Advertisement

“அம்மாச்சி அப்படியே மலைக்கு போயிட்டு வர்றோம். ரொம்ப நாள் ஆச்சு” என்றதும் கோவிலில் இருந்து பெரியவர்கள் வீட்டுக்கும் சிறியவர்கள் மலைக்கும் செல்வதென ஏற்பாடு ஆனது. 
தங்கம் தான் பெரியவர்களுடன் வருவதாக சொல்ல, காயத்ரி விடவில்லை “இல்ல சித்தி நீயும் எங்க கூட வாங்க. இங்க வந்து என்ன செய்ய போறீங்க??” 
தங்கம் “இல்லை காயத்,ரி சின்ன பசங்க நீங்க போங்க” என சண்முகத்தை பார்த்த படி சொன்னார். இன்னும் சண்முகம் தங்கத்திடம் பேச வில்லை. அதனால் தான் அவர்களுடன் போக ஆசை இருந்தாலும் தான்னால்  அவர்களின் சந்தோசம் கெட வேண்டாம் என்று நினைத்தார்.
சண்முகத்தையே அவர் பார்ப்பதை காயத்ரி பார்த்தவள் நேராக சண்முகத்திடமே கேட்டுவிட்டாள் “உங்க பிரச்சனை தான் என்ன மாமா??” என்று
“சித்தப்பாவா சித்தி ஒன்னும் தேடி போய் கல்யாணம் பண்ணிக்கலை. நீங்க தான நல்லவரு வல்லவருன்னு அவரை கல்யாணம் செஞ்சி வச்சீங்க. அப்பறம் அவரு தப்பு பண்ணுனாருன்னு இவங்க கிட்ட பேசம இருக்கீங்க. புருசன் தப்பு செஞ்சா பொண்டாட்டியும் அந்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கனுமா??” 
‘சித்தப்பா கூட பேசலையின்னா இங்க யாரும் வருத பட போறது இல்லை. ஆனா சித்தி  பாவம் இல்லையா!! அங்க யாரு இருக்கா அவங்களுக்கு?? அந்த வீட்டுல யாரும் இல்லை மனசுவிட்டு பேச. இங்க வந்தாலும் கஸ்டபடுறத  சொல்லனும் அப்படின்னு சித்தி இங்க வர்றதே இல்லை!!”
“வந்ததுல இருந்து நீங்க பேசமாட்டீங்களானு உங்க முகத்தை தான பாக்குறாங்க, பேசுங்க மாமா பிளீஸ்….”
சண்முகம் அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “டாக்டரம்மா ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் தான!!” 
“ம்ம்…. அந்த ஹார்ட்குள்ள தான மனசு இருக்கு  பேசுங்க மாமா” 
“சரி அவளையும் வர சொல்லு” என்றவன் மாடி ஏற “அதை நீங்களே செல்லுங்க” என்றாள் காயத்ரி. 
தங்கம் தான் இப்போது “அண்ணே இது சொன்னதே போதும் நானும் வர்றேன்” என்றவர் அவர்களுடன் செல்ல தயாரானார். 
வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சண்டை இல்லாமல் சென்று வர யோசனை செய்ய.,
இங்கு இந்திய குடிமகன்களுடன் இருந்த அய்யாவு தன் அடுத்த ஆட்டத்தை எப்படி ஆரம்பிக்க என ஆலேசனை நடத்திக்கொண்டு இருந்தார். 
“டேய் தம்பி, என் கணக்கு சரியா இருந்தா நாளைக்கு என் தங்கச்சி பையன் என் மாப்பிள்ளைக்கு முடி இறக்கு வாங்கடா. தாய் மாமன் நான்டா!!” என்றார் முகத்தில் பெருமை பொங்க  தன் அல்லகைகளிடம்.
“என்ன அண்ணே சொல்லுறீங்க?? அவங்க தான் உன் மேல கோபமா இருங்காங்க தான?? அப்பறம் எப்படிண்ணே உங்கள கூப்புடுவாங்க?? நீங்க எப்படி போவீங்க?? கூப்புடாத இடத்துக்கு போனா உங்க கௌரவம் என்ன ஆகுறது??” 
“அட போடா உனக்கு தெரியாது…. எங்க பெரிய அத்தைய பத்தி. என்ன சண்டை போட்டாலும் வீட்டு மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மரியாதை கம்மியா ஆனாலும் விட மாட்டாங்க.  அந்த பய வேண்டானு தான் சொல்லுவான் ஆனாலும் எங்க அத்தை விடாது” 
“என்ன அண்ணே சொல்லுறீங்க  எனக்கு புரியலை. எங்க வீட்டுல எல்லாம் கொஞ்சம் குரல உசத்தி பேசுனாலே வெளக்கமாத்துல மந்திரிச்சு வெளிய அனுப்புவா என் பொண்டாட்டி. ஆனா உங்க வீட்டுல மட்டும் எப்படிண்ணே அண்ணி நீங்க எது செஞ்சாலும் அமைதியா இருக்காங்க!!” 
“அது தான்டா கொடுப்பினை. என் பொண்டாட்டி தங்கம் டா. பேரு மட்டும் இல்லை ஆளும் தான். வளப்புடா வளப்பு உன்ன போல நாதாரி தனமா இருந்தா வெளக்கா மாத்தால நானே அடிப்பேன்டா”  என்றவனை அவன் ஒரு மாதிரி பார்க்க,
“என்னடா பாக்குற?? அதை அப்பறம் டீல் பண்றேன். என் மருமகன பாக்கனுமே, அப்படியே செவ செவன்னு அவனுக்காவே ஒரு பொண்ணை பெத்துக்காம போயிட்டேன்னு இப்ப கவலை படுறேன்டா!! அப்படி ஒரு அழகுடா என் மருமவேன்!!” என அய்யாவு சிலாகித்து பேசியவர் “சரிடா நான் போயி இப்ப தூங்கி எழுந்தா தான் நாளைக்கு பிரஸ்ஸா கிளம்ப முடியும் வர்ட்டா” என்றவர் கிளம்பினார் அங்கிருந்து.
பேச்சி சண்முகத்திடம்  “ஏம்ப்பா நாளைக்கு முறைக்கு அய்யாவுவ கூப்பிடனும் இல்ல அவரு வந்ததும் அவருக்கு ஒரு வார்த்தை சொல்லிடு.” சண்முகம் அமைதியாக இருக்க “என்னடா… நான் சொல்லி கிட்டு இருக்கேன் நீ அங்க எங்க பெறாக்கு பாத்துகிட்டு இருக்குற??”
வசுமதி தான் கேட்டாள் “எதுக்கு அத்தை அவருக்கு சொல்லனும்?? எனக்கும் அவருக்கும் உறவு இல்லையின்னு ஆகிடுச்சு அப்பறம் என்ன அத்தை??”
பேச்சி வசுமதியை பார்த்தவர் “உனக்கும் அவருக்கும் வேணுன்னா உறவு முடுஞ்சதுன்னு நீ சொல்லாம் ஆனா…. இவனுக்கும் தங்கத்துக்கும் உள்ள உறவ என்ன பண்ணுவ??”  
வசுமதி அமைதியாக இருக்க,
“தங்கம் வேணும் அப்படின்னு நினைச்சா, அய்யாவுவ பொறுத்து தான் போகனும்.  அப்படி தங்கத்தோட உறவு வேண்டான்னு சொன்ன நீ சொல்லுறத பத்தி யோசிக்கலாம்??” என்ன சண்முகம் சொல்லுற கேட்டார் பேச்சி. 
“ஒரு பொண்ணை கொடுத்துட்டு அவன் ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது பெரியம்மா… அவன் தங்கச்சியும் இங்க தான இருக்கா!!” சண்முகம் கேட்க., 
“அவ தான் அவருக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லைனு சொல்லுறாளேப்பா?? பின்ன எப்படி நீ அவளை அவனுக்கு தங்கச்சின்னு சொல்லுற?? அப்படி சொன்ன தாய் மாமனா அவர் தான வரனும்??” கொக்கியிட்டு நிறுத்தினார் பேச்சி. 
“இப்ப என்னைய என்ன தான் பண்ண சொல்லுறீங்க??” சண்முகம்
 
“தங்கத்துக்காக அவர கூப்புடு  சண்முகம்” 
“அது மட்டும் என்னால முடியாது பெரியம்மா. வேற யோசனை இருந்தா சொல்லுங்க” என்று சண்முகம் பிடிவாதமாய் பேச, தங்கம் தான் வந்தார் பேச்சியிடம். 
“பெரியம்மா, அண்ணா அவர கூப்புட வேண்டாம். நான் அவர வரவைக்குறேன். என்னால அண்ணன் அவர்கிட்ட பேச அவசியம் இல்லை. அது எங்க அண்ணனுக்கு தான் மரியாதை இல்லை”
“எனக்காக அவர் பட்டது எல்லாம் போதும்.  ஊரை விட்டு, சொந்ததை விட்டு, இப்போ மரியாதையும் விடனுமா?? போதும் பெரியம்மா இந்த பேச்சை இதோட விட்டுங்க” தங்கம் சொல்ல., 
“கேட்டுக்கடா… இத்தனை நாள் இவ இருந்தாளா செத்தாளான்னு கூட நீ திரும்பி பாக்கலை… உன் துக்கம் தான் பெரிசுன்னு இருந்துட்ட. அது தப்புன்னு நான் சொல்ல வரலை. ஆனா… அம்மா அப்பா இல்லாத புள்ளைக்கு நீ தானடா எல்லாமுமா இருந்து இருக்கனும்??”
“உன் கடமையில இருந்து தவறிட்ட சண்முகம்.  நான் வளத்த புள்ளையாடா நீ?? அய்யாவு கெட்டவன் தான் ஒத்துக்குறேன். ஆனா… உன் தங்கச்சிய அவன் ராணி போல தான பாத்துகிட்டான். அத நீ இல்லையின்னு சொல்ல முடியாது தான, அதுக்கு தான் செல்லுறேன் நடந்ததை மட்டும் நினைச்சு இருந்தா வாழ முடியாது  சண்முகம்.”
“உன்னைய அவருக்கூட ஓட்டிகிட சொல்லல… சும்மா ஒரு வாய் வார்த்தையா சொல்லுப்பா அது போதும் சண்முகம்” என்றதும் அரை மனதாக தலையாட்டினார் சண்முகம்.
அய்யாவு வீட்டுக்கு வர,  அனைவரும் அவரை மறு நாள் கோவிலுக்கு அழைக்க, அவரும் வருவதாக சொல்ல, கோவிலுக்கு செல்ல மொத்த குடும்பமும் தயாராகியது குதுகலமாக…… 
இதில் காயத்ரியின் முகம் வாடி இருக்க அருளின் கண்களுக்கு தப்பவில்லை அது 
அறைக்கு வந்தவளை அருள் என்ன காயத்ரி எதுக்கு ஒரு மாதிரி இருக்க என கேட்டான் 
ம்ச் ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்குறேன்
கத்தரி முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கும் இப்ப அது இல்லையே என்றவன் அவளை மடியில் அமர்த்திக்கொண்டான்
வாகாக அவன் மீது சாய்ந்து கொண்டவள் அம்மாவ ரொம்ப மிஸ் செய்றேன் நான் மட்டும் அன்னிக்கு கொஞ்சம் கவனமா இருந்து இருந்தா அம்ம இப்ப நம்ம கூட இருந்து இருப்பாங்க  இல்ல என்னும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது
ஏய் என்ன காயத்ரி இது நீ எவ்வளவு போல்டு இன்னிக்கு அக்காவுக்காக நீ அண்ணவை எப்படி பேசுன இப்ப என்ன சின்ன பொண்ணு போல அழுகுற அது நீ தெரிஞ்சு செஞ்ச தப்பு இல்லை அது முடிஞ்சு போன விசயம் என்றவன் அவளை தன்னை பார்க்குமாறு அமர வைத்தான்
வாழ்கை நமக்கு தினமும் ஒரு பாடம் சொல்லி தரும் காயத்ரி அதை நாம எப்படி எடுத்துக்குறோம் அப்படினறதுல தான் இருக்கு நம்ம வெற்றி 
அக்கா போனது உன் தப்புன்னு நீ நினைச்சா அதை எப்படி மறுபடியும் செய்யாம இருக்கறதுன்னு யோசி அது தான் ஜெயிக்குறதுக்கு வழி அதை விட்டு அதுல இருக்குற நெகடிவ் விசயத்தை எடுத்துக்காத அது நீ இருக்குற இந்த தொழிலுக்கு நல்லது இல்லை 
எத்தனையே கேஸ்ச நாங்க முயற்சி செஞ்சோம் ஆனா எங்க கையில எதுவும் இல்லைன்னு சொல்லுறது இல்லையா அது போல தான் அக்காவோடதும்  அது உன்னை மீறி நடந்தது 
உன்னைய நம்பி வற்றவங்களுக்கு நீ  நம்பிக்கை தான் தரனுமே தவிர அதை விட்டு நீயே நடந்த தப்புக்கு நான் தான் காரணம் அப்படின்னா காயபடுத்திக்க கூடாது காயத்ரி
 
காயத்ரி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க 
என்ன காயத்ரி பதிலே இல்லை இன்னும் புரியலையா  இரு இப்ப சின்ன உதாரணத்தோட சொல்லுறேன்  இப்ப நீ சோகமா இருக்க ஆனா பாரு அது எனக்கு சாதமா இருக்கு இப்ப உன்னைய சமாதானம் படுத்த இப்படி தொடலாம் என கையை பிடித்தவன் இதை விட முகத்தை இப்படி இழுத்து என்று அவன் முடிக்க அவள் கைகள் தன்னால் விளக்கினை அணைத்தது 
 

Advertisement