Advertisement

“சிறு பெண் போல அவர்களின் ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை காட்டி பேசியவர், அதனை அவள் கேட்டாளா… இல்லையா… என்பதை எல்லாம் கவனிக்கவே இல்லை”   
சிறிது நேரத்தில் அருணாச்சலம் வந்தவர், “என்னம்மா, இன்னும் உங்க பேச்சு முடியலையா??” என்ற குரலில் தான் காயத்ரி சுயம் பெற்றாள். 
பூரணி “அடடே வந்துட்டீங்களா” பசங்கள பத்தி பேசிட்டு இருந்தேனா நேரம் போனதே தெரியலை.
“உனக்கு பேச ஆள் இருந்தா, எனக்கு சாப்பாடு கிடைக்காதுன்னு தெரியும். அதனால இப்ப எனக்கு சூட ஒரு கப் டீ குடு, அத குடிச்சுட்டு நா போயிடுறேன், நீங்க உங்க பேச்ச தெடர்ந்துக்குங்க என்றவரை பூரணி முறைத்தார். உங்களுக்கு பேச்சு வரலைன்ன… அதுக்கு நான் பழியா??  நீங்களே பேசுங்க” என்றவர் கேபமாக உள்ளே சென்றார்.
அவரின் கோபத்தை பார்த்து பயந்த காயத்ரியை, “அருணாச்சலம் சும்மா என சைகை செய்தவர், பட்டு… பட்டு இப்படி கோப படாத பட்டு, என அவரின் பின்னால் போக   இவர்களின் பேச்சினை கேட்டவளுக்கு தான் நினைவுகள்  பின்னால் போக கண்கள் கலங்க ஆரம்பித்தது.”
சிறிது நேரத்தில் பூரணி கையில் டீயுடன் வந்தவர் காயத்ரியை பார்க்க, அவளின் சிந்தனை இங்கு இல்லை என்பதை உணர்ந்தார். அவளை கவனிக்காதது போல் “ரேஸ்மா இங்க வா” என சத்தம் கொடுக்க அவரின் சத்ததில் தெளிந்தாள்  காயத்ரி. 
“ரேஸ்மா பன்னிரண்டு வயது வெண் பஞ்சு மேகம்…. இளம் ரேஜா இதழ் நிறம்… துரு துரு கண்கள்… சிரிக்கும் போது விழும் கன்னக்குழி…  பெயருக்கு தகுந்தாற் போல் பட்டாய் சருமம்… கால் முட்டி வரை நீண்ட கருமை நிற முடி, அந்த சின்ன சிட்டை தேவதை என கூறியது. யாரோ செய்த தவறின் விழைவு வலி மட்டும் இவளுக்கு”
சரும நிறத்திற்கும், உடையின் நிறத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத முட்டி வரை இருந்த ஃபிராக்கிள் குடு குடுவென ஓடி வந்தாள் ரேஸ்மா.
“என்ன பாட்டி??”  என்று பூரணியை கேட்டவாறே வந்தவளை இமைக்க மறந்து பார்த்தாள் காயத்ரி.  என்னம்மா.. அப்படி பாக்குற?? என பூரணி கேட்டார். காயத்ரி மெதுவாக ரேஸ்மாவின் கன்னங்களை தொட்டவள், அதன் மிருது தன்மையில் சட்டென கைகளை பின்னிழுத்து கொண்டாள்.
“பூரணிம்மா… நிஜமாவே இது பொண்ணு தான?? அப்படியே பொம்மை மாதிரி இருக்கு…” என கண் இமைகளை படபடவென அடிக்க பார்த்திருந்த  இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.  
“ரேஸ்மா புதியவளை ஆசையாக பார்த்தவள், அவளை போலவே இமை தட்டி யார் பாட்டி இது??” என்று கேட்க, இப்போது காயத்ரிக்கே சிரிப்பு வந்து விட்டது. “க்யூட்டி என்றவள் அவளை  தன் மடியில் அமர்த்திக்கொண்டாள்”
“இது ரேஸ்மா… என் பேத்தி என்று காயத்ரிக்கும், இது காயத்ரி… என் பொண்ணு என்று ரேஸ்மாவிற்கும் அறிமுகம் படுத்தினார் பூரணி. காயத்ரியை தன் மகள் என்றதில் கண்களில் இருந்து நீர் வர… இங்க வர்ற எல்லாரும் என்னோட பொண்ணுங்க தான் என்றவர் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டாள் காயத்ரி.”
‘பூரணிம்மா, ரேஸ்மாவுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கவா??” என காயத்ரி கேட்க அதோ அந்த முக்குல ஒரு கடை இருக்கு அங்க போங்க. பட்டும்மா  காயத்ரிக்கு வழி காட்டு.. போயிட்டு வாங்க என அனுப்பி வைத்தார் பூரணி.
ரேஸ்மாவும், காயத்ரியும் சென்றதும் உள்ளே வந்தவரை அருணாச்சலம்  “போயாச்சா?? என கேட்டார்.. ம்ம் போயிட்டாங்க… இப்ப சொல்லுங்க” என்றவருக்கு சருமதி சொன்னதை சொல்ல, சரி அப்ப பேசிடுங்க என்றார்.
தொலை பேசியில் நம்பரை அழுத்தி விட்டு  இணைப்புக்கா காத்திருந்தவர் அந்த பக்கம் அழைப்பை எடுத்தவுடன்… 
“ஹலோ நான் அருணாச்சலம்  பேசுறேன், எப்படி இருக்கீங்க??” 
……
ம்ம் நல்லா இருக்கோம்.  “அவளுக்கு என்ன ராஜாத்தி நல்லா இருக்கா” 
……
“சரி வாங்க வைச்சுடுறேன்” என அழைப்பை துண்டித்தவர் முகத்தில் நிம்மதியின் சாயல்.
“பத்து நாட்கள் ஓடியே போனது காயத்ரி இங்கு வந்து. அவள் இந்த ஆசிரமம் பற்றி தெரிந்து கொண்டது எல்லாம், இங்கு யாரும் தங்க வைக்கப்படுவது இல்லை… அதிகம் போனால் மூன்று நாட்கள், அதற்குள் அவர்களுக்கு தகுந்த வேலையோ அல்லது இடமோ ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி விடுவார்கள். அவர்கள் சென்ற பிறகும்  இவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள்.” 
இதில் “ரேஸ்மா மட்டும் விதி விலக்கு. அந்த பிஞ்சு பிறந்ததே இங்கு தான். பூரணியின் மகன்களின் விருப்பத்தால் அந்த குழந்தையை இவர்கள் சட்டபடி தத்து எடுத்துக்கொண்டனர்.”
“ரேஸ்மிக்கும் அண்ணன்கள் என்றால் அப்படி ஒரு பிடித்தம். இவர்களை விட பிடித்தம் மற்றொருவனிடமும் உண்டு. அவன் தான் இவளின் உலகம். அவன் எது சொன்னாலும் கிளி பிள்ளையாய் செய்வாள் ரேஸ்மா.”
காயத்ரிக்கு தகுந்த வேலை இன்னும் அமையாததால், இன்னும் இங்கேயே இருக்கின்றாள்.  இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவளால் மூன்றாம் நாள் இருக்க முடியவில்லை.
அருணாச்சலம் கூறியும், அவருடன் அவருக்கு துணையாக அவருடன் செல்வது… இங்கு வரும் பெண்களுக்கு தேவையானதை கவனிப்பது உடன்… ரேஸ்மாவின் படிப்பையும் பார்த்துக்கொண்டாள். 
“காயும்மா… காயும்மா என்ற ரேஸ்மாவின் குரலுக்கு, இங்க வா கியூட்டி… இப்படி வா…  இங்க புடி… அங்க சுடும்… என காயத்ரி பதில் குரல் கொடுக்க, இவங்க ரெண்டு பேரும் பண்ணுற அலப்பறை இருக்கே’  என்ற குரல் வந்தது பூரணிடம் இருந்து. 
“ரேஸ்மா இன்று தனக்கு ரசமலாய் வேண்டும் என்று கேட்டாள். காயத்ரி கடையில் இருந்து வாங்கி வந்ததை சாப்பிட வில்லை. வீட்டில் தான் செய்ய வேண்டும் என்று அடம் செய்தாள். காயத்ரிக்கு தெரியாது என்றாலும் செய்து தந்தாள் அவளுக்காக”
“ஏலக்காய் சேர்த்தால் ரேஸ்மாவுக்கு அலர்ஜி ஆகும்…  அந்த வாசனை இல்லாமல் கடையிலும் கிடைக்காது?” அதனால் அவளுக்கு மட்டும் வீட்டிலேயே செய்வார் பூரணி. 
                                                                                                                                                                                                                                                                                               
“இன்று கொஞ்சம் வெளி வேலை இருந்ததால் அவரால் முடியவில்லை. காயத்ரிக்கு சுடு தண்ணீர் தவிர, வேறு செய்ய தெரியாது!! நகம் உணரும் அளவிற்க்கு சூடு செய்து விட்டு இதுதான் சுடு நீர் என்று வாதம் புரிபவள்??!!”
“காலையில் இருந்து பழகி… இப்போதுதான்!!! மூன்று உருண்டைகள் செய்து இருந்தால் காயத்ரி. அதற்குள் தனக்கு வெந்தய களி வேண்டும் என்று ரேஸ்மா சொல்ல பாவம் காயத்ரி”
“மாவை போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க… பாத்திரம் ஒரு புறமும் இவர்கள் ஒருபுறமும் சண்டை போட…. இடையில் சமாதானத்திற்கு வந்தார் பூரணி”
“பூரணி இன்னும் முடியலையா… உங்க வேலை??” அது முடிஞ்து, கியூட்டி தான் வேற என்னமோ பண்ண சொல்லுறா?? அது எனக்கு வராது… என்றவளை பூரணி பார்க்க வெந்தய களி எனக்கு கட்டி கட்டியா வருது, என்ன பண்ண??” 
“முகம் முழுவதும் மாவு இருக்க, பாவமாய் பார்தவளை பார்த்த பூரணிக்குதான் சிரிப்பாய் இருந்தது. பூரணிம்மா என காயத்ரி சிணுங்க… போயி முகத்தை கழுவு நான் பண்றேன் என்றவரின் முகத்தில் முத்தமிட்டு சென்றாள்”
“மாவுடன் போட்ட சண்டையில் உடல் வலி எடுக்க… குளித்தவள், லாங்க் ஸ்கர்ட்டும் மேலே டீ சர்ட்டும் போட்டு வெளியில் வர, காயும்மா… பாக்க என்னைய மாதிரியே  இருக்கீங்க!! என்றாள் ரேஸ்மா
“இனிமே புடவை கட்டாதீங்க!?” என்றவளை  இழுத்து கன்னதில் முத்தம் இட வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
ஐ…. “சித்தா வந்தாச்சு” என்று பிடித்து இருந்த காயத்ரியை தள்ளி விட்டு வாசலுக்கு ஒடினாள் ரேஸ்மா. 
“யாரும்மா  வந்து இருக்காங்க??” கியூட்டி இப்படி ஓடுறா. கேட்டவளுக்கு அவளோட சித்தப்பா என்று பதில் சொன்ன படி பூரணி சென்றார் வந்தவரை வரவேற்க.
“யாரோ, நமக்கு என்ன??” என தோளை குழுக்கியவள் தனது அறைக்கு சென்று விட்டாள்.  
“சித்தா… என்று ஓடி வந்தவளை பட்டும்மா…!!! என கைகளில் அள்ளி தூக்கி போட்டு பிடித்தவனை, கன்னம் சிவக்கும் அளவிற்க்கு  முத்தம் தர  அனைத்தையும் வஞ்சனை இன்றி மீண்டும் அவளுக்கு தந்தான் அவளின் சித்தா.”
“ஏன் சித்தா லேட்டு?? நீங்க வருவீங்கன்னு எப்ப இருந்து வெயிட் பண்ணறேன் தெரியுமா!! வாங்க… வாங்க உங்களுக்கு என்னோட புது ஃபிரண்ட காட்டுறேன்” என வந்தனை பேச விடாமல் அவனிடம் பேச,  அவளின் பேச்சில் குறுக்கிடாமல் அவள் பேசும் அழகினை  ரசித்து இருந்தான் வந்தவன்.
“பட்டும்மா… இப்ப தான சித்தா வந்தாரு?? முதல்ல தண்ணி கொண்டு வா.. என்று ரேஸ்மாவை  சமையல் கட்டிற்கு அனுப்பினார் பூரணி.”
“எப்படி அத்தை இருக்கீங்க??” கேட்டவனை நல்லா இருக்கேம்பா என்றவர் “அதோ அந்த ரூம் தான்” என கை காட்டினார் பூரணி. பட்டுவ பாத்துக்கோங்க என்றவன் அறை நோக்கி சென்றான் .
“கதவு திறக்கும் ஓசையில் ரேஸ்மா என நினைத்தவள் திரும்பி பார்க்க, வந்தவனை பார்த்து விக்கித்து போய் நின்றாள் காயத்திரி”
 
“வந்தவனையே இமைக்காமல் காயத்ரி பார்த்து இருக்க…. அவளின் அருகில் வந்தவன் கொடுத்த அறையில்… அப்படியே விழுந்தாள் கட்டிலில்”
“கொடுத்த அடி போதுமா?? “திருமதி காயத்ரி அருள் மொழி வர்மன்” கேட்டான் அவளின் கணவன் அருள் மொழி வர்மன்” 
                                     

Advertisement