Advertisement

அத்தியாயம் 9
நீ என்னை விட்டு 
விலகி சென்றாலும் 
உன்னைப் பற்றிய நினைவுகள் 
உன்னை மறக்க விடுவதில்லை!!!
“உன் அம்மா, அப்பாவுக்கு தெரியாம இருக்கலாம் மது. ஆனா நான் உன் புருஷன். எனக்கு தெரியாம இருக்குமா? அழாத கண்ணம்மா. எந்த சூழ்நிலையிலயும் உன்னை என்னால கண்டு பிடிக்க முடியும் டா குட்டி. நீ வா நாம மேல போகலாம்”, என்று அவளை கை அணைப்பில் இழுத்து கொண்டவன், கேசவன் அன்னம் பக்கம் திரும்பி “மாமா, அத்தை உங்களுக்கு மதுவை பாக்கணும்னு தோணுச்சுனா இங்க வாங்க. ஏன் என்னை உங்க பையனா நினைச்சு இங்கயே கூட இருங்க. இங்க இருக்குற எத்தனை ரூமை வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஆனா உங்களை பாக்க  நாங்க உங்க வீட்டுக்கு வர மாட்டோம். என்னை தப்பா நினைச்சாலும் பரவால்ல. இது தான் முடிவு”, என்றான்.
“சரி மாப்பிள்ளை”, என்று சொன்னார்கள் இருவரும்.
“அம்மா வீட்ல இருக்குற சனியனை வெளிய துரத்திட்டு பினாயில் ஊத்தி கழுவுங்க”, என்று சாவித்ரியை பார்த்து கூறினான்.
“சரி பா. நீ மதுவை மேல கூட்டிட்டு போ. ரொம்ப கலங்கிட்டா பா”
“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் மனோஜ்”
“சொல்லு டா”, என்றான் மனோஜ்.
“காரை வாட்டர் வாஷ் விட்டுரு. வேண்டாம், அந்த காரையே வித்துட்டு வேற வாங்கிரு. உனக்கும் மீராவுக்கு நான் புக் பண்ணிருக்க அதே மாடல்ல, என் மதுவுக்கு பிடிச்ச சில்வர் கலரை புக் பன்னிரு”
“சரி டா. இப்பவே பண்ணிறேன்”
“ஹ்ம்ம், அம்மா”
“சொல்லு பா”
“நைட் எங்களுக்கு சாப்பாடு வேண்டாம். மீரா கிட்ட ரெண்டு பேருக்கும் பால் மட்டும் கொடுத்து விடுங்க”
“சரி பா. நீ போ”
“ஹ்ம்ம்”, என்று சொல்லி தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த மதுவை அப்படியே அணைத்த படியே மேலே சென்று விட்டான்.
அவர்கள் போன பிறகு அந்த அறையே அமைதியாக இருந்தது.
“மனோஜ் மீராவை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று சொன்னாள் சாவித்ரி.
“சரி மா. வா மீரா”, என்று சொல்லி அவள் கையை பிடித்து அழைத்து சென்று விட்டான்.
“எப்படி வெளியே போக சொல்ல?”, என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் சாவித்ரி. அவளுக்கும் வதனி அங்கே நிற்பது பிடிக்கவே இல்லை. கேசவன், அன்னத்தை பார்த்தாள்.
அவர்களுக்கு அசிங்கமாக இருந்தது.
“என்னை மன்னிச்சிருங்க அக்கா”, என்றார் கேசவன்.
“ஆமா அண்ணி, இந்த மாதிரி தரங்கெட்ட பொண்ணை பெத்ததுக்கு என் கர்ப்ப பையே அழுக்கான மாதிரி இருக்கு”, என்றாள் அன்னம்.
அடுத்த நொடி “அம்மா”, என்று அலறினாள் வதனி.
“என்னடி அம்மா?”, என்று கேட்டு கொண்டே அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்தாள் அன்னம்.
“இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் வதனி.

“எதுக்கு அடிச்சியா? உன்னை எல்லாம் கொன்னு போட்டுருக்கணும். ச்சி உன்னை பாக்கவே அருவருப்பா இருக்கு”

“இப்ப நான் என்ன செஞ்சேன்? எனக்கு தான இவனை மாப்பிள்ளை பாத்தீங்க?”

“அடிச்சு பல்லை கலட்டிருவேன். அதான் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு ஓடினியே?”

“அப்ப இவன் இவ்வளவு பணக்காரன்னு தெரியாது”

“ச்சி, சனியனே. பணத்தாசை பிடிச்ச பேயே. இப்ப அவர் உன் தங்கச்சியோட புருஷன். அவ வாழ்க்கையை போய் அழிக்க நினைச்சிருக்கியே. நீ எல்லாம் என்ன ஜென்மமோ?”

“அவ நல்லா இருக்க கூடாதுன்னு தான இப்படி செஞ்சேன்”

“ஏண்டி அந்த பிள்ளை மேல உனக்கு இந்த வன்மம்? எப்ப பாத்தாலும் அவ கூட மல்லுக்கு நிக்குற? அவ ரொம்ப சாதுவா தான இருக்கா”

“சின்ன வயசுல இருந்து அவளை தான ரெண்டு பேரும் தூக்கி வச்சி கொண்டாடுனீங்க. அவளை பாத்தாலே ஆத்திரமா வருது”

“நீ முன்னாடி பிறந்த. நல்ல கல்லு குண்டு மாதிரி தான இருந்த. ஆனா அவ சத்தை எல்லாம் நீ உறிஞ்சினதுனால அவ சத்தே இல்லாம நோஞ்சான் மாதிரி இருந்தா. டாக்டர் தேறாத கேஸ்னு சொன்னார். அதனால அவளை கூடுதலா கவனிச்சிக்கிட்டோம். இப்ப வரைக்கும் அவளை எந்த கிருமினாலும் உடனே தாக்கிருது. அதனால அவ மேல அக்கறை எடுத்தது தப்பா?”

“தப்பு தான். என் முகம் மாதிரியே இருக்குற அவளை எனக்கு பிடிக்கலை”
“ச்சி வாயை மூடு. அவ தேவதை டி. ஆனா நீ சனியன். அதான் உன் குணம் இவ்வளவு கீழா போயிருச்சு. இனி எங்களுக்கு நீ பொண்ணே கிடையாது. எங்களுக்கு மது ஒரு பொண்ணு தான். வாங்க பா நாம போகலாம். ரெண்டு நாள் கழிச்சு வரோம் அண்ணி”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் அன்னம்.

“இனிமே இவளை வீட்டுக்குள்ள விடாதீங்க அக்கா. உங்களுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்துட்டோம். எங்களை மன்னிச்சிருங்க”, என்றார் கேசவன்.

“நீங்க என்ன செய்வீங்க? எல்லாரும் சேர்ந்து மதுவை தான் கஷ்ட படுத்திட்டோம். நாளைக்கு வாங்க. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இருங்க டிரைவரை கார் எடுக்க சொல்றேன். அதுல போங்க”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள் சாவித்ரி.

அவர்கள் போன பிறகும் கூட, அங்கேயே வெட்கம் இல்லாமல் நின்றிருந்த வதனியை பார்த்த சாவித்ரிக்கு எரிச்சல் வந்தது. “என்ன ஜென்மமோ?”, என்று வாய் விட்டே சொல்லி விட்டு “செக்யூரிட்டி இந்த பொண்ணை வெளிய தள்ளி கதவை அடை”, என்று சொன்னாள்.

அப்படி நடந்தால் அவமானம் என்பதால் அவளாகவே வெளியே வந்தாள் வதனி.

ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்றவள் தன்னுடைய பையில் எல்லாம் எடுத்து வைத்து விட்டு உடனே கிளம்பி விட்டாள்.

அவள் போகும் வரை அறையை பூட்டி விட்டு வெளியே வராமல் இருந்தார்கள் அன்னமும், கேசவனும். 

அறைக்குள் சென்ற மதுவோ அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள். 

“அழாத மா”, என்று வித விதமாக சமாதானம் செய்து கொண்டிருந்தான் தேவா.

அவள் அழுகை குறைவேனா என்று அடம் பிடித்தது.

“ஏண்டி  இப்படி அழுற? காச்சல் வர போகுது டி”

அப்பவும் அழுது கொண்டே இருந்தாள்.

அவளை தன் நெஞ்சில் இருந்து பிரித்தவன், அவள் கண்களில், நெற்றியில் என்று முத்தம் கொடுத்தான்.
கண்களை மூடி அவன் தொடுகையை அனுபவித்தாலும், அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
“உன்னை அழ விடாம இருக்க வழி எனக்கு தெரியுமே”, என்று சொல்லி கொண்டே   அவள் உதடுகளில் முத்தமிட்டான். அடுத்த நொடி அவள் கைகள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தது. “அப்பாடி அழுகையை நிறுத்திட்டா”, என்று நினைத்து விலக பார்த்தவனை தன்னை நோக்கி இழுத்தாள் மது.
சும்மாவே, அவனை அதிகம் தேடுவாள். இந்த நிலைமையில் அவனை விட்டு விலகுவாளா என்ன?
விலக பார்த்தவனை “என்னை ஓட்டிட்டே இருக்கணும்”, என்று சொல்லி தன்னை நோக்கி இறுக்கி கொண்டாள்.
அவள் கட்டி பிடித்திருந்ததால் அவன் உடம்பே வலித்தது.
“ஏய் செல்லம் என்ன டி ஆச்சு வலிக்குது விடு”
“முடியாது. எனக்கு உங்களுக்குள்ளே இருக்கணும். இந்த டிரஸ் வேண்டாம். அது உங்களை என்னை விட்டு விலக்கி வைக்குது”, என்று சொல்லி அவன் பனியனை கழட்ட வைத்தாள்.
உடை இல்லாத அவன் வேற்று மார்பில் இறுக்கமாக முகம் புதைத்தாள்.
அப்போதும் அங்கே இங்கே தலையை திருப்பி அவளுக்கு வசதி இல்லை என்னும் விதமாய் செய்தாள் மது.
“என்ன டா?”, என்று கேட்டான் தேவா.
“நீங்க ரொம்ப தள்ளி இருக்குற மாதிரி இருக்கு”, என்று பாவமாக சொன்னாள் மது.
“அதுக்கு காரணம் உன்னோட டிரஸ் தான்”, என்று சொன்னவன் அந்த தடையையும் களைந்தான்.
அவள் மீதே கவிழ்ந்தவன், அங்கு இருந்த போர்வையை மட்டும் போத்தி கொண்டு அவளை ஆண்டு முடித்தான். ஆனாலும் அவனை விட்டு விலகாமல் இருந்தாள் மது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் நின்றிருந்தது.
அவனுடைய ஆலிங்கனத்தில் சிணுங்கி சிவந்து கொண்டிருந்தாள் மது.
கூடல் முடிந்து விலகியவனை கூட விடாமல் இறுக்கினாள்.
கேள்வியாய் அவன் முகம் பார்த்தவனை பார்த்து கண் சிமிட்டி “இன்னொரு முறை”, என்று சிரித்தாள்.
சிரித்து கொண்டே “வெக்கமே இல்லையாடி உனக்கு?”, என்று கேட்டு கொண்டே அவள் நெஞ்சில் முகம் புதைத்தான் தேவா.
அவன் உதடு அவள் நெஞ்சில் விளையாட அவன் பின்னந்தலையை அப்படியே தன்னோடு சேர்த்து  இறுக்கினாள் மது.
“மூச்சு முட்டுது டி”, என்று சொன்னாலும் அவள் ஆசையை நிறைவேற்றினான் தேவா.
இருவரையும் ஒரு போர்வை மட்டும் மூடி இருக்கும் போது, அரை கதவை தட்டி “அண்ணா”, என்று அழைத்தாள் மீரா.
“இப்ப என்ன செய்ய?”, என்று பாவமாக விழித்தாள் மது.
அவளை பார்த்து சிரித்தவன் “இரு மீரா வரேன்”, என்று குரல் கொடுத்து விட்டு தன்னுடைய பேண்டை எடுத்து போட்டவன், பனியனையும் அணிந்து கொண்டே அவளை பார்த்தான்.
“நான் டிரஸ் மாத்திட்டேன். நீ தான் பப்பி சேமா படுத்திருக்க”, என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.
அவனை பார்த்து முறைத்தவள் போர்வையை தலை வரை மூடி தூங்குவது போல பாசாங்கு செய்தாள்.
கதவை திறந்து மீராவை பார்த்து சிரித்தான் தேவா.
அவன் சிரிப்பில், அவள் முகமும் மலர்ந்து போனது.
“மது சரியாகிட்டாளா அண்ணா?”
“ஹ்ம்ம் சரியாகிட்டா மா. தூங்குறா”
“சரி, காலைல பேசிக்கிறேன்”
“உள்ள வா மா. நான் அவளை எழுப்புறேன்”
“அதெல்லாம் வேண்டாம் அண்ணா. இந்தாங்க பால். அப்புறம் தட்டில் சப்பாத்தியும் குருமாவும் இருக்கு. அவளை அப்புறமா எழுப்பி கொடுங்க. நீங்களும் சாப்பிடுங்க”
“தேங்க்ஸ் மா”, என்று அதை வாங்கி கொண்டான் தேவா.

Advertisement