் வித்தியாசமாக பார்த்தார். குமரனை, செல்வி “மாமா” என்று அழைத்து சில வருடங்களே ஆகிவிட்டது. 
குமரன் செல்வியின் பக்கத்தில் அமர்ந்தவர், “என்ன செல்வி, என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா…  இந்த நேரத்துக்கு தூங்க மாட்ட நீ… இப்ப தூங்கிட்டு இருக்க. நாம வேணுன்னா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரலாமா??” 
“என்ன மாமா? நான் நல்லா தான இருக்கேன்.  கொஞ்சம் தலை சுத்தல் இருந்தது அதுதான் படுத்தேன் தூங்கிட்டேன் போல” என்று எழுந்து அமர்ந்தார்.
இரவு சாப்பாட்டிற்கும் காயத்ரி வரவில்லை. குமரன் கேட்டதற்கும் “வருவா நீங்க சாப்புடுங்க” என்று செல்வி அவரை சாப்பிட வைத்தவர், அவள் சாப்பிட்டாளா, இல்லையா என்பதை கவனிக்கவில்லை.
அருளை பற்றி மட்டும் நினைத்தவர், காயத்ரியிடம் பேசி இருந்தாள் அவளின் மனகுழப்பம் தெரிந்து இருக்கும். செல்வியிடம் காயத்ரி “அருளுக்கு வேறு திருமணம் செய்” என்று சொன்னதிலேயே அவர் மனம் விட்டு போய் இருக்க, வழக்கமாக போடும் பிபி மாத்திரையை அவர் எடுக்கவே இல்லை. அதை காயத்ரியும் கவனிக்கவில்லை. 
இன்று காலை எழும் போதே தலை சுற்ற, குமரன் அழைத்ததற்கும் மருத்துவமனை போக சம்மதிக்கவில்லை செல்வி. 
மருத்துவர் சொன்ன “மன அழுத்தம் தாங்கமல் தான் இந்த மரணம் நிகழ்ந்தது” என்பதை கேட்ட பின் தான், இருவருக்கும் நேற்று அவர் தங்களிடம் பேச வந்த போது மறுத்து சென்றது நினைவுக்கு வர அவர்களாளேயே அவர்களை மன்னிக்க முடியவில்லை. 
அதிலும், காயத்ரி மருத்துவராக இருந்து செல்வியை கவனிக்காமல் விட்டது, அவளுக்கு இன்னும் குற்ற உணர்ச்சியை அதிகமாக்கி இருக்க அப்படியே ஒடுங்கி போனால் உள்ளுக்குள்ளே. 
செல்வியின் இறுதி சடங்குகள்  முடிந்து வீடு வந்த பின் கூட  அருளிடம் குமரன் பேசவில்லை.  இரவு அனைவரும் உறங்கி இருக்க குமரனுக்கு உறக்கம் வர வில்லை. அறையை விட்டு வெளியே வர அருள் தான் அமர்ந்து இருந்தான் செல்வியின் உடல் வைக்கபட்டு இருந்த இடத்தில்.
இரண்டு நாட்களுக்கு முன் தான் அவன் கேம்பில் இருந்து வந்து இருந்தான். இரவில் தூங்கி கொண்டி இருந்தவன் ஃபோன் அலர எடுத்து பார்த்தால் செல்வி.
இது மாதிரியான நேரத்தில் அவர் அழைக்கமாட்டார். என்னவோ!! என்று எடுத்து பார்க்க “அருளு” என்று அவர் அழைத்திலேயே அவனுக்குள் என்னவோ செய்ய ஆரம்பித்து.
“என்னக்கா… உடம்புக்கு என்ன பண்ணுது? ஏன் குரல் இப்படி இருக்கு? ஹாஸ்பிட்டல் போகலையா? அவ என்ன பண்ணுறா அங்க” என படபடப்பாக பேச…
“டேய்.. எனக்கு ஒன்னும் இல்லை. நல்லா தான் இருக்கேன். உன்னைய பார்த்து நாள் ஆச்சு அருளு. உன்னைய பாக்கனும் போல இருக்கு” என்று சொல்லும் போதே அவரின் குரல் உடைந்து விட்டது…
அவருடன் பேசும் போதே தெரிந்து விட்டது அருளுக்கு. அவர் ஏதோ மனதில் போட்டு வருத்திக்கொண்டு இருக்கிறார் என்று. “அக்கா என்ன ஆச்சு? இப்ப எதுக்கு இந்த அழுகை.. மாமா ஏதாச்சும் சொன்னாறா?” 
“இல்லடா, அவரு எதுவும் சொல்லலை”
“அப்பறம் காயத்ரி கூட சண்டை போட்டியா?” என கேட்க, அந்த பக்கம் அமைதி. “என்னக்கா அவ கூட சண்டை போட்டியா” என்றான் மீண்டும்.
“நா ஒன்னும் சண்டை போடலை. ஆனா… அவளை கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னோன் அதுக்கு அந்த பேச்சு பேசுறா” என அழுகையை தொடர்ந்தவாரே.
அவனும் கேட்கவில்லை ஏன் காயத்ரியை பொறுமையாக போக சொன்னார் செல்வி என்று, அவரும் சொல்லவில்லை காயத்ரியிடம் தான் என்ன சொன்னேன் என்று.
“சரிக்கா அழாத, நான் நாளைக்கே வர்றேன்” என்று ஃபோனை வைத்து விட்டான். ஆனாலும்…. அவனுக்கு மனதே இல்லை இங்கு இருக்க. அப்போதே டிக்கட் புக் செய்தவன் சென்று நின்றது செல்வியின் உடல் முன்பு தான்.
 
அவரும் அவனை கவனித்து கொண்டு தானே இருக்கிறார். ரங்கன் இறந்த பொழுது கூட கண்ணீர்விட்டவன், இன்று இறுகி போய் இருந்தான். யாரிடமும் “எப்படி ஆனது” என்று கூட கேட்கவில்லை கரிகாலன் சொல்ல வந்த போதும் “ஆகவேண்டியத பாரு” என்ற பேச்சுடன் முடித்துக் கொண்டான், 

Advertisement