Advertisement

உள்ளே போகும் போதே அருள் தூக்கியதில் பயந்து இருந்தவள், பிடிமானத்திற்காக அவன் சட்டையை பிடித்து இருக்க…
“என்னடி பொண்டாட்டி!! முகம் இப்படி சிவந்து இருக்கு.  வாலில்லாத வானரமா நாங்க!! வானரம் என்ன பண்ணும் தெரியுமா??” என்றவன் அவள் உணரும் முன்னபே கடித்து இருந்தான் அவள் கன்னத்தை. 
ஆ..ஆ..ஆ… என அவள் அலர  “வானரம் இப்படிதான் கடிக்கும். ஆனா நான்..” பேச்சை முடிக்காமல் செயலில் காட்ட, அதிர்ந்து போய் அப்படியே அவன் மீது விழுந்தாள் காயத்ரி.
“காயத்ரி பாரு இங்க” என அவள் கன்னம் தட்டி முகத்தில் தண்ணீர் தெளிக்க எழுந்தவள் அவனை முழித்து பார்க்க, “என்னடி  கிட்ட வந்ததுக்கே மயக்கம் போட்டுட்ட??” என்றான்.
“என்னது…. கிட்ட வந்தீங்களா!! அப்ப, என்ன என்ன” என கேட்டாள் உதட்டினை துடைத்த படி.
“நான் என்னடி பண்ணுனேன்?? எதுக்கு இத்தனை என்ன” அவன் கண்களில் இருந்த விசமம் அவளுக்கு தெரியவில்லையோ?? ஒருநிமிடம் கண்கள் மூடி திறக்க எதிரில் இல்லை அவன்.
அங்கு இருந்தது இடுப்பில் கை வைத்து முறைத்த படி வசுமதி தான். “டீ காயத்ரி, என்னடி பண்ணுற இங்க?? கண்ணை மூடிக்கிட்டு. அவனுக்கு சாதம் போட்டு தர சொன்னா கனவு கண்டுக்கிட்டு, போடி அந்த பக்கம்” என்றவர் அவளை தள்ளிவிட்டு ராகுலுக்கு சாதம் எடுத்துக்கொண்டு போனார்.
இப்போது காயத்ரிக்கு தான் எதுவும் புரியவில்லை!! அவன் தன்னை தூக்கிய தடம் இடுப்பில் குறு குறுப்பாய் இருக்க, கன்னத்தில் கடித்ததோ வலி கொடுக்க “இந்த அக்கா என்ன லூசா??” என்றாள் வாய் விட்டு. 
‘உங்க அக்கா லூசு இல்லை. நீ தான் லூசு. அவன் இங்க வந்தது உண்மையின்னா  அவன் இங்க தான இருக்கனும். ஆனா.. அக்கால இருந்துச்சு’ என்று தன் தலையிலேயே கொட்டிக்கொண்டவள் ஓடினாள் வாசலுக்கு.
“ஏய் எதுக்குடி இப்படி ஓடி வர்றவ??” வசுமதி கேட்டதற்கும், “இருக்கா வர்றேன்” என்றவள் பந்தியில் அருள் இருக்கிறான என தேட ஆரம்பித்தாள்.
அவள் தேடுவதை பார்த்த கரிகாலன் “என்ன குட்டிமா யாரை தேடுற??”
“ம்ம்  அவசர நம்பரைதான் மாமா. எங்க அவரு??” 
“அதோ அங்க பந்தி பரிமாறுறான் பாரு” என்று அருள் இருந்த பக்கம் கை நீட்ட, அதற்கு முன் ஓடி இருந்தாள் அவனை நோக்கி. “இதுக்கு என்ன ஆச்சு??”  என்று பின்னால் வந்து நின்ற வசுமதியிடம் கேட்க, அவரும் “தெரியலை  மாமா” என்றாள்.
காயத்ரி அருளிடம் போனவள் “நீங்க கிச்சன்ல தான இருந்தீங்க?? இங்க எப்ப வந்தீங்க?? என்ன செய்றீங்க??” என கேட்க, புரியாமல் அவளை பார்த்தான் அருள்.
“என்ன காயத்ரி, அப்ப இருந்து நான் இங்க தான இருக்குறேன். நான் எதுக்கு சமையல் கட்டுக்கு வரனும்??” என்றான் வந்த சிரிப்பை அடக்கி. 
தலையை ஆட்டி “இல்லை நீங்க வந்தீங்க, நான் பாத்தேன்” என்று சொல்ல,  வசுமதி தான் அவள் தலையில் குட்டினார்.
 
“அவனுக்கு சாதம் குடுன்னா, கனவு கண்டு உக்காந்துட்டு, இங்க வந்து என்னடி அவருக்கூட வம்பிழுத்துக்கிடு நிக்குற. வாடி உள்ள, ஊரே உன்னதான் பாக்குது” என்று அவள் காதில் சொல்ல,  அப்போது தான் மற்றவர்களை கவனித்தாள் அனைவரும் சாப்பிடுவதை விட்டு தங்களையே பார்ப்பதை.
அசடு வழிய சிரித்தவள், அருளை முறைக்கவும் தவறவில்லை. எதுவும் பேசாமல் வசுமதியுடன் உள்ளே போக அங்கு தங்கம் பிடித்துக்கொண்டார் அவளை. 
“ஏண்டி கூறு இருக்கா?? இப்படி தான் பந்தி நடக்குற இடத்துல பஞ்சாயத்தை வப்பியா??” என்று காயத்ரிக்கு தான் தலையில் அடித்து கொள்ளவேண்டும் போல் இருந்தது. ‘இப்போது என்ன செஞ்சுட்டேன்னு ஆள் ஆளுக்கு இந்த பேச்சு பேசுறாங்க’ என.
விருந்து முடிந்து அனைவரும் போன பின்னர் தான் உள்ளேயே வர முடிந்தது மற்றவர்களால். 
கூடத்தில் அய்யாவு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க, கரிகாலன் ஏதோ சொல்ல வர குமரன் தான் தடுத்தார் அவனை.  “மாமா, பெரிய மாமா இருக்கும் போது அவர பாத்தீங்களா எவ்வளவு திமிறா உக்காந்து இருக்காருன்னு??” 
“டேய், அவன் ஒரு கழிசடையின்னு தெரிஞ்சு கல் எரிஞ்சா அது நமக்கு தான் அசிங்கம். இவன் கால் மேல கால் போட்டா அவருக்கு மாரியாதை இல்லாம போயிடாது. நீ பேசாம இரு” என அவனை அடக்கினார் குமரன். கரிகாலனை அடக்கலாம் ஆனால் அருளை என்ன செய்வார்?? 
அருள், அய்யாவு முன் வந்து கால் போட்டு அமர “என்ன மரியதை தெரியாத அருளு?? பெரியவங்க முன்னாடி எப்படி இருக்கனும் அப்படின்னு சொல்லி தரலையா?? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் இந்த வீட்டுல” என்று சண்முகத்தை பார்த்தவர், “இல்லை நீ இருக்குற பதவி உன்னை இப்படி பண்ண சொல்லுது” என்றார் அய்யாவு.
 
“மரியாதைய  எங்களுக்கு கத்து கொடுக்குறது இருக்கட்டும், நீங்க முதல்ல அதை கத்துக்குங்க.  உங்கள விட பெரியவர் இங்க இருக்காரு அவருக்கு மரியாதை தர  கூடாதுன்னு உங்களை இப்படி செய்ய சொல்லுறது எது??” 
“இந்த வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை தரனும் அப்படின்றதால தான் பேசிக்கிட்டு மட்டும் இருக்கறேன்.  போலீஸ்காரனா இருந்து பேசி இருந்த!!” என்று அவன் முடிக்கும் முன்பே அய்யாவுவின் கால் இறங்கியது. ம்ம் அது… என்ற பார்வையுடன் அந்த இடம் விட்டு எழுந்து சென்றான் அருள்.
வீடே அமைதியாக இருக்க உள்ளே நுழைந்தார் சோமசுந்தரம்.
அந்த அமைதி அவருக்கு ஏதோ உணர்த்த, சண்முகத்தையும் அருளையும் தான் பார்த்தார். சண்முகம் அய்யாவுவை முறைத்தபடி இருக்க, அருளோ ராகுலுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். 
“என்ன அய்யாவு, விருந்து நல்ல படியா முடிஞ்சுதா” என்ற படி வந்து அமர்ந்தார் அவர். 
“என்ன விருந்து, மரியாதை தெரியாத விருந்து. ஒரு பயலுக்கும் மரியாதை தெரியலை. இந்த வீட்டுல சம்பந்தம் செஞ்சு” என்று சொல்லவும், சண்முகத்தின் கோபம் கடந்து விட்டது.
சண்முகம் பேசும் முன்னமே பேசி இருந்தார் வசுமதி.  
“இந்த வீட்டு இருக்குற எல்லாருக்கும் மரியாதை தெரிஞ்சு இருக்குறதால தான் உன்னைய வீட்டுக்கு உள்ள வைச்சு பேசிகிட்டு இருக்காங்க. இல்லையின்னா நீ இருக்குற இடம்” என்று நிறுத்த தங்கத்தின் அழுகை கேவலாக ஒலித்தது.
சண்முகம் தங்கத்தை பார்க்க “இதோ இவளுக்காக தான் இத்தனை பேரும் சும்மா இருக்கோம். இனி நீ ஒரு வார்த்தை பேசினாலும் அப்பறம் என்ன நடக்கும் அப்படின்னு தெரியாது!!” 
அய்யாவு அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் “என்ன சவுண்டுட சத்தமா குடுத்தா நான் பயந்துடுவேனா??”  என்றதும் சோமசுந்தரம் தான் வந்தார் சமாதானத்திற்கு.
“என்ன அய்யாவு இது?? நல்ல காரியம் நடக்குற இடத்துல.  விடு, அவங்க தான் சின்ன பசங்கன்னா, நீயும் அவங்களுக்கு சரியா சண்டை போடுவியா?? யாரு அவங்க… உன் தங்கச்சி, தங்கச்சி புருசன் தான  நீ பெரியவனா இரு” என்றதும் விடு விடு வென வெளியே சென்று விட்டார் அய்யாவு.
“என்னடா அருளு எதுவும் சொல்லாம வெளிய போயிட்டார்” என்று சண்முகம் கேட்க, “அது டயலாக் மறந்து இருக்கும்ண்ணே. அது தான் நியாபகபடுத்த போறாரு. அவங்க அல்லக்கை எல்லாம் இருக்கும்ல அதுகல பாத்துட்டு வந்து பேசுவாரு பாரு!!” என்று அவன் சொன்னதும் அழுது கொண்டு இருந்த தங்கம் கூட சிரித்து விட்டார்.
சண்முகம். தங்கத்திடம் வந்தவர் “இந்த மாதிரி அழுதுகிட்டே இருந்தா வாழ்கை முழுசும் அதே தான் நடக்கும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே அழுது காரியம் சாதிக்க போற” என்றதும் நின்ற அழுகை மீண்டும் வந்து விட்டது தங்கத்திற்கு.
“ச்சே உன்னை எல்லாம் திருத்தவே முடியாது” என்று மாடிக்கு போக, அருள் தான் தங்கத்திடம் சென்றான். “அக்கா என்ன இது??  அழுகைய நிறுத்துக்கா” என்றதும் “நான் என்னடா செய்ய?? யாராவது சத்தமா பேசினாலே அழுகை வந்துடுது”” என்றார் தங்கம். 
“பொண்ணுங்களோட முதல் எதிரியே இந்த கண்ணீர் தான். அதுவும் உன் புருசன் மாதிரி ஆளுங்களுக்கு, நீங்களே உங்கள இன்னும் கொஞ்சம் குனியுறோம், நீங்க அடிங்க அப்படின்னு சொல்லுற போல இருக்குக்கா. உன் புருசனேட மிக பெரிய பலமே உன் கண்ணீர் தான். அத காட்டி நீ எங்கள பலவீனம் ஆக்காதக்கா??”
“நீ ரெண்டு பசங்கள வைச்சு இருக்குற. இனிமேல  அவங்களுக்காகவாது இப்படி அழாத. அவரு செய்யுறது தப்புன்னு தெரிஞ்ச எதுத்து நில்லு, இல்லையா… அவருக்கு எதிரா நீ இருக்குற அப்படின்னற விசயத்தையாவது புரியவை.” 
“என்னடா தம்பி… என்னன்னமோ சொல்லுற. நீ சொல்லுற எதுவும் எனக்கு புரியலை!!” என்றார் தங்கம் ஒரோ வார்த்தையில். அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் தலையில் அடித்து கொள்ள அருள் தான் சிரித்துவிட்டான்.
“உனக்கு எதுவும் புரிய வேண்டாம் விடு. இனி நான் பாத்துக்குறேன். இப்ப சிரி அது போதும்” என்றவன் அவர் சிரிக்கும் வரை விட வில்லை.
அருள், காயத்ரியை பார்க்க அவளோ இவனை இன்னும் முறைத்த படி தான் இருந்தாள். ‘இவளுக்கு என்ன ஆச்சு காலையில இருந்தே முறைச்சுக்கிட்டே இருக்கா??’  
அவளோ மனதில் ‘அக்கா அழுதா சமாதானம் செய்ய தெரியுது?? ஆனா… பொண்டாட்டி அழுதாமட்டும் காரணம் தெரியாதாமா!! வரட்டும் இன்னிக்கு இருக்கு கச்சேரி’ என்று நினைத்தவளுக்கு மறந்து விட்டது.
தான் தான் அவன் மீது கோபமாக பேசாமல் இருப்பது. அவன் பேசினாலும் பேசகூடாது என்று முடிவு எடுத்து இருப்பது என்பது எல்லாம்.
இந்த ஒரு நாளில் அவள் இதை மட்டுமா மறந்தாள்?? அருள் அவளை புனேயில் இருந்து அழைத்து வந்தது…  பேச்சியை நடிக்க வைத்தது என்று அனைத்தையும் தான்……………………….. 
 

Advertisement