Advertisement

                   ஓம் நம சிவாய
அத்தியாயம் 3
“ரங்கநாதபுரம்” அழகானா சிறிய ஊர். மதுரையில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம்… சிறுமலை அடிவாரம். ஒரு பக்கம் வயல்கள், மறுபக்கம் மலை முகடு என்று அத்தனை ரம்மியமாக இருக்கும். மலை காற்று எப்போதும் தாலாட்ட ஓசியில் ஏசி இருக்கும் ஊர் அது.
“இந்த ஊர் முழுமைக்கும் சொந்தம் கொண்டவன் தான் அருள் மொழி வர்மன். பேச்சியம்மாள், ரங்க மன்னார்  மகன்… அருளுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்… அக்கா தங்கச்செல்வி, தம்பி கரிகாலன். அருளுக்கும், செல்விக்கும் பதினைந்து வயது வித்தியாசம்”
“செல்வி பிறந்த பின் இயற்கையாகவே குழந்தை தரிக்கவில்லை பேச்சிக்கு. செல்விதான் தங்கள் குலத்திற்கு என்று போற்றி வந்த வேலையில் எதிர்பாராமல் வந்தவன் தான் அருள். அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து பிறந்தவன் கரிகாலன்”
“செல்விக்கு பதினைந்து வயது என்பதால் அருளுக்கு அவளே எல்லாமும்” செல்வியின் திருமணத்திற்கு பிறகு கணவன் வீடு செல்லவும் அனுமதிக்க வில்லை அவளை அருள்!! ஆறு வயதில் அழவும் செய்யாமல் அடமாய் வாசலில் அமர்ந்து  யாரையும் வாசல் தாண்ட விடாமல் இருந்த அருளை பார்த்த அனைவருக்கும் வியப்பே!!
“செல்விதான் அவனை சமாதானம் செய்து ஒரு வழியாக கணவன் உடன் சென்றார். அதில் இருந்தே அருள் என்றால் குமரனுக்கும், குமரன் என்றால் அருளுக்கும் ஆகாது” இருவருக்குமான உரிமை போராட்டம் அன்றில் இருந்தே ஆரம்பம் ஆனது.
“சிறுவனான அருளுடன் சரிசமமாக சண்டைக்கு நிற்பார் குமரன். தாயில்லாமல் வளர்ந்த குமரனுக்கு அனைத்துமாய் மனைவி வேண்டும் என்று நினைக்க… பிறந்ததில் இருந்து தாயாய் தன்னை தாங்கிய அக்காவை குமரன் கேட்பது பிடிக்கவில்லை அருளுக்கு”
“செல்வி குமரனின் ஒரே மகள் தான் காயத்ரி” காயத்ரியின் பிரசவத்தில் செல்வி பட்ட கஷ்டமே போதும் என்று நினைத்த குமரன், ஒற்றை மகளுடன் நிறுத்திக்கொண்டார். “காயத்ரி பிறந்ததும் அருளுக்கு என செல்வி முடிவெடுக்க!!” ரங்கன் தான் மகளின் பேச்சுக்கு தடை இட்டார்.
அவர்கள் வளர்ந்த பின் தான் எந்த பேச்சும் இருக்க வேண்டும்… அதுவும் அவர்கள் ஆசை பட்டால் மட்டுமே?? என்றுவிட அதை  செல்வியின் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
“தம்பியிடம்… காயத்ரி தான் அவனின் மனைவி என்று அடையாளம் காட்ட, அக்காவின் வாக்கே வேதம் என்று கொண்டவன் அன்றிலிருந்து அதையே பற்றிக்கொண்டான்”
“காயத்ரியை அருள் கைகளில் வாங்கும் போது அவளின் குட்டி குட்டியான கைகால்களை பார்த்து கத்திரிகாய் என்றவன் அதையே அவளின் பெயராகவும் மாற்றி விட்டான்.  காயத்ரிக்கு, அருள் கத்திரிகாய் என்றால் கோபம் வரும், அதற்காவே அவளை கத்திரி என்று அழைத்து வம்பிழுப்பான் அருள்”
“அருளிடம் கோபம் கொண்டாள் அவள் வருவது கரிகாலனிடமே. இவர்கள் இருவருக்கும் சமரசம் செய்ய முடியாது என்று தெரிந்தும்!! காயத்ரிக்காக தன் அண்ணனிடம் வாங்கி கட்டிக்கொள்ளவான் இவன்”
“எனக்கும், அவளுக்கும் நடுவுல வராதன்னு சொன்ன கேக்க மாட்டியாடா??” ண்ணா… அவ சின்ன பொண்ணு, அவ கூட சரிக்கு சரி சண்டை போடுறது நல்லா இல்லைன்னா, என்று காயத்ரிக்கு ஆதரவாக பேசுவான் கரிகாலன்.
“சண்டை.. கோபம்  எதுவானாலும் ஐந்து நிமிடம் மட்டுமே காயத்ரிக்கு, மீண்டும் அவள் தேடுவது அருளை தான். அவனுக்கும் அதுவே.. கோபமுகம் காட்டினாலும் அவனின் அருகிலேயே இருக்க வேண்டும் காயத்ரி. இது அனைத்தும் காயத்ரி பெரியவள் ஆகும் வரை மட்டுமே”
“குமரனின் அக்காள் முத்தழகி, கணவர் ராஜமாணிக்கம் அவரும் ஜமீனே, மகன் குருபரன்.  தங்கள் பரம்பரைக்கு இணையான இடத்தில் குமரனுக்கு பெண் எடுக்கவில்லை, என்ற கோபத்தில் அவரின் திருமணத்தில் இருந்து பேசவில்லை முத்தழகி”
ஆனால்… குமரன் மட்டும் அவரின் வீட்டுக்கு சென்று வருவார். காயத்ரி பெரியவள் ஆனதும் அவளின் மூலம் தன் தாய் வீட்டு உறவினை தொடர நினைத்தார் முத்தழகி. ஆனால் ராஜமாணிக்கமோ  குமரனின் சொத்து முழுவதும் தனக்கு வர நினைத்தார்.
“காயத்ரிக்கு முறை செய்ய தாய்மாமன் வீட்டு சீர் வர, அதே நேரம் தான் தான் தம்பி மகளுக்கு செய்வேன் என்று வீம்பு காட்டினார் முத்தழகி”
“எந்த ஊருலம்மா மாமன் இருக்கும் போது மத்தவங்க சீர் செய்ய ஒத்துப்பாங்க??” ஊர் பெரியவர்கள்  கேட்க
முத்தழகி… “அது எல்லாம் எனக்கு தேவை இல்ல… இத்தனை நாள் நான் என் பிறந்த வீட்டுக்கு வரல… இப்ப தான் வந்து இருக்குறேன். நான் முக்கியம்னா நான் செய்யுற சீர தான் என் தம்பி வாங்கனும், இல்லையின்னா இனிமே எனக்கும் அவனுக்கும் எதுவும் இல்லை?!”
“குமரன்… அக்கா என் இப்படி பேசுற??  எனக்கு இருக்குறது நீமட்டும் தான்.. இப்ப நீயும் போறேன்னு சொல்லாத, வாக்கா உள்ள…” என்று தலை வாசலில் நின்று பேசியவரை உள்ளே அழைக்க..
“நீ… சொல்லுற முடிவுல தான் எல்லாம் இருக்கு குமரா.. நான் உள்ள வரனும்னா முதல்ல இந்த தட்டை வாங்கு” என்று பிடிவாதம் பிடித்தார்.
“குமரன் செல்வியை பார்க்க, செல்வியோ கோபத்தில் முகம் சிவக்க நின்று இருந்த அருளைதான் பார்த்து கொண்டு இருந்தார்”
“இப்போதும் தன்னிடம் பேசாமல் அருளை செல்வி பார்ப்பதை பார்த்த குமரனுக்கு, இத்தனை நாள்  அருளின் மேல் மறைந்து இருந்த கோபம் இப்போது தலை தூக்க, முத்தழகியிடம் இருந்து தட்டினை வாங்கினார் குமரன்”
“தட்டில் இருந்த புடவையை கையில் எடுத்த முத்தழகி குருவை அழைத்து காயத்ரியிடம் தர சொல்ல அவனுக்கு முன் பாய்ந்து இருந்தது அருளின் கைகளில் இருந்த வீச்சருவாள்”
“காயத்ரி… குரு இருவருக்கும் இடையில் அவன் வீசிய அருவாள் இருக்க, இப்ப குடுடா அவகிட்ட…!! என்று அவன் முன் வந்து நின்றான் அருள்”
“இருபத்தி ஓரு வயது… இயற்கையாகவே நல்ல உடற்கட்டு அருளுக்கு… இப்போது போலிஸ் செலக்சனுக்காக பயிற்ச்சி மேற் கொள்வதால் இன்னும் இரும்பாக இருந்தது உடல்”
அவன் நின்று இருந்த தோரணையே, “யார் பேசினாலும் வெட்டுவேன்” என்று இருந்தது. குருவை தள்ளிவிட்டு குமரன்தான் முன் வந்தார் இப்போது.
“என்னடா, திமிரு தனம் பண்ணுறயா?? இது என் வீட்டு விசேசம்… இதுல யார் முக்கியம்ன்னு நான் தான் முடிவு பண்ணனும், நீயில்ல??” என்றார் அவன் முகம் பார்த்து.
கண்டிப்பா… அதை நீங்க தான் முடிவு பண்ணனும். “அதை நீங்க சபைக்கு எங்கள கூப்புடுறதுக்கு முன்ன முடிவு பண்ணி இருக்கனும்.. இப்ப இல்லை.. இது உங்க வீடு மட்டும் இல்லை என் அக்காவுக்கும் இதுதான்.. இதோ இவ எனக்கு முழு உரிமை இருக்குறவ”
“என்னைய மீறி எவன் கிட்ட வற்றான்னு பாக்குறேன்??” என்றவன் அவன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நிற்க, ஐயனாரே சிறிய உருவம் கொண்டு வந்தது போல் இருந்தது பார்த்தவர்களுக்கு.
குமரன் செல்வியை பார்த்தவர், “என்னடி, உன் தம்பி மரியாதை இல்லாம பேசுறான் நீ பாத்து கிட்டு இருக்குற.. என்னைய விட அவன் பெரிசா போயிட்டானா??”
“அது அவன் உரிமை. இதுல நான் என்ன சொல்ல?? நீங்க தான் இப்ப புதுசா வந்த சொந்ததை தலையில தூக்கி வச்சி ஆடுறீங்க.. என செல்வி அருளை தாங்கி பேச, கோபம் கண்ணை மறைக்க பொது சபை என்றும் பாராமல் அடித்துவிட்டார் செல்வியை குமரன்”
“செல்விக்கு ராஜமாணிக்கத்தின் குணம் தெரிந்ததாலேயே இத்தனை காலம் அவர்கள் வராமல் இருந்ததை பற்றி கவலை கொள்ள வில்லை. இப்போது அவர் வந்தது, முத்தழகியின் பேச்சினை தடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது, எல்லாம் சேர்த்து ஒரு பயத்தை ஏற்படுத்த அவர்களை வெட்டி விட பேசிவிட்டார்”
“அருளுக்கு வந்த ஆத்திரத்தில் அருவாளை ஓங்கியேவிட்டான் குமரனை பார்த்து” ஒரு நூல் வித்தியாசம் அவ்வளவே. “ஐய்யோ” என்ற சத்தம் மட்டுமே, அதிர்ச்சியில் அந்த இடமே மயானா அமைதியானது.
“அம்மா, அப்பா என்ற குரலில் பேச்சியும், ரங்கனும் அவனின் அருகில் வர, தட்ட குடுங்க என்றவன் காயத்ரியை பார்க்க.. கைகளால் வாயை பொத்தி கண்களில் மிரட்ச்சியுடன் இருந்தவள் அவனின் அருகில் வந்தாள்”
“அம்மாச்சி கால்ல விழுந்து தட்டை வாங்கு, என்று அவன் சொல்ல சொல்ல அதை தப்பாமல் செய்தாள் காயத்ரி. அக்கா போ அவளை சேலைய மாத்தி கூட்டிட்டு வா என்றவன் கையில் இருந்த கத்தி குமரன் கழுத்தை விட்டு இறங்கவே இல்லை”
உடை மாற்றி காயத்ரி வர, அருள் பேச்சியை மாலை போட சொன்னான். “ஐயா நீ தான் போடனும்” என்பதற்குள் வேர்த்துவிட்டார் பேச்சி. அவரும்,  ரங்கனும் ஒன்றும் சாதாரண ஆட்கள் இல்லையே, ஒரு ஊரையே பண்ணனையம் செய்பவர்கள்…
“ஜமீன் என்ற பெயர் மட்டும் தான் இல்லை அவர்களுக்கு” ரங்கனின் பேச்சுக்கோ இல்லை பேச்சியின் பேச்சுக்கோ அங்கு மறு வார்த்தையில்லை. அப்படி பட்டவர்களே இன்று அருளின் முன் பேச்சிலந்து நின்றனர்.
“ஊர் கூடி நிற்கும் சபையில் வீட்டு மாப்பிள்ளை தங்களை அவமானம் படுத்த, தலைக்கு மேல் வளர்ந்த மகனே அவரை கேள்வி கேட்டான்” அவரால் அருளை கட்டுபடுத்த முடியவில்லை.  ரங்கன் நடப்பதை வேடிக்கை பார்க்க, பேச்சி அருளின் முகம் பார்த்து நின்றார்.
கரிகாலா… என்று தம்பியை அருள் அழைக்க, அண்ணா.. என்று வந்து நின்றான் அவன். “இந்தா” என அருவாளை அவனிடம் தந்தவன், “நாம இங்க இருந்து கிளம்பற வரை உயிர் மூச்சுகாத்து சத்ததை தவிர வேற வந்ததுன்னா நிறுத்திடு” என்றவன் தன் முறை செய்ய சென்றான்.
குமரன்,  முத்தழகி,  ராஜமாணிக்கம் மூவருக்கும் நடப்பதை அமைதியாக பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை.
இவர்களின் முறைகள் முடிந்து அனைவரும் வெளியே வர “ஒரு நிமிசம்” என்றார் குமரன்.
“அருள்” அனைவரையும் விட்டு தான் மட்டும் சென்று அவர் முன் நின்றான்.
“உங்க அக்கவையும் உன்னோட கூட்டிட்டு போ?? என்று செல்வியை பிடித்து இழுத்து விட, இதை எதிர்பாராதவர் அலமலந்து கீழே விழுந்தார்”
“அக்கா… என்றவன் அவரை வேகமாக தூக்கிவிட, இவ உங்க பொண்டாட்டி அவள வச்சுகிறதும் விடுறதும் உங்க வீட்டு விசயம், அதை எதுக்கு எங்கிட்ட சொல்லுறீங்க??” என்றவன் கைகளை தட்டிவிட்டான்.
“உனக்காக தான அவ என்ன அவமானம் படுத்துனா??”
“அது எங்க உரிமை. அத உங்களுக்கு நியாபகம் படுத்துனா அது அவமானம் இல்லை. ஆனா நீங்க அவள பதிலுக்கு இத்தனை பேர் முன்ன அடிச்சீங்க… ஒரு நல்ல ஆம்பளை பண்ணுற வேலையா அது??” என்றதும்
“யார பாத்துடா ஆம்பளையான்னு கேட்ட??” என்ற குமரன், அருளை அவமானப்படுத்துவதாக நினைத்து முத்தழகி மகன் குருவுக்கும், காயத்ரிக்கும் பரிசம் போட சொன்னார் அனைவரின் முன்னும்.
பேச்சி, ரங்கன், கரிகாலன்  மூவரும் குமரனையும், அருளையும் மாறி மாறி பார்க்க, செல்வி தான் குமரன் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “அவ உங்க பொண்ணு மட்டும் இல்லை… என்னோட பொண்ணும் தான்” என்றது எல்லாம் குமரன் காதில் விழவே இல்லை. அவருக்கு தேவை “அருளின் முன் தான் செல்விக்கு முக்கியம் என்பதை காட்ட வேண்டும் என்பதே.”
“அவருக்கு அருள் தனக்கு மகனுக்கு நிகர் என்பது புரியவே இல்லை. அவனை எதிரியாக பார்த்து பழகி கொண்டவர், அவனை செல்வியை விட்டு விலக்க இதை பயன் படுத்திக்கொண்டார். ஆனால் அதுவே அவனுக்கும் தன் மகளுக்குமான பந்தத்தை உறுதி செய்தது என்பது தெரியவில்லை”
அருள் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, பரிச தட்டினை எடுத்து வந்தார் முத்தழகி.
“அக்கா, மாமா என குமரன் அழைக்க, ராஜமாணிக்கமும், முத்தழகியும் வந்து நின்றனர். இந்தாங்க என் பொண்ணு காயத்ரியை… உங்க வீட்டு மருமகளா கொடுக்க எனக்கு சம்மதம்” என்று தட்டினை  நீட்டினார்.
“எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்ச்சி தனக்கு சாதகமாக,  சொத்து முழுதாக தன் வசம் வரும் சந்தர்ப்பம் என நினைத்தவர் பரிச தட்டினை வாயெல்லாம் பல்லாக வாங்கி கொண்டார் ராஜமாணிக்கம்”
அக்கா.. “மாமியார் ஆகிட்ட வாழ்த்துக்கள்” என்று அருள் நக்கலாக குமரனை பார்தவன், குருவின் அருகில் சென்றான்.
குமரன் வேகமாக குருவின் கைகளை பிடித்து இழுக்க, “அட விடு மாமா, உன் மாப்பிள்ளை என்ன கன்னி பொண்ணா?? கைய பிடிச்சு இழுக்க!!” என்றவன் குருவின் தோள்களில் கை போட்டு தன்னுடன் இழுத்தான்.
“டேய் தம்பி… உன்னைய நம்பிதான் என் பொண்டாட்டிய விட்டுட்டு போறேன். அண்ணா ஊருக்கு போயிட்டு வந்ததும் எப்படி கொடுத்துட்டு போனேனோ, அதே போல அண்ணிய என்கிட்ட கொண்டுவந்து குடுக்கனும், என்ன சரியா!!?” என்று அவனை தட்டினான்
ஆனால் அவனோ “எனக்கு பரிசம் போட்டா, இவருக்கு எப்படி பொண்டாட்டி ஆவா??” என்ற சந்தேகத்தில் நின்று இருந்தான்.
செல்வியின் ஊரில் இருந்து கிளம்பி அரை மணி நேரம் இருக்கும், கார் நெடுஞ்சாலையில் மித வேகத்தில் சென்று கொண்டு இருக்க அனைவரிடமும் அமைதியே.
“என்னப்பா, நான் செஞ்சது தப்பா??” என்று அந்த அமைதியை கலைத்தான் அருள். “ரொம்ப பெருமையா இருக்கு அருள், என் பையன் வளந்துட்டான்… என்ன, உன் மாமா கிட்ட கொஞ்சம் நிதானமா பேசி இருக்கலாம்” என்று அவன் முகம் பார்க்க சரியாக ரங்கனின் ஃபோன் ஒலித்தது.
“பதட்டமானவர், அம்மாடி செல்வி… என்னடா… திரும்ப ஏதாவது பிரச்சனையா?? என்றார் வேகமாக. அதெல்லாம் இல்லப்பா.. இப்ப எங்க இருக்கீங்க??” என்றார் செல்வி.
“இங்க தான் மா வாடிபட்டிகிட்ட” என்றார் ரங்கன்.
அப்படியே திரும்பி வாங்க நம்ம  “ஐய்யனார் கோயிலுக்கு”  என்று ஃபோனை கட் செய்து விட்டார்.
“என்னங்க??” என்றார் பேச்சி
“தெரியலை பேச்சி?? ஐயா அருளு… வண்டிய நம்ம ஐயனார் கோயிலுக்கு திருப்பு என்றார் ரங்கன்.
கோவில் வாசலில் செல்வி நின்று இருக்க, பதட்டமாக வந்தார் பேச்சி. “என்னம்மா என்ன ஆச்சு?? மாப்பிள்ளை ஏதச்சும் சொன்னாரா?? நீ இங்க நிக்குற??”
“அம்மா ஒன்னும் இல்லை.. நா நல்லா தான் இருக்குறேன்… உன் மாப்பிள்ளை கோபம் எல்லாம் ரெண்டு நாள் தான் இருக்கும், இப்ப அவங்க அக்க வந்த சந்தோசம் அது தான் கொஞ்சம் அப்படி” என்று கணவனுக்கு சிந்து பாட, வாயிக்குள் சிரித்து கொண்டான் அருள்
“அக்கா எப்படி  மாமாக்கு ஜல்ரா அடிக்குது!! பாரு காலா!!” என்று தம்பியை சேர்த்து கொண்டான்.
“பேச்சி அவளின் பேச்சை நம்பாமல், செல்வியை திரும்பி தடவி பார்க்க, அம்மா என்றார் சத்தமாக, இப்போது வாய்விட்டே சிரித்து விட்டனர் மூன்று பேரும்”
“சொல்லுமா… எதுக்கு எங்கள திரும்ப வரச்சொன்ன??” என்றார் ரங்கன் சிரிப்பை நிறுத்தி.
“இருங்க வர்றேன்… என்றவர், சிறிது தள்ளி நிறுத்தி இருந்த காரில் இருந்து அழைத்து வந்தார் காயத்ரியை” பேச்சியும் ரங்கனும் திகைத்து போய் பார்த்து இருந்தனர்.
“ஏண்டி கூறு இருக்க உனக்கு?? சமஞ்சி பச்சை உடம்பா இருக்குற புள்ளைய அர்த்த ராத்திரியில கூட்டிட்டு வந்து இருக்குறயே??” என்று பேச்சி செல்வியை அடிக்க, அருள் தான் தாங்கி கொண்டான் தன் அக்காளை.
“கரிகாலன் காயத்ரிடம் போக மாமனின் தோளில் ஓய்யாரமாய் சாய்ந்து கொண்டாள் அவள்”
“பேச்சி அடித்தில் தலை முடி எல்லாம் கலைந்து இருக்க, அதை அள்ளி முடிந்தவர்.. ஐயா, ஆத்தா இந்தாங்க உங்க வீட்டு பொண்ணு என்று காயத்ரியை அருளிடம் விட” விக்கித்து நின்றனர் அனைவரும்.
“அக்கா… என்ன இது?? உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா?? இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி பண்ணுற??” என்றான் முதல் முறையாக தன் அக்காவை எதிர்த்து அருள்.
“டேய்… உனக்கு தெரியாது அந்த ராஜமாணிக்கதை பத்தி… அந்த ஆளு எதுக்கு இத்தனை வருசம் சென்டு இங்க வந்திருக்கான் தெரியுமா?? அத்தனையும் இந்த சொத்துக்காக தான்”
“அது போனா போயிட்டு போகுது.. ஆனா இவ.. எனக்கு என் பொண்ணு வேணும்… அந்த ஆளு உங்க மாமா மனச கலைச்சு வைச்சு இருக்கான். இந்த அரை மணி நேரத்திலேயே இவள வேற ஊருக்கு அனுப்பற அளவுக்கு பேச்சு வந்துடுச்சு”
“உங்க மாமா… உன் மேல இருக்குற கோவத்துல, அதுக்கும் சம்மதம் சொல்லிட்டாரு” இப்ப நான் என்ன பண்ண?? என்றார் செல்வி.
“அவரு சொன்னா… ஆச்சா… நான் விட்டுவேன்னு நீ நினைக்குறயா??”
செல்வி அவனை முறைத்தவர் “நீ விடு இல்ல வைச்சுக்கோ… அத உன் பொண்டாட்டி ஆக்கிட்டு பேசு”
“அக்கா……… என்று அண்ணன் தம்பி இருவரும் கத்த, என்னங்கடா?? கத்துறீங்க” என்றார் அவர்களை விட பெரிய சத்தமாய்.
“இப்ப என்ன பண்ணனும் நான்??” என்று அருள் கேட்க, “நீ இப்பவே அவ கழுத்துல தாலி கட்டு” என்றதும் அசையும் பொருள் அனைத்தும் அப்படியே நின்றது…….

Advertisement