Advertisement

“வசு இது கோபடுற நேரம் இல்லை. இந்நேரம் அய்யாவுக்கு விசயம் தெரிஞ்சு இருக்கும். அவன் இங்க வந்தா என்ன வேணுனாலும் நடக்கலாம். அக்கா எதுக்காக சண்முகத்துகிட்ட அத்தனையும் மறைச்சாங்களோ அதை எல்லாம் நாம அப்படியே ஏத்துகிடனும் புரிஞ்சுதா” என்றதும் மனம் தாங்கமல் தான் “சரி” என்றாள் வசுமதி. 
              
அருள், வசுமதி சண்முகத்தை மட்டும் நினைத்து இருந்தவன் காயத்ரி என்பவளையே மறந்து இருந்தான். ரேஸ்மா வந்து “சித்தா காயத்ரிம்மா எங்க??” என்றதும் தான் அவனுக்கு அவள் நினையே வந்தது.
“தூங்கி இருப்பா உங்க கும்பகர்ணி சித்தி போ போய் எழுப்பி கூட்டிட்டுவா” என்று ராகுல் ரேஸ்மா இருவரையும் அனுப்பி வைத்தான்.
காயத்ரியை பிள்ளைகள் அழைத்து வர அவள் முகத்தில் இருந்து எதையும் படிக்க முடியவில்லை அருளால் சாதாரணமாக வந்து அமர்ந்தவள் அனைவரிடமும் பேசி சிரிக்க அருளும் விட்டு விட்டான் அவளிடம் எதுவும் கேட்காமல்.
சண்முகம் அப்போதே பிள்ளைகளை அழைத்துகொண்டு வெளியே கிளம்ப சொல்ல காயத்ரி மறுத்து விட்டாள். இரண்டு நாட்கள் மலையில் சுற்றியதில் உடல் அசதியாக இருப்பதால் அவர்களை மட்டும் அனுப்பி விட்டாள். 
பேச்சியுடன் காயத்ரி இருக்க வந்தார் அய்யாவு உடன் தங்கம். “வாங்க சித்தப்பா சித்தி” என காயத்ரி அழைக்க “எங்க அவ” என்று கத்தினார் அய்யாவு.
காயத்ரி அவரையே பார்த்து இருக்க  தங்கம் தான் கெஞ்சி கொண்டு இருந்தார் அவரிடம். “இப்ப தான் எங்க அண்ணன்  இத்தனை நாள் கழிச்சு நிம்மதியா இருக்காரு வந்துடுங்க” என்று.
பேச்சி எதுவும் பேசாமல் அய்யாவு பேசுவதை பார்த்த படி இருக்க “அவ வாசமே இருக்க கூடதுன்னு தான  அவளை தடம் தெரியாம அழிச்சேன்” என்று சொல்ல காயத்ரி விக்கித்து போய்  நின்றாள்.
“என்ன சித்தப்பா சொல்லுறீங்க!!” என்று காயத்ரி கேட்க,  ஜோதி வந்ததில் இருந்து மலைக்கு அவரை கடத்தி போனது வரை அனைத்தையும் சொல்லி முடிக்க இப்படியும் மனிதர்களா??!! என்று தான் அவனை பார்த்து இருந்தாள். 
காயத்ரி நின்றது சில வினாடிகளே  “அப்ப ஜோதி அக்காவை கொன்னது நீங்க தானா??” என்று அழுத்தமாக கேட்க “ஆமா நான் தான் கொன்னேன் அதுக்கு இப்ப என்ன?? உன் புருசன் அவ பொண்ணுன்னு ஒருத்திய கூப்பிட்டு வந்து இருக்கானே அவளையும் விட மாட்டேன். இந்த வீட்டுக்கு என் தங்கை மட்டும் தான் மருமக அவ பெத்த புள்ளை மட்டும் தான் வாரிசு. கண்டவளை எல்லாம் விட்டுவேனா… அவ உயிரோட இருந்தா தான  இன்னிக்கே அவளை முடிச்சுடுறேன்” என்றவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் காயத்ரி.
“அதை சொல்ல நீ யாரு??” என்றாள் காயத்ரி. பார்த்திருந்த பேச்சியும் தங்கமும் வாய் பிளந்து நின்று இருந்தனர் என்றால் அய்யாவு முகம் பேய் அறைந்ததை போல் இருந்தது. 
“என்ன தைரியம் இருந்தா  ஒரு அப்பாவி பொண்ண கொன்னதும் இல்லாம அதை பெருமையா வேற சொல்லுவ நீ… இப்ப குழந்தையையும் கொல்லுவியா நீ… எங்க கை வச்சு பாரு பாப்போம் நீ அவ மேல கை நீட்டுறதுகுள்ள உன் உடம்ப விட்டு உயிர் போயி இருக்கும். இவங்கள போல பாவம் பாப்பேன்னு நினைச்சயா நான்  சொன்னா சொன்னது தான்” என்ற அவளின் பேச்சில் துளியும் மரியாதை இல்லை.
“அதோ பாத்தியா” என்று விட்டத்தின் மூளையில் இருந்த ஒன்றை காட்ட என்ன?? என பார்த்தார் அய்யாவு. “கேமிரா இப்ப நீ செஞ்சது பேசுனது எல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் நீயே கொடுத்துட்ட இனி உன்னைய உள்ள தூக்கி வைக்க வேற சாட்சியே தேவை இல்லை” என்றதும் “என்ன பயம் காட்டுறியா??” என்றார் அய்யாவு.
“உனக்கு பயம்ன்னு ஒன்னு இருந்து இருந்தா இப்படி ஒரு காரியத்தை செய்வியா?? இத்தனை நாள் எதுக்கு உன்னைய விட்டு வச்சிருக்காங்கன்னு நினைச்ச இந்த சாட்சிக்காகதான். அது தான் நீயே இப்ப வாய் விட்டு சொல்லிட்டையே அது போதும். இனி சித்தி வாழ்கை பசங்க வாழ்க்கை பத்தி எல்லாம் கவலை இல்லை.  அவங்கள எப்படி பாத்துக்கனும் அப்படின்னு தெரியும்”
காயத்ரி பேச பேச இத்தனை நேரம் திமிறாக நின்று இருந்த அய்யாவு சற்று ஆடித்தான் போனார்.  தான் செய்த எதற்கும் சாட்சி இல்லை என்று தானே இத்தனை ஆட்டம். தலை சுற்றுவது போல் இருக்க தரையில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார். 
“என்ன அதுகுள்ள உக்காந்துட்டீங்க?? இன்னும் இருக்கு ஜோதி அக்காவ கொன்னது இல்லாம ரேஸ்மாவையும் கொல்லுவீங்களா… நல்லா கடவுளை வேண்டிக்குங்க மாமா உங்களை அரஸ்ட் செஞ்ச பின்னாலும் கூட அவளுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு. ஏன்னா அவ விளையாட்ட கீழ விழுந்தாலும் அதுக்கும் நீங்க தான் தண்டனை அனுபவிக்கனும்” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
தங்கம் அய்யாவுவின் பக்கத்தில் போக பேச்சி தான் சென்றார் காயத்ரியின் அறைக்கு. காயத்ரி கட்டிலில் அமர்ந்து நகத்தை கடித்து கொண்டு இருக்க “அடியே ராசாத்தி” என்று அவளை நெட்டி முறித்தார் “அவர் எப்ப எனக்கு தெரியாம இதை எல்லாம் செஞ்சீங்க?? உனக்கு முன்னாடியே தெரியுமா!!” என்று கேட்க காயத்ரி திருதிருவென முழித்தாள்.
“என்னடி நான் கேக்குறேன் நீ முழிக்குற” என்றார் பேச்சி. காயத்ரி மாடியில் இருந்து எட்டி பார்க்க அய்யாவு அதே நிலையில் தான் அமர்ந்து இருந்தார். தங்கம் அவருடன் இருப்பதை பார்தவள் பேச்சியிடம்… 
“அம்மாச்சி அது கேமிராவே இல்லை” என்றதும் “என்னது!!” என்றார் பேச்சி அதிர்ச்சியாக. “ஆமா சித்தப்பா சொன்னதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி தான் இருந்தாலும் அவரை அடக்க வேற வழி தெரியலை. அது தான் ராகுல் விளையாட அங்க வைச்சு இருந்த பொம்மைய கேமிரான்னு சொன்னேன் அதை அவரும் நம்பிட்டாரு”
“அவரை பிடிக்க நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை. அதனால அவரை அடக்க மட்டும்தான் முடியும். எத்தனை நாள் இவருக்கு பயந்து ஓட முடியும்?? அதுக்கு தான் அப்படி பொய் சொன்னேன்”
“இந்த உண்மை நமக்குள்ள இருக்குற வரைக்கும் அவர் இனி நமக்கு அடிமைதான்” என்று சிரிக்க பேச்சி வாய் பொத்தி சிரித்தார். 
“சரி வாங்க கீழ போகலாம்” என்றவள் கையோடு ஃபோனையும் எடுத்துக்கொண்டாள்.
மேலிருந்து இருவரும் வர தங்கம் பேச்சியின் கால்களை பிடித்து கொண்டார். “பெரியம்மா எப்படியாச்சும் நீங்க தான் அவரை காப்பாத்தனும்… இவரு செஞ்சது தப்பு தான் அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க நான் செய்றேன் இவரை தம்பிகிட்ட பிடிச்சு மட்டும் கொடுக்காதீங்க” என்று.
“ஏண்டி ஒரு பொண்ணனை கொன்ன கொலைகாரனை அப்படியே விடச்சொல்லுறியா??  அப்படி விட்ட நீ தூங்கும் போதும் உன் தலையில கல்ல போட்டு கொல்ல மாட்டானா??” என்றதும் அய்யாவு “அத்தை” என்றவர் அவர் கால்களில் விழுந்தார்.
“நான் செஞ்சது தப்பு தான். என் தங்கச்சி வாழன்னும் அப்படின்னு தான் செஞ்சேனே தவிர என் பொண்டாட்டிய கொல்லுற அளவுக்கு கெட்டவன் இல்லை” என்றதும் சிரித்தாள் காயத்ரி. 
“செஞ்சது கொலை இதுல என்ன கெட்டவன் இல்லை. அப்ப மாக உத்தமரா?? நீங்க அடுத்த பொண்ண கொன்னு அந்த இடத்துல உங்க தங்கச்சிய வாழ வைச்சு என்ன பாத்தீங்க நீங்க… அவங்க சந்தோசமா இருக்காங்கனு தெரியுமா உங்களுக்கு??” என்றதும் அய்யவு தலை குனிந்து கொண்டார்.
தங்கம் காயத்ரியிடம் கெஞ்ச “உங்க போல கொலைகாரனுக்கு கழுத்தை நீட்டினா இப்படி தான் வயசு வித்தியாசம் பாக்காம பொண்ணுங்க அசிங்க படனும் இது தான் ஊருக்குள்ள பெரிய மனுசன் அப்படின்னு சொல்லிட்டு இருக்குற உங்கள மாதிரி ஆளுங்க பொண்டாட்டிக்கு தர்ற மரியாதை” என்றதும்…
தன் உடன் இருப்பவர்கள் இடமே தன் மனைவியை எந்த அளவிற்கு இறக்கி விட்டோம் என்பது புரிய தலை குனிந்து இருந்தார் அய்யாவு. தங்கம் அழுத படி இருக்க “இப்ப எதுக்கு அழுகுற சித்தி” என்றாள் கோபமாக காயத்ரி.
 
                                                                                                             
தங்கம் பேசாமல் இருக்க “இதோ பார் சித்தி இது நமக்குள்ள நடந்த விசயம் இது வெளிய போறதும் அப்படியே இருக்குறதும் இனி சித்தப்பா கையில தான இருக்கு??” 
“மாமா வாழ்க்கையிலோ  இல்லை ரேஸ்மாகிட்டையோ இவர் ஏதாவது செஞ்சா…. அப்பறம் நடக்குற எந்த விசயத்துக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்றதும் தங்கம் கை எடுத்து கும்பிட்டவர் எதுவும் சொல்லாமல் அவரை அழைத்து சென்றார்.
பேச்சி காயத்ரியையே பார்த்து இருக்க “என்ன பேச்சி அப்படி பாக்குற??” என்றாள் காயத்ரி கொஞ்சலாக. “எப்படி அய்யாவுவ சமாளிக்கனு நினைச்சு  பயந்து இருந்தேன் காயத்ரி இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்றிட அவரை கட்டி பிடித்து கொண்டாள் அவள்.
வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப இரவு ஆகி விட்டது. பெரிய மூட்டையுடன் வர பேச்சி தான் கேட்டார் “என்னடா கடையே காலி செஞ்சுட்டீங்களா!!” என்று 
“விட்டா ரெண்டு பேரும் அதை செஞ்சு இருப்பாங்க. கடைகாரன் நல்ல நேரம் டைம் ஆச்சு கடை சாத்தனும் அப்படினுட்டான் நாங்க வந்துட்டோம்” என்றான் கரிகாலன். “போனதுக்கு ஒரு ஜட்டி கூட வாங்கி தரல  இவங்க!!” என்று அவன் குறைபட  “டேய் போட இன்னும் என் பொண்ணுக்கே முடியலை இவனுக்கு ஜட்டி வேணுமா!!” என்றான் சண்முகம். 
“என்னது இன்னுமா??” என்று அனைவரும் தலையில் கை வைத்தனர். பிறகு காலையில் இருந்து பொண்ணுக்கு என்று சொன்னவன் இதுவரை தண்ணீர் கூட குடிக்க விட வில்லை யாரையும். இத்தனை நாள் விட்டதை ஓரே நாளில் கொடுக்க நினைக்க அவனை யாரும் தடுக்க வில்லை.
அருள் வந்ததில் இருந்து காயத்ரி முகத்தையே பார்த்து இருக்க அவளோ அவன் முகம் பார்கவே இல்லை. ‘என்ன ஆச்சு கத்தரிக்கு இப்படி இருக்கா… ரேஸ்மா பத்தி சொல்லையின்னு கோபமா’ என்று நினைத்தவன் “காயத்ரி” என்று அழைக்க
“நீங்க போங்க மாமா நான் அப்பறமா வர்றேன்” என்றவள் மற்றவர்களுடன் அமர்ந்து கொள்ள அருள் அவளை முறைத்தவன் அறைக்கு சென்றான். 
பேசி படி இருந்தவர்களை பேச்சி உறங்க போக சொல்ல ராகுல், ரேஸ்மா, அருணச்சலம், பூரணி, பேச்சி என அனைவரும் கூடத்தில் பாய் விரித்து படுக்க,  வசுமதி அறைக்கு போக அதுவரை இல்லாத தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது சண்முகத்துக்கு.
வசுமதியின் முகம் பார்ப்பதும் யேசிப்பதுமாக இருந்தவனை வசுமதி தான் கலைத்தாள் “என்னங்க என்ன ஆச்சு??” என்று 
வசுவின் கைகளை பிடித்தவன் பேசும் முன்னமே சொல்லி இருந்தாள் “நீங்க மட்டும் ஊருக்கு போங்க நானும் பசங்களும் இங்கயே இருக்குறேம். ரேஸ்மாவ இப்ப நாம கூட்டிட்டு போறது வேணாம். நீங்க எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க” என்று 
சண்முகம் தான் அவளை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தார் “ரேஸ்மா” என்று இழுக்க “அவ நம்ம பொண்ணு அவ இனி நம்ம கூட தான் இருக்கனும்.  நீங்க எதுவும் நினைக்காமா வேகமா எங்க கூட வர்றதுக்கு பாருங்க” என்றவள் அனைவரும் உறங்கிவிட்டார்களா என்று பார்த்து வந்தாள்.
நிமிடத்தில் தன் மனதை புரிந்து கொண்டவளை  என்ன என்று சொல்ல அவளையே கண் இமைக்காமல் பார்த்து இருக்க “ரெம்ப யோசனை வேண்டாம். இத்தனை நாள் நீங்க மனசுக்குள்ள ஜோதி அக்காவை வைச்சு மருகுனது எல்லாம் போதும்” 
“இனி நம்ம எதிர்ல என்ன இருக்கோ அதை நல்ல படியா பார்த்துப்போம்” என்று அவர்களின் குழந்தைகளை காட்ட முதல் முறையாக தன் சரிபாதியாக நினைத்து தலையாட்டினான் அவளின் சொல்லுக்கு.
காயத்ரி அறைக்கு போக அங்கு அருள் இல்லை “எங்க போனாரு??” என்று மாடிக்கு போக மாடி கட்டையில் ஏறி அமர்ந்து இருந்தான் அவன். “என்ன தூங்கலையா??” என்று அவன் எதிரில் சென்று காயத்ரி நிற்க, 
“என்மேல என்ன கோபம்??” என்றான் அருள்.
“எனக்கா… உங்க மேலயா….” என்றாள் புரியாத பாவத்துடன். 
“அப்ப காலைல இருந்து என்கூட பேசவே இல்லை. ரேஸ்மா இங்க வந்தது எனக்கு தெரியாது… அம்மாவோ மாமாவோ என்கிட்ட சொல்லவே இல்லை… எனக்கே அவளை பார்த்து ஆச்சர்யம் தான்!!” என்றவன் அவளை பார்க்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 
பெரு மூச்சு விட்டவன்  “அப்ப ரேஸ்மாவ பத்தி உன்கிட்ட சொல்லாத்து தான் கோவமா??” என்றதுக்கு “இல்லை” என தலை அசைத்தாள். “பின்ன எதுக்குடி காலைல இருந்து என் கூட பேசலை.. நான் கூப்பிட்டதுக்கும் திரும்பிக்கிட்ட” என்றான் கோபமாக. 
அமர்ந்து இருந்தவன் மீது வசமாக சாய்ந்து கொண்டவள் “சில விசயங்களை நானே புரிஞ்சுக்கனும் மாமா. அதுக்கு தான் அமைதியா இருந்தேன். ஒரு தடவை நீங்க சொன்ன வார்த்தையை தப்பா அர்த்தம் செஞ்சு இது வரைக்கும் இருந்தது எல்லாம் போதும்” 
‘அவளை பத்தி சொல்லையின்ன ஏதோ ஒரு காரணம் இருக்கும். இல்லை எனக்கு தெரியாம இருக்குறது நல்லதுன்னு நீங்க நினைச்சு இருக்கலாம். எல்லாருக்கும் தெரிஞ்ச அவளுக்கு பாதுகாப்பு இல்லைன்னு தான நீங்க இத்தனை நாள் மாமா கிட்ட கூட சொல்லாம இருந்து இருக்கீங்க” 
“ஏன் அம்மா, அப்பாவுக்கே கூட இந்த விசயம் தெரியாம இருந்து இருக்குனா அதுக்கு காரணம் அய்யாவு சித்தப்பா…” என்றதும் அருள் அவள் சட்டென அவள் முகம் பார்க்க, இன்று காலை நடந்த அனைத்தையும் சொல்லி விட்டாள் அவனிடம் .
“அவன் வந்தப்ப எதுக்கு எனக்கு ஃபோன் செய்யலை??”
“செஞ்சி இருந்தா என்ன செய்ய முடியும் உங்களால. சாட்சி இல்லை, ஆதாரம் இல்லை வேற காரணம் சொன்னாலும் அது எத்தனை நாளைக்கு??”
“அது முடியாது மாமா. அப்படி செஞ்ச எதுக்காக நீங்க மாமா கிட்ட விசயத்தை மறச்சீங்களோ அதை நீங்களே போட்டு உடைச்சது போல ஆகிடும். அப்பறம் இத்தனை நாள் செஞ்சதுக்கு முடிவு இல்லாம போகும்”
“ரேஸ்மாவையும் கெல்லுவேன்னு சொல்லும் போது அவ்வளவு வெறி அவர் முகத்துல. அவர் சொல்ல சொல்ல என்ன செய்யன்னு எனக்கு புரியலை?? ஆனா விட்ட இன்னும் அவர் சொன்னதை செய்வார்னு அது தான் அவர் பேசினதை ரெக்கார்ட் செஞ்சதா சொல்லிட்டேன்” 
“இது இப்ப வேணுன்னா சரி அவர் அடங்கி இருக்கலாம். ஆனா ரெம்ப நாளைக்கு இதையே வச்சு மிரட்ட முடியாதே?? என்ன பண்ணலாம்?? அது தான் காலையில இருந்தே யோசனை” என்று அவன் முகம் பார்த்தவள் “அவர ஒன்னும் செய்ய முடியாதா மாமா??” என்றாள்.
“இப்போதைக்கு முடியாது?? ஏன்னா அவர் முதலும் கடைசியுமா செஞ்சது அது மட்டும் தான். அவர பத்தி எந்த ரெக்கார்ட்டும் இல்லை… அதுவும் அண்ணிய தூக்குனது மலைல இருக்குற ஆட்களை வச்சு”
“அதுவும் அப்பா பேர சொல்லி. அதனாலேயே அவங்க அவர காட்டி கொடுக்க மாட்டாங்கன்னு அப்படி செஞ்சு இருக்காரு. அதனால தான் ஒன்னும் செய்ய முடியலை”
“இப்ப என்ன மாமா செய்றது??” 
“இப்ப நீ செஞ்சதையே உண்மைன்னு நம்ம வைக்குறது தான் இப்ப நம்மாள செய்ய முடியும். அது பொய்யின்னு உனக்கு எனக்கு அம்மாவுக்கு மட்டும் தான தெரியும். அது நம்மோடயே முடிஞ்சுடும். அப்படியே தெரிஞ்சாலும் நான் இருக்கேன் நீ கவலை படாத” என்றான்.
இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க “என்மேல கோபம் இல்லையே??” என்று அருள் அவள் முகம் பார்க்க “உங்க கிட்ட என் தேடல் முடியும் போது கோபம் வரும்” 
“அப்ப வருமா…” 
“வரும் அப்படின்னு நினைக்குறீங்களா!!” 
“தேடல் முடியும் போது…..” 
“தேடல் முடியுமா ……………………………………………”

Advertisement