Advertisement

                     ஓம் நம சிவாயா
அத்தியாயம் 2
“அருள் மொழி வர்மன்” ஆறடி உயரம், உடலோ உடற்பயிற்ச்சியின் உபயத்தால் முறுக்கேறி இருந்தது… அழகான திராவிட நிறம், அவனின் நிறமே அவனை இன்னும் அழகாக காட்டியது…  நல்ல களையான முகம் ஆனால், ஏதோ ஒன்று இப்போது குறைந்து இருந்தது.  
அது, “அவனின் சிரிப்பு” அவனையே பார்த்து இருந்தவள் ‘இந்த கருவாயன் இவ்வளவு அழகா!!!’ என்று தான் பார்த்து இருந்தாள் காயத்ரி.
 
‘நீ…. இவன கருவாயன்னு சொன்னதை மட்டும் செல்வி கேட்டு இருக்கனும்…. இங்கயோ உன்னைய பொலி போட்டு இருக்கும். என்ற அவளின் மனசாட்சியை,  அவன் என்னைய விட நிறம் கம்மிதான?? அப்ப நான் சொன்னதுல என்ன தப்பு?? நீ மூடு…’ என்று அதனை அடக்கினாள்.
“என்னடி, ஒரு அறை போதுமா?? இல்ல இன்னும் ஹுஹூம்…. இந்த ஜென்மத்துக்கு இது போதும்,  என்ன போதும் தான??” என்றதும் அவளின் தலை தன்னால் சரியென்றது. 
“சித்தா… என்ற ரேஸ்மாவின் சத்ததில், இதோ வர்றேன் பட்டு” என்றவன் குனிந்து கட்டிலில் இருந்தவளை இடையோடு சேர்த்து இழுத்து எழுப்பியவன்… தன்னுடன் சேர்த்து அணைக்க, திமிறினாள் காயத்ரி.
“திமிறியவளை கண்டுகொள்ளாதவன் அறை விழுந்து சிவந்து இருந்த கன்னத்தை மெல்ல கைகளால் வருட, அவனையே பார்த்திருந்தாள் காயத்ரி.”
அவளின் மன ஒட்டத்தை கண்களில் படித்தவன், “என்னைய சைட் அடிச்சது போதும்” என்றதிற்கு அவளின் மனமோ ‘ஆமா இவரை சைட் அடிச்சிட்டாலும்!! என்று இழுக்க இன்னொன்றோ, அடியேய் பொய் சொல்லாத… நீ ஜெள்ளு விடுறத நானோ பாத்து இருக்குறேன்’ என அவளுக்கு எதிராக வாதம் புரிய அவளை கலைத்தான் அருள்.
“உனக்கு  ஒரு பிரச்சனைன்னா என் நினைப்பு தான உனக்கு  வந்து இருக்கனும்?? அது வராதது முதல் தப்பு…  அடுத்து என்னைய விட்டு போக நினைச்சு இங்க வந்தது… இனிமே நீ பண்ண போறதுக்கும் சேத்து தான் இது” என்று  அவன் அடித்த தடத்தை காட்டினான்.
“போலீஸ் அடி”  உடம்புல வழு இருக்குறவனே தாங்க மாட்டான்…  பாரு எப்படி  காந்தி இருக்கு… என்னும் போது இத்தனை நேரம் தன்னை மிரட்டியவன் இவனா?? என்ற சந்தேகம் தான் அவளுக்கு. அவன் குரலிலும் கைகளிலும் அத்தனை மென்மை.
“போ.. போய் முகம் கழுவிட்டு வா, நேரம் ஆச்சு சாப்பிடலாம்.. என்றவன் அவளை அவன் பிடியில் இருந்து தள்ளி நிறுத்த, அப்போதுதான் அவளுக்கு தோன்றியது ‘எந்த உரிமையில நம்மள அடிச்சான்??’ நினைத்தவள் அவனை “ஏய்” என்று அழைக்க அவன் பார்த்த பார்வையில் வாயை கப்பென மூடிக்கொண்டாள்”
அருள் வெளியே வர, உள்ளே நுழைந்தார் அருணாச்சலம். “வாப்பா அருள் எப்படி இருக்குற??”
“நல்லா இருக்குறேன் மாமா”  இங்க எப்படி போகுது?? ஏதாவது வேணுன்னா சொல்லுங்க மாமா!!
“அதெல்லாம் நல்லா போகுது… இதோ இந்த குட்டிய சமாளிக்கதான் முடியலை” என்றார் ரேஸ்மாவை காட்டி.
“அருணாச்சலம்… அருளின் அம்மா பேச்சியின் ஒன்று விட்ட அண்ணன் மகன். அவரின் பிறந்த வீட்டு சொந்தம் என்று இருக்கும் ஒரே உறவு.  அருணாச்சலத்தின் அப்பா அம்மா மறைவுக்கு பிறகு தான் வளர்த்து கொள்வதாக பேச்சி சொன்னாலும், சொந்த தங்கை மகனை விட்டுத்தறாமல் பெரியநாயகம் அழைத்துக்கொண்டார்”   
“வருடம் தவறாமல் அண்ணன் மகனுக்கு வேண்டியதை செய்வார் பேச்சி. அதே போல் பிறந்த வீட்டு சீரும் அருணாச்சலம் வேலைக்கு வந்த பின் அவரின் வீடு தேடி செல்லும். ஏன்?? என்று பேச்சி கேட்டாலும்,  என் அத்தை நான் செய்யுறேன்” என்று விடுவார் அருணாச்சலம்.
“பேச்சிக்கு அதில் பெருமையே… எந்த வயதிலும் பிறந்த வீட்டு சீர் பெண்களுக்கு பிடித்தமானது தானே” 
“அருணாச்சலம் அதிகம் ஊர் பக்கம் வருவதில்லை, என்பதால் இப்படி ஒரு உறவு இருப்பதே அவர்கள் உறவில்  அதிகம் பேருக்கு தெரியாது.”
“அருளுக்கு ஐபிஎஸ் ஆசையை வித்திட்டவரும் அவரே” ஆம்… அவன் அருள் மொழி வர்மன் ஐபிஎஸ். நல்லது செய்து பதவி உயர்வு வாங்கும் அதிகரிகளுக்கு மத்தியில், நல்லது செய்து சஸ்பென்சன் வாங்குவதில் கில்லாடி இவன்.
“ஆமாம் இப்போதும் சஸ்பென்சனில் தான் வந்துள்ளான்” இவன் துறையில் அனைவருக்கும் சிம்ம சொப்பனம் இவன்.  இவனிடம் வரும் கேஸின் முடிவில் தவறு  செய்தவனும் இருக்க மாட்டான்… அதனுடன் இவன் சஸ்பென்சன் ஆடரும் அவனின் முன் இருக்கும்.
 
“அருள்… எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா??” டிஐஜி சோமசுந்தரம்
“இது தான் நான். இதை என்னால மாத்திக்க முடியாது”  என்றான் தோள் குழுக்கி.
“டேய்…. இது உன்னோட எதிர்காலத்தை பாதிக்கும். இதுனால உன் பிரமோசன் பாதிக்குதுன்னு தெரிஞ்சும் பண்ணற நீ. உன்னை என்ன பண்ண??”
“நீங்க எதுவும் பண்ண வேண்டாம்!! இப்ப ஒரு ஆறு மாசம் தாங்குற மாதிரி ஆடர் ரெடி பண்ணுங்க!! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”
“டேய்.. என்ன விளையாடுறயா…  பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு… இப்ப எதுக்கு ஆறு மாசம்?? அது தான் அவனை எழுந்துக்க முடியாம பண்ணிட்டையில… இன்னும் என்ன??”
“அது அவனுக்கு இல்லை.. எனக்கு”
“உனக்கா, எதுக்கு??”” 
“ம்ம்… உங்களுக்கு விளக்கமா சொன்னாதான் புரியுமா?? நீங்க வருசத்துக்கு ஒரு தடவை பொண்டாட்டி  கூட ஊர் சுத்த போறீங்கள…. நான் மட்டும் இன்னும் கன்னி பையனா இருக்கனுமா??” அதுக்கு தான்… என்றவனை வாயில் கை வைத்து பாத்திருந்தார் அவர்.
நான் “டிஐஜி” டா
“அதுக்கு தகுந்த கேள்வி கேட்டு இருக்கனும்… இல்லையின்னா, இப்படி தான்  பதில்  வரும்.”  
“சரி… எப்ப என் பொண்ண கூட்டிட்டு வர போற??” 
“அது பொண்ணு இல்ல… ரத்தகாட்டேரி!!!   அதுக்கு படையல் போட்டு அழைச்சுக்கிட்டு வரனும். இப்ப கிளம்புனாதான் சரியா இருக்கும் நீங்க ஆடரை அனுப்பி வைங்க. என்றவன் சென்றுவிட்டான் கேட்டு இருந்த சோமசுந்தரத்திற்க்கு தான்… தான் அவனின் உயர் அதிகாரியா?? இல்லை அவன் தனக்கு மேலா??” என்ற சந்தேகம் வந்தது. 
“ஆமாம்…. அவன் அப்படி தான். அருளுக்கு மேல், கீழ் என்று இல்லை தன்னுடன் பேசும் யாரையும் நிமிடத்தில் கவர்ந்து விடுவான்”
சாப்பாட்டினை பிசைந்த படி இருந்தவனை, “என்னப்பா யோசனை??” என்றார் அருணாச்சலம். உங்க பொண்ணை எப்படி ஊருக்கு அழைச்சு கிட்டு போக?? ரொம்ப தாங்கனுன்னு தோனுது?? என்றான்.
“சின்ன பொண்ணுதான… ஏதோ கோபம்  அருள். சொன்னா புரிஞ்சுப்பா” என்று வந்தார் பூரணி. 
“அதே தான் நானும் சொன்னேன் தாங்கனும்னு” 
“உன்னைய பேச்சுல ஜெயிக்க முடியுமா!!” என்றார் அருணாச்சலம். 
“பாருங்க அத்தை!!! நான் உங்க கிட்ட தான பேசிகிட்டு இருந்தேன்… இவரு குறுக்க வர்றாரு பொண்டாட்டிக்கு அவ்வளவு சப்போர்ட்”
“டேய்… நான் உனக்கு சாதகமா தான பேசுனேன்!! என்னைய எதுக்குட கோத்து விடுற!? என்றார் பூரணியை பயப்பார்வை பார்த்து.
“அது தான?? அருள் என்கிட்டதான பேசிச்சு… நீங்க ஏன் வர்றீங்க??” என்று சண்டையை ஆரம்பித்தார் பூரணி
“இவங்க சண்டை” முடியாம பாத்துக்கட குட்டி. சித்தா இப்ப வந்துடுறேன்… என்று ரேஸ்மா காதில் சொன்னவன் நகர்ந்து விட்டான் அந்த இடம் விட்டு.
“காயத்ரியின் அறைக்கு சென்றவன் பார்க்க, அங்கு அவள் இல்லை. குளியல் அறையில் இருந்து சத்தம் வர கதவினை தாழ் இட்டவன் சென்று படுத்துக்கொண்டான் கட்டிலில்”
குளியல் அறையில் இருந்து வந்தவள் பார்க்க கைகளை தலைக்கு கொடுத்து படுத்து இருந்தான் அருள். 
ஏய்… என அழைக்க வாய் திறந்தவள், அவனின் அடி நினைவில் வர “இது என் கட்டில், நீங்க ஏன் படுத்து இருக்கீங்க??” என்று விட்டாள் அவனிடம். 
ஓஓ… “சாரி” இது உன் கட்டிலா?? என்றவன் எழுந்து நின்று மீசை முறுக்க அதன் அழகில் சொக்கி தான் போனாள் காயத்ரி.
“அவள் நின்ற அந்த சில நொடிகளே போதுமானதாக இருந்தது அவனுக்கு அவளை கட்டிலில் தள்ள”
“தள்ளி விட்டவள் மேல் இவன் விழ போக, அதற்கு முன் தன் மீது அவன் விழாமல் தடுத்து இருந்தாள் காயத்ரி.”
“பொண்ணு மேல வந்து இப்படி விழுறீங்களே… உங்களுக்கு கொஞ்சமும் கூச்சமா இல்லையா??” என்றாள் கோபத்தில் பல்லை கடித்து.
“ஏண்டி?? பெட்டுல படுத்தா என்னதுன்னு சொல்லுற!! சரி அது உyனக்கு சொந்தம்… ஆனா நீ எனக்கு சொந்தம்.. அது தான் உன்மேல படுக்க வந்தேன்?? நீ என்னன்ன கூச்சமா இல்லையான்னு கேக்குற?? பொண்டாட்டி மேல படுத்தா கூச்சமாவா இருக்கும்?? என்று அவன் பார்க்க, அவனின் வார்த்தையில் கோபத்தையும் மீறி அவளின் கன்னம் சிவந்தது” 
“அவனை கீழே தள்ளியவள் எழுந்து போக… அவளை மீண்டும் இழுத்து படுக்கையில் விட்டவன் அவள் நகரா வண்ணம் அணையிட்டான்” இன்னும் ஒரு மணி நேரத்துல ஃபிளைட் சீக்கிரம் கிளம்பு என்றவன் வெளியே சென்று விட்டான்.
“அருள், ஊருக்கு போகிறேன் என்றதில் கோபமாக அமர்ந்து இருந்தாள் ரேஸ்மா”
“பட்டும்மா.. சித்தாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, போய் முடிச்சுட்டு வந்து உன்னைய அப்பத்தாக்கிட்ட அழைச்சுட்டு போவேனாம். பட்டும்மா இனி அப்பத்தா கூட இருப்பாங்களாம்” என்றும் கூட  அவளின் கோபம் குறைய வில்லை. 
“அவளை மடியில் அமர்த்தியவன், பட்டு இப்படி கோபமா இருந்த அப்பத்தா சித்தாவ வீட்டுக்குள்ள விடமாட்டாங்கடா!! என்றதும் இல்ல சித்தா.. நான் உங்க மேல கோபமா இல்லை.. அப்பத்தா கிட்ட சொல்லி உங்கள வீட்டுக்குள்ள விட சொல்லுறேன்” என்றவளை அள்ளி எடுத்துக்கொண்டான் அருள்.  
“இவர்களின் பேச்சை கேட்டு இருந்த அருணாச்சலத்திற்கும், பூரணிக்கும்  தான் மனம் கணத்து விட்டது.” 
“பட்டு நம்மள விட்டு போயிடுவாளா??” என்ற பூரணியின் கேள்விக்கு ஆமாம்… என்று தலையை ஆட்டியவர், அவ கூடவே நாமளும் போறோம், என்றதும் அத்தனை மகிழ்ச்சி பூரணியின் முகத்தில். 
“அருணாச்சலத்திற்கு நன்கு தெரியும் பூரணியை பற்றி. மகன்களை விட்டு இருந்தவறாள் ரேஸ்மாவை விட்டு இருக்க முடியாது” என்று 
“அருள் ரேஸ்மாவை சமாளித்து உள்ளே போக, காயத்ரி இன்னும் அப்படியே அமர்ந்து இருந்தால் கட்டிலில். என்ன பொண்டாட்டி?? இன்னும் ரெடியாகலையா, இல்லை!! என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்க்க, இந்த டிரஸ்சுல நச்சுனுதான் இருக்க. இப்படியே கூட்டிட்டு போக நான் ரெடி… ஆனா பாரு!! பொண்டாட்டி பாக்கிறவன் என்னையவிட ரசனையா உன்ன பாத்த எனக்கு தாங்கது??” 
“அவன் பேச…. பேச காயத்ரிக்கு கோபம் உச்சிக்கு ஏற, யாருடா பொண்டாட்டி?? அதை நடு ராத்திரியில தாலி கட்டி விட்டுட்டு போன நீ சொல்ல கூடாது!! என்றதும் அந்தனை நேரம் இருந்த இலகு தன்மை காணாமல் போய் இருந்தது அருளின் முகத்தில்”
“அவர்களின் திருமணமே அவளுக்காக, அவனின் விருப்பம் இன்றி நடந்தது என்பதை மறந்தே விட்டாள் காயத்ரி”
“நடுராத்தியே… பகலோ.. கட்டுன தாலி கட்டுனது தான். பொண்ண கை நீட்டி அடிக்குறவன் ஆம்பளையே இல்லை… உன்னால நான் அதையும் செஞ்சுட்டேன். இப்ப நா இருக்குற கோபத்துல… என்ன வேணுனாலும் செய்வேன்…. அதனால உனக்கு அஞ்சு நிமிசம் தர்றேன். அதுகுள்ள ரெடி ஆகுறது உனக்கு நல்லது” என்றவன் போய் படுத்து கண்களை மூடிக்கொண்டான். 
“வந்த கேபத்தை அவனிடம் காட்ட முடியாது அல்லவா?! அதனால் அவளின் கோபத்திற்கு பலியாகியது பக்கத்தில் இருந்த பூச்சாடி”
அதை தள்ளியவள் வேகமாக சென்று புகுந்தாள் குளியல் அறையில் உடை மாற்ற.
“உடை மாற்றி வந்தவளை பூரணி சாப்பிட சொல்ல, அப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது அவள் இருக்கும் இடம். ‘இவன பாத்தாலே நான் எல்லாத்தையும் மறந்துடுறேன்’ பூரணியை சங்கடமாக பார்த்தவள் பூரணிம்மா சாரி” என்றாள்.
பூரணி பேசும் முன் அருள் வந்தவன் “அத்தை, மாமா ரெண்டு பேரும் ஆசிர்வாதம் பண்ணுங்க” என காயத்ரியை  வா.. வா.. என இழுத்து காலில் விழ வைத்தான். அவன் அத்தை, மாமா என்று அழைத்ததில் அதிர்ச்சியானவள் அதிர்ச்சி தெளியும் அவளை முன் காரில் ஏற்றி இருந்தான் அருள்.
“டேய்… ஏண்டா??” என்ற அருணாச்சலத்தின் கேள்விக்கு, அவ தெளிஞ்ச இன்னிக்கு பூர பஞ்சாயத்து நடக்கும் பரவாயில்லையா?? என்ற அவனின் பதிலில் சில பல பத்திரங்களுடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.
“புனே ஏர்போர்ட், அருளின் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள் காயத்ரி. அவள் ஏதேனும் கேட்பாள் என்று அருள் பார்த்து இருக்க, அவளே ‘ஏன் இவரு அவங்களை அத்தை, மாமா சொன்னாரு? அவங்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?? ஏன் என்னைய தெரிஞ்ச மாதிரி காட்டிக்களை?? ரேஸ்மா யாரு?? அவ ஏன் இவரை சித்தப்பான்னு கூப்புடுறா??’ என்ற யோசனையில் இருந்தாள்.
“சூடானா சமோசவும், டீயும் அவள் முன் நீட்ட பட, பார்த்தாள் அவனை. ரொம்ப யோசிச்சா தலைவலி வரும், வலி வந்த நீ தாங்க மாட்ட” இதை சாப்பிடு என்றவன், அவளுக்கு சமோசாவை ஊட்டபோக வெடுக்கென அதை பிடுங்கியவள் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடும் வேகமே சொன்னது அவளின் பசியை. 
கொண்டு வந்த பையில் இருந்து சிறு டப்பாவை எடுத்தவன் அதை அவள் முன் நீட்ட “அதை பார்த்த படி இருந்தாள்”
“நீ பண்ணுன ரசமலாய்… இன்னும் டேஸ்ட் பண்ணலைதான!! என்று அவளுக்கு ஸ்பூனில் எடுத்து கொடுக்க, இவ்வளவு அக்கறை இத்தனை நாள் ஏன் இல்லை வர்மா?? என்ற கேள்வியில் அவளையே நிலை மறந்து பார்த்து இருந்தான் அருள்.
பதில் சொல்லாமல் தன்னையே பார்த்து இருந்தவனை சளைக்காமல் எதிர் பார்வை பார்த்து இருந்தாள் அவள்.
“அவன் இங்கு வந்த இந்த நான்கு மணி நேரத்தில், ஒரு முறை கூட அவள் அவனை மாமா என்றோ பெயர் சொல்லியே கூப்பிட வில்லை. இபோதும் அவள் உறைத்த அவள் வார்த்தை அவளின் புத்திக்கு எட்டவில்லை.”
“அவள் அழைத்த வர்மா என்ற பெயர் அவளுக்கு மட்டுமே.. அதை சொல்லி யார் கூப்பிடவும் அனுமதிக்க மாட்டான் அருள். அவன் அலுவலகத்தில் ஏ ஆர்… நண்பர்களுக்கும் வீட்டினர்க்கும் அருள்”
“காயத்ரி அருள் மொழி வர்மன்” என்று அவள் சொல்லும் அழகில் சொக்கி போவான் அருள். 
“பார்வை பறிமாற்றம் தொடர, அவர்களின் மோன நிலையை கலைத்து அவர்களுக்கான இறுதி அறிவிப்பு.
எழுந்தவன் முன்னால் போக திரும்பி பார்த்தான் அருள். அவள் இடம் விட்டு நகராமல் இருக்க இயல்பு நிலைக்கு திரும்பினான் அருள்.
“அவளிடம் வந்தவன் அது ஒன்னும் இல்ல கத்தரி, நீ முதல் முதலா பண்ணுனது.. நான் சாப்பிட்டு ஏதாவது ஆகிட்டா?? அதுக்குதான் உனக்கு குடுத்தேன்” என்றான்
“அவன் கத்தரி என்று என்று அழைத்தில் எரிச்சல் ஆனவள்… யாரடா கத்திரி சொன்ன??” என மரியாதை காற்றில் பறக்க அவனை துரத்த ஆரம்பித்தாள்.
“அவள் இயல்புக்கு திரும்பியதை உணர்ந்தவன் அவளுக்கு சிக்காமல் ஓட ஆரம்பித்தான்……” 
 

Advertisement