Advertisement

“ரங்கன் தாலி எடுத்து கொடுக்க காயத்ரி கழுத்தில் கட்டினான் அருள். கையில் இருந்த அட்சதையை செல்வி அனைவருக்கும் கொடுக்க அதை தூவி ஆசிர்வாதம் செய்ய பேச்சிக்குதான் மனதே கேட்கவில்லை” 
“என்வீட்டு முத வாரிசு… அவனுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண நினைச்சேன்!!?? “ஊர் முழுசும் பந்தலிட்டு… அத்த, மாமா உறவுக்கு சொல்லி விட்டு… ஆடு ஒரு பக்கம், கோழி ஒரு பக்கம்ன்னு விருந்து வச்சி… மகராசனும், மகராணியும் ஊர் மொரவனை வரன்னு” நான் நினைச்சதை எல்லாம் இப்படி பால் ஊத்த வச்சிச்சடாலே இந்த பாவி மகன்னு” ஒப்பாரி வைத்து பாட ஆரம்பித்தார்
“இப்படி நட்ட நடு ராத்தியில ஊருக்கும் தெரியாம, உறவுக்கும் தெரியாம நாதியத்து தாலி கட்ட வைச்சுட்டாலே” என செல்வியை பார்த்தவர் அவர் அழுவதை தாங்கமல் ஓஓஓ… என கதற ஆரம்பித்தார்   
ரங்கனோ எதுவும் பேசாமல் இருக்க சோமசுந்தரம் தான் அதட்டினார் பேச்சியை “அக்கா இப்ப என்ன நடந்துடுச்சுன்னு?? இப்படி ஒப்பாரிய ஆரம்பிக்குறவ… விடு எல்லாம் நல்லதுக்கு தான். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்” என்றார்
“அடுத்து என்னடா??? எம்புள்ளைய ஜெயிலுக்கு தான அனுப்பி வைக்கனும்.. இதை செய்ய தான இதோ… இவ… இவன ஆளாக்கினா??” என்று மீண்டும் செல்வியை பார்க்க தலை குனிந்து கொண்டார் செல்வி.
“அம்மா…. அக்காவ ஏதும் சொல்லாத…” என்று அருள் சொல்ல, “ஆமான்டா… உங்க அக்காவுக்குன்னா தான உனக்கு வலிக்கும்!!?? நா உன்ன பெத்தவடா… அவள மாதிரி கல்லுமனசா இருக்க முடியாது” என்றதும் “ஆத்தா” என்று செல்வி அவரின் காலில் விழுந்து அழ ஆரம்பிக்க அவர் அழுவதை பார்க்கவும் முடியவில்லை பேச்சியால்.
“பேச்சி… இப்ப வாய மூடல!!! நான் மனுசனா இருக்க மாட்டேன். அடுத்து என்ன செய்யன்னு யேசிக்க விடு…” என்று ரங்கன் சத்தமிட்டதும் தான் அடங்கினார் பேச்சி
“சொல்லு சுந்தரம்… அடுத்து என்ன செய்ய?? இந்த பய படிப்புக்கு எந்த பங்கமும் வர கூடாது?? என் பொண்ணும், பேத்தியும் கவலை இல்லாம இருக்கனும்” என்றார்
“மாமா…  செல்வியும், காயத்ரியும் வீட்டுக்கு போகட்டும்” என்றதும் செல்வி ஏதோ சொல்ல போக, “செல்வி அவசர பட கூடாது. நா… பேசுறத பொருமையா கேட்கனும்” என்றார் சோமசுந்தரம்.
“செல்வியையும், காயத்ரியையும் அவங்க ஏதும் பண்ணாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க… அந்த கவலைய விடுங்க. அருளுக்கும், காயத்ரிக்கும் நடந்த கல்யாணம் வெளிய யாருக்கும் தெரிய கூடாது”   
“தெரிஞ்சா நானோ அருளை கைது பண்ண வேண்டியத இருக்கும். சரியா?? அவளுக்கு பதினெட்டு வயசு முடியுற வரைக்கும் யாரும் இந்த பேச்ச பேச கூடாது?? அங்கயும் பேசாம இருக்க என்ன நடவடிக்கை எடுக்கனுமோ அதை நான் பாத்துகிறேன்” என்றவர் அனைவரையும் கிளம்பச் சொன்னார்.
“அருள், கரிகாலனை அழைத்தவன் வண்டியில் இருந்த கோமிராவை எடுத்து வர சொல்லி அவர்கள் இருவரையும் படம் எடுக்க சொன்னான்”
சோம சுந்தரம் வேண்டாம் என்றதற்கு “இது யாரு கிட்டையும் போகாது மாமா.. எனக்காக!!” என்றவன் அவர்களை விட்டு தனியாக படம் எடுக்க அடுத்த அடுத்த புகை படத்தில் அனைவரும் சேர்ந்து கொண்டனர்.
சோமசுந்தரம் “ஜீப் டிரைவரை தங்களின் வண்டி பின்னால் தொடர சொன்னவர்,  காரில் முன்னால் அமர்ந்து கொள்ள பின்னால் காயத்ரியும், செல்வியும் அமர்ந்தார்கள்” 
“வண்டிய எடு காத்தா” விசயம் எங்கயும் கசிய கூடாது… என அருள் சொல்லவும் “சரிண்ணே” போனதும் தகவல் சொல்லு பத்திரம் என அவர்களை அனுப்பிவிட்டான் அருள்.
“அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்தே இவர்கள் சென்றனர். கரிகாலன் வண்டி ஓட்ட  யாரும் பேசவில்லை அங்கு” 
 
“எதுக்கு செல்வி இப்படி பண்ணுன?? என்கிட்ட விசயத்தை சொல்லி இருக்கலாம்ல??” என்றார் சோமசுந்தரம்
“அட போங்க மாமா… உங்ககிட்ட சொன்னா மட்டும் நீங்க இருக்கும் போது தலைய ஆட்டுவாங்க, நீங்க போனதும் எப்படி இந்த கல்யாணத்தை நடத்தன்னு யோசிப்பான் அந்த ராஜமாணிக்கம்.  இவருக்கு அருள் மேல இருக்குற கோபத்தை அவனுக்கு சாதமாக மாத்திக்குவான். அவன பத்தி உங்களுக்கு தெரியாது??!!” 
“இப்ப மட்டும் சும்மா இருப்பானா??” கேட்டார் அவர்
“இப்பவும் அவன் ஏதாவது செய்வான்.. ஆனா நான் வீட்டை விட்டு வந்ததால உங்க தம்பி அவறை எதுவும் செய்ய விடாம பாத்துக்குவார்ன்னு நான் நம்புறேன்”
“செல்வி சொன்னதை கேட்டு யோசனையில் ஆழ்ந்தார் சோமசுந்தரம்”
“செல்வி வீடு  வர  பரபரப்பாக இருந்தது. குமரன் தலையில் கைவைத்து வாசலில் அமர்ந்து இருக்க காரில்  இருந்து இறங்கினார் செல்வி”
“கார் சத்தம் கேட்டதும் நிமிர்ந்தவர் செல்வியை பார்த்ததும் அப்படியே நிலை படியில் தலைசாய்த்து கொண்டார்… அவரை பார்த்த பின் தான் அவருக்கு உயிரே வந்தது.. செல்வியையே பார்த்தவர் மகளை கூட கவனிக்கவில்லை”
“காயத்ரியை அழைத்து கொண்டு செல்வி உள்ளே போக… காரினை ஓடிக்கொண்டு வந்த காத்தனை முறைத்து பார்த்து இருந்தார்  குமரன்.” பின்னால் வந்த சோமசுந்திரத்தை கவனித்தவர் “வாங்க அண்ணனே” என்று அழைத்தார்
“ராஜமாணிக்கம், முத்தழகி, குமரன் ஒருபுறமும்… செல்வி மறுபுறமும் அமர்ந்து இருக்க, காயத்ரி அவளுக்கு என கட்டி இருந்த குடிசையில் படுத்து இருந்தாள்”
“முதல்ல அவள இங்க இருந்து போக சொல்லுங்க அண்ணனே!!” என முத்தழகி பேச, “அமைதியா இரு முத்து, அவளே நொடிஞ்சி போய் இருக்கா… ஏதே காத்தன் இருந்ததனால ரெண்டு பேரும் இப்ப இருக்காங்க… அருளும் வீட்டுக்குள்ள சேத்துக்க மாட்டேன்னுட்டான்!!” என்று குமரன் எங்கு அடித்தால் பேசாமல் இருப்பார் என்று தெரிந்து  சோமசுந்தரம் பேச குமரன் வாயே திறக்கவில்லை.
முத்தழகியோ “அதுக்குன்னு வீட்டு மானத்தை வாங்குனவள எல்லாம் வீட்டுக்குள்ள விட முடியாது… அவள வெளியே போக சொல்லுங்க!!” என்று 
“முத்து இது அவங்க புருசன் பொண்டாட்டி சம்பந்தபட்டது.. அதுல நீ… தலைபோடுறது சரியில்லை… பெறந்த வீட்டுக்கு வந்தோமா, நாலுவேளை சாப்புட்டோமான்னு போயிக்கிட்டே இருக்கனும்… அதை விட்டு பஞ்சாயத்து பண்ண கூடாது” என்று சேமசுந்தரம் பேச
“முத்தழகியோ விடாமல் செல்வியை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்தார்”
“முத்து அப்படின்னா நீயும், உன் தம்பியும் பண்ணின வேலைக்கு உங்கள தான் தூக்கி உள்ள வைக்கனும்!!!” என்றதும் மூன்று பேரும் சிலையாக அமர்ந்து இருந்தனர்.
“என்ன நினைச்சு இருக்கீங்க?? இதே இந்த பொண்ணு முகத்துக்காக தான் சும்மா இருக்கேன்… அது ஒரு கம்பிளைன்ட் கொடுத்தா போதும் என்றார் செல்வியை காட்டி குமரன் தலை குனிந்து அமர்ந்து கொண்டார்” 
“என்ன நினைச்சு பச்சபுள்ளைக்கு பரிசம் போட்ட குமரா?? ஊருக்கே பஞ்சாயத்து பண்ணுற… இப்ப உன் வீட்டு நியாத்தை யார் கேக்குறது??”
“இப்ப சும்மா போறேன்னு நினைச்சு ஏதாதவது பண்ண நினைச்சா…  தம்பி தங்கச்சின்னு பாக்க மாட்டேன் மருமகன்னு பாக்க மாட்டேன்… என ராஜமாணிக்கத்தை உற்று பாத்தவர் தூக்கி உள்ள வைச்சுடுவேன்!!” என்றார் 
“செல்வியை பார்த்து எதுனாலும் என்கிட்ட சொல்லனு,ம் இது மாதிரி வீட்ட விட்டு போகனுன்னு நினைக்க கூடாது சரியா?? எப்பவும் என் கண்ணு  இங்க தான் இருக்கும்” என்றவர் கண் காட்டி சென்று விட்டார்.
“யாரும் எதுவும் பேசவில்லை. செல்வி, காயத்ரியிடம் போக அமர்ந்த இடத்திலேயே தூங்கி இருந்தார் குமரன்”
“விடியல் யாருக்கு எப்படியே!! செல்விக்கு நன்றாகவே விடிந்து இருந்தது. பிறகு முத்தழகி ஊருக்கு கிளம்பி நின்று இருந்தால் அவருக்கு நல்லது தானோ” 
“காயத்ரி வீடு நுழைத்து மற்ற சடங்குகளும் முடிந்து விட்டது. இதுவரை குமரனும், செல்வியும் பேசிக்கொள்ளவில்லை. ஏதாவது வேண்டும் என்றால் ஒரு வார்த்தையில் குமரன் கேட்க, அதற்கு செயலில் மட்டும் பதில் சொல்வார் செல்வி” 
“குமரனை பார்க்க பாவமாய் இருந்தாலும், தான் பேசி விட்டாள் மீண்டும் முத்தழகி எதையாவது பேசி வைப்பார்” என்றே அவர் குமரனிடம் பேசவில்லை.
“இன்று காயத்ரியின் பத்தாம் வகுப்பு பரிட்சை முடிவு மாவட்டத்தில் முதலிடம் அவள். பள்ளிக்கு வர அவளுக்கு முன் வந்து இருந்தது அது……..”

Advertisement