Advertisement

“அவளோட மொத்த பாதிப்புக்கும் காரணம்  மாமாவேட பேராசைதான்… அத நீ தெரிஞ்சுகிட்டா மட்டும் தான் அவளை நீ முழுசா ஏத்துக்க முடியும். இப்ப சொல்லு அவளுக்கு அம்மாவா இருப்பியா??” என்றான் அருள்.
“மாமா” என அவன் கைகளை பிடித்து கொண்டு வசுமதி அழ “வசுமதி இங்க பாரு…  இப்ப எதுக்கு இந்த அழுகை, விடு இனி நடக்க வேண்டியதை பாக்கலாம். ஒரு வேளை நீங்க போகும் போது ரேஸ்மாவையும் அழைச்சு கிட்டு போற மாதிரி இருக்கும் எல்லாத்துக்கும் ரெடியா இரு” என்றதும் சம்மதமாய் தலையாட்டினால் வசுமதி.
கரிகாலன் மீனை சுட்டு முடித்தவன் இவர்களை அழைக்க, அருள் காயத்ரியை எழுப்பி வருவதாக உள்ளே போக, வசுமதியின் அருகில் வந்தான் சண்முகம்.  “என்ன வசு முகம் ஒரு மாதிரி இருக்கு??”
“அருளும் நீயும் ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தீங்க. ஏதாவது சொன்னான்னா??” என்று கேட்க அவன் முகத்தை தான் பார்த்து இருந்தாள் வசுமதி. 
“ஏய் என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்… நீ என்னையே பாத்துகிட்டு இருக்க என்ன ஆச்சு??” என்றதும் அவன் மீது சாய்ந்து கொண்டாள் அவள். “என்னம்மா உடம்புக்கு முடியலையா?? நாம வேணுனா கீழ இறங்கிடுவோமா?? அவங்க இருந்துட்டு வரட்டும்” என்றதுக்கும் “வேண்டாம் நாம இருக்கலாம்” என்றாள்.
“சரி இருக்கலாம். ஆனா… முகம் ஏன் இப்படி இருக்குன்னு சொன்னா தான் இங்க இருக்க முடியும். இல்லையின்ன நாம கிளம்பலாம்” என்றதும் “ஏங்க பொண்ணுங்க இப்படி இருந்தா புரியாதா உங்களுக்கு??” என்றதும் தலையில் அடித்தவன் “சரி நீ போ ரெஸ்ட் எடு” என்றான் 
“இல்ல வேணாம் காயத்ரி வந்துடுவா… நீங்க போங்க…” என்று அவனை அனுப்பியவள் ரேஸ்மாவை பற்றி எப்படி சண்முகத்திடம் சொல்ல என மனதிற்குள் ஒத்திகை பார்த்தாள். 
“அக்கா குளிக்கலையா…. எனக்காக வெயிட் செஞ்சிகிட்டா இருந்த…. மாமா இருக்கார்ல அவர் கூட போக வேண்டியது தான” என்று வசுமதியின் பக்கத்தில் அமர்ந்தாள் காயத்ரி. 
“வேணாம் காயத்ரி. தண்ணீ ஜில்லுன்னு இருக்கு”. “பார்டா…. குளிர் பிறக்குற ஊர்ல இருந்துகிட்ட இந்த தண்ணி குளிருதாம்!! வாக்க” என்றவள் அவளுடன் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தாள். 
தண்ணீரின்  குளுமை வசுமதியின் மனதை லேசாக்க  அருள் சொன்ன விசயங்களை மறந்து காயத்ரியுடன் விளையாட ஆரம்பித்தாள். 
ஊர் பெரியவர்கள் அழைத்து சென்றதால் அனைவரும்  மலை கிராமத்திற்கு போக, அங்கு பெரிய விருந்தே  ஏற்பாடு செய்து இருந்தனர் அவர்கள்.  “என்ன பெரியைய்யா இது??” என அருள் கேட்க., 
“தம்பி எங்க எல்லாரையும் காப்பாத்துற சாமி  உங்க குடும்பம். உங்களுக்கு செய்யாமா வேற யாருக்கு செய்ய சொல்லுங்க!! நீங்க வந்த பிறகு தான் எங்க பொண்ணுங்க எல்லாம் படிக்க பயம் இல்லாம மலைய விட்டு இறங்குறாங்க!!”
“இதோ இந்த வருசம் இந்த புள்ள தான் பள்ளிகூடத்துலயே முதல் இடம் வந்து இருக்கு. இதுக்கு முன்ன படிப்பு வாசனை இல்லாம அடுத்தவங்களுக்கு கை கூலியா இருந்த எங்கள மனுசனா மாத்துனது உங்க அப்பா… இப்ப இந்த பசங்கள பாத்துகுறது நீங்க… உங்களுக்கு ஆக்கி போட நாங்க கொடுத்து வைச்சு இருக்கனும்” என பேசிய படியே விருந்து முடிய 
அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் குறித்து கொண்டான் அருள்.
“மாமா செம விருந்து. தாத்தா இதுக்கு தான் அடிக்கடி இங்க வந்தாரா!! வெறும் கீரை தான் அதை எப்படி சமைச்சு இருக்காங்க!! இனிமே மாசத்துக்கு ஒரு தடவை என்னை இங்க அழைச்சு கிட்டு வர்றீங்க என்ன சரியா??” 
“சரி. அப்படியே என் வேலைய விட்டுட்டு நானும் உன் கூட இங்கயே தங்கிடுறேன் இப்படியே கட்டி பிடிச்சு கிட்டு” என அவன் முகவுரை எழுத ஆரம்பிக்க, 
“ஐய்யோ விடுங்க…. கொஞ்ச நேரம் கிடைச்சா போதும் ஆரம்பிச்சிடுவீங்களோ விடுங்க…” 
“ஏண்டி கல்யாணம் செஞ்சும் நீ அங்க… நான் இங்கன்னு இருத்தவளை எப்படியே கஷ்டபட்டு கூட்டிக்கிட்டு வந்து நாளு நாள் தான் ஆகுது. அதுல ரெண்டு நாள் வேஸ்டா போச்சு. என்னமோ  தினமும் கட்டி பிடிச்ச மாதிரி பேசுற போடி..” என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான் கோபமாய்.
“அப்பா… இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம். எத்தனை நாள் ஆச்சு இப்படி  கைய கால நீட்டி தூங்கி??” என்று ஒரு கால்  அருள் மீது இருக்க மற்றெரு கால் தலையணை மீது வைத்து படுத்தாள். முதுகு காட்டி படுத்து இருந்தவனை எட்டி பார்த்து விட்டு.
“ஏண்டி என் உடம்பு   உனக்கு காலுக்கு போடுற தலையணை போல இருக்கா!! எடுடி காலை” 
“கல்யாணம் செஞ்சா புருசன் உடம்பு தான் பொண்டாட்டிக்கு மெத்தை தலையணை!!  இது தெரியாம யாரு உங்கள கல்யாணம் பண்ண சொன்ன!! என்றவளை மேலே இழுத்து போட்டுக்கொண்டவன் “இப்ப பாரு எனக்கு என்ன தெரியும் அப்படின்னு காட்டுறோன்” என்றான் கோபம் மறந்து.
“அப்படியா!!” என காயத்ரி கண் விரித்து பார்க்க,  வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டது. 
“யாருங்க இந்த நேரம்??” என்றவள் எழுந்து போக “இரு காயத்ரி நீ போகதா இங்கயே இரு” என்றவன் பாதுகாப்பிற்காக எப்போதும் வைத்து இருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டான்.
அதை பார்த்தும் காயத்ரி அப்படியே நிற்க “நாம இருக்குறது மலையில ஏதாவது மிருகம் வாசத்துக்கு இப்படி வந்து கதவை பிராண்டும் பயப்படாத உள்ள இரு” என்றவன் கீழே போக  சண்முகமும் வந்து விட்டான்.
“என்ன அருளு இந்த நேரம்” என்றவனை கை அமர்த்தியவன் “ஷ்ஷ்” என்றான் வாயில் கை வைத்து. இருவரும் மெதுவாக ஜன்னல் வழியாக எட்டி பார்க்க வெளியே  கணக்கர் நின்று இருந்தார் வேர்த்து போய்.  அதன் பிறகே கதவினை திறந்தான்.
“என்ன கணக்கரே இந்த நேரம்??” என்றவன் அவர் குடிக்க தண்ணீர் தர “தம்பி நம்ம வீரய்யனை சிறுத்தை அடுச்சுடுச்சு டாக்டர் வேற இல்லை. அது தான் உங்ககிட்ட சொல்லி அம்மாவ அழைச்சுட்டு வர சொன்னாங்க” என்றார்.
“காயத்ரி” என்று சத்தமிட்டவன் சண்முகத்தை வீட்டில் விட்டு விட்டு காயத்ரியை கூட்டிச்சொன்றான். 
காயத்ரி காயத்துக்கு மருந்து போட்டு கட்டியவள்  “காயம் ஆழமா இருக்கு காலையில ஹாஸ்பிட்டல் போய் பாக்கலாம்” என்றாள். 
அருள் கிளம்ப “தம்பி சாமம் தாண்டிடுச்சு இப்ப போக வேண்டாம். விடிஞ்சதும் போகலாம்  இங்கயே இருங்க” என்றதும் அவனுக்கும் அது சரி எனப்பட இருவரும் அங்கயே தங்கினர். 
“ஏன் பெரியைய்யா சிறுத்தை அடிக்கடி வருதா என்ன??”  
“இல்லை தம்பி. ரொம்ப நாளைக்கு பொறவு இப்ப தான் ரெண்டு மாசமா கண்ணுல தட்டுபடுது.  எப்பவும் மலைய விட்டு எறங்கி ஊருக்குள்ள போகும் திரும்ப மலை ஏறிடும். இப்ப வழி மாறி இந்த பக்கம் வந்துடுச்சுனு  தான் நினைக்குறேன்” 
“இன்னும் ரெண்டு நாளைக்குள்ள மேட்டுக்கு ஓட்டனும் இல்லையின்ன ஆபத்து தான்” என்றவர் முகம் யேசனைக்கு சென்றது. 
“என்ன பெரியைய்யா யேசனை??” அருள் 
“இது வரை ஆளுங்கள அடிச்சது இல்லை. இப்ப தான் அடிச்சு இருக்கு. இனி அடிக்க பாக்கும். பகல் பொழுது  பயம் இல்லை தம்பி இந்த ராபொழுதான் என்ன செய்ய தெரியலை??”
“கவலை படாதீங்க நாளைக்கு விடியட்டும் கூண்டு வைக்கலாம்” என அருள் சொல்ல, “கூண்டு வைச்சாலும் அதுக்கு இரை வேணும் தம்பி.  அதோடத எல்லாம் நாம எடுத்துக்கும் போது நம்மளை அது தேடித்தான வரும்!!” 
“அது தான் இப்ப நடந்து இருக்கு. பாக்கலாம் இந்த மலையம்மன் அதுக்கும் வழி செய்வா. நீ போங்க தூங்குங்க..” என்று காயத்ரி முகம் பார்த்தார். அவள் முகம் என்ன சொன்னதோ “இங்க காவலுக்கு ஆள் இருக்கும்மா நீ பயம் இல்லாம தூங்கு”
அவர் அப்படி சொன்னதும் சிரித்தவள் “பெரியைய்யா நான் சிறுத்தைக்கு எல்லாம் பயபட மாட்டேன். இப்ப நினைக்குறது எல்லாம் இங்க எந்த இடத்துல ஹாஸ்பிட்டல் கட்டுனா உங்களுக்கு சவுகரியமா இருக்கும் அப்படின்னு தான்” என்றதும் அவளை ஆச்சரியமாக பார்த்தார் அவர். 
“என்ன பெரியைய்யா அப்படி பாக்குறீங்க” என்றாள் காயத்ரி. 
“இங்க எங்களுக்கு அடிபட்டா அவசரத்துக்கு பாக்க சின்னதா கூட ஆஸ்பத்திரி இல்லை. பிரசவம் நேரம் ரெம்ப சிரமமா இருக்கும். எத்தனையே உயிர் போயி இருக்கு. நாட்டு வைத்தியம் பாத்தலும் உடனே உயிர காப்பாத முடியாது… அப்ப தான் இந்த ஆஸ்பத்திரிய கட்டி குடுத்தாரு உங்க தாத்தா”
“அப்பவும் இங்க வர்ற டாக்டருங்க சாய்ங்காலம் ஆனா போயிருவாங்க. எவ்வளவு முயற்சி செஞ்சும் அவங்களால இங்கயே தங்க முடியலை!!”
“உங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு, டேய் பெரியைய்யா என் பேத்தி படிச்சு பெரிய டாக்டரா வந்து உங்களுக்கு வைத்தியம் பாப்பாடான்னு. அது எத்தனை உண்மை பாரும்மா!!” என்றார் உடல் சிலிர்க்க. 
“அது தான் தெய்வ வாக்கு அப்படின்னு சொல்லுறது.   நீ வரும் போது சிறுத்தை வரனும் உன் வாயில இருந்து இந்த வார்த்தை வரனும் அப்படின்னு இந்த மலையம்மா நினைச்சு இருக்கா” என்று அவர் காயத்ரி தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய அவள் அருளை பார்த்து கண்ணடித்தாள்.
பெரியைய்யா சென்றதும் “என்ன கத்தரி… கண் காட்டுறது எல்லாம் பலமா இருக்கு!!” என்ற படி அருள் காயத்ரி அருகில் வர  “நீங்க பேசும் போதே நினைச்சேன் மாமா இங்க ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் கட்டனும் அப்படின்னு அது தான் சொன்னோன். உங்க பர்மிசன் இல்லாம சொல்லிட்டேன்  சாரி” என்றாள்.
“ஏய் நமக்குள்ள என்ன சாரி. ஹாஸ்பிட்டல் கட்டுற பிளான் ஓகே மத்ததுக்கு என்ன பண்ணபோற??” என அருள் கேட்க “இப்போதைக்கு யோசனை இல்லை இனிமே தான் அதை எல்லாம் பாக்கனும்” 
“செய்யலாம் நீங்களும் சின்னமாமாவும் இருக்கும் போது எனக்கு என்ன” என்றவள் நிம்மதியாக உறங்கி போனால்……..

Advertisement