Advertisement

                  ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 13
தாலி கட்டியதும் அனைவரும் கலைந்து செல்ல மருத்துவரை அழைத்து வந்தார் அய்யாவு.
அதற்குள் விசயம் தெரிந்து கல்யாண வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டனர். 
வசுமதியை வந்து பார்த்த மருத்துவரோ “அவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க ஒன்னும் பிரச்சனை இல்லை. மைல்ட் டோஸ் தான் ஊசி போட்டு இருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல எழுந்துடு வாங்க” என்று சொல்லி செல்ல அப்பாட…. என்று இருந்தது அனைவருக்கும்.
வசுமதி கண் முழித்தும் பார்த்தது அவறை சுற்றி நின்ற ரங்கன், பேச்சி, சிவநாதன், மரகத்தை தான். “என்ன அத்தை இந்த நேரம் எல்லாரும் வந்து இருக்கீங்க?? கல்யாணத்துக்கு போகலையா??” என்று சரளமாக பேசினால்.
அனைவரும் அவளை புரியாமல் பார்க்க பேச்சி தான் கேட்டார் “எதுக்கு வசுமதி தூக்க மாத்திரை சாப்பிட்ட!!??” என்று 
“என்னது தூக்க மாத்திரையா!!!” என்று வாய் பிளந்தார் வசு. “என்ன அத்தை சொல்லுறீங்க. நான் எதுக்கு தூக்க மாத்திரை சாப்பிடனும்??” என்று கேட்கவும், வெளியே தங்கம் அழும் சத்தமும் கேட்க அனைவரும் வெளியே வந்தனர்.
அப்போது தான் கவனித்தார் வசுமதி தன் கழுத்தில் இருந்த தாலியை.  சண்முகம் வசுமதி வந்ததை பார்த்ததும் அவரிடம் சென்றவர் “இதுல நீயும் கூட்டா!!” என வசுமதியை அடிக்க அங்கு இருந்த யாருக்கும் புரியவில்லை நடப்பது என்ன என்று ???   
ரங்கன் தான் தடுத்தார் சண்முகத்தை “சண்முகம் என்ன இது பொண்ணுங்கள கை நீட்டுற பழக்கம்” என்று கேட்க “பெரியப்ப இவங்க பண்ணி இருக்குற வேலைய கேட்டா உங்களுக்கே தெரியும்!!” என்று மீண்டும் வசுவை அடிக்க போக…  
“டேய் நில்லுடா அங்க…..” என கத்திவிட்டார் ரங்கன். தாலியை பார்த்து அதிர்ந்து நின்ற வசுமதியின் முகம் தான் இப்போது அவர் கண் முன் நின்றது. 
“வசுமதி சொல்லு என்ன நடந்தது??” என்றார் ரங்கம். 
சண்முகம் அடித்ததில் அதிர்ச்சியாக நின்று இருந்தவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய “தெரியாது மாமா… காலையில காபி குடிக்கவும் தூக்கம் வந்துடுச்சி தூங்கிட்டேன். எழுந்து பாத்தா நீ எல்லாம் நிக்குறீங்க” என்றவர் “இந்த தாலி” என்று அதை எடுத்து காட்டி “எப்படி மாமா என் கழுத்துல??” என்று கேட்டாள் கண்ணீர் வழிய.
இப்போது அனைவரும் தங்கத்தை பார்க்க “எனக்கும் தெரியாது பெரியப்பா. காபி போடும் போது இவரு தான் ஏதோ வேலை சொன்னரு. திரும்பி நான் வந்து பாக்கும் போது காபி இல்லை வசுமதி குடிச்சுட்டானு  சொன்னாரு.” 
“வேலை முடிஞ்சு போய் பாத்த வசு தூங்கிட்டு இருந்தா. பக்கத்துல இந்த பேப்பர் தான் இருந்தது” என்று அவள் எழுதி வைத்ததாக அய்யாவு தந்த பேப்பரை காட்டினாள் தங்கம்.
“இங்க என்ன தான் நடக்குது?? என் பையன் என்ன நீங்க விளையாடுற சொப்பு சாமானா?? இப்ப நடந்தது என்னன்னு சொல்லலை நடக்குறது வேற!!!” என்று ரங்கன் சொல்ல, “அது தான் கல்யாணம் முடிஞ்சதுல இன்னும் என்ன சொல்ல” என்று அய்யாவு சொல்ல வாய் அடைத்து போனது அனைவருக்கும். 
“என்ன சொல்லுறீங்க!!??” தங்கம் கேட்க 
“ஆமா… நான் தான்டீ செஞ்சேன். காபில தூக்க மாத்திரை கலந்தேன். அவ தூங்குனதும் தற்கொலை முயற்சின்னு உங்க அண்ணனை தாலி கட்ட வைச்சேன் இப்ப என்ன அதுக்கு” என்றதும்,
சண்முகம் அவரை  “ச்சீ” என்றவர் சென்றுவிட்டார் அங்கு இருந்து. அவர் பின்னாலே அனைவரும் செல்ல வசுமதி தான் அப்படியே நின்றார் அதிர்ச்சியில். தங்கத்துக்கு என்ன செய்ய என தெரியாததால் வசுமதியை இழுத்துகொண்டு ஓடினார் ரங்கன் வீட்டுக்கு.
“பெரியப்பா….” என்று தவிப்புடன் வீட்டு வாசலில் தங்கம் நிற்க, “இப்ப எதுக்கு இவ வந்தா… போக சொல்லுங்க அவளை” என்று ஆடி தீர்த்து விட்டார் சண்முகம். 
தங்கத்திற்கும் வசுமதிக்கும் அழுவதை தவிர வேறு வழி இல்லை என்று ஆனது. யார் பேசியும் சண்முகம் கோபத்தை கட்டுபடுத்த முடியமல் போக வசுமதி தான் விழுந்தார் ரங்கன் கால்களில். 
“இதுல என் தப்பு எதுவும் இல்லை மாமா… அண்ணன் செஞ்சதுக்கு பரிகாரமா நான் இங்கயே இருந்துட்டு போறேன் என்னை அந்த வீட்டுக்கு போக சொல்லாதீங்க” என்று ரங்கத்திடம்.  
ரங்கன் என்ன செய்வார் இது அவரின் முடிவு இல்லையே!! ஆனாலும் வசுமதியை அங்கு அனுப்ப அவருக்கு உடன் பாடு இல்லை. அதனால் வசுமதியை அவர்களுடனே இருக்க சொல்ல தங்கம் வசுமதியை விட்டு சொன்றார். 
 
தவறு வசுமதியின் மேல் இல்லை என்பதால் மட்டுமே சண்முகம் சற்று அமைதியானார். ஏற்கனவே வெளி நாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்து இருந்ததால்  வேலைக்காவது இருக்கட்டும் என்று பேசி தான் வசுமதியை அவருடன் அனுப்பி வைத்தனர்.
வசுமதியின் பொறுமையும், அன்பும் சண்முகத்தை மாற்ற அவர்களின் வாழ்க்கை தொடங்கினாலும், ஏதோ ஒன்று வசுமதியை தள்ளியே நிறுத்தி இருந்தது சண்முகத்திடம் இருந்து. 
இன்று அது உடைந்ததோ?? பழைய நினைவில் இருந்து மீண்டவர் சண்முகத்தை பார்க்க… அவரின் இந்த பார்வை புதிது வசுமதிக்கு.  முழுதானா உரிமை பார்வை. இதுவரை அவர் கண்களில் கண்டிராத உணர்வு வசுமதியை கட்டி போட ஒரு முழுமையான உறவு அவர்களுக்குள்.
பேச்சி அறையை விட்டு வர சரசு தான் சமையல் கட்டில் உருட்டி கொண்டு இருந்தாள். 
“எங்க சரசு பசங்களை காணலை??” என்று கேட்க “அத தான் ஆத்தா நான் உங்களை கேக்கனும். நான் வரும் போதே யாரும் இல்லை. சின்னவரு மட்டும் ராகுல் தம்பிய கூட்டிக்கிட்டு வெளிய போனதை பாத்தேன்” என்றிட “சரி சரி பாத்திரத்தை உருட்டாம வேலைய பாரு” என்றவர் மலர்ந்த முகத்துடன் வெளி திண்ணைக்கு சென்றார்.
 
அவரின் குடும்பம் முழுமை அடைந்த உணர்வு அவருக்கு.  வசந்தி கோவிலுக்கு சொன்றவர் அப்போது தான் வர  “என்ன அத்தாச்சி இங்க உக்காந்துட்டீங்க” என்றவாரோ திரு நீரை தந்தவர் “எங்க யாரையும் காணல” என்றார். 
“விடு வசந்தி நேத்து இருந்து வேலை அதிகம்ல அது தான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரட்டும்” என்றவர் முகத்தை பார்த்தும் புரிந்து விட்டது. “சரி அத்தாச்சி” என்றவர் “அப்ப இன்னிக்கு நாட்டுகோழி அடிச்சிடலாம்” என்றவர் அதற்கனான வேலைக்கு சென்றார். 
இங்கு நாட்டுக்கோழி தயாராக மாடியிலோ “என் தங்கம் இல்லை எழுந்துரிடி கத்தரி என் மானம் இப்பதான் ஹால் வரைக்கும் போயிருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் போனா பஸ் புடிச்சி,  டிரையின் புடிச்சி அப்பறம் அங்க அங்க என்ன கிடைக்குதோ அதை எல்லாம் புடிச்சி போக ஆரம்பிச்சிடும்”  என்று எழுப்பி கொண்டு இருந்தான் அருள் காயத்ரியை.
“வர்மா பிளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் மட்டும்” என்று காயத்ரி கேட்க, “கொஞ்ச கேட்டா சரி, இப்ப அதுக்கு கூட நேரம் இல்லை. இப்பவே வசு ஆரம்பிச்சிட்டா. இன்னும் லேட் ஆனா… நேர வந்து கதவை உடைச்சு உள்ள வந்துடுவா!!” என்றவன் இது பேச்சுக்கு ஆகாது என அவளை தூக்கி குளியல் அறையில் விட்டவன் “வேகமா வா” என்று கீழே சென்றான்.
அப்போது தான் ராகுலுடன் கரிகாலன் வர “என்னடா ஊரை சுத்தி பாத்துட்டையா??” என்று அருள் கேட்டான். “ம்ம் பாத்தாச்சு சித்தப்பா” என்றான் ராகுல். 
“அப்பறம் அடுத்து என்ன பிளானிங்??” கேட்டான் ராகுலிடம்.
“அதை உங்க அம்மாகிட்ட கேளு சித்தப்பா??” என்றதும் ராகுலின் பின்னந்தலையில் அடிவிழுந்தது. “அம்மா….” என்றவன் திரும்பி பார்க்க நின்று இருந்தாள் காயத்ரி. 
“சித்தப்பா சொல்லி வை உன் பொண்டாட்டிக்கிட்ட, என்கிட்ட வைச்சுக்க வேண்டான்னு!!”
“அடிங்க வாய பாரு!!  பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசிகிட்டு” என்றவளை  “சித்தப்பா திரும்பவும் சொல்லுறேன் உன் பொண்டாட்டிய பேச வேண்டாம்னு சொல்லுங்க..”  
“திரும்பவும் அப்படியே சொல்லுற”  என்று காயத்ரி அடிக்க கை ஓங்க  “கத்தரி சித்தி” என்றவன் ஓட ஆரம்பிக்க அவனை துரத்த ஆரம்பித்தாள் காயத்ரி. 
“அப்பா…. ஆரம்பிச்சாச்ச உங்க சேட்டைய??? யேய்  காயத்ரி அவன் தான் சின்ன பையன் நீயாவது விடுடி” என்றாள் வசுமதி. 
“நான் எதுக்கு விடனும் அவன் கிட்ட சொல்லு…. எல்லாம் இதோ இவர சொல்லனும். என்னைய கத்தரினுன்னு சொல்லி சொல்லியே இதோ இந்த நண்டு எல்லாம் என்னைய கிண்டல் பண்ணுது!!!”  
“ஏய் சண்டை உனக்கும் அவனுக்கும் தான… என்னைய எதுக்கு இப்ப இழுக்குற கத்தரி” என அருள் சொல்ல, “இருங்க இப்ப உங்கள் வெளுக்குறேன்” என ராகுலை விட்டு அருளை துரத்த ஆரம்பித்தாள் காயத்ரி.
பேச்சி எதிலும் தலையிடாமல் பார்த்து சிரித்த படி இருக்க “என்னக்கா சிரிப்பு பலமா இருக்கு!!” சோமசுந்தரம். 
“பாரு சுந்தரம் இந்த பசங்கள,  இத்தன நாள் இருந்தாங்களான்னு தெரியாம இருந்த பசங்க இன்னிக்கு எப்படி சிரிச்சுகிட்டு இருக்காங்க. இதுக்குதான் வீட்டுல பொண்ணுங்க இருக்க வேணும் அப்படின்னு சொல்லுறது போல.  ரெண்டு நாள்ல வீட்டையே மாத்திட்டாங்க பாரு” 
“ஆமாம்க்கா நிஜம்தான்” என்றார் அவர். “அப்பறம்க்கா, பசங்க எல்லாம் வீட்டுல இருக்கும் போதே கோவிலுக்கு போறத எல்லாம் முடிச்சுக்கலாம். அப்பறம் இவனுக்காக அவனுக்கான்னு காத்துட்டு இருக்கனும்” 
“ஏன்டா அதை நீ சொல்லுறயா?? ரெண்டு நாள் வந்துட்டு போடான்னு சொன்ன ஆயிரம் காரணம் சொல்லுவ இப்ப என்ன நல்லவன் போல பேசுற” 
“ஏக்கா, என்னோட வேலைய பத்தி தெரிஞ்சும் நீயும் பேசுனா எப்படி??” 
“சரிடா விடு, உடனே சின்ன பசங்க மாதிரி மூஞ்ச தூக்காத. நாளைக்கு குல சாமி கோயிலுல ராகுலுக்கு முடி எறக்கிடலாம். நாளை கழிச்சு ஐயனாருக்கு பொங்கல் வச்சிடலாம் என்ன சரியா??” 
“ம்ம சரி. நான் போயி வேண்டியதை பாக்குறேன்” என்றவர் கோயிலுக்கு வேண்டியதை பார்க்க  போக  மற்றவர்களிடமும் தேவையானதை எடுக்க சொல்ல காயத்ரியும் வசுமதியும் கேட்டனர் பேச்சியிடம். 

Advertisement