Advertisement

           ஓம் நம சிவாயா
உன்னில் என்னை தேட வா 
அத்தியாயம் 1
“தண்ணீரை பூவாய் அவள் மீது தூவி, அம்மாடி பாரு… கண்ண திறம்மா திறந்து பாரு என்றவர் புனேயின் கஸ்தூரி சேவா சமிதியின் நிர்வாகி திருமதி பூரணி அருணாச்சலம்” 
“அருணாச்சலம் புதுக்கோட்டையை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயும், தந்தையும் இறந்து போக, மாமன்  பெரியநாயகத்தின் ஆதரவில் படித்து அரசாங்க பணியில் அமர்ந்தார்.”
“பார்த்து வெகுநாட்கள் ஆனதால்… ஒரு முறை ஊருக்கு வா என்று நாயகம் அருணாச்சலத்தை அழைத்தார். பணியில் சேர்ந்த புதிது என்பதாலும் இப்போது விடுமுறை கிடைக்காது என்பதாலும்  அவர்களை சென்னை வருமாரு கூறினார் அருணாச்சலம்.”
அவர் கூறியதின் காரணம், “இதுவரை அவர்கள் அந்த ஊரைவிட்டு வெளியே எங்கும் சென்றதில்லை.”  அவர்களை ஊர் சுற்றி காட்டும் ஆவல் காரணமாகவே அவர்களை இங்கே வர சொன்னது. இதையும் விட முக்கிய காரணம் “பூரணி” நாயகத்தின் ஒற்றை மகள். சிறு வயதில் இருந்தே அவளின் மீது விருப்பம் உண்டு அருணாசலத்திற்கு.
“மாமனை போலவே அவளை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும்… அதற்கு படித்து நல்ல வேலையில் இருக்க வேண்டும்… அதன் பிறகே அவளிடம் தன் ஆசையை கூறி மாமனிடம் பெண் கேட்க வேண்டும் என நினைத்தார்.”
இதோ… “அவர் எண்ணியது போலவே படிப்பு, வேலை என்று நினைத்ததை முடித்து, இன்று மாமனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்க நினைத்தார். கோவிலுக்கு சென்று வந்து  பேசலாம் என காரினை ஏற்பாடு செய்ய, பூரணிக்கு மாதாந்திர விலக்கு வரவே அவராளும், ஆபீசில் முக்கிய அலுவல் என தகவல் வர அருணாசலத்தாலும் போகமுடியவில்லை.”
“பெரியநாயகமும் அவர் மனைவியும் மட்டும் போக திரும்பியது அவர்களின் உடல்கள் மட்டுமே!!”
“தாய், தகப்பனின் மறைவுக்கு பிறகு தனக்கு அனைத்துமாய் ஆனவர்… தான் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அவரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும், என நினைத்தவருக்கு அவர்களின் இறுதி காரியத்தை செய்யும் வாய்ப்பு மட்டுமே கிடைத்து.”
“அவர்களின்  காரியம் முடிந்து முப்பதாம் நாள் பூரணியின் முழுசம்மத்தோடு அவறை தன் சரிபாதியாக்கிக்கொண்டார் அருணாச்சலம்.”  
மத்திய அரசின் கீழ் அருணாச்சலத்தின் பணி வருவதால், அடிக்கடி ஊர் மாற்றம் மற்றும் மொழி பிரச்சனை பூரணிக்கு.  
“பூரணி உயர் நிலை கல்வி மட்டுமே முடித்திருக்க குழந்தைகளை வைத்துக்கொண்டு கல்லூரிக்கும் போகமுடியாத சூழ்நிலையில் வீட்டிலிருந்தே படிக்க வைத்தர் அருணாச்சலம்.”
“அந்த படிப்பே தங்களை போன்று  உறவுகள் யாரும் இல்லாமல்… வாழ்கைக்கு வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்வது என்ற எண்ணத்தை வளர்த்தது.”  
“அவர்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் சிறு தொண்டு நிறுவனம் தொடங்கி அவரால் முடிந்த உதவிகளை செய்தார்.” ஊர் மாற்றல் ஆனால் அதை தன்னுடன் பழகிய உதவும் மனதுள்ளவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிடுவார் பூரணி.
கடைசியாக  புனேவுக்கு மாறுதல் வர, “அருணாசலத்தின் உடல் நிலை காரணமாக இனி இடமாறுதல் வேண்டாம் என முடிவெடுத்தார் பூரணி”  அங்கே தன் அத்தையின் நினைவாக “கஸ்தூரி சேவா சமிதி” என்ற அமைப்பினை தெடங்கினார்.
“தண்ணீர் முகத்தில் பட, கண்களை திறந்தவள் பார்த்தது  தன்னையே பரிதவிப்பாக பார்த்து கொண்டு இருக்கும் பூரணியைத்தான்.”
“ஐந்தடி உயரம், கோதுமை நிறம், நீள்வட்ட முகம், சிறிய நெற்றி அதையும் மறைக்க துடிக்கும் கற்றை முடி, வில் புருவத்தின் கீழே அழகான கண்கள், சிறிய கூர்  நசி, அதில் ஒய்யாரமாய்  இது என் இடம் என அமர்ந்து இருக்கும்  ஒற்றை வெள்ளை கல் மூக்குத்தி, செப்பு உதடுகள் கொண்ட வாய், காதிலும், கழுத்திலும் இருக்கு ஆனா இல்லை என்னும் படியான சிறிய தோடு, செயின் கையில் ஒற்றை வளையல், வாட்ச் அவ்வளவே.” 
“உடையிலும் அத்தனை நளினம், சிறிய கறையிட்ட லைட் பிஸ்கட் கலர் பெங்கால் காட்டன்.  அந்த புடவை தான் அவளை சற்று பிடிப்பாக காட்டியது. தான் கொடுத்த இட்லியை அமர்ந்து சாப்பிட்ட படி  இருந்தவளை ஆசையாக பார்த்து கொண்டிருந்தனர்  பூரணி.” 
சாப்பிட்டு கை கழுவி வந்தவள் அவர்களுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
“வெள்ளை நிற பைஜாமாவில், நெற்றியில் பட்டையுடன் வந்தவர் பூரணியை பார்த்து சிரிக்க, அதுக்குள்ள  கிளம்பிட்டீங்களா இருங்க வர்றேன் என சேரைவிட்டு எழுந்தார் பூரணி. இரு பூரணி, என அவரின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.  அமந்தவரை இவர் தான் என் கணவர் அருணாச்சலம் என அறிமுகம் படுத்தினார் பூரணி.”
வணக்கம் சார்…. என்றவள் தன்னை அறிமுகம் செய்ய துவங்கினால். “என்னோட பேர் காயத்ரி… அப்பா, அம்மா  என நிறுத்தி அவர்களின் முகம் பார்க்க, ம்ம்… சொல்லுமா என பூரணி கூற, அவரை கை நீட்டி தடுத்தார் அருணாச்சலம்.”
“சாருமதி  என்கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்கம்மா!!” உனக்கு இங்க எந்த தொந்தரவும் இருக்காது என்றார் அருணாச்சலம். பூரணியை பார்த்து பூரணி காயத்ரிக்கு என்ன வேணுன்னு பாத்துக்க… நா கலெக்டர் ஆபீஸ் போயிட்டு வர்றேன் வந்து பேசலாம், என்று சென்று  விட்டார்.
பூரணி  அருணாச்சலத்தை அனுப்பி வைத்தவர் காயத்ரியிடம் “எதுக்குமா மயக்கம் போட்டு விழுந்த??”
“வண்டி எங்க அந்த பசங்க மேல மோதிடும்ன்னு வேகமா அவங்கள இழுக்க போனேனா… அந்த கல்லு தட்டி விழுந்துட்டேன் அது தான் மயக்கமாகிட்டேன்” 
“இது மாதிரி நிறைய கல்லு வாழ்கையில வரும் சரியா… அதுக்கு எல்லாம் பதட்டபட கூடாது என்று காயத்ரியை  பூரணி ஆழ்ந்து பார்க்க”
“சாரி மேடம்” என்றாள்  காயத்ரி.  பூரணி எதுவும் பேசாமல் முன்னேபோக காயத்ரிக்குதான் ஒரு மாதிரி இருந்தது. 
மேடம்… என்று பூரணியை அழைக்க திரும்பியவர் “யாரு என்னையா கூப்புட்ட??” என கண்களை விரித்து கேட்க காயத்ரி தலையை ஆமாம் என மேலும் கீழும்  அசைத்தாள். என்னைய பாத்தா அவ்வளவு பயங்கரமாவா தெரியுது!!! என்றவர் அழகா பூரணி சொல்லு என்றார்  கண்களை உருட்டி.
“காயத்திரி  என்ன பதில் சொல்ல!!!  என தெரியாமல் விழித்து நிற்க, அவளை பார்த்தவர் இங்க எல்லாரும் என்னைய மம்மிஜி இல்லனா மேடம்” அப்படிதான் கூப்புடுவாங்க அதனால என் பேரே மறந்து போச்சு!! 
“அதுதான் நீயாவது என் பேர சொல்லி கூப்பிடேன்” என அவர் கேட்ட பாவனை அவளுக்கு சிரிப்பினை வர வைக்க “பூரணி இல்ல பூரணிம்மா” சரியா என காயத்ரி  கேட்க டபுள் ஓகே என கை விரல்களை உயர்த்தி காட்டினார் பூரணி.
நீங்களும், சாரும் தனியாவா இருக்கீங்க!! என்றவள் முகத்தை பார்க்க, நான் அம்மா, அவரு சாரா?? என பூரணி கேள்வி கேட்டார். சாரி… அப்பா அவளின் அப்பா என்ற உச்சரிப்பில் அத்தனை மென்மை இருந்தது.
ஆமா… நானும் அவரும் மட்டும் இங்க இருக்கோம். பசங்க ரெண்டு பேரும் வெளி நாட்டுல இருக்காங்க… என்றவரை ஆச்சரியமா காயத்ரி பார்க்க, பூரணி என்னம்மா அப்படி பாக்குற?? 
“பசங்க ரெண்டு பேர் இருக்காங்க, ஆனா நீங்க இங்க தனியா இருக்கீங்க??” 
“யாரு நாங்களா தனியா இருக்கோம்!! உறவுகள் இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். அது தான் இந்த உலகத்தையே நாங்க உறவா ஆக்கிக்கிட்டோம்.”  தாங்கள் இங்கு வந்த  கதையை பூரணி சொல்ல அதை கேட்டு அப்படியே அமர்ந்து இருந்தாள் காயத்ரி.
“என்னம்மா??  என காயத்ரியின் கைகளை பூரணி பிடிக்க, உங்களுக்கு பெரிய மனசுமா” என்றவளை பூரணி இதுல ஒரு சுய நலமும் இருக்கு என்றார்.
 
காயத்ரி, “சுயநலமா!! உங்களுக்கா??”
ம்ம்.. ஆமா.. “மாமியாருக்கு மருமக சமைச்சு போடனும்… இது தான் எனக்கு சொல்லி குடுத்தாங்க.  நானே சுமாராதான் சமைப்பேன்..  அதுல நான் பெத்த ரெண்டும் சமையல் தெரியாத பொண்ணா பாத்து கட்டி இருக்காங்க..  அப்பறம் எப்படி நா அங்க போறது?? அது தான் அவங்க சமையல் பழகுற வரைக்கும் அங்க போறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.”
காயத்ரி சிரிக்க, ஆனா… என் போர பசங்க சூப்பர்!! இப்பவே இந்த பாட்டிக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சு இருக்காங்க. வா… வா.. உனக்கு அவங்கள காட்டுறேன் என்றவர் அவரின் அறைக்கு அவளை அழைத்து சென்றார்.

Advertisement