Advertisement

                       ஓம் நமச்சிவாய
அத்தியாம் 5
“வாசலில் போட்ட சத்தம் பேச்சியின் அறை வரைகேட்க அதில் கண்விழித்தாள் காயத்ரி”
“இரவு  கரிகாலன், அவளை அவளின் அறைக்கு சென்று தூங்கு என்றதற்கு, இல்லை நான் இங்கயே இருக்குறேன் என்றாள். வேண்டாம் குட்டி, நான் அம்மாகிட்ட இருக்குறேன் ஏதாவது தேவையின்னா கூப்புடுறேன்” என்று கரிகாலன் சொன்னதிற்கும் வேண்டாம் என்றுவிட்டாள்.
“அம்மாச்சி இன்னும் கண் முழிக்கலை, அவங்க எழும் போது நான் இங்க இருக்கனும், நீங்க போய் ரூம்புல தூங்குங்க” என்று படுத்து விட்டாள். அவளின் பிடிவாதம் தெரிந்தவன் அருளையும் அவனுடன் இருக்க விட்டு தன் அறைக்கு சென்றான்.
“இரவில் பேச்சிக்கு நினைவு வர, அவறை பார்த்து இருந்தாள் காயத்ரி. அவளை பார்த்ததும்  பேச்சி உணர்ச்சி வசப்பட, “அம்மாச்சி நான்  வந்துட்டேன்… நீங்க எதையும் நினைக்காம  இருங்க” என்றவள் அவருக்கு தேவையான மருந்தினை செலுத்திய பின்னேதான் தூங்க சென்றாள்”
இரவு அவள் தூங்க நேரம் ஆனதால் யாரும் அவளை எழுப்ப வில்லை. நைட்டியுடன் இருந்தவள் வெளியே எட்டி பார்க்க ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. அப்படியே போக முடியாது… வேறு உடை உண்டா?? என்று கேட்க அருளும் அங்கு இல்லை. இரவு அவளுக்கு இந்த உடையை எடுத்து தந்தவன் அவன் தான். 
அவள் பார்ப்பதை பார்த்த  சமையல் வேலை பார்க்கும் சரசு காப்பியை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள் “சின்னம்மா… ஐயா உங்களுக்கு வேண்டியத உள்ள வச்சு இருக்காறாம், நீங்க ரெடியாகி வருவீங்களாம்” என்றவள் காப்பியை கொடுத்து சென்றாள்.
“காப்பி” அவளுக்கு பிடித்த சுவையில் இருக்க, ஜன்னல் வழியாக தெரிந்த மலை முகட்டினை பார்த்த படியே குடித்து முடித்தாள். அது அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். “இரவு நேரங்களில் மலை வாழ் மக்கள் ஏற்றி வைக்கும் தீ பந்தங்களின் வெளிச்ச பாதைகளை இங்கிருந்து பார்க்கலாம். அதுவும் மழை காலங்களில் திடீர் என்று தோன்றும் அருவிகள் தூரத்தில் இருந்து பார்க்க அத்தனை அழகு”  
“அதனை ரசிப்பதில் அத்தனை சுகம் அவளுக்கு… ரங்கனிடம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறாள் அந்த அருவிகளுக்கு தன்னை அழைத்து போகும் படி… ஆனால் அங்கு போக சரியான பாதை இல்லை, அதுவும் மழை விழுந்த சில நாட்கள் மட்டுமே அந்த அருவி இருக்கும் நீர் வற்றியதும் அது மறைந்து போகும்” அதனால் அங்கு போக முடியாது என்று விடுவார்.
“அவளுக்காகவே வீட்டின் அமைப்பை மாற்றினார் ரங்கன். அவள் எங்கு நின்று பார்த்தாலும் அந்த மலையின் அருவிகளில் ஏதேனும் ஒன்று அவளின் கண்களுக்கு தெரியும். மாடியில் நின்று பார்த்தால் மலை முகட்டின் உச்சியில் இருந்து வரும் அருவி கூட தெரியும் அளவிற்கு கட்டியிருந்தார்”
மலையை ரசித்து கொண்டு இருந்தவள் பேச்சியின் அசைவில் திரும்பினாள். “அம்மாச்சி” என்று அவர் அருகில் வந்தவள் அவரின் உடல் நிலையை கண்காணித்தாள். அவருக்கு என்று இருக்கும் ஆட்களை அழைத்து டவள் பாத் கொடுக்க சொல்லி குளியல் அறைக்கு சென்றாள்.
“குளித்து தாயாரானவள் கண்ணாடியில் தன்னை பார்க்க, சிறிது நேரம் தன் உருவத்தையே ரசித்து நின்றாள்”
“இத்தனை நாள் தாலியை மறைக்கும் படி அணிந்த உடைகளை போல் இல்லாமல் இன்று அதற்கு மாறாக தாலி தெரியும் படியான உடை. சந்தன கலர் சேலையில் சிவப்பு பாடர் வைத்து அதற்கு தோதானா பிளவுஸ், நகை அணிந்து வகிட்டில் குங்குமம், மல்லிகை பூ தலையில் இருக்க ரசனைகாரண்டா என்றாள் அருள் அவளுக்காக வைத்து இருந்த உடைகளை பார்த்து”
“அவளுக்கு என பார்த்து பார்த்து எடுத்து வைத்து இருந்தான் உடைகளை அந்த கப்போர்ட் முழுவதும்”
“அவள் தயாராகி வெளியில் வரும் போது மணி எட்டை தாண்டி இருந்தது. ‘இவ்வளவு நேரமா??’ நினைத்தவளுக்கு அப்போது தான் உறைத்தது தான் இன்னும் பூரணியுடன் பேசவே இல்லை!! என்று
பூஜை முடித்து அவரிடம் பேசலாம் என பூஜை அறைக்கு வர, அங்கு அவள் விளக்கு ஏற்ற அனைத்தும் தயராக இருந்தது.  விளக்கினை ஏற்றி அதன் முன் அமர்ந்தவள் “அபிராமி அந்தாதியில் இருந்து “உதிக்கின்ற செங்கதிர்” என்ற முதல் அடியை  பாட ஆரம்பித்தாள்”
“இது ரங்கனுக்கு மிகவும் பிடித்தமானது” சின்ன வயதில்  மழலை குரலில் காயத்ரி “அபிராமி அந்தாதி” பாடும் போது அந்த அம்பிகையை நேரில் பார்த்த பரவசம் அவருக்கு ஏற்படும் என்று சொல்பவருக்காகவே அவளுக்கு பிடிக்காது என்றாலும் சங்கீதத்தை முறை படி கற்றாள்.
 
“அவள் பாட ஆரம்பித்தாலே காதை மூடிக்கொண்டு ஓடி விடுவான் அருள். காலையில எழுந்தா “செல்லாத்தா செல்ல மாரியாத்தான்னு…” எல் ஆர் வாய்ஸ கேட்டா தூக்கம் எட்டு ஊர் தாண்டி ஓடும். அத விட்டு இவ பாடுறத கேட்டா வராத தூக்கம் கூட என்னைய வா வான்னு கூப்புடுது இனி நான் இருக்கும் போது பாடுன ??”என்று அவளின் கழுத்தை நெறிக்க வருவான் அவன்.
“போ…. உனக்கு பாட்டு பிடிக்கலையின்னா?? நான் பாட கூடாதா!! அப்படி தான் பாடுவேன்.. என்ன பண்ணுவ??” என்று அவனுடன் சண்டைக்கு நிற்பாள் காயத்ரி. 
பூஜை முடிந்து அவள் வெளியில் வர வந்து நின்றான் கரிகாலன். “என்ன சாமி கும்புட்டாச்சா??” என்றதும் ம்… என்று தலை ஆட்டினாள் காயத்ரி.
“அம்மாக்கு இப்போ ஓகேவா??” கரிகாலன்
“ஆமா மாமா… சீப் வந்து பாத்துட்டா எல்லாம் ரிமூவ் பண்ணிடலாம். எதுக்கு இத்தனை வயர்?? வரட்டும் அவரு!! என அவரின் குடும்ப டாக்டரை திட்ட,  ‘இத்தனை வயர் போட்டு எங்க அம்மாவை படுக்க வைக்கலன்னா?? நீ எங்கள எல்லாம் படுக்க வைச்சுருக்க மாட்ட!! எங்க அண்ணன் தீர்க்கதரிசி… சும்மா வந்த ஆஸ்துமாவ படுக்கை போட்டு தாலாட்டுறான்’ இதை மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது அவனால்.
“மாமா உங்க ஃபோன் குடுங்க??” என்றவளிடம் “இந்தா” என ஃபோனை நீட்டி எங்க உன்னது?? 
“அதை அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்” என்றவள் அருளின் நம்பரை அதில் தேட, என்ன தேடுற?? 
“அவசர நம்பரை தான்”  என்றவள் அவனுக்கு அழைக்க, “என்னடா??” என்றான் அந்த புறம் அருள்.
கரிகாலன்  “இதுக சண்டை இன்னிக்கு ஓயாது!!” என்றவன் சாப்பிட சென்றான்.
“அதற்குள் மூன்று முறை அருள் அந்த பக்கம் கத்தி இருக்க.. பல்லை கடித்த படி இருந்தவள்… கரிகாலன் சென்றதும் “என்னடா இல்லை….” என்ற அவளின் குரல் கேட்டதும் ஆர்பாட்டமாய் சிரிக்க ஆரம்பித்தான் அருள்”
“இப்ப எதுக்கு  இந்த சிரிப்பு??”
“அது எதுக்கு வேணுனாலும் இருக்கலாம்!! உனக்கு வேணுன்னா கேளு சொல்லுறேன்”
“எனக்கு ஒன்னும் வேணாம்”  
“அப்ப நான் ஃபோனை வைக்குறேன்” என்றதும் “ஆங் பூரணிம்மா போன் நம்பர் குடுங்க… நான் பேசனும்” 
“மேல நம்ம ரூம்புக்கு போ… அங்க இருக்கும்” என்றவன் கட் செய்து விட்டான்.
“இவரு என்ன லூசா!!” ‘ஃபோன் நம்பர் கோட்டா ரூம்புக்கு போக சொல்லுறாரு’ நினைத்தவள் அவன் சொன்ன “நம்ம” என்பதை கருத்தில் கொள்ளவில்லை, அவன் சொன்ன படியே அவர்களின் அறைக்கு சென்றாள்.
அருளின் அறை வாசல் வரை வரும் வரை இல்லாத தயக்கம் திடீரென வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு. “இது வரை வந்தது இல்லையா நீ?? இங்கயே குடி இருந்துட்டு என்னமே புது பொண்ணு மாதிரி வெக்கப்படுர??” மனதின் கேள்விக்கு 
“இது வெக்கம் இல்லை தயக்கம், அது வேற… இது வேற…” 
‘எதுவா வேணா இருக்கட்டும் இப்ப நீ உள்ள போற’ என்றது அவளுக்கு பதிலாக.
“வலதா.. இடதா என காலை பார்த்தவள் முடிவாக இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்து குதித்து உள்ளே போனால்”
“இப்படிதான் எப்போதும் இந்த அறைக்குள் நுழைவாள் காயத்ரி.” அந்த அறையும் அப்படிதான் இருக்கும்.  வாசல் படி உயரத்திலும், அறையின் உள்கூடு தாழ்ந்து இருப்பதால் சிறு வயதில் கால் எட்டாது காயத்ரிக்கு. அதனால் வாசலில் இருந்து குதிப்பாள். அதில் சில முறை விழுந்து அடிபட்டதும் உண்டு”
இப்போதும் குதித்தவள் “ஐய்யா கால் தடுக்காம குதிச்சுட்டேன்” என்று தன் தோள்களை தானே தட்டிக்கொடுத்தாள்.
“உள்ளே நுழைந்தவள் அசந்து தான் போனால் அங்கு இருந்ததை பார்த்து சுவர் முழுவதும் அவளின் புகைபடங்களே” 
“அருளின் முக்கியமான பெழுது போக்கு புகைபடம் எடுப்பது. கனான் சிறிய ரக கேமிரா முதல் தற்போது வந்திருக்கும் அதிநவினா கேமிரா வரை அவனிடம் உண்டு”
“அதிலும் காயத்ரியை விதவிதமா எடுப்பது என்றால் அவனுக்கு நேரம் போவதே தெரியாது. அவன் எடுத்து இருந்த அத்தனை படத்தையும் சேர்த்து தன் அறை முழுதும் பதித்திருந்தான்.” அவன் அதை பார்த்த படியே வந்தவள் நின்றாள் ஒரு இடத்தில்.  
“அவள் நின்று இருந்தது படுத்து எழுந்ததும் அவன் பார்க்கும் இடம். அங்கு இருந்தது அவர்களின் திருமண புகைபடம் கை ஓவியமாய்.” 
“அவன் கன்னத்தில் தடவிய சந்தம் கன்னத்தில் திட்டு திடாய் இருக்க, வாடாமல்லி நிற புடவையில் தங்க நிற பொட்டுகள் அள்ளி தெளித்து இருக்க, மயங்கி விழுந்ததால் முகம் களைத்து இருக்க, எதிர் நின்ற அவன் முகமோ உணர்ச்சி அற்று அவள் உயிர் தனக்கு முக்கியம் என்பதை போல் இருந்தது” அந்த ஓவியம் அவளை அன்றைய நாட்களுக்கே அழைத்துச்சென்றது.

Advertisement