Advertisement

சிறிது நேரம் கண்மூடி தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன் இடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக அவனையே பார்த்து இருந்தவளுக்கு அன்றைய அருளின் முகம் தான் நினைவுக்கு வந்தது.
கண்மூடி இருந்தவன் “காயத்ரி” என அழைக்க “ம்ம்” என்றாள் அவள்
“அன்னிக்கு உன் வயசு என்ன??”  கேட்டான் அருள் 
அவள் புரியாமல் அவனை பார்த்தே இருக்க கண் திறந்தவன் “அன்னிக்கு உன் வயசு என்ன??” என்றான் தெளிவாக. “பதினேழு” என்றாள் காயத்ரி.
“அப்ப நான் உன் கிட்ட நடந்த முறை சரியா??” என்று கேள்வியாக நிறுத்த அதிர்ந்து போய் பார்த்தாள் அவனை.
அவள் பார்வையே இல்லை என்பதை சொல்ல “அப்படி ஒரு நிலையில நான் என்ன பண்ண??  என் மனைவியா இருந்தாலும் நீ சின்ன பொண்ணு தான உன் கிட்ட அத்து மீறி நடக்குறது தப்பு இல்லையா??” 
“அதை அந்த நிமிசம் என் புத்தி சொன்னதால தான் அப்படி நடந்து கிட்டேன். அப்பா போன வெறுமையான இடம் நீ வந்து நின்னப்ப  அந்த வெறுமை இல்லாம போச்சு. அதை உனக்குள்ள தேட ஆரம்பிச்சப்ப தான் நான் கன்ட்ரோல மீறி போனப்பதான் உன் நியாபகமே வந்தது. அது தான் அப்போதைக்கு உன்னை அங்க இருந்து அனுப்ப மட்டும் தான் அப்படி பேசி இருந்தேன்.   நிச்சயமா நீ சொல்லுற அர்த்துல இல்ல காயத்ரி!!” என்று அவள் முகம் பார்த்தான்.
 
அவன் கேட்ட “உன் வயசு என்ன” என்ற கேள்வியிலேயே அவள் இத்தனை நாள் கட்டி பாதுகாப்பாய் வைத்து இருந்த கோட்டை சடாரென இடிந்து போனது.
அவள் இன்னும் இமைக்காமல் அவனை பார்க்க கண்களால் “வா” என்றான். அருள் அவள் அருகில் வர  அவள் கைகளை பிடித்தவன் “அன்னிக்கு போன்னு சொன்னது ரூம்புல இருந்து தான் என் மனசுல இருந்து இல்லை. அப்பறம் மறு நாள் உன்னைய பாக்க சங்கடம்மா இருந்தது நான் செஞ்சது தப்பு பின்ன எப்படி உன்னை பாக்க?? அது தான் சொல்லாம போயிட்டேன்” 
இன்னும் அவள் முகத்தே பார்த்து இருக்க அவள் அருகில் நெருங்கியவன் “அக்கா போன அன்னிக்கும் இதே தேடல் இருந்து எனக்கு உன்கிட்ட.  அந்த நிமிசம் உன்கிட்ட வந்து இருந்தா என்ன நடந்து இருக்கும் உன்னால புரிஞ்சுக்க முடியுதா!!” 
“அப்பறம் மாமாவை நினைச்சு பாரு… அக்காவோட இழப்பு அவருக்கு எவ்வளவு பெரிசு இந்த நிலையில நம்ம விசயம் தெரிஞ்ச, அதுவும் இல்லாம என்னால உன் படிப்புக்கு எந்த தடையும் இருக்க கூடாது நீ நினைச்சத சாதிக்கனும்  அதனால தான்  அன்னிக்கே போயிட்டேன்”
“உன்னைய பாத்தா கூட எங்க அப்படியே தூக்கிட்டு போயிடுவேனோ அப்படின்ற பயத்துலயே இந்த பக்கம் வரவே இல்லை” 
காயத்ரிக்கு அவன் பேச பேச தான் முட்டாள் தனமாக போட்டு வைத்த கோடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அழிய ஆரம்பித்து தெரிந்தது. இருந்தும் செல்வியின் இழப்பை அவளால் ஏற்க முடியாத நிலையில் அதை அவனிடமோ சொல்லிவிட்டாள்.
“அப்ப நீங்களும் அப்பாவும் மட்டும் தான் அம்மாவ மிஸ் செஞ்சீங்களா?? நான் இல்லையா?? என கேட்க அருளுக்கு அவளின் நிலை புரிந்தது.  “ஏற்கனவே உங்க மேல ஏன் கோபமா இருக்கேன்னு யாருகிட்டையும் சொல்லை. நீங்க என்னைய அவாய்ட் செஞ்சுட்டு  போயிட்டீங்க யாரும் இல்லாம நான் எப்படி சமாளிச்சு இருப்பேன்னு உங்களுக்கு தோணலையா??” 
“பொண்ணா ஆறுதல் மத்தவங்ககிட்ட கிடைச்சாலும், பொண்டாட்டியா நான் உங்கள தான எதிர்பாத்து இருப்பேன் நான் உங்களை தேடுவேன்னு நீங்க ஏன் நினைக்கலை?? அப்ப எனக்கு பிரச்சனை வரும் போது நான் எப்படி உங்க தேடி வருவேன்னு நினைச்சீங்க??”
“நீங்க நினைச்சது எல்லாம் நடந்துச்சு. ஆனா நான் இப்ப குற்றவாளி ஆகிட்டேனே!!” என்றாள் அருளை பார்த்து. 
“ஏய் லூசு…. இது என்ன பெரிய பேச்சு குற்றவாளி அப்படின்னு… நீ என்ன தப்பு செஞ்சடா?? செஞ்சது நான் தானா” 
“இல்லை நான் தான் நீங்க சென்னது புரியாம அம்மா என்கிட்ட அன்னிக்கு பேச வந்தப்ப உங்களுக்கு வேற கல்யாணம் பண்ண சொல்லி சண்டை போட்டேன். அதே நினைப்புல அம்மா மாத்திரை எடுத்தாங்களா இல்லையான்னு கவனிக்கலை. என்னால தான் அம்மாவுக்கு அப்படி ஆச்சு. இல்லயின்னா அவங்க நல்லா இருந்து இருப்பாங்க” 
அருள் “என்ன சொல்ற காயத்ரி” 
காயத்ரி, தனக்கும் செல்விக்கும் நடந்த பேச்சினை சொல்ல அருளின் முகம் மாற ஆரம்பித்து. 
அவனின் முகத்தையே பார்த்து இருந்தவளுக்கு பயம் பிடித்து கொண்டது. காயத்ரியின் உடல் நடுங்க ஆரம்பிக்க அருளின் கை அதை உணர்ந்தது.
 
காயத்ரியை தன் நெஞ்சோடு அணைத்தவன்  “விடு காயத்ரி நடக்கனும் அப்படின்னு இருந்தா அதை யாரலையும் மாத்த முடியாது. அக்காவுக்கு நான் காட்டுக்குள்ள இருந்தது நாம பிரிஞ்சி இருந்ததுன்னு எதுவும் பிடிக்கலை. அதை எல்லாம் மனசுல போட்டு வறுத்தி தான் இப்படி ஆகி இருக்கு” என்றான்.
அது அவளுக்கு சமாதானம் ஆக. பின்னே நடந்த முடிந்த நிகழ்வினை இப்போது விமர்சிக்க முடியாதே!! அப்படியே விமர்ச்சித்தாலும் காயம் என்னவோ அவளுக்கு தான்.  ஏற்கனவே தான் செய்ய முட்டாள்  தனத்தால்   இத்தனை நாள் தனியாய் இருந்து அவளுக்குள்ளேயே முடங்கி போய் இருப்பவளை இன்னும் பேசி வருத்தபட வைக்க கூடாது என்பதால் அந்த பேச்சுக்கு அதோடு முற்று புள்ளி வைத்தான்.
ஆனாலும் காயத்ரியின் கேள்விகள் வரிசை கட்ட “கத்திரி இப்பவே மணி ஆச்சுடி… ஏற்கனவே  ரொம்ப வருசம் ஆச்சு!!” என்றான் கெஞ்சலும் ஏக்கமும் கலந்து.
அவனின் ஏக்கம் காயத்ரியின் பழைய நினைவுகளை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்தது.
“அவன் அவன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு ஒன்னு தெரியாம ஒன்னுன்னு” என்று சொல்ல முறைத்தாள் அவள். “முத்தத்தை சொன்னேன்டி கொடுக்குறான். நான் ஒரே ஒரு முத்தம் தான் கொடுத்தேன் அந்த பஞ்சயத்து இத்தனை வருசம் போகும்ன்னு தெரிஞ்சு இருந்தா அன்னிக்கே மேட்டரை முடிச்சு இருப்பேன். நல்லவனா இருக்குறது அத்தனை தப்பா!!” கேட்டான் அவளிடம்.
காயத்ரி அவனை முறைத்தபடி எழுந்து கட்டிலின் மறு பக்கத்தில் சென்று படுக்க “யேய் என்னடி நான் கேட்டதுக்கு பதில் செல்லாம போற…” 
“பேச்சு முடிஞ்சு அஞ்சு நிமிசம் ஆச்சு. நீங்க கேள்விய கேட்டுக்கிட்டே இருங்க நான் தூங்குறேன் நல்லவரே” என்று போர்வையை மூட போர்வையின் உள்ளே இருந்தான் அருள். 
இத்தனை நேரம் அமைதி பேச்சு வார்த்தை நடத்திய அந்த கட்டில் இப்போது சம்சார யுத்ததில் பங்கு கொண்டது. விடியும் வரை யுத்ததை தொடர்ந்தவன் அதிகாலையில் தான் சிறிது இடை வேளை தந்தான் அவளுக்கு.
கலைத்து போனவள் அவன் மீதே தூக்கத்தை தொடர  “என்னடி அதுகுள்ள தூங்க போயிட்ட!?” அருள் அவளை சீண்ட,
அவள் அதற்குள் நன்கு தூங்கி இருந்தாள்.   சிரித்தவன் அவளை நன்கு தூங்க வசதி செய்தவன் அவனின் தினசரி வேலைகளை ஆரம்பித்தான். 
அன்றைய காலையை ஓட்டத்தில் ஆரம்பித்தவன்  வயல் வேலைகள் முடித்து வீடு வரும் போது மணி பத்தை தாண்டி இருந்தது கூடத்தில் யாரும் இல்லை.
வசுமதி அவனுக்கு காபியை   கொண்டு வந்து தர “எங்க வசு காயத்ரி??” கேட்டான் அருள்.
அருளை பார்த்தவள் நன்கு சப்பணம் கால் இட்டு அமர்ந்தாள்  வசுமதி அவன் எதிரில் கதை கேட்கும் பாவனையுடன்.
அமர்ந்தவளை “என்ன வசு” என்றான்  “அதை நீங்க தான் சொல்லனும் மாமா” 
“என்ன சொல்ல!!” என்றான் புரியாமல் அருள்.
“நீங்க தான நேத்து அவளை உங்க ரூம்புக்கு தூக்கிட்டு போனீங்க!! அப்ப நீங்க தான் சொல்லனும். என்ன வேலை கொடுத்தீங்களோ…. அவ இப்ப எப்படி இருக்காளோ….” என்று ராகம் இழுக்க “உன்னைய” என்று தலையில் குட்டினான் அருள். 
“இரு அவளை பாத்துட்டு வந்து பேசிக்குறேன்” என எழுந்து போக “மாமா பாத்துட்டு வருவீங்களா!! இல்லை மத்திய சாப்பாட்டை மேல கொண்டு வரவா!!” என அவளின் சிரிப்பு சத்தம் கேட்க “மானத்தை வாங்காத வசு” என்றபடி படியேறினான் அருள் முகம் சிவக்க.
சிரித்த படியே படியேறியவனை பார்த்து இருந்தாள் வசுமதி. இவர்களின் பேச்சினை அறையின் வாசலில் இருந்து கவனித்து இருந்தான் சண்முகம். ‘இவ மட்டும் இல்லையின்னா நான் என்ன  ஆகி இருப்பேன்??’ என்ற எண்ணத்துடன்.
 
அவள் கவனிக்காத படி பின்னிருந்து அணைத்தவன் அவள் கத்தும் முன் வாயை மூடி தூக்கி சென்று இருந்தான் பக்கத்தில் இருந்த அறைக்கு. 
“ஏண்டி அவன் மட்டும் தான் பொண்டாட்டிக்கு வேலை தருவான!!” என்ற இந்த சண்முகம் வசுமதிக்கு வித்தியாசமானவன்.  கண்களில் நீர் வழிய நின்று இருந்தவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் சண்முகம்……
 

Advertisement