Advertisement

“குட் நைட்”, என்று சொல்லி விட்டு மீரா போனவுடன் சாப்பாட்டை டேபிள் மீது வைத்தவன் அறை கதவை அடைத்து விட்டு அவள் அருகில் சென்றான்.
போர்வையை கழுத்து வரை மட்டும் விலக்கிய மது “அவளே காலைல பாக்குறேனு சொல்றா. நீங்க உள்ள கூப்பிடுறீங்க. இப்படியே அவ கிட்ட எப்படி பேசுறதாம்?”, என்று சிணுங்கினாள்.
“ஹா ஹா, சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். மீரா அப்படி செய்ய மாட்டான்னு தெரியும். சரி வா சாப்பிட்டு பேசலாம். இன்னைக்கு நைட் எப்படியும் நாம பேசணும்னு தான நினைச்சோம்”
“இப்படியே எப்படி வரது? டிரஸ் ஒன்னையும் காணும். எதாவது எடுத்து தாங்க”
“கதவு பூட்டி இருக்கு. நான் ஊட்ட போறேன். நீ சாப்பிட போற. அப்புறம் எதுக்கு டிரஸ்? அதுக்கப்புறம் மறுபடியும் கழட்ட வேண்டி இருக்கும். அது எதுக்கு வேஸ்ட்டா?”, என்று கேட்டு அவளை வெட்க பட வைத்தான் தேவா.
அடுத்து அவளுக்கு உணவை ஊட்டி விட்டு கொண்டே அவனும் சாப்பிட்டான்.
“நல்லதா போச்சு, மீரா சப்பாத்தி கொண்டு வந்தா. நீ அழுதுட்டே இருந்தியா. உன்னை சமாதான படுத்திட்டே இருப்பேன். அப்ப எங்க சாப்பிட தோணும்னு நினைச்சு வீறாப்பா பால் மட்டும் போதும்னு சொல்லிட்டேன். ஆனா நீ கொஞ்ச நேரம் அழுதுட்டு எனக்கு வேலையை கொடுத்துட்ட. இதுல இன்னொரு தடவைனு சொல்லி அடுத்த ஷிபிட் வேற. எல்லாரும் ரூமுக்குள்ளே ஒரே சமாதானம் னு நினைச்சிருப்பாங்க. நம்ம சமாதானம் பாரு எப்படி இருக்குனு”, என்று சிரித்தான் தேவா.
“இப்ப நீங்க என்கிட்ட அடி வாங்க போறீங்க. இன்னும் கிட்ட  வந்தீங்கன்னா அடி தான்”
“கிட்ட வந்தா அடி யா? நைட் முழுக்க இந்த வேலை தான்னு காலைலே பிளான் பண்ணிட்டேன்”
“உங்களுக்கு தான் டயர்ட் ஆகிருமே”, என்று கண்ணடித்தாள் மது.
“ஏத்தி விடாதடி, இனி நீயா போதும் அத்தான். விடுங்க வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் விடுறதா இல்லை”, என்று சிரித்தான் தேவா.
அன்றைய  இரவு  அவர்களுக்கு  மற்றொரு முதலிரவாக அமைந்து போனது. 

பேச வேண்டும் என்று முடிவு எடுத்து அதை இருவரும் மறந்தே போனார்கள். எப்போது உறங்கினார்கள் என்று அறியாமலே கண்ணயர்ந்தார்கள்.

காலை விழிப்பு வந்தது மதுவுக்கு.  இருக்கும் நிலைமையை பார்த்தாள். அவன் கைகளுக்குள் அவளை சுருட்டி இருந்தான் தேவா. இருவரையும் ஒரு போர்வை மூடி இருந்தது.

“போர்வை இல்லைன்னா மானம் போயிருக்கும்”, என்று நினைத்து சிரித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தாள்.

எப்படி பட்ட கணவன் அவளுக்கு கிடைத்திருக்கிறான், என்று நினைத்து பூரிப்பாக இருந்தது. அவள் முகமும் மனதும் மலர்ந்து போனது.

அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருள் இன்னும் நன்கு விடிய வில்லை என்று சொன்னது.

அந்த அதிகாலை பொழுது, அவள் மனம் கவர்ந்த கணவன் அனைத்தும் சேர்ந்து ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல உணர்ந்தாள் மது.

நேற்றைய நிலைமை கண் முன் வந்தது. அதை நினைத்து மனம் கசங்கியது. “ஒரு நிமிடம் அவன் என்னை யார் என்று கேட்டிருந்தால் இப்படி பட்ட வாழ்வு மறுபடியும் என் கைக்கு கிடைத்திருக்குமா? அவன் மார்பில் தலை வைத்து படுத்திருக்கும் சுகம் கிடைத்திருக்குமா? என் காதல், என்னவனை எனக்கே எனக்கென்று மீட்டு தந்திருக்கிறதா?

அம்மா, அப்பாவே என்னை அடையாளம் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களே. தேவாவும் அப்படியே குழம்பி இருந்தா? என் நிலைமை. இந்நேரம் எங்கே முடங்கி அழுது கொண்டிருப்பேனோ? வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வரவே கூடாது. அதுவும் ஒன்றாக ஒரே கருவில் உருவாகி, ஒரே மாதிரி பிறந்த சொந்த அக்காவாளே இந்த நிலைமையா? இனி  என்னால் அவள் முகம் பார்த்து பேச முடியுமா?”, என்று நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

அதை துடைக்க கைகளை அசைத்தாள் மது. அந்த அசைவில் முழித்து கொண்ட தேவா, தன் கைகளால் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

“எழுப்பி விட்டுடேனா அத்தான்?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் மது.

“ம்ம் அசைஞ்ச உடனே முழிச்சிட்டேன் டி. ஆமா இப்ப எதுக்கு இந்த அழுகை?”

“நேத்து நீங்க என்னை அடையாளம் கண்டு பிடிக்கலைன்னா என்ன ஆகிருக்கும்னு யோசிச்சேனா?”

“லூசு லூசு, நீ என்னோட உயிர் செல்ல குட்டி. உன்னை எப்படி டி கண்டு பிடிக்காம இருப்பேன்? ஆனா எனக்கு ஆச்சர்யமா இருக்கு டி. எனக்கு கூட பிறந்தவங்க இல்லை. ஆனா மனோஜ் சின்ன  வயசுல  இருந்தே  என் கூட இருக்கான். ரொம்ப அன்பா இருப்பான். ஆனா நாங்களும் சின்ன சின்ன விசயத்துக்கு சண்டை போட்டு  ரெண்டு நாள் மூஞ்ச தூக்கிட்டு இருப்போம். எங்க அம்மா சேத்து வைப்பாங்க. ஆனாலும் நாங்க ஒருத்தொருக்கொருத்தர் விட்டு கொடுத்தது கிடையாது. உனக்கு முன்னாடியே அவன் கண்ணை எனக்கு தரேன்னு சொல்லி புலம்பிட்டு தான் இருந்தான்.  ஆனா கூடவே இருந்த உன்னோட அக்கா இப்படி செய்வானு நான் நினைக்கவே இல்லை மது”

“எனக்குமே அதிர்ச்சியா தான் இருக்கு அத்தான்”

“ஒரு வேளை  நான் உன்னை உணராம, உன்னை கண்டு பிடிக்காம போயிருந்தா நினைக்கவே அருவருப்பா இருக்கு மது. ஏன் மது இப்படி பட்ட ஒரு ஈனத்தனமான காரியத்தை உங்க அக்கா செஞ்சா? எனக்கு  நினைக்க நினைக்க கொலைவெறியே வருது டி. ஆனா நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் மது. உன்னோட முகம் அவளுக்கு இருக்கே. அதனால என்னால அவளை காய படுத்த முடியலை. அவ முகம் பாத்து கூட எனக்கு பேச தோணலை”

“அத்தான்”

“அவ கல்யாணத்தை நிறுத்தும் போது சுயநலக்காரின்னு தான் நினைச்சேன். இப்படி கொடூரமானவளா இருப்பானு தெரியாது டா குட்டி. அவளுக்கு உன் மேல என்ன கோபம் மது? பணம் மேல ஆசை இருந்தா கண்டிப்பா இப்படி செய்வாங்க. ஆனா கூட பிறந்தவளோட வாழ்க்கையை கெடுப்பாங்களானு எனக்கு தெரியலை மது?”

“சின்ன வயசுல இருந்தே அவளுக்கு என்னை பிடிக்காது அத்தான்”

“சின்ன வயசுல இருந்தா?”

“ஆமா அத்தான். அவளுக்கு என்னை கண்டாலே பிடிக்காது. அவளை மாதிரியே இருக்கேனு என்னை வெறுப்பா தான் பாப்பா. நான் அம்மா, அப்பா மடில உக்காந்திருந்தா கூட தள்ளி விட்டுருவா. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மி அத்தான். என்னால அவ கூட சண்டை கூட போட முடியாது. ஈஸியா என்னை அடிச்சிருவா. இப்ப தான் ஸ்ட்ராங்கா இருக்கேன். ஆனா ஸ்கூல் படிக்கும் போது சொங்கி மாதிரி தான் இருப்பேன்”

“இப்பவும் எங்க ஸ்ட்ராங்கா இருக்க? கொஞ்சம் வேகமா தொட்டா போதும் சிணுங்குற. ஆனா அது, கூட கொஞ்சம் தான் வேகம் கூட்ட சொல்லுது”, என்று சிரித்தான் தேவா.
“ப்ச் போங்க அத்தான்”

“சரி சரி நீ கதையை சொல்லு”

“ம்ம் அதனால அம்மா, அப்பா என்னை அதிகமா கேர் எடுத்துக்கிட்டா அவளுக்கு பிடிக்காது. அவளுக்கு பிடிக்காதுன்னு என்னை ஹாஸ்ட்டல்ல சேத்தாங்க. அதுவும் வேற ஸ்கூல்ல. அவ கூட இருந்தா சண்டை போடுவா. அதனால தான் மா ஹாஸ்டல்ன்னு அப்பா, அம்மா என்னை   சமாதான படுத்துவாங்க. எனக்கும் அது பழகிட்டு. ஆனா லீவுக்கு வீட்டுக்கு போனா கூட பிரச்சனை பண்ணுவா. அப்புறம் பன்னிரெண்டாப்புல நல்ல மார்க் வாங்கியிருந்தேன். அவ கம்மியா வாங்கிருந்தா. எனக்கு டாக்டர் சீட் கிடைச்சிருக்கு. ஆனா  நான் டாக்டருக்கு படிக்க கூடாதுனு சண்டை போட்டா. அதனால இன்ஜினியரிங் போனேன். அவளும் அதே சேந்தா. அப்புறம் இங்க வேலை கிடைச்சது. வேலை கிடைச்சப்பவும் அம்மா, அப்பா இருக்குற ஊருல வேலை செய்ய கூடாதுனு சொன்னா”

….

“சரின்னு வேற ஊருக்கு வேலைக்கு போனேன். ஆனா அடுத்து அவ பாரின் போய்ட்டா. சரி இனி அம்மா , அப்பா கூட இருக்கலாம்னு சந்தோச பட்டு இங்கே வேலை தேடிட்டு இருந்தேன். அப்ப தான் வீட்டுக்கு வந்திருந்தப்ப, அம்மா உங்களோட போட்டோவை காமிச்சாங்க. உங்க இஷ்டம் அம்மானு சொல்லிட்டேன்”


“ஆனா என் மனசுக்குள்ள உங்க முகம் பதிஞ்சு போச்சு அத்தான். வாழ்ந்தா உங்க கூட தான் வாழணும்னு ஆசை வச்சேன். என் மனசை முதல் முதல்ல தொட்டது நீங்க தான். போட்டோவை பாத்தே மயங்கி போய்ட்டேன் அத்தான். அந்த போட்டோவை பாத்தா எதாவது சொல்லுவாங்களோனு திருட்டு தனமா, என்னோட போன்ல சேவ் பண்ணிட்டு தினமும் உங்களை பாத்து ரசிப்பேன். உங்க கூட பேசுவேன். நீங்க தான் உலகம்னு நினைச்சிருந்தப்ப தான் அம்மா என் தலைல இடியை போட்டாங்க”


“பர்ஸ்ட் அவளுக்கு தான் மாப்பிள்ளை பாத்துருக்காங்க. அவ கிட்ட கேட்டதுக்கு எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாளாம். உடனே தான் என்கிட்ட காட்டினாங்க. நான் பிடிச்சிருக்குனு சொன்ன அப்புறம்  அவ கிட்ட மதுவுக்கு பாத்துருக்கோம்னு சொல்லி உங்களோட போட்டோவை அனுப்பிருக்காங்க. உங்களை யாருக்கு தான் அத்தான் விட்டு கொடுக்க தோணும்? அவ உடனே எனக்கு தான் இந்த மாப்பிள்ளை வேணும்னு சொல்லிட்டா”

…..
“அப்பா, அம்மா முழிச்சிட்டு இருந்தாங்க. எனக்கு விஷயம் தெரிஞ்சு என்ன செய்யன்னே தெரியலை அத்தான். உங்களை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்னு என்னால அம்மா, அப்பா கிட்ட சொல்ல முடியலை. அமைதியா இருந்தேன். சரி அக்காவுக்கு முதல்ல முடிப்போம் மதுனு சொல்லிட்டு அந்த விஷயத்தையே முடிச்சிட்டாங்க. அப்ப ரொம்ப அழுதேன் அத்தான். என்னால சகிச்சிக்கவே முடியலை. எல்லாத்தையும் விட்டு கொடுத்த என்னால உங்களை விட்டு கொடுக்க முடியவே இல்லை. அப்ப வலிச்ச வலி ரொம்ப அதிகம் அத்தான். உங்கள் நினைச்சுகிட்டு வாழலாம் னு நினைச்சேன். இங்க இருந்தா அவளையும் உங்களையும் பாக்க வேண்டி இருக்கும்னு, இங்க வேலை தேடுறதையே விட்டுட்டேன்.  அப்படி இருக்கும் போது தான் நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தீங்க”
“ஆமா மது, அம்மா ஒரு பார்மாலிட்டிக்காக போய்ட்டு வர சொன்னாங்க. ஆனா வந்த அன்னைக்கு உன்னை பாத்து நான் மயங்கிட்டேன் மது. யாருமே இல்லாம நீ மட்டும் இருந்த. கொண்டையை போட்டுக்கிட்டு, சின்ன பிள்ளை மாதிரி பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு வீட்டை கிளீன் பண்ணிட்டு இருந்த. அப்பவே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சு. அதுக்கு முன்னாடியே உன் போட்டோல எனக்கு புடிச்சிருந்தது. அது உன்னோட போட்டோ தானா மது?”
“ஆமா, அது என்னோடது தான். நீங்க எனக்கு செயின் போட்ட அன்னைக்கு தான் அதுல இருந்த போட்டோவை அம்மா கிட்ட காட்டி என்னோடது தான் குடுத்தீங்களானு கேட்டேன். ஆமானு சொன்னப்ப சந்தோசமா இருந்தது தெரியுமா?”
“நான் உன்னை அன்னைக்கு பாத்துட்டு போகும் போதே செயின் செய்ய கொடுத்துட்டு தான் வீட்டுக்கு போனேன். ஆனா வீட்ல பாத்த உன்னை பொண்ணு இல்லைன்னும், பொண்ணு பாரின்ல இருக்கான்னும் சொல்லிட்டாங்க அம்மா. ரொம்ப வெறுப்பா இருந்தது தெரியுமா? அன்னைக்கு பாத்த உன் முகம் என்னால மறக்கவே முடியலை”
“அன்னைக்கு எனக்கும் உங்களை பாத்து கண்ணை திருப்ப கூட முடியலை தெரியுமா? வதனிக்கு உங்களை பேசிருக்காங்கனு கூட எனக்கு மறந்தே போய்டுச்சு”
“தெரியும் டி. உன் கண்ல வழிஞ்ச காதலை நான் பாத்தேன்.  ஆனா அதை தப்பா வெட்கம்ன்னு நினைச்சிட்டேன்.  என்னை பாத்துட்டே கீழே விழ பாத்த. நான் தான உன்னை பிடிச்சேன்? அப்ப அப்படியே தூக்கிட்டு போகணும் போல இருந்தது. மனசுக்குள்ள பதிஞ்சு போய்ட்ட கண்ணம்மா. அப்படியே இறுக்கி கட்டிக்கணும் போல இருந்தது. கஷ்ட பட்டு உன்னை விலக்கி நிறுத்தினேன். எங்கே அங்கேயே இருந்தா, உன்னை காய படுத்துற மாதிரி எதாவது செஞ்சிருவேன்னு நினைச்சு தான் உன்கிட்ட ஒரு வார்த்தை பேசாம அப்புறமா வரேன்னு சொல்லிட்டு போய்ட்டேன். போகும் போதே
செயின் எல்லாம் யோசிச்சு சந்தோசமா வீட்டுக்கு போனேன். அம்மா குண்டை போட்டுட்டாங்க”
“ம்ம்”
“அப்புறம், உன் அக்கா வந்திருக்கானு சொல்லி எங்க அம்மா அவளை பாக்க உங்க வீட்டுக்கு வர சொன்னாங்க. நான் வரலைன்னு பிடிவாதமா சொல்லிட்டேன். ஒன்னு உன்னை பாக்க வேண்டி இருக்குமோனு நினைச்சேன். அதுவும் காதலா பாக்க முடியாதுன்னு நினைச்சு கவலையா இருந்தது. இன்னொன்னு உங்க அக்காவை பாக்கணும். ஏதோ உள்ளுக்குள்ளே வெறுப்பா இருந்தது. அதான். அப்பறம் உங்க வீட்டுக்கே வரலை. அப்புறம் ஒரு நாள் உங்க அக்காவே  ஆபிஸ் தேடி வந்தா. அப்பவே என்னால வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடிஞ்சது. அவளோட சென்ட் காட்டி கொடுத்துரும் குட்டி மா. நீ இயற்கை அழகி டி. ஆனா அவ அப்படி இல்லை. அஞ்சு நிமிஷம் மேல என்னால அவ கிட்ட பேச முடியலை. உன் கண்ணுல வழிஞ்சு காதல் அவ கிட்ட இல்ல. வேலை இருக்குனு சொல்லி கிளம்பி போய்ட்டேன்”
“நிஜமாவா அத்தான்?”
“ஆமா டி, ஆனா உங்க அக்காவை என்னோட மனைவியா என்னால கற்பனை கூட செஞ்சு பாக்க முடியலை. மனசு முழுக்க வேதனைல தான் இருந்தேன். அப்ப தான் அந்த ஆக்சிடென்ட் நடந்துச்சு”
“அதை பத்தி பேசாதீங்க அத்தான். என்னால தாங்கிக்க முடியாது. கல்யாணத்துக்கு வரணுமேன்னு வேற வழி இல்லாம தான் வீட்டுக்கு வந்தேன். அப்ப தான் ஆக்சிடென்ட் விஷயம் தெரிஞ்சது. துடிச்சு போய்ட்டேன். உடனே உங்களை பாக்கணும்னு தோணுச்சு. என்ன செய்யன்னு முழிச்சிட்டு இருந்தப்ப தான், அவ லெட்டர் எழுதி வச்சிட்டு பிளைட் புடிச்சு போனது தெரிஞ்சது. அது மட்டும் இல்லாம ரெண்டு நாளா உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டு இருந்தாளாம். அப்ப தான் மனசுக்குள்ள அந்த திட்டம் உருவானது. அம்மா, அப்பாவுக்கு உங்களை விட மனசு இல்ல. எனக்கு மட்டும் உங்களை விட்டு கொடுக்க மனசு வருமா? என்ன வழின்னு யோசிச்சு பிளான் செஞ்சிட்டேன். தப்பா அத்தான்?”
“இல்ல டா, இதை தப்புனு சொன்னா நான் என்ன மனுஷன்? கடவுளோட சித்தம் மது இது”
“ஹ்ம்ம் அப்படி தான் நினைச்சேன். அப்புறம் வீட்டுக்கு வந்தப்ப, உதறலா இருந்தது. எங்க கண்டு பிடிச்சிருவீங்களோனு பயந்தேன். அப்புறம் அவ மறுபடியும் உங்களை என்கிட்ட இருந்து பிரிச்சிருவாளோனு தான் அப்படி நடந்துக்கிட்டேன். தப்பு பண்ணிட்டேன்ல? ஒரு பொண்ணா உங்களை பிடிச்சு இழுத்தது எனக்கு தப்பாவே பட்டது. ஆனா எனக்கு அப்புறமா தான் நிம்மதியாவே இருந்தது”
“அது தப்பு இல்ல டி. அது தான் உன்னோட காதலை எனக்கு புரிய வச்சது. அப்புறம் உன்னோட லெட்டர். அதுல மதுமிதான்னு தானே மேடம் கை எழுத்து போட்டிருந்தீங்க?”
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement