Advertisement

                   ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 6
“பள்ளியில் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல மகிழ்ச்சியில் மிதந்து இருந்தாள் காயத்ரி” ஆனாலும்… அவளின் பார்வை நொடிக்கு ஒரு தரம் வாசலுக்கு சென்று வந்தது.
பள்ளியின் நடைமுறைகள் முடிந்து வெளியில் வர அவளின் தோழிகள் சூழ்ந்து கொண்டனர். குமரனிடம் அனைவரும் “அப்பா இன்னிக்கு அவ எங்க கூட இருக்கட்டும்ப்பா” என்று கேட்க அவரும் சரி என்றார்.
அவர் சென்றதும் தோழிகள் அவளை மைதானத்திற்கு அழைத்து செல்ல “என்னடி பண்ணுறீங்க??” கேட்டாள் காயத்ரி.
“ஏண்டி டிஸ்டிரிக் ஃபஸ்ட் வந்து இருக்க!! அப்படியே விட்டுவோமா,  வா.. வா என இழுத்து சென்றனர் அவளை”
அவர்கள் வந்து நின்ற இடத்தில் ஒரு பெட்டி இருக்க, “யாருதுடி இது??” காயத்ரி
“தெரியலை!! பிரி யாருதுன்னு தெரிஞ்சுடும்” குழுவில் ஒருத்தி சொல்ல 
“ஸ்கூலுதா இருந்த??” காயத்ரி கேட்க  “அவங்க இப்படியா போட்டு வைப்பாங்க?? சும்மா பிரி” என்று சொல்ல பிரித்தாள் காயத்ரி அந்த பெட்டியை. உள்ளே “முதலிடம் வந்ததற்கு வாழ்த்துகள்” என்ற வாழ்த்து அட்டையுடன் இருந்தது அந்த லேப்டாப்.
“அதை பார்த்தவள் அதை தொடக்கூட இல்லை, சுற்றி நின்றவர்களை தள்ளிவிட்டு தேட ஆரம்பிதாள் அருளை. எங்க அவரு??” என கேட்க “யாரு அந்த சுவரு!!” என்றாள் குறும்புகார தோழி ஒருத்தி.
“ஏய்… என் மாமாவை நான் பேசுவேன், நீங்க ஏதாவது சொன்னா அவ்வளவு தான்!!” என்றவள் சுற்றி பார்க்க சற்று தொலைவில் வந்து கொண்டு இருந்தனர் ரங்கன், பேச்சி இருவரும். தாத்தா என அவர்களை நோக்கி போனவள் கேட்டது, “மாமா எங்க??” 
“ஏண்டி இவ்வளவு பெரிய உருவம் உன் கண்ணு முன்ன நிக்குறேன் என்ன கேக்காம மாமன தேடுறியா??” என்று அவள் கன்னத்தில் இடித்தார் பேச்சி.  
“அது தான் உருவம்னு சொல்லிட்டீங்கள, அப்பறம் எதுக்கு பேசனும்!! தாத்தா நீங்க சொல்லுங்க மாமா எங்க??” 
“வண்டிய நிறுத்திட்டு வற்றான் தாயி. இந்த ஷ்கூலுக்கே நீ தான் முதல்ல வந்து இருக்குறன்னு அருள் சொன்னான்”
“ஆமாம் தாத்தா… ஆசிர்வதம் பண்ணுங்க. அம்மாச்சி நீங்களும் தான்” என்றவள் அவர்களின் காலில் விழுந்தாள்.
எழும் போது அருள் வருவது தெரிய “மாமா வந்தாச்சு” என்றவள் ஓடிச்சென்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் எப்போதும் போல். 
“ஏய் விடுடி… எல்லாம் பாக்குறாங்க” என்றவன் அவளை தள்ளி நிறுத்த, அதெல்லம் முடியாது “என்னோட மாமாவ நான் கட்டியும் புடிப்பேன், இப்படி முத்தமும் தருவேன். அதுல அவள்களுக்கு என்ன?? வேணுன்னா அவளுங்க மாமன போய் புடிக்கட்டும்… என்றவள் அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்தாள்”
“இத்தனை நாள் எப்படியோ… ஆனால் இன்று  அவனின் மனைவி அவள். அவளுக்கு சிறுபிள்ளை தனமாய் இருந்தாலும் அருளுக்கு செர்க்கத்தின் வாசல் அது” 
“முத்தமிட்டவள் மலர்ந்து சிரிக்க” அவளின் சிரிப்பை பார்த்து இருந்தான் அருள். “மாமா லேப்டாப் எனக்கா!!” ஆர்வமாய் அவள் முகம் பார்க்க சட்டென வார்த்தை வராததால் “ஆமாம்” என்று தலை அசைத்தான்.
அவனை விட்டு ஓடியவள் அதை பிரிக்க போக “வேணாம் காயத்ரி” என்றான் அருள்
முகம் வாடி போனவள் “ஏன் மாமா எனக்கு தான வாங்கிட்டு வந்தீங்க”
“இப்ப பிரிச்சா உங்க அப்பா கிட்ட என்ன சொல்லுவ??”  அருள் 
“ஸ்ஸ்ஸ்… ஆமால” என்று நுனி நாக்கை கடிக்க, “அது தானாய் இருக்க கூடாத” எனத்தோன்றியது அருளுக்கு.
“அம்மாச்சி வீட்டுக்கு வந்து தருவாங்க அப்ப அங்க பிரிச்சு பாரு” என்றவன் “அப்பா… நான் இவள கூட்டிட்டு போறேன், நீங்க வீட்டுக்கு போங்க” என்றவன் கயாத்ரியின் தோழிகளிடம் சென்றான்.
“காயத்ரி அப்பா கேட்டா… உங்க கூடதான் இருக்கான்னு சொல்லனும் புரியுதா. சரியா ஒரு மணி நேரத்தில வந்துடுறோம்” என்றவன் அவளின் யூனிஃபார்மை களைந்து வேறு உடை மாற்ற அனுப்பி வைத்தான்.
“வீட்டு வாசலில் கார் வந்து நிற்க… யாரது?? என்றார் குமரன். “ஐயா… பெரியவரும், அம்மாவும் வந்து இருக்காங்க” என்று தகவல் தந்தான் காத்தா.
“வேகமாக வெளியே சென்றவர்… வாங்க மாமா, அத்தை என்றதும் ரங்கன்னும் பேச்சியும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்” அன்று நடந்த சண்டைக்கு பிறகு இன்று தான் வீட்டுக்கு வருகிறார்கள் இருவரும்.
“எங்கு சண்டைக்கு வருவாரோ!! என்று நினைத்து இருக்க, அவர் இவர்களை சமாதானமாக கூப்பிடவும் நிம்மதி பெரு மூச்சு அவர்களுக்கு.
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை??” ரங்கனின் கேள்விக்கு “நல்லா இருக்குறேன் மாமா” என்றார் குமரன். “காயத்ரி பாசானத இப்பதான் அந்த சுமதி புள்ள சொல்லுச்சு அதுதான் பாக்கலாம்னு வந்தோம்”
“எங்க வீட்டுல சத்தை காணோம்?? என்று வீடு முழுதும் பேச்சி தேட(நடிக்க) ஆரம்பிக்க, இல்லை அத்தை காயத்ரி பள்ளிகூடத்துல இருக்கா… செல்வி கோயிலுக்கு போயிருக்கா” என்றவர் “எலேய் மாமாவுக்கும், அத்தைக்கும் குடிக்க கொண்டா” என்று சத்தம் கொடுக்க, “இருங்க அப்பு, நான் போயி மத்தியத்துக்கு பாக்குறேன் புள்ள பசியேட வரும்” என்றவர் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
அவர் சென்றதும் தனித்து விடப்பட்டனர் ரங்கனும், குமரனும். “மாமா மன்னிச்சுடுங்க” என்றதும் பதரி போனார் ரங்கன். “என்ன மாப்பிள்ளை இது, பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு…  ஏதோ கெட்ட நேரம் நடக்க கூடாதது நடந்துடுச்சு, விடுங்க நீங்க மனசுல எதையும் வச்சுக்காதீங்க” என்று பெரிய மனிதராய் பேச குமரனுக்குதான் சங்கடமாய் இருந்தது.
“என்ன இருந்தலும் மகளின் உறவு கடைசி வரை வேண்டுமே. இவருக்காக அவளை விடமுடியாது அல்லவா. அதற்காகவேணும் சில விசயங்களில் பெறுத்துதான் போக வேண்டும்”
“அப்பறம் மாமா ஊர்ல எப்படி போகுது??  மஞ்சளுக்கு நல்ல விலைன்னு சொன்னாங்க”
“எங்க மாப்பிள்ளை… நல்ல வாயன் சம்பாதிக்குறத நாற வாயன் தின்ன கதை தான் நம்ம பொழப்பு. இந்த தரகு பசங்க இருக்குற வரை நாம சொன்னதா விலை?? அவனுங்க என்ன சொல்லுறாங்களோ அது தான்!!” 
“அதனால… அருள் தான் ஏதோ கம்பெனி கூட பேசிக்கிட்டு இருக்குறான் மொத்தமா குடுக்க. அப்பறம் ஏதோ ஏற்றுமதி பண்ண போறதா வேற சொல்லுறான். எனக்கு ஏதும் புரியலை… நான் விவசாயம் பண்ணுறேன் அவன் அதை காசு பண்ணுறான்”
“ஓஓ… அப்ப சாரு படிக்க போகலையா!! உங்க கூட வந்துட்டாரா??” என்றார் குமரன்.
“இல்ல மாப்பிள்ளை… டெல்லிக்கு போறான் மேற் படிப்பு படிக்க… அதுக்கு முன்ன இதுக்கும் அலைஞ்சு பாக்குறான், வர்றதுக்கு ரெண்டு மூனு வருசம் ஆகுமாம்… அவங்க ஆத்தான் மூக்க சிந்திக்கிட்டு இருக்கா”
“அப்ப சின்னவன்??” 
“அவனுக்கு இன்னும் ஒரு வருசம் இருக்காம்… அதை முடிச்சதும் நம்ம வயலுலயே ஏதே ஆர்கானமுல!! அதை பண்ண போறானாம். அண்ணணும் தம்பியும் ஏதோ பண்ணுறாங்க நமக்கு ஏதும் புரியலை!!??”
“குமரன் சிரித்தவர்… அது ஆர்கானிக் மாமா… இயற்கை விவசாயம்” என்று எடுத்து சொல்ல “ஆமாம் அதோ தான்” என தனக்கு எதுவும் தெரியாததை போல் குமரனை பேச விட்டு பார்த்து இருந்தார் ரங்கன்”
“கோவிலில் இருந்து வந்த செல்வி, ரங்கனும்… குமரனும் பேசுவதை பார்த்தவர் கோபமாக தள்ளிவிட்டார் அங்கு இருந்த மூட்டையை”
“சத்ததில் ரங்கன் திரும்ப, திரும்பியவரை பார்த்து “யார் உங்களை இந்த வீட்டு படிய மிதிக்க சொன்னா?? உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா” மரியாதை இல்லாத வீட்டுக்கு வர கூடாதுன்னு” என்று ஆரம்பித்தவர் பேச்சியையும், ரங்கனையும் திட்ட ஆரம்பித்தார்.
“குமரன் சென்ன எந்த சமாதான வார்த்தைகளும்… அவர் காதுக்கு பக்கத்தில் கூட போனாதாக தெரியவில்லை”
“ஏம்மா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?? அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி தான இந்த மனுசன் வந்த உங்கள  அசிங்க படுத்தி அனுப்பிவிட்டாரு”
“நீ என்னன்னா… அவரு வீட்டுக்குள்ள போயி சமைச்சுகிட்டு இருக்க. உனக்கு சொரனையே இல்லையா??” என்றதும் அதுவரை பேசிக்கொண்டு இருந்த குமரன் அடிக்க வந்துவிட்டார் செல்வியை “அய்யோ” என்று பேச்சி பதற
“ஏண்டி இந்தன நாள் சென்டு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடாம, மரியாதை இல்லாம பேசிகிட்டு இருக்க. உள்ள போடி இன்னும் ஒரு வார்த்தை பேசுன கொன்னுடுவேன் போடி உள்ள” என்றார். 
“செல்வி… குமரனை உற்று பார்த்தவர் கழுத்தை வெட்டியபடி உள்ளே சென்றார்”
சமையல் அறைக்கு வந்த பேச்சி “செல்வியை பார்த்து வாயில் கை வைத்து நின்று இருந்தார். ஏண்டி என்னடி ஆச்சு உனக்கு?? உங்க அப்பாரை பாத்து அந்த பேச்சு பேசிட்ட??” 
“பின்ன நீங்க வந்ததும் உங்க கிட்ட பாசமழைய பொழியனுமா!!?? நான் இப்படி பேசாட்டி தினமும் மந்திரிக்குறாளே அவங்க அக்காகாரி வந்து நிப்பா இங்க. என்னமோ தம்பிய தாங்கி இவதான் பிடிக்குறது போல!!” என நொடித்துக்கொண்டார்  செல்வி
“ஏண்டி, சோமசுந்தரம் வந்து பேசினதுக்கு அப்பறமும் அவ பேசுறாளா??”
“பின்ன இப்ப தான் நாளைக்கு நாலு வாட்டி ஃபோன் பண்ணுறா. தம்பி உன்னையதான் நம்பி இருக்கேன்.. எனக்கு எல்லாம் நீ தான்… என்னைய விட்டுடாதன்னு… எல்லாம் அவன் செய்யுற வேலை என்று ராஜமாணிக்கத்துக்கும் சேர்த்து விழுந்தது”
“உள்ளே பெண்கள் பஞ்சாயத்து இப்படி போக, வெளியே ரங்கன்.. குமரனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தார்” 
“மாப்புள்ள அது சின்ன கழுதை… பேச தெரியாம பேசிடுச்சி மன்னிச்சி விட்டுடுங்க” என்று
“இங்கு மகள், மருமகனை திட்டிக்கொண்டு இருக்க… அங்கு மகன், பேத்தியிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருந்தான்”
“இது என்ன டிரஸ் மாமா??   இப்படி போட்டா அப்பா கிட்ட நானோ போய் அருவாளை எடுத்து கொடுத்து வெட்டுங்கன்னு” சொன்ன மாதிரி.
“இதுக்கு என்ன??  உனக்கு நல்லாதான இருக்கு…” என்று அவன் எடுத்து வந்து இருந்த லைட் பிங்க் வித் புளூ கலர் சுடியை அவள் மீது வைத்து பார்த்தான்.
“இதுக்கு ஒன்னும் இல்லை.. இதுல கழுத்து தான் குறைச்சல்” அவன் புரியாமல் அவளை பார்த்தான்.
“கழுத்தை பாருங்க, இதை போட்டா கழுத்துல இருக்குற செயின் தெரியும். அதனால அன்னிக்கு இருந்து நான் கழுத்தை மூடின மாதிரி தான் டிரஸ் பண்ணுறது” என்றதும் அவன் முகம் வாடி விட்டது.
“என்ன மாமா??” என்றாள் அவன் முகம் பார்த்து.
“இவன் முகம் வாடியதை பார்த்து அவள் முகமும் வாடி போவதை பார்த்தவன், ஒன்னும் இல்லை.. வா வேற பாக்கலாம்…” என்று அவளுக்கு பிடித்தமானதை எடுத்து பில் போட்டு முடிக்க அவன் சொன்ன நேரம் தாண்டி இருந்தது.
“வா போலாம் டைம் ஆச்சு” என்றவன் அவளை அழைத்து கொண்டு போனான். “மாமா இதை எல்லாம் எப்படி நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக?? அப்ப கேப்பாறே??” என்ற அவளின் சந்தேகத்தை முன் வைத்தாள்.  
“அது தெரியாமயையா என் கூட வந்த??” அருள்
“நீங்க இருக்குறப்ப நீங்களே பாத்துப்பீங்க.. இப்ப தான் நீங்க வரமாட்டீங்களே” அது தான் என்றாள் உதட்டினை சுழித்து.
“அவள்  தாலியை மறைத்து பற்றி சொல்லும் போதே மனம் நொந்தவன்.. இப்போது இப்படி சொல்லவும், அருளுக்கு இப்படியே அவளை தன்னுடன் அழைத்து கொண்டு போய்விடலாமா” என்று தான் இருந்தது.
“ஆனால் அவளுக்கோ எந்த கவலையும் இல்லை சலசலவென பேசிக்கொண்டே வந்தாள் அருளிடம்” 
“இன்னும் சற்று தூரத்தில் பள்ளி வந்து விடும்… அதன் பிறகு காயத்ரி சென்று விடுவாள்… இன்னும் ஒரு வாரத்தில் இவனும் டெல்லி செல்ல வேண்டும்.. இன்னும் அதை பற்றி காயத்ரியிடம் சொல்லவில்லை”
“சொன்னால் அவன் ஊருக்கு போக நிச்சயம் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள். அருள் சென்றால் வர நாட்கள் ஆகும். நினைத்த நேரத்தில் பார்க்கவோ, பேசவோ முடியாது.” அவன் அதே சிந்தனையில் வர “மாமா வண்டிய நிறுத்துங்க….” என்று கத்தினால் காயத்ரி.
“சிந்தனையில் இருந்தவன் இவள் கத்தவும் என்னவே என்று வேகமாக பிரேக்கை அழுத்த அதே வேகத்தில் முன்னால் இருந்த டேஸ் போர்டில் இடித்து கொண்டாள் காயத்ரி”
“அய்யோ” என காயத்ரி  கத்த “ஏண்டி வண்டி ஓட்டும் போது இப்படி கத்தான்னு எத்தனை தடவ சொல்லுறது அறிவே இல்லையா இப்ப பாரு எப்படி வீங்கி இருக்கு” என்றான் அவள் இடித்த இடத்தை அழுத்தி தடவியவாறு.
“பரிட்ச்சையில பாஸ் ஆனா வர்றேன்னு வேண்டுதல் வைச்சு இருக்கேன் இருங்க போயிட்டு போகலாம்” என்றவள் அவன் கைகளை தட்டி விட்டு காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டாள் கோவிலுக்குள்.
சாமி தரிசனம் முடிந்து வர அமைதியாய் இருந்தான் அருள் “என்ன மாமா அமைதியை இருக்கீங்க?? ஏதாவது என்கிட்ட சொல்லனுமா??” கேட்டாள் காயத்ரி.
அவளை பார்க்காமலே கேட்டான் “அடுத்து என்ன படிக்க போற??” 
“டாக்டர் ஆகனும்னு ஆசை மாமா படிக்கவா!!” கேட்டாள் ஆர்வமாக
“ம்ம்ம் படி” என்றாலும் அவன் குரலில் சந்தோசம் இல்லை. 
அப்போது தான் கவனித்தாள் அவனின் குரல் மாறுபாட்டை “ஏன் மாமா என்ன ஆச்சு??” 
“நன்றாக அவளை நோக்கி திரும்பி அமர்ந்தவன் அவன் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து வைத்துக்கொண்டான்”
“நான் செல்றத நல்லா கேட்டுக்க, கோபப்பட கூடாது” என்றதும் கண்கள் சுருக்கி பார்த்தாள் அவள். 
“நான் அடுத்த வாரம் டெல்லி போறேன் படிக்க.. திரும்பி வர எப்படியும் ரெண்டு மூனு வருசம் ஆகும்” என்றதும் அவனிடம் இருந்து கைகளை வெடுக்கென பிடுங்கியவள் “கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே ஓடினால் காருக்கு”
“காயத்ரி நில்லு” என்று அருள் கத்தினாலும்  நிற்கவில்லை அவள். இவ இருக்காளே என்று சடைத்தவன் போனான் அவள் பின்னால்.
“ஏண்டி இப்படி அழுதா நான் எப்படி ஊருக்கு போறது??” 
“நீ எதுக்கு போகனும்?? இங்க இல்லாத காலேஜா… அவ்வளவு தூரம் போனா தான் படிப்பு உன் மண்டையில ஏறுமா??” என அவனை பேச விடாமல் இவளே பேசினாள்
அவள் வாயை தன் கைகளால் மூடியவன் “எங்க அக்கா எதை கத்து கொடுத்து இருக்கோ எனக்கு தெரியலை…?? ஆனா இப்படி அடுத்தவங்கள பேசவிடாம நீ மட்டுமே பேச நல்லா கத்து கொடுத்து இருக்கு” என்றான்
செல்வியை சென்னதும் அவன் முன் சென்னதை மறந்தவள் “ஆமா உங்க அக்காதான… அது தான் இப்படி?? என அவன உடன் மல்லுக்கு நிற்க, “கத்திரி இங்க பாரு” என்ற அவன் குரலில் காயத்ரிக்கு இருந்த செய்தி என்ன??
“பக்குவம் அடைந்த பெண்ணாக இருந்து இருந்தாள் அதை உணர்ந்து கொண்டு இருப்பாளோ”
“என்ன மாமா??” என்ற கேள்வி அவள் வாய் கேட்டாளும் “என்னை விட்டு போகாதே என்றது அவளின் கண்கள்” 
“பூவுக்கும் நோகுமோ என்று மெதுவாக அவன் இதழ் இவள் இமை தீண்ட மெல்லிய நடுக்கம் அவள் உடலில்”
“அதை எல்லாம் உணர்ந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கு இன்னும் வர வில்லை.” ஆனால் அருளுக்கே “அவளின் அணைப்பு, அவள் மீதான தன் உரிமை, அவன் கொடுத்த முத்ததில் அவள் உடல் நடுக்கம், யாரும் இல்லாத இந்த தனிமை ஏதோ செய்ய” அவளை விலக விடாமல் தன் உள்ளேயே வைத்துக்கொண்டான்.
“நான் படிப்பை முடிச்சி வற்ற வரைக்கும் பத்திரமா இருக்கனும். தாத்தா, கரிகாலன்  இல்லை அம்மாச்சி யாரவது உன்னை வந்து பாத்துட்டே இருப்பாங்க.. என்ன சரியா…  எது வேண்ணுனாலும் அவங்க கிட்ட சொல்லு” 
“அப்ப நீங்க வேணுண்ணா யார்கிட்ட சொல்ல” என்றதும் பேச்சில்லை அவனிடம். தன் தோள் சாய்ந்து இருந்தவள் தலை மீது தன் முகம் புதைய அழுத்தியவன்.. நான் அங்க போனதும் நம்பர் அனுப்பி வைக்குறேன், தினமும் ஃபோன் பண்ணுறேன் சரியா??” என்றதும் தலை அசைத்தாள் சம்மதமாக.
நேரம் ஆவதை உணர்ந்தவன் “போகலாமா.. நமக்காக அவங்க எல்லாம் வெயிட் பண்ணுவாங்க” என்றவன் பள்ளியில் சென்று அவளை விட்டான். 
காயத்ரி இறங்கி போக அவளின் களை இழந்த முகத்தை பார்க்க பிடிக்காதவன் “அடியே கத்திரி.. இதை யாரு எடுப்பா உங்க அப்பாவா??”
திரும்பி அவனை பார்த்து முறைத்தவள் “வாங்கி தற்றது நீங்க… சுமக்குறது எங்க அப்பாவா?? அது தான் என் புருசன் இருக்குறார்ல… அவர் எடுத்துட்டு வருவாரு நீங்க கவலை படாதீங்க??” என்றவள் கழுத்தை வெட்ட, அதை பார்த்தவன் மனது லேசாக  அவள் சிரித்த முகத்தை பார்த்த படியே புறப்பட்டான் அருள்……..

Advertisement