Advertisement

                     ஓம் நம சிவாய
அத்தியாயம் 4
“செல்வியின் பேச்சில் அனைவரும் அப்படியே நிற்க… முதலில் நினைவுக்கு வந்தான் அருள்” 
“அக்கா ஆத்திரத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத… மாமா பண்ணுனதுக்கும் இப்ப நீ பேசுறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு??  எதுல ஒத்துமை இருக்கோ இல்லையோ புருசனும் பொண்டாட்டியும் இதுல மட்டும் ஒன்னு!!” என்றான்
“டேய்… நான் தெரியாம பேசல, அவரு இவளை அவங்க அக்கா கூட திருநெல்வேலிக்கு அனுப்ப போறாரு!!” 
“அங்க போய் ஏதாவது நடக்ககூடாதது நடந்தா??!! நான் என்ன பண்ண… அதுக்கு தான் சொல்லுறேன் அவளை கூட்டிட்டு போ… உங்க மாமாவை நான் சமாளிச்சுக்குறேன்”
“செல்வி, அப்படி எதுவும் நடக்காதும்மா… மாப்பிள்ளை இப்ப கோபத்துல செஞ்ச விசயம் இது… அதுக்காக கல்யாணம் வரைக்கும் போக மாட்டார். அதுவும் இல்லாம அவங்களுக்கும் தெரியும் இப்ப கல்யாணம் பண்ணுனா அவங்களுக்கு தான் அது பிரச்சனையா முடியும்ன்றது” என்றார் ரங்கன்
“நீங்க என்ன சொன்னாலும் சரி இவள நீங்க கூட்டிட்டு தான் போறீங்க” என்றதும் அருளின் கோபம் கரை கடந்தது..
“அருள் பேசும் முன்னமே பேச்சி அடித்து இருந்தார் செல்வியை”
“ஏண்டி கூறு தான் கெட்டு போச்சுன்னா… மூளையையும் கலட்டி வச்சிட்டியா?? என்ன பேச்சு பேசுற!! பச்ச மண்ணுக்கு தாலி கட்ட சொல்லுற நீ எல்லாம் என்னடி பெத்தவ??” என்றவர் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்…
ரங்கன் பேச்சியை தாங்கி கொண்டவர், “செல்வி சொன்னா கேளு.. ஆத்திரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது… அருளுக்கு காயத்ரின்னு நீ நினைச்ச மாதிரியே கல்யாணம் செய்யலாம், ஆனா அதுக்குன்னு இப்படி இல்ல… வா நான் மாப்பிள்ளை கிட்ட பேசி விட்டுட்டு வர்றேன்”
“ரங்கன் அழைக்க செல்வியோ  இம்மி  கூட இடத்தை விட்டு நகராமல் நின்றார்”
“பேச்சி, ரங்கன், அருள் என்று மாறி மாறி சமாதானம் செய்தாலும் அவரின் ஒரே பதில் அருள் தாலி கட்டட்டும் என்றே இருந்தது”
“இவர்களின் வாக்கு வாதம் தொடர, சட்டென வந்து நின்றது ஒரு போலீஸ் வாகனம். யார் அங்க?? என்ற குரல் இருட்டை கிழித்து வர வந்து நின்றார் சோமசுந்தரம்”
ரங்கனை பார்த்தவர், “மாமா நீங்க இங்க??” என்று சுற்றி பார்க்க அருள், பேச்சி, செல்வி என அனைவரும் நின்றிருந்தனர்.
“என்ன மாமா… என்ன ஆச்சு??!! செல்வி வீட்டு விசேசத்துக்கு போனவங்க இங்க எப்படி??” என்றவர் அப்போது தான் கவனித்தார், காயத்ரி அறை தூக்கத்தில் கரிகாலன் மீது சாய்ந்து இருந்ததை.   
ரங்கன், “அதுவந்து மாப்பிள்ளை, என்று நடந்ததை சொல்ல சேமசுந்தரத்திற்கும் கோபம் வந்து விட்டது. போலீஸ்காரனா மட்டும் இருந்து இருந்தா இந்நேரம் தூக்கி உள்ள வைச்சு இருப்பேன் புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரையும்” 
“கொழந்த புள்ளைக்கு பரிசம் போட்டு இருக்கான் உன் புருசன்… நீ என்னனா தாலி கட்ட சொல்லுற??? உனக்காக தாலிய கட்டிட்டு அவன் ஜெயிலுக்கு போகனுமா?? அதோட உம் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது??” என்று செல்வியை பார்க்க
“அவரோ, நீ  போலீஸா இருந்த எனக்கு என்ன?? நா சொன்னது நடக்கனும்!!” என்று நின்று இருந்தார்
“மாமா” நீங்க அக்கா, பசங்கள கூட்டிட்டு போங்க. நா இவங்கள வீட்டுல விட்டுறேன். “யாருடா அங்க.. எடுடா வண்டிய??” என்று காரினை நோக்கி போக “அவ்வளவுதான” என்று ஆங்கராமாய் கத்த ஆரம்பித்தார் செல்வி…
“அந்த இருட்டு வேளையில் அவரின் ஆங்கார சத்தம் சுற்றி எதிர் ஒலிக்க… அவ்வளவுதான நான் வாழுறதுக்கு தான் உங்களை கேட்கனும்.. சாகுறதுக்கு இல்லை…  என்று கண் இமைக்கும் நேரத்தில் கரிகாலனிடம் இருந்து காயத்ரியை இழுத்தவர், அருகில் யாரோ நேர்த்திகடனுக்காக வைத்து போன  நன்கு கூர் தீட்டப்பட்டு இருந்த அருவாளை ஓங்கி விட்டார்” 
“ஐயனாரப்பா… என்று பேச்சியும், செல்வி… என்று ரங்கனும், அக்கா.. என கரிகாலனும் கத்த, அருள் மட்டும் அப்படியே உறைந்து போய் நின்றான்!!!”
“குமரன், குருவிற்கு பரிசம் போடும் போது கூட சிறு பிள்ளை விளையாட்டாய் நினைத்தவன், அவரின் கோபம் தனிந்ததும் அவரிடம் பேசலாம் என்று நினைத்து இருக்க, இப்போது செல்வி செய்த செயலை அவனால் ஏற்க முடியவில்லை”
“காயத்ரி பிறந்த நொடியில் இருந்து அவனுடையவள் என்று அவன் ரத்ததில் எழுதப்பட்டு… அவனின் ஒவ்வெரு அணுவிலும் அவள் இருக்க, இதோ அவள் இப்போது இருப்பது காலனின் பிடியில் அதுவும் செல்வியின் ரூபத்தில்???”
“செல்வி கத்தும் போதே சுதாரித்து இருந்த சோமசுந்தரம்  அவர் அருவாளை ஓங்கும் போதே தட்டி விட்டு இருந்தார்”
“காயத்ரியோ காலையில் இருந்து வீட்டினர் சடங்குக்காக செய்த செயல்… சற்று முன் வீட்டில் அருளினால் பயந்து இருந்தவள் செல்வியின் இந்த தாக்குதலில் முற்றிலும் தளர அப்படியே மயங்கி சரிந்தாள்”
“காயத்ரி கீழே விழுந்த சத்தத்தில் தான் அருள் நினைவுக்கு வந்தான்.” காயத்ரி!!! என்று அவளை மடியில் ஏந்த  ஜீப் டிரைவர் தண்ணீர் பாட்டிலை தந்தார் அருளிடம்.
“தண்ணீரை அவள் மீது தெளிக்க கண் திறந்தவள் கட்டிக்கொண்டாள் அருளை” உடல் நடுங்க இருந்தவளை, “இல்லடா ஒன்னும் இல்ல, பாரு அம்மாச்சி, தாத்தா எல்லாம் இருக்காங்க பாரு” என்று அவன் சொன்னாலும் அவனின் கழுத்தை மட்டும் விடுவதாய் இல்லை காயத்ரி. 
அவளை அணைத்தபடி இருந்தவன் பார்த்தான் செல்வியை கொலைவெறியுடன். “போதுமா உனக்கு… இத தான நீ எதிர்பாத்த??” என்று அருள் கத்த 
“ஆமாண்டா… இத தான் எதிர்பாத்தேன்… ஆனா இப்படி இல்லை… உன் பொண்டாட்டியா உரிமையா?? இப்பவும் சொல்லுறேன் இந்த இடத்த விட்டு போனா, அவ  உன் பொண்டாட்டியா போகனும் இல்லை பொணமா போகனும். இதுல எதுன்னு நீ முடிவு பண்ணு??”
சோமசுந்தரத்தில் இருந்து அனைவரும் தலையில் கை வைத்து அமர “என்ன செய்ய என புரியவில்லை??”
“சட்டபடி அவர் செய்ய சொல்லுவது தவறு” ஆனால் அவர்களின் உயிரை காக்க அவர்களிடம் வேறு வழி இல்லை. அமைதியாய் பேசலாம் என்றால் அதை கேட்கும் நிலையில் இல்லை செல்வி.
“இன்னும் காயத்ரியின் உடலில் நடுக்கம் குறையவில்லை. மெதுவாக அவளை நிமிர்த்தியவன்,  அவளுக்கு தண்ணீரை குடுக்க அதை குடித்த பிறகு தான் சிறிது சமன் பட்டாள்”
“மாமாவை பாரு” அருள் சொன்னதும் அவனை பார்தவளை “என்னைய கட்டிக்க சம்மதமா??” கேட்டான் அவளிடம் 
“அவளுக்கும் திருமணம் என்றால் என்ன என்பது புரியும் வயது தான். பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்தான்.  தன் உடன் படிக்கும் சில மாணவிகளுக்கே குடும்ப சூழ்நிலை காரணமாக அவசர திருமணம் நடந்ததை பார்த்தும் இருக்கிறாள்”
அவள் அமைதியாக அவனை பார்த்த படி இருக்க “என்னம்மா” என்றான் அருள்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் படிக்க முடியாதா மாமா?? உங்க கூட வந்துடனுமா??” என்று கேட்டவளை நிமிர்ந்து அமரவைத்தவன் “இங்க பாரு.. இப்ப நடக்குறது அம்மாவுக்காக”
“நீ இங்க இருந்து போன அப்பறமும் படிக்கலாம்.. நீ என்ன படிக்க ஆசை படுறியோ அதை நான் படிக்க வைக்குறேன் சரியா??” என்றதும் ஒருவித பயத்துடனே சரி என்றாள்.
“அது அவளுடன் படிக்கும் மாணவிகளால்.. அவர்களுக்கு தெரிந்த அக்கம் பக்கம் நடந்த கதைகளை அவர்களுக்கு தெரிந்த வகையில் சொல்ல, திருமணம் என்றால் ஆண், பெண் உறவு, அதன் பிறகான வாழ்க்கை, அதில் படிப்புக்கு இடம் இல்லை என்பது இதில் அடங்கும். குழந்தை திருமணங்கள் இன்னும் சில கிராமங்களில் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அது தவறு என்று தெரிந்தாலும் சூழ்நிலையால்  தான் இதை ஏற்றுக்கொள்ளகின்றனர்  என்பது  அவளுக்கு புரியவில்லை”  இன்னும் சிறு பிள்ளை தானே
காயத்ரியை விட்டு எழுந்து நின்றவன், “மாமா” என சோமசுந்தரத்தை அழைத்தான். “என்ன அருள்” கேட்டவரை, “இப்ப நான் பண்ண போறது சட்டபடி தண்டணைக்கு உரியது, என்ன பண்ணனுமோ பண்ணுங்க” என்றான். அம்மா, அப்பா என் அழைத்தவன் செல்வி கொண்டு வந்த “தாலியை” வாங்கி தர சொன்னான்.
“செல்வி கண்களை துடைத்தவர் வேகமாக காருக்கு ஓடினார்… சிறிய மஞ்சள் பையில் அவர் கொண்டு வந்து இருந்த தாலி அட்சதையை எடுத்து வந்தவர் அதை பேச்சியின் கைகளில் தர, அதை அவர் ஐயனாரின் பாதத்தில் வைத்தர்”
“காயத்ரி கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்பதால் வாசலில் அருளுடன் சேர்ந்து நின்றாள். மாமனாக  சோமசுந்தரம் போலீஸ் உடையை கலைந்து இடுப்பில் துண்டு கட்டி வந்தவர் கற்பூரம் காட்டி இருவருக்கும் திருநீரை பூசினார்”
“ரங்கன் தாலியை அருளிடம் கொடுக்க அந்த ஐயனாரை சாட்சியாக வைத்து காயத்ரியை தன்னவள் ஆக ஆக்கிக்கொண்டான் அருள்”
கார் குழுங்கி நிற்க “பெரிய தம்பி கோயில் வந்துடுச்சு” என்ற டிரைவர் சாமி குரலில் இருவரும் விளிப்புக்கு வந்தனர்.
“காயத்ரி கழுத்தில் தாலி கட்டிய அதே இடம் இன்று இருவரும் தம்பதியாக வந்து நிற்க பூஜை தட்டினை காயத்ரி கைகளில் தந்தார் சாமி”
“சாமி தாத்தா நீங்களும் வாங்க” என காயத்ரி அழைக்க, “ஏன் தாயி என்னைய நெனப்புல வச்சு இருக்குறயா??!!” என்றார்  குரல் தழுதழுக்க “ஆம்” என்று தலையை ஆட்டினாள் அவள். 
“புனே ஏர்போர்ட்டில் இருந்து சிந்தனையிலே இருந்தவள், மதுரைக்கு வந்ததோ… இல்லை அங்கு சாமி தன்னை பார்த்ததோ.. தன்னிடம் பேச முயற்சித்ததோ… எதுவும் அவள் நினைவில் பதிந்து இருக்க வில்லை”
“பிறகு அவள் இங்கிருந்து போகும் வரை அருளுக்கு அடுத்து அவள் தேடுவது சாமியை தான். கரிகாலனுக்கு இணையாக இவளுக்காக அருளிடம் சண்டை போடுபவர், பாசம் காட்டும்  நபர். கல்யாணம், குழந்தை என்று எதுவும் இல்லாதவர். ரங்கனின் வீடே தனக்கு போதும் என்று இருந்து விட்டார்.” 
இப்போது “அருள் எங்கு இருக்கின்றனோ அங்கு இவரின் வாசம். அவனின் தேவைகளை கவனித்துக்கொண்டு அவனுடனே இருந்து விட்டார்”
“பூசாரி எங்கையா இருக்க?? தம்பி வந்துருக்கு பாரு” என்று அவரை தேட போனார் சாமி.
காயத்ரி கோவிலை சுற்றி வந்தவள் “ரொம்ப மாறிடுச்சு இல்லை, இதே இங்க தான அம்மாச்சி பொங்கல் வைப்பாங்க, நான் இங்க தான் விழுந்தேன் என்று அவளின் சிறு வயது நியாபங்களை அவனிடம் சொல்லி வந்தவள், ஆமா இங்க ஒரு ஊஞ்சல் இருக்குமே அது எங்க??” என்றாள்
“அவளின் சந்தோசத்தை கண் எடுக்காமல் பார்த்தவன், அவளின் கேள்விக்கும் அப்படியே பார்த்து தான் சொன்னான், அது உடைஞ்சி போச்சி.. அப்பா வேற செஞ்சு வச்சு இருக்காரு.. அதை நீ தான் சாமிக்கு வந்து தரனும்னு வீட்டுல இருக்கு” 
அவன் சொன்னதும் எதுவும் போசாமல் காயத்ரி மறுபுறம் திரும்பி நிற்க சாமியுடன் பூசாரி வந்தார்.
பூஜை முடிந்து திரும்ப  “சித்தப்பா அங்க நிறுத்துங்க, காப்பி குடிக்கலாம்” என்று அருள் சொல்ல “வேணாம் தாத்தா வீட்டுக்கு போலாம்… அம்மாச்சி காத்து இருப்பாங்க” என்றவளை பரவாயில்லையே “உனக்கு அவங்க எல்லாம் நியாபகம் இருக்கா??” என அருள் கேட்க தலை குனிந்து கொண்டாள் காயத்ரி. 
ஊர் எல்லையில் நுழையும் பொழுதே வேட்டு சத்தம் கேட்க துவங்கி விட்டது “எதுக்கு இந்த வேட்டு??” காயத்ரி கேட்க “இந்த ஊரு பண்ணையாரம்மா வற்றாங்க இந்த வேட்டு கூட இல்லைனா எப்படி??” என எதிர் கேள்வி கேட்டான் அருள். 
“அப்ப நான் வற்றது தெரியுமா?? என்றவள் அப்படினா நான் போனது…” என ஆரம்பிக்க “போசாம வா… எதுன்னாலும் வீட்டுக்கு போய் பேசலாம்” என்றுவிட்டான் அருள்.
சிறிது நேரத்தில் வீடு வர “வான வேடிக்கையுடன், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், மேளம் என களைகட்ட ஆரம்பித்து அந்த இடம்” 
“அருளும், காயத்ரியும் காரினை விட்டு இறங்க… உறவின் முறை பெண்கள் அனைவரும் காயத்ரியை சூழ்ந்து கொண்டனர்”
“ஏ….ஆத்தா உனக்கு இப்பதான் எங்கள பாக்க தெரிஞ்சதா??” என ஒருவர் ஆரம்பிக்க, ஆளுக்கு ஒரு கேள்வி என கேட்க, பாவம் அவளுக்கு யாருக்கு பதில் சொல்ல என தெரியவில்லை.
“ஆள் ஆளுக்கு அவளின் கன்னம் தடவி முத்தம் வைக்க, ஏற்கனவே அருள் அடித்த இடம் வலி கொடுக்க என்னைய காப்பாத்திவிடேன்” என அருளை பார்த்தாள்.
ஆனால்… “அவனோ அவளை தடவி முத்தம் கொடுத்தவர்களை கொலைவெறியுடன் பார்த்து இருந்தான்” 
“ஏய் பொண்ணுங்களா… நீங்க தடவுனது போதும்… கொஞ்சம் மாப்பிள்ளைக்கு விட்டு வையுங்க!!” என்ற சத்தம் வர சிரிப்பு சத்தம் சபை நிறைத்தது.
“வயதில் மூத்த சுமங்கலிகள் ஆலம் சுற்ற… அருளும், காயத்ரியும் வீடிற்குள் அடியெடுத்து வைத்தனர்.”
“ஊராரின் கேலிப்பேச்சில் இதுவரை சிரித்து இருந்தவள், கண்கள் வீட்டினுள் நுழைந்ததும் கலங்க ஆரம்பித்தது. அவள் ஆடி, ஓடி வளர்ந்த வீடு. வீட்டின் ஒவ்வெரு இடமும் ஒரு கதை சொல்லும். சில வருடத்திற்கு பிறகு இன்றுதான் வருகிறாள்” 
“ரங்கனின் மறைவுக்கு” பிறகு அவள் இங்கு வரவில்லை.  அதற்கு காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாமல் போனாலும், அவளுக்கு தெரியுமே.. அது அவளின் பிடிவாதம்” என்று. அருள் இப்போது யோசித்தான் ‘அப்பயே நாலு இழு இழுத்து இருக்கனுமோ??’ என்று
“போய் விளக்கு ஏத்துமா” என அங்கு இருந்தவர் சொல்ல, “அம்மாச்சி, மாமா எல்லாம் எங்க??” என்றாள் அருளிடம்.
“வருவாங்க… நீ போய் அவங்க சொன்னதை செய்” என்றான் அவளிடம் அருள்.
காயத்ரி பூஜை அறைக்கு போக, “அங்கு சாமி படங்களுடன் ரங்கனின் படமும் செல்வியின் படமும் இருக்க” கண்களில் நீர் வழிய அப்படியே அமர்ந்து விட்டாள் அங்கு.
“அருள் வந்தவன்  அவளை எழுப்பி,  விளக்கினை ஏற்ற வைத்தான்” இப்போது அவன் உடன் பணி புரியும் யார் பார்த்தாலும் கேட்பார்கள், “அவனா நீ!!??” என்று
“அத்தனை கனிவு அவனிடம். இந்த கனிவும், அரவணைப்பும்  அவனின் காயத்ரிக்கு மட்டுமே!!  அதனால் தானோ செல்வி அத்தனை பிடிவாதமாய் காயத்ரியை இவன் கைகளில் தந்தது??”
“அழுதவளின் கண்ணீரை துடைத்து வெளியில் அழைத்து வந்தவன், அவர்கள் தந்த பாலினை அவளுக்கு தர, வேண்டாம் நான் அம்மாச்சிய பாக்கனும் எங்க அவங்க??” என அவரின் அறை நோக்கி போக… வேகமாக வந்து தடுத்தான் அருள்.
“கேள்வியாக அவள் அவனை பார்க்க” இதை முதல்ல குடி உனக்கு அப்பவே பசிக்க ஆரம்பிச்சு இருக்கும்… என்றவன் “கையை எடுங்க” என்ற அவளின் ஒற்றை சொல்லில் கையை விட்டான். 
 
“அந்த ஒரு சொல்லில் தான் எத்தனை கம்பீரம் “ஜமீன்தாரணி” என்று சொன்னவன் அவள் பின்னால் சென்றான் அரசியின் பின் செல்லும் சேவகன் போல”
பேச்சியின் அறைகதவின் திறந்து போனவள் பார்த்தது “சுற்றி வயர்கள் பொருத்த பட்டு செயற்கை சுவாச காற்று உதவியுடன் இருந்த பேச்சியை தான்”
“அம்மாச்சி” என்று கதறியவள் அவரின் மீது விழ போக.. அவளை தாங்கி பிடித்தான் கரிகாலன். “என்ன ஆச்சு மாமா?? அம்மாச்சி எழுந்திரிங்க” என அழ ஆரம்பித்தவளை “குட்டி பாரு.. ஒன்னும் இல்லை.. அம்மாச்சி நல்லா இருக்காங்க… நீ வந்துட்ட இல்லையா இப்ப கண் திறந்துடுவாங்க” என்று சமாதானம் செய்ய அது அவளின் காதில் விழவே இல்லை.
“என்னால தான் எல்லாம்!!! தாத்தா, அம்மா, இப்ப அம்மாச்சி???” என்றதும் “காயத்ரி” என்ற அருளின் சத்ததில் வாய் மூடிக்கொண்டாள். “டாக்டர் தான நீ?? கொஞ்சம் கூட அறிவு இல்லாம பேசுற!! என்றதும் தான் அவளுக்கு உறைத்தது தான் ஒரு இதய நோய் மருத்துவர் என்று”
“வேகமாக  பேச்சியின் மருத்துவ அறிக்கையை படிக்க அவளுக்கு சற்று ஆசுவாசம் ஆனது” 
“கையில் இருந்த பாலினை அருள் அவளுக்கு தர, எப்போதும் போல் கரிகாலன் தோள் சாய்ந்து கொண்டாள் அவள்”
“அருள் வழக்கம் போல் தன் தோளையும்… தமயனின் தோளையும்… பார்த்து இருந்தான் ஆதங்கத்துடன்……….!!!!!!!!!!!!!!”

Advertisement